08 திசம்பர் 2013
இந்த
அரைநூற்றாண்டு காலமாக, மாறி மாறி அதிகாரப் பீடத்தில்
ஏறிய சிங்கள இனவாதக் கட்சிகள் ஈழத் தமிழினத்தின் துயர் துடைக்க
இதுவரை சாதித்தது என்ன? தமிழர்களின் முறையான
கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்பட்டதா? தீப்பற்றி எரியும் தமிழரின் தேசியச் சிக்கலுக்கு
தீர்வுகாணப்பட்டதா? ஒன்றுமே நடக்கவில்லை.
மாறாக, இந்த நீண்ட காலவிரிப்பில், தமிழர்கள்
மீது, துன்பத்தின் மேல் துன்பமாக, தாங்கொணாத்
துயரப் பளு மட்டுமே சுமத்தப்பட்டு வந்தது.
தமிழரின் நிலத்தைக் கவர்ந்து, தமிழரின் மொழியைப் புறக்கணித்து, தமிழரின்
கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை மறுத்து, தமிழரின்
தேசிய வளங்களை…
+0+0+0+
08 திசம்பர் 2013
சடுகுடு
ஆட்டம் ஆடு – நம் உணர்வின் உயிர்ப்பினைத் தேடு – நீ சடுகுடு
என்றே பாடு – நம் மண்ணை
மீட்டிடப் பாடு – 2 (சடு) சடுகுடு
பாடி ஆடி – நீ சிலிர்த்திடும் வேங்கையாய்ச் சீறு படபடவென்றே பாடு – நம் பகையினைக் களத்தினில் வீழ்த்து –
2 (சடு)
எட்டிச்சென்றே பாடு – நீ
எதிர்ப்படும் எவரையும் தீண்டு
தொட்டுச் சென்றே விரட்டு – தன்
தோல்வியை அவரிடம்…
+0+0+0+
08 திசம்பர் 2013
கனலுகின்ற
உள்ளக் கனவெல்லாம் நனவாகிப் புனலுறுபூம் பொய்கையெனப் பொலியுநாள்
எந்நாளோ? அந்தமிழாம் நந்தாயை அரியணையின்
மேலிருத்தி வெந்திறல்சேர் பெருமையுடன் விளங்குநாள் எந்நாளோ? கல்விக்
கழகமெலாங் கவின்றமிழே கமழ்வித்துப் பல்கலையும் நந்தமிழர்
பயிலுநாள் எந்நாளோ? திருநெறியாஞ் செந்நெறியின்
திறனெல்லாம் உலகறிந்தே அருமையுணர்ந் ததன்வழிவாழ்ந்
தகமகிழ்தல் எந்நாளோ? அடிமைவிலங்
கொடித்தே அரியணையில் நந்தமிழன் முடிபுனைந்து
கொடியுயர்த்தி முழங்குநாள் எந்நாளோ? கொத்தடிமை யாங்கறையைக் குருதிகொண்டும் நாங்கழுவி முத்தமிழின்
சீர்மை முழங்குநாள் எந்நாளோ? நாடும்இனமும்
நன்மொழியும் நந்தமிழர் பீடும்
பெருமையுமாய்ப் பிறங்குவித்தல் எந்நாளோ? உழைத்தும்
பயன்காணா(து) உலைவுறு நெஞ்சினரெல்லாம்…
+0+0+0+
08 திசம்பர் 2013
- கலைமாமணி
கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் அன்னைத் தமிழில் அனைத்தும் இருக்கையில் அயல்மொழி எதற்கடா? – தமிழா
அயல்மொழி எதற்கடா? முன்னைய மொழியாம் மூவா மொழியெனும் முத்தமிழ் நமதடா! – அது எத்துணைச்
சிறந்ததடா! வீட்டிற்கொரு மொழி நாட்டிற்கொரு மொழி ஆட்சிக்
கொரு மொழியா? -வழி பாட்டுக் கொரு மொழியா? பாட்டிற்கொரு
மொழி படிப்புக்கொரு மொழி பலமொழி எதற்கடா? – தமிழா பலமொழி
எதற்கடா? தமிழில் பேசு தமிழில் எழுது
தமிழில் பாட்டிசைப்பாய் – இன்பத் தமிழில் வழிபடுவாய்!
தமிழில் கல்வியைக் கற்பதே…
+0+0+0+
08 திசம்பர் 2013
உப்பினிலே
உப்பென்னும் சாரம் அற்றால் உலர் மண்ணின் பயன்கூட அதனுக்கில்லை குப்பயைிலே கொட்டி அதை
மிதித்துச்செல்வார்! குணம்கெட்ட பொருளுக்கு மதிப்பும் உண்டோ? தமிழன்பால்
தமிழின்றேல் அவனும் இல்லை தலைநின்றும்
இழிந்தமயிர் ஆவானன்றே! உமிழ்ந்திடுமே நாய்கூட அவன் முகத்தில். உணராமல்
தமிழ்மறந்து கிடக்கின்றானே! பிறவினத்தர் தம்மைத்தாம் காத்துக் கொள்ளப் பேதையிவன் எலும்பில்லாப் புழுவேயானான்! மறவுணர்ச்சி முழுதழிந்தான்; மானங் கெட்டான்; வன்பகையின்
கால்கழுவிக் குடிக்கின்றானே! நெருப்பிருந்தால் சிறுபொறியும் மலைத்தீ யாகும் நீறாகிப்…
+0+0+0+
08 திசம்பர் 2013
கேவலம் மரணத்திடம் ஏன் அச்சம்
கொள்ள வேண்டும்? மரணமே! திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே. என்னை எதிர்கொண்டு நேரடியாகப்
பரிட்சித்துப் பார். இவை உடல்நலம்
குன்றிய நிலையில் நியூயார்க்கு மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் தலைமையாளர்
திரு வாசுபாய் அவர்கள் எழுதிய கவிதை வரிகள். துன்பங்களும்
துயரங்களுமே வாழ்க்கை என்றிருந்த நம் எழுச்சிக் கனல் பாரதியும்
மரணப் படுக்கையில் இருந்த போது, “காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்! . . .
+0+0+0+
…
08 திசம்பர் 2013
முதல் இதழ் (01.11.2044/17.11.2013)
தொடர்ச்சி தமிழ்வழிப் பள்ளிகளின் வளர்ச்சியும்
தளர்ச்சியும் கல்வியாளர் வெற்றிச் செழியன், செயலர், தமிழ்வழிக்
கல்விக்கழகம். தமிழ்வழிக் கல்வியை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டும்
பள்ளிகள் நம் தமிழ் வழிப்பள்ளிகளும் தாய்த் தமிழ் பள்ளிகளும். அப்பள்ளிகளின் வளர்ச்சியைப் பற்றியும் அவற்றின்
தளர்வு நிலைகளைப் பற்றியும் காண்போம்.
தொடக்கக் காலத் தமிழ்வழிப்பள்ளிகள் தொடக்க காலப் பள்ளிகள் நம் தாய்மொழியான தமிழில்தான் அமைந்தன என்றறிவோம். ஆங்கில
மாயையும் அடிமை மனநிலையும், கல்வியை
வணிகப் பொருளாய் மாற்றிய இழிவும் ஆங்கிலப் பள்ளிகளைத் தெருவெங்கும்
தொடங்கச் செய்தன….
+0+0+0+
08 திசம்பர் 2013
– பேராசிரியர்
முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ங. அவர் பிரிந்தார் என்று கூறுவார் இலரே! தலைவி : தோழி”! “அம்ம!” “ஊரிலுள்ள பெண்கள் என்ன சொல்லுகின்றார்கள் தெரியுமா?” “அறிவேன்
அம்ம! ஆடவர்க்குத் தொழில்தானே உயிர்; ஏதோ
அலுவலாகத் தலைவர் சென்றால், தலைவி சில நாட்களுக்கு அவர் பிரிவைக் கருதி வருந்தாது பொறுத்திருத்தல்
வேண்டாமா? இப்படியா வருந்துவது?” என்கின்றனர்.” “தோழி!
அவர்கள் இரக்கமற்றவர்கள். உண்மை நிலை உணராது
கூறுபவர்கள். ‘ஒரு பெண்ணை வீட்டில் வருந்த விட்டு விட்டு, அவர் இப்படிச் செல்லலாமா?’…
+0+0+0+
08 திசம்பர் 2013
(முந்தைய
இதழ்த் தொடர்ச்சி) ஆ. அரண் சென்ற பகுதியில் “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும்
நாட்டிற்குறுப்பு’’ என்று நாட்டின் சிறப்புக்கு அரணும் இன்றியமையாதது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆகவே, இப் பகுதியில் ‘அரண்’ என்பதுபற்றி
ஆராய்வோம். நாடுகள் தனித்தனியாக இருக்கும் வரையில், தனது அரசே
பேரரசாக விளங்கவேண்டும் என்ற எண்ணம் நீங்கும் வரையில், நாடு நல்ல
அரண் பெற்றிருக்க வேண்டியதுதான். ‘அரண்’ என்பது பாதுகாவல் என்னும் பொருளைத்தரும். பாதுகாவலைக்
கொடுக்கக் கூடியன ‘அரண்’ எனப்படுகின்றன.
திருக்குறள் இயற்றப்பட்ட காலத்தில் அரணாய் இருந்தவை இக்காலத்திற்கு…
+0+0+0+
08 திசம்பர் 2013
குன்றத்தூர்
பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் கடந்த 30.11.2013 காரிக்கிழமையன்று
பள்ளி குழந்தைகளுக்கான சித்த மருத்துவ ஆய்வு நடந்தது. சித்த
மருத்துவர்கள் – மரு. மகேந்திரன் (சித்த
மருத்துவ முதுவர்) மரு. தாமோதரன் (சித்த மருத்துவ
முதுவர்) மரு. செயப்பிரதாப் (சித்த மருத்துவ இளவர்)
வந்திருந்து மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு மருந்ததுகளை வழங்கினர். குன்றத்தூர் சீபா மருத்துவ ஆய்வகத்தினர் தேவையானவர்களுக்குக்
குருதி, சருக்கரை, கொழுப்பு… போன்ற
ஆய்வுகளை மேற்கொண்டு உதவினர். மருத்துவ ஆய்வில் 150 பள்ளிக்
குழந்தைகளும் 200க்கும் மேற்பட்ட பொது மக்களும்
பங்கேற்றுப்…
+0+0+0+
காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்
கழிமுக மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் “இந்திய அரசே!
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை! அரசமைப்புச்
சட்டவிதி 355-இன் கீழ் கருநாடகத்திடமிருந்து
தமிழகத்திற்குரிய 26 ஆ.மி.க (டி.எம்.சி) பாக்கித் தண்ணீரை திறந்துவிட கட்டளை இடு!” “உழவர்களின்
பயிர்க் காப்பீடுத் திட்டத்தை தனியாருக்குத் தாரை
வார்க்கும் நடவடிக்கையைக் கைவிடு!” “இந்திய அரசே! தமிழர்களை வஞ்சிக்காதே!” “தமிழக அரசே!
கருநாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய எஞ்சிய
தண்ணீரைக் கேட்டுப் பெற உறுதியான நடவடிக்கை…
+0+0+0+
08 திசம்பர் 2013
எழுத்துப்படலம்
- பேராசிரியர்
முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழின் தொடர்ச்சி) நூன்மரபு 3.
அவற்றுள் அ, இ,உ,
எ, ஒ என்னும் அப்பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப 4. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ
ஓ, ஔ என்னும் அப்பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப
பன்னிரண்டு உயிர்களையும் குற்றெழுத்து நெட்டெழுத்து
என இருவகைப்படுத்தினர். குற்றெழுத்தை ஒலிப்பதற்கு ஒரு மாத்திரையும்…
+0+0+0+
08 திசம்பர் 2013
திருநெல்வேலி: “ஈரோட்டில்
பள்ளி இறுதியாண்டில் படிக்கும் மாணவியர், மதுக்
கடையில் மது அருந்திய செய்தி, தமிழகத்தின் எதிர்காலத்தை
நினைத்து கவலையடையச் செய்திருக்கிறது’ எனக், கவலை
தெரிவித்திருக்கிறார், ம.தி.மு.க.,வின் பொதுச்
செயலர் வைகோ. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை:
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்
தலங்கள் அருகில், த.மா.வா.க.(‘டாசுமாக்’) மதுபானக்
கடைகள் இயங்குகின்றன. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி
உரூபாய் வருமானத்திற்காகத் தமிழக அரசு, பண்பாட்டைக்
குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம்
ஒழுங்கு சீர்குலைவுக்கு, மது காரணமாக…
+0+0+0+
08 திசம்பர் 2013
கருத்தூன்றிப் பயிலுக! கவனமாக
எழுதுக! சிறப்பாகத் தேர்ச்சி பெறுக! வாழ்வில்
உயர்க! என மாணாக்கர்களை ‘அகரமுதல’ வாழ்த்துகிறது!
+ 2 தேர்வு அட்டவணை
தேர்வு நேரம்: காலை 10.00 மணி - நண்பகல் 1.15 மணி நாள் பாடம் மார்ச்சு 1 மொழித்தாள் 1 மார்ச்சு 4
மொழித்தாள் 2 மார்ச்சு 6
ஆங்கிலம் 1 மார்ச்சு 7
ஆங்கிலம் 2 மார்ச்சு 11
இயற்பியல், பொருளியல் மார்ச்சு 14
கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு…
+0+0+0+
08 திசம்பர் 2013
தமிழருக்கே உரிய சிதம்பரம்
நடராசர் கோயிலை அரசு பணியாட்சியின்(நிருவாகத்தின்)
கீழ்க் கொண்டு வந்து பணியாள்வதை எதிர்த்து உச்ச
நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தமிழக அரசு மூத்த வழக்குரைஞரை நியமித்து, முனைப்புடன்
வாதாட வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர்
கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில், “சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு
நியமித்த அதிகாரிபணியாண்மைபுரிய உயர் நீதிமன்றம் அளித்த
உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்துள்ளனர். இந்த வழக்கில், தமிழக அரசு
சார்பில் வாதாடி…
+0+0+0+
இந்த அரைநூற்றாண்டு காலமாக, மாறி மாறி
அதிகாரப் பீடத்தில் ஏறிய சிங்கள இனவாதக்
கட்சிகள் ஈழத் தமிழினத்தின் துயர் துடைக்க இதுவரை சாதித்தது என்ன? தமிழர்களின் முறையான கோரிக்கை
எதுவும் நிறைவேற்றப்பட்டதா? தீப்பற்றி எரியும்
தமிழரின் தேசியச் சிக்கலுக்கு தீர்வுகாணப்பட்டதா? ஒன்றுமே நடக்கவில்லை. மாறாக, இந்த நீண்ட
காலவிரிப்பில், தமிழர்கள் மீது, துன்பத்தின்
மேல் துன்பமாக, தாங்கொணாத் துயரப் பளு மட்டுமே
சுமத்தப்பட்டு வந்தது. தமிழரின் நிலத்தைக் கவர்ந்து, தமிழரின்
மொழியைப் புறக்கணித்து, தமிழரின் கல்வி, வேலைவாய்ப்பு
உரிமைகளை மறுத்து, தமிழரின் தேசிய வளங்களை…
+0+0+0+
கோவை : கேரள மாநிலம், அட்டப்பாடியில், பல
தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் நிலம் முதலான சொத்துக்களைக்
கவர்ந்து, ஏதிலிகளாக்கி வெளியேற்றும் முயற்சியில், கேரள மாநில
அரசு ஈடுபட்டிருப்பதாகக், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு
மாவட்டத்தின் வடகிழக்கில், மன்னார்க்காடு வட்டத்தில்
உள்ளது, அட்டப்பாடி. மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்ந்த
வனம்சார்ந்த இப்பகுதி சுற்றுலா இடமாகவும்
விளங்குகிறது. கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அட்டப்பாடியில்தான்
ஆதிவாசிகள் மிகுதியாக வசிக்கின்றனர்; இதன் எல்லை, ஏறத்தாழ 750 சதுரஅயிரைக்கோல்(கி.மீட்டர்).
இங்கு இருளர், முடுகா, குரும்பா இனத்தவர் குறிப்பிட்ட…
+0+0+0+
தென் ஆப்பிரிக்கக் கருப்பர் இன மக்களின் அடிமைத்தளையை உடைத்தெறிந்த தலைவர் நெல்சன்
மண்டேலா மறைந்தார். உலக மக்கள் பலரின் கண்ணீர் அஞ்சலிகளிடையே
உலகத்தலைவர்களின் போலிப்புகழாரங்களும் சூட்டப்பட்டன. இன விடுதலைக்காகப்
பாடுபட்ட தலைவரை தேசிய இனங்களை ஒடுக்கும் தலைவர்களும் இன வாழ்விற்காக
வாழ்ந்தவரை இனப்படு கொலைபுரிந்தவர்களும் அதற்குத் துணை நின்றவர்களும்
நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவரை வீட்டுமக்களுக்காக மட்டுமே வாழும்
தலைவர்களும் அறவழியில் இருந்து மறவழிக்கு மாறிய ஆயுதப்புரட்சியாளரை, புரட்சிக்கு
எதிரானவர்களும் வாழ்த்துப்பாக்கள் சூடி அஞ்சலி
செலுத்தினர். மண்டேலாவின் இயற்பெயர் உரோலிலாலா மண்டேலா(Rolihlahla
Mandela) 1918 சூலை…
+0+0+0+
மண்டேலாவைப்
போற்றுபவர்களே! தமிழீழத்தையும் போற்றுங்கள்!
இதழுரை
+0+0+0+
(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.3. மகப்பேறு
குழந்தைப் பிறப்பு வரவேற்கப்பட்டது. திருமணத்தின் இயல்பான விளைவு குழந்தைப்
பிறப்பேயாகும். அவர்கள் உடற்கூற்று அறிவியலை நன்கு அறிந்திருந்தமையால் உடல் உடலறவு காலத்தை நன்கு கண்டறிந்ததுடன்
குழந்தை பிறப்பையும் தம் கட்டுபாட்டில் கொண்டு இருந்தனர். அவர்கள் மிகுதியான
குழந்தைகள் பெறுவதை வரவேற்றனர் எனத் தெரிகிறது (பொருள் 187). குழந்தைகள்
மகிழ்ச்சிக்கான வாயிலாகக் கருதப்பட்டனரே யன்றி
சுமையாகக் கருதப்படவில்லை. கணவருக்கும், மனைவிக்கும் எப்பொழுதேனும் நேரும் ஊடலை
தீர்ப்பதற்கு அவர்கள் முதன்மை பங்கு வகித்தனர். (பொருள். 147) 3.4. கல்வி…
விசயகாந்து எடுத்த முயற்சி பாராட்டிற்குரியதே! ஆனால், அரசியல் கணிப்பின்றிக் காங்கிரசிற்கு
ஆதரவாகத்தில்லியில் அவர் பேசியதுதான் தவறு. காங்கிரசிற்கு
எதிரான அலை வீசும் தில்லியில் காங்கிரசு ஒன்றும் திருத்த முடியாத கட்சி அல்ல என்று சொல்லும்
துணிவு எப்படி வந்தது? காங்கிரசைப் பற்றிய தவறான கணிப்பா? தன்னைப்பற்றிய உயர்வான மதிப்பா? காங்கிரசுடன் சேரத்துடிக்கும் ஒருவருக்குக் காங்கிரசை
வீழ்த்த நினைப்போர் எங்ஙனம் வாக்களிப்பர்? காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாடுடன்
பரப்புரை மேற்கொண்டிருந்தால்
அவர் கட்சிக்கான வாக்கு எண்ணிக்கை மிகுதியாய் இருந்திருக்கும். இனியாவது அவர்
திருந்தட்டும்! தமிழ், தமிழர் நலன்…
+0+0+0+
தொகுநர்: சிவ அன்பு
& இ.பு.ஞானப்பிரகாசன்
(முந்தைய இதழின் தொடர்ச்சி) தமிழை
அழிப்பதற்கான முயற்சியில் இம்மேதை இறங்கியுள்ளார். அனைத்துத் தமிழரும் இவரின் கருத்தை
வன்மையாகக் கண்டிக்க வேண்டும்! சோமன்
பாபு
(Soman Babu) எப்படி மொழி, பண்பாடு, நாகரிகம்
ஆகியன நமது அடையாளம் ஆகின்றதோ… அதே போல நமது தமிழ் எழுத்தும் நமது
அடையாளமே. இன்று நமது எழுத்தை விட்டுக்
கொடுத்தோமானால் நாளை??? சிவனேசுவரி
தியாகராசன் (Shivaneswari Thiyagarajan) இன்று உன் எழுத்தை
மாற்று என்பர்; நாளை உன் மொழியை
மாற்று என்பர்; நாளை…
+0+0+0+
சட்டமன்றத் தேர்தல்
முடிவுகள் 2013 (
அடைப்பிற்குள்
கடந்த தேர்தல் முடிவுகள் குறிக்கப் பெற்றுள்ளன.) மாநிலம் மொத்தத் தொகுதிகள் பா.ச.க. காங்.
ஏழை மக்கள் கட்சி பிற தில்லி 70 31(23) 8(43) 28(-) 3(4)
இராசசுதான் 200 162 21
16(3)-
மா; 0(23)
மத்தியப்பிரதேசம் 230
165(143) 58(71) 7(7) –
ப;
0(7)
சத்தீசுகர் 90
49(50) 39(38) 2(2)
மா
–
மார்க்சியப்
பொதுவுடைமை ப - பகுசன்
…
+0+0+0+
சிங்கப்பூரில் 30
ஆண்டுகளுக்குப்
பின்னர் ஏற்பட்ட கலவரம்! இன்று (08.12.13)
இரவு,
பேருந்து மோதி இந்திய இளைஞர் ஒருவர்
இறந்ததாகச் செய்தி பரவி அது கலவரமாக மாறியது. சிங்கப்பூரில் சக்திவேல் குமாரவேலு
(அகவை 33)
என்பவர்,
கடந்த ஈராண்டுகளாக,
எங்கு அப்பு சூன் (Heng
Hup Soon)
என்னும்
நிறுவனத்தில்
கட்டடப்பணியாளராக வேலைபார்த்து வந்தார். இவரே அந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பேருந்து மோதி
இறந்ததாகச் செய்தித்தாள்களில்
வந்திருந்தாலும்,
அவரது
முகத்தில் காயங்கள் இருந்தன என்றும் அவர் இறப்பு குடும்பத்தினர்களுக்குத்
தெரிவிக்கப்படவில்லை என்றும் …
த.தே.பொ.க.
முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் கைது! ஆவடி இந்தியப் அரசுப் பாதுகாப்புத் துறை நிறுவனப் பணி
வாய்ப்பில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்களை எதிர்த்து
ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் தளையிடப்பட்டுள்ளனர்.
சென்னை ஆவடியில் இந்திய
அரசு பாதுகாப்புத்துறை நிறுவனம்
(OCF) செயல்பட்டுவருகிறது.
இதில் தையல்
பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புத்
தேர்வு நடைபெற்றது.
வேலை வாய்ப்பு பணித்தேர்வு எழுத இசைவளிக்கப்பட்ட 1800 பேரில் 1026 பேர் தமிழர்கள் அல்லாத, மலையாளிகள், கன்னடர்கள், மேற்குவங்கம், பீகார், மாகாராட்டிராவைச் சேர்ந்த வடஇந்தியர்கள்….
+0+0+0+
ஏற்காடு
இடைத்தேர்தலில் அதிமுக
வேட்பாளர் சரோசா 1,42,771 வாக்குகள் பெற்று
திமுக வேட்பாளரைவிட 78116 வாக்குகள்
வேறுபாட்டில்
வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் மாறன் 64, 655 வாக்குகள் பெற்றார். இது கடந்த தேர்தலில் தி.மு.க. பெற்ற வாக்கை விடச்
சற்றுக் குறைவே. வேறு
முதன்மைக் கட்சிகள்
போட்டியிடாத சூழலில் தி.மு.க. கூடுதல் வாக்குகளைப் பெறும் என எண்ணியவர்கள் ஏமாற்றத்தைத் தழுவினர்.
மூன்றாம் இடத்தில்
வாக்கு அளிக்க விரும்பாதவர்கள் எண்ணிக்கை 4,431 ஆகஇடம் பெற்றுள்ளது. இனி், ஒவ்வொரு தேர்தலிலும் இப்பிரிவிற்கான வாக்கான
எண்ணிக்கை…
+0+0+0+