சனி, 13 ஜனவரி, 2018

திருவள்ளுவர் சிந்தனை உயராய்வு எழுச்சி மாநாடு

தை 02-3, 2049  சனவரி 15-16, 2018

காலை

வள்ளுவர் கோட்டம், சென்னை

திருவள்ளுவர் சிந்தனை உயராய்வு எழுச்சி மாநாடு

உலகத்திருக்குறள் மையம்

சைவ முன்னேற்றச் சங்கத்தின் தைப்பொங்கல் திருநாள்

அன்புடையீர்,

அருள்மிகு சிவகாமி அம்பாள்  இணை  சிதம்பரேசுவரர் ஆலயத்தில் 

சைவ முன்னேற்றச் சங்கத்தின்

தைப்பொங்கல் திருநாள் 

தை 01, 2049 ஞாயிற்றுக்கிழமை 14.01.2018

மாலை  6.00 மணிமுதல்

சிறப்பாக நடைபெறவுள்ளது.


தமிழர் திருநாளை – உழவர் திருநாளை உற்சாகமாகக் கொண்டாட அனைவரையும் வரவேற்கிறோம்.
திருவாட்டி தயாளன்
 செயற்பொறுப்பர்
சைவமுன்னேற்றக்கழகம், ஐக்கிய அரசு.

தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 2

தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்

2


இனித், தமிழ்வளர்ச்சிக்கு மாறான மாறுதல் என்னென்றால், தூய தமிழ்சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்து அயன்மொழிச்சொற்களை அதன்கட் கொண்டு வந்து புகுத்தலேயாம். ஓர் உடம்பின் உள்ளும் புறம்பும் உள்ள உறுப்புகள் எல்லாவற்றின் தொகுதியே அவ்வுடம்பாதல்போல, ஒரு மொழியில் உள்ள அதன் எல்லாச் சொற்களின் தொகுதியே அம்மொழியாகும். கூனுங் குறளும் ஊமுஞ் செவிடுஞ் சிதடும் உறுப்பறையுமாய்ச் சில உடம்புகள் இயற்கையிலே பழுதுபட்டிருத்தல் போலவும், அங்ஙனம் பழுதுபட்ட உடம்புகள் அக்குறைபாட்டை நீக்கிக்கொள்ளும்பொருட்டுக் கோலுங் குறடும் எழுத்தும் போலி கை கால்களுஞ் செயற்கையாகச் செய்து அமைத்துக்கொள்ளுதல் போலவும்இயற்கையிலேயே குறைபாடு உடைய ஆங்கிலம் மலையாளம் கன்னடம் தெலுங்கு வங்காளி இந்தி முதலான மொழிகளே மற்றை மொழிச் சொற்களின் உதவியைப் பெரிதும் வேண்டிநிற்கின்றன. மற்று எல்லா நிறைவும் உடைய தமிழ்மொழிக்கோ அங்ஙனம் பிறமொழிச் சொற்களின் உதவி சிறிதும் வேண்டப்படுவதில்லை.
மக்கள் இம்மை மறுமை பற்றி அறிய வேண்டுவனவெல்லாம் முற்றும் எடுத்துக்கூறுந் தொல்காப்பியம்‘ ‘திருக்குறள்‘ என்னும் நூல்கள் இரண்டுந் தூய தனித்தமிழ்ச் சொற்களால் ஆக்கப்பட்டிருத்தலே யாம் கூறும் இவ் வுண்மைக்குச் சான்றாம். இங்ஙனந் தன் இயற்கைச் சொற்களால் அமைந்ததாகிய தமிழிற் பிறமொழிச் சொற்களைப் புகுத்துதல் எதுபோலிருக்கின்ற தென்றால்உள்ள உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டுவேறு மண்ணாலும் மரத்தாலும் செயற்கையாக அவ்வுறுப்புகள்போற் செய்து அவற்றை அதன்கண ஒட்ட வைத்துப் பார்த்தலுக்கே ஒப்பாயிருக்கின்றது. மயிர் குஞ்சி கூந்தல் முதலிய தமிழ்ச்சொற்களை விடுத்து ரோமம்‘ ‘சிகை‘ என்னும் வடசொற்களையும், உடம்பு தலை சென்னி முகம் முதலியவற்றை நீக்கிச் ‘சரீரம்‘ ‘சிரசு‘ ‘வதனம்‘ என்பவற்றையுங், கண் காது செவி மூக்கு என்பவற்றுக்கு நயனம்‘ ‘கர்ணம்‘ ‘நாசி என்பவற்றையும், மிடறு கழுத்து என்பவற்றுக்கு மாறாகக் ‘கண்டம்‘ என்னுஞ் சொல்லையுந் தோள் கை முதலியன இருக்கப் ‘புஜம்‘ ‘கரம்‘ என்பவற்றையும், வயிறு அகடு இருக்க ‘உதரம்‘ ‘குஷி‘ என்பவற்றையும், கால் அடி என்னுஞ்சொற்களுக்குப் ‘பதம்‘ ‘பாதம்‘ என்பவற்றையுங், கொண்டுவந்து நுழைத்தல், அவ்வத் தமிழ்ற் சொற்களாகிய உறுப்புகளை வெட்டியெறிந்துவிட்டு, அவை போன்ற ஏனை மொழிச்சொற்களைக் கொணர்ந்து அத்தமிழ் உடம்பின்கண் ஒட்டவிடுதலையே போல்கின்றதன்றோ? பொருள்களை ‘வஸ்துகள்‘ என்று சொல்வது எற்றுக்கு? ஒளியைப் ‘பிரகாச‘ மென்றும், ஓசையைச் ‘சப்தம்‘ என்றுஞ் சுவையை ‘ருசி‘ என்றும், மணத்தை ‘வாசநை‘ என்றுந், திதித்திப்பு இனிப்பை ‘மதுரம்‘ என்றுந். தண்ணீர் சோறு உணவு என்பவற்றை ‘ஜலம்‘ ‘அந்நம்‘ ‘ஆகாரம்‘ என்றும், ஆடையை ‘வஸ்திரம்‘ என்றுங், கட்டாயம் என்பதை ‘அவஸ்யம்‘ எனறுந், தாய் தந்தை மகன் மகள் உறவினரை ‘மாதா‘ ‘பிதா‘ ‘புத்ரன்‘ ‘புத்ரி‘ ‘பந்துக்கள்‘எனறுந், துன்பம் கேடு குடும்பம் என்பவைகளைக் கஷ்டம்‘ ‘நஷ்டம்‘ ‘சம்ஸாரம்‘எனறுந், தலைமுழுக்கு வழிபாடு இளைப்பு தூக்கம் முதலியவைகளை ஸ்நாநம்‘ ‘பூஜை‘ ‘ஆயாசம்‘ ‘நித்திரை‘ என்றும், நினைத்தல் எண்ணல் சொல்லுதல் என்பவற்றை ஞாபகம்‘ ‘பாவநை‘ ‘வசனித்தல்எனறுந், தூய தமிழ்ச்சொற்களை ஒழித்து வடமொழிச் சொற்களைக் கொண்டுவந்து புகுத்தித் தனித்தமிழ்ச் சொற்களை வழங்காமல் தொலைப்பதுதானா நமது அருமைச் செந்தமிழ்மொழியை வளர்த்தல்? அறிவுடையீர் கூறுமின்கள்!
இன்னும் இங்ஙனமே எத்தனையோ ஆயிரஞ் சொற்களை வடமொழி முதலான பிறமொழிகளினின்றுங் கொண்டு வந்து, அவற்றைத் தமிழிற் புகுத்தி, அதன் தூய தனிச் சொற்கள் ஒவ்வொன்றாக வழக்கு வீழ்ந்து போகுமாறு செய்வதுதானா தமிழையும் பிறமொழிகளையுங் கற்றவர் அதற்குச் செய்யும் உதவி? தான் பிடித்ததை எப்படியாவது நிலைநாட்டிவிட வேண்டுமென்று முன்வந்து தமிழ் மொழியைத் தொலைக்க வழிதேடுவதுதானா தமிழ்கற்று அதனாற் பிழைப்பவர் அதற்குச் செய்யும் நன்மை? தமிழையும் பிறமொழியையுங் கற்க்கற்கத் தமிழ்மொழிச் சொற்கள் இவை அயல்மொழிச் சொற்கள் இவையென்று நன்குணர்ந்து தமிழில் ஏனையவற்றைக் கலவாமற்பேசுதல் எழுதுதலும், தமிழில் முன்னமே வழக்குவீழ்ந்த சொற்களையுந் திரும்ப எடுத்து வழங்கவிடுதலும் அல்லவோ கற்றவர் அம்மொழியைப் பாதுகாத்து வளர்த்தற்குச் செய்யும் நன்முறையாகும்!
ஆங்கிலத்தில் வல்ல நல்லிசைப் புலவர்களான சேக்சுபியர், மில்டன், செல்லி? தென்னிசன் முதலியோர் தம்மால் ஆனமட்டும் முயன்று அயல்மொழிச்சொற்கள் விரவாத தூய ஆங்கிலநடையிற் பல்லாயிரம் இனிய பாக்கள் பாடியிருப்பதாக அவர்களை ஆங்கில நன்மக்கள் எவ்வளவு புகழ்ந்து பேசுகின்றார்கள்! பிற்காலத்திருந்த தென்னிசன் தமதுகாலத்தில் வழங்காது மறைந்த தூய ஆங்கிலச் சொற்களையும் மீண்டும் எடுத்து வழங்கி அவற்றை வழங்கவிட்டமைக்காகஅவர் சுற்ற்றவுடைய ஆங்கில நன்மக்களால் எவ்வளவு பாராட்டப்படுகின்றார்! சான்சன், கிப்பன் என்னும் உரைநூற் புலவர்கள் மற்றைத் துறைகளிற் சிறந்தவர்களாயிருந்தும், அவர்கள் இலத்தீன், கிரீக்கு முதலான அயன்மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துத், தம் உரை நூல்களில் விரவைத் தெழுதினமைக்காக அவர்களை அந் நனமக்கள் இன்னுங் குறைத்துப் பேசுதல் ஆங்கிலநூலுரை வரலாறு கற்பார் எவரும் நன்கு உணர்வரன்றோ?
ஆங்கிலமொழியில் இலக்கண நூற் புலவராய் விளங்கிய மிக்கிள்சான் என்னும் ஆசிரியர், “பழைய நாளில் ஆங்கிலமக்கள் நாகரிகம் அற்றவராய் இருந்தமையானே பலமொழிபேசும் பல்வகைநாட்டாரும் அவரமேற் படையெடுத்து வந்து அவர்தம் நாடு நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு அவரொடு நெடுக்க கலந்துவந்தனர்“ எனவும், “அதனாற் பலமொழிச் சொற்களும் வெற்றியாளராய் நிலைபெற்ற அப் பலர் வாயிலாக நீக்கமுடியாதவாறு ஆங்கிலமொழியிற் கலந்து நிலைபெறலாயின“ எனவும் “ மொழிக்கலப்பின் வரலாற்றை எடுத்துக் காட்டியபின், “பதினெட்டாம் நூற்றாண்டில், இலத்தீன் மொழிச்சொற்களை மிக்க் கலந்தெழுதும் நடை புது வழக்கமாய் வந்துவிட்டது. ‘உரோம் அரசியலின் இறக்கமுஞ் சிதைவும்‘ என்ற நூலை எழுதிய கிப்பன் என்பவரும், அந் நூற்றாண்டிற் சிறந்த ஆங்கிலச் சொற்பொருள் எழுதிய சான்சன் என்பவரும் இலத்தீன் மொழிச்சொற்களை நிரம்பவும் மிகுதியாய் எடுத்துக் கையாண்டனர், கிப்பன் நூற்றுக்கு முப்பது சொல் விழுக்காடும், சான்சன் இருபதெட்டு விழுக்காடுமாக அயன் மொழிச் சொற்களை விரவவிட்டனர். ஆனால், உள்ளுர் நிகழ்ச்சிகளைப்பற்றிக் கலப்பில்லாமல் எழுதிய புலவர்களிடத்தும் அவர்கள் இயற்றிய நூல்களிடத்தும் நாம் வரும்போது, இலத்தீன் மொழிச்சொற்கள் மிக மிகக் குறைவாக இருத்தலைக் காண்கின்றோம். சான் முனிவரது நூலின் மொழி பெயர்ப்பில், நூற்றுக்கு நான்கு இலத்தீன் சொற்களே காணப்படுகின்றன; அதில் இன்னும் பலவிடங்களில் இலத்தீன் மொழிச்சொற்கள் ஒன்று கூட இல்லாத பாக்கள் பலவற்றை நிரைநிரையாய் எடுத்துக்காட்டலாம்“ என்று கூறிப் பின்னும் “பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இச் சொற்களைத் தொகுதியாய்க் கொண்டு வந்து நுழைக்கும் நோக்கம் வலுப்பட்டது. அங்ஙனமே அவை உரிய இடங்கள் முன்னமே நிரப்பப்பட்டமையுந், தாம் வேலை செய்தற்கு வாய்த்த பொழுதுகள் முன்னறிந்து நிறுத்தப்பட்டமையுங் கண்டவுடனே அவை வந்தபடியே திரும்பிவிடலாயின. அதுமுதல் அவை பின்னர்க் கேட்கப்படவே இல்லை. குருமுதல்வரான செரிமிடெய்லர் Sportiveness என்னும் ஆங்கிலமொழிக்கு மாறாக ludibundness என்னும் இலத்தீன் மொழியையும், mental blindness என்பதற்கு மாறாக clancular என்னுஞ் சொல்லையும், cruelty என்பதற்கு மாறாக ferity என்னுஞ் சொல்லையும், lady’s maid என்பதற்கு வேறாக paranymph என்னுஞ் சொல்லையுங் கொணர்நது வழங்கினார். ஏளனஞ் செய்யத்தக்க அளவாக இத்தகையநடை பெருகி வரவே, இத் தன்மையவான சொற்களை வழங்குதலில் உண்மையான பயன் இல்லையென்பது ஆங்கிலமக்களின் நல்லறிவுக்குப் புலப்படலாயிற்று; புலப்படவே அவை அமைதியுடன் கைவிடப்பட்டன. ஆங்கிலங் கற்கும் இந்துவோ பெருந் தொகையான இலத்தீன் சொற்களைப் பயன்படுத்துதற்கு எப்போதும் பெருவிருப்புடையனாய் இருக்கின்றான்.“ என்று எழுதி, அதன்பின் ஓர் இந்து மாணவன் ஆங்கிலத்தில் ஆக்கிய ஒரு நாலடிச் செய்யுளை எடுத்துக்காட்டி “ஆங்கில மகன் எவனும் அவ்வளவு மிகுதியான இலத்தீன் மொழிகளைச் சேர்த்து ஒருநடை எழுதமாட்டான்“ என்று அதன பிழைகளை எடுத்துக் கூறிச், “சொற்களைச் செவ்வையாக வழங்கும் முறை இன்னதென்று உணரவும் அறியவும் வேண்டும அயலான் ஒருவன் அச் சொற்கள் வழங்கும் நாடுகளிற் போய்ச் சிலகாலம் அங்கே தங்கியிருக்கவேண்டும்“ என்றும், “நன்கு கற்றவர்கள் அயன்மொழிச் சொற்கள் விரவிய இத்தகைய ஆங்கில நடையைத் தங்களாற் கூடிய மட்டும் விலக்குகின்றார்கள்“ என்றுங். “கோல்ட்சிமித்து, இயேன், ஸ்ஃச்டீபன்சன் முதலானோரை ஒத்த புலவர்களின் நூல்களைப் பயின்று அவற்றின் சுவையை நுகரும் எந்த இளைஞனும் உரியகாலத்தே நல்ல தூய ஆங்கிலநடை எழுதுந் திறத்தைத் தானே திண்ணமாய்ப் பெறுவன்“ என்றும் முடித்துக் கூறுகின்றனர்; (Prof. J.M.D. Meikle John’s The Art of Writing English. ப. 121 132).
(தொடரும்)
தமிழ்க்கடல் மறைமலையடிகள்
தனித்தமிழ் மாட்சி

ப. பழனிச்சாமி எழுதிய அஞ்சலைக்கு அஞ்சலி நாடக நூலின் வெளியீட்டு விழா

அன்புடையீர்,
வணக்கம்.
14.01.2018 தைத் திருநாள் முதல்நாளன்று மாலை 3.30 மணிக்குச் சென்னைப் புத்தகக் காட்சி வளாக அரங்கில் (பச்சையப்பன் கல்லூரி எதிரில்), 

மொரிசியசுத் தமிழர் திரு. ப. பழனிச்சாமி அவர்கள் எழுதிய அஞ்சலைக்கு அஞ்சலி  நாடக நூலின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

உங்கள் வருகை, தமிழர் நலனையும் பண்பாட்டையும் பேண உழைக்கும்
மொரிசியசுத் தமிழர் திரு. பழனிச்சாமி அவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும்.
அன்புடன்
காந்தளகத்துக்காக,
சசிரேகா பாலசுப்பிரமணியன்

Land deed of disputed Kooniththeevu temple silently withdrawn

Land deed of disputed Kooniththeevu temple silently withdrawn


The files of the temple of Maththa'la-malai Murukan deity, which has been subjected to sudden claims of archaeological reserve by the Sinhala Buddhist establishment, have been secretly transferred away from Moothoor Divisional Secretariat this week by a District Secretariat official while the temple trustees were being kept in remand, informed civil sources told TamilNet on Thursday. The temple management had applied for official papers to document land ownership of the temple in 2014 and the Divisional Secretariat had recently received the land deed. But, it was transferred back to District Secretariat before the temple management was able to get it from the Divisional Secretariat, the sources said. 

In the meantime, the State prosecutor was not able to document the existence of a Gazette notification to prove the claims of archaeological reserve when the case for taken for hearing at Moothoor Magistrate’s court on Thursday.

The Tamil temple trustees firmly stated that there was no archaeological claim of a Buddhist stupa and that they had not violated any clause of archaeological significance.

However, the temple trustees had to admit their ‘failure’ to obtain permission from the SL authorities before deploying a bulldozer to level the ground on the hilltop. Such was the manipulation of the SL Justice system and the temple trustees had been threatened by Sinhala inmates when they were kept in remand, a grassroots activist who accompanied the trustees said. 

The trustees, after their release, told TamilNet that the SL Ministry of Resettlement and Hindu Affairs had donated money to reconstruct the Murukan temple in 2015 and 2016. 

“How could an government ministry fund the reconstruction if it was an archaeological reserve of a Buddhist vihara of Anuradhapura period,” they asked adding that a total of 535,000 rupees had been received from the SL Ministry for the reconstruction of Murukan temple. 

The temple is also an officially registered body with registration number HA/5/TM272 since August 2014, they said. 

The Murukan temple is reconstructed also with financial assistance from the people of the area. There are 112 families registered in Choodaik-kudaa, they said. The temple management was conducting daily prayers since October 2016 and the temple is yet to see its consecration ceremony, they said. 

Now, due to the controversial claim, the temple management is unable to proceed with further reconstruction. The Buddhist monks are making baseless and strange claims, the trustees further said.

Apart from the lawyers from Trincomalee, TNA Parliamentarian and lawyer M.A. Sumanthiran was also present at the Magistrate’s court on Thursday.

Sinhalicsiation threat looms again at Madu Road Junction in Mannaar

Sinhalicsiation threat looms again at Madu Road Junction in Mannaar


The Administrating Priest of the Catholic shrine of Our Lady of Madu in Mannaar, Rev Fr Emilianus Pillai, has expressed serious concerns over the deteriorating level of militarisation of Madu Junction area despite repeated complaints from the Madu Church to the SL President Maithiripala Sirisena over the past two years. The SL military has transformed the Madu Road Junction, an area with spiritual significance into an amusement and business site by operating a restaurant and conducting parties at the locality, the Catholic residents of the area have complained. 

Madu Road Junction is located on Mannaar - Mathavaachchi Road where the road to Madu Church branches off. 

The SL military is manning a check post at Madu Road Junction. There is also a mini camp with residences for Sinhala military officers. 

The Administrating Priest has complained to SL President in 2016 and in 2017 with the concerns of militarisation.

SL President Maithiripala Sirisena replied to his letter with a promising response to control the military activity at the junction. Subsequently, the SL military maintained a low profile at the junction for some time until August 2017. 

However, the military activities have again increased at the junction, Catholic devotees complain. 

The Catholic people in Madu are also suspecting the Sinhala military for silently preparing to install a Buddha statue at the junction as there is an increasing trend of Sinhala Buddhist tourism being promoted from South towards Mannaar in recent months. 

The previous regime of Mahinda Rajapaksa was openly promoting a Sinhala colony at the Madu Junction area. 


Madu Road, the location of Sinhala settlement in Madu region
Madu Road, the location of Sinhala settlement in Madu region



Chronology:

Occupying Sinhala military steals contracts, employment from Tamils in North

Occupying Sinhala military steals contracts, employment from Tamils in North


Lt Gen Mahesh Senanayake, the present commander of the occupying Sinhala Army of genocidal Sri Lanka is trying justify the overwhelming presence of the SL soldiers in the country of Eezham Tamils by claiming that one third of the soldiers were being deployed for construction work in civil sector. But, in reality, the Sinhala military is stealing the contracts from the firms of Tamils and is depriving Tamils of their employment. Ultimately, the SL military has seized the control of the entire market in the Tamil homeland from farming to construction, civil officials in Jaffna said. On the one hand, the unitary SL State is suppressing the Northern Provincial Council without allocating required funds for necessary development and rehabilitation work of the war-affected province, but on the other hand, it is waging a propaganda against the NPC as being inefficient, they further commented. 

The SL Defence Ministry in Colombo is diverting major construction contracts through the ministries of unitary State without letting the contracts to go through a tender process, according to Tamil civil officials in Jaffna.

All the SL ministries, from Health Ministry to Education Ministry, are exerting pressure on the civil administration in North to assign the contracts to the Sinhala military. 

Sinhala soldiers are seen taking up big contracts in Maruthangkea'ni area of Vadamaraadchi East and in the islands off Jaffna. 

The SL authorities are demanding the school sector in Jaffna peninsula to assign the building work to Sinhala Army's Engineering Division. 

Already, the Sinhala military is competing against the local farmers in big scale by running farms in fertile lands that have been seized from Tamils in Valikaamam North in Jaffna and in Vanni. It is also running restaurants and saloons. 

There are 35,000 Tamil youth without employment in Jaffna district alone. 

Sinhala soldiers are present at a ratio of 1 soldier per 6 civilians in the Jaffna district. 

In Mullaiththeevu district, the ratio is 1 Sinhala soldier per 2 Tamil civilians.




Related Articles:


Chronology:


வெள்ளி, 12 ஜனவரி, 2018

ஒன்பதின்மருக்குத் தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு

ஒன்பதின்மருக்குத்

தமிழக அரசின் விருதுகள்  அறிவிப்பு

2017ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்வளர்ச்சித்துறை வழங்கும் தமிழக அரசின் விருதுகள் வரும் தை03 – சனவரி 16 அன்று  சென்னையில் வழங்கப்படுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் நாள் விழாவில் விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குகிறார்.  விருது பெரும் தமிழறிஞர்கள்   நூறாயிரம் உரூபாய்க்கான காசோலை,  தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கிச் சிற்ப்பிக்கப்படுவர்.

விருதாளர்கள் :

அ.சுப்பிரமணியன் –   அண்ணாவிருது,
தா. இரா.தினகரன் –  காமராசர் விருது, 
கோ. பெரியண்ணன் – திருவள்ளுவர் விருது, 
முனைவர் ப.மருதநாயகம் – முத்தமிழ்க்   காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது
மேனாள் அமைச்சர் பா.வளர்மதி – தந்தை பெரியார் விருது,
எழுத்தாளர் வை.பாலகுமாரன் – தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது
கே.சீவபாரதி –  பாவேந்தர் பாரதிதாசன் விருது
முனைவர் சு.பாலசுப்பிரமணியன்  (எ) பாரதிபாலன் –  மாக்கவி பாரதியார் விருது

இவ்விழாவில்  அகவை முதிர்ந்த  தமிழறிஞர்கள் 50 பேருக்கு மாதந்தோறும் உரூ.2,500 – மருத்துவப்படி உரூ.100 வழங்குவதற்கான அரசாணைகள் வழங்கப்படுகின்றன.