சனி, 15 ஜனவரி, 2022

திருவள்ளுவர் விருதுக்கு மீனாட்சி சுந்தரம்; காமராசர் விருது குமரி அனந்தனுக்கு: முதல்வர் தாலின் அறிவிப்பு

 

அகரமுதல





திருவள்ளுவர் விருதுக்கு மீனாட்சி சுந்தரம்; 

காமராசர் விருது குமரி அனந்தனுக்கு: முதல்வர் தாலின் அறிவிப்பு

 சென்னை: 2022ஆம் ஆண்டிற்கான ஐயன் திருவள்ளுவர் விருது பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கக் காரணமாக இருந்த மீனாட்சி சுந்தரத்திற்கும், பழம்பெரும் காங்கிரசு

 தலைவர் குமரி அனந்தனுக்குப் பெருந்தலைவர் காமராசர் விருதும் வழங்கப்படுவதாக முதல்வர் தாலின் தெரிவித்துள்ளார்.

 தமிழக அரசால் ஒவ்வோர் ஆண்டும், திருக்குறள் நெறி பரப்பியும் திருவள்ளுவர் சிலை நிறுவுதல் முதலான திருக்குறள் தொடர்பான தொண்டுபுரிந்தும் வருபவர்களுக்கு ஐயன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவரும், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவரும், 2009ஆம் ஆண்டு மேனாள் தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் பெங்களுரில் திருவள்ளுவர் சிலையைத் திறப்பதற்குக் காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராகவும், கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவி, திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றியவரும், பெங்களுரு இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், பெங்களுரில் வசிக்கும் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த மு. மீனாட்சி சுந்தரம் என்னும் முத்துச்செல்வன் (வயது 78) அவர்களுக்குத் தமிழக அரசு, 2022ஆம் ஆண்டிற்கான ஐயன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.

 அதேபோன்று, பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்விகளைக் கேட்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவரும், தமிழ் இலக்கியங்களில் புலமையும் பேச்சாற்றலும் மிக்கவராகவும், தமிழ் இலக்கியவாதியாகவும் சிறந்த நூல்களைப் படைத்தவரும் பன்முகத் திறன் கொண்டவருமான  சொல்லின் செல்வர் முனைவர் குமரி அனந்தன்(வயது 88) அவர்களுக்குத் தமிழக அரசு, 2021ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராசர் விருதினை வழங்குகிறது.

 விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக உரூபாய் ஓர் இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் பெறுவார்கள். இவ்விருதுகள் முதல்வர் மு.க.தாலினால் வழங்கப்படவுள்ளன என்று அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


இலக்கிய அமுதம், குவிகம் – இணைய அளவளாவல்

 அகரமுதல


தை 03, 2053

ஞாயிறு மாலை 6.30

16.01.2022 

இலக்கிய அமுதம் + குவிகம்

வள்ளுவர் விள்ளாத வள்ளுவம்

வள்ளுவம் விள்ளாத வள்ளுவர்

சிறப்புரை : மருத்துவர் அ.சிவசுப்பிரமணியன்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய
             நுழைவு எண் 619 157 9931

கடவுச் சொல் /  Passcode:  kuvikam123     

அல்லது
 
https://bit.ly/3wgJCib இணைப்பு
நம் வலை youtube இணைப்பு
https://bit.ly/3v2Lb38

         




133 மணிநேரத் திருக்குறள் தொடரரங்கம் + 3ஆம் நாள் நிகழ்வு

 அகரமுதல


மூன்றாம் நாள் 15.01.2022
அமர்வுகள் – நிகழ்ச்சி நிரல்

9.30 குறள் வாழ்த்து
நல்லாசிரியர் இரத்னா.தே. தமயந்தி அவர்கள்

வரவேற்புரை
திருக்குறள் முனைவர் ஔவை தாமரை

தலைமையுரை

செம்மொழிக் கலைஞர் விருதாளர்
அருள்திரு திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு ஐயா அவர்கள்

சிறப்புரை

1)தமிழாறு சாலமன் தங்கதுரை அவர்கள்
கல்வியாளர்
சத்தியம் ஆதாரக் கல்வி அறக்கட்டளை
பொன்னேரி

2)பேராசிரியர் வெ.அரங்கராசன் அவர்கள்

நன்றியுரை
முனைவர் மா.பாப்பா
உதவிப் பேராசிரியர், பாத்திமா கல்லூரி மதுரை

அமர்வு 17

தலைமை
முனைவர் சௌ.கீதா
முதல்வர்
அ.ம.க.கல்லூரி, காரிமங்கலம்

கட்டுரையாளர்கள்

1) செல்வி நா.சையதலி பாத்திமா

2)முனைவர் து.புட்பவல்லி, சீ.இரா. மகளிர் கல்லூரி
திருச்சி

சிறப்பு விருந்தினர்

இலக்குவனார் திருவள்ளுவனார்
தலைவர்
தமிழ்க் காப்புக் கழகம்

அமர்வு 18

தலைமை

முனைவர் செ.அசிதா
துறைத்தலைவர்
அன்னை வேளாங்கன்னி மகளிர் கல்லூரி
கன்னியாகுமரி

கட்டுரையாளர்கள்

1)செல்வி.க.தீப்புதிகா
பாத்திமா கல்லூரி, மதுரை

2) செல்வி இரா.மலர்க்கொடி
சிரீ சாரதா மகளிர் கல்லூரி, திருநெல்வேலி

சிறப்பு விருந்தினர்

ந.உ. துரை பாண்டியன்
இர.வே.சு. கல்வி அறக்கட்டளை, கோவை

அமர்வு 19

தலைமை

முனைவர் க.புட்பலதா
உதவிப் பேராசிரியர்
அ.ம.க.கல்லூரி

கட்டுரையாளர்கள்

1)செல்வி.ந.ஆண்டாள்
பாத்திமா கல்லூரி மதுரை

2)மா.கோவிந்தி
அ‌.ம.க.கல்லூரி,
கிருட்டிணகிரி

சிறப்பு விருந்தினர்

முனைவர் சுந்தர முருகன்
சாகித்ய அகாதமி பொதுக்குழு உறுப்பினர்
புதுதில்லி

அமர்வு 20

தலைமை

முனைவர் பேச்சியம்மாள்
உதவிப் பேராசிரியர்
சிரீ சாரதா மகளிர் கல்லூரி திருநெல்வேலி

கட்டுரையாளர்கள்

1) முனைவர் க. உமாதேவி
விரிவுரையாளர்
அ.ம.க.கல்லூரி
கிருட்டிணகிரி

2) கோ.சீனிவாசன்
விரிவுரையாளர்
அ.ம.க.கல்லூரி
காரிமங்கலம்

சிறப்பு விருந்தினர்
முனைவர் நெ.நிர்மலா
துறைத்
தலைவர்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அ.க.கல்லூரி , திருத்தணி

அமர்வு 21

தலைமை

முனைவர் இராமலட்சுமி

 





செவ்வாய், 11 ஜனவரி, 2022

133 மணிநேரத் திருக்குறள் தொடர் இணைய ஆய்வரங்கம்

 அகரமுதல


திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம்

அனைத்திந்திய புத்தக ஆவணம், புதுச்சேரி

இணைந்து வழங்கும்

வள்ளுவம் போற்றுவோம்

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி

133 மணிநேர இணைய வழி

உலக அருந்திறல் பன்னாட்டுத்

திருக்குறள் ஆய்வரங்கம்

தொடக்க விழா

திருவள்ளுவர் ஆண்டு 2052 மாா்கழி 29

13.01.2022 வியாழன்

காலை 9.30 முதல் தொடர்ந்து 133 மணிநேரம்

133 கட்டுரையாளர்களின் அருந்திறல் ஆய்வரங்கம் நடைபெறும்.

குத்துவிளக்கேற்றித் தலைமையுரை

அருள்மிகு திருக்குறள் தூயர் பேராசிரியர்

முனைவர் கு.மோகனராசு

தொடக்கச் சிறப்புரை

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர்

பொறி. எசு.எசு.சிவசங்கர் அவர்கள்,

திருவாட்டி சந்திரிகா சுப்பிரமணியன், ஆத்திரேலியா

சிறப்பு விருந்தினர்: இலக்குவனார் திருவள்ளுவன்

பிறர் அழைப்பிதழில் உள்ளபடி

தொடக்கவிழா நிறைவடைந்ததும்

முனைவர் குமரிச்செழியன்

விழா நோக்குரை ஆற்ற, கருத்தரங்கம் தொடரும்.

அன்புடன்

முனைவர் தாமரை

நிறுவனர்-தலைவர்

திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம்


திங்கள், 10 ஜனவரி, 2022

மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

 அகரமுதல








மகாத்மா காந்தியின்   75-ஆவது நினைவு நாள்: கட்டுரைப்போட்டி

அன்புள்ள
தம்பி தங்கைகளுக்கு,
வணக்கம்.

“எனக்குள் பொங்கும் அகிம்சை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்பி, 147 குட்டிக்கதைகள் உள்ள 21 நூல்கள் அடங்கிய பெட்டியை அன்பளிப்பாகப் பெறுங்கள்!


விளக்கம் இதோ:
நம் நாட்டு விடுதலை மூலம் உலகிற்கே அகிம்சைப் பாடம் நடத்திய அண்ணல் காந்தியை நம்மில் ஊறியிருந்த வன்முறை உணர்வுகளுக்கு நாமே பலியாக்கினோம். எனினும் அகிம்சைக்கு மேலும் வலுவூட்டுவதாகவே அது அமைந்தது அல்லவா?

அகிம்சைக்கு மேலும் வலுவூட்ட அகிலத்தையே ஆன்ம சக்தியால் நிரப்ப வேண்டிய அகிம்சைப் பணியாளர்களாய் நாம் ஒவ்வொருவரும் இன்று பரிணமிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

‘உங்களுக்குள் பொங்கித் ததும்பும் அகிம்சைச் சக்தியின் மூலம் உங்களுடைய அன்றாடப் பிரச்சினைகளை சுயக்கட்டுப்பாடு, சுயச்சார்புடன் எவ்வாறு அமைதியாகத் தீர்த்துக் கொள்கிறீர்கள்’ என்பதை மையக்கருத்தாகக் கொண்டு 500 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி, வரும் சனவரி 20-ந்தேதிக்குள் எமக்குக் கிடைக்குமாறு  அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்புங்கள்.

வயது வரம்பு: 10 முதல் 25 வயது வரை உள்ள  மாணவர் அல்லது மாணவர் அல்லாதோர்.

கட்டுரையாளர் தமது பெயர், வயது, படிப்பு அல்லது பணி, அஞ்சல் முகவரி, பேசி எண் அல்லது மின்னஞ்சல் விவரங்களைத் தெளிவாகத் தரவேண்டும்.


சிறந்த நூறு கட்டுரையாளர்களுக்குப் பரிசு நூல்ப்பெட்டி காந்தி நினைவு தினமான சனவரி 30க்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்கப்படும்.


கட்டுரை அனுப்பவேண்டிய முகவரி: செயலர், காந்தி அமைதி நிறுவனம், 332, அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை- 600 018. மின்னஞ்சல்: kulandhaisamy.gpf@gmail.com

 

தரவு –  முதுவை இதாயத்து