சனி, 6 ஏப்ரல், 2019
புதன், 3 ஏப்ரல், 2019
செவ்வாய், 2 ஏப்ரல், 2019
செம்மொழி விருதுக் குழுவை நீக்கக் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை
அகரமுதல
சமற்கிருத ஆதிக்கவாதிகளான என். கோபாலசாமியும், இரா. நாகசாமியும்
தமிழ்ச் செம்மொழி விருதுக்குழுப் பொறுப்பாளர்களா?
செம்மொழி ஆய்வு மையம் தமிழை வளர்க்கவா? தகர்க்கவா?
புல்லுருவிகளைப் பொறுப்பிலிருந்து நீக்கு!
சென்னையில் நாளை பங்குனி 20, 2050 /03.04.2019) காலை 10.00மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம்!
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப்படும் தமிழ்ச் செம்மொழி விருதுகளுக்கான தேர்வுக் குழுவில், தமிழ் மொழிக்கு எதிரான புல்லுருவிகளை இந்திய அரசு அமர்த்தியுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், திருப்பதியிலுள்ள இராட்ரீய சமற்கிருத வித்தியா பீடப் பல்கலைக் கழகத் துணைவேந்தருமான திரு. என். கோபாலசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அக்குழுவில், திருக்குறளைக் கொச்சைப்படுத்தி நூல் எழுதியதற்காக இந்திய பா.ச.க. அரசால் விருது அளிக்கப்பட்டு பாராட்டப்பட்ட திரு. இரா. நாகசாமி உறுப்பினராக அமர்த்தப்பட்டுள்ளார்.
தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமக்களுக்கு விருது வழங்க, தமிழ் மொழிக்கு எதிரான கருத்தாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பது, இவ்விருது வழங்கும் நோக்கத்தையே சிதைப்பதாகும்!
எனவே, செம்மொழி விருதுக்குழுவிலிருந்து என். கோபாலசாமி – இரா. நாகசாமி ஆகியோரை உடனே நீக்க வேண்டும்! தகுதியுள்ள தமிழஞர்களை அக்குழுவில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி, நாளை பங்குனி 20, 2050 /03.04.2019) காலை 10 மணிக்கு, அடையாறு மத்திய கைலாசு அருகிலிருந்து பேரணியாகப் புறப்பட்டு – செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முன்பு – தமிழுரிமைக் கூட்டமைப்பு சார்பில் தமிழறிஞர்களும் பல்வேறு தமிழ்த்தேசிய அமைப்புகளும் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வேங்கடராமன்தலைமையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்கிறது!
தமிழின உணர்வாளர்களும், தமிழ் மக்களும் இவ்வார்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கிறது!
தொடர்புக்கு – 9840167599, 9025162216
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
ஞாயிறு, 31 மார்ச், 2019
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் முனைவர் க.தமிழமல்லன்! வாகை மாலை அணிவிப்பீர்!
அகரமுதல
புதுச்சேரி மாநிலத்தில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்தம் 8 பேர் போட்டி இடுகின்றனர்.
அவர்களுள் கால்பந்து சின்னத்தில் தனியராக முனைவர் க.தமிழமல்லன் போட்டியிடுகிறார்.
அவரது தேர்தல் அறிக்கை வருமாறு:
அனைவரும் வாழ்க! அனைவரும் உயர்க!
முனைவர் க.தமிழமல்லன் சிறந்த வேட்பாளர்!
முனைவர் க.தமிழமல்லன் தமிழ்ஆசிரியர் (ஓ) , பாவலர், இதழ்ஆசிரியர், தனித்தமிழ்இயக்கத் தலைவர். அவர் ஒழுக்கம் உடையவர். நேர்மையானவர். துாய்மையானவர்.
முனைவர் க.தமிழமல்லன்! சிறந்த அறிஞர், உயர்கல்வி கற்றவர், பல நுால்களை இயற்றியவர். வெல்லும் துாயதமிழ் என்னும் மாத இதழை 26 ஆண்டுகளாக நேர்மையாக வெளியிட்டு வருபவர்.
தட்டாஞ்சாவடித் தொகுதியை மேம்படுத்திப் பொலிவுநகராக்கத் துடிப்பவர். முனைவர் க.தமிழமல்லன் தட்டாஞ்சாவடித் தொகுதியைச் சேர்ந்தவர்!
நிறைவேற்ற உள்ள பணிகள்
நமதுதொகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அரசின் உதவிகள் எளிதில் கிடைக்க ஆவன செய்யப்படும்.
குடும்ப அட்டைக்குரிய பொருள்கள் சரியான அளவில் கிடைக்கச் சட்டப்படி ஏற்பாடு செய்யப்படும்.
மின்சாரம், குடிநீர், சாலைச்சீரமைப்பு ஆகிய பணிகள் சரியாக நடக்க ஆவன செய்யப்படும்.
மக்களுக்கு விளையாட்டுத்திடல், சிறுவர்பூங்கா அமைக்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து வட்டங்களிலும் அரசுமூலம் மருத்துவமனை, நுாலகம், அஞ்சலகம் அமைக்க முயற்சி எடுக்கப்படும். பாதாளச் சாக்கடைப்பணிகளை விரைவு படுத்திப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் இளையதலைமுறைக்குச் சொந்தத் தொழில் தொடங்க அரசுமூலம் ஏற்பாடு செய்யப்படும் .மகளிர்க்கும் இளைஞர்க்கும் தன்உதவிக்குழுக்களுக்கும் தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்படும். அரசு மூலம் மேனிலைப்பள்ளி, கல்லுாரி, உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ஆவன செய்யப்படும். தொகுதிக்குட்பட்ட உட்புறஊர்களில் சிறுபேருந்துப் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்படும். தொகுதியில் உள்ள தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்களில் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முயற்சிசெய்யப்படும்.
நகராட்சியின் துப்புரவுப் பணிகள் மேம்படுத்தப்படும். அனைத்துப்பகுதிகளிலும் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து நிழல்தரும் மரங்கள் நடப்படும். கொட்டுப்பாளையம் புதுமை மீன்அங்காடியை விரிவுபடுத்தி அங்கே காய்கறிகள், பழங்கள், மளிகைப்பொருள்கள் போன்றவை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துப் பகுதிகளிலும் தூயகுடிநீர் நிலையங்கள் அமைக்க முயலப்படும்.
புதுச்சேரிக்கு மாநிலத்தகுதி கிடைக்க முயற்சி செய்யப்படும்.
குற்றம் நிறைந்த அரசியலைத் துாய்மையாக்க முனைவர் க.தமிழமல்லனைத் தேர்ந்தெடுங்கள்!
புதுமை இலக்கியத் தென்றல் 788ஆம் நிகழ்ச்சி
அகரமுதல
பங்குனி 18, 2050 திங்கட்கிழமை 1.4.2019 மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை
புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 788ஆம் நிகழ்ச்சி
தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
தொடக்கவுரை: அமுதரசன்
சிறப்புரை: சரவணா இராசேந்திரன்
தலைப்பு: தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)