சனி, 21 ஜூலை, 2018

குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கு.அழகிரிசாமி புதல்வர்களுடன்

அகரமுதல

ஆடி 06, 2049  ஞாயிறு – சூலை 22, 2018 – 

 மாலை 5.00

 

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை,

தியாகராயர்நகர், சென்னை 600 017

அளவளாவல்: 

திரு கு.அழகிரிசாமி புதல்வர்களுடன்
சிறுகதைகள் – ஒரு காணொளி

அனைவரையும் வரவேற்கும்
சுந்தரராசன்:  9442525191
கிருபா நந்தன்: 8939604745

இல்லம் அடைய

வெள்ளி, 20 ஜூலை, 2018

மரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா

அகரமுதல

ஆடி 14, 2049 திங்கள் சூலை 30, 2018 மாலை 6.00

தி.என்.இராசரத்தினரம் கலையரங்கம்,

சென்னை 600 028

நன்னன்குடி நடத்தும்

நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா
மரு..அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா

சேக்கிழார் 26 ஆம் ஆண்டு விழா, சென்னை

அகரமுதல

 ஆடி 10-13, 2049 வியாழன்-ஞாயிறு சூலை 26-29, 2018

சேக்கிழார் ஆராய்ச்சி மையம்

திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம்

இணைந்து நடத்தும்

தெய்வச் சேக்கிழார் 26 ஆம் ஆண்டு விழா


நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா

அகரமுதல


கனடா, நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின்
இந்த  வருட (2018) கோடைக்கால ஒன்று கூடல்
எதிர்வரும் ஆடித்திங்கள் 12 ஆம் நாள்யூலை மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை மிலிக்கன் பூங்காவில் (5555 Steeles Ave. E) நடைபெறவுள்ளது.

நிகழ்வு : முற்பகல் 10.00 மணி.
 தொடர்புகளுக்கு :
பிரபா –  416-402-1372,
இரகு –  647-299-7443. 

காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியின் பழைய மாணவர்கள்,  நலன்விரும்பிகள்  அனைவரையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கம் அன்புடன்  அழைப்பு விடுக்கின்றது.

மலேசிய ஆசிரியர்களுக்கான சிறுகதைப் போட்டி – யாழ் பதிப்பகம்

அகரமுதல

மலேசியக் கல்விப் பரப்பில் மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நூல்களைப் பதிப்பித்து வருவதோடு அரசாங்கத்  தேர்வுகள் தொடர்பான பயிலரங்குகளையும் நடத்திவரும் ‘யாழ் பதிப்பகம்’ 2018 ஆண்டுக்கான சிறப்புத் திட்டமாக இந்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது.
இப்போட்டியில் மலேசியத் தமிழ்/தேசிய/இடைநிலைப்பள்ளிகளில்  தற்சமயம் பணிபுரியும் எல்லா ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சிக் கழகங்களிலும் உயர்கல்விக் கூடங்களிலும் பயிலும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியாது. அதேபோல இதுவரை தனித்த சிறுகதை தொகுப்பு வெளியிட்ட ஆசிரியர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது.

இப்போட்டியின் முடிவில் ஏறத்தாழ பத்து சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்படுவதுடன் ஒவ்வொரு கதைக்கும்  1000  மலேசிய வெள்ளி(இரிங்கிட்) வழங்க யாழ் பதிப்பகம் முடிவெடுத்துள்ளது.

சமகாலப் பாடத்திட்டத்தில் உள்ள புனைவிலக்கியத்தைத் திறம்பட கையாளும் ஆற்றல் கொண்ட ஆசிரியர்களை அடையாளம் காண நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்குபெற 20.8.2018க்குள் கீழ்க்கண்ட படிவத்தை ஆசிரியர்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

ஆவணி 04, 2049 / 20.8.2018  நாளுக்குள் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்து அனுப்பும் ஆசிரியர்களுக்கு மட்டுமே சிறுகதை எழுதும் போட்டியில் கலந்துகொள்ளும் விதிமுறைகளும் விளக்கங்களும் அனுப்பிவைக்கப்படும். படிவத்தை அனுப்பாத ஆசிரியர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள இயலாது.

மேல் விவரங்களுக்கு 017-3121079  என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்

போட்டிக்கான பதிவுப்படிவத்தைக் கீழ்க்காணும் இணையத் தொடர்பில் பெறலாம்.

http://bit.ly/2NLNEd3


-வல்லினம்

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டி

அகரமுதல

பரிசு உரூ 1000.00

கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆவணி 04, 2049 /20.8.2018
கதைகள் சேரவேண்டிய முகவரி:
முனைவர் .தமிழமல்லன்,
தலைவர் தனித்தமிழ் இயக்கம்,
66,மாரியம்மன்கோவில் தெருதட்டாஞ்சாவடி,புதுச்சேரி9

போட்டிக்கான நெறிமுறைகள்:
  1. நான்கு பக்கங்கள் அளவில் மிகாத குமுகாயக் கதைகளை 2 படிகள் மட்டும்
அனுப்புக.
2.தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதுதல் வேண்டும்.தாளின் பின்பக்கத்திலோ
முன்பக்கத்திலோ பெயரோ முகவரியோ முத்திரையோ இருக்கக் கூடாது.
3.கதையின் மேல் தனித்தாளில் எழுதியவர் பெயரையும் கதையின்
பெயரையும் இணைத்து அனுப்புக.
4.ஆங்கிலம்,வடமொழிமுதலிய பிறமொழிச் சொற்களையோ பெயர் களையோ கலக்காமல் தனித்தமிழில் கதைகள் அமைதல் வேண்டும்.
5.கதைக்கேற்ற ஓவியங்களை அனுப்பலாம்.
6.ஒருவர் பல கதைகளை அனுப்பலாம்.
7.கதைகளை நூலாக்கும் உரிமை,பதிப்பிக்கும் உரிமை ஆகியவற்றுக்குத் தனித்தாளில் ஒப்புதல் தருக.
கதைகள் 12.9.2018 வெல்லும்தூயதமிழ் மாதஇதழில் தொகுப்பாகவெளியிடப்படும்.
விரும்பும் அன்பர்கள் 20.00 உருவாஅனுப்புக.
தனித்தொகுப்பாகவும் வெளியிட முயல்வோம். அதன் முழு உரிமை இயக்கத்
தலைவர்க்கு உரியதாகும்..
1.முதற்பரிசு உரூ 500.00
 2.இரண்டாம் பரிசு உரூ 300.00
3.மூன்றாம் பரிசு உரூ 200

வியாழன், 19 ஜூலை, 2018

அனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர்

அகரமுதல


ஆடி 05, 2049 சனி 21.07.2018

முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை

அனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர்

தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறை
மொரிசியசு மாணிக்கவாசகர் திருக்கூட்டம்
திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம்