சனி, 21 ஆகஸ்ட், 2010

ஆம்! ஆம்! ஆம்! வீரப் போராளி முத்துக்குமார் பெயரைத்தான் சூட்ட வேண்டும். தமிழ் மண்ணில் அயலவர் பெயர் சூட்டக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++++

சென்னை, ஆக 21-
நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பழமை வாய்ந்த சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு தமிழருக்காக தன் ஒப்பற்ற தன் இன்னுயிரை ஈந்த மாவீரன் தியாகி தமிழர் முத்துக்குமார் பெயர் சூட்ட வேண்டும்.
தமிழர் தம் இனமானம் காக்கவும், தன்மானம் மீட்கவும் தன் இன்னுயிரை ஈந்தவன் முத்துக்குமார். எந்த அரசியல் கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் தமிழர் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவன் முத்துக்குமார்.
தமிழ்நாட்டிற்கு தொடர் பற்றவர்கள் பெயரெல்லாம் தமிழ்நாட்டின் வீதியெங்கும் சாலையெங்கும் சூட்டப்பட்டுள்ள நிலையில் தியாகி முத்துக்குமார் பெயர் சூட்டப்படுவதே மிகப் பொருத்தமானது. ஆகவே முத்துக்குமார் பெயரைச் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்ட வேண்டும் என நாம் தமிழர் கோரிக்கை வைக்கின்றது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்திபோராடவும் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சின்னஞ் சிறு இலங்கைக்காரன் விரட்டுகிறானே !- பெரியார்

logo3
பக்கத்திலே இருக்கிற சிலோன், இலங்கைக்காரன் நம்மை உதைத்து விரட்டுகிறானே. அதை ஏன் என்று கேட்க நாதியில்லை. ஆனால் வட நாட்டில் கொலை, கொள்ளைகளில்  ஈடுபட்டு ஓடி வந்த வடநாட்டுப்பசங்களுக்கெல்லாம் ‘அகதிகள்’     என்ற பெயரில் கோடி கோடியாய் பணம்செலவழித்துக் கொண்டிருக்கிறார்களே !
அவர்களுக்கு வீடு ;
வியாபாரத்திற்குப் பணம் உதவியெல்லாம்!
நம்மவன் கதி?
கஞ்சிக்கு இல்லாமல் சாகும் நிலை.
தற்கொலை பண்ணிக் கொள்ளூம் அவல நிலை.
இதற்கெல்லாம் நமது நாடு நம்மிடம் இருந்தால் நடக்குமா?
சிலோனுக்கு இங்கிருந்து கள்ளத்தோணி ஏறிப்போகிறான்.
அவன் நம்மைப் பார்த்துக் கள்ளத்தோணி என்கிறான்.
குடி உரிமை இல்லாத மக்களாக இலட்சக்கணக்கில் அங்கே நம்மநாட்டு மக்கள் அவதிப் படுகிறார்கள்.
எது தேசத்துரோகம்?
இதைக் கேட்க- கண்டிக்க-இதை உணர்ந்த தக்க முறையில்பரிகாரம் தேடுவதற்கு ஒருவரும் இல்லையே!
இதையெல்லாம் எடுத்துச் சொல்லி இந்த அக்கிரமங்களைஒழிக்க, நம் நாடு நமக்கு ஆகவேண்டும் என்று கேட்டால், அது தேசத்துரோகம்என்கிறார்கள்.
நான் கேட்கிறேன் எது தேசத்துரோகம்?
யார் தேசத்துரோகிகள்?
(தந்தைப் பெரியார்-மே1960- (அபாயச் சங்கு -பெரியார்அச்சிடுவோர் வெளியிடுவோர் குழுமம் பதிப்பு -1983 )
(இது தந்தைப் பெரியாரியாரின் 1960ல் பேசிய பேச்சு. இப்போதுள்ள ஈழச்சூழலுக்கு அப்படியேபொருந்துகிறது )
}

ஐ.நா சபை முன் சிவந்தன் தலைமையில் பேரெழுச்சியுடன் ஒன்று திரண்ட மக்கள்!

swis_un_1
ஈழத் தமிழருக்கு நீதி வேண்டும் என்று கோரி பிரித்தானிய தலைநகர் லண்டனில் இருந்து சுவிற்சலாந்தின் தலைநகர் ஜெனிவாவில் அமைந்திருக்கும் ஐ.நா மனித உரிமைகள் சபையை நோக்கி மனித நேய நடை பயணத்தை பல நாட்களாக மேற்கொண்டுள்ள சிவந்தன் இன்று தனது இலக்கினை அடைந்து விட்டார்.
இன்று மதியம் பிரான்ஸ் எல்லையில் இருந்து சுமார் 1.30 மணியளவில் சிவந்தனும், சுவிஸ் நாட்டில் கடந்த பல நாட்களாக நடைபயணம் மேற்கொண்ட மற்றும் 3 இளைஞர்களும் ஒன்றிணைந்தனர். அவர்களோடும் அங்கு குழுமி இருந்த தமிழ் மக்களோடு சுமார் 3 கி.லோமீட்டர் தூரத்தை நடந்து மதியம் 2.30 மணியளவில் ஜ.நா முன்றலுக்கு பேரணி வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு அவருக்கு செங்கம்பள வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் முருகதாசின் தாய் தந்தையரால், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதோடு, முருகதாஸ் தன்னை மாய்த்துக்கொண்ட இடத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெறுகின்ற இன் நிகழ்வில் ஜ.நா அதிகாரிகளிடம் சிவந்தன் உட்பட நால்வர் சென்று தமது கோரிக்கை மனுவைக் கையழிக்க இருக்கின்றனர்.
சுவிஸ் இளையோர் அமைப்பு இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை மிகவும் திறம்பட அமைத்து இருந்தது மிகுந்த பாராட்டுதலுக்கு உரியது. அதே போல பிரான், இத்தாலி, ஜேர்மனி, போன்ற பல நாடுகளின் இளையோர் மைப்புகளும் இதில் இணைந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்விடத்திலிருந்து மருத்துவர் இந்து நமது மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி:
}
Share/Bookmark

மீனகம் தளம்

மீனகம் தளம்
பிரிட்டிஷ் இளைஞரின் நடைப்பயணம் நிறைவடைந்தது


லண்டன், ஆக. 20: இலங்கைப் போரில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பிரிட்டிஷ் தமிழ் இளைஞர் கோபி சிவந்தன் மேற்கொண்ட நடைப்பயணம் ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.  இலங்கை அரசுக்கு எதிராக லண்டனில் இருந்து ஜூலை 23-ம் தேதி அவர் தனது நடைப்பயணத்தை துவங்கினார். பல்வேறு நாடுகளைக் கடந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா. சபை அலுவலகத்தில் தனது பயணத்தை வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார்.பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஜெனீவாவில் கூடி, அவரை வரவேற்றனர்.
கருத்துக்கள்

நடை வீரர் கோபி சிவந்தன் நடைப்பயணம் மேற்கொண்ட பகுதியில் எல்லாம் பெரும் வரவேற்பு இருந்ததையும் பிற பகுதி மக்களும் உளமார வரவேற்றுள்ளதையும் கருத்தில் கொண்ட பன்னாட்டு அவை எந்த அச்சுறுத்தலுக்கும் இணங்காமல் பன்னாட்டு உசாவலுக்கு ஆணையிட வேண்டும்.ம
லர்க மனித நேயம்! வெல்க தமிழ் ஈழம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 7:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து

First Published : 21 Aug 2010 04:22:01 PM IST

Last Updated : 21 Aug 2010 06:49:28 PM IST
ராஜீவ் பிறந்தநாள் விழாவுக்கு செலவிட்ட பணத்தைக் கொண்டு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியிருக்கலாம்: பாஜக எம்.பி. ஆதங்கம்


புது தில்லி, ஆக.20: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா விளம்பரத்துக்கு செலவு செய்த பணத்தைக் கொண்டு லே பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி இருக்கலாம் என்று மாநிலங்களவை பாஜக உறுப்பினர் பிரபாத் ஜா கூறினார்.÷மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் இதுகுறித்து பிரச்னை எழுப்பி அவர் பேசியதாவது: ராஜீவ் காந்தி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிறந்தநாளையொட்டி விளம்பரங்கள் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் செய்யபட்டுள்ளன. இந்த பணத்தை லே பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அனுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.÷மழை, வெள்ளத்தால் லே பகுதியிலுள்ள மக்கள் குடிக்க நீரின்றியும், அடிப்படை சுகாதார வசதிகளின்றியும், இருக்க இடமின்றியும் அவதிப்படுகின்றனர். இந்தத் தொகையை அந்தப் பணிகளுக்குச் செலவிடப்பட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார் அவர். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆவேசமாக குரல் எழுப்பினர். பிரபாத் ஜாவுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. பாஜக உறுப்பினர் தனது கருத்துகளை வாபஸ் பெறவேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் மாநிலங்களவை தலைவர் தலையிட காங்கிரஸ் உறுப்பினர்கள் அமைதியாயினர்.
கருத்துக்கள்

சரியான கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார். இதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? வீணான வகைகளில் செலவிடும பணம் தேவைப்படும் மக்களுக்குச் செலவழிக்கப்பட்டாலும் செலவழிப்பவர்களுக்கு அது விளம்பரம்தானே! அவ்வாறு நல உதவிகள் செய்து விட்டுத் தங்கள் படங்களைப் போட்டுப்பதாகைகள், விளம்பரப் பலகைகள் முதலானவற்றைக் காட்சிக்கு வைக்கலாமே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 7:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
சுயமரியாதை இயக்கத்துக்கு நான் நன்றிக் கடன்பட்டவன்: முதல்வர்


சேலம், ஆக. 20: சுயமரியாதை இயக்கத்துக்கு என்றென்றும் நன்றிக் கடன்பட்டவனாக இருக்கிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.சேலத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இல்லத் திருமண விழாவில் வெள்ளிக்கிழமை பங்கேற்று முதல்வர் பேசியது:எனக்கு எல்லா நிலையிலும் ஆலோசனை கூறக் கூடியவராக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இருக்கிறார். அழகிரி வாலிபக் கோளாறு காரணமாகவோ, அவர் பட்ட துன்பம் காரணமாகவோ ஆவேசமாகப் பேசினார். பன்னீர் செல்வமும் அதேபோலப் பேசினார். நானும் ஆவேசமாகப் பேசும் நேரங்களில் எனக்குள் அழகிரி புகுந்துள்ளார் என்றுதான் எண்ணுவேன். நான் கூறுவது தளபதி அழகிரி சாமி என்னும் எனது தலைவர்களில் ஒருவரைத்தான். ராஜாஜி காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாதத்திறமை மிக்க பன்னீர் செல்வத்தைப் போலவே எம்.ஆர்.கே.வும் பேசியுள்ளார். ஆனால் திருமணம் போன்ற நல்ல நிகழ்ச்சிகளில் கெட்டவர்களைப்பற்றிப் பேசக் கூடாது. தமிழர்கள் லட்சியத்தை, இலக்கிய வளத்தை காத்து வளர்த்தவர்கள். அவர்கள் அன்று காப்பாற்றியதை வழி வழியாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு. கலை, இலக்கிய மரபை, சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள மாவீரர்களின் புகழை பாதுகாத்து அதை மேலும் பட்டொளி வீசிப் பறக்கச் செய்ய வேண்டும்.தமிழர்கள் இன ரீதியாக அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் அவர்களிடையே சுயமரியாதை உணர்வை உசுப்பிவிட்டவர் பெரியார். நான் கலைஞராக மதிக்கப்படக்  காரணம் இந்த இயக்கம்தான். எனவே இதற்கு நான் நன்றிக் கடன்பட்டவனாக இருக்கிறேன் என்றார் கருணாநிதி
கருத்துக்கள்

அழகிரி வாலிபர் என்றால் அவரையே இளைஞர் அணித் தலைவராக நியமிக்கலாமே! தொண்டர்களை அரவணைத்துத் திட்டமிட்டுச் செயலாற்றுவாரே! இளைஞர் அணியை மதுரை மண்டலம் போல் மாற்றிக் காட்டுவாரே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 7:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வாங்கிய ரசீது உள்ளது: மு.க.அழகிரி


சேலம், ஆக. 20: ஆண்டிப்பட்டியில் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்பட்ட ஹார்லிக்ஸ் பாட்டில்கள் விலை கொடுத்து வாங்கப்பட்டவை, அதற்கான ரசீது என்னிடம் உள்ளது என்று மத்திய ரசாயனம், உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறினார். சேலத்தில் வேளாண்மைத்துறை அமைச்சரின் இல்லத் திருமண விழாவில் அவர் பேசியது: கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டி தொகுதியில் பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தியபோது 200 கிராம் எடையுள்ள சுமார் 9 ஆயிரம் ஹார்லிக்ஸ் பாட்டில்கள் வழங்கினேன். ஆனால் இவை சோழவந்தான் பகுதியில் இருந்து திருடப்பட்டவை என்று ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த பாட்டில்களை நான் விலை கொடுத்துதான் வாங்கினேன். அதற்கான ரசீதுகள் என்னிடம் உள்ளன. இந்த வழக்கை நான் எங்கு வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.
கருத்துக்கள்

கோடிக்கணக்கில் வாக்காளர்களுக்காகச் செலவிடும் பொழுது இதைத் திருட வேண்டிய தேவை ஏன் வருகிறது? ஒரு வேளை இவரிடம் பணம் வாங்கியவர் பணம் கொடுக்காமல் திருடிவிட்டாரா? ஏன், இவ்வளவு காலத்தாழ்ச்சியாகப் பணச் சீட்டு உள்ளதைச் சொல்ல வேண்டும். அப்படியானால் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட பொழுது பணச் சீட்டு இல்லையா? சேலத்திற்கு வந்த பொழுதுதான் கிடைத்ததா? காணாமல் போன ஆர்லிக்சு குப்பிகள் எங்கே மறைந்தன? காணாமல் போன குப்பிகளின் எண்ணிக்கையும் ஆண்டிப்பட்டியில் வழங்கிய குப்பிகளின் எண்ணிக்கையும ஒத்துப் போவது ஏன்? 10,000 குப்பிகள் வழங்காமல் ஏன் குறைவாகக் கொடுக்க வேண்டும்? அஃது என்ன கணக்கு? என்றெல்லாம் வினாக்கள் எழுகின்றன. குழப்பத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 7:06:00 AM
எவ்வளவோ பண்றோம். ஒரு ரசீது தயார் செய்யமுடியாதா? திருடுபோன ஹார்லிக்ஸ்-ய கண்டுபிடிக்க துப்பில்லை. இந்த ரசீது யாருக்கு வேணும்?
By Vijay
8/21/2010 5:40:00 AM
appadi enna unakku avalavu akkarai aandipatti makkal meeethu un ooru madhurai bus standil irukkum pavappatta pichaikararkalukku uthavinal unakku punniyam kitaikkum allava
By ravi abudhabi
8/21/2010 2:52:00 AM
இதே மாதிரி நாடாளுமன்றத்திலேயும் தைரியமா பேசுங்க அண்ணே. நீங்க பேசாம ஓடி ஒளியுறது, எங்களுக்கு எல்லாம் அவமானமா இருக்கு. நீங்க பேசாம இருந்தீங்க, மதுரைக்காரன்னா சினிமாவில கூட நம்மளை மதிக்கமாட்டனுங்க. மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
8/21/2010 1:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கோவனின் கூட்டணிக் கூக்குரல்

நாளையே கூட்டணி மாறலாம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்


சென்னை, ஆக. 20:  தமிழகத்தில் நாளையேகூட கூட்டணி மாறலாம் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.÷ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கருத்துகள் கூட்டணியை "வலி'ப்படுத்துகின்றன என்று முதல்வர் கருணாநிதி கூறிய பிறகு, மீண்டும் இளங்கோவன் இந்தக் கருத்தைக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரை வைக்கக் கோரி, ""காங்கிரஸ் நட்பகம்'' என்ற அமைப்பு சார்பில் சென்னை காயிதே மில்லத் மணி மண்டபம் அருகே வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை வாழ்த்தி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது:ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அவரது உடல் சென்னை அரசு பொது மருத்துவமனையில்தான் வைக்கப்பட்டிருந்தது. எனவே அவரின் நினைவாக அந்த மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. இனியும் தாமதிக்காமல் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்ட வேண்டும்.மத்திய அரசின் நலத் திட்டங்களை எல்லாம் தனது திட்டங்கள் என்று தமிழக அரசு பிரசாரம் செய்து வருகிறது. 108 ஆம்புலன்ஸ் திட்டம் மத்திய அரசின் திட்டமாகும்.மாநில அரசின் திட்டம் என்றால் அந்த வாகனங்களின் மீது முதல்வரின் படம் போட்டு விளம்பரப்படுத்தி இருப்பார்கள். அவ்வாறு இல்லாததைக் கொண்டே இது மத்திய அரசின் திட்டம் என்பதைப் புரிந்து  கொள்ளலாம்.இன்று காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. நாளைக்கே வேண்டுமானாலும் கூட்டணி மாறலாம். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.யாருடைய வருமானத்திலும் நாங்கள் பங்கு கேட்கவில்லை. ராஜீவ் காந்தியின் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு பொது மருத்துவமனைக்கு அவரின் பெயரை வைக்குமாறுதானே கேட்கிறோம்.நடிகர் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட அரசிடம் பணம் இல்லாவிட்டால் எங்களிடம் நன்கொடை கேளுங்கள், நாங்கள் தருகிறோம்' என்றார் இளங்கோவன்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் மெய்யப்பன், காங்கிரஸ் நட்பகத்தின் தலைவர் ராமலிங்க ஜோதி உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.காங்கிரஸ் தலைமை என்ன செய்யும்?தமிழகத்தில் மாநில அரசில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு தராமல் மத்திய அரசில் மட்டும் இலாகாக்களைக் கேட்டு வாங்கிக் கொள்கிறது திமுக என்ற ஆதங்கம் காங்கிரஸôரிடம் பரவலாகவே இருக்கிறது. பலமுறை வாய்விட்டு கேட்டும்கூட திமுக தலைமை அவர்களின் கோரிக்கைகளை மதிக்கவே இல்லை.  திமுகவை விலக்க காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைமை விரும்பவில்லை. அதே சமயம் திமுகவின் கூட்டணியால்தான் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் வலுப்படாமல் இருக்கிறது என்ற எண்ணம் தில்லியில் காங்கிரஸ் வட்டாரங்களில் நிலவுகிறது. இதனால்தான் கட்சியின் பொதுச் செயலாளரான ராகுல் காந்தி இளைஞர் காங்கிரûஸ வலுப்படுத்த தமிழ்நாட்டுக்கு வந்தாலும் தோழமைக் கட்சித் தலைவரான முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தம்கூட சந்திக்காமல் தவிர்க்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை அதிமுக விரும்புகிறது. அதை அக்கட்சியின் தலைவர் ஜெயலலிதா பொதுக்கூட்டங்களிலேயே குறிப்பாகத் தெரிவித்திருக்கிறார். தமிழக மக்களிடமும் அதிமுகவுக்குச் சாதகமான போக்கு ஏற்பட்டு வருவதை கோவை, திருச்சி பொதுக்கூட்டங்கள் உணர்த்துகின்றன. இதையெல்லாம் கணித்தே மாநில காங்கிரஸ் தலைவர்களில் சிலர் திமுகவை வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.திமுகவைவிட்டு அதிமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி மாறும் என்று கூற முடியாவிட்டாலும், திமுகவுடன் கூட்டணி அப்படியே தொடரும் பட்சத்தில் அதிக எம்.எல்.ஏ. தொகுதிகள், ஆட்சிக்கு வந்தால் அரசில் பங்கு ஆகியவற்றைக் கேட்டு பேரம் பேச காங்கிரஸ் கட்சிக்கு பிடி கிடைத்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கள்

1. காமராசர் ஆட்சியைக் கொண்டு வருவதாக நொடிக்கு முந்நூறு தடவை உளறும் காங்கிரசார் அனைத்து இந்தியக் காங்.தலைவராக இருந்த பெருந்தலைவர் கருமவீரர் காமராசர் பெயரை வடக்கே சூட்டி விட்டு இராசீவ் காந்தியின் பெயரைச் சூட்டுவதற்குக் கோரிக்கை வைப்பதுதான் முறை.மண்ணின் மைந்தர்கள் அல்லவாதவர்பெயர் சூட்டுவதற்காகப் போராடுபவர்கள யாராக இருந்தாலும் அவர்களைப் பிடித்து உள்ளே போடவேண்டும். 2. கூட்டணி முறிந்த செய்தி தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். உடனே அந்தம்மாவும் இவர்களைக்கைவிட நடுத்தெருவில் இவர்கள் பைத்தியம் பிடித்து அலைவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்த நாள் எந்த நாளோ? கோவனே உன் உரிமைக் குரலை உரத்து எழுப்பி விரைவில் உறவை முறிப்பாயாக. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
8/21/2010 6:15:00 AM
thevadiya paiyan rajasji, is still eating the toilet of Jeya and Sasi? Where is he?
By ahamed
8/21/2010 4:24:00 AM
அம்மாகூட கூட்டணி வச்சிங்கன்னா, காங்கிரஸ்காரன் யாராவது ஏதும் பேசமுடியுமா? இதையெல்லாம் நல்லா யோசிச்சிட்டு, சீக்கிரம் தனியா நிக்கிறதுக்கு வழியை பாருங்க. (தமிழ்நாட்டில் காங்கிரசை மொத்தமா ஒழிக்கிறதுக்கு இதுதான் நல்ல வழி) . மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்.
8/21/2010 1:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலக்குவனாரே! நீர் சொல்வது கேட்பதற்கு நல்லத்தான் இருக்கு. ஆனால் தமிழ்நாட்டின் துரதிருஷ்டம் ஒரு ... அதிமுக என்ற கம்பனியை வைத்துக்கொண்டு கணிசமான ஓட்டு வங்கியை வைத்துக்கொண்டு எப்போட காங்கிரஸ் கூட்டணி கிடைக்கும் என்று ... அலையுதுப்பா! அதான் இந்தா ...கோவன் பயல் வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டிக்கிட்டு இருக்கான். அதிமுக கதவு திறந்திருப்பதால் திமுக அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது.திமுக இல்லாவிட்டால் அதிமுக போயி சீட்டு வாங்கிடுவான்கள். எனவே காங்கிரஸ்கரானுங்க ஏதோ உளறுவாயன்கள். ஆனால் ஜெயா போன்ற தீயசக்திகள் வளர்வதைதான் முதலில் தடுக்க வேண்டும். எதிர்கால தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிமுகவும் ஜெயாவும் நிரந்திர தடைகள்!
By தொல்காப்பியனார்
8/21/2010 7:45:00 AM