சனி, 14 ஆகஸ்ட், 2010

ஆங்கில மொழியாக்கம் செய்யப்படாததால் மக்களவையில் டி.ஆர்.பாலு ஆட்சேபம்


புதுதில்லி, ஆக. 13: அவையில் அமைச்சர் பதில் அளித்தபோது அது ஆங்கிலத்தில்  மொழியாக்கம் செய்யப்படாததால் திமுக எம்பி டி.ஆர்.பாலு ஆட்சேபம் தெரிவித்தார். அவருடன் அவரது கட்சியின் மற்ற உறுப்பினர்களும் சேர்ந்து அவரது கோரிக்கையை வலியுறுத்தவே அவையில் அமளி ஏற்பட்டு அவை 11.45 மணி வரை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.ஆங்கில மொழியாக்கம் செய்ய முடியாதபடி சிக்கல் நேர்ந்ததால் அதற்காக மன்னிப்பு கோருவதாக அவைத் தலைவர் மீரா குமார் தெரிவித்தார்.மக்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது நாட்டில் உள்ள நீர்மின் உற்பத்தித் திட்டங்கள் பற்றி பாஜக உறுப்பினர் ஒருவர் இந்தியில் கேள்வி கேட்டார். இதற்கு எரிசக்தித்துறை இணை அமைச்சர் பரத்சிங் சோலங்கி இந்தியில் பதில் அளித்தார். அவரது பதில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இதை டி.ஆர்.பாலு சுட்டிக்காட்டினார். இந்த பிரச்னை சரிசெய்யப்படும் என்று அவைத்தலைவர் மீரா குமார் தெரிவித்தபிறகும் பாலு சமாதானமடையவில்லை. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கும்வரை அவை நடவடிக்கைகளை நிறுத்திவையுங்கள், இல்லையெனில் நாங்கள் அவையை புறக்கணிப்போம் என்று தெரிவித்த பாலு, அவையின் வழிநடைப் பகுதிக்கு சென்றார். அவருடன் சேர்ந்து அவரது கட்சியின் மற்ற உறுப்பினர்களும் சென்றனர். இந்நிலையில் பதிலை ஆங்கிலத்தில் சொல்ல தயார் என அமைச்சர் பரத்சிங் சோலங்கி முன் வந்தார். இதை பாஜக உறுப்பினர்கள் எதிர்த்தனர். பாஜக உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் கேள்வி கேட்டது இந்தியில் என்பதால் பதிலும் இந்தியில்தான் இருக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தேசிய மொழியான இந்தியில் பதில் கொடுத்தால் அது அந்த மொழியை கெüரவப்படுத்துவதாகும் என்றார் ஹுகும் தேவ் நாராயண் யாதவ்.பாஜக உறுப்பினர்கள் இப்படி பேசிக்கொண்டே இருக்கவே கூச்சல் குழப்பம் அதிகமானதால் அவையை 15 நிமிடங்களுக்கு 11.45 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் மீரா குமார் உத்தரவிட்டார். அவை மீண்டும் கூடியதும் பேசிய மீராகுமார் ஆங்கில மொழியாக்கம் செய்ய முடியாத வகையில் சில குளறுபடி ஏற்பட்டுவிட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆங்கில மொழியாக்கம் இல்லாததால் சில உறுப்பினர்கள் சங்கடம் அடைந்திருக்கலாம். பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டது என்றார். எனினும் இந்தி மொழியையே பயன்படுத்தவேண்டும் என்று ரகுவம்ச பிரசாத் சிங் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்) கோஷம் எழுப்பினார். அவருடன் மற்ற உறுப்பினர்கள் சிலரும் சேர்ந்துகொண்டு சப்தம் போட்டனர். அப்போது தலையிட்ட நிதியமைச்சரும் அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சராக இருந்தவர் தான் நீங்கள். அதை மறந்துவிடாதீர்கள், இருக்கையில் அமருங்கள் என சப்தம் போட்டார்.
கருத்துக்கள்

இந்தி மட்டும்தான் இந்தியாவின்தேசியமொழி என அறியாமையில் உழல்வோரை முதலில் நெறிப்படுத்துங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar Thiruvalluvan
8/14/2010 3:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தமிழக அரசு சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை: ராமதாஸ்


சென்னை, ஆக.13: தமிழக அரசு தனியாக ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தலாம் என மத்திய அமைச்சர்கள் குழுமுடிவு எடுத்துள்ளதாக செய்தி வந்தபோது அதனை வரவேற்றோம். தொடர்ந்து வரும் செய்திகளைப் பார்த்தால், "கணக்கெடுப்பு நடப்பது போல வெளியே தெரிய வேண்டும்; ஆனால், அது நடந்து முடிந்துவிடக் கூடாது' என்ற மறைமுகத் திட்டம் ஒளிந்திருக்கிறது என்று தெரிகிறது. இதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிரான உயர் சாதிக்காரர்களின் மற்றுமொரு சதி என்றும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு மேற்கொள்ள இருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள பொறுப்பை தட்டிக்கழிப்பது போல் உள்ளது. சமூகநீதி ஆர்வலர்கள் அனைவருக்கும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது, எந்த அடிப்படையில் நடைபெறும் என்பதை முடிவு செய்யவே இன்னும் பல மாதங்கள் பிடிக்கும். அதோடு, இப்போது ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல், பல்நோக்கு பயன்பாட்டு அடையாள அட்டை பணிக்கான கணக்கெடுப்பில் இதைச் சேர்ந்தால் பணி முடிய 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும். ஒரு ஜாதியில் எத்தனை பேர் என்பதை மட்டும் கணக்கெடுத்தால் அது போதாது. அவர்கள் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளனர், பட்டதாரிகள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் அந்த ஜாதியில் எத்தனை பேர் உள்ளிட்ட விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அதற்கேற்றவாறு வாய்ப்புகளையும், சலுகைகளையும் பகிர்ந்தளித்தால்தான் உண்மையான சமூகநீதியை எட்ட வழிபிறக்கும். மத்திய அரசு மேற்கொள்ளும் கணக்கெடுப்பில் இவை சாத்தியமில்லை.  தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கணக்கெடுப்பை நடத்த வேண்டும். மாநில மக்கள்தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக அவர்கள் இருந்தால் அதனை தகுந்த ஆதாரத்துடன் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் புதிதாக இடஒதுக்கீட்டுச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரு மாநிலத்தின் இடஒதுக்கீட்டின் அளவை முடிவு செய்யும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாகவே தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது. தமிழகத்தில் தனியாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உச்ச நீதிமன்றம் அளித்த வாய்ப்பை பயன்படித்திக்கொள்ள முடியும். தனியாகக் கணக்கெடுப்பு நடத்த |400 கோடி செலவாகும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு |60 ஆயிரம் கோடி பட்ஜெட் தயாரிக்கும் மாநில அரசுக்கு இது கடினமான காரியம் அல்ல. பெரும்பான்மையான மக்களின் நலன் கருதி இந்தக் கணக்கெடுப்பை நடத்தலாம்.
கருத்துக்கள்

சரியான கோரிக்கையே! அரசு ஆவன செய்க! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar Thiruvalluvan
8/14/2010 3:13:00 AM
மத்திய அரசு அதன் செலவில் இந்த காரியத்தை செய்யும் பொழுது தமிழ் நாடு அரசு ஏன் ரூ 400 ய் செலவிட வேண்டும்? நேற்று மாநில அரசை கிண்டல் செய்துவிட்டு இன்று கோரிக்கை. மர வெட்டி மாநிலத்தை மேலும் துண்டாக்க நினைத்து விட்டார்.
By K Rajan
8/14/2010 3:11:00 AM
Idiotic Opinion !
By Guruvamma
8/14/2010 12:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

>>மணா பக்கங்கள்

சிறையில் எப்படி இருக்கிறார் சீமான்? - சிறப்புச் சந்திப்பு

ஊர் சுற்றிக்குறிப்புகள் - 3

எத்தனையோ கூட்டங்களில் அவர் ஆவேசத்துடனும், தார்மீக வேகத்துடனும் பேசியதைக் கேட்க முடிந்திருக்கிறது. மேடையில் பேசுகிறபோது உணர்வுவயப் பட்ட இன்னொரு உலகத்திற்குள் அவர் நுழைகிற மாதிரி இருக்கும். நேரடியாக எப்போது பார்த்தாலும் இயல்பான கரகரத்த குரலில் ராமநாதபுரத்துத் தமிழில் அவர் விசாரிப்பது மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.
இப்படிப்பட்ட நண்பரும், இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் அடிக்கடி கைது செய்யப்பட்டாலும் இம்முறை சென்னையில் மீனவர் பிரச்சினைக்காக அவர் பேசிய பேச்சுக்காக தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்த விதம் கவலைப்பட வைத்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மத்தியச்சிறைக்கு முன்னால் இன்றைய முதல்வரான கருணாநிதி கைது செய்யப்பட்டு அதிகாலை நேரத்தில் கைலி கட்டியபடி சிறைவளாகத்திற்கு முன் அமர்ந்திருந்தபோது பத்திரிகையாளனாக அந்த இடத்தில் இருந்தேன். சிறைத்தண்டனை அவர்களுடைய செயல்பாடுகளிலிருந்து வலுக்கட்டாயமாகத் துண்டித்து அவர்கள்படும் அவதியையும், காவல் நிலையத்தில் ஒருவருடைய குடும்பம் என்னென்ன இன்னல்களுக்கு ஆட்படக்கூடும் என்பதையும் விடிந்தும் விடியாத பொழுதில் இருந்து பார்த்த அனுபவம் இன்னும் நினைவில் கறை மாதிரிப் படிந்திருக்கிறது. மறைந்த முரசொலி மாறன் அன்றைக்கு அதிகாலை காவல் நிலையத்தில் பட்டபாட்டை நேரடியாகப் பார்த்த அனுபவம் முள் தைத்த வலியை ஏற்படுத்தியது.

கலைஞர் கைது செய்யப்பட்டபோது சென்னை காவல் நிலையத்திலிருந்து அதிகாலை நேரத்தில் விடுவிக்கப்பட்டபோது முரசொலிமாறன் பின்னணியில் கட்டுரையாளர்.
எதிர்க்கட்சித்தலைவராக இருந்த கலைஞர் சிறையிலிருந்து விடுதலை ஆனதும் கோபாலபுரம் வீட்டில் நான் முதலில் சந்தித்து வாரமிருமுறை இதழுக்காகப் பேட்டி கண்ட போது கொந்தளிப்புடன் அவர் சொன்னார். ''இனியும் கைதுகள் தொடர்ந்தால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும்.'' அவர் அன்று அனுபவித்த வலி அந்தச் சொற்களை வரவழைத்திருக்கலாம். அந்த வலியை உணர ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, வயதானவர், இளைஞர், பெண், பத்திரிகையாளர், திரைப்பட இயக்குநர் என்கிற பேதங்கள் வேண்டியதில்லை. வலிந்து ஒருவரைச் சிறைக்குள் தள்ள முற்படுகிறபோது அடைகிற  மனத்தத்தளிப்பை இன்றைய முதல்வரிலிருந்து பலரும் ஏதோ ஒரு கணத்தில் அழுத்தமாக உணர்ந்திருப்பார்கள். சராசரியான மனித உரிமை நசுங்கும்போது எழும் அழுத்தம் அது.
வேலூர் சிறைக்கு இதற்கு முன்னால் சிறைப்பட்டிருந்த வைகோவைச் சந்திக்க சின்னக்குத்தூசி அவர்களுடன் சேர்ந்து போயிருக்கிறேன். சிறைக்குப் பக்கவாட்டில் இருக்கிற அறையில் ஜெயிலரின் கண்காணிப்பின்கீழ் பேசி விட்டு வந்த அனுபவத்திற்குப் பிறகு மீண்டும் அதே வேலூர் சிறை. முன்னால் அந்தக்காலத்தில் சிறைப்பட்டிருந்த தியாகிகளுக்கான உயர்ந்த நினைவுச்சின்னம். காலத்தின் பார்வையில் பின்னாளில் ஒருவர் தியாகியாக மதிக்கப்பட்டாலும் –சிறை வளாகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு நபரும்  கைதிதான்.
சிறை வாசலில் சீமானின் 'நாம் தமிழர்' இயக்கத்து இளைஞர்கள் கூடியிருந்தார்கள். வியாழக்கிழமை மட்டும்தான் அவரைப் பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்தது. வழக்கமான விசாரிப்புகள், கொண்டு போயிருந்த புத்தகங்கள் வரை சோதனையிட்ட பிறகு சிறை அதிகாரிகள் முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த சீமான் எழுந்து கை கொடுத்துத் தோழமையான புன்னகையுடன் வரவேற்றார்.
வழக்கமாக அணியும் கறுப்பு டி-சர்ட்டும், கறுப்பு பேண்ட்டும்தான். சிறையில் இருந்த நடமாட்டங்களும், சுற்றிலும் கேட்டுக்கொண்டிருந்த கைதிகளின் ஆஜர் படுத்தும் சப்தங்களும், சற்றுத் தொலைவில் அதிகாரிகள் கண்காணிப்பும் சூழ்ந்த நிலையில் பேச்சை இயல்பானதாக மாற்றமுடியவில்லை.
''அரசு வசதியுடன் வைத்திருப்பதாக அறிக்கை எல்லாம் விடுகிறதே. இங்கே எப்படி இருக்கீங்க?" கேட்டதும் -முகம் சலித்தபடி சொல்கிறார் சீமான்.
''இப்போ மனுப்போட்டு மத்தவங்களைப் பார்க்குறதுக்காக வர்ற நேரத்தைத் தவிர மத்த நேரம் எல்லாம் தனி அறையில்தான் வைக்கப்பட்டிருக்கேன். காலையிலும், மாலையிலும் ஒருமணிநேரம் சிறை வளாகத்திற்குள் நடக்க அனுமதி கேட்டும் இதுவரை தரப்படலை.. என்ன சொல்ல?"
மற்றவர்களுடன் பேசுவதில் உற்சாகம் கொள்பவர்களைத் தனித்த அறையில் அடைப்பது சிறை என்கிற வளாகத்தின் மீதிருக்கும் இறுக்கத்தைக் கூட்டுகிறது.
அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த யாரையும் துன்புறுத்துவது -பகிர்ந்து கொள்ள யாருமற்ற தனிமைதான். சில நேரங்களில் தனிமை கூடத் தண்டனை மாதிரி ஆகிவிடுகிறது. முகம் நம்மைப்பார்த்தபடி இருந்தாலும் -அவருடைய கண்கள் அந்த அறையில் வந்து போகிறவர்களைக் கவனித்தபடி இருக்கின்றன. அடிக்கடி விரல்களால் முகத்தை நீவிவிட்டுக்கொள்கிறார்.
"தமிழக மீனவர்கள் பிரச்சினையைப் பேசினதுக்காக -அதுவும் தமிழ்நாட்டில் தமிழர்களாலேயே கைது செய்யப்பட்டிருக்கேன். ஏதோ ஒரு காரணத்துக்காக - யாரையோ திருப்திப்படுத்த என்னைக் கைது பண்ணியிருக்காங்க. என் தரப்பு விளக்கத்தை தமிழ் மக்கள் கிட்டே சொல்ல முடியலை.. ஆனா.. நம்பிக்கை இருக்குங்க.. தமிழ் உணர்வாளர்கள் இருக்காங்க.. எத்தனையோ துடிப்பான இளைஞர்கள் இருக்காங்க.. தமிழ் உணர்வுள்ள ஊடக நண்பர்கள் இருக்காங்க.. அதனாலே அவங்க கண்டிப்பா புரிஞ்சுப்பாங்க..
முதலில் நான் கைது செய்யப்பட்டதும் கொஞ்ச நேரத்திலேயே என்னைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலே கைது செய்யப்போறாங்கன்னு தெரிஞ்சு போச்சு. வெளியில் என்னை விடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாங்க.. தனியா அடைச்சுட்டாங்க.. மத்த மனுசங்களைப் பார்த்துப் பேசுறதுன்னா இந்த மாதிரி நேரத்திலேதான் முடியுது"
பேசிக்கொண்டிருந்த அந்த அறைக்குள் கைதி உடையணிந்தவர்களை வரிசையாக அழைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். "தமிழ் மொழியே தெரியாதவர்களால் என்னைப் போன்றவர்களின் பிரச்சினையைப் புரிஞ்சுக்க முடியுமா? நம்ம மீனவங்க தாக்கப்படுறதைக் கண்டிச்சுப் பேசுனது தப்பா?" பெருமூச்சுடன் கேட்கிறார்.
வருகிறவர்களிடம் வெளியுலக நிலவரங்களைப் பற்றிக் கேட்கிறார். அரசியல் நிலவரங்களைப் பற்றி விசாரிக்கிறார். திரைப்பட உலகில் தமிழ் அடையாளத்துடன் படம் தயாரிக்கப்பட வேண்டும் என்கிற தவிப்பைச் சொல்கிறார். உரிமையுடன் ஊடகங்களில் இருக்கும் நண்பர்களைக் குறிப்பிட்டு விசாரிக்கிறார்.
''நிலைமை மாறும்ங்க.. நம்பிக்கை இருக்கு.. நம்ம நண்பர்கள் இருக்காங்க.. நம்ம  மக்கள் இருக்காங்க..பார்ப்போம்.." கையை அழுத்தமாகப் பிடித்தபடி விடை கொடுக்கிறார்.
அவருடைய முகத்தில் மறுபடியும் அந்தப் புன்னகை.
புன்னகைக்குப் பின்னிருக்கும் வலியை நாம் உணர்வோமா?

000000000000
within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
நீக்கப்பட்ட என் கருத்தை மீண்டும் வெளியிட்டமைக்கு நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(21 hours ago) Ilakkuvanar Thiruvalluvan said:
மணாவின் பதிவுகளில் ஒரு மாற்றம் மிளிர்கிறது. தொடரட்டும். கட்சிச் சார்பற்ற முறையில் உண்மையை மறுபக்கத்திற்கு உரைக்கும் ஊடகராகச் செயல்பட்டாலும் அரசால் கட்சி முத்திரை குத்தப்படும். எனினும தொண்டில் மாற்றம் வேண்டா. செய்தியை வெளியிடும் முன்பு அதே போன்ற சூழலில் நிகழ்வுக்குக் காரணமானவர்கள் தெரிவித்த கருத்தையும் ஒப்பிடுவது நன்று. ஆனாலும், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது கண்மண் தெரியாது. ஆள்வோரின் மறுபக்கத்தையும் கட்சியாளர்களின் உண்மை முகத்தையும் வெளிப்படுத்தும் அவலங்களில் கருத்து செலுத்துவது நாட்டை நல்வழிக்கு அழைத்துச் செல்லும் பாதையாகும். சீமானின் வலி அவரது தனிப்பட்ட வலியல்ல;ஒட்டு மொத்த தமிழினத்தின் வலி. எனவே, அனவைரும் வலி தீர்க்க முயல வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் முதன்மை பெற்றால்தான் - தமிழ்நலம் நாடும் தமிழர்கள் தலைமை பெற்றால்தான் நாடு நலம் பெறும்! நாமும் வளம் பெறுவோம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(Jul 31, 10) ராஜா சந்திரசேகர் said:
ஆழமும் உண்மையும் நிறைந்த சிந்தனைகளை சிறைகளால் ஒன்றும் செய்ய முடியாது.எல்லாவற்றையும் காலம் கவனித்துக் கொண்டிருக்கிறது.
(Jul 31, 10) R.Sivakumar said:
தமிழக முதல்வர் கருணாநிதியின் தமிழர் இரண்டகப் போக்கு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. ஒன்று மட்டும் நிச்சயம்! இந்த சிறைக் கொட்டடி எத்தனையோ புரட்சிகளுக்கு வித்திட்டிருக்கிறது. தமிழையும், தமிழனையும் புறக்கணித்த திரைப்படத்துறையைத் தூக்கியெறிந்துவிட்டு இன்று களத்தில் நிற்கின்ற சீமான் போன்றவர்களால்தான் இனி தமிழன் விடுதலை பெற வேண்டும். சகுனிகளாலும், இரண்டகர்களாலுமே தமிழின வீழ்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், சீமானின் உரத்த குரல் மட்டுமே ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தை உறக்கத்திலிருந்து எழச் செய்திருக்கிறது. புடம் போட்ட தங்கமாய் சீமான் சிறையிலிருந்து வெளி வரும் காலம் அதிகார, ஆணவமிக்க ஆண்டைகளின் இறுதிப்பயணம் தொடங்கக்கூடிய காலமாய்த்தான் மிளிரும். தமிழர் நலன் காக்கக் குரலெழுப்பும் ஒருவனின் கருத்துரிமையைக் கூட நசுக்க நினைக்கின்ற திமுக, காங்கிரசுக் கும்பல் தமிழகத்தை விட்டே விரட்டியடிக்கப்படும் நாள் வந்தே தீரும்!

-இரா.சிவக்குமார்
(Jul 30, 10) Sada said:

ஸ்.எம். கிருஷ்ணாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு பழ.நெடுமாறன் கோரிக்கை


சென்னை, ஆக. 12: கடலில் எல்லை தாண்டும் மீனவர்களைப் பாதுகாக்க முடியாது என்று நாடாளுமன்றத்தில் அறிவித்த வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.÷இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கை கடற்பகுதிக்குள் எல்லை மீறி நுழையும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நாடாளுமன்றத்திலேயே அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.÷உலகெங்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் அவர்களை அறியாமல் எல்லைத் தாண்டிச் செல்வதுண்டு. ஆனால் அவர்களையெல்லாம் யாரும் சுட்டுக்கொல்வதில்லை. குஜராத் மாநில மீனவர்கள் பாகிஸ்தான் கடலில் நுழைந்து விட்டால் அவர்கள் சுடப்படுவதில்லை. மாறாக பாகிஸ்தான் கடற்படை அவர்களைக் கைது செய்து சிறையில் வைக்கிறது. மேற்கு வங்க மீனவர்கள் வங்க எல்லைக்குள் புகுந்துவிட்டால் அவர்களை வங்க தேச கடற்படை கைது செய்கிறதே தவிர சுடுவதில்லை. ஏன் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இலங்கை மீனவர்களை இந்திய கடற்படை இதுவரை சுட்டதில்லை.÷1983-லிருந்து இதுவரை 27 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 500 பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். பல நூறு கோடி ரூபாய் பெறுமான மீனவர்களின் படகுகளும் வலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நமது கடல் எல்லைக்குள்ளாகவே இவ்வளவும் நடைபெறுகிறது. ராமேசுவரத்திற்கு அருகேயுள்ள வாழைக்குடா என்ற தமிழகச் சிற்றூரில் சிங்களக் கடற்படை வந்திறங்கி அங்குள்ள மீனவர்களை சுட்டும் அவர்களின் குடிசைகளைக் கொளுத்தியும் அட்டூழியம் செய்துவிட்டுத் திரும்பியுள்ளது. இந்தியக் கடற்படை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.÷இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட நமது மீனவர்களுக்குச் சர்வதேச சட்டங்களின்படி இழப்பீடு பெற்றுத்தர மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.எஸ்.எம். கிருஷ்ணா ராஜபட்சவின் குரலில் பேசுகிறார். இவரைப் போன்றவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும்வரை தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய குடிமக்களுக்கே எத்தகையப் பாதுகாப்பும் ஒருபோதும் இருக்காது.÷சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது எனப் பகிரங்கமாக அறிவித்துள்ள எஸ்.எம். கிருஷ்ணா அந்த பொறுப்பிலிருந்து உடனடியாக விலகவேண்டும் அல்லது அவரை பிரதமர் விலக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

காங்கிரசு அரசின் கொள்கையைத்தான் கிருட்டிணா தெரிவித்தார். மன்மோகன்சிங்கின் கோட்பாட்டைத்தான் அவர் அறிவித்தார். சோனியாவின் இலட்சியத்தைத்தான் அவர் வெளிப்படுத்தினார். எனவே, அவருக்கு வெகுமதிகள் காத்துள்ளன. அவரை நீக்குமாறு சொல்வது நமது அறியாமையைத்தான் காட்டும். எங்களுக்கு ஆரியனையும் சிங்களனையும்தான் தெரியும். தமிழனைத் தெரியாது என அடம்பிடிக்கும் காங்கிரசை ஆட்சியில் இருந்து அகற்றப் போராட வேண்டும். கூட்டணி அமையாமல் வெளியேற்றப்படும் சூழலில் வெளியேறுவதுபோல் நாடகம் ஆடாமல் மத்திய அரசில் இருந்து வெளியேறுமாறு தி.மு.க. வை வலியுறுத்த வேண்டும்.தமிழர்க்குஎதிரான காங்கிரசைத் தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் இந்தியாவில் இருந்தே விரட்டப் போராட வேண்டும். பிற அறிக்கைகளில் என்ன பயன்? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/13/2010 4:41:00 AM
பாகிஸ்தானில் கேவலப்பட்டு வந்த கிருஷ்ணாவை அப்போதே பதவி நீக்கம் செய்து இருக்கவேண்டும். அதை விட தேசிய அவமானம் இருக்க முடியாது. இப்போ, தன் நாட்டு மக்களையே பாதுகாக்க முடியாதுன்னு தைரியமாய் நாடாளுமன்றத்திலேயே சொல்றாரு, நம்ம ஊரு 40 எம்பிக்களும் வாயிலே விரலை சூப்பிக்கிட்டு கேட்டுட்டு வந்திருக்கானுங்க. இலங்கை அரசாங்கம் கூட இவ்வளவு தைரியமா, "தமிழன் எல்லை தாண்டி வந்தால் சுடுவேன்"னு சொன்னதில்லை. இந்த ஆளு தமிழனுக்கு நல்லதுதான் செய்ய மாட்டான்னு நினைச்சேன், இவன் ராஜபக்சேவை விட கொடுங்கோலனா இருக்கான். மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
8/13/2010 4:25:00 AM

 
அடக்கத்துடன் செயல்படுகிறது அரசு கேபிள் டி.வி: கருணாநிதி


சென்னை, ஆக. 12: அடக்கத்துடன் 50  ஆயிரம் கேபிள் இணைப்புகளைக் கொண்டு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  சட்டப் பேரவையில் ஒப்புக் கொண்டபடி அரசு கேபிள் டி.வி.யை மீண்டும் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியிருக்கிறார்.அரசு கேபிள் டி.வி. இப்போதும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அது மூடப்பட்டால் அல்லவா, மீண்டும் தொடங்குவதற்கு? அரசு டி.வி. என்பதால் பெரிய அளவுக்கு விளம்பரத்தோடு செயல்படாமல் அடக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டுதான் உள்ளது. சுமார் 50 ஆயிரம் கேபிள் டி.வி. இணைப்புகளை இப்போது வழங்குகிறது.ஜாதிவாரி கணக்கெடுப்பு: சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சர்களின் குழு முடிவு செய்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னை எழுந்தபோது பிரதமர் மன்மோகன் சிங் குறுக்கிட்டு, அந்தப் பிரச்னையில் நல்லதொரு முடிவினை அமைச்சரவை மேற்கொள்ளும் என கூறியிருந்தார்.  இந்த முடிவினை எடுத்துள்ள மத்திய அரசுக்கு, திமுக சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலேயர் காலத்தில் 1931-ம் ஆண்டு இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்குப் பிறகு ஏறத்தாழ 80 ஆண்டுகள் கழித்து இப்போது நடத்த முன்வந்திருப்பது வரலாற்றில் பொறிக்கத்தக்க ஒரு முன்னேற்றமாகும்.  69 சதவீத இடஒதுக்கீடு குறித்து அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு தமிழகத்துக்கு மிகுந்த பயனளிக்கும் என்பது மற்றொரு சிறப்பு அம்சமாகும்.தமிழில் பி.இ.: அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 13 பொறியியல் கல்லூரிகளில், மெக்கானிக்கல் மற்றும் சிவில் பட்டப்படிப்புகளில் 1,380 இடங்கள் தமிழில் படிப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.  அந்த இடங்களில் இதுவரை 1,372 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இன்னும் சில நாள்கள் கவுன்சலிங் இருப்பதால் மீதியுள்ள எட்டு இடங்களும் அதற்குள் பூர்த்தியாகி விடும் என நம்புகிறேன்.  இந்த அளவுக்கு தமிழில் படிக்க ஆர்வம் இருப்பதைக் காணும் போது, மற்ற பிரிவுகளுக்கும் இதனை அடுத்தடுத்த ஆண்டுகளில் விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் இந்த அரசு ஈடுபடும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துக்கள்

அரசுத் திட்டம் என்றாலே அறிவிக்கும் பொழுதே விளம்பரப்படுத்தி ஒன்றும் இல்லாமல் செய்வதுதான் அரசியல் பண்பாடு. அவ்வாறிருக்க விளம்பரம் இல்லாமல் கம்பிவடத் தொலைக்காட்சி இணைப்பு என்பது நகைச்சுவையாக உள்ளது. வணிக நிறுவனம் என்னும் பொழுது உரிய விளம்பரம் செய்யாமல் இருப்பதன் காரணம் என்ன? வேறு தனியாரிடம் இணைப்பு பெறச் செய்யத்தானே என்ற கேள்வி எழாதா?கோடிக்கணக்கான குடும்பங்கள் உள்ள தமிழ்நாட்டில் 50 000 என்பது மிகச் சிறிய தொகைதான். எனவே, விளம்பரப்படுத்தி மக்கள் பயனுறும வகையில் கம்பி வடத் தொலைக்காட்சிப் பணியை மக்களுக்கு அளிக்க வேண்டும். ஏத்வே முதலான பெரிய நிறுவனங்களின் கம்பிவடங்களையே அறுத்தெறிந்த வல்லமை வாய்ந்த குடும்ப நிறுவனம் ஊருக்கு இளைத்த அரசு கம்பி வடத்தையா விட்டு வைக்கம்? எனவே, உரிய விளம்பரப்படுத்தி முனைப்பாகச் செயல்படுத்தி, அனைத்து மக்களும் அரசு கம்பிவடப் பணியால் பயனுறச் செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/13/2010 4:27:00 AM
நித்யானந்தா porno video மாதிரி அயிட்டங்களை braodcast பண்ணுணா நல்லா வியாபாரம் ஆகும் பாஸ்
By Nallan
8/13/2010 4:08:00 AM
Oh... Man!!! I could not bear this Guy Karunanidhi!!!! He and his family should be driven away from Tamilnadu!!! That day will come soon!!!!
By Priyan
8/13/2010 3:45:00 AM
கலாநிதி மாறனுக்கும் அழகிரிக்கும் முன்னால் ரொம்பவே அடக்கத்துடன் தான் அரசு கேபிள் டிவி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. உன் சுய விருப்பு வெறுப்புக்காக, எங்க வரிப்பணத்தை எடுத்து விளையாடிக்கிட்டு இருக்கே. என்னைக்குத்தான் அரசாங்கத்தில் 'accountability & responsibility ' வரப்போகுதோ? அதுவரைக்கும் இந்தமாதிரி மஞ்சத்துண்டுகளின் அக்கிரமத்தை எல்லாம் பொறுத்துத்தான் ஆகணும். மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
8/13/2010 3:37:00 AM
Brahmin RAJISJI(srinivasan) is broker (MAMA) for his wife. Since she is on 3 day holiday, he does have anything do to and went to Poes Garden to eat Jeya's bee and he is vomiting that here.
By ahamed
8/13/2010 3:16:00 AM
நல்லா வியாபாரம் நடந்த இட்லிகடைக்கு புதுசா ஒரு மேனேஜர் வந்தான் ! வரும் லாபத்தை பார்த்து விட்டு அருகிலேயே தன மனைவி பேருக்கு ஒரு இட்லிகடைய வச்சான் ! வாடிக்கையாளர்கள் இட்லி சாப்பிட வந்ததும் நேற்று சுட்ட இட்லிதான் இருக்கிறது...சுடச் சுட சாப்பிட வேண்டும் என்றால் அருகில் உள்ள தன மனைவியின் கடைக்குச் செல்லுமாறு சிபாரிசு செய்து அனுப்பி வைத்தான் ! முரண்டு பிடித்தவர்களுக்கு இட்லியில் இரண்டு கரண்டி உப்பினை கூடுதலாக போட்டு பரிமாறினான் ! அப்புறம் என்ன இதுக்கும் மேலயா நான் சொல்லணும் ! இப்படித்தான் இந்தப் படுபாவி நடத்துற அரசு கேபிள் டிவி நிறுவனம் ! அரசு பணத்திலிருந்து செயலர்...உயர் அதிகாரிகள்...தொழில் நுட்ப ஊழியர்கள் ..எடுபிடிகள் என நியமித்து சம்பளம் கொடுத்து எல்லோரும் மறைமுகமாக குடும்ப கேபிள் டிவி நிறுவனத்திற்கு உழைக்க வைத்து மக்களுக்கு துரோகம் செய்கிறான் ! அரசு டிவி நிறுவனம் அடக்க ஒடுக்கமாக செயல்படுகிறது என்பதற்கு பொருள் தற்பொழுது புரியும் என்று நம்புகிறேன் ! @ rajasji
By rajasji
8/13/2010 2:59:00 AM
தமிழ் வழி மூலம் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது ஆனால் திராவிட தெலுங்கன் தட்சனாமூர்த்தியான கொலைஞ்யன் கருணா(க)நிதியின் தமிழ் படுகொலையை பாருங்கள் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை உருவாக்க தனி குழு அமைக்கப்பட்டுவிட்டதாகவும், அவர்கள் ஏற்கனவே முதல் இரண்டு செமஸ்டர்களுக்குத் தேவையான புத்தகங்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்தும் நோக்கில் மூன்று ஆண்டுகள் வரை அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படும். அதே போல அனைத்து பொறியியல் சார் வார்த்தைகளும் தமிழில் மொழி பெயர்க்கப்படாது - தேவைப்படும் இடங்களில் நன்கு பரிச்சையமான ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்
By vaalenthy
8/13/2010 2:53:00 AM
திராவிட தெலுங்கன் தட்சனாமூர்த்தியான கொலைஞ்யன் கருணா(க)நிதியின் தமிழ் படுகொலையை பாருங்கள் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை உருவாக்க தனி குழு அமைக்கப்பட்டுவிட்டதாகவும், அவர்கள் ஏற்கனவே முதல் இரண்டு செமஸ்டர்களுக்குத் தேவையான புத்தகங்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்தும் நோக்கில் மூன்று ஆண்டுகள் வரை அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படும். அதே போல அனைத்து பொறியியல் சார் வார்த்தைகளும் தமிழில் மொழி பெயர்க்கப்படாது - தேவைப்படும் இடங்களில் நன்கு பரிச்சையமான ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்
By vaalenthy
8/13/2010 2:50:00 AM
இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற இந்தியாவே இங்கு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கமே சிறந்தது என்றும் அதுவே தீர்வு என்றும் பிரசாரம் மேற்கொள்கின்றது. இது இந்தியாவின் போலித் தனத்தை படம்பிடித்துக் காட்டுகின்றது. இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வருகின்ற அதிகாரப் பரவலானது இங்கு சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை. மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் எதுவுமே நடைபெறவில்லை. இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அதிகாரப்பரவலே தீர்வு என்று கூறுகின்ற இந்தியா, வடக்கில் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுத் தரப்போவதில்லை என்பது உண்மையான விடயம். இருப்பினும், இன்றைய நிலையில் அதிகாரப்பரவலை கோரியிருக்கின்ற இந்திய மத்திய அரசு, ஆயுத வழங்கலை நிறுத்திக்கொள்வதே அத்தியாவசியமானது. ஏனெனில், இலங்கைத் தமிழ் மக்கள் மீதான இந்தியாவின் போர் முதலில் நிறுத்தப்பட வேண்டும்.
By முத்தமிழ்
8/13/2010 2:40:00 AM
எதோ ஒரு வகையில் கலைஞர் மக்களை ஏமாற்ற நினைக்கிறார்
By சன் டிவி
8/13/2010 2:34:00 AM
தமிழ்நாட்டு மீனவர்களை சிறிலங்கா கடற்படையின் தாக்குதல்களில் இருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியாது என்று இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார். இந்திய மாநிலங்கள் அவையில் நேற்று தமிழ்நாட்டு மீனவர்களை சிறிலங்கா கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது குறித்து விவாதம் நடத்தப்பட்டது. "கச்சத்தீவை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்க போகக் கூடாது. மாறாக தாண்டிப் போனால் சிறிலங்கா கடற்படை தாக்குதல் நடத்தத்தான் செய்யும். தமிழ்நாட்டு மீனவர்களை இந்த தாக்குதல்களிலிருந்து இந்தியாவால் காப்பாற்ற முடியாது" என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்துக்கு தமிழ்நாட்டில் பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சொந்த நாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாது எனப் பகிரங்கமாக அறிவித்துள்ள எஸ்.எம். கிருஷ்ணா அமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலகவேண்டும் அல்லது அவரை பிரதமர் விலக்க வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்
By naam tamilar
8/13/2010 2:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *