சனி, 13 ஆகஸ்ட், 2011

Thamizh Eezham is the only solvation - Baswan: தனி ஈழமே வழி - பாசுவான்

தனித் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு

First Published : 13 Aug 2011 03:56:10 AM IST


இலங்கை அதிபர் ராஜபட்சவைக் கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ.
புது தில்லி, ஆக. 12: ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க தனித் தமிழீழமே தீர்வாகும். அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தில்லியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் வலியுறுத்தினர்.  'இலங்கையில் இனப்படுகொலை நடந்ததை ஐ.நா. அறிக்கை கண்டித்துள்ள நிலையில் அது தொடர்பாக மத்திய அரசு மெüனம் சாதிப்பதைக் கண்டித்தும், இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டுவர வலியுறுத்தியும்' இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சுமார் ஐயாயிரம் பேர் பங்கேற்ற இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் பேசினர்.  வைகோ பேசியதாவது: தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏழரைக் கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த குரல் ஆகும். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து இலங்கை அதிபரின் தம்பி கோத்தபய ராஜபட்ச பேசுவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. முதல்வரை அவர் ஏளனமாகப் பேசியதற்காக இலங்கைத் தூதரை அழைத்து இந்திய அரசு கண்டித்திருக்க வேண்டும். இலங்கைத் தூதரகத்தை மூடிவிட்டு, அந்நாட்டுடன் ராஜீய உறவுகளைத் துண்டிக்க வேண்டும்.  இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு ராணுவ உதவி, பொருளாதார உதவி செய்யும் இந்திய அரசின் துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. இனப் படுகொலைக் குற்றத்துக்கு ஆளான அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கவேண்டும் என்று இனியாவது இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் நிரந்தரத் தீர்வுக்கு தனி தமிழ் ஈழமே வழியாகும். அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதற்கு முன் தமிழர் பகுதிகளில் உள்ள சிங்கள ராணுவம் வெளியேற்றப்படவேண்டும். குடியேறிய சிங்களர்கள் வெளியேற்றப்படவேண்டும். ராஜீவ் படுகொலை தொடர்பாக தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மீதான மரண தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்றார் வைகோ.  யஷ்வந்த் சின்ஹா : இலங்கை பிரச்னை தொடர்பாக வைகோ விடுத்த கோரிக்கைக்கு பதில் அளித்த பிரதமர், இதில் தலையிட்டால் சீனா நுழைந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுவது கண்டிக்கத்தக்கது. இந்தியா ஒரு வல்லரசு. நமது கடற்படையை வலுவாக நிறுத்தினால், நம்மை மீறி சீனா இலங்கையில் எப்படி கால் ஊன்ற முடியும். இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து வைகோ தமிழகத்தில் ஒரு மாநாடு நடத்த வேண்டும். அதில் நானும் பங்கேற்க விரும்புகிறேன்.  ராம் விலாஸ் பாஸ்வான்: இலங்கையில் தமிழர்கள் தங்களது உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடியபோது அந்நாட்டு ராணுவமும், காவல்துறையும் தாக்கியதால்தான் அமைதி வழிக்குப் பதில் ஆயுத வழி ஏற்பட்டது.  இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எங்கள் கட்சி சார்பில் மாநாடு நடத்துவோம். அதில் வைகோ பங்கேற்கவேண்டும். அதுபோல் தமிழகத்தில் வைகோ மாநாடு நடத்தினால் அதில் நான் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன். தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட தனி ஈழமே வழியாகும். அதைத்தான் தமிழர்கள் விரும்புகிறார்கள். அதற்காக பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றார் பாஸ்வான்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய லோக் தளத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங் பங்கேற்றார். 




ஈரோடு:ஈரோட்டில், சண்டைக்காக வளர்க்கப்படும் கட்டுச்சேவல் ஒன்று, நேற்று முட்டையிட்ட அதிசயம் நிகழ்ந்தது.ஈரோடு, காவிரிக்கரையை சேர்ந்தவர் மணி. பத்தாண்டுகளாக, கட்டுச் சேவல்களை வளர்த்து, விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை, சேவல் ஒன்று இட்ட முட்டை, பழுப்பு நிறத்தில், பட்டன் காளான் போல இருந்தது.இதை கண்ட அவர், சேவல்களுக்குள் நடந்த சண்டையில், உடல் உறுப்பு ஏதும் அறுந்து விட்டதோ என, நண்பர்களை அழைத்து காண்பித்தார். முட்டையை அறுத்து பார்த்த போது, உள்ளே ஐந்து அடுக்குகளில் வெள்ளை கருவும், ஒரு மஞ்சள் கருவும் இருந்தது.
தகவலறிந்து, சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள், முட்டையிட்ட சேவலையும், முட்டையையும், அதிசயமாக பார்த்து சென்றனர்.ஈரோடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சிக்கழக டாக்டர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:உயிர்களில், ஆணிடம் எக்ஸ், ஒய் குரோமோசோம்களும், பெண்ணிடம் எக்ஸ், எக்ஸ் குரோசோம்களும் இருக்கும். ஆனால், இவ்வகை சேவல்களுக்கு எக்ஸ், எக்ஸ், ஒய் அல்லது எக்ஸ், ஒய், ஒய் குரோமோசோம்கள் இருக்கும்.இவை இரண்டும் கெட்டான் தன்மையுடன், கருப்பை மற்றும் விதைப்பை ஆகிய இரண்டும் கொண்டிருக்கும். எப்போதாவது அரிதாக முட்டையிடும்; கோழிகளுடன் இணையவும் செய்யும். இம்முட்டையை மக்கள் பயன்படுத்த மாட்டார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
 
 
 

embassy relationship should be cut with ilankai - Vaiko: இலங்கையுடனான தூதரக உறவைத் துண்டிக்க வேண்டும்:வைகோ

 
 
தமிழக மக்களின் உணர்வை பிரதிபலித்த சட்டசபை தீர்மானத்தையும், ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தி பேசிய கோத்தபய ராஜபக்ஷேயை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இலங்கை உடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்' என, வைகோ வலியுறுத்தினார்.இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ராஜபக்ஷே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ம.தி.மு.க., சார்பில், டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது:இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை கண்டித்தும், அந்நாட்டு அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுகோள் விடுத்தும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை, இலங்கையின் ராணுவச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே, கேலி செய்துள்ளார். தமிழக முதல்வரை அவமதிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தீர்மானம், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடியது. அதை இழிவுபடுத்தவும், அலட்சியப்படுத்தவும் துணியும் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு பாடம் புகட்டும் வகையில், இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும். அந்நாட்டின் மீது பொருளாதார தடையும் விதிக்க வேண்டும்.சிங்கள ராணுவ வீரர்களுக்கு, இந்தியாவின் பல இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். சிங்கள வீரர்களை வெளியேற்ற வேண்டும்.
கிழக்கு தைமூர், தெற்கு சூடான் ஆகிய நாடுகள் தனிநாடுகளாக அங்கீகரிக்கப்பட்டு விட்டன. அதேபோல, ஓட்டெடுப்பு நடத்தி, அதன்மூலம் தமிழர்களுக்கும் இலங்கையில் தனி நாடு கிடைக்கச் செய்ய வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங்கையும், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் நேரில் சந்தித்தபோது ராஜிவ் கொலை வழக்கு தூக்கு தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டேன். தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. எதற்கும் ஒரு எல்லை உண்டு. தமிழர்கள் என்றாலே துச்சமாக நினைத்து செயல்படும் போக்கை, மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு வைகோ பேசினார்.-நமது டில்லி நிருபர்-

எனது மகனுக்குக் கருணை காட்டுங்கள்!- மரணதண்டனைக் கைதி பேரறிவாளனின் தாயார்

எனது மகனுக்குக் கருணை காட்டுங்கள்!- மரணதண்டனைக் கைதி பேரறிவாளனின் தாயார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் தனது மகனுக்குக் கருணை காட்டுங்கள் என்று கூறியுள்ளார்.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இவர் உள்பட முருகன், சாந்தன் ஆகிய 3 பேரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நேற்று நிராகரித்தார். எனவே, இவர் தூக்கிலிடப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், பேரறிவாளனின் 70 வயது தாயார், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான நளினிக்கு மன்னிப்பு வழங்கப்படும் போது 18 வது குற்றவாளியான எனது மகனுக்கு ஏன் கருணை காட்டக்கூடாது என தனது ஆற்றாமையை வெளியிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 18-வது குற்றவாளி பேரறிவாளன்.
ராஜீவ் கொலையாளி தனு பயன்படுத்திய வெடிகுண்டுக்கான பற்றரிகளை வாங்கிக்கொடுத்து குண்டு தயார் செய்வதற்கு உதவினார் என்பதுதான் பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாளின் செவ்வி

திரு.பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாளின் செவ்வி

ராஜீவ் கொலை வழக்கில் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனைக் கைதியாக இருபத்தோரு ஆண்டுகள் நீதிக்காக காத்திருக்கும் திரு.பேரறிவாளனின் கருணைமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரின் தாய் அற்புதம் அம்மா அவர்களுடன் ஒரு சந்திப்பு-
இந்த காணொளியை அனைவரும் தரவேற்றுங்கள்
Short URL: http://meenakam.com/?p=33377

மரணத்திற்குப் பயபப்டவில்லை. குற்றமற்றவன் என்பதை மெய்ப்பிக்கப் போ்ராடுகிறேன்.

mercy petitions rejected - Seeman views: கருணை மனுக்கள் நிராகரிப்பு. – சீமான் அறிக்கை

கருணை மனுக்கள் நிராகரிப்பு. – சீமான் அறிக்கை

சீமான்
பதிவு செய்த நாள் : August 12, 2011


முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா தேவி சிங் பாட்டீல் நிராகரித்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
இவர்கள் மூவருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் 1999ஆம் ஆண்டில் மரண தண்டனையை உறுதி செய்தது. அதன் பிறகு 2000வது ஆண்டில் இவர்கள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு தங்கள் மீது கருணை காட்டி, மரண தண்டனையை குறைக்குமாறு கேட்டு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். அந்தக் கருணை மனுக்களின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு – மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் படி -  முடிவெடுத்துள்ள குடியரசுத் தலைவர், கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இது எதிர்பாராத, வேதனை தரும் முடிவாகும்.
தங்கள் வாழ்வின் முடிவை நிர்ணயிக்கப்போகும் மரண தண்டனையை எதிர்பார்த்து 12 ஆண்டுகளாக வேலூர் சிறையில் வாடும் இந்த மூன்று பேரும் அப்படிப்பட்ட கொடுமையைத்தானே அனுபவித்து வந்தனர்? வேதனையான அந்த சிறைக்காலத்திற்குப் பிறகு அவர்களின் தண்டனையை குறைத்து நிவாரணம் அளித்திருந்தால் அது மனிதாபிமானமாக இருந்திருக்கும். மாறாக, மரண தண்டனையை உறுதி செய்வது தண்டனை இரட்டிப்பாக்காதா? என்று கேட்கிறோம்.
தனது ஒரே மகனின் மரண தண்டனை குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த பேரறிவாளனின் தாயார் இன்றைக்கு நொருங்கிப் போயுள்ளார். ஒரு நாள் தனது தந்தை விடுதலைப் பெறுவார் என்று எதிர்பார்த்த நளினியின் மகளுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு துயரமான அதிர்ச்சி.
இன்றைய உலகம் மரண தண்டனையை, சட்டத்தின் பார்ப்பட்ட நீதியாகக் கருதவில்லை. அதனால்தான் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. கொலை செய்தவனுக்கு தண்டனையாக நீதமன்றம் அளிக்கும் மரண தண்டனையும் கொலைதான் என்று இன்றைய உலகம் கருதுகிறது. தண்டனையின் நோக்கம், குற்றம் செய்த மனிதனை மாற்றுவதே, மாய்ப்பது அல்ல என்று உலகம் கூறுகிறது. ஆனால், இந்திய அரசு மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா.வின் அந்த பிரகடனத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. அதன் விளைவே, வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனை மனிதாபிமானமற்று இந்தியாவில் இன்றும் வாழ்ந்து வருகிறது.
மானுடத்தின் போக்கிற்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முன்வராத நிலையில், மானுடம் வெறுக்கும் மரண தண்டனைக்கு முற்றுப் புள்ளி வைக்க மனிதாபிமானத்தோடு ஒரு தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனைக்கு முதலில் முற்றுப் புள்ளி வைத்த மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும், அதனைச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.


வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் : மதநல்லிணக்கவாதிகள்

தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் : மதநல்லிணக்கவாதிகள்

சிறிலங்கா அரசானது நாட்டின் நலன் கருதி கடந்த காலங்களில் தான் விட்ட தவறுகளின் ஊடாகக் கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டு தனது மனப்போக்கை மாற்றிக் கொள்வதுடன் சமூகத்திலிருந்து விலக்க முடியாத மதத் தலைவர்களின் ஈடுபாட்டையும் உள்ளடக்கி தமிழர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
‘நாட்டில் நிலையான சமாதானத்தை நோக்கிய இணக்கப்பாட்டு முயற்சிகளில் எதிர்காலத் தலைவர்களின் பங்களிப்புக்கள்’ என்ற தலைப்பில் சிறிலங்காவில் உள்ள கரித்தாஸ் நிறுவனம் இணைந்த Sedec ல் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கிலேயே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆட்சியிலுள்ள மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், மதநல்லிணக்கவாதிகள், புத்தபிக்குகள், மதகுருக்கள், சமூக அமைப்புக்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் ஆகியோர் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் அரசியல் தலைவர்களின் குறிக்கோள்கள், தமிழ் மக்களுக்கு கௌரவத்தை வழங்குதல், தேசிய மொழி தொடர்பாக மீள ஆராய்தல், வடக்கில் தற்போது நிலவும் இராணுவ ஆட்சியை நீக்குதல் போன்றன இக்கருத்தரங்கின் பேசுபொருட்களாக அமைந்திருந்தன.
சிறிலங்காவில் நிலவுகின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டிய விடயம் என்பதை இக்கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த அனைத்து அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டனர்.
“சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவருவதனை அடிப்படையாகக் கொண்டே இந்நாட்டின் எதிர்கால செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்நாட்டையும் இந்நாட்டு மக்களையும் முன்னேற்றுவதற்கான பாதைகளை வழிவகுப்பதாக அனைத்த மதங்களின் செயற்பாடுகளும் அமைந்திருக்க வேண்டும்” என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான தயாசிறி ஜெயசேகர இக்கருத்தமர்வில் தெரிவித்தார்.
“இவற்றை அடைவதற்காக கடந்த காலங்களில் விட்ட தவறுகளை அடையாளங் கண்டுகொள்ளவேண்டும். மாறாக அவற்றை மூடிமறைத்துவிடக்கூடாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தனது கருத்துப் பகிர்ந்து கொண்டார்.
“நாங்கள் புதியதோர் யுகத்தில் காலடி வைக்க வேண்டுமாயின் நாம் அனைவரும் ஒரு நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் ஒன்றாகப் பயணிக்க வேண்டும். இதற்கு மாறாக நாம் தனியொரு கட்சி என்ற அடிப்படையில் செயற்படக் கூடாது” எனவும் இக்கருத்தரங்கின் போது கருத்து  வெளியிட்டிருந்த தமிழ் அரசியல்வாதி தனது கருத்தின் ஊடாக சிறிலங்கா அதிபர் ராஜபக்சவிற்கு செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
“நாங்கள் போரை மட்டுமே வென்றிருக்கின்றோம். உண்மையான சமாதானத்தை இன்னமும் வென்றெடுக்கவில்லை. எமது தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே உள்ளது. அண்மையில் இடம்பெற்ற தேர்தலின் போது, தமிழர்களுக்கு எதிராகப் புதிய பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதை நாம் அவதானித்தோம். வடக்கு மற்றும் தெற்கில் வாழும் இளையோர்களுக்கு நாம் கொடுக்கின்ற செய்தி என்ன? இந்நாட்டில் தமிழ் மக்கள் கௌரவமாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு. இப்போதாவது நாம் அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கவேண்டும். தேசிய ஒருமைப்பாடு, சம உரிமை என்பன இல்லாத அபிவிருத்தி என்பது ஒரு கற்பனையே” என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்போரானது நிறைவுற்று இரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட இங்கு வாழும் மக்களுக்கிடையில் மொழிப் பாகுபாடு நிலவுகின்றது. சிங்கள மொழியானது உத்தியோகபூர்வ மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் காணப்படுகின்றது. சிறிலங்காவின் அரசியல் உலகில் பயன்பாட்டில் உள்ள ஒரு மொழியாகவும் சிங்களம் மட்டுமே உள்ளது.
“மொழி என்பது அடிப்படையில் பெரிய பிரச்சினையாக உள்ளது. இது ஏனைய பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. தமிழர் ஒருவர் தனது உரிமைக்காகக் குரல் கொடுத்தால் அவர் பயங்கரவாதி எனக் கருதப்படுகிறார். அரசியல்வாதிகள் தமது பரிந்துரைகளை நடைமுறைக்கேற்ப முன்வைக்க வேண்டும்” என ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினரான சுஜீவா சேனசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபரோ அல்லது அவரது ஆட்சியோ ஏதாவது தவறு விடும்பட்சத்தில் ஒருபோதும் விமர்சிப்பதில்லை என கருத்தரங்கில் கலந்துகொண்டிருந்த கிறீஸ்தவ மற்றும் பௌத்த மதத் தலைவர்களை நோக்கி சேனசிங்க தெரிவித்துக் கொண்டார்.
சிறிலங்காவின் வடபகுதியில் வாழும் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாதுள்ளதாகவும், வடக்கில் பெருமளவில் காணப்படும் இராணுவத்தினராலும் அவர்களது ஆட்சியினாலும் அங்கு வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்திருப்பதாகவும், இதனால் இம்மக்கள் சொல்லொணத் துன்பங்களை எதிர்கொள்வதாகவும் யாழ் மறைமாவட்டத்தை சேர்ந்த மங்களராஜ் அடிகள்  சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை திரும்ப உரிய சூழல்: அமெரிக்கா வலியுறுத்தல்

இதற்கான ஒரே வழி தமிழ் ஈழத்திற்கு உலக நாடுகள் ஏற்பிசைவு வழங்குவதுதான்.
  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கை திரும்ப உரிய சூழல்: அமெரிக்கா வலியுறுத்தல்

First Published : 12 Aug 2011 01:23:27 AM IST


வாஷிங்டன், ஆக.11: இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு உரிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.  இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தாயகம் திரும்பும் தமிழர்கள் மரியாதையுடன் அவர்கள் வாழ்ந்த இடத்துக்கு திரும்புவதற்கு உரிய வழிகள் செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.  விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது பல தமிழர்கள் தங்களது வசிப்பிடங்களை விட்டு வேறிடங்களுக்குக் குடிபெயர்ந்தனர். சிலர் வெளிநாடுகளில் குடியேறினர்.  இவ்விதம் புலம்பெயர்ந்த தமிழர்கள் பத்திரமாக தங்களது இருப்பிடத்துக்குத் திரும்ப வேண்டும். அதற்குரிய வழிவகைகள் காணப்பட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த மாதம் இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தியபோது, தமிழீழ மக்கள் விவகாரம் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குப் பிறகு அங்கு மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதற்காக அமெரிக்கா கடந்த ஆண்டு 2 கோடி டாலர் நிதியுதவி அளித்தது.  நடப்பு நிதி ஆண்டில் 49 லட்சம் டாலர் நிதியுதவியை அமெரிக்க மனித உரிமைகள் ஆணையம் அளித்தது.

mercy petitions rejected: இராசீவ் கொலைக்குற்றவாளிகளின் கருணை மனுக்கள் மறுப்பு

மரணத் தண்டனைகளை  ஒழிப்பது தொடர்பாக இந்திய அரசு முடிவெடுக்கும் வரை யாருக்கும்  தூக்குத்தண்டனை வழங்கக்கூடாது.  உண்மையான பயங்கரமான குற்றவாளிகள் இருக்கும் பொழுது் அப்பாவிகள் உயிரைப் பறிப்பது அறமாகாது. விரைவில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் விடுதலை செய்யப் பெற வேண்டும். மரணத்தண்டனைக்கு எதிரான இயக்கத்தினரும் மனித நேய இயக்கத்தினரும் விரைந்து செயலாற்ற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

ராஜிவ் கொலைக்குற்றவாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு
First Published : 11 Aug 2011 03:09:41 PM IST


புதுதில்லி, ஆக.11: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டார்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு 1999-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றமும் 2000-ம் ஆண்டில் உறுதிசெய்தது. எனினும் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.உச்சநீதிமன்றம் மரணதண்டனையை உறுதிசெய்ததைத் தொடர்ந்து 3 பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்கள் தாக்கல் செய்தனர்.3 பேரும் தாக்கல் செய்த கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கடந்த வாரம் நிராகரித்துவிட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
கருத்துகள்

இவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே பொய்யானது ..... 21 ஆண்டு தனிமை சிறை மற்றும் காவல் துறை கொடுமைகளுக்கு பின்னும் இவர்களை தூக்கில் ஏற்ற ஏன் துடிக்கிறார்கள்?
By Gautam
8/11/2011 5:12:00 PM
எதற்கென்றே தெரியாமல் சிவராசனுக்கு பாட்டரி வாங்கிக்கொடுத்த சிறு குற்றத்திற்காக பேரறிவாளன் எனும் சிறு தமிழ் இளைஞனுக்கு தூக்கு தண்டனை என்றால் , ராடார், குண்டு, துப்பாக்கி ஆயுதங்களைக் கொடுத்து ஈழத் தமிழர்களை வேட்டையாட உதவிய சோனியா & கோ வுக்கு என்ன தண்டனை? இந்தியாவின் தமிழினத்துக்கு என்றாவது நீதி கிடைக்குமா?
By மணி
8/11/2011 4:54:00 PM
CAPTIAL PUNISHEMENT SHOULD BE ABOLISHED. 96 COUNTRIES HAVE ALREADY ABOLISHED DEATH PENALITY. HANGING CAN BE REPLACED BY LIFE IMPRISONMENT. WE ARE LIVING IN THE 21th CENTUARY AND KILLING AN OFFERDER FOR KILLING ANOTHER IS ITSELF A CRIME. LET US ALL BEHAVE AS HUMAN BEEINGS.
By Paris EJILAN
8/11/2011 4:28:00 PM
ஈழ தமிழனே இறந்தாலும் வீர மரணம் . நான் உங்களுக்கு தலை வணங்குகிறேன்
By மண்
8/11/2011 3:54:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

3 பேர் மரணத்தண்டனையில் சட்டப்படி நடவடிக்கை: பழ.நெடுமாறன்

விரைவில் நடவடிக்கை எடுத்து வெற்றி காணுங்கள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


3 பேர் மரணதண்டனையில் சட்டப்படி நடவடிக்கை: பழ.நெடுமாறன்

First Published : 11 Aug 2011 04:47:46 PM IST

Last Updated : 11 Aug 2011 04:55:03 PM IST

சென்னை, ஆக.11: ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வோம் என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.21 ஆண்டு காலம் சிறையில் வாடிய பிறகும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்து 11 ஆண்டுகளுக்குப் பிறகும் இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது இயற்கை நீதிக்குப் புறம்பானதாகும். 1992ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கும் ஒட்டு மொத்தமாக மரண தண்டனை விதித்தபோது அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்காடி 18 பேர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்படவும் மூவருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படவும், இக்குழு வழி செய்தது.மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்காக அப்போதைய ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்து அவர் அதை தள்ளுபடி செய்தவுடன் அது செல்லாது என உயர்நீதிமன்றத்தில் வழக்காடி வெற்றிபெற்றது இக்குழுவே ஆகும். அதைப்போல இப்போதும் மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்திருப்பதை எதிர்த்து சட்டரீதியான நடவடிக்கைகளை இக்குழு மேற்கொள்ளும்.ராஜிவ் கொலையில் மேலும் புலன் விசாரணை செய்யப்பட வேண்டும் என ஜெயின் கமிஷன் அளித்த பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட சி.பி.ஐ. புலன் விசாரணைக்குழு இன்னமும் தனது விசாரணையை முடித்து அறிக்கையைத் தரவில்லை. இதுபோன்ற உண்மைகளைக் கவனத்தில் கொள்ளாது இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் ஏற்க மறுத்திருப்பது வருந்தத்தக்கது. எனவே  சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இக்குழு விரைந்து எடுக்கும் என்று பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

Changes in the notification about genocide by singalam: காலையில் இருந்த வாசகம் மதியம் மாறியது : இலங்கைச்சிக்கல் ்அறேிவிக்கையில் குழப்பம்

கொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் எங்ஙனம் தீர்மானத்தை ஏற்பர். எனவேதான் மாற்றம் செய்துள்ளனர். பா.ச.க., அ.தி.மு.க., முதலான அனைத்துக் கட்சிகளுமே இனப்படுகொலை பற்றிய கருத்தையும்  குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியது குறித்தும் விவாதத்தில் தெரிவித்துப் பதிவு செய்ய வேண்டும்.  விவாதத் தலைப்பை மாற்றியது குறித்தும் கண்டிக்க வேண்டும்.  இதற்கு உடன்பட்ட கட்சியினரையும் அடையாளம் காட்டிக் கண்டிக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

காலையில் இருந்த வாசகம் மதியம் மாறியது : இலங்கை பிரச்னை நோட்டீசில் குழப்பம்


இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் நடைபெறவுள்ள விவாதம் குறித்த அறிவிப்பில், அடுத்தடுத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் பின்னணி குறித்து சந்தேகம் கிளம்பியுள்ளது. இலங்கை போர் நடைபெற்ற போது, அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கும் அறிக்கை தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த, தமிழகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., - தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. லோக்சபாவில், விதிஎண் 193ன் கீழ், பொது விவாதமாக நடைபெறவுள்ள இலங்கை தமிழர் பிரச்னை, கடந்த வாரமே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நடக்கவில்லை. இந்நிலையில், லோக்சபா அலுவல்கள் குறித்த கையேடு நேற்று காலை வழக்கம் போல அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது. அதில், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா., சபை வெளியிட்டுள்ள அறிக்கையை மையமாக வைத்து பொது விவாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க., சார்பில் தம்பித்துரை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சிலர் இதுகுறித்த நோட்டீஸ் அளித்திருந்தாலும், தி.மு.க.,வின் பார்லிமென்டரி கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு அளித்த நோட்டீஸ் மட்டுமே பட்டியலாகியிருந்தது. இவரோடு சேர்ந்து சமாஜ்வாடியின் சைலேந்திர குமாரும் இந்த பிரச்னையை கிளப்புவதாக கூறப்பட்டிருந்தது. அதாவது, Discussion under rule 193 shri T.R.BAALU, shri SHAILENDRA KUMAR to raise a discussion on alleged killing of Sri Lankan Tamils by Sri Lankan army in the year 2009 as recently revealed in a United Nations Report என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த லோக்சபா குறிப்பேடு, பத்திரிகையாளர்கள் மற்றும் எம்.பி.,க்கள் என, அனைவருக்குமே காலையிலேயே வினியோகிக்கப்பட்டது. ஆனால், பா.ஜ.,வினர் அமளி காரணமாக சபை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், எம்.பி.,க்கள் மத்தியில், திருத்தப்பட்ட ஒரு லிஸ்ட் வினியோகிக்கப்பட்டது.
அதில், இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தின் விவாதம் குறித்து, காலையில் அளிக்கப்பட்டிருந்த குறிப்பேடு வாசகங்கள் அப்படியே மாற்றியமைக்கப்பட்டிருந்தன. ஒரு சில எம்.பி.,க்கள் இதை கண்டு ஆச்சரியமும், குழப்பமும் அடைந்தனர். அதாவது, ரிவைஸ்டு லிஸ்ட் ஆப் பிசினெஸ் என, தலைப்பிட்டு அதில், இலங்கையில் வாழும் தமிழர்களின் புனர்வாழ்வுக்கு இந்தியா செய்து வரும் உதவிகள் மற்றும் நடவடிக்கைககள் மீதான விவாதம் நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, shri.T.R.BAALU, shri SHAILENDRA KUMAR to raise a discussion on the steps taken by Government of India for relief and resettlement of Tamils in SriLanka and other measures to promote their welfare என்று வாசகங்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. ஒரே விவாதம் குறித்து காலையில் அளிக்கப்பட்ட அலுவல் குறிப்பேட்டில் ஒருவிதமாகவும், மதியம் அளிக்கப்பட்ட குறிப்பேட்டில் மற்றொரு விதமாகவும் மாற்றம் செய்யப்பட்டது ஏன்? என்பது மர்மமாக உள்ளது. இரண்டிலுமே பார்லிமென்ட் செகரட்டரி ஜெனரல் டி.கே.விஸ்வநாதன் கையொப்பமுள்ளது. போரின்போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதே பார்லிமென்டில் விவாதமாக வரக்கூடாது என கருதப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், இந்த விவாதம் டி.ஆர்.பாலு அளித்த நோட்டீஸ் அடிப்படையில்தான் ஏற்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், டி.ஆர்.பாலு அளித்த நோட்டீசில் இருந்த வாசகங்கள் ஏன் மாற்றம் செய்யப்பட்டன? அப்படியே மாற்றுவது என்று முடிவு செய்திருந்தாலும்கூட டி.ஆர்.பாலுவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதா, இல்லையா என்பது தெரியவில்லை. இந்த திடீர் மாற்றத்தை, அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகள் இன்று அவையில் எழுப்பலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

-நமது டில்லி நிருபர் -

மேலும் அரசியல் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
vennai govindan - nochikuppam,யூ.எஸ்.ஏ
2011-08-11 01:53:24 IST Report Abuse
ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக காட்டுவதால் இந்திய அடைய போகும் பலன் என்ன. இது அவரை சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருங்க வழி வகுக்கும். இவரை குற்றவளியாக அறிவித்தல் தமிழர்களுக்கு இவர் இழைத்த கொடுமைகள் இல்லை என்று ஆகிவிடுமா ?

Share this comment
Sundar - Bangalore,இந்தியா
2011-08-11 00:38:51 IST Report Abuse
இத்தாலிக்காரி காங்கிரஸ் அரசு உள்ள வரை இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது ..

Share this comment

ஈழத்திற்குள் புகுந்து, படம் எடுத்து, விவரம் பதித்த “தமிழ் நங்கை

ஈழத்திற்குள் புகுந்து, படம் எடுத்து, விவரம் பதித்த “தமிழ் நங்கை

இன்று { 09 -08 -11 } இரவு 07 .30 மணிக்கும், 09 .30 மணிக்கும் ” ஹெட்லைன்ஸ் டுடே” காட்சி ஊடகத்தில் , “போருக்கு பிறகு” தமிழீழப் பகுதிகளில் “நேரடியாக” ஒரு ஊடகவியலாளர் சென்று, ” இலங்கை அரசாங்க அனுமதியோ” அல்லது அவர்கள் நிபந்தனை விதிப்பதைப் போல ” பாதுகாப்பு அமைச்சக அனுமதியோ” பெறாமல், அதனாலேயே “சுதந்திரமாக” யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களுக்கும், அங்குள்ள ” இடம் பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களுக்கும்” சென்று அவர்களது நேர்காணல்களையும், காநோளிகளையும் “கைகேமரா” மூலம் பதிவு செய்து வந்துள்ளவற்றை காணலாம்.
சென்னையில் உள்ள அந்த காட்சி ஊடகத்தின் பெண் ஊடகவியலாளரான” பிரியம்வதா” அந்த சாதனையை செய்துள்ளார். எந்த நேரத்திலும் “பிடிபட்டு” துன்புறுத்தப்படலாம் என்று தெரிந்தும், எந்த சமயத்திலும் ” கொள்ளப்படலாம்” என்று புரிந்தும், அந்த இளம் ஊடகவியலாளர் அத்தகைய செயலை செய்து, “தமிழர்களின்” நிலைமையை உலகறியச் செய்துள்ளார். “ரசாயன குண்டுகள்” எறியப்பட்ட ஆதாரங்கள் அதில் கிடைத்துள்ளன. இனியும் “போர்குற்றங்கள்” நடைபெறவில்லை என்கிறார்களா?
Short URL: http://meenakam.com/?p=32998

இலங்கையில் இருந்து விமானத்தில் திருமணத்திற்காக இந்தியா வந்த இளம்பெண் திருப்பி அனுப்பப்பட்டார்

இலங்கையில் இருந்து விமானத்தில் திருமணத்திற்காக இந்தியா வந்த இளம்பெண் திருப்பி அனுப்பப்பட்டார்

தினமலர் நாளிதழிலிருந்து
பதிவு செய்த நாள் : August 10, 2011


கொச்சி : திருமணத்திற்காக இலங்கையில் இருந்து பெற்றோர், சகோதரனுடன் விமானத்தில் வந்த இளம்பெண் கொச்சி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டார். இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் ஜயந்தி காயத்ரி, அவரது பெற்றோர் மற்றும் சகோதரன் ஆகியோருடன் நேற்று ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில் வந்திறங்கினர். ஆனால், அவர்களை விமான குடியேற்ற உரிமை அதிகாரிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி மறுத்து விட்டனர்.
அவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அப்பெண்ணின் திருமணம் இம்மாதம் சென்னையில் நடக்க இருப்பதும், அதற்காக அவர்கள் குடும்பத்துடன் இலங்கையில் இருந்து வந்ததும், கொச்சியில் இருந்து சென்னைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததும், அவர்கள் ஏற்கனவே சென்னையில் தங்கியிருந்தபோது மாயமாகி விட்டதும், அதனால் அவர்கள் போலீசாரால் தேடப்பட்டு வந்ததும் தெரிந்தது.
மேலும், சென்னை போலீசார் கொச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு ஏற்கனவே அனுப்பிய பட்டியலில் இவர்கள் பெயர்களும், புகைப்படத்துடன் இடம் பெற்றிருந்ததால் அவர்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க முடியாது என, அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர்களிடம் பூர்வாங்க விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் அனைவரும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். நீண்ட நேரமாகியும், அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வராத நிலையில், அவர்களை வரவேற்க விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த உறவினர்கள் வேறு வழியின்றி திரும்பினர்.

views about semmozhi song - Suriya kathir: செம்மொழிப் பாடல்பற்றிய செவ்வி- சூரியக் கதிர்






புதன், 10 ஆகஸ்ட், 2011

கட்டாயப்படுத்தி நயன்தாராவை மதம் மாற்றியது குற்றம்: பிரபுதேவாவுக்குக் கிறித்துதவ அமைப்பு கண்டனம்

பிற  சமயத்தினரைக் கிறித்துவ சமயத்திற்கு மாற்றுவதற்கும் தமிழ்நாட்டில் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களை எல்லாம் அச்சமயத்திற்கு மாற்றி வருவதற்கும் தண்டனை எதுவும் சொல்லவில்லையா? விளம்பரத்திற்காக அறிக்கை கொடுப்பதை எல்லாம் வெளியிட்டுப்  பக்கத்தை வீணாக்காதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கட்டாயப்படுத்தி நயன்தாராவை மதம் மாற்றியது குற்றம்: பிரபுதேவாவுக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்
நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் டயானா மரியம். தந்தை குரியன். தாய் பெயர் ஓமணா. கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். சினிமாவுக்காக நயன்தாரா என தனது பெயரை மாற்றிக் கொண்டு நடித்து வந்தார்.
 
 
இந்துவான பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு திடீர் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார்.
 
பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜ் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
 
நயன்தாரா மதம் மாறிய தகவல் சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ கோவிலில் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன்ஜான் கண்டித்துள்ளார்.
 
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து. அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.
 
ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர்.
 
உபாகமம் 28-ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
 
பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும்.
 
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார். 
 
 கருத்துகள்
 
Wednesday, August 10,2011 01:45 PM, Ilakkuvanar Thiruvalluvan said:
பிற சமயத்தினரைக் கிறித்துவ சமயத்திற்கு மாற்றுவதற்கும் தமிழ்நாட்டில் இந்துக்கள் என்று சொல்லப்படுபவர்களை எல்லாம் அச்சமயத்திற்கு மாற்றி வருவதற்கும் தண்டனை எதுவும் சொல்லவில்லையா? விளம்பரத்திற்காக அறிக்கை கொடுப்பதை எல்லாம் வெளியிட்டுப் பக்கத்தை வீணாக்காதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
Wednesday, August 10,2011 12:38 PM, நாட்டாமை said:
நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா ,எதுவுமே தப்பில்ல. வேலு நாயக்கர் சொன்னது மறந்து போச்சா?ஒருத்தி அழுதால்தான், ஒருத்தி சிரிக்க முடியும், நயன் சிரிச்சா தீபாவளி,இனி நாளும் ஏகாதசி.என்ன சரிதானே ..ஒரு பெண்ணை காதலித்தால் அவள் மட்டும்தான் கண்ணுக்கு தெரியனும்.அவ அப்பன் ,அம்மா,அண்ணன் ,பழைய காதலன் ,புருஷன் ,மதம் ,கலர் எதுவுமே கண்ணுக்கு தெரிய கூடாது,கல்யாணத்திற்கு பிறகு என்றால் ,அவள் தங்கை இருந்தால் உதவிக்கு அழைத்து கொள்ளலாம்.இதுதான் நடைமுறை..................
Wednesday, August 10,2011 11:36 AM, shree said:
இந்துகளை கிறிஸ்தவர்களாக மாற்றுவது பாவம் இல்லையா??
Wednesday, August 10,2011 09:42 AM, உண்மை said:
இந்த பொம்பளை இங்க இருந்து நம்ம மானத்தை வாங்குறத விட , வெளிய போனது எவ்வளவோ சிறப்பு ,இதை போய் பெரிசா பீல் பண்ணுறீங்க ,அவன் (பிரபு தேவா) கட்டினவளை மறந்தான் ,இவள் கடவுளை மறந்தால் ,இம்சை போன வரைக்கும் சந்தோசமே ,
Wednesday, August 10,2011 09:14 AM, ஹரிஷ் said:
மதம் மாத்துறதுக்கு,ஏழையா இருந்த நீ காசு கொடுக்குற ..... நோயாளிகளின் நோயை குணபடுத்தி தருவோம்னு பொய் சொல்லி மதம் மத்துற... இந்த பொழப்புக்கு ....உன்ன சொல்லி தப்பு இல்ல.... . பாரின் பண்டு தன் உன்ன பேச வைக்குது
On Wednesday, August 10,2011 10:15 AM, ராஜா said :
சூப்பர் அப்பு. நீ வச்ச ஆப்பு
On Wednesday, August 10,2011 11:01 AM, சிவா said :
டேய் ஹரிஷ் என்னும் அறிவுகெட்ட முட்டாளே!நோய குணபடுத்தேறேனு சொல்லி மதம் மாறுனு சொன்னா?இந்தியாவுல எத்தனையோ நோயாளிக இருக்கிறாங்க.அவங்க எல்லாம் மதம் மாறிகிட்டா இருக்காங்க? அப்படியே மதம் மாறி ஒரு இந்துவுடைய நோய் குணமடயலேனா?அவன் என்ன கேணயனா?கேள்வி கேட்கமாட்டானா?இந்துக்கள் என்ன முட்டாள்கள் நினைப்பா?பெருசா கருத்து சொல்ல வந்துட்ட!
 
பிரபுதேவாவுக்கு கிறிஸ்துவ அமைப்பு கண்டனம்

 

First Published : 10 Aug 2011 11:53:18 AM IST

Last Updated : 10 Aug 2011 12:06:23 PM IST

நடிகை நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துள்ளதாக கிறிஸ்துவ அமைப்பு ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன்ஜான் வெளியிட்ட அறிக்கை: பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாகமத்தின் ஆழ்ந்த கருத்து. அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர். உபாகமம் 28 ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது. பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும் என்று இனியன்ஜான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வன்முறை பரவுகிறது: இலண்டனில்16 ஆயிரம் காவலர் சுற்றுக்காவல்

வன்முறை பரவுகிறது: லண்டனில்16 ஆயிரம் போலீசார் ரோந்து

First Published : 10 Aug 2011 11:06:26 AM IST

Last Updated : 10 Aug 2011 11:09:16 AM IST

லண்டன், ஆக.10: லண்டனில் ஏற்பட்ட வன்முறை இப்போது 4-வது நாளாக புதிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. வன்முறைச் சம்பவங்களையடுத்து லண்டனில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.பிரிட்டனின் 3-வது பெரிய நகரமான மான்செஸ்டரில் கடைகளின் மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சில கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டது. அதை புகைப்படம் எடு்த்தவர்களை அவர்கள் விரட்டியடித்தனர். 30 ஆண்டுகளில் மிகவும் மோசமான வன்முறைச் சம்பவம் இது என போலீசார் தெரிவிக்கின்றனர்.மத்திய இங்கிலாந்தில் மேற்கு பிரோம்விச் மற்றும் உல்வெர்ஹாம்டன் நகர்களில் உள்ள கட்டடங்களுக்கு வன்முறையாளர்கள் தீவைத்தனர். நாட்டிங்காமில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றின்மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தினர். எனினும் இதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே வன்முறையைக் கட்டுப்படுத்தி அமைதியைக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.

America about war crimes of kothapaya rajapakshe : போர்க் குற்றம்: கோத்தபாயவுக்குத்தெரியும்- அமெரிக்கா

போர்க் குற்றம்: கோத்தபாயவுக்கு தெரியும்- அமெரிக்கா

First Published : 10 Aug 2011 10:13:09 AM IST

Last Updated : 10 Aug 2011 12:48:23 PM IST

கொழும்பு, ஆக.10: வன்னிப் போரின் போது போர்க் குற்றங்கள் நிகழ்ந்தன என்பது இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குத் தெரியும் என்ற உறுதிபடக் கருத்துத் தெரிவித்துள்ளது அமெரிக்கா.போரின் போது இடம்பெற்றதாக எழுப்பப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை அரசுகூட விசாரணை நடத்தி வருகின்றது என்பது அவருக்கும் தெரியும்.எனினும் அனைத்துலக விசாரணை ஒன்று தேவை என்றே கருதப்படுகிறது. அதுதான் எல்லோருடைய விருப்பமும்கூட என்று தெரிவித்தார் அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர்.இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் போன்றன அனைத்துலக விசாரணை கோருவது நியாயமற்ற செயல் என்று இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய தெரிவித்த கருத்துக் குறித்துக் கேட்டபோதே அமெரிக்கப் பேச்சாளர் இதனைக் கூறினார்.இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பொறுப்புக்கூறும் செயல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம்.விசாரணைகளுக்கும் பொறுப்புக் கூறுதலுக்குமான சாதகமான நகர்வாக ஐ.நா. நிபுணர் குழுவை ஏற்றுக்கொள்ள முடியும் என்று நாம் நம்புகின்றோம் என்றும் ரோனர் தெரிவித்தார்.

மலேசிய இதழாளர் செயகோகிலவாணியின் தொட்டுவிடாதீர்கள் நூல் வெளியீட்டுவிழா

ஈழச்சிக்கல் - மாநிலங்கள் அவையில் விவாதம்

இந்தியப் பொதுவுடைமைக்கட்சி ,தமிழினப் பகைக்கட்சி. ஆதரவாளர்போல் நடித்து. ஒன்றுபட்ட இலங்கையில் தன்னாட்சி என்ற கருத்தை வலியுறுத்தித் தமிழ்ஈழ விடுதலையைத் தள்ளிப் போடச் செய்யும் சதிகாரக்கட்சி. எனினும் பிற கட்சிகள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திச்சிங்களத்தின் இனப்படுகொலைகளைப்பற்றி உலகறியச் செய்து மாநிலங்கள் அவையில் பதிவு செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

நான் இ.பொ.க. என மார்க்சியக் கட்சியை (சி.பி.எம்.) குறிப்பிட்டுள்ளேன்.

ஈழப்பிரச்சினை: மாநிலங்கள் அவையில் விவாதம்

இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மாநிலங்களவையில் கொண்டு வரப்படும் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்வரும் வியாழக்கிழமை விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அறிவித்தல் விடுத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா, விவாதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மார்க்சிஸ்ட் சார்பாக டி.கே. ரங்கராஜன், பாஜக சார்பில் வெங்கைய நாயுடு, காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள்: அனைத்துலக விசாரணைப் பொறிமுறையே அனைவரதும் எதிர்பார்ப்பு – அமெரிக்கா

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள்: அனைத்துலக விசாரணைப் பொறிமுறையே அனைவரதும் எதிர்பார்ப்பு – அமெரிக்கா

சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று அவசியம் என்பதே ஒவ்வாருவரினதும் விருப்பம் என்று நம்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரத்தில் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிலங்காவை வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட அமெரிக்கா தொடர்ந்தும் அழைப்பு விடுப்பதாகவும் மார்க் ரோனர் கூறியுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா, அமெரிக்கா, மற்றும் அனைத்துலக சமூகம் போன்றன விடுத்து வரும் அழைப்பை சிறிலங்காவின் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளது குறித்து, கருத்து வெளியிட்டுள்ள மார்க் ரோனர்,
-போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து சிறிலங்காவும் கூட விசாரணை நடத்துகிறது என்பதை அவர் அறிவார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று அவசியம என்பதே ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பு என்று நம்புவதாகவும் மார்க் ரோனர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சு கம்பன் கழகம் – பத்தாம் ஆண்டு விழா – மரபுக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன

பிரான்சு கம்பன் கழகம்

பத்தாம் ஆண்டு விழா

மரபுக் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன

அன்புடையீர்!
கனிவான கைகுவிப்பு
இனிய நல் வாழ்த்துகள்.
பிரான்சு கம்பன் கழகம்
தன் பத்தாம் ஆண்டு விழாவை
வரும்  ஐப்பசி   (நவம்பர்) த்  திங்கள்
சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது.
இதன் தொடர்பாகக்
கம்பன் விழா மலர் வெளியிடப்படும்.
அதில் இடம் பெற மரபுக்  கவிதைகள்  வரவேற்கப்படுகின்றன .
நிபந்தனைகள் :
தலைப்பு : தங்கள் விருப்பம்
பொருள் : கம்பன்  (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம்   …)
பேரெல்லை : நாற்பது வரிகளுக்கு மிகாமல்.(அல்லது  4 விருத்தங்கள் / 10 வெண்பாக்கள்  )
யாப்பு : கூடுமான வரை விருத்தங்கள் (அறுசீர், எண்சீர்…., கலி) ; வெண்பா, கலி வெண்பா, பஃறொடை வெண்பா.
கவிதை வந்து  சேர   இறுதி நாள் : 30.09.2011.
அனுப்பவேண்டிய   மின்னஞ்சல்  முகவரி  :
“kambane kajagam” <kambane2007@yahoo.fr>
பயன்படுத்தும் எழுத்துரு : ஒருங்குறி அல்லது  பாமினி (bamini.ttf).
கம்பன் கழகத் தலைவர் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் குழு  ஒன்று
கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும். அவர்கள் தீர்ப்பே இறுதியானது.
கம்பன்  ஆய்வுக்  கோவை (ஏறக்குறைய  500 பக்கங்கள்)
இது  2012 இல் தைத்  திங்களில்  நடைபெறும் தமிழர் புத்தாண்டு, திருவள்ளுவர், பொங்கல் விழாவில்
வெளியிடப்படும்.
நிபந்தனைகள் :
தலைப்பு : புதிய கோணத்தில் கம்பன்  (கம்பனின் காவியம், பாத்திரங்கள், கவித்திறம், யாப்பு    …)
கட்டுரைகள்  புதிய படைப்பாக, ஆய்வு நோக்கில் இருக்கவேண்டும்.
அடிக்குறிப்புகள், நூல்  பட்டியல்… இன்ன பிறவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
பேரெல்லை : எட்டுப் பக்கங்களுக்கு மிகாமல்.-
கட்டுரை  வந்து  சேர   இறுதி நாள் : 30.11.2011
அனுப்பவேண்டிய   மின்னஞ்சல்  முகவரி  :
benjaminlebeau@yahoo.fr

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள் மின்னஞ்சல் வழி அறிவிக்கப்  பெறுவார்கள்.
அவர்கள்,   அச்சுக்   கூலி, அஞ்சல் செலவுகளுக்காக உரூபா 500/ கட்ட  வேண்டி  இருக்கும் .
இது  பற்றிய  விவரம் கட்டுரையாளர்களுக்கு மின்னஞ்சல் வழி தெரிவிக்கப்படும்.
அதன் பிறகு பணம் கட்டினால் போதும்.
எக்காரணம் கொண்டும் இப்பணம் திருப்பித்தர இயலாது.

- பயன்படுத்தும் எழுத்துரு : ஒருங்குறி அல்லது  பாமினி (bamini.ttf) மட்டுமே!
- பேரா. பெஞ்சமின் லெபோ தலைமையில் குழு  ஒன்று
கட்டுரைகளைத்  தேர்ந்தெடுக்கும். அவர்கள் தீர்ப்பே இறுதியானது.
இவண்
தங்கள் நல்லாதரவை நாடும்
கவிஞர் பாரதிதாசன்,
தலைவர், பிரான்சு கம்பன் கழகம்
பேரா. பெஞ்சமின் லெபோ,
செயலர், பிரான்சு        கம்பன் கழகம்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

உதவும் கரங்களே சோர்ந்துவிடாதீர்கள்!


உதவும் கரங்களே சோர்ந்துவிடாதீர்கள்! 
சோரும் நேரம் இதுவல்ல
மழையான உங்கள் உறவுகளை நிலமான நீங்கள்தானே ஏந்தவேண்டும்

கலாநிதி இராம் சிவலிங்கம்  
துணைத் தலைமையமைச்சர், நாடுகடந்த தமிழீழ அரசு

உலகம் கண்டிராத மனிதப் பேரவலம் எம்மவர் மனத்தில் உறுதியை ஏற்படுத்தவில்லயா? அல்லது மாறறானுடன் கூட்டுச் சேர்ந்தோரை எம்மவர் எடுத்தெறியவில்லையா? இதைச் செய்தவர்கள் அல்லது செய்பவர்கள் யாரப்பா? எதற்குமே மண்டியிடாத மாவீரர் வழிவந்த உண்ண உணவிண்றி, உடுக்க உடையின்றி ஊசலாடும் உயிருடன் அன்றும் இன்றும் எமக்காகப் போராடும் உங்கள் உயிரிலும் மேலான ஈழம்வாழ் உறவுகளல்லவா.

நலிந்த உருவத்தையும், வலிந்த மனத்தையும் கொண்ட இந்த மாமனிதர்களை மறந்து நாம் வாழ்வது சரியா அல்லது முறையா? எமது சுமையை இவர்கள் மட்டும்தான் சுமக்க வேண்டுமா? இவர்களை, எமது உடன் பிறப்புகள் என்று வருணிக்கும் நாம் தொப்புள் கொடி உறவுகளாகவாவது கருதக்கூடாதா? இதுவரை, இவர்களுக்கு நாம் என்ன பரிகாரம் செய்தோம் என்று உங்களை நீங்களே கேளுங்கள், உண்மை உங்களுக்கே புரியும்.

சிகிச்சைபெற இருபத்து ஒன்பதாயிரம் உரூபாய் இல்லாததால் தனது இரண்டு சிறுபிள்ளைகளையும் அனாதைகளாக  விட்டுவிட்டு கோர வலியால் தற்கொலை செய்த முன்னாள் போராளியின் சம்பவம் தொடக்கம் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லையே என்று தன்னைத் தூக்கில் தொங்க விட்ட ஓர் தாயின் பரிதாபநிலை வரையிலான சம்பவங்கள் எம்மனத்தை உறுத்தவில்லையா? நாம் அறிந்தது எள்ளளவு அறியாதது மலையளவு என்பதை மறந்துவிடாதீர்கள்.

அதுமாத்திரமா, பசியின் கொடுமையால் உணவுத் தட்டுடன் உணவுதேடி இராணுவ முகாம்களுக்குச் சென்ற, செல்லும் பச்சிளம் பாலகர்களுக்கு நடப்பது என்னவென்று உஙகளுக்குத் தெரியாதா? வேண்டாமப்பா இந்த வேதனையான விடயங்கள்.

ஈழத்தமிழரின்  நிலை கண்டு வேதனை அடையாத மனிதர் எவருமே இருக்கமுடியாது.  செய்திக்கான அலை வரிசை (சானல் 4) காட்சிகளைக் கண்டு கண்ணீர் விடாதவர், அல்லது கலங்காதவர் சிலரே. அதேவேளை, உதவ முன்வந்தோர் பட்டியலும் பெரிதாக இல்லையே. தேசியத் தலைவர் கூறியதுபோல் நாம் யாரையும் நம்பமுடியாது. எமது கையில்தான் எமது எதிர்காலம் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிட்டோமா?

அல்லல்படும் எம்மவர்க்கு ஆறுதல் சொல்லவேண்டியவர்கள் நாமல்லவா, அழிக்கப்படும் எம் இனத்தை காக்க வேண்டியது எமது கடமையல்லவா. நாம் சோர்ந்துவிட்டால்......................... எம் உறவுகள் அங்கு அழிக்கப்பட்டுவிட்டால் அல்லது அழிந்துவிட்டால்................. தமிழர் இல்லாத் தமிழீழம் எமக்கு ஏனப்பா? உதவும் கரங்கள் என்றுமே சோர்வதில்லையே!

அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதப் போரைத் தாங்கிப் பிடித்த பாசம்மிகு பரம்பரையே!  சாவிலும்கூட  மண்டியிடாத எம் சந்ததியே! இன்னல்கள் மத்தியிலும், துன்பத்தின் பிடியிலும், வாய்பேச முடியாத சூழலிலும் எம் மானத்தைக் காக்கும் அந்த மறவர்களை நாம் மறக்கலாமா? அல்லது அவர்களை மண்டியிட வைக்கலாமா? மழையான உங்கள் உறவுகளை நிலமான நீங்கள்தானே ஏந்தவேண்டும்.


வெளிநாட்டில் வாழ்பவர்களின் குடும்பத்தினருக்கோ அங்கு வளமாக வாழும் உறவுகளுக்கோ உதவுங்கள் என்று நான் கேட்கவில்லை.  வறுமைக் கோட்டுக்குப் பல மடங்குகளுக்குக் கீழே, வறுமைக்கு வரைவிலக்கணமாக வாழும் எம் உறவுகளுக்காகவே உங்களிடம் வேண்டுகிறோம், உதவுங்கள் என்று மன்றாடுகிறோம்.

கடல்கோளால் ஏற்பட்ட ஆழிப்பேரலையில் (சுனாமியில்) இருந்து தப்பி, மனிதப் பேரவலத்தைத் தாண்டி, தாங்கொணா வெள்ளத்தில் மிதந்து மூன்று பிறவியை  ஒரு தலைமுறையில் பெற்ற அந்த மனிதத் தெய்வங்களுக்கு உதவுங்கள், ஏழு  பிறவி எடுத்தாலும் கிடைக்காத புண்ணியத்தை இந்தப் பிறவியில் நீங்கள் உறுதியாய்ப்  பெறுவீர்கள்.

யார் இவர்கள், இவர்களை எப்படி அடையாளம் காண்பது? என்று கேட்கிறீர்களா? நீங்களே நேரடியாகத் தொடர்புகொண்டு உதவி செய்யக்கூடிய நூற்றுக்கணக்கான தேவைகளும், பரிதாபம் மிக்க பல வேண்டுதல்களும் உள்ளன. இதில் உங்களால் உதவக்கூடிய ஒன்றையாவது எடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தனிப்பட்ட முறையில் உதவக்கூடிய சிறிய வேண்டுகோள் தொடக்கம் பலருக்கு உதவக்கூடிய தேவைகளும் நிறைய உண்டு.  தனிப்பட்டவர்கள, விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச்சங்கங்கள், கோவில்கள், தொழில் நிறுவனங்கள் போன்ற எல்லா வகையினரும் இந்த உதவியின் தேவையை அறிந்து இதில் பங்குகொள்ள வேண்டும்,

ஒவ்வொரு தமிழரும், கட்சி வேறுபாடின்றி, தமது கடமையை உணர்ந்து, மற்றவர்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டுமென அழிக்கப்படும் எம் இனத்தின் சார்பில் உங்களை அன்பாக வேண்டுகிறோம். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி.

தொடர்புகளுக்கான தொ. இல: கனடா 416 829 1362 அல்லது 416 291 7474
தொடர்புகளுக்கான Email address: r.sivalingam@tgte.org; pillai123@hotmail.com
மழையான உங்கள் உறவுகளை நிலமான நீங்கள்தானே ஏந்தவேண்டும்
r.sivalingam@tgte.org