சனி, 27 நவம்பர், 2010

சங்கப்பலகை : கிரந்தத்தால் தமிழுக்கு ஏற்படும் சீர்கேடுகள்

சங்கப்பலகை : 

கிரந்தத்தால் தமிழுக்கு ஏற்படும் சீர்கேடுகள்

பேரன்புசால் நண்பர்களே!
வணக்கம்.
சங்கப்பலகை நிகழ்ச்சியில் ஒருங்குறி பற்றிய உரையாடல் தொடர்ச்சியாகப் பலரும் கிரந்தம் குறித்து விளக்க வேண்டியமையால் கிரந்தத்தால் வரும் சீர்கேடுகள் குறித்து
27.11.10 சனி இரவு 10.30 மணிக்கு
மக்கள் தொலைக்காட்சியில்
தோழர் தியாகுவுடன் உரையாடுகிறேன்.
அனைவரும் காண வேண்டுகிறோம்.
மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியை பின்வரும் இணையத் தளத்தில் பார்க்கலாம்
http://goo.gl/ORRj
http://livetvchannelsfree.net/makkaltv.html
வழக்கம் போல் மீனகம் இணைய தளத்திலும் (meenagam.org) பார்க்கலாம்.

இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை

பிற்பட்டோர் நலத்துறை, மிகவும் பிற்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை முதலான துறைகள் மூலம் இப்பொழுதும் அரசு ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்துத்தான் வருகிறது. கேட்க வேண்டியதை வெளிப்படையாகக் கேட்க வேண்டும். ௨.) சிறுபான்மையர் என்ற ஒதுக்கீட்டில் கல்வி நிறுவனங்கள் தொ டங்குபவர்கள் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் எத்தனை விழுக்காட்டினரோ  அந்த அளவிற்கு மட்டுமே அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளில்
௭௫ விழுக்காட்டினர் சிறுபான்மையர் என்ற போர்வையில் இசைவு வாங்கி நடத்துபவர்களே. இந்நிலை மாறி அவர்களின்பொது இசைவிற்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை: அரசியல் கட்சிகள் பேச பயப்படுவது ஏன்? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

First Published : 27 Nov 2010 03:59:03 AM IST


சிதம்பரம், நவ. 26: சிறுபான்மையின மக்களின் வாக்கு வங்கி பாதித்துவிடும் என தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள், சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்குவது போல் ஏழை இந்து சமுதாய மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது குறித்து பேச பயப்படுகின்றன என பாரதிய ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.÷பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான தாமரை யாத்திரை குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.÷இக் குழு சிதம்பரம் நகருக்கு வெள்ளிக்கிழமை மாலை வருகை தந்தது. அப்போது வடக்குமெயின்ரோட்டில் நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது:÷இஸ்லாமிய, கிறிஸ்துவ மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல் ஏழை இந்து சமுதாயத்தில் உள்ள மாணவர்களுக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை உதவித்தொகை வழங்க வேண்டும்.÷சிறுபான்மையினருக்கு வழங்குவது போல் இந்து இளைஞர்களுக்கு குறைந்த வட்டியில் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும்.÷சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பாதித்துவிடும் என தமிழகத்தில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இப்பிரச்னையை எடுத்து பேச பயப்படுகின்றன.÷கடந்த 4 ஆண்டுகளாக இப்பிரச்னை குறித்து வாக்குவங்கியை பற்றி கவலைப்படாமல் பாஜக மட்டும்தான் போராடி வருகிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.29-ல் போராட்டம்: நிதின்கட்கரி பங்கேற்புரதயாத்திரை குழு ஜனவரி 29-ம் தேதி சென்னையில் முடிவடைகிறது. அங்கு இப்பிரச்னை குறித்து மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.÷இதில் பாஜக அகில இந்திய தலைவர் நிதின்கட்கரி பங்கேற்கிறார். இப்போராட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க இந்த யாத்திரை மூலம் வேண்டுகோள் விடுத்து வருகிறேன் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.÷நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் எம்.சீனுவாசன் வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் க.எழிலரசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சு.ஆதவன், மாநில விவசாயி அணி செயலாளர் கே.வி.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொல்காப்பிய காலத்தை விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

தொல்காப்பியர் காலக் கல்வெட்டு எதுவும் இல்லை. மேலும், செம்மொழி மத்திய நிறுவனம்தான் கோவிலூர் மடத்துடன் இணைந்து (திசம்பர் ௨௬,௨௭,௨௮,௨௦௦௯) நடத்திய தொல்காப்பியர்  கால  ஆய்வுக்  கருத்தரங்கத்தில்   தமிழண்ணல் தலைமையில் கூடிய அறிஞர் குழு தொல்காப்பியர் காலம் கி.மு.௭ ஆம்  நூற்றாண்டு என அறிவித்தது. அதிகாரிகள் மாறும் பொழுதெல்லாம் ஆய்வு முடிவை மாற்ற வேண்டும்  என இயக்குநர் பொறுப்பு எண்ணுகிறாரா? அப்படியாயின்  அந்த ஆய்வு முடிவை  ஏற்கவில்லை எனத் தெரிவிக்கட்டும்.  அல்லது முந்தைய முடிவு எதுவும் தெரியாமல் பேசுகிறாரா?தே.தொ.நு.ஆ.ப.ஆ.(National Institute of Technical Teachers' Training and ரெசெஅர்ச்) நிறுவன இயக்குநரின் கூடுதல் பொறுப்பில் அவர் தமிழார்வலராக இருப்பினும் வைப்பது தவறு என்றாகிறது. தமிழறிஞர்களின் பொறுப்பில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் விடப்பட்டால் இப்படித்தான்  நிகழும் என்று சொல்லாமல் ‌சொல்வதற்கு நன்றி. 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தொல்காப்பிய காலத்தை விஞ்ஞான அடிப்படையில் 
ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

First Published : 27 Nov 2010 01:21:25 PM IST


தஞ்சாவூர், நவ. 26:  தொல்காப்பியத்தின் காலத்தை கல்வெட்டு, செப்பேடுகளைக் கொண்டு விஞ்ஞான அடிப்படையில் ஆய்வு செய்து, அதன் காலத்துக்கு இறுதி விளக்கம் கொடுக்க வேண்டும் என்றார் சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் ச. மோகன்.தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத் துறை, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியன சார்பில் தமிழ்க் காப்பிய, நீதி இலக்கிய மொழிபெயர்ப்புகள் சிக்கல்களும், தீர்வுகளும் என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசியக் கருத்தரங்க நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:மொழிபெயர்ப்பதும், அதன் அர்த்தங்களை சுவை குன்றாமல் கொண்டு வருவதும் மிகக் கடினமான பணி என்றாலும், அவசியம் செய்ய வேண்டிய பணியாகும். தமிழகத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு மிக அரிதாக உள்ளது. சங்க இலக்கியத்தில் நம்முடைய கருத்துச் செல்வங்கள், தொழில்நுட்பங்கள், வாணிபம் ஆகியவற்றுக்கு சரியான மொழிபெயர்ப்பு தேவை.   தமிழில் கற்பு என்ற சொல்லுக்கு உண்மையான மொழிபெயர்ப்பு இதுவரை செய்யவில்லை. இதையே ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளலாம். ராமாயணத்தை படிப்பவர்களின் மனநிலையைப் பொருத்து கருத்துகளில் வித்தியாசம் காணப்படும். ஆனால், அறிவியல் தொழில்நுட்பத்தை யார் படித்தாலும் ஒரே அர்த்தம்தான். மொழியைப் படிக்கும் போது சுவையோடு படிக்க வேண்டும். அதற்கு சுவை குன்றாமல் மொழிபெயர்க்க வேண்டும்.தமிழ்ச் சங்க இலக்கியங்களை மற்ற மொழியில் மொழிபெயர்ப்பது, பிற மொழிகளிலுள்ள சிறந்த படைப்புகளை தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பது, சுவடிகளைப் பாதுகாத்து அதிலுள்ள கருத்துகளை கணினியில் பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளில் தமிழகம் மட்டுமன்றி கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள தமிழ்த் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.   தமிழ்மொழி செம்மொழித் தகுதி பெற்ற பிறகு வெளிநாடுகளில் உள்ள தமிழறிஞர்கள் மொழி வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்கள் நிறைய வெளியீடுகளை வெளியிட்டு தமிழ் மொழிக்குத் தொண்டாற்றி வருகின்றனர்.சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள 5 தினைகளின் கருப்பொருள், உரிப்பொருள்களை இன்றைய சூழலியல், சுற்றுச்சூழல் துறை கூறி வருகிறது. சங்க இலக்கியத்தில் ஆழமான கருத்துகளை, தொழில்நுட்பங்களை, செய்திகளை வெளிக் கொண்டு வர வேண்டும். தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தேவையானவற்றை செய்ய எவ்வளவு நிதியுதவி வேண்டுமானாலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அளிக்கத் தயாராகவுள்ளது.தமிழ்ப் பல்கலைக்கழகத்திலிருந்து ஏராளமான திட்டங்கள் வர வேண்டும். முக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். மொழிபெயர்ப்புத் துறை நல்ல எதிர்காலத்தை கொடுக்குமெனில், இளைஞர்கள் இந்தத் துறையில் அதிகம் ஈடுபட வேண்டும் என்றார் மோகன்.விழாவுக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன் தலைமை வகித்து பேசியது:மொழிபெயர்ப்பு என்பது மொழி மட்டுமன்றி உடல் சார்ந்ததாகவும் உள்ளது. வணக்கம் கூறுதல், அசைவுகளில், பதில் கூறுவதில்கூட மொழிபெயர்ப்பு இருக்கிறது. மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழி. சொல், பொருள் என்ன என்பதை அறிந்து பார்த்தால் பொருளை மொழியாக்குகிறோம் என்பதை உணர முடியும்.ஒரு மொழியில் உன்னதமாகக் கருதப்படும் இலக்கிய நயம், சொல்லாட்சி போன்றவை பிற மொழியில் மொழிபெயர்க்கும் போது அப்படியே கொண்டு வர வேண்டும். கடந்த காலங்களில் மொழிபெயர்ப்புகள் மதம், நீதி, காப்பியக் கதைக்கு, அரசியல் சார்பாக இருந்தது. தற்போது வியாபார ரீதியில் மொழிபெயர்ப்பு உள்ளது. மொழிபெயர்ப்பு இல்லாமல் உலகம் இல்லை என்ற நிலை உள்ளது.தமிழ்ப் பல்கலைக்கழக வலைதளம் மறுசீரமைக்கப்படுகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் "கடலுக்குள் சென்ற பூம்புகார், தென்குமரி கண்டம் அகழாய்வு செய்யப்படும்' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.அதனடிப்படையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்சி மன்றக் கூட்டத்தில் பூம்புகார், தென்குமரிக் கண்டம் ஆகியன குறித்து அகழாய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் நல்லத்தம்பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வு மூலம் தமிழர்கள், தமிழின் தொன்மை தெரிய வரும் என்றார் ராசேந்திரன்.விழாவில் மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் ச. ராதாகிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர் அ. சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர் சீ. வெங்கடேஷ் வரவேற்றார். சே. முரளி நன்றி கூறினார்.

முதன்மை 5 வாசகர் கருத்துகள் 27.11.10

முதலில் தமிழ்நாட்டு அரங்கங்களில் தமிழிசை மட்டுமே நிகழ்த்தப்பட உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். பிற மொழிப்பாடல்களைப் பாட எண்ணுபவர்கள் அம் மொழி வழங்கும் பகுதிகளில் சென்று பாடட்டும். நாமும் அவர்களை ஊக்கப்படுத்துவோம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தலையங்கம்: பேஷ், பேஷ்... பலே, பலே...!

First Published : 26 Nov 2010 03:27:47 AM IST

Last Updated : 26 Nov 2010 08:04:06 AM IST

கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது விமர்சனங்களின் மூலமும், இசைவிழா மலர்களின் மூலமும் "தினமணி' இசை உலகத்துக்கு விடுத்துவரும் கோரிக்கைக்குச் சில முன்னணி இசைக் கலைஞர்கள் செவிசாய்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மார்கழி மாதம் வந்தால், உலகெங்கிலும் உள்ள கர்நாடக இசைப் பிரியர்களின் வேடந்தாங்கலாக சென்னை மாறிவிடுகிறது. நல்ல சங்கீதம் கேட்பதற்கு வரும் ரசிகர்கள் ஏமாற்றப்படக்கூடாது என்கிற நமது ஆதங்கத்துக்கு ஆதரவளித்திருக்கும் இந்த இசைக்கலைஞர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.சென்னையிலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் மட்டுமே நூற்றுக்கும் அதிகமான சங்கீத சபாக்கள் இருக்கின்றன. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்பு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலிருந்த சபாக்கள் இப்போது மலிந்து விட்டிருப்பதன் காரணம், மக்கள்தொகை பெருகி இருப்பது மட்டுமல்ல, போக்குவரத்து நெரிசலால் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பயணிப்பதில் உள்ள சிரமங்களும்கூட. தொழில் நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் என்று பலதரப்பட்ட புரவலர்களும் இசை நிகழ்ச்சி நடத்தும் சபாக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதும்கூட, சபாக்கள் மலிந்துவிட்டதற்குக் காரணம்.சபாக்கள் அதிகரித்திருக்கும் அளவுக்கு ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்திருக்கிறதா என்று கேட்டால், குறிப்பிட்ட சில பழமையான சபாக்களைத்தவிர, பெருவாரியான சபாக்களுக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் இல்லை என்பதுதான் உண்மை. இரண்டு மாத இடைவெளியில் நூற்றுக்கணக்கான சபாக்களில் 3,000-க்கும் அதிகமான நிகழ்ச்சிகள் நடக்கும்போது, அதிலும் குறிப்பாக, அலுவலக நாள்களில் பகல் நேர நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் வருகை இல்லாமல் இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?எல்லா சபாக்களும் எல்லா முன்னணிக் கலைஞர்களின் நிகழ்ச்சியையும் வழங்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால், அப்படி அத்தனை சபாக்களிலும் பாடுவது என்பது எந்த ஒரு கலைஞருக்கும் சாத்தியமில்லை. தினமும் ஒரு நிகழ்ச்சி என்று கச்சேரி பாடத் தொடங்கினால், அவர் சங்கீத சாம்ராட்டே ஆனாலும் அந்த சங்கீதத்தின் தரம், தராதரமில்லாததாகிவிடும்.அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் போன்ற இசை விற்பன்னர்கள், புகழின் உச்சியில் இருக்கும்போதுகூட, மார்கழி சீசனில் இரண்டு கச்சேரிகளுக்கும் அதிகமாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அரியக்குடியின் சங்கீதத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காக அந்த இரண்டு கச்சேரிகளும் நடக்கும் நாள்களில் ரசிகர்கள் வெளியூர்களிலிருந்து வந்து குவிவார்கள். நல்ல தரமான சங்கீதத்தை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் எல்லா மூத்த வித்வான்களும் குறியாகவும் இருந்தனர்.அந்த நிலைமை மாறி, இப்போது காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள நினைக்கும் இளைய தலைமுறைக் கலைஞர்கள் பலர் இருப்பது வேதனை அளிக்கிறது. தங்களது திறமையை முன்வைத்துத் தங்களுக்கு இசை உலகில் நிரந்தர இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்கிற தன்னம்பிக்கை இவர்களிடம் இல்லாததுதான் இதற்குக் காரணம் என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.அருணா சாய்ராம், கே.ஜே.ஜேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ போன்ற ஒருசிலர் மட்டும் ஆரம்பம் முதலே குறைந்த கச்சேரிகளை ஏற்றுக்கொண்டு நிறைந்த சங்கீதத்தை ரசிகர்களுக்குத் தருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள். சீசனில் பதினைந்தும், இருபதும் அதற்கு மேலும்கூடக் கச்சேரிகளை ஏற்றுக்கொண்டு, அதில் பாதிக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தாமல் முகம் சுளிக்க வைத்தவர்கள், இப்போதாவது  கச்சேரிகளைக் குறைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பதை வரவேற்க வேண்டும்.பிரபலமான கலைஞர்கள் தங்களது நிகழ்ச்சிகளைக் குறைத்துக்கொண்டு, குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒரு கச்சேரிக்கு மேல் ஏற்றுக்கொள்வதில்லை என்று வரம்பு விதித்துக் கொண்டால்தான், ரசிகர்கள் சலித்து வெறுக்கும் அளவுக்குப் பாடிக் களைத்துத் தங்கள் சாரீரத்தைத் தொலைத்துவிடாமல் காப்பாற்ற முடியும். இதை சுதா ரகுநாதன், டி.எம். கிருஷ்ணா, ஒ.எஸ். அருண் போன்ற கலைஞர்கள் காலம் கடந்துவிடுவதற்கு முன்னால் புரிந்துகொண்டு சுதாரித்திருப்பதை நாம் பாராட்டியாக வேண்டும்.தினமும் ஒரு கச்சேரி பாடுவது அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் பாடுவது என்பதெல்லாம் அந்தக் கலைஞர்களுக்கு வருமானம் சேர்க்க உதவுமே தவிர, அவர்களது இசைக்கு மேன்மை சேர்க்காது. இசைக் கலைஞனுக்கு அடிப்படையான விஷயங்கள் சாரீரமும் (குரல்) அவனது கற்பனையும். அது மோகனமோ, கல்யாணியோ, காம்போதியோ, பைரவியோ அதை எத்தனை முறை எத்தனைபேர் ஆலாபனை செய்தாலும் சலிப்புத் தட்டாமல் இருப்பதன் காரணம், அந்த ராகங்களின் அடிப்படை சிதைந்துவிடாமல் தங்களது கற்பனையைப் புகுத்தி அவரவர் பாணியில் இசைப்பதால்தான். நாங்கள் கச்சேரிக்குக் கச்சேரி வெவ்வேறு ராகங்களைத்தானே பாடுகிறோம் என்று இவர்கள் வாதிட்டாலும், கலைஞரின் கற்பனாசக்திக்கும் ஓர் எல்லை இருக்கிறதுதானே?இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா ஒருபடி மேலேபோய், மார்கழி மாதம் முதல் பாதியில் தான் எந்தக் கச்சேரியும் ஒத்துக்கொள்ளப் போவதில்லை என்றும், ஒரு ரசிகனாக மற்றவர்கள் பாடுவதைக் கேட்கப் போவதாகவும் கூறியிருப்பது "சபாஷ்' போட வைக்கிறது. மூத்த கலைஞர்களின் கச்சேரிகளில், இன்றைய கலைஞர்கள் முன்வரிசையில் அமர்ந்து அவர்களது சங்கீத ஞானத்தைக் கிரகித்துக் கொள்வது என்பதுபோல சங்கீத மேன்மைக்கு வேறு எதுவுமே உதவாது. டி.எம். கிருஷ்ணாவைப் பின்பற்றி ஏனைய கலைஞர்களும், பிற கலைஞர்களின் நிகழ்ச்சிகளில் ரசிகர்களாகப் பங்கேற்கும் நாகரிகத்தை உருவாக்குவார்கள் என்று நம்புவோமாக.சீசனுக்கு ஆறே ஆறு கச்சேரி என்று பிரபல கலைஞர்கள் நிகழ்ச்சிகளைக் குறைத்துக்கொண்டு, அந்த ஆறு கச்சேரிகளுக்காக ரசிகர்களை ஏங்க வைக்கும் நிலைமை ஏற்பட வேண்டும். புதியவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது நிகழ்ச்சியில் ரசிகர்களில் ஒருவராக அமர்ந்து இசை வளர்ச்சிக்குப் பங்களிக்க வேண்டும். நல்லதொரு தொடக்கத்துக்கு வித்திட்டிருக்கும் கலைஞர்களுக்கு நமது வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
கருத்துகள்

நன்றாக சொன்னீர்கள் superb
By பொதிகைச்செல்வன்
11/26/2010 6:16:00 PM
[Contd..2 /] Another avenue was temples. I still carry fine remembrances of my early days spent at T'cane Parthasarathy temple-annual festivals, where similar Nadaswaram renditions (irratai nadaswarams +irratai thavils) by outstanding artistes such as, Vedaranyam, Karukuruchi, NPN brothers etc. & often they take march thro' my memories! There were renditions by Sirkaazhi Govindarajan, Dr.MLV and others. Not long ago, I had opportunity of hearing saxaphone katcheri at a temple in Mysore by Kadhri and during the still evenings and nights of Mysore, in an area of more than 1 Km radius, everywhere his katcheri used to follow me!
By ASHWIN
11/26/2010 5:13:00 PM
Mr.Khadhar has written suggesting Tiruchy as a possible centre for Carnatic music festivals. Annual Tiruvaiyaaru Thyagaraja festival is already there, but his view is worthy of due consideration. About 50 years ago, as a kid I was at Kumabkkonam and during a Janvaasam ( "Uninvited"!) I spent that whole wonderful evening filled with sweet aroma of athar and Javaadhu, captivated by fine rendition of a duel Nadaswra Katcheri of Vedaaranyam Vedamurthy well into late hours. Those were the days,when Classical music was part of traditional marriages. Due to lack of patronage or due to artistes' own revulsion & withdrawals on account of cacophonous surroundings of marriages where scant attention was paid to them, it has fallen by way side.
By ASHWIN
11/26/2010 5:00:00 PM
தலையங்கம் சரியாகக் காட்டி உள்ளது தினமணி keep it up அன்புடன் பொன்னிவளவன்
By ponnivalavan
11/26/2010 3:35:00 PM
நாட்ல வேரு முக்கிய சேதி எதுவுமே இல்லயா தலயஙகம் எழுத?
By Murugaiyan
11/26/2010 12:52:00 PM
பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது. சுதா, அருண், கிருஷ்ணா எடுத்த முடிவு முற்றிலும் சரி. கலைஞர்கள் ரசிகர்களை அலுப்புத்தட்ட விடக்கூடாது என்பதிலே குறியாக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்து கொண்டுவிட்டதாகப் படுகிறது. வழிப்போக்கன்
By S. Krishnamoorthy
11/26/2010 11:19:00 AM
இசைக் கலைஞர்கள் தங்களுடைய கச்சேரிகளின் எண்ணிக்கையை சீசனில் குறைத்திருப்பது, புதியவர்களுக்கும், இளங் கலைஞர்களுக்கும் ஓர் வாய்ப்பைத்தரும். மார்கழி சீசனில் சென்னைக்கு வருவதை பிறனாடுகளில் உலகெங்கும் பரவியுள்ள ரசிகர்கள் வழக்கமாக கொண்டு ஊள்ளார்கள். இப்போது தமிழிசையும் பரவலாக இசைக்கப் படுகிறது. ஆர்வமும் அதிகமாக உள்ளது இவையெல்லாம் நம் இசை மிக்க சிறப்புடன் திகழும் என்று கட்டியம் கூறுகின்றன.
By S Raj
11/26/2010 8:30:00 AM
எது எப்படியோ திபாவளி பட்டாசு வெடிப்பதை குறைத்ததைப் போல மார்க்ழி கச்சேரியயும் குறைத்துவிட்டுவிடுவார்கள் நம் அறிவில் மூத்த பெரியோர்கள். லக்ஷ்மி கொ.
By LK
11/26/2010 8:07:00 AM
திருச்சியிலும் நடத்தலாம். எல்லோருக்கும் வசதியாக இருக்கும். சென்னைக்கும் ஒரு நிம்மதி கிடைக்கும். தொழில், கலை - எல்லாம் பரவலாக நடத்தப்பட வேண்டும். எல்லாமே சென்னையிலேயே நடப்பது நன்றாயில்லை.
By Khadhar
11/26/2010 8:05:00 AM
ஆஹா ! பலே பலே ! பேஷ் ! உங்கள் தலயங்கத்திற்காகத்தான் நெதியடி தலைவா ! அப்பிடியே கொஞ்சம் தமிழ் பாட்டும் பாடச்சொல்லி ஒரு பிட்டு போட்டிருக்கலாம்.
By VARAGUNAN
11/26/2010 8:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
(Press Ctrl+g or click this   to toggle

அதிகாரப்பகிர்வே இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் : எசு.எம். கிருட்டிணா

ஈழத்தமிழர்களை அழிப்பதில் இந்தியா அதிகாரப பகிர்வு பெற்றுத் தன் படை வீரர்கள் மூலமும்  படைக்கருவிகள் மூலமும் எரிகுண்டுகள் மூலமும் கொத்துக் குண்டுகள் மூலமும் சுடுகாட்டு அமைதியை ஏற்படுத்தி விட்டது. எஞ்சியவர்களையும் அழிக்க அதிகாரப் பகிர்வு கேட்கிறதா? ஈழத்தமிழர்களுக்குத் தேவை அதிகாரப் பகிர்வு அல்ல. அவர்கள் மண்ணில் உரிமையுடன் வாழவும் ஆளவும் தமிழ்ஈழ அரசே உடனடித் தேவை. 300 ஆண்டுக்காலப் போராட்டதில் இந்தியா  ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுபட்டு இருக்கும் பொழுது   ஈழத்தமிழர்களின் குறுங்காலப் போராட்டம்
தோல்வி அடைந்துள்ளதாகக் கருதுவது தவறு. காலம் ஒருநாள் மாறும். ஈழம் நன்கு மலரும். ஞாலம் அதனால்  மகிழும். அன்புடன்   இலக்குவனார் திருவள்ளுவன்

அதிகாரப்பகிர்வே இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் : எஸ்.எம். கிருஷ்ணா

First Published : 26 Nov 2010 05:05:26 AM IST

Last Updated : 26 Nov 2010 05:33:12 AM IST

கொழும்பு, நவ. 25: அதிகாரப்பகிர்வே இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.  ÷4 நாள் அரசு முறைப் பயணமாக எஸ்.எம். கிருஷ்ணா, இலங்கைக்கு வியாழக்கிழமை பயணம் மேற்கொண்டார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியது:  ÷இலங்கையில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் முக்கியமாக தமிழர்கள் பயன் பெறும் வகையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ள தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார்.  ÷இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஆயுதப் போராட்டம் முடிந்து அமைதி திரும்பியுள்ளது. இனி நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் வகையில் அர்த்தமுள்ள பேச்சுகள் மூலம் அதிகாரப்பகிர்வு மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உள்ளது. எனது இந்தப் பயணம் அதிகாரப்பகிர்வு பேச்சுகளுக்கு தொடக்கமாக அமையும்.  ÷கடந்த ஜூன் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன், ராஜபட்ச பேசினார். அப்போது அதிகாரப்பகிர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.  ÷போரினால் இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் இந்த ஆண்டு முடிவதற்குள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள் என்றும் இலங்கை இந்தியாவிடம் உறுதியளித்துள்ளது. இலங்கையில் போர் முடிந்த காலகட்டத்தில் 3 லட்சம் தமிழர்கள் பல்வேறு முகாம்களில் தங்கியிருந்தனர். இப்போது 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் தமிழர்கள் முகாம்களில் உள்ளதாகத் தெரிகிறது. இவர்களையும் விரைவில் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்றார் எஸ்.எம். கிருஷ்ணா.  ÷இலங்கை அதிபர் ராஜபட்ச உள்பட அந்நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் பலரை கிருஷ்ணா சந்தித்துப் பேசவுள்ளார். இலங்கைத் தமிழ் தலைவர்களையும் அவர் சந்திக்கிறார்.  ÷இலங்கையின் தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கும் கிருஷ்ணா செல்ல இருக்கிறார். முன்னதாக 1989-ல் இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த கே.நட்வர் சிங், யாழ்ப்பாணம் சென்றார். அதற்குப் பின் இப்போது கிருஷ்ணா அங்கு செல்கிறார்.
கருத்துகள்

மத்திய அரசுக்கு உண்மையிலேயே தமிழருக்கு உதவி செய்யும் எண்ணம் இருந்தால் தமிழக பத்திரிக்கைகளுக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல அனுமதி பெற்றுக்கொடுத்து அங்குள்ள உண்மை நிலவரத்தை வெளியிட வைக்க வேண்டும்.
By நாடோடி
11/26/2010 11:05:00 PM
மகிந்தா கூட மனம் மாறி ஈழம் தர முன்வரலாம் ஆனால் சோனியாவும், கருணாநிதியும் அதற்கு குறுக்கே நிற்பார்கள். சுய நலத்திற்காக சாதிய அரசியல் கட்சிகளுக்குப்பின்னால் செல்லும் இன உணர்வில்லாத தமிழக மக்கள் அதை ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
By தஞ்சை ராஜு
11/26/2010 12:52:00 PM
மகிந்தா கூட மனம் மாறி ஈழம் தர முன்வரலாம் ஆனால் சோனியாவும், கருணாநிதியும் அதற்கு குறுக்கே நிற்பார்கள். சுய நலத்திற்காக சாதிய அரசியல் கட்சிகளுக்குப்பின்னால் செல்லும் இன உணர்வில்லாத தமிழக மக்கள் அதை ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டார்கள். தஞ்சை ராஜு
By தஞ்சை ராஜு
11/26/2010 12:47:00 PM
அதிகாரப்பகிர்வே இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் அது எங்களுக்கும் தெரியும்... அது எப்போ... அணைத்து தமிழர்களும் அழிந்த பின்னாடியா... சண்டை முடிந்து இரண்டு வருடம் ஆயிற்று.. ஒரு மயி_ புடுங்க காணோம். இலங்கை தமிழனுக்கு ஒரே தீர்வு தனி நாடு தான்... அதில் எந்த மாற்று கருத்துக்கு எடம் இல்லை.
By tamilan
11/26/2010 11:24:00 AM
போடா கெலட்டு நாயே! உனக்கென்ன் தெரியும் சிங்கள நரிகளை பற்றீ? செத்த பினங்களை உடல் உறவு கொள்ளும் நரிகளடா கிருஸ்ணா நாயே!!! ராஜிவ் காந்தி ஒருவனை கொண்றதால் ஒரு லச்சம் மக்களை கொன்ற காங்கிரஸ் அரசு மனிதாப உனர்வு இல்லாத கொடூற அரக்கனை போனறது. இதற்கெல்லாம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டுமடா நாய்களே!!!
By Karumurugan
11/26/2010 10:44:00 AM
No need Kannadan Help We need Tamil Eelam
By Tamilan In Qatar
11/26/2010 8:36:00 AM
எல்லாம் வெறும் நடிப்பு
By Elango
11/26/2010 8:30:00 AM
சின்கள குடியேற்றம் செயிது விட்டு இதென்ன பேச்சு.
By Nallan
11/26/2010 8:09:00 AM
இந்தியவே உன் கபட நாடகத்தை நிறூத்து. தமிழர் களூக்கு இந்தியா நன்மை செய்யாது.
By Ram
11/26/2010 8:09:00 AM
ஒரு ட் தான் தமிழனுககு தான் ஒரு தமிழனஒட வலி தெரியும்.
By pachaithamizhan
11/26/2010 6:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

அலைக்கற்றை மோசடி: அனைவர் மீதும் நடவடிக்கை :செயலலிதா வலியுறுத்தல்

௧. இடைத்தரகர்களால் இராசாவிற்குப் பதவி கிடைத்தது என்றால் கனிமொழிக்கு ஏன் பதவி கிடைக்கவில்லை? ௨) இவ்வுரையாடல் செய்திக்கு ஏன் ஒருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை? ௩) வேறுவகையில் பதவி கிடைததிருந்தும் கலைஞரால்தான் பதவி கிடைத்தது என்பதுபோல் நடித்துள்ளதை  அடக்கம் என்று எடுத்துக் கொள்ளலாமா? ௪) பணமுதலைகளால்தான் மக்கள் சார்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அமைச்சர் முதலான பொறுப்புகளுக்கு வருகிறார்கள் என்பது ஆண்டாண்டு கால உண்மையாக இருக்கையில் இச்செய்தி என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறது.? ௫) அலைக்கற்றை ஊழல் தொடர்பில் பதிவுகள் இருப்பின் அவற்றை  வெளியிடுவதுதானே பொருத்தமாக இருக்கும். உரியவர்கள் குடும்பங்களில் குடுமிப்பிடிச் சண்டை போட்டுக்கொள்ள வழி வகுத்துள்ள இச் செய்தியால் பொதுமக்களுக்கு நன்மை ஒன்றும் இல்லை.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



2ஜி விவகாரத்தில் அனைவர் மீதும் நடவடிக்கை
: ஜெயலலிதா வலியுறுத்தல்

First Published : 26 Nov 2010 11:04:18 AM IST

Last Updated : 26 Nov 2010 11:21:21 AM IST

சென்னை, நவ.26: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட அமைப்புகளிடம் உள்ள உரையாடல் பதிவுகளை வைத்து சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக-வைச் சேர்ந்த ராசாவால் நிகழ்த்தப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்த செய்திகளை கவனித்துக் கொண்டிருந்த அதே வேளையில், ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கியவர்களுக்கும், அதிகார மையத்திடம் அதிக செல்வாக்கு பெற்றவருமான நீரா ராடியாவுக்கும் இடையே நடைபெற்ற முக்கியமான உரையாடல் காட்சிகள் தமிழக மக்களால் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. நீரா ராடியாவின் தொலைபேசி மற்றும் கைபேசிகளின் உரையாடல்களை குறிப்பிட்ட சில நாட்களுக்கு வருமான வரித் துறை பதிவு செய்தது. 500 மணி நேரங்களுக்கும் மேலான தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன.  இதில் 15 நிமிடங்களுக்கும் குறைவான உரையாடலைத் தான் ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.  இந்த உரையாடல் கருணாநிதி குடும்பத்தினரின் சுயரூபத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அம்பலப்படுத்தியுள்ளது.தனக்கு சுற்றுச்சூழல் இலாகா வேண்டுமென்றும், இல்லையெனில் சுகாதாரம் அல்லது விமானப் போக்குவரத்து அல்லது சுற்றுலா மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இலாகா ஒதுக்கப்பட வேண்டுமென்றும் கருணாநிதியின் மகள் கனிமொழி கோரிக்கை விடுக்கிறார்.  ஆ. ராசாவுக்கு தொலைத்தொடர்பு இலாகா அளிக்கப்பட வேண்டும் என்று ஆவேசமாக வாதாடுகிறார்  கனிமொழி.  அதே சமயத்தில், தனது உறவினரும், கருணாநிதியின் பேரனுமான தயாநிதி மாறனை இழிவுபடுத்தியும் பேசுகிறார்.  திமுக-வின் பல்வேறு கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தையும், நிர்பந்தத்தையும் உண்டாக்கும் விதமாக, பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணிக்க தி.மு.க. திட்டமிட்டு இருப்பதாக டி.ஆர். பாலு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது காங்கிரஸ் தலைமையை எரிச்சல் அடையச் செய்திருக்கிறது என்ற தகவல் மற்றொரு மூத்த பத்திரிகையாளர் பர்கா தத்தின் உரையாடலில் பதிவாகி இருக்கிறது. தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவி அளிக்க கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்து இருந்தபோதிலும், மாறனுக்கு ஆதரவாக மு.க. ஸ்டாலினும், முரசொலி மாறனின் சகோதரர் செல்வத்தின் மனைவி மு.க. செல்வியும் தீவிரமாக ஈடுபட்டது நீரா ராடியா - வீர் சங்வி இடையேயான உரையாடல் மூலம் வெளி வந்துள்ளது.  15 நிமிடங்கள் நடந்த உரையாடல் பதிவுகளே இவ்வளவு சேற்றை வாரி இரைத்திருக்கிறது என்றால், 500 மணி நேர உரையாடல் பதிவுகளில் இன்னும் என்னென்ன குப்பைகள் வெளிப்படும் என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த உரையாடல் பதிவுகள் எல்லாம் ஊடகங்கள் வசம் இருக்கின்றன.  இவை அனைத்தும் எல்லா தேசிய தொலைக்காட்சிகளிலும், ஜெயா தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டன.  இந்த உரையாடலின் பிரதி அனைத்து தேசிய பத்திரிகைகளிலும், தினமணி நாளிதழிலும் வெளியிடப்பட்டன.  இவை வெளியிடப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், இதில் தொடர்புடைய நபர் எவரும் இதற்கு ஆட்சேபணையோ அல்லது மறுப்போ தெரிவிக்கவில்லை.  எனவே, இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.  இந்த உரையாடல் பதிவுகள் வருமான வரித் துறையின் வசம் உள்ளன. மத்திய புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்க இயக்கத்திடமும் இந்த உரையாடல் பதிவுகள் உள்ளன.  இந்த அமைப்புகள் எல்லாம் உண்மையிலேயே சுதந்திரமாக செயல்படுகிறது என்றால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உண்மையான குணம் மற்றும் நடத்தை குறித்து மக்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும். இவர்களுடைய அரசியல் கணக்கினை முடிப்பதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தங்களுக்கு வாக்களித்த மக்களை பயன்படுத்தி, நாட்டைச் சுரண்டி, தங்களுடைய கருவூலத்தை நிரப்பிக் கொண்டவர்களுக்கு தக்கப் பாடம் கற்பிக்கும் வகையில் தமிழக மக்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு கொள்வதாக ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்

ANYBODY CAN QUESTION ANYONE IN A DEMOCRATIC SETUP!BUT THE QUESTIONER SHOULD HAVE CERTAIN MORALITY TO QUESTION OTHERS!
By CHANDRADASAN
11/26/2010 11:08:00 PM
1999-ல் நிலத்தை வாங்கிப் போட்டால் 2004-ல் வாங்கிய விலைக்கு விற்க முடியுமா? 1999-ல் தங்கத்தை வாங்கியிருந்தால் 2004-ல் அதே விலைக்கு விற்க முடியுமா? அதே போல் 1999-ல் வழங்கப்பட்ட அலைக்கற்றை தொகைக்கும் 2004-ல் வழங்கப்பட்ட அலைக்கற்றை தொகைக்கும் வித்தியாசம் இருக்க வேண்டாமா? இதுதான் மத்திய, மாநில அரசுகளுக்கெதிராக ஊழல் ஊழல் என கூப்பாடு போடுவோரின் அடிப்படை வாதம். ஆக, இவர்கள் நிலம் மற்றும் தங்க புரோக்கர்கள் போல் அரசாங்கமும் செயல்பட வேண்டும் என நினைக்கின்றனர். சமீபத்திய கண்டுபிடிப்புகளில் செல்போன் அதிக முக்கியத்துவம் பெற்று எல்லோராலும் விரும்பப்பட்டு மிக அதிக அளவு உபயோக வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இந்த வளர்ச்சியை 1999-முதல் 2004-வரை உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஏகோபித்த லாபம் பெற வாய்ப்பில்லாமல், வேறு பல நிறுவனங்களுக்கும் பழைய விலையிலேயே அலைகற்றை ஒதுக்கீடு செய்தது ஊழல் என்று பிரச்சாரம் செய்ய எதிர்க் கட்சிகள் முனைந்துள்ளன. இதற்குப் பின் யார் இருப்பார்கள் என்பது சந்தர்ப்ப சூழ்நிலை புரிந்தோர்க்குப் புரியும்.
By நாடோடி
11/26/2010 10:48:00 PM
If it is not Jaya madam who else has got the guts to question ALAIKATRAI RASA AND MAHAARAJAA KARUNA?
By shyamsundar
11/26/2010 9:48:00 PM
My dear friend Mr.Parthiban, I am also a citizen tax payer like you and as a citizen ,I have the responsibility to protect public money and I am strictly against to any corruption in any form.Now this 2G spectrum story has been reached all over the world and it is a big shame for our country.Now,everybody knows very well about this scandal and can guess who are the peoples behind this scandal. If these recorded audio tapes are irrelevant to the 2G spectrum case, then why it was submitted to the Supreme Court ? Is it for fun ? The audio has a total duration of about 500 recording hours of more than 5000 recordings.Have you listened the entire audio recordings ? Yes , I am not a English man like you and I am just a pure Tamil national citizen. Yes, now , everybody knows who is the stupid ! Thanks.
By Kannan M
11/26/2010 8:53:00 PM
ஓகே.ஓகே உத்தமர் வறாரு எல்லாரும் செம்ப எடுத்து உள்ள வைங்கப்பா
By edison
11/26/2010 8:33:00 PM
dear editorsiur oru nijathai velia kondu vanthatharku ungalakku nandri. veeramani suba vee thiru pondra jalrakkal solvathaiallam kuppaiyel podungal jathi arasialukku bihar makkal nallapathikai sonna piragum intha janmanga thiruntha villai endral varum thrthalil makkal ivargalaiym ivar thalaivaraiyum thiruthividuvargal.ambu eithavarirukka jalrakkalai patri neengal kathipodathirgalpani sirakkattum.
By nithyanandham
11/26/2010 8:11:00 PM
கடவுளே எங்கள் தேசத்தை காப்பாற்று.
By ஜானுசிசி
11/26/2010 7:45:00 PM
As per raja Comment, PM also involed in this 2G revenue loss... with out PM knowlegde its not possible to do this, Our PM is "Joker"
By anand
11/26/2010 5:21:00 PM
Mr. Chandran, I am not taking sides, but remain neutral. However, I want to ask you one thing. You have said "The conversation which was taped are internal to DMK and Cong. There are no loss to people or nothing related to 2G revenue loss". Please tell me are you anybody connected with the investigation or whether the tapes were played for you specially. How are you so categorical about the tapes?
By visu
11/26/2010 4:35:00 PM
//தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் உண்மையான குணம் மற்றும் நடத்தை குறித்து மக்களுக்கு தெளிவாக தெரிய வேண்டும்// நியாயமான கருத்து. நாட்டு நலனில் அக்கறையுள்ள அனைத்து மக்களும் இதை வரவேற்பார்கள்.
By Tamilkudimagan
11/26/2010 4:25:00 PM
I appreciate Kannan's comments. Because jayalalitha has cases against her..it does not mean that no body should talk about DMK and its brokers. They have caused a huge loss to the country. They have made a mockery of democracy by involving with a lobbyist. Both congress and dmk deserve to be booted out.
By Karthik
11/26/2010 4:21:00 PM
Mr.Chandra, all the politicians are corrupted guys.....we need stand on the side where is the less corruption and who will do the needfull to the country and people....Watever it may be the loss to the country 1.76 lakhs crore is not trivial, must be punishable, Ms.Jaya is voice is representing the all indians voice....
By Sri
11/26/2010 3:57:00 PM
இந்த கருத்தை சொல்ல ஜெயலலிதாக்கு . அருகதை இல்லை
By shoe court
11/26/2010 3:23:00 PM
Hey Irrelevant Kannan or anyone says this is the spectrum negotiation audio, I am a tax payer and also strictly against to any corruption in the form of anything But This audio has got nothing to do with Spectrum negotiation and this is sounds like portfolio negotiation right after the last general election (Well, If you understand the English correctly, you will also agree to it). Give us the proof of spectrum negotiation audio conversation. Don’t put something and fabricate the stories on it. I would say the spectrum case in the court and they will decide and come to conclusion which is true or false. So, until then shut your bloody mouth. I am not a stupid to belief this audio is the spectrum negotiation audio.
By R.Parthiban
11/26/2010 3:17:00 PM
In this 1.76 cr, D.M.K and Raja can be only a small part of it, most of it will be congress. If congress give support this lady will be leaking at congress foot..... let her first stop this non sense before speaking about corruption......
By Sakthi
11/26/2010 2:53:00 PM
அம்மா எனும் சொல் மிகவும் புனிதமானது. கன்டிப்பாக ஜெ வுக்கு அது பொருந்தாது.தமிழா புரிந்து திருந்து.
By parithi
11/26/2010 1:26:00 PM
இனியொரு ஊழல் செய்வோம்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரதமணித்திருனாடு! வந்தேமாதரம் என்று கூறுவோமா?
By Tamilian
11/26/2010 1:17:00 PM
Dear Mr.Chandra , Why you are so upset on this ? Since there was a huge loss to Indian citizens and to the Nation from the 2G spectrum scandal, your comment on this shows your irresponsibility and blindly backing one side. The Revenue authorities are not fools to submit the recorded tape to the Supreme Court as you think simply that it is a matter between DMK and Congress.There are a lot of secrets inside the conversation and you will hear the truth very soon.My advise for you is "Think logically" Thanks.
By Kannan M
11/26/2010 12:48:00 PM
திமுக-காங். இரண்டுமே இன்று ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்குகின்றன. ஆகவே அவர்கள் பேச்சு அதற்கான அச்சாரமே. எனவே அதைப் பற்றி ஜெயலலிதா விமர்சிக்கும் போது திமுக அபிமானிகளால் தாங்க இயலவில்லை போலும். புலம்பிப் பயனில்லை. இவர்களை விட ஜெ. எவ்வளவோ மேல். ஜெ. மேல் உள்ளது 66 கோடி வழக்கு. இவர்கள் நாட்டுக்கு இழைத்த நட்டம் 1.76 லட்சம் கோடி. நாட்டை வீட்டுச் சண்டைக்கு இட்டுச் சென்ற வெட்கக்கேட்டுக்கு 'சொந்தக்'காரர்கள்.
By Mahadevan
11/26/2010 12:39:00 PM
CENTRAL SHOULD INITIATE FOR THE SPEEDY DISPOSAL OF ALL THE CASES AGAINST JAYA TOO.
By CHITRAKULLAN, SEYYAR
11/26/2010 12:26:00 PM
அருமை
By priya
11/26/2010 12:19:00 PM
Amma's stand is correct. No culprit should be allowed to escape. Because it is the matter of 1.76 lakh crore scandal. So Central government should act as first example in punishing the persons who made crores of rupees loss to the nation, as well as the people of India.Will the Central Government take action immediately as per the Supreme Court note- G.R.Srinivasan.
By G.R.Srinivasan
11/26/2010 11:53:00 AM
உங்கள் மீதுள்ள வழக்குகளை முடிக்க முயன்றால் பெரியவர் வாயை அடக்கலாம். மக்களும் மஹிழ்வுடன் பேரதரவு அளிப்பர்.செய்வீர்ஹளா அம்மா?
By Thirunilayan
11/26/2010 11:40:00 AM
What is your problem here? You are mother of all scams, how many cases you have on you? Why do not you allow the court to inquire about your wealth case in Bangalore. The conversation which was tapped are internal to DMK and CONG. There are no loss to people or nothing related to 2G revenue loss. Why are you shouting and barking?
By Chandra
11/26/2010 11:22:00 AM
ஜெயலலிதாவின் நாடகம் இனி எடுபடாது
By Vadukanathan
11/26/2010 11:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *