சனி, 29 அக்டோபர், 2011

நாளை உலகச் சிக்கன நாள்: “சேமிக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கவேண்டும்; முதல்வர் வேண்டுகோள்

நாளை உலக சிக்கன நாள்: “சேமிக்கும் பழக்கத்தை
 
 கடைபிடிக்கவேண்டும்;
 
 ஜெயலலிதா வேண்டுகோள்
சென்னை, அக் 29-
 
உலக சிக்கன நாளையொட்டி முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  
 
சேமிப்பின் அவசியத்தை பொது மக்களுக்கு எடுத்துரைக்க ஆண்டு தோறும் அக்டோபர் திங்கள் 30-ம் நாள் உலக சிக்கன நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய சேமிப்பு, நாளைய பாதுகாப்பு என்பதால் எதிர்கால வாழ்க்கை நலனை கருத்தில் கொண்டு சேமிக்கும் பழக்கம் சிறுவயது முதலே வரவேண்டும்.
 
நாடும், வீடும் நலம் பெற, மக்கள் வாழ்வு வளம் பெற அனைவரும் சேமிக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.   அஞ்சலகங்களில் சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து சேமிக்கும் போது அத்தொகை சிறு துளி பெரு வெள்ளம் போன்று பெருந்தொகையாகி நாட்டு முன்னேற்றத்திற்காகவும், நல்ல பல வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.
 
எனவே தான், தமிழக அரசு சேமிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது. இந்த உலக சிக்கன நாளில் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம் பெறவும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உருவாக்கிடவும் வீட்டிற்கு அருகிலுள்ள அஞ்சலகத்தில் ஒரு அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை தொடங்கி சேமித்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
இவ்வாறு முதல்- அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 
நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், புரட்சித் தலைவி அம்மாவின் நல்லாட்சியில் மக்கள் சிக்கனமாக வாழ தங்களின் வருவாயிலிருந்து இயன்ற அளவில் சேமித்து வாழ்வில் வளம் பெற வேண்டும் என்று உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
என்று கூறியுள்ளார்.

3 பேர் உயிரை காப்பாற்ற அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: மரு இராமதாசு கோரிக்கை

3 பேர் உயிரை காப்பாற்ற அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
சென்னை, அக் 29-
 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் தங்களது கருணை மனுக்களை குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனு தமிழ் உணர்வாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
 
3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வது தொடர்பான தமிழக நிலைப்பாடு என்ன? என்ற உயர்நீதி மன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் 3 பேரின் தூக்கு தண்டனையும் ரத்து செய்வது தொடர்பான எல்லா வினாக்களுக்கும் கருத்து கூற விரும்பவில்லை என்பதே தமிழக அரசின் பதிலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் கூட பரவாயில்லை. பதில் மனுவின் கடைசி பகுதியில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் கோரப்பட்டுள்ளது. அதாவது இந்த மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. அரசின் இந்த முடிவு ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கிறது.
 
மூவரின் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டபோது அதை எதிர்த்து ஒட்டு மொத்த தமிழகமும் கிளர்ந்து எழுந்தது. அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினோம். முதலில் தயங்கினாலும் பின்னர் எங்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆகஸ்டு 30-ந்தேதி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால் உயர்நீதிமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள மனுவில் அதற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை அவர் மேற்கொண்டிருக்கிறார்.
 
மக்களின் எழுச்சியை அடக்குவதற்காகவே பெயரளவில் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக மக்களின் நலனுக்காக செயல்படும் அரசு, ஒட்டு மொத்த தமிழகத்தின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படக்கூடாது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய முதல்- அமைச்சர், அதில் உறுதியாக இருக்க வேண்டும்.
 
அதை வெளிப்படுத்தும் வகையில் அமைச்சரவையில் இதே போன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, 3 உயிர்களையும் காப்பாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் ஒட்டு மொத்த தமிழகமும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவைக் கொண்டாடும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNA MPs advocate for Tamils rights in U.S. capital

TNA MPs advocate for Tamils rights in U.S. capital

[TamilNet, Friday, 28 October 2011, 03:33 GMT]
Four Tamil National Alliance (TNA) Members of Parliament visiting the U.S. on an invitation by the State Department arrived Tuesday night and have completed two days of meetings at the State Department and with Congress persons including members of the Sri Lanka caucus, sources close to the MPs said. The team led by Parliamentary group leader Mr Sampanthan said that they were aware of the political significance of this unique gesture by the State Department in inviting a non-State political party and that they would use every opportunity available to articulate Tamils position to the decision makers in Washington.

The visiting TNA delegation included Rajavarothayam Sampanthan, Maavai Senathirajah, Suresh Premachandran and M.A. Sumanthiran.

Mr Sampanthan said that the team would prepare a press statement on the nature of the discussions held and the positions articulated by them as representatives of Tamils.

After further meetings in New York, some members are scheduled to travel to Canada.

The group is scheduled to return to Sri Lanka end of next week.



Perth Tamils join Australians protesting amidst attempts to bail out genocidal Sri Lanka

Perth Tamils join Australians protesting amidst attempts to bail out genocidal Sri Lanka

[TamilNet, Friday, 28 October 2011, 22:57 GMT]
While Her Majesty the Queen was inaugurating the Commonwealth sessions in Perth, Australia, a few hundreds meters away, hundreds of Tamils have joined over a thousand of 20 diverse groups of the mainstream population of Perth to protest against Mahinda Rajapaksa attending the Commonwealth Sessions. The protest of the diaspora Eezham Tamils and global civil society took place while some Establishments guilty of abetting the crimes are keen in bailing out genocidal Sri Lanka by diplomatic manoeuvres in Perth and by hijacking the polity of Eezham Tamils elsewhere by simulating that everything is coming to normalcy and is under ‘control’. The outcome of Perth Meet will show to what extent the Commonwealth boasting of its origins from the ‘cradle of democracy’ could prove its effectiveness in checking States globally turning into anti-people Establishments, commented political observers.

Tamils protest in Perth, Australia
Tamils protest in Perth
While the diverse groups had their separate calls for issues ranging from Aboriginal Rights and Refugee Rights to Climate change and renewable energy, they all vociferously joined the Tamils when the Tamils demanded to suspend Sri Lanka from the Commonwealth, to stop the Genocide of Tamils in Sri Lanka, to Recognize the Independence of Tamils, to arrest the War Criminal Mahinda Rajapakse and similar slogans.

After the initial separate gatherings of the various groups with their demands by voice and by holding banners and placards for about half an hour, then the representatives of the different groups addressed the combined gathering of over 1000 peoples. Ajanthy spoke on behalf of the Tamil community and Yogan of his personal experience of the War.

Ajanthy said the Commonwealth “does have teeth,” which had been used to suspend four member nations – Nigeria, Fiji, Pakistan and Zimbabwe.

“The crimes committed in Sri Lanka are far more serious and much larger in scale than those attributed to the four members who faced suspension,” she said.

Referring to the civil war, which led to the death of nearly 500,000 and displacement if around one million people, she added: “We need Australians to support suspension of Sri Lanka from the Commonwealth, we need to stop the genocide of Tamils and support the independents of Tamils.”

Yogan said Rajapaksa had been given a “red carpet welcome” to CHOGM, but he was a war criminal who should be arrested.

“His place is not in the parliament, it’s behind the barb wire. Please Australia, put him into jail, don’t send him back home,” he shouted to the crowd, the Herald Sun reports.

Yogan, standing in front of a grisly banner showing dead and mutilated Tamil children, said he had lost 79 family members in the Sri Lankan civil war.

The Socialist Alliance convener of the CHOGM Action Network of the 20 groups, in a statement issued for the occasion stated that it recognizes that Tamils are an oppressed Nation within Sri Lanka, and supports their Right of Self determination.

While a consensus of mutual solidarity was developing in the commonwealth of Peoples, the Commonwealth of Heads of State were reported to be n a disarray over the Eminent Peoples Group Report.

The main proposal of the Report for a Commonwealth Commissioner of Human Rights is not likely to be accepted apparently at the insistence of the Indian Delegation. Probably that was a ‘motherly’ protection to Mahinda.

But former Justice Honourable Michael Kirby, a member of the Eminent Peoples Group is reported to have said that the non acceptance of the recommendation would make the Commonwealth irrelevant.

செவ்வியல் இலக்கியச் சொற்பொழிவு – அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம்

மழை! மழை!


மழைவருது மழைவருது…..

பதிவு செய்த நாள் : 28/10/2011

திரும்பாதே!

திரும்பாதே!

பதிவு செய்த நாள் : 28/10/2011


மாடுகளை மிதிக்க விட்டு விந்தையான நேர்த்திக்கடன்

 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2011,01:06 IST
வதோதரா :தரையில் படுத்துக்கொண்டு மாடுகளை ஓடவிட்டு மிதிக்க செய்யும், வினோத நேர்த்திக் கடனை குஜராத் மாநில பழங்குடியினர் மேற்கொண்டனர்.

குஜராத்தின் தஹோத் மாவட்டம் கர்பதா கிராம மக்கள், தங்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக "காய் கவுரி விரதம்' மேற்கொள்கின்றனர். தங்கள் குல தெய்வமான பாபா கோடா, சாமுண்டா ஆகிய தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு, அலங்கரிக்கப்பட்ட மாடுகளை தங்கள் மீது மிதிக்க செய்யும் சடங்கை செய்தனர். இதன் மூலம் மாடுகளுக்கு தாங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாக இந்தக் கிராம மக்கள் நம்புகின்றனர்.

இந்த விழாவை பார்ப்பதற்காக சுற்றியுள்ள கிராம மக்களும் இந்த கிராமத்தில் கூடினர். நேர்த்திக் கடனை செலுத்துபவர்கள் தரையில் படுத்துக்கொள்ள, மாடுகள் வரிசையாக இவர்களை மிதித்தப்படி ஓடுகின்றன. இந்த நேர்த்தி கடனை செய்தவர்களுக்கு மாடு மிதித்ததில் எந்த காயமும் ஏற்படவில்லை.

தேநீர்க்கடைக்காரர் மகள் பல்கலை அளவில் முதலிடம்

 
 
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2011,23:53 IST
திருப்பூர்:திருப்பூரில் உள்ள டீக்கடை உரிமையாளர் மகள் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, கோவை பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இம்மாணவிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது.திருப்பூர் அருகே செட்டிபாளையம் டி.பி.என்., கார்டனை சேர்ந்தவர் மனோகர்; மனைவி அமுதராஜேஸ்வரி. இவர்களுக்கு மனோபிரியா (19); பிரீத்தி (17) என இரு மகள்கள். மனோகர், திருப்பூர் பெருமாள் கோவில் வீதியில் கடந்த 15 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார்.

மூத்த மகள் மனோபிரியா, குமரன் கல்லூரியில் 2008-11ம் கல்வியாண்டில் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி படித்தார். மூன்று ஆண்டுகளிலும் படிப்பில் சிறந்து விளங்கிய மனோபிரியா, அனைத்து செமஸ்டர்களிலும் சிறந்த மதிப்பெண்களுடன், 87.34 சதவீதம் பெற்று, கோவை பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.மாணவி மனோபிரியா கூறியதாவது:சிக்-குன்-குனியா போன்ற எண்ணற்ற நோய்கள் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் நுண்ணுயிர்களே காரணமாக இருக்கின்றன.

மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று சிறு வயது முதலே ஆர்வம் இருந்ததால், குமரன் கல்லூரியில் சேர்ந்து மைக்ரோ பயாலஜி படித்தேன். படிப்பை தவிர மற்ற நேரங்களில்தான் பொழுதுபோக்கு என்று எனக்கு நானே கட்டுப்பாடு ஏற்படுத்தி படித்தேன். பொருளாதார சிக்கல் வந்தபோதிலும், பெற்றோர் எனது படிப்புக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கொடுத்ததால், படிப்பில் சாதிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.பாடங்கள் குறித்த சந்தேகங்களை கல்லூரி பேராசிரியர்கள் தீர்த்து வைத்தனர்.

அனைத்து பாடங்களுக்கும் குறிப்பு கொடுத்து, ஊக்கப்படுத்தினர். கல்வி மட்டுமின்றி, அவ்வப்போது "கவுன்சிலிங்' நடத்தி, இதர பிரச்னைகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்ததால், படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து, பல்கலை அளவில் முதலிடம் பெற்றுள்ளேன். தற்போது குமரன் கல்லூரியிலேயே முதலாம் ஆண்டு எம்.எஸ்.சி., மைக்ரே பயாலஜி படித்து வருகிறேன். எம்.எஸ்.சி.,யிலும் நன்றாக படித்து முதல் மதிப்பெண் பெற்று, மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர் குறித்து ஆராய்ச்சி செய்வதை லட்சியமாக கொண்டுள்ளேன், என்றார்.மாணவியின் பெற்றோர் கூறியதாவது:திருப்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் துணிக்கடை வைத்திருந்தோம்; நஷ்டம் ஏற்பட்டதையடுத்து, டீக்கடை வைத்துள்ளோம்.

இரு மகள்களும் சிறு வயது முதல் நன்றாக படித்ததால், படிப்பில் சாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவோம். படிப்பிலும் சரி; வீட்டிலும் சரி, முழு சுதந்திரம் கொடுப்பதோடு, வியாபார நஷ்டங்களை பொருட்படுத்தாமல், அவர்களை படிக்க வைக்கிறோம். மூத்த மகள் மனோபிரியா, குமரன் கல்லூரியில் பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி படித்தாள். எங்கள் கஷ்டங்களை புரிந்துகொண்டு, படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து, பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றிருப்பது பெருமையாக உள்ளது.

திருச்சி சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ., பி.எல்., படிக்கும் இளைய மகள் பிரீத்தி, கடந்த மாதம் பெங்களூருவில் நடந்த போட்டியில் சிறப்பாக வாதாடி, பரிசு மற்றும் சான்று பெற்றுள்ளார். கஷ்டப்பட்டாலும், பிள்ளைகள் நன்றாக படித்து, முதலிடம் பெறுவது எங்கள் கவலைகளை மறக்கச் செய்கிறது, என்றனர்.பி.எஸ்.சி., மைக்ரோ பயாலஜியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ள மாணவி மனோபிரியாவுக்கு, கோவை பாரதியார் பல்கலை தங்கப்பதக்கம் வழங்க உள்ளது.

பட்டாசு சத்தம் இல்லாத சிற்றூர் வவ்வால்களுக்காக "தியாகம்'

 
மாற்றம் செய்த நாள் : அக்டோபர் 27,2011,01:05 IST
 
 
புதுச்சேரி:வவ்வால்களுக்காக பட்டாசு இல்லாத தீபாவளியை கிராம மக்கள் கொண்டாடினர்.தீபாவளி பண்டிகையென்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது விதவிதமான பட்டாசுகள்.

ஆனால், புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு அருகில் தமிழக பகுதியைச்சேர்ந்த கழுப்பெரும்பாக்கம் கிராம மக்கள், தீபாவளி சமயத்தில் ஊருக்குள் பட்டாசுகளை நெருங்க விடுவதில்லை . கழுப்பெரும்பாக்கம் ஆலமரத்தில் ஊருக்குள் விருந்தாளியாக தங்கியுள்ள பழந்திண்ணி வவ்வால்களே கிராம மக்களின் இந்த தியாகத்திற்குக் காரணம். இந்த பழந்திண்ணி வவ்வல்களுக்காக தான் கடந்த 5 தலைமுறையாக இந்த கிராம மக்கள் பட்டாசுகள் வெடிக்காமல் சத்தமில்லாத தீபாவளியை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். இரவில் உணவு வேட்டை நடத்திவிட்டு பகலில் மரக்கிளைகளில் தொங்கியப்படி ஓய்வு எடுக்கும் நேரத்தில் பட்டாசுகள் வெடித்தால் பழந்திண்ணி வவ்வால்கள் கலைந்து சென்றுவிடும் என்பதால் யாரும் வெடிப்பதில்லை.தீபாவளி பண்டிகை என்றில்லாமல் பல காலமாகவே இங்கு பட்டாசுகள் வெடிப்பதில்லை. கிராமத்தில் திருமணம், காது குத்தல், ஊர் திருவிழா என பொது விஷேச நிகழ்ச்சிகள் களைக்கட்டினால் கூட பட்டாசு சத்ததைக் கேட்க முடியாது. இப்பகுதிகளில் பட்டாசு புகை, நெடி கூட அண்ட விடாமல் பல ஆண்டுகளாக கவனத்துடன் பாதுகாத்து பாராமரித்து வருகின்றனர்.

வழக்கம்போல, இந்தாண்டு தீபாவளி பண்டிகையான நேற்றும் இந்த கிராமத்தில் மக்கள் பட்டாசுக்களை வெடிக்கவில்லை. மற்றப்படி இனிப்புகள் செய்து, புத்தாடைகள் அமைதியாக தீபாவளியைக் கொண்டாடினர். இந்த ஊர் மக்களுக்குப் பழந்திண்ணி வவ்வால்கள் தான் செல்ல குழந்தைகளாக விளங்குகின்றன. மரத்திற்கு அடியில் வவ்வால்கள் அடிப்பட்டு கீழே விழுந்து கிடப்பதை யார் கண்டாலும் அடுத்த நிமிடமே அக்கறையுடன் முதலுதவி சிகிச்சை கொடுத்து மீண்டும் மரக்கிளையில் ஏற்றிவிடுகின்றனர். இறந்துவிட்டால் சில நிமிட மவுன அஞ்சலிக்குப்பின் மண்ணில் புதைத்துவிடுகின்றனர். எந்தக் காரணத்தை வேட்டையாடுபவர்களை ஊருக்குள் நுழைய விடுவதே கிடையாது. மனிதனுக்கு மனிதனே மனிதநேயம் காட்ட தவறும் இந்த உலகில், வவ்வால்கள் மீது பாசம் வைத்து கடந்த 5 தலைமுறைகளாக பட்டாசுகளுக்கு "குட்-பை' சொல்லி வரும் கழுப்பெரும்பாக்கம் கிராம மக்களின் உயரிய பண்பு வியக்க வைக்கிறது.



மாறாது எங்கள் வாழ்வு...வானம் போலே! : குடிலில் வாழும் இலட்சாதிபதிகள்

 
 
 
மனிதனின் பரிணாமத்தில் முக்கியமானது நாடோடி வாழ்க்கை. ஆதி மனிதன் அலைந்து திரிந்த போது நடந்த அரிய கண்டுபிடிப்புகள் தான், இன்று நாம் வாழும் சுபயோக வாழ்க்கை. மாடி மீது மாடி கட்டி குடியேறும் மிதமிஞ்சிய கலாசாரத்தின் இடையிலும், நாடோடி வாழ்க்கை தொடர்ந்து வருவது ஆச்சர்யம் தான். ஆடுகளை விளைநிலங்களில் "கிடை' போடும் கிராமவாசிகளின் வாழ்க்கை முறை, நவீன உலகின் மறுபக்கம். மதுரை மாவட்டம் சோழவந்தான் சென்ற போது, கொடிமங்கலம் கிராமத்தில் ஆடுகள் அடைக்கும் "குடில்'களில் மனித தலைகள் தெரிந்தன. நம்மையும் கேட்காமல் "பிரேக்' போட்டது பைக். அருகில் சென்று விசாரித்த போது, கிடைத்த தகவல்கள் ஆச்சர்யம் பிளஸ்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காமாட்சி புரத்தை சேர்ந்த விவசாயிகள் தான் அவர்கள்.
பரம்பரையாக ஆடு கிடை போடும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பெயர் சொல்ல ஊர் ஒன்று இருந்தாலும், இவர்கள் அங்கு செல்வது எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை என்பது அவர்களுக்கே தெரியாது. "ஆடு, தாங்கள் வாசிக்கும் கூடு,' இவைதான், இவர்களின் மூலதனம். உடமைகள் ஏற்ற சைக்கிள் இருந்தாலும், தங்கள் உடலை சுமந்து செல்வது நடை மூலமே. கிடைத்த கிராமத்தில் கிடை போட்டு, சம்பாதிப்பது தான் இவர்களின் தொழில். இதற்காக
இவர்கள் கொடுக்கும் விலை தூக்கம். பகல் முழுவதும் மேய்ச்சல் பணி, இரவில் கிடை போட்டதும், நரிகளிடமிருந்து ஆடுகளை பாதுகாக்க விடியும் வரை விழித்திருக்க வேண்டும். உடன் வரும் குடும்பத்திலிருந்து மனைவி, மகன், மகள், பேரன் என, அனைவரும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வேலைக்கு சென்ற சமயத்தில் உடமைகளை பாதுகாக்க, குடில்களுக்கு பூட்டு வசதி செய்துள்ளனர். திருமணம், பிரசவம், படிப்புக்கு மட்டுமே சொந்த ஊர்
செல்கின்றனர். இல்லற வாழ்க்கையும், இனிய தாம்பத்தியமும் அரங்கேறுவது இடைப்பட்ட நாடோடி வாழ்க்கையில் தான். பரிதாபத்திற்குரியவர்களாக இருந்தாலும், இவர்களின் வருமானம் கணிசமானது. ஏக்கர் ஒன்றிக்கு கிடை போட, நாள் ஒன்றிக்கு 400 ரூபாய் கட்டணம். இன்றைய நிலவரப்படி ஆடு விலை அபாரம் என்பதால், இருப்புகளை வைத்து பார்க்கும் போது, இவர்களும் லட்சாதிபதிகள் தான். இருந்தாலும் இவர்கள் வசிப்பது குடிலில்.
திசை தெரியாத இடத்தில் தீபாவளியும், பொல்லாத சூழலில் பொங்கலும் கொண்டாடிய அனுபவம் இவர்களுக்கு உண்டு. பிழைப்புக்காக ஒவ்வொரு பகுதிக்கு மாறினாலும், இவர்களின் வாழ்க்கை முறையில் எந்த மாற்றமும் இல்லை, வானத்தை போல.

-நவநீ
 
வாசகர் கருத்து (16)
John Britto - chennai ,இந்தியா
2011-10-28 14:52:54 IST Report Abuse
ஆடு கிடை போடுவது என்றால் - ஆடுகளை ஒரு அறுவடை முடிந்த வயலில் ஒன்று அல்லது ஒரு வாரம் தங்க வைப்பது. ஆட்டின் கழிவு ரோமம் போன்றவை இயற்கையான வுரம். முன்னோர்கள் இந்த விரத்தை பெரிதும் பயன்படுத்தி விவசாயம் செய்தார்கள். கி. ஜான் பிரிட்டோ, சென்னை
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment
Swami Nathan - London,யுனைடெட் கிங்டம்
2011-10-27 16:58:39 IST Report Abuse
ஆடு கிடை போடுவது என்றால் என்ன ? தயவு செய்து யாராவது விளக்கவும்
  • Rate it:
  • 2
  •  
  • 0
Share this comment
kumar kullakkattakurichi - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2011-10-28 12:51:50 IST Report Abuse
ஆடு கிடை போடுவது என்ன்பது வயல்காடில் 200 & 300 ஆட்டை மொத்தமாக நைட் புள்ள அடைத்து வைத்து இருப்பார்கள் இந்த ஆடு போடும் புலுக்கை ,கோமியம் போன்றவை வயலுக்கு சூப்பர் பவர் ,கிடை போட்ட மறு வருடம் இடத்தில பயிர் நல்ல விலையும்...
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
trp - coimbatore,இந்தியா
2011-10-28 09:03:20 IST Report Abuse
நண்பரே ஆடு கிடைபோடுவது என்னென்றால் ,ஆட்டின் சாணம் மற்றும் அது பெய்யும் சிறுநீர் விவசாயத்திற்கு நல்ல இயற்க்கை உரம் ஆகும் .அதனால் ஆடுகளை வயல் வெளிகளில் சிறுசிறு தடுப்புகள் அமைத்துஅதற்குள் ஆடுகளை இரவுநேரத்தில் அடைத்து பாதுகாப்பார்கள் ,அதற்க்கு வாடகையாக ஆட்டுக்கரருக்கு நிலசொந்தக்கரர் ஒரு தொகை கொடுக்கவேண்டும் .இதனால் ஆட்டுக்கரருக்கு ஒருவருமானம் ,நிலசொந்தக்கரரின் நிலத்துக்கு சொற்ப செலவில் நல்ல இயற்க்கையுரம் .இதுதான் ஆட்டுக்கிடை போடுவது .இதையேதான் கிராமத்தில் " ஆடு மேட்சதுமாத்ரி அண்ணனுக்கு பொண்ணு பார்த்தது மாதரியும் "என்று சொல்லுவார்கள்...
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
Krishnamoorthy - Singapore,சிங்கப்பூர்
2011-10-28 07:22:55 IST Report Abuse
சுவாமி அவர்களே.... ஆடு கிடை போடுவது என்றால்.... விவசாய நிலத்திற்கு இயற்கை முறையில் உரமிடுவது..... மலை சுமார் ஆறு மணியளவில் எந்த நிலத்திற்கு கிடை போடவேண்டுமோ... அதில் தடுப்பு அமைத்து.. ஆடுகள் அனைத்தையும் அடைத்து வைப்பார்கள்... மறு நாள் விடிந்ததும் சுமார் எட்டு மணிக்கு.. கிடை பிரிக்கப்படும்... ஒரு இரவு முழுவதும் ஆடுகள் வெளியேற்றும் சிறுநீர்.. மற்றும் புளிக்கைகள்... அந்த நிலத்திற்கு உரமாகும்.. இது இயற்கை ஆனது.. அதனால்.. இன்றளவும் விவசாயிகள் இதனை செய்துவருகின்றனர்.... இது போல மாட்டுகிடையும் உண்டு.... இன்னும் ஒங்களுக்கு புரியனும்னால்... சமீபத்தில் விருது வாங்கிய தென்மேற்கு பருவகாற்று திரைபடத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்....
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
Murugan K G - bangalore,இந்தியா
2011-10-27 16:23:39 IST Report Abuse
You guys do not know about the risk in this. They need to struggle a lot to save these sheeps from any disease which will wipe their investment in a day. Try to understand, In tamil nadu can you see a veterinary doctor anywhere and also to the places where they go. It looks simple. But that is not true. Thanks for seeing the concern in their life style. But the investment what they have is a virtual money and they need to struggle a lot to keep that.
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
Enna Ithu - Tooting,யுனைடெட் கிங்டம்
2011-10-27 16:22:15 IST Report Abuse
என்னப்பு இப்புடி சொல்லிப்போட்டியே.. உங்க வலைத்தளத்தை நம்ம அரசியல்வாதிகள் பார்த்தா இவங்க கதி என்ன ஆறது?
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
trp - coimbatore,இந்தியா
2011-10-27 10:23:51 IST Report Abuse
நம்மூர் அரசியல் வாதிகளை நினைக்கையில் இவர்கள் போற்றதகுந்தவர்கள் .உழைப்பைநம்பி உயருபவர்கள் .வாழ்க அந்த கொடிமங்கல வாசிகள்
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
Sekar - Muthukulathur,இந்தியா
2011-10-26 19:23:46 IST Report Abuse
நண்பரே! சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களின் சொந்த ஊருக்கு ஒருமுறை சென்று வாருங்கள். வாயில் விரல் வைத்து அவர்களின் வீடுகளை காண்பீர்கள்.
  • Rate it:
  • 1
  •  
  • 0
Share this comment
muzeeb - melur,சவுதி அரேபியா
2011-10-26 17:29:34 IST Report Abuse
all the best
  • Rate it:
  • 0
  •  
  • 0
Share this comment
sundaram - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2011-10-26 14:27:11 IST Report Abuse
1998 ல் சவுதியில் பணி புரிந்த போது மலையாண்டி என்ற பரமக்குடி நண்பரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. என் பதவிக்கும் அந்தஸ்துக்கும் , என் எதிரே நிற்கவே தயங்கிய அவரை இருவருக்கும் பொதுவான "தமிழ்" இணைத்தது. அவருக்கு ஊதியமோ மிகவும் குறைவு. பேச்சுவாக்கில் அவரிடமிருந்து சேகரித்த தகவல் எனக்கு ஆச்சரியம் அளித்தது. " நான் இங்க வேலைக்கு வந்து மூணு வருஷம் ஆச்சு. ஒரு குடிசை வீடு கட்டி முன் புறத்தில் ஒரு சிறிய பெட்டிக்கடை வைத்துக்கொடுத்துள்ளேன் என் பொஞ்சாதிக்கு. வருசா வருஷம் பத்து ஆட்டுக்குட்டி வாங்குவேன். இதுவரைக்கும் நாப்பது ஆடு வாங்கிட்டேன். கீழக்கரை பக்கம் பாய்கள் (இஸ்லாமியர்) இருக்குறதால ரம்சான் பக்ரீத் சமயத்துல நல்ல விலை போகும். அப்பப்போ ஆடுங்களை வயல்ல கிடைக்கு விட்டா நல்லா துட்டு கிடைக்கும். எப்படியும் ஐநூறு ஆடு சேத்துட்டா நான் இந்த வேலையை விட்டுட்டு ஊரை பாக்க போயி சொந்தமா விவசாயம் பண்ணி பொழச்சுக்குவேன்." அவரது நம்பிக்கை என்னை அசர வைத்தது
  • Rate it:
  • 25
  •  
  • 0
Share this comment
kumar kullakkattakurichi - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2011-10-26 13:31:43 IST Report Abuse
நிம்மதியான வாழ்கை நிறைவான மகிழ்ச்சி சொந்த தொழில் வாழ்க வளமுடன்
  • Rate it:
  • 7
  •  
  • 0
Share this comment
Raj Raja - ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2011-10-26 09:16:07 IST Report Abuse
நானும் இந்த நாடோடிகளை பார்த்து இருக்கிறேன்;;இவர்கள் பார்பதர்க்குதான் ஏழை மக்களை போல் தெரிவார்கள்;;;ஆனால் இவர்களிடம் இருக்கும் சொத்து மதிப்பு பல கோடிகள்;;;;நான் ஒரு ஆடு வாங்க போய் இருந்தேன்;;;;அவர்கள் சொன்ன விலையோ நாலு மாதத்திற்கு வேற ஆடை விற்காமல் இருந்து சாப்பிட கூடிய அளவிற்கு இருந்தது;;;;அன்று முதல் நானும் இவர்களை போல் ஆடு மேய்த்து பொழப்பு நடத்தாலாம் என்று துபாய்க்கு வந்து கஷ்ட்டபட்டு கொண்டு இருக்கிறேன்;;;;;இதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு இவர்களை போல் 100 ஆடு வாங்கி குடும்பத்துடன் சந்தோசமாக வாழனும் நம்ம தமிழ் நாட்டில்;;;வேற எந்த தொழில் தொடங்கியாலும் நாட்டில் வரி கட்டனும்;;;இதில் வரும் வருமானம் பல லச்சம் ஆனால் வரி கட்ட தேவை இல்லை.
  • Rate it:
  • 17
  •  
  • 6
Share this comment
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
2011-10-26 07:50:53 IST Report Abuse
கூடாரங்களில் மன்னர்கள் வசித்தற்கு,இதுவும் ஒரு காரணம் போல.
  • Rate it:
  • 1
  •  
  • 1
Share this comment
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
2011-10-26 07:18:41 IST Report Abuse
போர்காலங்களில் மன்னர்கள் இவர்களை பார்த்து தான்,' கூடாரம்' அமைத்திருப்பார்கள் போல.

 

சூரியனை நெருங்கி வரும் வியாழன்: ஆர்வமூட்டும் வானியல் நிகழ்வு

சூரியனை நெருங்கி வரும் வியாழன்: ஆர்வமூட்டும் வானியல் நிகழ்வு

First Published : 28 Oct 2011 08:59:43 PM IST


சென்னை, ஆக்.28: சூரியனுக்கு அருகே வியாழன் கிரகம் நெருங்கி வரும் நிகழ்வு நாளை நடக்கவுள்ளதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இதனை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் அய்யம்பெருமாள் தெரிவித்தார்.சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்ததாவது:சூரியக் குடும்பங்களில் உள்ள கிரகங்களில் வியாழன் கிரகம் மிகப் பெரிது. சூரியனைச் சுற்றும் போது 398.9 நாள்களுக்கு ஒரு முறை சுற்றுப் பாதையில் சூரியனுக்கு நேர் எதிரில் வியாழன் கிரகம் வருகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு இன்று (29-ந் தேதி) நடக்கவுள்ளது. இதனை நாம் பூமியில் இருந்தே எளிதாகக் காணலாம்.பொதுவாக பூமிக்கும் வியாழனுக்கு இடையே உள்ள தூரம் 92 கோடி கிலோ மீட்டர். ஆனால் சூரியனுக்கு நேர் எதிராக வியாழன் வரும்போது பூமிக்கும் வியாழனுக்கும் இடையேயுள்ள தூரம் மிகவும் குறைந்து விடும். இந்த தூரம் 92 கோடி கிலோ மீட்டரிலிருந்து இருந்து 59.3 கோடி கிலோ மீட்டராக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவை நேர் எதிரில் வருவதால் வியாழன் மீது சூரிய ஒளி முழுவதும் படுவதாலும், பூமிக்கு அது நெருங்கி வருவதாலும் வியாழன் கிரகத்தை பூமியில் இருந்து தெளிவாகப் பார்க்க முடியும். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய நேரங்களில் வியாழன் கிரகம் வெளிச்சமாகக் காணப்படும். இந்த நிகழ்வு ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் என்றாலும் நம்மால் மூன்று நாள்களும் தெளிவாக வியாழன் கிரகத்தை பார்க்கலாம். இதனை நேரடியாகவும், டெலஸ்கோப் வழியாகவும் பார்க்கலாம். வானம் தெளிவாக இருந்தால் 29 முதல் 31-ந் தேதி வரை இரவு 7 மணியில் வியாழன் கிரகத்தைப் பார்க்கலாம். பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் பிர்லா கோளரங்க நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதே போன்றொரு நிகழ்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி நடந்தது. அடுத்ததாக 2012-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதியும் மீண்டும் இந்த நிகழ்வு நடக்கும் என்றார் அவர்.

வெள்ளி, 28 அக்டோபர், 2011

தீக்குச்சிகளால் உருப்பெற்ற தாசுமகால் (படங்கள் இணைப்பு)

தீக்குச்சிகளால் உருப்பெற்ற தாஜ்மஹால் (படங்கள் இணைப்பு)

காதல் சின்னமான தாஜ்மஹாலை அறியாதவர்கள் எவருமில்லை. அத்தகைய சின்னம் பல்வேறுபட்ட ரீதியில் நமக்கு நினைவில் நிற்கிறது.
பரிசுப் பொருட்களாக, அலங்காரப் பொருட்களாக என பல விதத்தில் தாஜ்மஹால் நம்மிடையே வலம் வருகிறது.
உலக அதிசயமான தாஜ்மஹாலை நிர்மாணிப்பதற்கு 20,000 தொழிலாளர்களும் 1000 யானைகளும் சேர்ந்து 22 வருடகாலத்தில் கட்டி முடித்தனர்.
இத்தகைய தாஜ்மஹால் அமைப்பை ஒத்த உருவம் ஒன்றை கலைஞர் ஒருவர் தீக்குச்சிகளால் அமைத்துள்ளார்.
வட இந்தியாவில் 22வயதுடைய ஷேக் சலிம்பாய் என்ற கலைஞரே இந்த தீக்குச்சிகளால் ஆன தாஜ்மஹாலை உருவாக்கியுள்ளார்.
இவ் உருவை அமைப்பதற்கு அவருக்கு ஒரு வருடமும் 19நாட்களும் எடுத்தன. இத் தாஜ்மஹாலை உருவாக்குவதற்கு 75000 தீக்குச்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தீக்குச்சியால் மட்டுமன்றி தாஜ்மஹாலை உணவுப் பண்டங்களாலும் வடிவமைத்துள்ளனர்.


பாதணிகளால் உருவாக்கிய இராட்சதக் குரங்கு


பாதணிகளால் உருவாக்கிய இராட்சதக் குரங்கு (பட இணைப்பு)

பிரேஸிலில் ஆச்சரியமிக்கதான இராட்சதக் குரங்கை பாதணிகளின் மூலம் வடிவமைத்துள்ளார்கள் மாணவர்கள் பல நூற்றுக் கணக்கான பாதணிகளைக் கொண்டே இராட்சதக் குரங்கொன்றை உருவாக்கியுள்ளார்கள்.
பலரும் வியப்பளிக்கும் வகையில் அமைந்த இந்தக் குரங்கினை சாஓபாலோவில் உள்ள மாணவர்களே இந்தப் படைப்பினை உருவாக்கியுள்ளார்கள்.
2010 ஆண்டு நடைபெற இருக்கும் மாநாடு ஒன்றிற்காகவே இந்த அதிசயிக்க வைக்கும் குரங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
புலோரன்தின் ஹொப்மான் என்ற கலைஞர் இதனை வடிவமைத்துக் கொடுத்ததனால் மாணவர்கள் இதனை நிர்மானித்து முடித்தனர்.
பிரேஸிலில் பாதரட்சைகள் வணிக சின்னமாக இந்த இராட்சதக் குரங்கு கருதப்படுகின்றது.