சனி, 18 ஜூலை, 2009

Tuesday, July 14, 2009

"பரபரப்பு" ரிஷி "

பரபரப்பாக" பேசிக்கொண்டிருக்கும் இந்த ரிஷி யார்? ஒரு காலத்தில் காதல் கதைகளை எழுதி தன்னை எழுத்தாளராகக் காட்டிக்கொண்ட இந்த "மகா" எழுத்தாளருக்குப் பின்னால் இருக்கும் மர்ம நபர்கள் யார்..?

ரிஷி யாழ்ப்பாணம் மானிப்பாயின் சுதுமலையைச் சொந்த இடமாகக் கொண்டவர். இவர் சுதுமலையில் இருந்த காலத்தில் காதலிப்பதற்கு கூட பலர் பயந்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒரு வீரதி வீரனாக சூராதி சூரனாக "பரபரப்பாகத்தான்" இருந்திருக்கின்றார்.

அக்கம் பக்கத்தில் யாராவது காதலித்தால் இவருக்கு கதை கிடைத்துவிடும். அதுவும் நிஜக்கதை. கொழும்பில் இருந்து வெளிவரும் தினபதி பத்திரிகைக்கு அடுத்த வாரமே அந்த நிஜக் காதல் கதை, இவரது கற்பனைகளுடன் இணைந்து பறந்துவிடும். கதையின் நாயகனும், நாயகியும் அந்தக் காதலன் காதலியின் சொந்தப் பெயர்தான். ஆனால், கதையின் முடிவில்தான் சிக்கல்! எழுத்தாளராக தனது பெயரை போடுவதற்கு பதிலாக, அந்தக் கதையில் வரும் உண்மையான காதலனினதோ காதலியினதோ, உறவினரதோ பெயரைப்போட்டு அனுப்பி விடுவார்.

பிறகு என்ன...? பத்திரிகை வெளிவந்து... கதை வெளிவந்து... அந்த காதலர்கள் இருவரின் குடும்பங்களும் வெட்டுக் குத்து என்று போகின்ற அளவிற்கு நிலைமை சென்றுவிடும். சென்றுவிடும் என்ன...? சென்றிருக்கின்றது. கடைசியில் காதலன் - காதலியைப் பிரித்துவைத்த பெருமை இவரைச் சாரும்.

இவ்வாறு மற்றவர்களின் காதல் கதைகளை எழுதி மற்றவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்த இந்த மனிதர் இப்போது வளர்ந்து விட்டார். அதனால், இனங்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ வெளிக்கிட்டிருக்கின்றார்.

ஆங்கில ஊடகங்களிலும், ஆங்கில நாவல்களில் வெளிவந்த புலனாய்வுக் கதைகளை, கட்டுரைகளை இப்போது தனது பரபரப்புகளில் பெயர், ஊர், நன்றி கூட இல்லாமல் எழுதி வெளியிட்டுக் கொண்டிருக்கும் இவருக்கு யாராவது பெயர், ஊர் கொடுத்தால் பேருதவியாக இருக்கும். தனது சொந்தச் சரக்கு என்று இவர் அடித்துக்கொண்டிருக்கும் தம்பட்டம் கொஞ்சநஞ்சமல்ல. இவரைப் பற்றி இன்னும் விலாவாரியாக எழுதாலாம். இப்போது அதற்கான தேவை எழவில்லை. எனவே, அவற்றை இன்னொரு சந்தர்ப்பத்தில் விலாவாரியாகப் பார்ப்போம். இப்போது இவரது பத்திரிகை குறித்துப் பார்ப்போம்.

புலனாய்வு ரிஷி டட்டடங்க் டுட்டும் டும்டும்..... இசை போட்டு வானொலிகளில் கதை பரப்பியவர். சமாதான காலத்தில் வன்னிக்கு போய் கஸ்ரோவிடம் கதை அளந்துவிட்டு வந்து தொடங்கியதுதான் இந்தப் "பரபரப்பு". தொடங்கப்பட்டது அங்கிருந்து வந்துதான். ஆனால், தொடங்கியதன் நோக்கம் வேறானது. "கவர் ஸ்டோறி"யில் புலிகளின் படங்களை பிரமாண்டமாகப் போட்டு தன்னை புலிகளின் முகவராக இவர் அடையாளம் காட்டிக்கொண்டாலும், புலிகளின் பத்திரிகை இதுதான் என்று சிங்கள ஊடகங்கள் சங்கு ஊதும்போதே பலருக்கும் சந்தேகம் வந்துவிட்டது.

அத்திவாரம் போட்டது யாரோ, கட்டடத்தை கட்டிக்கொண்டிருப்பது யாரோ என்று. அப்பப்ப புலியளை நாசூக்காக கிள்ளியும், உச்சந்தலையில் அடித்தும் கொண்டுவந்த ரிஷக்கு, இப்ப புலிகள் இல்லாமால் போனது நல்ல வசதியாய்ப் போய்விட்டது. மெல்ல மெல்ல தன்ரை முகமூடியைக் கழற்றத் தொடங்கியிருக்கிறார்.

புலிகள் தவறுகள் விடுவதாகச் சுட்டிக்காட்டிக்கொண்டும், தன் ஆலோசனை கேட்டிருந்தால் வென்றிருக்கலம் போன்றுமே இவரது கட்டுரைகள் வடிவம் பெறத் தொடங்கியது. புலிகள் தாக்கும்போது தானே கூடச்சென்று தாக்குவது போல் கதை அளப்பதும் புலிகள் பலம் சற்று ஆட்டம் காணும் போது தன் நிஜ எஜமனர்களுக்குத் தன் விசுவாசத்தைக்காட்ட புலிகளின் பலவீனங்கள் என்று அதிமேதாவித் தனமாக தன் புளுகு மூட்டைகளை மக்களிடம் இறக்கிவைத்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்வோரின் மூன்றெழுத்து உளவுத்துறைக்கு விசுவாசம் காட்டுவதுமே இவரின் நிஜமான முகமாகும்.

இரண்டு பத்திரிகைகளை இந்தப் புலம்பெயர்ந்த நாட்டில் நடத்துவது எவ்வளவு சிக்கலான விடயம் என்பது பலருக்கு புரியாட்டியும் சிலருக்குப் புரியும். முக்கியமாக இதில் பொருளாதார வளம். விளம்பர வருமானமே இல்லாம பத்திரிகை விற்பனையை மட்டும் நம்பி இந்த உலகில் எந்தப் பெரிய நிறுவனம் கூட நடத்த முடியாதிருக்கும் நிலையில், ரிஷி பத்திரிகையை விற்றுத்தான் பொருளாதாரத்தை பெறுகிறேன் என்று யாருடைய காதிலாவது பூவைச் சுற்றலாம்.

ஆனால், இந்தப் புலம்பெயர்ந்த (ஓசிப் பேப்பரை விரும்பி வாசிக்கும்) மக்களை நம்பி இரண்டு பத்திரிகைகளை வெளியிடுவதற்கு தேவையான நிதியை இவர் எவ்வாறு தொடர்ச்சியாகப் பெறுகின்றார்..? இரண்டு பத்திரிகைகள் நடத்திறதுக்கான செலவையும் அதற்கான வரவையும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்தால் உங்களுக்கே மண்டையில் உள்ள மயிர் கொட்டுண்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.

ஆனால், அப்படியெல்லாம் மண்டையை விட்டு யோசிக்காதீர்கள். நிதி எங்கிருந்து வருகின்றது. எவ்வாறு வாரம்தோறும் தவறாமல் "பரபரப்பு" தான் சொல்ல வேண்டிய விடயங்களுடன் வெளிவருகின்றது. காரணம் பெரும் பணமுதலை "கே.பி"யும் அதன் பின்னால் உள்ள இந்திய "றோ"வும் தான். தனது தோள் தட்டிப் பேசும் அளவிற்கு "றோ" அதிகாரிகள் தனக்கு நன்கு பழக்கம் என்பதை, தனது விமான புலனாய்வுப் பயணத்தின்போது இந்திய "றோ" அதிகாரிகள் தன்னுடன் நடந்துகொண்ட விதம் குறித்து தன்னை மறந்து இதே ரிஷி சொல்லிப் பெருமைப்படுவதும் உண்டு.

புலிகளின் தாக்குதல் உத்திகளை அற்புதனின் எறிகணைபோல் எழுதும் இவரது ஆக்கங்களில் உள்ள நம்பகத்தன்மையை பலரும் சந்தேகித்தாலும், புலியைப் புகழ்ந்து பேசுவதாக எண்ணி மௌனமாக இருந்துவிடுகின்றார்கள். புலம்பெயர்ந்த மக்களிட்டை ஒரு ஊடகம் நுழையிறதெண்டால் புலி ஆதரவு இல்லாமல் நுழைய முடியாது. அதனால்தான் புலி ஆதரவோடு வெளிக்கிட்ட "பரபரப்பு", இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கின்றது?

தொடர்ந்தும் பரபரப்போடு இருப்பவர்களுக்கு இது சொல்லாமலேயே புரிந்திருக்கும். இன்னும் "பரபரப்பாக" வரும்.

-------------------------------------------------------------------------------------------------

துரோகத்தின் தொடர்கதை

ஊரறிந்த துரோகத்தின் முதல் வடிவம்


தேசியத்தலைவருடன், துரோகி மாத்தையா



தலைவரின் பிள்ளை போல் இருந்த துரோகி கருணா


இந்தவழியில் புத்திசாலி "கே.பி" என்ற துரோகியின் தடங்களைப் பார்ப்போம்


துரோகி கே.பி, தலைவரின் திருமணத்தின் போது - தோழனாய்...





துரோகி கே.பி, கடற்புறாப் படகில் தளபதி குமரப்பா மற்றும் ஏனைய போராளிகளுடன்...

துரோகி கே.பி, மணலாற்றுக் காட்டில் தலைவர், பாலா அண்ணர் மற்றும் சங்கர் அண்ணரோடு...

-------------------------------------------------------------------------------------------------

Tuesday, July 7, 2009

துரோகிகளுக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளில் "நான்கு சுவருக்குள்" இருந்து அறிக்கை விடும் குமரன் பத்மநாதனின் துரோகச் செயற்பாட்டுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தரும் தேசவிரோதிகளுக்கு ஒர் எச்சரிக்கை!

தொடர்ந்தும் இப்படியான தேசவிரோத செயற்பாட்டில் நீங்கள் ஈடுபடுவீர்களேயானால் உங்கள் செயற்பாடுகள் தனிப்பட்ட தங்களின் தீய நடத்தைகளை வெளியிடுவதுடன் தங்கள் புகைப்படங்களும் வெளியிடப்படும்.

மேலும் "நான்கு சுவருக்குள்" இருந்து அறிக்கை விடும் குமரன் பத்மநாதனின் பழைய கூட்டாளிகள் மிகவும் கவனமாக இருங்கள். உங்கள் சாதகமே எங்கள் கைகளில்.


-----------------------------------------------

நோர்வேயில் மக்களைக் குழப்பும் நடவடிக்கையில் ஒரு சில விசமிகள்.

கடந்த பல வருடங்களாக ஒழுக்கவீனம் காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு நபரின் தலைமையில் சில நபர்கள் தங்களைத் தேசப்பற்றாளர்கள் எனக் காட்டிக்கொள்வதற்காக கே.பியின் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் இயங்கத்தொடங்கியுள்ளனர். இவர்கள் இரகசியமாகப் பல ஒன்றுகூடல்களை நோர்வேத் தலைநகரம் ஒஸ்லோவில் நடத்தியுள்ளதாக எமது நோர்வே நிருபர் தெரிவித்துள்ளார்.

சமாதான காலத்தின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட நிர்வாக ஓழுங்கில் பழைய நிர்வாகத்தின் "தில்லுமுல்லு"கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை சீர்செய்த போதும் சம்பந்தப்பட்டவர்களை இயக்கம் விலக்காது பணிகளை தொடர கேட்டபோதும் தந்திரமாக விலகிக் கொண்ட இந்த விசமிகள் இவ்வளவு நாள் இடைவெளிக்குப்பின்னர் தற்போது தலைகாட்டியிருப்பது "பூனையில்லா வீட்டில் எலி துள்ளி விளையாடுவது" போல் உள்ளது.
இப்படியான பொறுப்பற்ற செயல்கள் விரக்தியில் இருக்கும் மக்களை மேலும் குழப்புவதாகவுள்ளதாக பலர் கருதுகின்றனர்.

இவர்களுக்கு ஏன் இந்த வேலை? நேர்மையாக விடுதலை இயக்கத்திற்காக வேலைசெய்யாமல் தங்களை சமுதாயத்தில் ஒரு பிரமுகர்களாக அடையாளப்படுத்த விரும்பும் இப்படியான முன்னாள் பொறுப்பாளர்களின் (விசமிகள்) பொறுப்பற்ற செயல் என்றைக்குமே மக்களால் ஏற்றுக்கொள்ளப்படப்போவதில்லை.

ஒன்றுபட்டு எமது தேசத்தின் விடிவிற்காய்ப் போராடவேண்டிய இந்தத் தருணத்தில் இவர்கள் தமிழ் சமுதாயத்தையே இரண்டுபட வைக்கின்றனர். நான்கு சுவருக்குள் இருந்து தன்னை தலைவராக பிரகடனப்படுத்தியிருக்கும் குமரன் பத்மநாதனின் அறிக்கைகளையே ஏற்றுக்கொள்ளாத தமிழ்மக்கள் இவர்களையா ஏற்றுக்கொள்ளப்போகின்றார்கள். குமரன் பத்மநாதன் எப்படியெல்லாம் இந்திய உளவுத்துறைக்கு விலை போனாரோ அதே போல் இவர்களும் விலைபோய்விட்டார்கள் என்பது ஏற்கனவே தலமைக்கு தெரியும். மெற்கூறப்பட்ட விசமிகள் அல்லது துரோகிகள் முன்னர் இதே கே.பிக்கு கீழே பணிபுரிந்தவர்கள் தான்.

இன்றைய காலகட்டத்தைப் புரிந்து கொண்டு நாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது தேசத்தையும் வதைமுகாம்களில் சிக்கிச் சித்திரவதைப்படும் எமது மக்களையும் மீட்டெடுப்பதே புத்திசாலித்தனமாகும். தலைவர் மறைந்துவிட்டார் என்று சொல்லிக்கொண்டு தலைமைப் பதவியை தக்கவைக்க ஒருசிலர் முயற்சிக்கின்றார்கள். இதுதான் சந்தர்ப்பம் இவர்களுடன் ஒட்டிக்கொள்வோம் என நினைக்கும் இந்த நபர்களை நினைத்தால் இரத்தம் கொதிக்கின்றது. இவர்கள் எல்லாம் தலைவர் அவர்களுக்கு விசுவாசமாக பணிபுரிந்தவர்களா?
தேவை ஏற்படும் பட்சத்தில் இந்த நபர்களின் பெயர்களையும் நாம் வெளியிடத்தயங்கமாட்டோம். இன்று நாம் கேட்பதெல்லாம் யாராக இருந்தாலும் தயவுசெய்து மக்களைக் குழப்பவேண்டாம். இந்த நபர்கள் உடனடியாக தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் பணியாற்றிய ஒரு சிலரும் இவர்களுடன் சேர்ந்து பொறுப்பற்றதனமாக நடந்துகொள்வதை நினைக்கும்போது நெஞ்சம்பொறுக்குதில்லை. தங்களின் பதவிகள் போனதும் மற்றவர்களைக் கவிழ்ப்பதிலே குறியாக இருக்கும் இவர்களா எமது தேசத்தின் விடிவிற்காக நேர்மையாக உழைக்கப்போகின்றார்கள்? இவர்களை என்றுமே மன்னிக்க முடியாது. இவர்களுக்கும் டக்ளஸ், சித்தார்த்தன், கருணா, பிள்ளையான் போன்றோருக்கும் என்ன வித்தியாசம். சிந்தியுங்கள். தமிழ் சமூகத்தைப் பிரிக்காதீர்கள்.
தலைவரின் சிந்தனையுடன் புலிக்கொடிக்குக் கீழ் ஒன்றுபடுங்கள். கருத்து வேற்றுமைகள் இருந்தால் பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள்.
ஒன்றுபடுங்கள் ஒற்றுமையாய்ப் போராடுங்கள்!

நன்றி

நோர்வேயிலிருந்து எமது நிருபர் "சங்கிலியன்"

----------

துரோகிகளின் வழியில் சென்ற வழுதியின் வழியினிலே >>>>>

சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! - பாகம் 2
இந்தக் கருத்துக்களம் 'புதினம்' தளத்திற்காக தி.வழுதி அவர்களால் எழுதப்பட்டதாகும்.

அண்மையில் அவர் எழுதியிருந்த "முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3!" என்ற கருத்துக் களத்தின் இரண்டாவது பாகமாக அவர் இதனை எழுதியுள்ளார்.

வழுதி முன்பு எழுதியதில் "முன்னாலே சென்றோரின் பின்னால் "என்பதை நீக்கி இப்போது வெறும் "சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3" என்று தலைப்பிட்டிருக்கின்றார்

முன்னர் எழுதியதில் முன்னால் சென்றவர் தேசியத்தலைவர் அவரின் பின்னர் சென்றோர் தமிழர் படை என்று எழுதியிருந்தார்

இம்முறை சென்றவரின் வழியினிலே என்று யாரின் வழியினிலே என்று சொல்லவில்லை

அது கருணாவா , மாத்தயா என்று சொல்லாமல் விட்டுவிட்டார்

கருணாவால் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கருணா பிதற்றியதை வழுதி பிதற்றி வருகின்றார் அப்படியானால்

வழுதி யாரின் வழியினிலே செல்கின்றார் என்று சொல்லத் தேவையில்லை
அதை காவி வரும் புதினமும் யாரின் வழியினிலே என்றும்

இப்போது இலங்கைத் தீவில் - விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைத்துவத்தில் அநேகமாக எல்லோருமே வீரச்சாவு அடைந்து விட்டார்கள்; மிகுதிச் சில பேர் சிறிலங்காவின் தடுப்பு முகாம்களில் அடைபட்டுள்ளார்கள்.

விடுதலைப்புலிகள் யாரும் இல்லை என்றால் தேசியத் தலைவர் இல்லை என்று யார் உங்களுக்கு உறுதிப்படுத்தியது ???

சிறிலங்கா இராணுவமா அல்லது
ரோவா அல்லது
கருணாவா அல்லது
தேசியத் தலைவரின் ஆவியா ??

வழுதி தன்னுடைய அறிவுரைகளை தேசியத் தலைவர் கேட்டிருந்தால் இன்று தமிழீழம் கிடைத்திருக்கும் என்பது போலவும் தமிழ்மக்களது படுகொலைகள் நிறுத்தப்பட்டிருக்கும் என்பது போலவும்

தேசியத் தலைவர் மக்கள் கொல்லப்படுவதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை தானும் பத்மநாதனும் தான் கவலைப்பட்டோம் என்பது போல்

மீண்டும் தேசியத் தலைவரின் மேல் சேறு பூசும் தனது குழி பறிக்கும் வேலையில் தமிழ்மக்களின் காவலனாக காட்டிக்கொண்டு தமிழ்மக்களுக்கு குழி வெட்டுகின்றார்

இவர் எப்போதுமே சில தமிழ் மக்களின் சமகால நடவடிக்கைகளை காட்டி அதற்கு சார்பாக ஒன்றை எழுதி விட்டு பின்னர் அதனுடன் தனது சகுனி வேலையையும் இணைத்து விடுவது இவரின் சாதூரியம்

ஆனால் அதுவே இவரின் பச்சோந்தி தனத்தையும் காட்டிவிடுகின்றது

துரோகிகள் எப்போதுமே தமிழ்மக்களில் அக்கறை உள்ளவர்கள் போலும் தாம் புலிகளுக்கு மட்டுமே எதிரிகள் என்பது போலும் வழுதி வரை எழுதியும் நடித்துக்கொண்டும் இருக்கின்றார்கள்

இவர்களுக்கு புலி எதிர்ப்பைத் தவிர வேறு ஒரு மண்ணும் கிடையாது

வழுதி விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்படாத பிரநிதியாக தன்னைத் தானே அடையாளப்படுத்தி தானும் இறுதி வரை புலிகளின் வாரிசு ஆக காட்டுகின்றார்


வழுதி சாதிக்க முயல்வது என்ன ???

1. தேசியத் தலைவரை மக்களின் மனங்களிலிருந்து அகற்றுவது -

தேசியத் தலைவரை சாகடிக்க மேற்கொண்ட எவையும் எடுபாடாது போனதால் அவரை தமிழர்களது மனங்களில் இருந்து அகற்றினால் அவர் உயிருடன் இருந்து ம் பயனற்றவர் ஆகிவிடுவார்

அதற்கு அவரை துதி பாடி பின்னர் அவரின் மேல் சிறிது சிறிதாக சேறு பூசுவது

இதற்காகத் தானா சிறிலங்கா காட்டிய உடலில் சேறு பூசி வைத்திருந்தார்களோ என்னவோ ??

2. தனது சகுனி வேலைகளையும், உண்மைகளையும் கலந்து எழுதுவதனால் இரண்டையும் தமிழ்மக்கள் நம்பாமல் செய்ய முற்படுவது

- தமிழ்மக்களை தொடர்ந்தும் குழப்பநிலையிலேயே வைத்திருந்து மந்த நிலைக்கு மாற்றுவது

இளந்திரையனின் இறுதிப் பேட்டியில் சொன்னது போல்

மக்கள் பாலையும் தண்ணீரையும் பிரித்தறியும் பக்குவம் உடையவர்களாக இருக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கின்றோம்

தமிழ்மக்கள் இப்போது யாரையும் நம்ப முடியாத கையறு நிலையில் வைத்திருக்க முயலுகின்றார்கள்


இவர்களின் கடந்தகால வரலாறு என்ன என்பது பற்றியும் சிந்தியுங்கள்.


தமிழ்மக்கள்மேல் அக்கறைகொண்டவர்களாக நடிக்கின்ற இக்கூட்டம்


ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும், ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்

ஆகவே தமிழர்களின் சுய மரியாதையுடனான வாழ்வுக்கு வழிகாட்டும் கொள்கை வகுப்பின் கீழ்
தேசியத் தலைமையின் வழிகாட்டலில் செல்வோரின் பின்னால் ஒன்றிணைவோம்

மக்களே தலைவர் துரோகிகளைப்பற்றி கூறிய

"எதிரிகளைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள்"

என்ற சிந்தனையை நிலைநிறுத்தி துரோகிகளை ஒதுக்கி எமது இலட்சியத்தை நோக்கி முன்னகர்வோம்.

12 நாட்களில் தலைவருக்கு மீசை அடர்த்தியாக வளர்ந்தது எப்படி?

திகதி: 03.07.2009 // தமிழீழம்
வன்னிக் களமுனையில் இறுதியாக என்ன நடந்தது? தமிழீழத் தேசியத் தலைவர் குறித்து உண்மை நிலை என்ன என்பவற்றை இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு வெளியிட்டுள்ளது.
தங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், 'மக்கள் அறிந்த போராளி' ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள ஈழமுரசு, இதுதொடர்பாக விரிவான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

ஈழமுரசு வெளியிட்டுள்ள அந்தச் செய்தியை இங்கே தருகின்றோம்.
தமிழீழத் தேசியத் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப்பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இருக்கின்றார் என நம்பும் ஒரு பகுதியினரும் இல்லை என மறுத்து அறிக்கைவிடும் கூட்டத்தினருக்கும் மத்தியில் தலைவர் தொடர்பான உண்மைத் தகவல்களையும், களமுனையில் இறுதியாக என்ன நடந்தது என்பது பற்றியும் அறிந்துகொள்வதற்கு ஈழமுரசு கடந்த பல நாட்களாக எடுத்த பல்வேறு முயற்சிகளின் வெற்றியாக களமுனையில் இருந்து நம்பகத்தகுந்த பல தகவல்களைப் பெற்றுள்ளோம்.

களமுனையில் கடந்த 18.05.2009 அன்றுவரை போராடிக்கொண்டிருந்த போராளி ஒருவருடன் ஈழமுரசு அண்மையில் தொடர்புகளை ஏற்படுத்தி நடந்த சம்பவங்களை அறிந்துகொண்டுள்ளது. அந்தத் தகவல்களை வழங்கிய ‘மக்கள் அறிந்த அந்தப் போராளியை' தற்போதையை சூழ்நிலையில் எம்மால் இனம்காட்டிக்கொள்ள முடியவிட்டாலும், கால ஓட்டத்தில் ஒருநாள் அவரை அடையாளம் காட்டமுடியும் என்றே நம்புகின்றோம்.

சிறீலங்கா இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட எந்த நிழற்படங்களையும் இதுவரையும் அவர் பார்த்திராதபோதும், தலைவரை இறுதியாக தான் கண்டபோது இருந்த அவரது தோற்றம் தொடர்பாக, அந்தப் போராளி வழங்கிய தகவல்கள் தலைவர் எனக்கூறி சிறீலங்கா வெளியிட்ட நிழற்படங்கள் போலித்தனமானவை என்பதை அப்பட்டமாகப் புரியவைத்தன.
அவருடனான எமது உரையாடிலின்போது பகிர்ந்துகொண்ட விடயங்களை இங்கே தொகுத்து தருகின்றோம்.

மே மாதம் 4ம் திகதி அல்லது 5ம் திகதியா என்பது சரியாக நினைவில் இல்லை. இந்த இரண்டு தினங்களில் ஒன்றில்தான் தலைவரை இறுதியாக நான் சந்தித்திருந்தேன். அன்றைய தினம் தலைவருடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. உண்டியலடிக்கு வருமாறு வந்த அழைப்பை அடுத்து போராளிகள் அங்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு சுமார் ஒன்பது வரையான உந்துருளிகளில் ஒரு அணியொன்று வந்து சேர்ந்தது.

ஒரு உந்துருளியில் தலைவரும் பொட்டம்மானும், ஏனையவற்றில் அவர்களது மெய்ப்பாதுகாவலர்களும் இருந்தனர். தலைவர் தலைக்கவசம் (கெல்மட்) அணிந்திருந்தார். வழமைபோலவே போராளிகளுடன் உரையாடியவர், தாக்குதலுக்கான திட்டங்களையும் வழங்கினார். அப்போது தலைவர் முழுமையாக முகச்சவரம் செய்திருந்தார். அவரது மீசை கூட மளிக்கப்பட்டிருந்ததை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

ஆனால், நீங்கள் சொல்லவதுபோல் சிறீலங்கா இராணுவத்தினரால் வெளியிடப்பட்ட படத்தில் அடர்த்தியாக மீசை உள்ள தலைவரின் உருவம் வந்திருக்க வாய்ப்பில்லை. பத்து, பன்னிரண்டு நாட்களில் அவ்வளவிற்கு மீசை வளர்ந்திருக்கும் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அத்துடன், அன்றைய சந்திப்பின் பின்னர் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி தலைவர் அந்த முற்றுகைப் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டார்.

சுமார் 45 முதல் 50 வரையான கரும்புலித் தாக்குதல்கள் நடத்தப்பட்டே படையினரின் முற்றுகைகள் உடைக்கப்பட்டு நந்திக்கடல் ஊடாக இந்த வெளியேற்றம் நிகழ்ந்ததாகவும், இதன்போது ஆயிரம் வரையான படையினர் கொல்லப்பட்டிருந்ததாகவும் களமுனையில் போராளிகளிடையே பரவலாக செய்திகள் இருந்தன.

தலைவர் இறுதி வரையும் நின்று போராடப் போவதாகவே கூறிக்கொண்டிருந்தார். ஆனால், போராளிகளும் தளபதிகளும் அவரை அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றே வலியுறுத்தி கேட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் தலைவர் வரவிட்டால் மயக்க மருந்து செலுத்தித்தான் கொண்டுபோவோம் என்று சொல்கின்ற அளவிற்கு நிலைமை இருந்தது.

இதேவேளை, சண்டை மிகவும் இறுக்கமடைந்திருந்த நிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து இரண்டு அணிகளுடன் வரவுள்ளதாக தலைவருக்கு தளபதி ஒருவரிடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தலைவர், அணிகளைச் சிதைக்காமல் அந்ததந்த இடங்களிலேயே தக்க வைத்துக்கொண்டிருக்குமாறு பணித்திருந்தார்.

தலைவர் அங்கிருந்து வெளியேறியிருந்தபோதும், தம்பிதான் இறுதிவரை எங்களுடன் களமுனையில் நின்றிருந்தார். தலைவரின் மகன் சாள்சைத்தான் அவர் தம்பி என்று குறிப்பிட்டார். அவரது மகள் துவாரகாவும் கையில் காயமடைந்த நிலையிலும் களமுனையில் போரிட்டுக்கொண்டிருந்தார் என்பதை அறியமுடிந்தது.

ஆனந்தபுரம் தாக்குதலில் கேணல் தீபனும், கேணல் கடாபியும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இறுதிச்சமர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது காயமடைந்த கேணல் சொர்ணம் அவர்களும் சயனைட்டை உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். கேணல் ஜெயமும் கேணல் சூசையும் களமுனையில் இருந்து போராளிகளை பெரும் கடல் வழியாக படகுகளில் வெளியேற்றிக்கொண்டிருந்தனர்.

கேணல் ஜெயம் அவர்கள் அரைக் காற்சட்டையுடன் (ஜம்பர்) கடற்கரையில் நின்று பணிகளில் ஈடுபட்டதை காணக்கூடியதாக இருந்தது. தலைவர் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக அவர்கள் படையணிகளை முன்னதாகவே வேறு பகுதிகளில் கடலால் கொண்டு சென்று தரையிறக்கி வழியமைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறியமுடிந்தபோதும், அவர்கள் எங்கே தரையிறக்கப்படுகின்றார்கள் என்பதை என்னால் அறியமுடியவில்லை. எனினும், கொக்குத்தொடுவாய் பக்கமே அவர்கள் சென்று தரையிறங்கியிருக்க வேண்டும். பின்னர் ஜெயமும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக என்னால் அறியமுடிந்தது.

கேணல் பானு அவர்களும் களமுனையில் நின்றிருந்தார். எனினும், அவர் கையில் காயமடைந்திருந்ததால் அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார். (கேணல் பானு எனக்கூறி வெளியிடப்பட்டிருந்த படத்தில் அவரது கையில் எந்தக் காயமும் இருக்கவில்லை. அத்துடன், அவர் ஏற்கனவே வயிற்றுப் பகுதியிலும் காயமடைந்திருந்தார். வெளியிடப்பட்டிருந்த படத்தில் அந்தக் காயமும் இருக்கவில்லை.)

இறுதியாக, 15ம் திகதி முள்ளிவாய்க்காலில் இருக்கும் விடுதலைப் புலிகளின் அனைத்து ஆவணங்களையும், கணினிகளையும் அழித்துவிடுமாறு எங்களுக்கு தகவல் வந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் தொடர்பான ஆவணங்களை முற்றாக அழிக்குமாறு தலைவர் அந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தார்.

இதனால், இராணுவத்தினர் எப்போதும் முள்ளிவாய்காலில் நுழையலாம் என்ற நிலையில், இருக்கின்ற அனைத்துப் பொருட்களையும் கொண்டுபோய் ஒரு இடத்தில் குவித்து வைத்து தீ வைத்தோம். பெரும் பிரதேசத்தில் அந்தத் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

அப்போது இராணுவத்தினர் எமக்கு மிக அருகில் நெருங்கியிருந்தனர். இந்நிலையில், வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த இன்னொரு ஆவணத் தொகுதியையும் அழிக்கவேண்டியிருந்தது. அந்த வாகனத்தில் ஏற்றப்பட்ட ஆவணங்களுக்கு தீ வைத்துவிட்டு திரும்பியபோது, இராணுவத்தினர் ஏற்கனவே தீ வைக்கப்பட்டு எரிந்த பகுதிக்குள் நுழைந்துவிட்டிருந்தனர். இறுதியாகவே நான் அங்கிருந்து வெளியேறினேன்.

----------------------------

சொல்லாமல் போகார் எம் தலைவர்

திகதி: 04.07.2009 // தமிழீழம்

தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற ஆய்வுகள் என்னைப் பொறுத்தவரை தேவையற்றவை என்றே நான் கருதுகின்றேன். தமிழ் மக்களை ஒன்றிணைத்து ஒரு மாபெரும் சக்தியாக வளர்த்தெடுத்து, தமிழர் தாயக தேசத்தை எவ்வாறு வென்றெடுக்க வேண்டும் என்பதை தமிழினத்திற்கு தலைவர் மிகத் தெளிவாக கூறிவைத்திருக்கின்றார்.
எனவே, தலைவர் இருக்கின்றாரா இல்லையா என்ற விவாதங்களைத் தவிர்த்துவிட்டு தலைவர் காட்டியுள்ள வழியில் சென்று தாயகத்தை வென்றெடுப்பதே இன்றைய நிலையில் தமிழ் மக்களின் காலப்பணியாக இருக்கவேண்டும்.
ஆனாலும், தங்களது சுய நலன்களுக்காக தலைவரை இந்திய, சிறீலங்கா அரசுகளைவிட பலமுறை தங்கள் அறிக்கைகளில் கொன்றுகொண்டிருக்கும் நம்மவர்களுக்காக இங்கே சில கருத்துக்களை நான் முன்வைக்கலாம் என்ற உணர்விலேயே பால்ராஜ் அண்ணையின் இந்தத் தொடரின் ஊடாக, கடந்த காலங்களில் நிகழ்ந்த சில விடயங்களை எமது மக்களோடு இந்தக் கால நேரத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.
தலைவர் எப்போதும் தன்னையொரு தலைவராக வைத்துக்கொள்ள விரும்பியதில்லை. ஒரு போராளியாக வாழவே அவர் எப்போதும் விரும்புபவர். ஒரு போராளியாக வாழ்ந்து, ஒரு போராளியாக களமுனையில் எதிரியுடன் மோதி வீரச்சாவைத் தழுவுவதே கௌரவமான சாவு என்று கருதுபவர்.

இதற்கு பல ஆதரங்களை இங்கே முன்வைக்க முடியும். 1987ம் ஆண்டுகளில் அனுபவ ரீதியாகக் கண்ட சில விடயங்களை இந்த இடத்தில் ஆதாரமாக வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தலைவர் டில்லியில் அசோகா விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பதை அங்குவைத்து இந்திய அதிகாரிகள் தலைவரிடம் எச்சரித்தே கூறியிருந்தனர். வெளியுலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்களை ஒப்படைப்பது குறித்து தலைவர் போராளிகளுக்கு அறிவிக்கவேண்டும் என அவர்கள் கூறியிருந்தார்கள்.
ஆனால், அவர்களின் கைகளில் மிகவும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருந்தபோதும் அங்கு காவலுக்கு நின்ற கறுப்பு பூனைகள் படைப்பிரிவின் ஊடாகவே தலைவர் தாயகத்தில் உள்ள போராளிகளுக்கு ஒரு தகவலை அனுப்பியிருந்தார்.

அந்தத் தகவலில் அவர் மிகத் தெளிவாக ஒரு விடயத்தை சொல்லியிருந்தார். அதாவது,
'தான் நேரில் வராமல் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அவ்வாறு ஒலி நாடாவில் எனது குரலோ, அல்லது ஒளிநாடாவிலோ நான் கதைத்த பதிவுகளை யாராவது கொண்டுவந்து தந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டாம்.
நான் நேரில் வந்து உங்களிடம் சொல்லும் வரைக்கும் யாரும் ஆயுதங்களை ஒப்படைக்கக்கூடாது. அதனையும் மீறி இந்திய இராணுவத்தினர் வந்தால் தாக்குதலைத் தொடங்குங்கள். அவ்வாறு இந்திய இராணுவத்தினருடன் மோதுவதற்கு விருப்பம் இல்லாதவர்கள், ஆயுதங்களை வைத்துவிட்டு போகலாம்'
என்பதையும் இந்தியாவின் முற்றுகைக்குள் இருந்துகொண்டும் தலைவர் உறுதியாக அறிவித்திருந்தார்.

பின்னர், தலைவர் நேரில் வந்து அறிவித்ததன் பின்னரே ஆயுத ஒப்படை நிகழ்ந்தது என்பது வரலாறு.இப்படிப்பட்ட தலைவர், எந்த மக்களுக்காக போராடுகின்றாரோ அந்த மக்களுக்கு எந்தவொரு கருத்தையும் நேரிலோ, ஒளிப்பதிவாகவோ சொல்லாமல், முகம் தெரியாத ஒருவரை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவித்துவிட்டு சென்றுள்ளாரா என்பதை இந்தச் சம்பவத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.

இதேவேளை, தலைவரின் பாதுகாப்பு எப்போதும் தலைவரின் கையில் இருந்ததில்லை. இதனை அடுத்துவரும் வாரங்களில் பார்ப்போம்.

ஈழமுரசு இதழில் முன்னாள் போராளி ஒருவர் எழுதிவரும் தொடரில் இடம்பெற்றுள்ள ஆக்கம் இது.

நன்றி - ஈழமுரசு

July 18, 2009

பிரபாகரன் - பா.ராகவன்!

மே 19-ஆம் தேதி பிரபாகரனின் உடல் நந்திக்கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்திருந்தது. மே 26-ஆம் தேதி ‘பிரபாகரன் - வாழ்வும், மரணமும்!’ என்ற தலைப்பில் கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. பிரபாகரனின் மரணத்தை உலகப் புத்தக வரலாற்றில் முதன்முறையாக பதிவு செய்திருக்கிறது கிழக்கு. இந்த வேகம் அசாத்தியமானது. மாவீரர் தினத்தின் போது பிரபாகரன் தோன்றி ஈழமக்களுக்கு தன்னுடைய செய்தியை அறிவிப்பாரேயானால் கதீட்ரல் சர்ச்சில் கிழக்கு பதிப்பகம், நூலாசிரியர் பா.ராகவனும் பாவமனிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்த விமர்சனத்தை தொடங்குகிறேன்.

பிரபாகரனைத் தவிர்த்து ஈழவரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. உலகத் தமிழர்களுக்கு ஒரிஜினல் ஹீரோ. ஈழமக்களுக்கு கடவுளைப் போன்றவர். அவரது சிந்தனைகளை, குணாதிசயங்களை, செயல்பாடுகளை ஈழத்தமிழர்கள் உட்பட யாரும் இதுவரை மிகையின்றி, சார்பின்றி சொன்னதில்லை. தமிழர் மனதில் கட்டப்பட்டிருக்கும் பிரபாகரன் பிம்பமும் அத்தனை துல்லியமானதல்ல. இந்நிலையில் பிரபாகரனுக்கு டயரி எழுதியிருக்கும் பழக்கம் இருக்குமேயானால், அந்த டயரியை வாங்கிப் பார்த்து எழுதியதைப் போல நுணுக்கமாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

இதே பதிப்பகம் ஆறுமாதக் காலத்துக்கு முன்பாக ‘பிரபாகரன்’ என்ற புத்தகத்தை வேறொரு எழுத்தாளர் எழுதி வெளியிட்டிருக்கிறது. அதே மனிதரின் வாழ்க்கையை இன்னொருமுறையும் புத்தகமாக பதிவு செய்திருப்பதில் இருந்தே பிரபாகரனுக்கான அசைக்க முடியாத இடத்தின் அவசியத்தை உணரலாம். முதல் புத்தகத்துக்கும், இப்புத்தகத்துக்கும் கூட நிறைய வேறுபாடுகளை நடை அடிப்படையில் உணரலாம். இந்நூல் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்ததால் வாரத்துக்கு வாரம் அத்தியாயத்தின் முடிவில் ஏற்றப்படும் டெம்போவை நூல்முழுக்க காணமுடிகிறது. கிழக்கின் பாணியான வழக்கமான ஓப்பனிங் பில்டப், ஆல்பிரட் துரையப்பா படுகொலையோடு தொடங்குகிறது.

இந்நூலில் இரண்டு ஆச்சரியங்கள். ஒன்று பிரபாகரன். மற்றொன்று பா.ராகவன். பிரபாகரன் ஆச்சரியப்படுத்துவதில் அதிசயம் ஒன்றுமில்லை. யாரும் இதுவரை அறிந்திடாத நுணுக்கமான விவரங்களை திரட்டியிருப்பதில் பாரா நூல்முழுக்க ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஆல்பிரட் துரையப்பாவை போட்டுவிட்டு நேரே சுன்னாகம் போய், பஸ் ஸ்டாண்டில் இறங்கி, 769ஆம் நம்பர் பஸ்ஸுக்காக காத்திருந்து ஏறி.. இவ்வாறாக பிரபாகரன் ஏறிச்சென்ற பஸ்ஸின் ரூட் நம்பரைக் கூட பதிவு செய்திருக்கும் லாவகம்.

சில இடங்களில் இந்த நுணுக்கம் எழுத்தாளரின் வேகத்தில் சறுக்கியிருப்பதாகவும் வாசகனாக உணரமுடிகிறது. 70களின் தொடக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் தமிழக அரசியல் தலைவர்களிடம் ஆதரவு திரட்ட தமிழகத்துக்கு படையெடுக்கிறார்கள். அவர்கள் முக்கியமாக சந்திக்க விரும்பியது பெரியாரை, குறிப்பாக அண்ணாதுரையை என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அண்ணாதுரை காலமான நிலையில் கலைஞரை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். (பார்வை : பக்கம் 34)

சுயம்புவாக பிரபாகரன் உருவான வரலாறு எளிமையான, ஆனால் கவரக்கூடிய மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரே அவர் இயக்கத்துக்கான பயிற்சிமுறைகளை ஏற்படுத்தியது. வெளிநாடுகளில் வற்புறுத்தி பயிற்சிபெற்ற சிலரும் ‘தலைவரோட பாடங்களுக்கு ஈடாகாது’ என்று ஒப்புக்கொண்ட அழகும், அழகோ அழகு.

80களின் தொடக்கத்தில் வல்லரசுகளுக்கான பனிப்போர் மாதிரி நடந்த கலைஞர் - எம்.ஜி.ஆர் ஈழ ஆதரவுப் போரை பதிவு செய்திருப்பதில் நூலாசிரியரின் சார்புத்தன்மை வெளிப்படுகிறது. கிட்டத்தட்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பேசுவதையே நூலாசிரியரும் பேசுகிறார். எம்.ஜி.ஆருக்கு இவ்விவகாரத்தில் புனிதத்தன்மையை ஏற்படுத்தும் விதமான சிந்தனை. கலைஞர் அப்போதுதான் முதன்முறையாக, அதுவும் எம்.ஜி.ஆர் ஆர்வம் காட்டியதால் இவ்விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்பது போன்ற தொனி தெரிகிறது. கலைஞர் அதற்கு முன்பாகவே பலமுறை ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து தமிழக பொதுமேடைகளில் பேசியிருக்கிறார். இலங்கைக்கு செல்ல கலைஞருக்கு மட்டும் விசா கொடுக்கக்கூடாது என்று சிங்கள ஆட்சியாளர்கள் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருந்ததாகவே கூட அக்காலத்தில் பேசிக்கொள்வார்கள்.

இந்தியாவில் ஈழம் குறித்து பரவலாகப் பேசப்பட காரணமாக இருந்த மதுரை டெசோ மாநாட்டைப் பற்றி நூலில் பெரியதாக ஏதும் காணக்கிடைக்கவில்லை. வாஜ்பாய், பகுகுணா உள்ளிட்ட தேசிய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிகழ்வு அது. டெசோவில் புலிகள் பங்கேற்க மறுத்ததற்கு பிரபாகரனின் நியாயம் என்னவென்றும் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.

550971231 - இந்த எண் என்னவென்று யாருக்காவது தெரியுமா? உலகம் சுற்றும் மர்ம வாலிபன் கே.பி. என்கிற குட்டி என்கிற குமரன் பத்மநாதன் என்கிற செல்வராஜா குமரனின் தாய்லாந்து நாட்டு குடியுரிமை எண். 1984ல் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவரது நடவடிக்கைகள் இருட்டானவை. இவர் யார்? என்ன செய்துக்கொண்டிருக்கிறார்? என்பது கடந்த சிலமாதங்களாக மட்டுமே ஒவ்வொன்றாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அவரது குடியுரிமை எண் உள்ளிட்ட பல விவரங்களை தேடி தேடி எழுதியிருக்கிறார் பா.ராகவன்.

1983 ஜூலைக்கலவரத்தின் கொடூரத்தை சில பத்திகளிலேயே உணரவைத்து, அதிரடியாக அதற்கு பதிலடி தந்த புலிகளின் வீரத்தை வர்ணிக்கிறார். கமாண்டர் செல்லக்கிளி தலைமையிலான அந்த மோதலில் பிரபாகரன், புலேந்திரன், கிட்டு உள்ளிட்டோரும் நேரடியாக பங்கேற்கிறார்கள். இயக்கத்தின் தலைவரே கமாண்டர் ஒருவரின் தலைமையை ஏற்று போரிடும் பாங்கு அற்புதம். பதிமூன்று சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்ட அத்தாக்குதலில் தான் பிரபாகரனின் களமாடும் திறமை வெளிப்பட்டது. ஒன்பது பேரை வீழ்த்தியிருந்தார் பிரபாகரன். ஜி3 ரக துப்பாக்கியப் பயன்படுத்திய பிரபாகரன் அதற்காக செலவிட்டது ஒன்பது குண்டுகள். ஒரு துப்பாக்கி ரவையின் விலை இருபத்தி ஐந்து ரூபாய். இப்பகுதியை வாசிக்கும்போது உடலெல்லாம் சிலிர்க்கிறது. சந்தேகமே வேண்டாம். இதுவரை உலகம் கண்ட மாவீரர்களில் பிரபாகரனுக்கு நாம் முதலிடம் தயங்காமல் கொடுக்கலாம்.

பிரபாகரன் அற்புதமாக சமைப்பார். கோழியடித்துக் குழம்பு வைப்பார். மீன் சமைப்பதில் பாலசிங்கம் கில்லாடி. பிரபாகரனின் தோழர்கள் துணி துவைப்பார்கள். வீடு பெருக்கி சுத்தம் செய்வார்கள். ஹாஸ்டல் வார்டன் மாதிரி அடேல் பாலசிங்கம் அத்தனை பேரையும் கட்டி மேய்ப்பார். சென்னை திருவான்மியூரில் பிரபாகரன் வாழ்ந்த தினங்களை ஒரு மேன்ஷன் வாசனையோடு விவரிக்கிறார் பாரா.

பிரபாகரனின் காதல் கூட ஒருமாதிரி முரட்டுத்தனமாகவே சொல்லப்படுகிறது. அதாவது விஜயகாந்த் பாணி காதல். செயல்வெறி வீரரை, நாட்டுக்காக தன்னைத்தானே நேர்ந்துக் கொண்டவரை காதலித்து மணந்தவர் மதிவதனி. பிரபாகரன் செய்த தியாகங்களில் சரிபாதியை இவருக்கும் விட்டுத்தருவதே நியாயம். இந்திய வரலாற்றில் நாடிழந்து காடும், பாலைவனமுமாக அலைந்த ஹூமாயுன் உடனேயே திரிந்த அவரது மனைவி நினைவுக்கு வருகிறார். ஹூமாயுனின் மனைவி மொகலாயரின் வீர வரலாற்றுக்குப் பரிசாக பெற்றெடுத்த அக்பரைப் போலவே மாவீரன் சார்லஸ் ஆண்டனியை ஈழத்துக்காக பெற்றுத் தந்தார் மதிவதனி.

ஈழத்தில் ஆயுதம் ஏந்திய போராளி இயக்கங்கள் கிட்டத்தட்ட முப்பதி ஒன்பது இருந்திருக்கின்றன. புலிகள் இயக்கம் தவிர்த்து ஏனைய இயக்கங்கள் இந்தியாவின் உளவுத்துறையான ரா அமைப்புக்கு அடிவருடிகளாக மாறிவிட்டன. புலிகள் இயக்கம் மட்டுமே என்றுமே ’ரா’வைச் சார்ந்து ஒத்து செயல்பட்டதில்லை. இந்நூலை வாசிப்பவர்கள் ஈழத்துக்கு வில்லன் சிங்களவனா இந்தியாவா என்று யோசிப்பார்கள். இந்திராகாந்திக்குப் பிறகு ராஜீவ் காலத்திலான இந்தியச் செயல்பாடுகளை விறுப்பு வெறுப்பின்றி பாரா எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக தீக்‌ஷித்தின் கை. புலிகள் இயக்கத்தில் துரோகிகள் களையெடுக்கப்பட்டதையும் (மாத்தையா போன்றவர்கள்) விறுவிறுப்பாக பேசிக்கொண்டே போகிறார்.

ஆனாலும் சகோதரப் படுகொலைகள் குறித்து புலிகளை மாதிரியே நூலாசிரியரும் ‘ஆமாய்யா. ராவுக்கு அடிவருடி ஆனாங்க. போட்டுத் தள்ளினோம்’ என்பது மாதிரி மிக லைட்டாக பேசுவது வருத்தத்தை தருகிறது. சிறீசபாரத்தினம் கிட்டுவால் கொடூரமாக போட்டுத்தள்ளப்பட்டதை ரொம்பவும் லேசான வார்த்தைகளில் நிரப்புகிறார். பிரபாகரனுக்கு இணையாக தமிழகத்தில் நேசிக்கப்பட்ட ஆளுமைகளில் சபாரத்தினமும் ஒருவர். அவர் படுகொலை செய்யப்பட்ட செய்தியை செய்தித்தாளில் வாசித்து கண்ணீர் விட்டவர்களை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர் வெளியேற்றம், இயக்கத்திலிருந்த இஸ்லாமியர்கள் கதி, மலையகத் தமிழர்கள் - இவர்களையெல்லாம் பாரா கண்டுகொள்ளவேயில்லை. அதுபோலவே கருணா வெளியேறிய சந்தர்ப்பம் பற்றிய தகவல்களும் மிகக்குறைவு. அமைதிப்படைச் செயல்பாடுகள், இந்தியாவோடு புலிகள் மோதவேண்டிய சூழலை விவரிக்கும்போது, புலிகள் இலங்கையோடு சேர்ந்து செயல்பட்டதையும் குறிப்பிட்டதாக தெரியவில்லை. இந்தியாவோடு பிரபாகரன் மோதவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய திலீபனின் மரணம் பற்றியும் விரிவாகJustify Fullச் சொல்லியிருக்கலாம். அதே நேரத்தில் துணி வியாபாரிகளாகவும், குறி சொல்பவர்களாகவும் வேடமணிந்து ரா செயல்பட்டதை விலாவரியாக புன்னகைத்துக்கொண்டே எழுதிக்கொண்டு போகிறார் பாரா.

சகோதரப்படுகொலைகளை லேசாக எடுத்துக்கொண்ட நூலாசிரியர் ராஜீவ் படுகொலையை மிக சீரியஸாக எடுத்துக்கொண்டு புலிகள் செய்த மிகப்பெரியத் தவறு என்பதாக சாடுகிறார். அதற்கு முன்பாக ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பற்றி கோடிட்டு மட்டுமே காட்டுகிறார். அசோகா ஓட்டலில் பிரபாகரன் சிறைவைக்கப்பட்டாரா என்பது பற்றி பளிச்சென்று எழுதவில்லை. அதே நேரத்தில் சென்னையில் பிரபாகரன் மனைவி சிறைவைக்கப்பட்டதாக சொல்லப்படுவது பற்றியும் குறிப்புகள் எதுவுமில்லை. அந்த ஒப்பந்தத்தில் எம்.ஜி.ஆரின் பிரதிநிதியான பண்ரூட்டி ராமச்சந்திரனின் ரோலையும் சொல்லியிருக்கலாம்.

1991, திருப்பெரும்பெரும்புதூர் துன்பியல் சம்பவத்துக்குப் பிறகான பிரபாகரனின் வாழ்க்கை அவசர அவசரமாக நூலாசிரியரால் எழுதப்பட்டிருப்பதாக உணரமுடிகிறது. பிரபாகரன் சிந்தித்து, பொட்டு அம்மான் செயல்பட்டு, ரகு என்கிற ரகுவரன் என்கிற பாக்கியச் சந்திரன் என்கிற சிவராசன் நடத்தியதே அத்துன்பியல் சம்பவம் என்று தீர்ப்பு தருகிறார் நூலாசிரியர். இதே சிவராசன் இதற்கு முன்பாக வெற்றிகரமாக செயல்பட்டது கோடம்பாக்கம் பத்மநாபா படுகொலை என்பதையும் மறக்காமல் சொல்கிறார்.

“ஒரு காலத்தில் இலங்கைத் தீவின் மூன்றிலொரு பகுதி நிலப்பரப்பையும், மூன்றில் இரண்டு பகுதி கடற்பரப்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆண்டு கொண்டிருந்த பிரபாகரனையும், அவரது இயக்கத்தவர்களையும் வன்னிப்பகுதியில் ஐந்து சதுர கிலோ மீட்டர் பரப்புக்குள் சுருக்கிவிட்டோம்; மொத்தமாகப் பிடித்துவிடுவோம் என்று இலங்கை ராணுவம் அறுதியிட்டு சொல்லுமளவு நிலைமை படிப்படியாக மாறிப்போனதன் தொடக்கக் கண்ணி ராஜீவ் படுகொலையில் தான் இருக்கிறது” - இவ்வாறாக நூலாசிரியர் எழுதுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை.

இன்னும் மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் பிரபாகரனுக்கு மூன்றிலொரு பகுதி நிலப்பரப்பு, மூன்றில் இருபகுதி கடற்பரப்பு கிடைத்ததெல்லாம் ராஜீவ் படுகொலைக்குப் பிறகே. அடுத்த பத்தாண்டுகளில் பிரபாகரனும், அவரது இயக்கமும் அடைந்த வளர்ச்சி அலாதியானது. 91க்கும் 2006க்கும் இடையிலான சம்பவங்கள் இந்நூலில் விலாவரியாக காணக்கிடைக்கவில்லை. இலங்கையை சுருளவைத்த காட்டுநாயக்கா தாக்குதல் போன்றவற்றையாவது குறிப்பிட்டிருக்கலாம்.

நூலின் கடைசி அத்தியாயங்கள் வாரப்பத்திரிகை கவர்ஸ்டோரி பரபரப்பைக் கொண்டிருக்கிறது. நிஜமாகவே அவை வாரப்பத்திரிகையில் கவர்ஸ்டோரியாக வந்தவைதான் என்பதை நூலின் முன்னுரையில் அறிந்துகொள்ளவும் முடிகிறது. பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று இந்த அத்தியாயங்களில் அடித்துப் பேசுகிறார் நூலாசிரியர். இதற்காக தான் சேகரித்த தரவுகளைப் பட்டியலிடுகிறார். அதே நேரத்தில் பிரபாகரன் மரணமடையவில்லை என்று நம்புபவர்கள் சொல்லும் காரணங்களையும் நேர்மையாக பத்தி பத்தியாக எழுதியிருக்கிறார்.

பிரபாகரன் இல்லாத நிலையில் அடுத்தது என்ன? என்று கேள்வி எழுப்பும் பா.ராகவன் தமிழருக்கான எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையை அச்சத்தோடு பேசுகிறார். முத்தாய்ப்பாக அவர் எழுதியிருப்பது : “ஓரினம் உரத்து அழக்கூடத் தெம்பில்லாமல் தேங்கிக் கிடக்கிறது. இன்னொரு இனமோ இனிப்பு வழங்கி, ஆடிப்பாடிக் கொண்டாடுகிறது. எப்படி இந்த இருவரும் ஒன்றாக வாழமுடியும்?”

நூலின் பெயர் : பிரபாகரன் - வாழ்வும், மரணமும்!

நூல் ஆசிரியர் : பா.ராகவன்

விலை : ரூ.100/-

பக்கங்கள் : 208

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

ஒவ்வொரு தமிழர் இல்ல நூலகத்திலும் கட்டாயம் இடம்பெற வேண்டிய நூல். பா.ராகவனின் மாஸ்டர் பீஸ் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. மிக முக்கியமான இந்நூலின் அட்டைப்படம் மட்டும் என்னை அவ்வளவாக கவரவில்லை. விஜயகாந்த் படத்தின் ஓப்பனிங் சீன் மாதிரி ஃபயராக இருக்கவேண்டாமா பிரபாகரன் புத்தகத்தின் அட்டைப்படம்?

Saturday, July 4, 2009

தமிழ் மக்கள் வரித்துக்கொண்ட ஆயுதப்போரே எமது இனத்தின் வலியை உலகிற்கு உணர்த்தியது

நான்காவது ஈழப்போரின் ஓய்வுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா அரசும் அதற்கு உறுதுணையாக இருந்து தமிழ் மக்களின் விடுதலைப் போரை முற்றாக நசுக்க முனைந்த இந்திய மத்திய அரசும் தொடர்ச்சியாக தெரிவித்து வருவதுடன் அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போரின் இலட்சியத்தை தகர்த்து அதனை மனிதப்பேரவல நெருக்கடிக்குள் புதைத்துவிட முனைந்து வருகின்றன.

தனது பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதன் மூலம் அமெரிக்காவுக்கு போட்டியாக பொருளாதார மற்றும் படைத்துறை கட்டமைப்புக்களில் தன்னைப்பலப்படுத்த சீனா முயன்று வருகின்றது. ஐரோப்பா கண்டத்தில் ஏற்படுத்தப்பட்ட அமைதி, அமெரிக்க பிராந்தியத்தில் அமெரிக்கா ஏற்படுத்திய அமைதி போன்றவை அவர்களின் வளர்சிக்கும், பலத்திற்கும் காரணம் என சீனா நம்புகின்றது.

எனவே தான் அது பெருமளவு முதலீடுகளை தனது பிராந்திய நாடுகளில் மேற்கொள்வதுடன், அங்குள்ள நெருக்கடி
களையும் தணிப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்திருந்தது. மறுபுறம் இந்தியாவும் அதற்கு போட்டியாக தனது முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
எனினும் விடுதலைப் புலிகளின் படை பலம் அதனை எதிர்கொள்ள இராணுவத்திற்கு தேவைப்பட்ட படை பலம் போன்றவை சிறீலங்கா அரசினை சீனாவின் பக்கம் அதிகம் சாய வைத்திருந்தது. ஆனால் இந்தியா அதற்கு எதிரான போக்கினை மேற்கொள்ள துணியவில்லை. அதுவும் போட்டியாக சிறீலங்கா அரசினை பலப்படுத்தவும், விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தது.

2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளில் மேற்குலகம் பங்குகொண்டதை இந்தியா சந்தேகக் கண்கொண்டு பார்த்ததுடன், அவர்களை வெளியேற்றவும் மறைமுகமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. மேற்குலகத்தை வெளியேற்றுவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்ட போதும் அது சீனாவின் ஆளுமையை தடுப்பதற்கு தவறிவிட்டது. அதனை அவர்கள் தற்போது கூட உணர்ந்து கொள்வார்களோ தெரியாது.

ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளின் போரிடும் வலுவையும், அரசியல் ஆளுமைçயுயும், மக்களின் ஆதரவையும் முறியடிப்பதற்கு பல வழிகளில் மிகவும் தீவிரமாக போர் நிறுத்த காலத்தில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது என்பது உண்மை. போர் நிறுத்த காலத்தில் இராஜதந்திர வழிகளிலும், போரின் போது படைத்துறை வழிகளிலும் அது காத்திரமான பல நர்வுகளை மேற்கொண்டிருந்தது.

அதன் ஒரு அங்கமாக இந்தியாவின் தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே.நாராயணன் சில நகர்வுகளை மேற்கொண்டிருந்தார். போர் நிறுத்த காலத்தில் வன்னிப் பகுதிக்கும் சிறீலங்காவுக்கும் விஜயங்களை மேற்கொண்டிருந்த சமாதான முயற்சிகளுக்கான நோர்வேயின் அனுசரணையாளர் எரிக் சொல்யஹய்ம் அவர்கள் தனது பயணத்தின் போது இந்தியாவுக்கும் சென்று தகவல்களை பரிமாறிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதே சமயம் அவர் பிரித்தானியாவுக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தையும் சந்தித்து செல்வதையும் மேற்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் நாராயணன் கலாநிதி பாலசிங்கத்துடன் சில தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். அந்த தொடர்புகள் பின்னர் நட்பாகவும் மெல்ல மெல்ல மாற்றமடைந்தது. கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்கு தேவையான மருத்துவ பொருட்களையும் நாராயணன் பிரித்தானியா செல்பவர்களிடம் வாங்கி கொடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் நாராயணன் விடுதலைப் புலிகளிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தார். அதாவது முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கு ஒரு மன்னிப்பு அறிக்கையை வெளியிடுமாறும், அதன் பின்னர் தமிழ் மக்களுக்கு சார்பாக இந்திய மத்திய அரசின் போக்கை மாற்றுவதற்கு தான் முயற்சிகளை மேற்கொள்ளவதாகவும் தெரிவித்திருந்தார்.

நாராயணனின் தொடர்ச்சியான வற்புறுத்தல்கள், தமிழ் மக்களின் பக்கம் உள்ள நியாயங்களின் பக்கம் இந்தியாவை திருப்பும் முயற்சி என்பவற்றை கருத்தில் கொண்ட கலாநிதி அன்ரன் பாலசிங்கம் “ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு வருந்துவதாகவும், அது தவறு எனவும்” இந்திய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த அறிக்கையை அப்படியே தலைகீழாக உருமாற்றிய இந்திய ஊடகங்கள் “ராஜீவ் காந்தியின் கொலைக்கு விடுதலைப் புலிகள் உரிமை கோரியுள்ளனர்” “ராஜீவ் காந்தியின் கொலையை விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என அறிக்கைகளை வெளியிட்டிருந்தன. கலாநிதி அன்ரன் பாலசிங்கம் வழங்கிய தகவல் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தை கலந்தாலோசிக்காது வெளியிடப்பட்ட தகவலாகவே இருந்தது.

இந்த நிலையில் தான் விடுதலைப் புலிகளின் மத்தியகுழு வன்னியில் அவசரமாக கூடி இந்த தகவலால் ஏற்படப்போகும் நன்மை தீமைகள் தொடர்பாக கலந்தாலேசனைகளை நடத்தியதுடன், நாராயணயன் மேற்கொண்ட நகர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அந்த கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் மட்டும் கலந்துகொள்ளவில்லை. மூத்த தளபதிகளும், மூத்த உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தை தொடர்புகொள்ளாது தெரிவித்த கருத்துக்கு விடுதலைப் புலிகள் தமது அதிருப்தியை கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திற்கு தெரியப்படுத்தியதாகவும் அதனை தமிழ்செல்வனே தொலைபேசி ஊடாக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் தவறுகளும் அதற்கான தண்டனைகளும் நிகழாதவை அல்ல. அதற்கு போராளிகளோ, பொறுப்பாளர்களோ விதிவிலக்கானவர்களும் அல்ல. தண்டனைகளை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து போராடுவது தான் ஒரு விடுதலைப் போராளியின் சிறப்பு. உதாரணமாக கேணல் ஜெயத்தை நாம் கருதிக்கொள்ளலாம்.

1993களில் மாத்தையா மீதான ஒழுக்காற்று நடவடிக்கையின் போது கேணல் ஜெயமும் தண்டனைக்கு உள்ளாகியிருந்தார். இயக்கத்தில் இருந்து விரும்பினால் அவர் வெளியேறலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அத்தனை தண்டனைகளையும் ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து அமைப்பில் இருந்து தமிழ் மக்களின் விடுதலை மீதான தனது வேட்கையை வெளிப்படுத்திய உன்னதமான போராளி மற்றும் கட்டளை தளபதி அவர்.

பின்னைய நாட்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அபிமானத்தை பெற்றுக்கொண்ட தளபதிகளில் கேணல் ஜெயமும் ஒருவர். பிரிகேடியர் பல்ராஜ் கூட பல தடவைகள் தண்டனைகளை அனுபவித்து மீண்டவர். இவ்வாறு எத்தனையோ போராளிகளையும், தளபதிகளையும் நாம் உதாரணம் காட்டமுடியும்.

விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தை பொறுத்தவரையில் அவர்கள் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் மீது அளவுகடந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். அதனை தேசத்தின் குரலின் இறுதி நாட்களில் நாம் கண்டிருந்தோம். கலாநிதி அன்ரன் பாலசிங்கம் கூட பல தடவைகள் அதனை தெரிவித்திருந்தார். அதாவது “தம்பி சில விடயங்களில் என்னுடன் முரண்பட்டதுண்டு, ஆனால் சில மணிநேரத்தில் அண்ணை என அழைத்தவாறு அவர் மீண்டும் வந்துவிடுவார்” என அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்தையும் நாம் மறந்துவிட முடியாது.

மீண்டும் நாராயணனின் விவகாரத்திற்கு வருவோம். நாராணயணின் திட்டப்படி விடுதலைப் புலிகளால் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்ட போதும், அவர் கூறியது போல இந்தியா தமிழ் மக்களுக்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. அதனை நாம் சில வருடங்கள் கழித்து தற்போது ஆணித்தரமாக உணர்ந்து கொண்டுள்ளோம்.

இந்தியா சிறீலங்கா அரசுடன் கூட்டுச்சேர்ந்து படை நடவடிக்கை மூலம் எமது போரட்டத்தை பெரும் அழிவுக்கு உள்ளாக்கியுள்ளது. சிறீலங்கா அரசை உலகின் அழுத்தங்களில் இருந்து இராஜதந்திர வழிகளில் காப்பாற்றி வருகின்றது. கனரக ஆயுதங்களின் தாக்குதலில் சிக்கியிருந்த அப்பாவி மக்களில் ஒரு சிலரை கூட இந்தியா காப்பாற்ற முன்வரவில்லை. அப்பாவி மக்களை மேற்குலகம் காப்பாற்ற முன்வந்த போதும் இந்தியா தனது இராஜதந்திர அழுத்தங்களை பயன்படுத்தி தடுத்து விட்டது.

எனவே நாராயணன் கூறியது போல எதுவும் நிகழவில்லை. எம்மை அவர் நம்பவைத்து முதுகில் குத்திவிட்டார் என்பதை நாம் சில வருடம் கழித்து உணர்ந்து கொண்டோம், ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமை அன்றே உணர்ந்திருந்தது. அது தான் யதார்த்தம்.

எனினும் இந்திய அரசின் வஞ்சகமான நகர்வுகள் மூலம் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தை நாராயணன் நம்பவைத்து முதுகில் குத்தி விட்டாரா? அல்லது கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் இரஜதந்திர நகர்வுகள் தவறாகிப்போய்விட்டனவா? என்பதற்கான விடைகளை தேடுவது சிரமமமாக இருந்தாலும், விடுதலைப் புலிகளின் தலைமை அன்று மேற்கொண்ட நடவடிக்கை, இந்திய அரசின் மீதான அவர்களின் கணிப்புக்கள் போன்றன சரியானவை.

எமது உறவுகள் 50,000 மேற்பட்டோரின் உயிர்கள் முள்ளவாய்க்காலில் இழக்கப்பட்டபோது அதனை நாம் வலுவாக உணர்ந்து கொண்டுள்ளோம். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கணிப்புக்கள், தமிழ் மக்களை பல தடவைகள் காப்பாற்றி உள்ளன என்பதே உண்மையானது.

1987 ஆம் ஆண்டு உலகின் நான்காவது பெரிய இராணுவமான இந்திய இராணுவத்துடன் விடுதலைப் புலிகள் மோதிய போது அதனையும் ஒரு சிலர் கேலியாகத்தான் பார்த்தனர். விடுதலைப் புலிகளுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என சிலர் வாதிட்டனர். ஆனால் 1990 ஆம் ஆண்டு வடக்கு ‡ கிழக்கு மாகாணசபையின் முதல்வரான வரதராஜப்பெருமாள் தன்னிச்சையாக தனிநாட்டு பிரகடனத்தை மேற்கொண்ட பின்னர் இந்தியாவுக்கு தப்பியோடிய போது தான் விடுதலைப் புலிகளின் முடிவுகளும், தீர்மானங்களும் எவ்வளவு சரியானவை என்பதை தமிழினம் மட்டுமல்லாது இந்திய படையுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக்குழுக்களும் உணர்ந்து கொண்டன.

தமிழ் மக்களை இனிமேல் ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வா கூறிவிட்டு சென்றார். ஆனால் ஆண்டவன் வரமாட்டான் எமது உரிமைகளை நாமே பெறவேண்டும் என எமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறினார். சாதித்தும் காட்டியிருந்தார். விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் தான் எமது இனத்தின் துயரங்களை உலகின் கண்களின் முன் நிறுத்தியதன் முக்கிய காரணி.

தமிழ் மக்கள் வரித்துக்கொண்ட ஆயுதப்போர் எமக்கு அதிக நன்மைகளைத்தான் தந்துள்ளது. உலகில் எம்மை அடையாளப்படுத்தியதும் அது தான். எமது இனத்தின் வலிகளையும், வேதனைகளையும் ஐ.நாவின் மனித உரிமை சபைவரை கொண்டு சென்றதும் அதுதான்.

மீண்டும் எமது விடுதலைப் போர் பயணிக்கப்போகும் பாதை எது என்பதை களம் தான் தீர்மானிக்கப்போகின்றது. புலம் அதற்கான ஆதரவுகளை தான் வழங்க முடியும்.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி:ஈழமுரசு(10.07.09)

வன்னியில் மீண்டும் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா
பிரசுரித்த திகதி : 17 Jul 2009

ஒட்டி சுட்டான் பிரதேசத்தில் இரு தினக்களுக்கு முன்னர் மரத்தில் பொருத்திவைக்கப்பட்டிருந்த கிளைமேர் தொலைதூரக் கருவி மூலம் வெடிக்கவைக்கப்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எ9 பாதை அருகில் இடம்பெற்ற இத்தாக்குதலினால் இராணுவ அதிகாரி ஒருவர் பயணித்த வாகனம் சேதமைடைந்ததாக ஊர்ஜிதமற்ற வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் சிலர் கொடுத்த தகவலின் படி இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பினும் இது கிளைமோர் வகைக் குண்டுதானா என ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.

அதேசமயம் வன்னி வான்பரப்பில் விமானத் தாக்குதல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி இராணுவ வைத்தியசாலையில் , காயங்களுடன் இராணுவத்தினர் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளை தோற்கடித்து இராணுவரீதியாக தாம் வெற்றிகொண்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் புலிகளின் கொரில்லாத் தாக்குதல் தற்போது ஆரம்பமாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 9ம் திகதியும் இவ்வாறான ஒரு சிறிய தாக்குதல் இடம்பெற்றதையடுத்தே எ9 பாதை திறப்பதில் தாமதமானதாகச் சொல்லப்படுகிறது.

யாழ் மக்கள் மிகுந்த அச்சத்தின் மத்தியில் வாழ்கிறார்கள் - சுரேஷ் பிரேமச்சந்திரன்
பிரசுரித்த திகதி : 18 Jul 2009

யாழ் மக்கள் ராணுவம் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று த.தே.கூ சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

யாழ் மக்கள் ராணுவம் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் ஒட்டுக்குழுக்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் அதனால் அவர்கள் தேர்தல் பற்றிய தமது கருத்துக்களை முன்வைப்பதற்குப் பயப்படுவதாகவும் த.தே.கூ யாழ் பா.உ சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக யாழில் இடம்பெற்று வந்த கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்ட எவருமே இனங்காணப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை.

எனவே இச்செயல்களில் ராணுவமும் ஒட்டுக்குழுக்களும் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு அரசு ஆதரவாக இருக்கிறது என்பதிலும் யாழ் மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கின்றனர். அதோடு வன்னியில் இடம்பெற்ற தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்ற அரசு சர்வதேச சமூகத்தின் குற்றப்பார்வைக்கு உள்ளாகியுள்ளது. எனவே இவ்வாறான எண்ணங்களை யாழ் மக்கள் மனதில் இருந்தும் சர்வதேச சமூகத்திடம் இருந்தும் அகற்றும்பொருட்டு யாழ் மாநகர சபைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அரசு.

ஆனால் மக்களோ தமது கருத்துக்களை வெளிக்கூற முடியாத நிலையில் இருந்தாலும் இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் தமது உள்ளத்தை வெளிக்காட்டி அரசுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளார்.

யாழ் மாவட்டம் சார்பாக தேர்வான அரச அமைச்சர் தனது சொந்த சின்னத்தின்கீழ் போட்டியிடமுடியாமல் ஆளும் கட்சியின் வெற்றிலைச் சின்னத்தின்கீழ் போட்டியிட வேண்டியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். த.தே.கூ பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் மக்கள் பொதுக்கூட்டங்களிற்கு சமூகமளிக்க அஞ்சுவதால் தாம் வீடு வீடாகச் சென்று தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர் மேலும் தொடர்ந்து கூறி தமது வெற்றி நிச்சயமானது என்றும் கூறியுள்ளார்.

ரைம்ஸ் பத்திரிகையுடன் இலங்கை அரசு
ஒரு நிழல் யுத்தத்தை ஆரம்பித்துள்ளது
பிரசுரித்த திகதி : 18 Jul 2009

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று லண்டன் ரைம்ஸ் கூறுவதை இலங்கை உயர் ஸ்தானிகர் மறுத்துள்ளார்.

லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் நீதிபதி நிகால் ஜயசிங்க, லண்டன் ரைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் ரொபேர்ட் கோலுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், மே 19 இலிருந்து போர் முடியும்வரை 20,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் உட்பட ஐ.நா அமைப்பின் ரகசிய ஆதாரங்களைக் காட்டி ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியைத் தாம் மறுப்பதாக எழுதியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் உண்மையில் ஆதாரம் அற்றவை என்றும் உண்மையில் ஷெல் வீச்சு காரணமாக அந்த அளவுக்கு மக்கள் இறக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

அவர் எவ்வளவுக்கு மறுப்புரை வழங்கினாலும்,, வன்னியில் இடம்பெற்ற இறுதி நேர யுத்தத்தின்போது மக்கள் அனைவரும் செறிந்து ஒரே இடத்தில் தஞ்சமடைந்திருந்தபோது இலங்கை ராணுவத்தினரால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் போலி முகத்திரை கிழிந்தது
பிரசுரித்த திகதி : 18 Jul 2009

இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது 76 லட்சம் ரூபாவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியிருந்தது. பொருட்களை இறக்க, அதனை கொண்டு செல்வது போன்ற செலவுகள் எனக் கோரி இந்தத்தொகை கோரப்பட்டிருந்தது. இச்செய்தி காட்டுத் தீ போலப்பரவியதாலும், பல பத்திரிகைகளில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டதாலும் பின்னர் பணம் கோரும் படலம் கைவிடப்பட்டது. அதேசமயம் நேற்றைய தினம் தாம் அவ்வாறு பணம் எதுவும் கோரவில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் டெய்லி மிரர் இணையத்திற்கு தெரிவித்திருந்தது. DAILY MIRROR LINK

இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொலைநகலின் பிரதிகள் தற்போது அதிர்வு இணையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவை இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தாம் பணம் கோரவில்லை என பொய்யான தகவலை வெளியிட்டுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.

இவர்களா இதயசுத்தியுடன் போர் நடைபெற்ற காலங்களில் காயப்பட்ட தமிழர்களுக்கு உதவியிருப்பார்கள். தற்போதும் பல பகுதிகளில் சேவையாற்றிவரும் இவர்களின் பணியை மிகுந்த சந்தேகக்கண் கொண்டே பார்க்கவேண்டியுள்ளது.

மதுரை, ஜூலை. 17-

திரைப்பட இயக்குனர் சீமான் இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகும் தமிழ் மக்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு உள்ளனர். உணவு, உடை இல்லாமல் நோய்வாய்ப்பட்டு வெட்ட வெளியில் தினமும் ஏராளமானோர் பலியாகி வருகிறார்கள். மனித நேயம் பேசும் உலக நாடுகள் இலங்கை தமிழர்களை காக்க இதுவரை குரல் கொடுக்கவில்லை.

இலங்கையில் போர் முடிந்து ஒரு நிசப்தமான சூழ்நிலை அங்கு ஏற்பட்டு உள்ளது. இலங்கையில் போர் நடந்தபோது கூட போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்த வில்லை. இப்போது முள் வேலிக்குள் அடைபட்டு சாகும் தமிழர்களை காக்கவும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போர் முடிந்துவிட்டால் இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழலாம் என்று ராஜபக்சே கூறியிருந்தார். ஆனால் தற்போது அங்கு என்ன நடக்கிறது? சுமார் 31/2லட்சம் தமிழர்கள் வேலி அமைத்து சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர்.

அடுத்த 2 மாதத்தில் சிங்களர்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளுக்கு தமிழர்களை கொண்டு சென்று வேலி அமைத்து அந்த வேலிக்குள் தமிழர்களை கொடுமைப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அங்கு கொடுமைகள் அரங்கேற உள்ளன.

எனவே தமிழர்களுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள வேலிகளை வெட்டி எறிய வேண்டும். இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வழி செய்யும் வகையில் தமிழ் உணர்வுள்ள அனைவரும் ஒன்று கூடும்நிகழ்ச்சியாக நாளை (18-ந்தேதி) மாலை 5 மணிக்கு மதுரை ஜான்சி ராணி பூங்கா திடலில் கண்டன பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் தமிழ் உணர்வுள்ள அனைவரும் கலந்து கொண்டு இலங்கையில் வசிக்கும் நம் மக்கள் நிம்மதியாக வாழ குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 48:
நிர்மலா சிறைமீட்பு!



தமிழீழப் புரட்சிகரப் போராளியான நிர்மலா 1982-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி தனது கணவர் நித்யானந்தனுடன் கைது செய்யப்பட்டார். அவர்மீது சாட்டப்பட்ட குற்றம்:சாவகச்சேரி போலீஸ் நிலையத்தைத் தாக்கிக் காயமுற்ற ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் புகலிடம் கொடுத்தார். விடுதலைப் போராளிகளைப் பற்றிய தகவல் அறிந்தும் போலீஸôருக்குத் தெரிவிக்கவில்லை என்பதாகும்.இவர் குருநகரின் ராணுவ முகாமில் சில காலமும் வெலிக்கடைச் சிறையிலுமாக வைக்கப்பட்டார். வெலிக்கடைச் சிறையில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றோர் படுகொலை செய்யப்பட்டபோது இவரின் உயிருக்கும் உலை வைக்கப்பட்டது. அந்தச் சதியிலிருந்து நிர்மலா தப்பினார். பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.1983 செப்டம்பர் 23-ஆம் தேதி ஈழப் போராட்ட வீரர்கள் மட்டுநகர் சிறைச்சாலையிலிருந்து தப்பி வெளியேறியபோது இவர் தப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்தத் தப்பித்தல் நடந்த பிறகு ராணுவத்தின் அதிரடிப் படைப்பிரிவினர் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பாதுகாப்புக்கென நிரந்தரமாக்கப்பட்டனர்.நிர்மலாவைத் தப்பிப்பது என்பது சாத்தியமில்லை என்று அனைவராலும் நம்பப்பட்டது. ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் துணிகரமான சிறை மீட்பு திட்டம் ஒன்றினைத் தீட்டினர். 1984 ஜூன் 15-இல் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கெனக் கொழும்பிற்கு நிர்மலாவைக் கொண்டு செல்ல அரசு முடிவு செய்திருந்தது. அதற்கு முன்னதாக நிர்மலாவை மீட்க வேண்டும்.விடுதலைப் புலிகள் ஜூன் 10-ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் அதி நவீன ரக ஆயுதங்களுடன் மட்டக்களப்புச் சிறைச்சாலையை முற்றுகையிட்டனர். வீரர்கள் அனைவரும் சிறைக்காவலாளி உடையில் இருந்தனர்.சிறைச்சாலைக் கதவைத் தட்டி, கொழும்பிலிருந்து சில கைதிகளை அடைப்பதற்காகக் கொண்டு வந்திருப்பதாகக் கூறி கதவைத் திறக்கச் சொன்னார்கள். முதலாவது கதவு ஒருக்களித்தவாறு திறக்கப்பட, விடுதலைப் புலிகள் உள்ளே நுழைவதற்குள் அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று சிறை அதிகாரிகள் உணர்ந்து உஷாராயினர். விரைவாகக் கதவை மூடவும் முற்பட்டனர்.சிறைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வது நல்லதல்ல, பாதுகாப்பானதும் அல்ல என்ற முடிவுக்கிணங்க விடுதலைப் புலிகள் துப்பாக்கியின் துணையை நாடவில்லை. மாறாக, சற்றும் தாமதிக்காது அதிரடி முறையில் கைகளால் மட்டுமே தாக்குதலைத் தொடுத்தனர். சிறை அதிகாரிகளை மடக்கினர். இந்த மோதலில் இரண்டு சிறை அதிகாரிகளுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.சிறைச்சாலைக்குள்ளேயும் பலத்த பாதுகாப்பு இருந்தது. இரண்டாவது-இரும்புக் கதவுக்குரிய சாவியைச் சிறை அதிகாரிகளிடமிருந்து பெறமுடியவில்லை. இரும்புக்கதவை உடைத்தே திறந்தனர். விடுதலைப்புலிகளின் தாக்குதலை அறிந்த காவலாளிகள் பலர் எதிர்த்துப் போராடாது தப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்தனர். இரும்புக் கதவை உடைத்துத் திறந்ததும் பெண்களுக்கான சிறைக் கதவையும் உடைத்தனர்.நிர்மலா இருந்த சிறைக்கதவுச் சாவியை வைத்திருந்தவர் ஓடி ஒளிந்து விட்டதால் அந்தக் கதவையும் உடைத்தே திறந்தனர். வெளியே ஏதோ நடக்கிறது என்பதைச் சூசகமாக உணர்ந்து கொண்ட நிர்மலா தனது அறையின் கதவு உடைபடுவதை அறிந்து தயார் நிலையில் இருந்தார். கொரில்லா வீரர்கள் சிறைக்கதவை உடைத்ததும், தாமதம் ஏதும் செய்யாது சில மணித்துளிகளில் அங்கிருந்து வீரர்கள் யாவரும் வெளியேறினர். நிர்மலா நித்யானந்தன் சிறை மீட்கப்பட்டதும் அவரையும் கணவர் நித்யானந்தனையும் அதி வேகப் படகு மூலம் தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், பேபி சுப்ரமணியம், சீலன், ரகு உள்ளிட்டோர் நிர்மலாவை புலவர் புலமைப்பித்தன் இல்லத்தில் தங்க வைத்தனர். இந்தச் சிறை மீட்புப்பணி தமிழீழ விடுதலைப்புலிகளின் புரட்சிகரமான ஆயுதப் போராட்ட வரலாற்றில் சிறப்பான அத்தியாயமாயிற்று!
இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு
உறுதியான நடவடிக்கைக்கு வற்புறுத்தல்:
பிரதமர்



புது தில்லி, ஜூலை 17: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந் நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் வலியுறுத்தியதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.எகிப்தில் அண்மையில் நடைபெற்ற அணிசாரா இயக்க நாடுகள் கூட்டத்தின்போது ராஜபட்சவிடம் பேசியது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளிக்கையில் மன்மோகன் சிங் கூறியதாவது: ராஜபட்சவுடனான சந்திப்பில் அதிகமான நேரம் தமிழர்களின் மறுவாழ்வு குறித்தே பேசப்பட்டது. தமிழர்களின் நிலை குறித்த நமது அக்கறையை ராஜபட்சவிடம் எடுத்துக் கூறினேன்.தமிழர்களின் மறுவாழ்வுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை சார்ந்துதான் இலங்கையுடன் இந்தியாவின் உறவு அமையும் என்பதையும் விளக்கினேன்.அதிகாரப் பகிர்வு திட்டத்தின் அடிப்படையில், தமிழர்களின் அரசியல் பங்களிப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என அவரிடம் கூறினேன் என்றார்.
கருத்துக்கள்


'தமிழர்களின் மறுவாழ்வுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை சார்ந்துதான் இலங்கையுடன் இந்தியாவின் உறவு அமையும்' என்பதை முன்பே வலியுறுத்தியிருந்தால் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் எரிகுண்டுகளாலும் அழிபொறிகளாலும் கூட்டம் கூட்டமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்களே! இன்னும் என்ன என்ன கொடும் படைக்கருவிகள் வழங்க இருப்பது குறித்துப் பேசினார்களோ!. அதிகாரப் பகிர்வு என்னும் பேச்சிற்கே இடமில்லை என்னும் இராசபட்சேவிடம் அதுபற்றி என்ன பேசியிருக்க முடியும்? பக்சேவிற்கு உள்ள 134 பாதுகாப்பு அறிவுரையாளர்கள் போதா என்றுதான் இந்தியாவும் பாதுகாப்பு நெறியாளர்கள் பலரை வழங்கியுள்ளதே! பக்சே அதற்கு நன்றி கூறினாரோ? ஈழ நாட்டைச் சுடுகாடாகவும் இடுகாடாகவும் ஆக்கியதற்குப் பாராட்டினாரோ இவர்? யார் அறிவார்! நாராயணன்களுக்கும் மேனன்களுக்கும்தான் தெரியும்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2009 5:26:00 AM

Tamil Self Rule is the only solution to the conflict

By senthil
7/18/2009 4:45:00 AM

If India genuinely concerns on the Ealam Tamils welfares,it has to be strict with Srilanka to make a federal state in the united northeast of the Tamils traditional soil with perfect legitimate authority.Unless,the crisis never come to an end.It will fire again massively and distroy the whole island.

By Rajan Thambinayagam
7/18/2009 4:39:00 AM

If India genuinely concerns on the Ealam Tamils welfares,it has to be strict with Srilanka to make a federal state in the united northeast of the Tamils traditional soil with perfect legimate authority.Unless,the crisis never come to an end.

By Rajan Thambinayagam
7/18/2009 4:34:00 AM
மாநிலங்களவையில் அழகிரி இல்லாததால் அமளி



புதுதில்லி, ஜூலை 17: மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மு.க.அழகிரி இல்லாததால் அமளி ஏற்பட்டது. மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது, வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் ஒரு கேள்விக்கு பதிலளித்துவிட்டு அமர்ந்தார். அதுவரை அவையில் இருந்த அழகிரி அவையை விட்டு வெளியேறினார்.இதையடுத்து ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதிலளிக்கத் தொடங்கினார்.உடனே எழுந்த பாஜகவைச் சேர்ந்த நஜ்மா ஹெப்துல்லா, "ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, அழகிரி ஆகியோர் அவர்கள் துறை சம்பந்தப்பட்ட கேள்விகளின்போது அவையில் இல்லாமல் இருப்பது குறித்து நோட்டீஸ் கொடுத்தனரா?' என அவைத் தலைவர் ஹமீத் அன்சாரியிடம் கேள்வி எழுப்பினார்.பாஜக உறுப்பினர்களுக்கு ஆதரவாக மைத்ரேயன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்களும் கோஷமிட்டனர். இதற்கு எதிராக திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது."அவை நடவடிக்கைகளில் அமைச்சர்கள் பங்கேற்கவில்லை எனில் நோட்டீஸ் கொடுப்பார்கள். ஆனால், கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய நேரத்தில் அழகிரி சென்றுவிட்டார்' என்றார் பாஜக உறுப்பினரான எஸ்.எஸ்.அலுவாலியா."கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்தான் இருக்க வேண்டும் என விதி எதுவும் இல்லை. அவரது இணை அமைச்சர் கூட பதிலளிக்கலாம்' என அப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத்.
கருத்துக்கள்


மு.க. அழகிரி வேண்டுமென்றே வெளியேறி இருக்க வாய்ப்பு இல்லை. வினா எழுப்ப இருப்பது கவனத்தி்ல் கொண்டு செல்லப்படாமல் இருந்திருக்கலாம். அல்லது இணை அமைச்சருக்கு விடையிறுக்க வாய்ப்பு தரும் பெருந்தன்மையாக இருக்கலாம். அமைச்சர் அவையில் இருக்கிறாரா இல்லையா எனச் சிக்கலை எழுப்புவதை விட அவரிடம் செயல்பாடு இருக்கிறதா இல்லையா எனக் கண்டறிந்தால் போதுமானது. செயல்பாடுதான் வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை உணரும் பொழுது செயல்பாடு இல்லாமலா போய்விடும்?

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2009 5:12:00 AM

அண்ணன் ஹிந்தி, மற்றும் ஆங்கில கிளாசுக்கு போறாரில்லே அதான் வெளியேறிவிட்டார். அது புரியாத மர மண்டைகள் தான் பாஜகவில் இருக்கிறார்கள். அண்ணன் அடுத்த தேர்தல் வரை கிளாசுக்கு போய்க்கினே இருப்பார் யாரும் ஒண்ணும் பண்ண முடியாது க்கும்!

By MKSamy
7/18/2009 4:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *



சென்னை, ஜூலை 17: தமிழக காவல்துறை ஜாதி சங்கமாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் குற்றம்சாட்டினார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது: தமிழக காவல் துறையில் ஜாதி உணர்வு அதிகமாகிவிட்டது. காவல் துறையா? ஜாதி சங்கமா? என்று கேட்கிற அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் போலீஸôருக்கு முழு சுதந்திரம் இருந்தது. ஆனால் இப்போது போலீஸôருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு அரசியல்வாதிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளுமே காரணம். தியாகராய நகர், பாண்டி பஜார், பூக்கடை, கோடம்பாக்கம் போன்ற காவல் நிலையங்களில் பணியாற்ற போலீஸôரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதற்கு "கலெக்ஷனே' காரணம். முன்பெல்லாம் குடும்ப பின்னணியை ஆராய்ந்த பிறகுதான் போலீஸ் வேலையில் சேர்ப்பார்கள். அந்த வழக்கம் இன்று இல்லாததால் குற்றவாளிகள் போலீஸ் அதிகாரியாக வந்துவிடுகிறார்கள். குற்றங்கள் பெருகி வருவதற்கு இது முக்கியமான காரணமாகும். 1967-க்குப் பிறகு திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்கின்றன. இரு திராவிட கட்சிகளும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டீர்கள். ஆனால் நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றார் போளூர் வரதன். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்:நாங்கள் என்ன செய்தோம் என்பதை திங்கள்கிழமை (ஜூலை 20) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் சொல்வோம். ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக): மக்களுக்காக நாங்கள் (அதிமுக) என்ன செய்தோம் என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். திங்கள்கிழமை நான்பேசும் போது அதிக விவரங்களை தர இருக்கிறேன் என்றார்.
கருத்துக்கள்


காங்.ஆட்சியில் காவல் துறையினருக்கு முழு உரிமை - சுதந்திரம் - இருந்தது. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல! இளைஞர்களையும் மாணாக்கர்களையும் அரிவாளால் வெட்டி சாய்க்கும் காங்.ஐக் கண்டு கொள்ளாமல் இருக்க 'சுதந்திரம்' இருந்தது. காவல் தடுப்பில் இருந்த மாணாக்கர்களைச் சிறு நீர் குடிக்கச் செய்வதற்கு முழுச்'சுதந்திரம்' இருந்தது. திரைப்படப் பாடல்களில் 'அண்ணா' என்னும் பெயர் வருவதைத் தடுக்கக் கூட 'சுதந்திரம' இருந்தது. (பேச்சில் சிறந்தவர் யாரு? அண்ணா! என்பதைத் திரு.வி.க. என மாற்றச் செய்ததை 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி' என்னும் பாடலில் இன்று கூடக் கேட்கலாம்.) அடக்கு முறைக்கும் துப்பாக்கிச் சூட்டிற்கும் 'சுதந்திரம்' இருந்தது. ஆட்சி விரும்பாத் தலைவர்களைக் கைது செய்ய எடுப்பார் கைப்பிள்ளையாகச் செயல்பட'சுதந்திரம்' இருந்தது. இவ்வாறு ஒன்றா இரண்டா ? அடுக்கிக் கொண்டே போகலாம்.

நினைவலைகளில் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2009 5:00:00a.m.