சனி, 23 ஜூலை, 2011

சங்கராச்சாரி சொத்துகளைப் பறிமுதல் செய்த சாகுமகராசு

சங்கராச்சாரி சொத்துகளை பறிமுதல் செய்த சாகுமகராஜ்
மேட்டூர் ஜஸ்டின் ராஜ்    புதன், 18 ஆகஸ்ட் 2010 11:40
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது “அமேதி” பாராளுமன்றத் தொகுதி. சென்ற வருடம் நடந்த
பாராளுமன்றத் தேர்தலில், அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர் - காங்கிரஸ் கட்சியின்
மிகப்பெரும் தலைவர்களில் (!?) ஒருவரான ராகுல் காந்தி ஆவார். உ.பி. முதல்வர் மாயாவதி
அமேதியை ஜுலை 1, 2010 அன்று மாவட்டத் தகுதிக்கு உயர்த்தி அறிவிப்புக் கொடுத்தார்.
அதன்படி, அம்மாநிலத்தின் 72-ஆவது மாவட்டமானது அமேதி. ஆனால், இதுவல்ல செய்தி.
அம்மாவட்டத்திற்கு  சத்ரபதி சாகு மகராஜ் மாவட்டம் எனப் பெயர் சூட்டி மிகவும் பாராட்டத்தக்க
செயலை செய்துள்ளார் மாயாவதி.
மராட்டிய மாநிலத்தில் பிறந்த சாகுமகராஜ் பெயரை, உ.பி.யில் உள்ள ஒரு மாவட்டத்திற்கு
சூட்ட வேண்டியத் தேவை என்ன? பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒருவரின் பெயரை, தான் ஆளும்
மாநிலத்தின் ஒரு மாவட்டத்திற்கு தலித் தலைவர் செல்வி மாயாவதி இடவேண்டிய அவசியம் என்ன ?
கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மன்னர் ஒருவரின் பெயரை மக்களாட்சியின் ஒரு
நிலப்பரப்பிற்கு தற்போது சூட்ட வேண்டிய முக்கியத்துவம் என்ன ?
இது போன்ற எண்ணற்ற வினாக்களுக்கு விடை பகர்கிறது புரட்சியாளர் சாகுமகராஜ் அவர்களின்
பொது நலன் சார்ந்த வாழ்க்கை. சிற்றம்பரி என்ற இயற்பெயர் கொண்ட சாகுமகராஜ் (1874 - 1922)
அவர்கள் சத்ரபதி சிவாஜியின் மரபு வழி வந்தவர். பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு உட்பட்டு,
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் சமஸ்தானத்தின் மன்னராக தமது 20-ஆவது வயதில் பதவியேற்று
28 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர்.
இவரது பல்வேறு சாதனைகளிலும், இவரை ஒளி வட்டத்தில் கொண்டு நிறுத்தி, மற்றவர்களின்
கவனத்தை இவர்பால் ஈர்த்தது - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவர் அளித்த இடஒதுக்கீடே ஆகும்.
கோலாப்பூர் சமஸ்தானத்தில் உள்ள அனைத்துப் பணிகளிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கு 50 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்து 1902-இல் ஆணை பிறப்பித்தார்.
இந்தியத் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிற இன்றைய மொத்த நிலப்பரப்பிலும் இட ஒதுக்கீடு
என்ற ஒன்றை முதன்முதலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மனமுவந்து அளித்தவர் புரட்சியாளர்
சாகுமகராஜ் அவர்கள் தான்.
1900 ஆண்டுகளில் யார் ஆட்சியில் இருந்தாலும், அதிகாரமய்யங்களாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்
தான் என்பதை சொல்லவேண்டிய அவசியமே இல்லை. தகுதி, திறமை என்று இப்போதும் திரிபு வாதம்
பேசும் பார்ப்பனர்கள், 1902 - இல் சாகுமகராஜ் ஒடுக்கப்பட் டோருக்கு அளித்த
இடஒதுக்கீட்டுக்கு எவ்வளவு இடையூறு செய்திருப்பார்கள் என்பதை நம்மால் உணரமுடியும். ஆனால்,
அத்தனை இடையூறுகளையும் புறந்தள்ளிய பெருமைக்குரியவர் சாகுமகராஜ்.
நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய டாக்டர் தரவாத் மாதவன் நாயர்
(டி.எம்.நாயர்) மைசூர் சமஸ்தான மன்னராக விளங்கிய கிருஷ்ணராஜு (உடையார்), சாகுமகராஜ்
- ஆகிய மூவரும் இங்கிலாந்தில் ஒரே காலத்தில் படித்தவர்கள். ஒத்தக் கருத்துடை யவர்களும்  
கூட. படிப்பை முடித்ததும் மூவரும் தத்தமது பகுதிகளில் தங்கள் எண்ணங்களுக்கு செயல் வடிவம்
கொடுத்தனர்.
சாகு மகராஜைப் பின்பற்றி 1921 - இல் தனது மைசூர் சமஸ்தானத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
மன்னர் கிருஷ்ணராஜு (உடையார்) இட ஒதுக்கீடு அளித்தார். 1916 முதல் பார்ப்பனரல்லாத
இயக்கத்தை முன்நின்று நடத்தினார் டாக்டர் டி.எம். நாயர். எல்லாக் காலத்திலும் தங்கள் இனத்தை
காப்பற்ற அடுத்த இனத்தின் மீது ஏறி மிதிப்பது என்ற கொடூரக்கொள்கையுடைய பார்ப் பனர்கள்,
மைசூர் மன்னர் அளித்த இடஒதுக்கீட்டையும் எதிர்த்தனர். மைசூர் சமஸ்தானத்தின் அப்போதைய
திவானாக இருந்த விசுவேசுவரய்யா என்ற பார்ப்பனர், இடஒதுக்கீடு கொள்கையை எதிர்த்துப் பதவி
விலகினார். மன்னர் கிருஷ்ணராஜு (உடையார்) அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல்
இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.
“தொட்டால் தீட்டு ; கை பட்டால் பாவம்” என்ற நிலையில் அன்று ஒதுக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்
பட்டவர்கள் உணவுக்கடைகளை கோலாப்பூர் சமஸ் தானத்தில் வைத்துக் கொள்ள சாகுமகராஜ் அனுமதி
யளித்தார். அது மட்டுமன்றி, தனது பரிவாரங்களுடன் வழக்கமாகச் அங்கே சென்று உணவருந்தி
ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்தார். இவர் ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்
கோலாப்பூரில் ஒடுக்கப்பட்ட மக்கள் கட்டாயம் உடலுழைப்புக் கொடுக்க வேண்டும் என்ற முறை
இருந்தது. சாகுமகராஜ் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த 1894 - லேயே அதை முற்றுமுழுதாக
ஒழித்தார்.
அனைவருக்கும் கல்வி என்பதில் முனைப்புக் காட்டினார். ஆனால், அனைத்து சாதியினரும் ஒன்றாகத்
தங்கிப் படிக்க இருந்த ஒரே ஒரு விடுதியில் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒரு மாணவர் கூட
பல ஆண்டுகளாக சேர்த்துக் கொள்ளப்படாத நிலை கண்டு வருந்தினார். எனவே, தாழ்த்தப்பட்ட
மாணவர்களுக்கு என்று தனி விடுதியை ஏற்படுத்தி அவர்கள் படிக்க ஆவனசெய்தார். நிலைமை
சற்று சீரானதும் - அரசின் கல்வி நிறுவனங் களிலும் அரசின் மானியம் பெறும் கல்வி நிறுவனங்
களிலும் சாதியின் பெயரால் மாணவர்களிடையே பாகுபாடு (discrimination) காட்டக்கூடாது
என்று அரசாணையே பிறப்பித்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டும் என்று இருந்த
தனிப்பள்ளிகளை மூடிவிட்டு, பொதுப்பள்ளிகளில் அவர்களைச் சேர்க்க ஆணையிட்டார்.
சாதி அடிப்பçயில் கோலாப்பூர் நகரசபைக்கு இட ஒதுக்கீடு அளித்து, தாழ்த்தப்பட்டோருக்கான
இடங்களை அவர்களுக்கு அளித்தார். இவர் காலத்தில் தான் முதன் முதலில் தாழ்த்தப்பட்ட ஒருவர்
கோலாப்பூர் நகரசபையின் தலைவராக ஆக்கப்பட்டார். கிராமங்களில் தாழ்த்தப் பட்டோர் உள்ளிட்ட
எல்லா சாதிகளைச் சார்ந்தவர்களையும் கணக்குப்பிள்ளைகளாக (குல்கர்னிகளாக) நியமித்து
ஆணையிட்டார். இதன் மூலம் கிராமங்களில் பார்ப்பனர் களின் ஆதிக்கத்தையும், சாதிகளுக்கு
இடையில் சிண்டு முடியும் குள்ளநரித்தனத்தையும் ஒடுக்கினார். உடனே, “தாழ்த்தப்பட்டவர்களுடன்
நாங்கள் பணிபுரிய மாட்டோம்” என்று வருவாய்த்துறையில் பணியாற்றிய பார்ப்பனர்கள்
எதிர்ப்புக்காட்டினர். அதற்கு சாகுமகராஜ், “உங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கிறேன் ;
அதற்குள் அதே பணியை அதே இடத்தில் தொடர்வதா, இல்லை பணியி லிருந்து விலகி ஓடுவதா
என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று அறுதியிட்டுக் கூறியது மட்டுமன்றி,
தாழ்த்தப்பட்டவர்களை மேலும் செல்வாக்குள்ள பதவிகளில் அமர்த்தினார்.
சாகுமகராஜ் தன்னுடைய தனி அலுவலர்களில் தாழ்த்தப்பட்டோரையும் சேர்த்துக்கொண்டார். யானை மீது
ஏறி அமர்ந்து வழிநடத்திச் செல்லும் அரசுப் பதவியை அதுவரை எந்த தாழ்த்தப்பட்டவரும்
வகித்ததில்லை என்ற நிலையை மாற்றி, தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு அந்த அரசுப் பதவியை
வழங்கினார். இவ்வாறு, சாதிப்பாகுபாடு பேணும் பிற்போக்கானவர்களின் கெடுமதியில் 19-ஆம்
நூற்றாண்டிலேயே சுத்தியல் கொண்டு தாக்கினார் சாகுமகராஜ்.
சாதி அமைப்பையே தகர்க்க விரும்பி, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்க முனைப்புக் காட்டினார்.
அதற்கு அவர் சார்ந்த சாதியாரின் முழு ஆதரவு கிடைத்தது. அதை நன்கு
பயன்படுத்திக்கொண்டார். ஆனால், தாழ்த்தப்பட் டோரின் இழிவைப் போக்க இவர் முனைந்தபோது இவரின்
சொந்த சாதியைச் சேர்ந்தவர்கள்  அதற்கு உடன்பட வில்லை. ஆனால், தன்னுடைய குறிக்கோளில்
கடைசி வரை உறுதியாக இருந்து கடமையாற்றினார் சாகுமகராஜ்.
அம்பேத்கருக்கும், சாகுமகராஜுக்கும் இடையில் நல்லத் தொடர்பு இருந்தது. 1920 ஜனவரி 31
ஆம் நாள் அம்பேத்கர் “மூக்நாயக்” (ஊமைகளின் தலைவன்) என்றொரு இதழைத் தொடங்கினார்.
“மூக்நாயக்” இதழ் தொடர்ந்து வெளிவர நிதி உதவி செய்தவர் சாகுமகராஜ். அம்பேத்கர் தன்
ஆய்வுப் படிப்பை இங்கிலாந்தில் படித்தபோது; இடையில் அதை நிறுத்திவிட்டு இந்தியா திரும்ப
வேண்டி வந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து சென்று மீண்டும் அப்படிப்பை
அம்பேத்கர் தொடர உதவியவர்களில் சாகுமகராஜும் ஒருவர்.
சாகுமகராஜ் கடவுள் பற்றாளர் ; மதச்சடங்குகளில் ஆழ்ந்த ஈடுபாடுடையவர். எனவே, அவருக்கான
மதச்சடங்களை நிறைவேற்ற அரண்மனையில் பார்ப்பன புரோகிதர்கள் இருந்தனர். ஆனால், வேதச்
சடங்குகளைச் செய்யாமல், புராணச் சடங்குகளை மட்டுமே செய்தனர். வேதம் என்பது இரு
பிறப்பாளர்களான (துவிஜர்கள்) பார்ப்பனர்களுக்கு மட்டும் தான் என்பதால் வேதச் சடங்குகளை
பார்ப்பனர்களுக்கு மட்டுமே செய்ய முடியும் என்பதில் இன்றுவரை அவர்கள் உறுதியாக இருக்
கிறார்கள். இரு பிறப்பாளர்கள் என்பது, ஒரு பார்ப்பான் குழந்தையாகப் பிறக்கும் போது முதல்
பிறப்பு ; பூணூல் அணியும் போது இரண்டாவது பிறப்பு.
சத்ரபதி சிவாஜியின் வழியில் வந்த சாகுமகராஜ் சத்திரியராகவே (போர் செய்யும் தொழிலைச்
செய்பவர்கள்) இருந்தாலும், அவரை சூத்திரராகவே கருதி தான் கோலாப்பூர் அரண்மனையில்
வேதச்சடங்குகள் செய்யப்படாமல், வெறும் புராணச் சடங்குகளை மட்டுமே பார்ப்பனர்கள் செய்தனர்.
தன் மானம் கொண்ட சாகுமகராஜ் இதை அறிந்ததும், தனக்கு ஏற்பட்ட இழிவை அடியோடு ஒழிக்க
முற்பட்டு, ‘இனி அரண்மனையில் புரோகிதர்கள் வேதச்சடங்குகளை மட்டுமே செய்யவேண்டும் ;
புராணச் சடங்குகளை செய்யக் கூடாது; அப்படி மீறுபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்’
என்றொரு அறிவிப்பைக் கொடுத்தார்.
அரண்மனைத் தலைமை புரோகிதர் ராஜோபாத்தியாயா, அந்த உத்தரவை செயல்படுத்த மறுத்தார்.
உடனடியாக, அவரைப் பணி நீக்கம் செய்து, அவருக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தையும்
பிடுங்கினார் சாகுமகராஜ். தலைமைப் புரோகிதர் மறுத்தது சரிதான் என்று கோலாப்பூரில்
இருந்த சங்க(ட)ர மடத்தின் சங்கராச்சாரி பிலவதிகர் என்பவரும் கூறினார். சினம் கொண்ட
சாகுமகராஜ், கோலாப்பூர் சங்கரமடம் பற்றிய செய்திகளை தோண்டித் துருவினார். இவரின்
காலத்திற்கு முன்பு 1863 இல் அன்றைய மன்னர் பெருமளவிலான  சொத்துகளை அந்த சங்கர
மடத்திற்கு கொடுத்தது அப்போது தெரிய வந்தது.
ஒரு நிபந்தனையுடன் தான் அந்தச் சொத்துக்கள் கொடுக்கப்பட்டன. சங்கர மடத்தின் வாரிசை
(ஜுனியர்) நியமிக்கும் முன், மன்னரின் ஒப்புதலைப் பெற்றே நியமிக்கவேண்டும் என்பதே அந்த
நிபந்தனை. சங்கராச்சாரி பிலவதிகர், மன்னர் சாகுமகராஜின் ஒப்புதலைப் பெறாமலே தனக்கான
வாரிசை நியமித்ததை அறிந்தவுடன், சங்கராச்சாரியின் சொத்துக்களைக் கைப்பற்றினார் ; வாரிசு
நியமனத்தையும் செல்லாது என அறிவித்தார். சொத்தை திரும்பப்பெற்று, மீண்டும் அதை
அனுபவிக்கும் ஆசையில் - சீனியர், ஜுனியர் சங்கராச்சாரிகள் போட்டி போட்டுக்கொண்டு
செயல்படத்தொடங்கினர். (போலி காஞ்சி சங்கரமடத்தின் பெரியவா, சின்னவா இடையே சொத்து
மட்டுமின்றி, பெண்களுக்காகவும் வெளிப்படையாக அடித்துக்கொண்டு நாறியதை அண்மைக்காலத்தில்
நாம் நேரடியாகக் கண்டோம்.)
கடைசியில், சாகுமகராஜுக்கு பூணூல் அணிவிக்கவும், வேதச்சடங்குள் செய்யவும் சொத்தை
அனுபவிக்கும் ஆசையில் ஜுனியர் சங்கராச்சாரி உடன்பட்டு, இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற்றார்.
நடிகர் வடிவேலு நடித்த ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சியில், வத்தக்குழம்பை
கூரியர் மூலம் அனுப்ப வந்த பார்ப்பனரின் பார்சல் சேதம் ஆகும். இதற்கு ‘நான் சுப்ரீம் கோர்ட்
போவேன்’ என்று அந்த பார்ப்பனர் கூறுவதாக அக்காட்சி இருக்கும். வத்தக்குழம்புக்கே சுப்ரீம்
கோர்ட் போவதாகக் கூறும் போது, சொத்துக் கணக்கு இல்லை என்றால் சீனியர் சங்கராச்சாரி
விடுவாரா என்ன ? கோலாப்பூரில் அன்று இருந்த ஆங்கில அரசின் அரசியல் முகவர் கர்னல்
ஃபெரிஸ், பம்பாய் அரசு, இந்திய அரசு என படிப்படியாக மேலே சென்று முறையிட்டார் சீனியர்
சங்கராச்சாரி பிலவதிகர்.
அய்யோ பாவம் ! கடைசி வரை அவரால் வெற்றி பெறவே முடியவில்லை.சத்ரபதி சிவாஜிக்கு
பூணூல் அணிவிக்கவும், வேதச் சடங்குகள் செய்யவும் மறுத்து அவர் மன்னராக முடிசூட பெரும்
சிக்கலை பார்ப்பன புரோகிதர்கள் இதற்கு முன்பு ஏற்படுத்தினர். புரோகிதர்களுக்கு கோடி
கோடியாக கொட்டிக்கொடுத்து தான் 1674 - இல் சத்ரபதி என்ற பட்டத்துடன் சிவாஜி முடி
சூட்டிக்கொள்ள முடிந்தது. ஆனால், சிவாஜி மரபில் வந்த சாகுமகராஜ், புரோகிதர்களுக்குக்
கொட்டிக் கொடுக்காமல் அவர்களை சுற்றிச் சுற்றி அடித்தே தனது உரிமையை நிலை நாட்டினார்.
‘பார்ப்பான் கெஞ்சினால் மிஞ்சுவான் ; மிஞ்சினால் கெஞ்சுவான்’ என்ற சொற்றொடருக்கு அன்றே ஒரு
முன் மாதிரியை நிலை நாட்டினார் சாகுமகராஜ்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு மெச்சத்தக்க இரு செயல்களைச் செய்தார் சாகுமகராஜ். பார்ப்பனர்களை
அழைக்காமல் திருமணம், சடங்கு போன்றவைகளை நடத்தவேண்டும் என்பதில் தனது கவனத்தைக்
குவித்தார். 1920 -இல் பார்ப்பனரல்லாத மராத்திகளை அர்ச்சகர்களாக உருவாக்க ஒரு
வேதப்பள்ளியை நிறுவினார். கோயில்களைச் சுரண்டும் பார்ப்பனர்களுக்கு ஆப்பு வைக்கும் விதமாக
‘தேவஸ்தான இனாம் துறை’ ஒன்றை நிறுவி அதை வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில்
கொணர்ந்தார். அதன்படி, கோயிலின் வருமானத்தை கல்விக்காக திருப்பிவிட்டார். இதைப்
பின்பற்றித்தான் 1925-இல் நீதிக்கட்சி சென்னை மாகாணத்தில் இந்து அறநிலையத்துறையை
ஏற்படுத்தியது.
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையில், பார்ப்பனர் எதிர்ப்பில் மிகச் சரியாக செயல்பட்ட
சாகுமகராஜின் பெயரைத்தான் உத்திர பிரதேசத்தில் உள்ள அமேதி மாவட்டத்திற்கு பெயரிட்டு
தன்னையே பெருமைப்படுத்திக் கொண்டார் மாயாவதி.
- மேட்டூர் ஜஸ்டின் ராஜ்
(பெரியார் முழக்கம் ஆகஸ்ட் 2010 இதழில் வெளியானது)

--
க. சரவணன்

உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை
அரசு கலைக்கல்லூரி [தன்னாட்சி ]
கரூர். 639005
தொலைபேசி: 04324255558
  அலைபேசி: 9787059582, 9677170008, 8903731558.

  மின்னஞ்சல்
: ksnanthu...@gmail.com.
skype:  ksnanthusri


சிங்களப்படைக்குப் பயிற்சி : அதிமுக அரசுக்குத் திருமாவளவன் கோரிக்கை


சிங்களப்படைக்கு பயிற்சி : அதிமுக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

சிங்களப்படைக்கு பயிற்சி :
அதிமுக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் ராணுவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு வெளிநாடுகளில் இருந்து ராணுவ அதிகாரிகள் வந்து, பயிற்சி பெற்று செல்கிறார்கள்.
இந்நிலையில் வெலிங்டன் ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற இலங்கையில் இருந்து 25 ராணுவ அதிகாரிகள் குன்னூர் வந்தனர். அவர்கள் குன்னூரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி அளிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து  விடுதலைச்சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,
’’சிங்களப்படையை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு நீலமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இந்திய அரசு பயிற்சியளித்து வருவதாக தெரியவந்துள்ளது.
 அதனையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட ஓர் இரு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கள இனவெறியர்களை அரசியல் ரீதியாகவும் ,இராணுவம் ரீதியாகவும்,வலிமைப்படுத்துவதில்  இந்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை எல்முனையளவும் பொருட்படுத்தாமல் சிங்கள காடையர்களால் இந்திய அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது.    ஏற்கனவே பலமுறை இவ்வாறே இராணுவ பயிற்சிகளை வழங்கியதை கண்டித்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடந்து இருகின்றன.
ஆனால் மீண்டும் தமிழ்நாட்டிலே சிங்களவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது என்றால் தமிழக மக்களின் எதிர்ப்பை  எவ்வாறு  மதிப்பீடு செய்கிறது என்பது தெரியவருகிறது .
     இந்திய அரசுக்கும்,சிங்கள அரசுக்கும்,இடையில் மிகவும் வழுவான ,உறுதியான நட்புறவு என்பதையும் வெளிப்படுத்துகிறது.   தமிழீழத் தமிழர்களையும், தமிழ்நாட்டு மீனவர்களையும் கொன்றுகுவித்து வரும் சிங்கள படையினரை இந்திய அரசு வலிந்து வலிந்து ஆதரித்து வருகிறது.
தமிழ் மக்களின் பாதிப்புகளை பற்றி கவலைபடாமல்  சிங்கள இனவெறியர்களுக்கு உறுதுணையாக நிற்கும் இந்திய அரசின் தமிழ் விரோதப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழர்களின் பெரும் ஆதரவோடு ஆட்சியை கைப்பற்றியிருக்கிற அதிமுக அரசு இந்திய ஆட்சியாளர்களின் இந்தகைய போக்குளை தடுத்து நிறுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Vaiko hunger strike on 17th August for mullai-periyaaru problem: முல்லைப் பெரியாறு சிக்கல்: 17- இல் வைகோ உண்ணா நோன்பு

முல்லைப் பெரியாறு பிரச்னை: 
17-ல் வைகோ உண்ணாவிரதம்

First Published : 23 Jul 2011 04:00:06 AM IST


சென்னை, ஜூலை 22: முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் மதுரையில் ஆகஸ்ட் 17-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.   ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக் கட்சி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் மாசிலாமணி, துணைப்பொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.   கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:   அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ல் திருநெல்வேலியில் திறந்த வெளி மாநாடு நடத்தப்படும். முல்லைப் பெரியாறில் தமிழக உரிமைக்காகவும், கேரள அரசின் அக்கிரமப் போக்கைத் தடுக்கவும் மதுரையில் ஆகஸ்ட் 17-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் வைகோ தலைமையில் நடத்துவது என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
கருத்துகள்

ஆகஸ்ட் 17 அன்று தமிழகத்தின் தார் சாலைகள் அனைத்தும் மதுரை நோக்கி திரும்பட்டும்.
By பாஞ்சை வேந்தன்
7/23/2011 8:58:00 AM
வைகோ என்றால் ஈழப்பிரச்சினைப்பத்தி மட்டும் தான் பேசுவார் என்று ஒரு கூட்டம் அவதூறு பரப்பிக்கொண்டு திரிகிறது. முல்லை பெரியாறு அணைக்காக விடாமல் போராட்டம் நடத்தியவர்கள் அய்யா பழ.நெடுமாறனும், வைகோவும் தான். மஞ்சத்துண்டுக்காரனோ, அவன் மகன் தொடைநடுங்கியோ ஒரு தடவை கூட பெரியாறு அணைக்காக போராட்டம் நடத்தியது இல்லை. தமிழருக்காக என்றும் போராடும் வைகோ அவர்கள் தன்னிகரற்ற தலைவராக விரைவில் உயர்வார்.
By ராஜா@மதுரை
7/23/2011 5:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்: பழ. நெடுமாறன் வலியுறுத்தல்

குற்றவாளியைத் தூண்டி விட்டு உதவிய இந்திய அரசும் குற்றவாளியாக  இருக்கையில் பட்சேவைக்காப்பாற்றித்தானே ஆக வேண்டும். எனவே, இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுக்காமல் உலக நாடுகளிடம் உண்மையை விளக்கி நீதி காண முயல வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்:
பழ. நெடுமாறன் வலியுறுத்தல்

First Published : 23 Jul 2011 04:15:51 AM IST


மதுரை, ஜூலை 22: இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களையாவது பாதுகாக்க வேண்டும் என்பதை தலையாயப் பிரச்னையாகக் கருதி மத்திய அரசை தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தினார்.  ஈழத் தமிழர், தலித் கிறிஸ்தவர், தமிழக மீனவர் மற்றும் கச்சத்தீவு மீட்பு போன்ற பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரையில் ஒன்றிப்பு கிறிஸ்தவ மனித உரிமை அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பழ.நெடுமாறன் பேசியது:  இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து ஐ.நா. சார்பில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அக்குழு ராஜபட்சவை ஒரு போர்க் குற்றவாளி என்று அறிவித்தது. அதன் பின்னரும் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியவில்லை. இதுகுறித்து மத்திய அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.  ஆனால், ராஜபட்சவைக் காப்பாற்றத் தேவையான அனைத்தையும் செய்து வருகிறது என்றார். 

இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி: முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது

இலங்கை ராணுவத்தினருக்குப் பயிற்சி: முற்றுகையிட முயன்ற 150 பேர் கைது

First Published : 23 Jul 2011 02:19:13 AM IST


குன்னூர், ஜூலை 22: குன்னூர் ராணுவ முகாமில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு ரகசியமாகப் பயிற்சி அளித்து வருவதற்குக் கண்டனம் தெரிவித்து, ராணுவ முகாமை முற்றுகையிட முயன்ற 150-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.  ÷இலங்கை ராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு குன்னூரில் ராணுவ முகாம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களை இந்திய ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை குன்னூர் ராணுவ முகாமிற்கு அழைத்து சென்றனர்.  ÷தகவல் அறிந்த "நாம் தமிழர்' கட்சியின் கோவை மாவட்ட அமைப்பாளர் இரா.ஆனந்தராசு, பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் கு.ராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலர் து.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்டவர்கள் குன்னூர் எம்.ஆர்.சி ராணுவ முகாமை முற்றுகையிடுவதற்காக மானெக்க்ஷô பாலத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

M.D.M.K. resolutions about genocide: தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக தீர்மானம்

சிங்கள அரசின் இனக்கொலைக் குற்ற  விசாரணை என்பதை ம.தி.மு.க தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதை வெளியிட்டு விட்டுப் போர்க்குற்ற விசாரணை எனச் சுருக்கலாமா?   போராட்டங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக தீர்மானம்

First Published : 22 Jul 2011 02:56:10 PM IST


சென்னை, ஜூலை.22: இலங்கையை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி இந்தியாவிலும், உலக நாடுகளிலும் அதற்கு ஆதரவு திரட்டும் நோக்கத்தில் தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என மதிமுக தீர்மானித்துள்ளது.மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் :*பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டெம்பர் 15 ஆம் தேதியன்று திருநெல்வேலியில் திறந்தவெளி மாநாடு.*அ.தி.மு.க அரசு, தன் போக்கை மாற்றிக்கொண்டு, சமச்சீர் கல்வியை, சமநிலைக் கல்வியை உடனடியாக நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்.*தமிழக உரிமை காக்கவும், கேரள அரசின் அக்கிரமப் போக்கைத் தடுக்கவும், மதுரை மாநகரில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி உண்ணாநிலை அறப்போராட்டம்*சிங்கள ராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் பயிற்சியை நிறுத்த வேண்டும்.*சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி தலைநகர் தில்லியில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள்

அது அந்நாட்டு உள்விவகாரம். அதில் தலையிட இந்தியாவுக்கு தார்மீக உரிமையில்லை.
By sdfsdf
7/22/2011 10:31:00 PM
கட்சி தலைமை நஞ்சில் சம்பத் வசம் கொடுத்துவிட்டு வைகோ அவர்களே நீங்கள் தேசிய அரசியலுக் வருங்கால் ,உங்கள் போக்கு கட்சிக்கும் லாபம் இல்லை நாட்டுக்கும் லாபம் இல்லை வெறும் வீராவேசம் உதவாது அகில இந்திய கட்சிகளை அனுக்கி உக்க்திகளை வகுக்கவும். கட்சி மேலும் பலம் பெற செயல்படவும் திருமா, டாக்டர் அய்யா சீமான் நெடுமாறன் பாண்டியன் ராஜா எல்லோரும் என்னைந்து போராடவேண்டும். தனி ஆவர்த்தனம் யாருக்கும் பலன் தராது. நான் சொல்லுவதை கேட்ட்பீர்களா ?
By மனம் ஒடிந்த தமிழன்
7/22/2011 9:22:00 PM
Many of us read news and write our comments. No action or support to the one who wants to take our problems to the national level. Vaiko, Seemaan, Pazha Nedumaaran, Thamizharuvi Maniyan, Nallakannu are the great leaders to follow. They are not like other politicians who do it everything for the party and the family. As Tamils, we should stand united.
By Vadivel
7/22/2011 9:17:00 PM
டில்லியில் போயி கிழிக்க போறாராம்.மொதல்ல தமிழ் நாட்டுலே கிழிங்க.என்ன இப்போ முல்லை பெரியாறு,காவேரி,பாலாறு,பற்றி வாயே தொறக்கறது இல்லை.சிங்களர்களுக்கு எதிரான உங்கள் லடாயில் இது மறந்துவிட்டதா?அடுத்து உள்ளாட்சி தேர்தலிலும் கப்சிப்பா?கிழிஞ்சது கிஷ்ணாம்பேட்டை!!
By கே சுகவனம்
7/22/2011 6:20:00 PM
Welcome Mr. Vaiko. We support your dharna
By Meenakshisundaram
7/22/2011 5:34:00 PM
தேவையா இது ? உள்ளூர்லயே எவனும் ஒங்கள மதிக்க மாட்டேங்கறான். டில்லில போயி ஹிந்தில திட்டு வாங்கணுமா ? ரெண்டாவது டில்லி போலிஸ் பாபா ராம்தேவ் விஷயத்தில காட்டத்தில் இருக்கானுங்க. லத்தி ஒடயர வரைக்கும டிக்கிலையே அடிப்பானுங்க. அதுனால எது செய்தாலும் கொஞ்சம் கவனமா செய்ங்க.
By வெட்டி மாஸ்டர்
7/22/2011 5:19:00 PM
திரு வைகோ அவர்களே நீங்கள் இன்னமும் உங்கள் உக்தி களை சரிவர திட்டமிட்டு செயா தவறி வருகிறிர்கள்.முதலில் அனவைரையும் சேர்த்தி போராட முன்வாருங்கள் .நீங்கள் இன்னமும் ஆல் இந்திய தலைவர் ஆகவில்லை பரிதாபம் .எல்லா தேசிய கட்சுகளுடன் கலந்து உக்தி வகுக்கவும். இல்லாவிட்டால் புஷ்வானம் அக முடியும் உங்களை சீமான் முந்தி விட்டார் .நீங்கள் பின்னுக்கு போய்கொண்டு உள்ளீர்கள் கபீஎஸ்
By keebeeyees
7/22/2011 5:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 22 ஜூலை, 2011

கறுப்பு யூலை நினைவுகூரலும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்-பேர்ன் நாடாளுமன்றம் முன்பாக- 28.07.2011

கறுப்பு யூலை நினைவுகூரலும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும்-பேர்ன் நாடாளுமன்றம் முன்பாக- 28.07.2011


சுவிஸ் ஈழத்தமிழரவை ஊடக அறிக்கை
பேர்ன்;, 19 யூன் 2011
அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் சுவிஸ் ஈழத்தமிழரவையின் புரட்சிகரமான விடுதலை வணக்கங்கள்
எமது தமிழீழ தேசம் சிறீலங்கா பயங்கரவாத இனவெறியரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் கொடிய இன அழிப்பால் பல மனித அவலங்களைச் சந்தித்திருக்கின்ற போதும் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் முகம்கொடுத்த கூட்டுப்படுகொலைக்களமானது தமிழீழ மக்கள் அனைவரதும் உள்ளங்களிலும் அழியாத வடுவாக பதிந்துள்ள நினைவுகளாகும். சிங்களம் தனது கொடிய இனவெறி கோரத்தாண்டவத்தை தமிழீழ மக்கள் மீது மேற்கொண்ட கொடிய நாட்களாகும். துமிழர்கள் தம்மைத் தாமே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற அவர்களின் நிலைப்பாடு அவசியமே என்று திண்ணமாகக் கூறிய நாட்களாகும்.
அன்று மட்டுமா? இத் தொடர் தமிழின அழிப்பு வரலாற்றில் முள்ளிவாய்க்கால் இனப்படுக்கொலைக்களமும் இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பி நிற்;கிறது. சனல் 4 தொலைக் காட்சியில் வெளியிடப்பட்ட படுகொலைக் காட்சிகளானது பல சர்வதேச நாடுகளின் கவனத்தையும் தமிழர்கள் மீது ஈர்த்துவருகிறது. ஆனால் நாம் வாழும் சுவிஸ் நாடு இவை சார்ந்த தனது எவ்வித நிலைப்பாடுகளையும் வெளிக்காட்டாது மௌனம் சாதித்து வருகிறது. சமபொழுதில் போர் காரணமாகவும் அரச பயங்கரவாதத்தாலும் புலம்பெயர்ந்து அகதித் தஞ்சம் கோரி நிற்கும் எமது உறவுகளை மனிதபண்பற்று கொலைக்கள நாடாம் சிறீலங்காவிற்கு திரப்பியனுப்பிவருகிறது. சுவிஸ் நாட்டின் இப் பாராமுகத்தைக் கண்டித்து எதிர்வரும் 28-07-2011 வியாழக்கிழமை 14 மணிக்கு பேர்ன் நாடாளுமன்றம் முன்பாக கவனயீர்ப்ப ஒன்றுகூடலும் கறுப்பு யூலை நினைவு கூரலும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மிகவும் முக்கியமான ஓர் காலகட்டத்தின் அவசியமான இக் கவனயீர்பில் அணி அணியாக ஒன்றுதிரளுமாறு சுவிஸ் ஈழத்தமிழரவையினராகிய நாம் உரிமையுடன் அழைக்கிறோம்.
தமிழீழமே தாகமென எம்முறவுகள் மானச்சாவேந்தி வீழ்ந்த நாளில் வீச்சுடன் எம் விடுதலைக்காய் எழுவோம் வாரீர்.
தொடர்புகளுக்கு: 079 705 63 35
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
சுவிஸ் ஈழத்தமிழரவை

President Mahinda Rajapaksha’s second son attempted to shoot his uncle Basil : பசில் இராசபக்சவைச் சுட்டுக் கொல்ல முயன்ற மகிந்தவின் மகன்!


மகிந்தவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச மகிந்தவின் சகோரரும் பெருளாதார அபிவிருத்தி அமைச்சருமாகிய பசில் ராஜபச்சவையே இவர் சுட்டுக் கொல்ல முயன்றதாக லங்காவெப் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் சேர்ந்து இவர் இயங்குவதாகவும் போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருப்பதாகவும் கூறியே சுட்டுக்கொல்ல முயன்றதாக மேலும்  செய்தி கூறுகின்து.
இதன் பொழுது வேகமாக செயற்பட்ட மகிந்த மகனின் துப்பாக்கியை பறித்ததோடு பசிலை பத்திரமாக வேறு அறைக்கு அனுப்பி வைத்தார்.
அதோடு மகிந்தவின் பெயரை பயன்படுத்தி பல மில்லியன் ரூபாக்களை பெற்தையும் சுட்டிக்காட்டி மிரட்டியுள்ளார் மகிந்தவின் இரண்டாவது மகன். மகனோடு இணைந்துகொண்ட மகிந்த கோத்தபாயவும் உன்மேல் சரியான அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை என பேசியதாகவும் தெரிகின்றது.
போர்க்குற்றங்களுக்கு எதிராக மவுனம் தொடருமானால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்த பின்னர், தான் வெளிப்படையான அறிவிப்பு ஒன்று வெளியிடுகின்றேன் என்று சத்தியம் செய்ததாக கூறப்படுகின்றது.
மகிந்தரின் மனைவியும் பசிலை கடுமையாக பேசியுள்ளதாக தெரிகின்றது.
டெம்பில் ரீ என்னுமிடத்தில் இரண்டாவது மாடியிலேயே அச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

கருத்து : 
போர்க்குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் எனத் தவறாக வந்துள்ளது போர்க்குற்றச்சாட்டுகளுக்கு எதிராக என வந்திருக்க வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

(President Mahinda Rajapaksha’s second son attempted to shoot his uncle Basil at Temples Trees)

Yoshita Rajapaksha attempts to shoot Minister Basil Rajapaksha
President intervenes to stop bloodshed at Temple Trees


Lanka News Web, 2011-07-21- LankaNewsWeb reliably learns that President Mahinda Rajapaksha’s second son, Sri Lanka Navy officer Yoshitha Rajapaksha has attempted to shoot his uncle Economic Development Minister Basil Rajapaksha at the second floor of Temple Trees as the minister arrived there to meet the President after a foreign trip. At that moment, the President and Madam Shiranthi Rajapaksha have intervened to prevent a murder at the President’s official residence.
Accusing Minister Basil Rajapaksha of having secret deals with India and keeping quite at a time serious war crimes charges are levelled against his father, President Rajapaksha, and Defence secretary Gotabhaya Rajapaksha, Yoshitha Rajapaksha has tried to shoot the Minister using Yoshitha’s private pistol. The President has quickly intervened to take Yoshitha’s pistol and has accompanied the minister to another room. Madam Shiranthi Rajapaksha has at that point strongly criticised the Minister Basil’s recent behaviour.

Yoshitha has also threatened that he would reveal about billions of rupees earned by Minister Basil exploiting President Rajapaksha’s political goodwill. The President has also joined the debate saying that even Gotabhaya Rajapaksha’s family is not impressed with Minister Basil’s behaviour.

President Rajapaksha has warned the minister that he will have to take strong action if the minister keeps quite while the Rajapaksha family is being targeted on war crimes charges. Responding, the minister has promised to make public statement denying war crimes accusations.
http://www.lankanewsweb.com/news/EN_2011_07_21_006.html

Arjun Sambath article about natural colour: திருப்பூர்: தேவை திருப்புமுனை!

கட்டுரையாளர் கருத்திற்கேற்ப  இயற்கை வ்ண்ணமேற்றும் முறையே துணிக்கும் பயன்படுத்துவோருக்கும் நல்லது என்பதை உணர்ந்து அதனைப் பரப்ப அரசு முன்வரட்டும்.!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

திருப்பூர்: தேவை திருப்புமுனை!

First Published : 22 Jul 2011 01:42:52 AM IST


ஆயத்த ஆடைகள் மற்றும் உள்ளாடைகள் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முன்னிலை வகித்த காரணத்தால் இந்தியாவின் "டாலர் சிட்டி', "குட்டி ஜப்பான்', "பனியன் நகரம்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட திருப்பூர் இப்போது சாயக் கழிவுநீர்ப் பிரச்னையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். பல பனியன் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.  இப்போது திருப்பூரில் வேலைவாய்ப்பும் போதிய வருவாயும் இல்லாத காரணத்தால் தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். திருட்டு, வழிப்பறி குற்றச்சம்பவங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பூர் மற்றும் அதைச் சுற்றி அமைந்துள்ள சாய, சலவைத் தொழிற்கூடங்கள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டுவிட்டதால் இந்நிலை உருவாகியுள்ளது.  சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பில் "ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்' முறையை அமல்படுத்த வேண்டும் என 2006-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த "ஜீரோ லிக்விட் டிஸ்ஜார்ஜ்' முறையை நடைமுறைப்படுத்துவதில் திருப்பூர் சாயத் தொழிற்சாலைகள் தோல்வியடைந்துவிட்டன.  இதன் காரணமாக, உயர் நீதிமன்றம் இத்தகைய தொழிற்சாலைகள் அனைத்தையும் மூட உத்தரவிட்டுள்ளது. திருப்பூரில் சாயக்கழிவுநீர் பிரச்னை பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.  திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் முழுமையாகப் பாதிக்கப்பட்டு, நமது நாட்டுக்கு வரவேண்டிய வர்த்தக ஒப்பந்தங்கள் போட்டி நாடுகளான சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு கைமாறிச் சென்றுள்ளன.  திருப்பூர் சாயக் கழிவுநீர்ப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வுகாண எந்தவோர் ஆட்சியாளர்களும் வழிவகுக்கவில்லை. ஏனென்றால், திருப்பூரின் பனியன் தொழில் வளர்ச்சிக்கு ஆட்சியாளர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகும். அதேபோல, நமது அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கும் திருப்பூர் பனியன் தொழிற்சாலை அதிபர்களின் பங்களிப்பு குறைவாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ, இந்தச் சிக்கல்களுக்குக் குறுகியகாலத் தீர்வு காணும் முயற்சியிலேயே செயல்பட்டு வருகின்றனர் அல்லது நீதிமன்றங்களில் பிரச்னையை வளரவிடுகின்றனர்.  சாயக்கழிவுகளை குழாய்கள் மூலமாக கடலுக்குக் கொண்டுசென்று கலப்பது, இதற்கு மத்திய, மாநில அரசுகள் முழுச்செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.  சாயக் கழிவுகளைக் கடலில் கொட்டினால் கடலும் மாசுபடும். மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதும் முக்கியமான கருத்தாகும்.  குஜராத் மாநிலத்தில் சாயக் கழிவுகளைக் கடல் நீரில் கொட்டுகிற காரணத்தால் அரபிக் கடல் முழுவதும் இத்தகைய சாயக் கழிவுகளால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.  சாயக் கழிவுநீர்ப் பிரச்னையை முற்றிலுமாகத் தீர்ப்பதற்கு இயற்கைச் சாயமேற்றும் முறைக்கு மாறுவது ஒன்றுமட்டுமே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். இயற்கை முறையில் சாயமிடப்பட்ட ஜவுளி ரகங்களையே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டினர் பெரிதும் விரும்பி வாங்குகின்றனர். விலையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.  வருங்காலத்தில் மேற்கத்திய நாடுகளில் ரசாயன முறையில் சாயமேற்றப்பட்ட ஜவுளி ரகங்களுக்குத் தடைவிதிக்கும் சூழல்கூட உருவாகும். ஏனென்றால், ரசாயன முறையில் சாயமேற்றப்பட்ட ஜவுளிகள் அணிவதால் உடலில் அரிப்பு உள்ளிட்ட ஒவ்வாமைகள் தோன்றுகின்றன. இதன் காரணமாக, நல்ல விலை கொடுத்து இயற்கைச் சாயமேற்றப்பட்ட துணிகளை வாங்க மேலை நாட்டினர் தயாராக உள்ளனர்.  நம் நாட்டிலேகூட ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி வகைகளை விலை அதிகமானாலும்கூட மக்கள் தேடிச்சென்று வாங்குகின்றனர். இதற்காகத் தனியாக விற்பனை நிலையங்கள்கூட தொடங்கப்பட்டுள்ளன. எனவே, நாம் நமது பண்டைய இயற்கைச் சாயமேற்றும் முறையில் துணிகளை உற்பத்தி செய்வதே நல்ல லாபமும் வேலைவாய்ப்பும் கொடுக்கும் தொழிலாக அமையும்.  துணிகளில் சாயமேற்றும் நுட்பங்களில் நம்மவர்கள் உலகில் தலைசிறந்து விளங்கினார்கள். பண்டைய சாயமேற்றும் முறைகள் உலகிலுள்ள அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தது. அவுரிச் செடிகளைப் பயிரிட்டு அதிலிருந்து நீலநிறச் சாயம் உற்பத்தி செய்து இச்சாயத்தை நூல்களுக்கும், துணிகளுக்கும் சாயமேற்றி அழகூட்டினர். இந்தியாவில் இருந்து இந்த நீலநிறத்தைத் தெரிந்துகொண்டதால்தான் இதற்கு இண்டிகோ நீலம் என்ற பெயர் உலக அளவில் ஏற்பட்டது. சுண்ணாம்பு, சங்கு, முட்டை ஓடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி நிறங்களும், நிறமேற்றிகளும் உற்பத்தி செய்யப்பட்டன.  செங்கல் மண்ணில் கிடைக்கும் கனிமங்களில் சிவப்பு சார்ந்த வண்ணங்கள் உருவாக்கப்பட்டன. மஞ்சள் சிறந்த கிருமிநாசினியாகவும், மூலிகையாகவும் பயன்பட்டதோடல்லாமல் மஞ்சள் நிறச் சாயம் உற்பத்தி செய்யவும் பயன்பட்டது. தாவரங்கள், கிழங்கு வகைகள், பல வண்ணப்பூக்களிலிருந்து பல்வேறு வண்ணச் சாயங்கள் நம்மவர்களால் உற்பத்தி செய்யப்பட்டன.  இத்தகைய இயற்கைச் சாயங்கள் மூலமாக உருவாக்கப்பட்ட துணிகள் நீண்டகாலம் நிறம் மாறாமலும் மங்காமலும் இருந்தன. இப்போதுகூட பழைய பட்டுப் புடவைகளை நல்ல விலைக்கு வாங்கிக்கொள்வதை நாம் பார்க்க முடிகிறது. இத்தகைய இயற்கைச் சாயங்கள் மூலமாக கோயில்களிலும், சுவர்களிலும், மலைக் குகைகளிலும் அழியாத ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். பல நூறு ஆண்டுகளாக இருக்கும் அழியாத ஓவியங்களை இப்போதும்கூட கண்டு ரசிக்க முடிகிறது.  நூல்களுக்கும், ஆடைகளுக்கும் வண்ணமேற்ற நம் நாட்டில் இயற்கை சார்ந்த தொழில் நுட்பங்கள் இருந்தன. இத்தகைய வண்ணங்களால் மனிதகுலத்துக்குத் துன்பம் ஏதும் ஏற்பட்டதில்லை. சுற்றுச்சூழல் மாசு ஏற்படவில்லை. நமது நாட்டின் ஜவுளி உற்பத்தி தொழில்நுட்பம் மிகவும் பழமையானது. உழவுத் தொழிலோடும் நெசவுத் தொழிலும் செழித்து வளமான தேசமாக நமது நாடு திகழ்ந்தது. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழமையான நமது ஜவுளித் தொழில்நுட்பங்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு அழிக்கப்பட்டது.  வியாபாரத்துக்காக வந்து இந்தியாவை அடிமைப்படுத்திய வெள்ளையர்கள், இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளை விற்பனை செய்யும் உள்நோக்கத்தோடு இந்தியாவின் ஜவுளித் தொழில்நுட்பங்களை அழித்தனர்.  ஒரு தீப்பெட்டிக்குள் மடித்து வைக்கும் அளவுக்கு மெல்லிய பட்டுப்புடவைகளை வங்க மாநிலம் டாக்கா நகரில் உள்ள நெசவாளர்கள் உற்பத்தி செய்துவந்தனர். இந்திய நெசவாளர்களின் இத்தகைய திறமையைக் கண்டு அதிசயித்த வெள்ளையர்கள், நமது நெசவாளர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்து துன்புறுத்தினர். டாக்கா மஸ்லின் பட்டுத் துணி உற்பத்தியைத் தடைசெய்தனர். உச்சகட்டமாக, இத்தகைய தொழில்நுட்பங்களைத் தெரிந்த நெசவாளிகளின் கட்டைவிரலை வெட்டியதாகக்கூட சரித்திரங்களில் படிக்கிறோம்.  இந்திய நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிகள் இருக்கும் வரையில் தனது துணிகளை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாது என்பதைத் தெரிந்துகொண்டு, திட்டமிட்டு நமது ஜவுளி உற்பத்தியை அழிக்கும் முகமாக இயற்கைச் சாயமேற்றும் தொழில்நுட்பங்களையும் அழித்தனர்.  கோவை, கரூர், திருப்பூர், ஈரோடு ஆகிய ஜவுளி உற்பத்தி நகரங்களில் துணிகளுக்குச் சாயமேற்றும் ரசாயன முறை காரணமாக விவசாய விளைநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீர்கூட மாசடைந்துள்ளது.  ஆறுகள் சாக்கடைகளாகவும், குளங்கள் கழிவுநீர்த் தொட்டிகளாகவும் மாறிவிட்டன. இக்கழிவுநீரை அருந்துவதால் ஆடு, மாடுகள் செத்து மடிகின்றன. நீர்நிலைகளில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இப்பகுதிகளில் குடிநீர்கூட மாசு அடைந்துள்ளது. ரசாயன சாயங்கள் காரணமாக மனிதர்களுக்குப் பல்வேறு விதமான புதிய வியாதிகள்கூட ஏற்பட்டுள்ளன.  ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் ரசாயன சாயமேற்றும் முறை காரணமாகப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. முடி உதிர்தல், சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட வியாதிகள் ஏற்பட்டு வருகின்றன.  விவசாய அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல்லாண்டுகளாக இதுகுறித்து எச்சரிக்கை செய்தும் பலனில்லாத காரணத்தால் நீதிமன்றம் சென்று இத்தகைய தொழிற்சாலைகளுக்குத் தடை உத்தரவு பெற்றுள்ளனர். தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான பேருக்கு வாழ்வாதாரமாகத் திகழும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது பற்றிய அக்கறையும் கவலையும் ஆட்சியாளர்களுக்கு இருப்பதாகவே தெரியவில்லையே. மத்திய, மாநில அரசுகள் இவ்விஷயத்தில் அக்கறையில்லாமலேயே இருக்கின்றனவே, ஏன்?  இப்போதும்கூட சாய ஆலை அதிபர்கள் ரசாயன சாயமேற்றும் முறைகளையே தொடர விரும்புகின்றனர். சாயக் கழிவுகளை மேலும் மேலும் உற்பத்தி செய்வதால் பிரச்னைகள் கூடுவதோடு, நிரந்தரத் தீர்வு ஏதும் ஏற்படப்போவதில்லை. நூற்றுக்கணக்கான சாயத் தொழிற்சாலை அதிபர்கள் வருவாய் ஈட்டுவதற்காக இந்த நாட்டின் வருங்காலச் சந்ததிகளின் வாழ்வாதாரம் கெடுக்கப்படுகிறது.  சாயத் தொழில் அதிபர்கள் இயற்கைச் சாயமிடும் முறைக்கு மாற வேண்டும். சுற்றுச்சூழலுக்குக் கேடு இல்லாத நமது இயற்கைச் சாயமேற்றும் முறையை மேம்படுத்தி காலத்துக்கு ஏற்பப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய சுதேசி உணர்வு சாயத் தொழில் அதிபர்களுக்கும், அரசுக்கும் வரவேண்டும். இது சம்பந்தமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  ஏற்கெனவே திண்டுக்கல் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் இயற்கைச் சாயமேற்றும் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமம், ஈஷா யோகா மையம் உள்ளிட்ட பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இயற்கைச் சாயமிடும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகின்றன. இயற்கைச் சாயமிடப்பட்ட ஜவுளிகளை உற்பத்தி செய்து விற்பனையும் செய்து வருகின்றனர்.  இயற்கைச் சாய உற்பத்தி காரணமாக விவசாயம் வளம் பெறுவதோடு கிராமியப் பொருளாதாரமும் மேம்படும். இயற்கைச் சாயமேற்றும் முறை காரணமாக ஏராளமானோர் வேலைவாய்ப்பும் பெற முடியும். இதன் மூலம் பொருளாதாரப் பரவலாக்குதல் உருவாகும்.  ஓர் ஆங்கில அடிமை மனப்பான்மை நம்மை ஆக்கிரமித்துள்ளது. இயற்கைச் சாயமேற்றும் முறை குறித்து சிந்திக்கக்கூட அரசோ, சாய ஆலை அதிபர்களோ தயாராக இல்லை.  இந்நிலை மாற வேண்டும். இயற்கைச் சாயமேற்றும் முறைக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க மத்திய, மாநில அரசுகள், சாய ஆலை அதிபர்கள் முன்வர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கைச் சாயமேற்றிய துணிகளையே பயன்படுத்துவோம் என்ற முடிவுக்கு மக்கள் வரவேண்டும். மாற்றம் மக்களிடம் இருந்தே தொடங்கட்டும்!

No free except educaion and medical treatment - Ramdoss: கல்வி, மருத்துவம் தவிர வேறு இலவசங்கள் கூடாது:இராமதாசு

சரியான கருத்து. கல்வியும் மருத்துவமும் எவ்வகைப்பாகுபாடுமின்றி எல்லார்க்கும் எளிதில் கிடைக்கும் நிலை வர வேண்டும். அரசு அன்பளிப்பாகத தர எண்ணும் பொருள்களைத் தரமான நிலையில் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கல்வி, மருத்துவம் தவிர வேறு இலவசங்கள் கூடாது: ராமதாஸ்

First Published : 22 Jul 2011 03:23:05 AM IST

Last Updated : 22 Jul 2011 04:19:44 AM IST

மாநில துணைப் பொதுச் செயலர் பொன்.கங்காதரன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பின
 காஞ்சிபுரம், ஜூலை 21: தமிழகத்தில் கல்வி மற்றும் மருத்துவம் தவிர வேறு எதுவும் இலவசமாக வழங்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.  காஞ்சிபுரம் மேற்கு மற்றும் தெற்கு மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் கூறியது:  தமிழ்நாட்டில் நடப்பது அரசியலே அல்ல, அரிசியல். ரூபாய்கு 3 படி அரிசி, ரூபாய்க்கு ஒரு படி அரிசி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இப்போது 20 கிலோ இலவச அரிசி என்று அரசியல் இப்போது அரிசியலாக மாறியுள்ளது.  இலவச மிக்ஸி கிரைண்டர், டி.வி. கொடுப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.  கல்வியும், மருத்துவமும் தவிர வேறு எதையும் இலவசமாக கொடுக்கக்கூடாது. கல்வியை இலவசமாக கொடுத்து, வேலைவாய்ப்பை உருவாக்கினால், இலவசமாக கொடுக்கும் பொருள்களை அவர்களே வாங்கிக் கொள்வார்கள்.  சங்க காலத்தில் தமிழர்கள் வீரத்துடன் போருக்கு சென்றனர். தற்போது தமிழர்கள் பாருக்கு செல்கின்றனர். கல்விக் கூடங்களை அரசு நடத்த வேண்டும். ஆனால் அது தனியாரிடம் விடப்படுகிறது.  ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகளை அரசு நடத்துகிறது. இதனால்தான் போருக்கு சென்ற தமிழன் பாருக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.  விவசாயிகள் பலர் நகப்புறங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்படுகின்றன. எந்தக் காரணத்துக்காகவும் விவசாய நிலங்களை எடுக்கக் கூடாது என்று நாங்கள் விவசாயிகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.  தமிழகத்தில் பாமக தோல்வி அடைந்ததற்கு பலர் பல்வேறு காரணங்களை கூறினர்.  இளைஞர்கள் நம் கட்சியில் இருந்திருந்தால் இந்தத் தோல்வி நமக்கு ஏற்பட்டிருக்காது. உடனடியாக அவர்களை கட்சியில் சேர்க்கும் முயற்சியில் இறங்குங்கள்.  அரை குறை சமச்சீர் கல்வி: ஏற்கெனவே சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டபோதே நான் சமச்சீர் கல்வி அரைகுறையாக கொண்டு வரப்படுகிறது.  இது சமச்சீர் கல்வி அல்ல சமரச கல்வி என்றும் கூறியிருந்தேன். முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் கூறினேன். அந்த அரைகுறை சமச்சீர் கல்வியையும் அமல்படுத்தாமல் தடுக்கும் முயற்சியில் தற்போதுள்ள அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது.  உச்ச நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வரும் என்று தெரியவில்லை. சமச்சீர் கல்வியை தமிழகத்தில் அமல்படுத்தாவிட்டால் பாமகவினர் வீதியில் இறங்கி போராடுவர் என்றார் ராமதாஸ்.    

Common entrance test for medical admission: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை: அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு

தேசிய மொழிகளின் கல்வி, தேசிய மொழிகளின் வழிக்கல்வி, தேசிய இனங்களின் உரிமை முதலியவற்றை ஒடுக்கவே பொது நுழைவுத் தேர்வு. தமிழ்நாடு போல் பிற மாநிலங்களும் எதிர்த்து இதனை நிறுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை: 
அடுத்த ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு

First Published : 22 Jul 2011 03:42:32 AM IST


புது தில்லி, ஜூலை 21: மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு அடுத்த ஆண்டு முதல் நாடு தழுவிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) சில மாதங்களுக்கு முன் மத்திய, மாநில அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்குப் பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தவேண்டும் என அறிவித்தது.  இந்திய மருத்துவ கவுன்சிலின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை தொடர்ந்து மருத்துவ படிப்புக்குப் பொது நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நிறுத்தி வைத்தது. இந் நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் சந்திர மௌலி தலைமையில் தில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  இந்தக் கூட்டத்தில் மருத்துவ கவுன்சில் ஆட்சிக் குழுவின் (கவர்னிங் கவுன்சில்) தலைவர் புருஷோத்தம் லால், சி.பி.எஸ்.இ. தலைவர் வினீத் ஜோஷி உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு முதல் மத்திய, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தவேண்டும் என கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.  இதுதொடர்பான விவரங்களை இணையதளத்தில் வெளியிடுவது என்றும், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

Samacheer kalvi: Supreme Court trail on july 26சமச்சீர் கல்வி வழக்கு 26-இல் விசாரணை: உச்ச நீதிமன்றம்


நல்ல தீர்ப்பு நானிலம் மகிழ வரட்டும்! மக்கள் யாவரும சமநிலை என்பதை மெய்ப்பிக்கட்டும்! அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வகை பிறக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 

 
சமச்சீர் கல்வி வழக்கு 26-ல் விசாரணை: உச்ச நீதிமன்றம்

First Published : 22 Jul 2011 02:03:35 AM IST


புது தில்லி, ஜூலை 21: சமச்சீர் கல்வி தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.  அத்துடன், ஆகஸ்டு 2-ம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இறுதி விசாரணை ஜூலை 26-ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும்.  சமச்சீர் கல்வித் திட்டம் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதில் இடம்பெற்ற பாடத் திட்டம் தரமற்றதாக உள்ளது என்றும் நடப்பு கல்வி ஆண்டில் பழைய பாடத் திட்டமே தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரியது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு கோரியிருந்தது.  இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பிஎஸ் செüகான் ஆகியோர் கொண்ட அமர்வு வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவ், முகுல் ரோத்தகி ஆகியோர் வாதாடினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும்போது தங்களது கருத்தையும் கேட்க வேண்டும் என்று கோரி "கேவியட்' மனு தாக்கல் செய்தவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கங்குலி வாதாடினார்.  தமிழக அரசு சார்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர்கள், மாணவர்களின் எதிர்கால நலன், கல்வி அறிவு, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் போட்டி மிகுந்துள்ள நிலையில் திறமையான மாணவர்களாக அவர்கள் வர வேண்டும் என்பனவற்றைக் கருத்தில் கொண்டும், அரசியல் கலப்புள்ள, தரமற்ற வகையில் தயாரிக்கப்பட்ட சமச்சீர் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்ததைச் சுட்டிக் காட்டினர்.  சமச்சீர் கல்வி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழுவும், கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டம் தரமற்றது என்று ஒருமித்த கருத்து அளித்துள்ளது. ஆனால் அதன் அறிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது என்று அவர்கள் கூறினர். அவ்வாறு ஏற்க மறுத்தது தவறு என்று அவர்கள் வாதிட்டனர்.  சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று தமிழக அரசு ஒருபோதும் தெரிவிக்கவில்லை. தரமான கல்வியை அளிக்கும் வகையில் நிபுணர்களைக் கொண்ட குழுவின் பரிந்துரைப்படி செயல்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.  தனியார் மெட்ரிகுலேஷேன் பள்ளிகளின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தனியார் மெட்ரிகுலேஷேன் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறந்தவுடன் கடந்த ஆண்டு பாடத்திட்டங்களைக் கொண்ட புத்தகங்கள் நடப்பு ஆண்டில் வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டி, மீண்டும் புதிய புத்தகங்களை வழங்க அனுமதிக்கக் கூடாது என்று கூறினார்.  "கேவியட்' மனு செய்தவர்களின் சார்பில் ஆஜரான கங்குலி, சென்னை உயர் நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பிறகே தீர்ப்பு வழங்கியுள்ளதால் தமிழக அரசின் மேல் முறையீட்டை ஏற்கக் கூடாது என வாதிட்டார். தமிழகத்தில் உள்ள 4 விதமான கல்விமுறையைச் சுட்டிக் காட்டி, கடந்த ஆட்சியின்போது 4 ஆண்டுகள் ஆய்வு நடத்தி, நிபுணர்களுடன் ஆலோசித்தும், வெளிமாநிலங்களில் ஆய்வு செய்தும் அதன் அடிப்படையில் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டதை சுட்டிக் காட்டினார்.  மேலும் 200 கோடி செலவில் 9 கோடி புத்தகங்களும் தயார் செய்யப்படுள்ளதாகவும், இந்தாண்டு இந்தப் பாட புத்தகங்களை மாணவர்களுக்கு அளிக்கப் படாத நிலையில் பட்சத்தில் மக்களின் வரிப்பணம் 200 கோடி ரூபாய் வீணாகி விடும் என வாதாடினார்.  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சமச்சீர் கல்வித் திட்டத்துக்காக 200 கோடி செலவில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்கள். மேலும், தேவைப்படும் திருத்தங்களைச் செய்துகொள்ள சட்டத்தில் இடம் உண்டு என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கூறியுள்ள நிலையில் அதைச் செய்யாமல் தமிழக அரசு ஏன் பிடிவாதத்துடன் இருக்கிறது என்று கேட்டனர். மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தனர். அத்துடன், இந்த மனு மீதான இறுதி விசாரணை வரும் ஜூலை 26 ம் தேதி நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், ஆகஸ்டு 2-ம் தேதிக்குள் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதனால் ஜூலை 26-ம் தேதி வழக்கின் இறுதி விசாரணை முடிந்து வெளியாகும் தீர்ப்பைப் பொறுத்து ஆகஸ்ட் 2-ம் தேதி பழைய பாடத்திட்டத்தின் கீழ் புத்தகம் வழங்குவதா அல்லது திருத்தப்பட்ட பாட நூல்கள் வழங்கப்படுமா என்பது தெரியவரும். சமச்சீர் கல்வி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றதைப் பார்ப்பதற்காக தமிழக அரசின் பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி. சண்முகம், பள்ளிக் கல்விச் செயலர் சபிதா, அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ. அசோகன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

வியாழன், 21 ஜூலை, 2011

Hilary clinton about ilangai: இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சமவாய்ப்பு:இலாரி கிளிண்டன்

இலங்கை - ஈழக் கூட்டரசு நாடுகளாக உரிமை யுடைய நாடுகளின் கூட்டமைப்பு தோன்றினால் மட்டுமே அமைதியைஎதிர்பார்க்கலாம். அதற்கு முதலில் தமிழ் ஈழம் ஏற்கப்பெற வே ண்டும். ௨.) உண்மையான இலங்கை வரலாறு சிங்களவர்களுக்கும் பிற நாட்டினருக்கும் பாடமாக வைக்கப்பட வேண்டும். சிங்களப் பிடியில் இருக்கும் வரை தமிழினம் அடியோடுஅழிக்கப்படும்வரை பேச்சு தொடரும்; இனப்படுகொலை தொடரும்.  
இங்ஙனம்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சமவாய்ப்பு: ஹிலாரி கிளிண்டன்

First Published : 21 Jul 2011 03:40:39 AM IST

Last Updated : 21 Jul 2011 04:28:19 AM IST

சென்னை, ஜூலை 20: இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தினார்.  சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் "21-வது நூற்றாண்டுக்கான தொலைநோக்குப் பார்வை' என்ற தலைப்பில் புதன்கிழமை அவர் பேசியது:  இலங்கையில் அனைத்து மக்களுக்கும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் சம வாய்ப்பும், நம்பிக்கையும் வழங்கப்பட வேண்டும். அந்த நாட்டு அரசியல் தீர்வுக்கான முன்மாதிரியாக இந்தியாவின் அரசியலமைப்பு முறையை எடுத்துக் கொள்ளலாம்.  அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் சமவாய்ப்பு அளித்தால் அனைத்துக் குடிமக்களும் எவ்வளவு முன்னேற்றம் அடையலாம் என்பதற்கு சென்னை ஓர் உதாரணம்.  இந்திய-அமெரிக்க வர்த்தகம் அதிகரிப்பு: 21-ம் நூற்றாண்டின் வரலாறு ஆசியாவில் எழுதப்படும். இந்தியா மற்றும் அதன் மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகள் ஆசியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும்.  இந்தியா, அமெரிக்கா இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்குப் பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது. பேச்சுவார்த்தையால் இருதரப்பு வர்த்தகம் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மரபுசாரா எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மீது இன்டர்நெட் வழியாகத் தாக்குதல் தொடுப்பதைத் தடுப்பது குறித்துப் பேசி வருகிறோம்."இந்தியாவுக்கான பாஸ்போர்ட்' என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவில் படிக்க வரும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்தும் பேச்சு நடத்தப்பட்டது.  ஆப்கனை கைவிடவில்லை: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படுவது உண்மைதான். அந்த நடவடிக்கை 2014-ல் முடிவடையும். ஆப்கானிஸ்தானில் அமைதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் பாகிஸ்தான் முடிவை வரவேற்கிறோம். 21-ம் நூற்றாண்டின் முக்கியமானப் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டுமானால் இந்தியா, சீனா, அமெரிக்க நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.  இந்தியாவும், அமெரிக்காவும் மத்திய கிழக்கு நாடுகளிலும், வட ஆப்பிரிக்காவிலும் ஏற்பட்டு வரும் ஜனநாயக மாறுதல்களை ஆதரிக்க வேண்டும். தேர்தலை நடத்துவதற்கான முன்மாதிரி அமைப்பாக உள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், எகிப்து, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் தேர்தலை நடத்துவதில் உதவி வருகிறது.  பர்மாவில் ஜனநாயகத்துக்காகப் போராடிய ஆங்சான் சூகி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால், மேலும் பல்வேறு அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். அங்கு பொதுமக்கள் நடத்தப்படும் விதம் மிகவும் வருந்தத்தக்கது. அதேபோல், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் பிரச்னைகள் உள்ளன. கிழக்கத்திய நாடுகளில் கவனம் செலுத்தும் வகையில் புதிய கொள்கையை இந்தியா வகுத்துள்ளது. கிழக்கத்திய நாடுகளைத் தவிர, மேற்குப் பகுதி நாடுகளின் விவகாரங்களிலும் இந்தியா கவனம் செலுத்துவதை அமெரிக்கா ஆதரிக்கும் என்றார் ஹிலாரி கிளிண்டன்.நடிகர் கமல்ஹாசன், கார்த்தி சிதம்பரம், பின்னணிப் பாடகி சின்மயி, அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி உள்ளிட்ட பிரமுகர்களும், கல்லூரி மாணவ, மாணவியரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மக்கள் இறந்தாலும் பரவாயில்லை என்றே போர் செய்தது அரசு: சேனாதிராசா

மக்கள் இறந்தாலும் பரவாயில்லை என்றே போர் செய்தது அரசு: சேனாதிராசா

First Published : 21 Jul 2011 10:28:50 AM IST

Last Updated : 21 Jul 2011 10:36:54 AM IST

கொழும்பு, ஜூலை.21: 2009 மே திங்களில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நாலு லட்சத்து இருபதாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று இருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாகத் தெரிந்தும் இலங்கை அதிபர் ராஜபட்சவும், அரசும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் திட்டமிட்டே எழுபதாயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என ஐ.நா. மன்றம் வரை சென்று பேசினார்கள். அப்படியானால் 3,50,000 மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை போரை வென்று விடவேண்டும் என்பது தானே திட்டமாக இருந்தது என்று  மாவை சேனாதிராசா கேள்வி எழுப்பியுள்ளார்.பருத்தித்துறையில் நடைபெற்ற இறுதிப் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.சர்வதேச நாடுகளின் அழுத்தத்தால் மூன்று லட்சத்து பதினேழாயிரம் மக்கள் உயிர் பிழைத்து அகதிகளாய் முட்கம்பி வேலிகளுக்குள் தஞ்சமடைந்தனர். ஆனால் எழுபது ஆயிரம் பேருக்குக்கூட போதிய உணவு, மருந்து போன்றவை அனுப்பப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறது.ராணுவத்தினர், மட்டுமல்ல அரசின் முழு வளங்களும் அரச நிர்வாக முழு இயந்திரங்களும் அமைச்சர் குழாமும் எப்படியும் இந்தத் தேர்தலில் வெற்றியீட்ட வேண்டும் என அனைத்து வியூகங்களையும் வகுத்துள்ளது. போரில் அரசுக்கு கருணா உதவியதைப்போலவே யாழ்ப்பாணத்தை தேர்தலில் கைப்பற்ற டக்ளஸ் துணை புரிகிறார்.கடந்த அறுபது ஆண்டுகளில் மட்டுமல்ல 2009 முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னரும் ஜனநாயக ரீதியில் எந்த தென்னிலங்கை அரசுகளோ சிங்களத் தலைமைகளோ தமிழ் மக்களை வெற்றிகொள்ளவில்லை என்பதே வரலாறு. இந்தத் தேர்தலிலும் தமிழ் மக்கள் அந்தப் பாடத்தை அரசுக்குப் புகட்டி தம் இலக்கை நோக்கி அரசியலில் தீர்வு ஒன்றை பெற உறுதி பூண்டிருப்பதை நிரூபிப்பார்கள் என நம்புகின்றோம்.ராஜபட்சவின் சிந்தனை "ஒரே மக்கள், ஒரே நாடு'' எனும் சித்தாந்தம் ஆகும். போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ள ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கையில் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும் என்று வற்புறுத்துகின்றது. இந்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது.2009 மே 23- ல் வெளியான பான் கீ மூன்-ராஜபட்ச கூட்டறிக்கையிலும் அரசியல் தீர்வுக்கு வற்புறுத்தப்பட்டிருக்கின்றது. அதைத் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி தீர்வுகாண வேண்டும் என்று நாம் வற்புறுத்துகின்றோம். அவ்வாறே இந்தியாவும், அமெரிக்காவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அரசுடன் வற்புறுத்திவருகின்றன. ஆனால் அரசிடம் ஒரு அரசியல் தீர்வுக்கான விருப்பமோ, அரசியல் திட்டமோ இல்லை.சர்வதேசத்திலும் தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் பலவீனப்படுத்தவும் அரசுக்குப் போர்க்குற்றமோ, அரசியல் தீர்வோ இல்லை எனக் கூறுவதற்கே தமிழ் மக்களை அரசுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு அரசு கோரி நிற்கிறது. இதற்கு தமிழ் மக்கள் ஒரு பொழுதும் இடமளிக்க மாட்டார்கள் என்று நம்புகின்றோம்.தமிழ் மக்கள் இன்று நடைபெறும் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்இவ்வாறு மாவை சேனாதிராஜா உரையாற்றினார்.

thamizh kappu kazhagam: தமிழ்க்காப்புக்கழகம்

தமிழ்க்காப்புக்கழகம்

பதிவு செய்த நாள் : July 16, 2011


நாம் தமிழரெனில் உறுதி ஏற்போம்!
உலகத் தமிழன்பர்களே!
தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம்.
  • தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து   எழுதவோ மாட்டேன்.
  • தமிழ் அறிந்தவர்களுடன் தமிழிலேயே பேசுவேன். தமிழ் அறியாதவர்களைத் தமிழ் அறியச் செய்வேன்.
  • வணக்கத்தையும் வாழ்த்தையும் தமிழிலேயே சொல்வேன்.
  • தமிழ் வழிக் கல்விக்கு என்னால் இயன்ற கருத்துப் பரப்பலையும் உதவியையும் ஆற்றுவேன்.
  • எல்லாத் துறைகளிலும் தமிழ் தலைமையிடம் பெறவும் தமிழர் முதன்மையிடம் பெறவும் இயன்றவரை உதவுவேன்.
  • பெயரின் தலைப்பெழுத்தையும் தமிழிலேயே குறிப்பிடுவேன்.
  • தமிழிலேயே கையொப்பமும் சுருக்கொப்பமும் இடுவேன்.
  • தமிழ்அறிஞர்களையும் தமிழ்க்கலைஞர்களையும் போற்றுவேன்.
  • தமிழ்மொழி பிற மொழிகளுக்கு இணையான சம வாய்ப்பைப் பெற உதவுவேன்.
  • தமிழர் பிற இனத்தவர்க்கு இணையான சம உரிமை பெற உழைப்பேன்.

படிவம்


Ilangai music programme - mano cancelled: இலங்கை இசை நிகழ்ச்சியைநீக்கினார் மனோ

இலங்கை இசை நிகழ்ச்சியை ரத்து செய்தார் மனோ

First Published : 21 Jul 2011 01:35:00 AM IST


சென்னை, ஜூலை.20: இசை நிகழ்ச்சி நடத்த இலங்கைக்குச் சென்ற பாடகர் மனோ குழுவினருக்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து இசை நிகழ்ச்சியை நடத்தாமல் சென்னை திரும்பியுள்ளனர்.  இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிபர் ராஜபட்ச தமிழர்களின் வாக்குகளைப் பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிபர் ராஜபட்சவுடன் 24 அமைச்சர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பெரும்பாலான தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் வாக்குகளைப் பெற்றால்தான் ராஜபட்சவின் கட்சி பெரும்பான்மையைப் பிடிக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.  இந்நிலையில், தமிழ் இசைக் குழுவினரை வைத்து தமிழர்களின் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட ராஜபட்ச திட்டமிட்டார். இதற்காக பின்னணி பாடகர்கள் மனோ, கிரீஷ், சுசித்ரா, நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு அழைக்கப்பட்டனர். அனைவரும் புதன்கிழமை இலங்கை சென்றனர். இதை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் பாடகர் மனோவைத் தொடர்பு கொண்டு அங்குள்ள சூழல் குறித்து எடுத்துரைத்தனர். இதையடுத்து இசை நிகழ்ச்சியை ரத்துசெய்துவிட்டு புதன்கிழமை இரவு சென்னை திரும்பினார் பாடகர் மனோ.  இது குறித்து பாடகர் மனோவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ""விளையாட்டு மைதானம் திறப்பு விழாவையொட்டி நடக்கும் இசை நிகழ்ச்சி என்றுதான் இலங்கை சென்றோம். தேர்தல் பிரசாரத்துக்காக என்று தெரிந்திருந்தால் சென்றிருக்க மாட்டோம். தேர்தல் பிரசாரம் என்று சொல்லாமலேயே எங்களை அழைத்தார்கள். இலங்கை அரசின் சார்பில் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதும் எங்களுக்குத் தெரியாது. தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்றார் மனோ.