அரசு துறை அலுவலகங்களில் புரோக்கர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறுகிறது அரசு. ஆனால், கோவையில் ரேஷன் கார்டு, ஜாதிச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட வேலைகளை செய்து தர, புரோக்கர்கள் ஆபீஸ் திறந்து, தடாலடியாக விளம்பரமும் செய்துள்ளனர்.
மக்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் பணிகளை, மாவட்ட வழங்கல் அலுவலகம் மேற்கொள்கிறது. இந்த அலுவலகத்தின் கீழ் செயல்படும் "உதவி பங்கீட்டு அலுவலர்' அலுவலகங்கள், கோவை வடக்கு மற்றும் தெற்கு தாசில்தார் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வருகின்றன. புதிய ரேஷன் கார்டுக்கு விண் ணப்பம் அளித்தல், முகவரி மாற் றம், பெயர் சேர்ப்பு உள்ளிட்ட ரேஷன் தொடர்பான பல்வேறு பணிகளை, உதவி பங்கீட்டு அலுவலர் அலுவலகங்கள் கவனிக் கின்றன. இதற்காக, தினமும் ஏராளமான மக்கள், இந்த அலுவலக பணியாளர்களை அணுகி வருகின்றனர். போதிய கல்வியறிவு இல்லாதோர், தங்களது கோரிக்கை தொடர் பான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மேலும், ஆபீசில் யாரை அணுகுவது, என்ற விபரம் தெரியாமல் தவிக்கின்றனர்.
இவர்களின் தவிப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றும் புரோக் கர்கள், தாலுகா அலுவலக வளாகத் தில் முகாமிட்டுள்ளனர். இவர்கள், தங்களிடம் உள்ள விண்ணப் பத்தை விலைக்கு விற்று, பூர்த்தி செய்து தருகின்றனர்; இதற்கு, விண்ணப்பத்துக்கு இவ்வளவு என "ரேட்' நிர்ணயித்து கறந்து விடுகின்றனர். ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு தொடர்பான விண்ணப்பத் துக்கு 25 ரூபாயும், புதிய ரேஷன் கார்டு கோரும் விண்ணப்பத்துக்கு 30 ரூபாயும் வசூலித்துக் கொள்கின்றனர். இது குறித்து யாராவது கேள்வி எழுப்பினால், "ஒரு விண்ணப்பத்துக்கு 10 ரூபாய் வரை செலவிட்டு வாங்குகிறோம்; அதை பூர்த்தி செய்து கொடுக்க, கொஞ்சம் சேர்த்து வசூல் செய்கிறோம்' என சர்வசாதாரணமாக கூறுகின்றனர்.
ரேஷன் பெயரில் இவ்வாறான வசூல் வேட்டை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறமோ புரோக்கர்கள் சிலர் "ஹைடெக்காக' தொழிலை மாற்றி ஆபீஸ் திறந்து மக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்."ரேஷன் கார்டு வேண்டுமா, எங்களை அணுகுங்க!' என்று நகரில் பல இடங்களில் சுவர் விளம்பரம் எழுதி, நோட்டீஸ் வழங்கி வெளிப்படையாகவே விளம்பரம் செய்துள்ளனர். தவிர, தெருவிலுள்ள மரங்கள், மின் கம்பங்களில் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். அவற்றில் சில மொபைல் போன் எண்கள், புரோக்கர் அலுவலக முகவரியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டீஸ் விளம்பரத்தில் கூறியிருப்பதாவது:ரேஷன் கார்டில் என்ன பிரச்னை? முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், கார்டு மிஸ்ஸிங், கார்டு கேன்சல், புதிய கார்டு பெற எங்களை அணுகலாம். மேலும், சாதிச் சான்று, வாரிசுச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, திருமணம் பதிவு செய்தல் போன்ற அனைத்தும் செய்து தரப்படும்.இவ்வாறு, நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு நாட்களாக திரைமறைவில் மட்டுமே செயல்பட்டு வந்த புரோக்கர்கள், தற்போது வெளிப்படையாகவே ஆபீஸ் திறந்து, அப்பாவி மக்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளதை, அரசுத் துறை அதிகாரிகளும் பார்த்தபடி செல்கின்றனர்; இவர்களுக்கு இப்படியொரு தொழிலை நடத்த லைசென்ஸ் யார் கொடுத்தது? இது சட்டவிதிகளை மீறிய செயல் ஆகாதா? என்ற கேள்விகள் எதுவும் அதிகாரிகளின் மனதில் எழாதது வியப்பாக உள்ளது.இப்படி பகிரங்கமாக நோட் டீஸ் அச்சடித்து, "பிசினஸாகவே' தொழில் செய்யும் அளவுக்கு இவர்களுக்கு ஊக்கமளித்தது சம் மந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளாக இருக்குமோ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந் துள்ளது. இது போன்ற முறைகேடுகளை மாவட்ட நிர்வாகம் தடுக்காவிடில், அரசுத் துறைகளின் அனைத்து விதமான வேலைகளுக்கும் "ஆபீஸ் போட்டு' புரோக்கர்கள் களமிறங்கிவிடும் அபாயம் நிலவுகிறது.
- நமது நிருபர் -