வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை
புரட்டாசி 09, 2052 / 25.09.2021 இரு நிகழ்வுகள்
1. பொருநை நதி நாகரிகம்
இந்தியத் தொல்லியல் வரலாற்றில் ஓர் எல்லைக்கல். இந்திய வரலாற்றில் 5000 ஆண்டு கால நாகரிகத்தின் தொடர்ச்சியைக் காட்டிய காலக் கண்ணாடி. அண்மையில் வெளிவந்த பொருநை நதி நாகரிகம் குறித்தும் , அதன் வரலாற்று இன்றியமையாமை குறித்தும் தமிழகத் தொல்லியல் துறையின் கல்வி – ஆய்வு அறிவுரைஞர் பேராசிரியர் கா. இராசன் அவர்கள் விரிவாக விளக்க இருக்கிறார். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள் .
நாள்: செட்டம்பர் 25, சனிக்கிழமை காலை 10:00 மத்திய நேரம்
செட்டம்பர் 25, சனிக்கிழமை காலை 11:00 கிழக்கு நேரம்
செட்டம்பர் 25, சனிக்கிழமை காலை 8:00 மேற்கு நேரம்
செட்டம்பர் 25, சனிக்கிழமை மாலை 8:30 இந்திய நேரம்
இணைப்பு: https://www.tinyurl.com/fetna2020ik
கூட்ட எண்: 954 1812 2755
2. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தொன்மை – தொடக்கம் –தொடர்ச்சி அணி
இலக்கியக் கூட்டம் : எழுத்தாளர் திரு.அழகிய பெரியவன்
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) தொடர் இலக்கியக் கூட்டங்களை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு படைப்பாளியின் புத்தகங்களை வாசித்து வருகிறோம். படைப்பாளிகளும், வாசகர்களும் என்ற தொடர் கூட்டங்களில் எழுத்தாளர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற உள்ளது.
இம் மாதம் எழுத்தாளர் திரு.அழகிய பெரியவன் அவர்களின் படைப்புகளை வாசித்து வருகிறோம். வாசிப்பின் தொடர்ச்சியாக அவருடன் கலந்துரையாடலும் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. தவிர்க்க இயலாத காரணங்களால் சென்ற வாரம் நடக்க இருந்த இந்த நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இந்த வாரம் சனிக்கிழமை செட்டம்பர் 25 ஆம் நாளாகிய இன்று நடக்க உள்ளது.
திரு.அழகிய பெரியவன், சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முதன்மையான படைப்பாளி. இவரது படைப்புகள் மிகவும் நுட்பமாக உழைக்கும் மக்களின் வாழ்வியலை முன்வைக்கின்றன. இவரது “தகப்பன் கொடி” புதினம் தமிழின் முதன்மையான புதினங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. சிறுகதைகள், குறு ம் புதினங்கள் , கவிதைகள் எனத் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் திரு. அழகிய பெரியவன் பெற்றுள்ளார்.
திரு.அழகிய பெரியவன் அவர்களின் நூல்கள் அமேசான் கிண்டில் புத்தகங்களாக கிடைக்கின்றன – https://tinyurl.com/AzhagiyaPeriyavan
அவருடன் நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்க உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
அமெரிக்க நேரம்: சனிக்கிழமை, செட்டம்பர் 25, இரவு 8:30மணி EDT (கிழக்கு நேரம்)
இந்திய நேரம்: ஞாயிற்றுக்கிழமை, செட்டம்பர் 26, காலை 6மணி இந்திய நேரம்
அணுக்க(சூம்) நேரலை – Zoom Live
https://tinyurl.com/FeTNA2020ik
கூட்ட எண் / Meeting ID : 954 1812 2755
அனைவரும் தவறாமல் இந்த இரு நிகழ்வுகளிலும் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்