புது தில்லி, ஜூலை 15: 85,000 டன்கள் அளவிலான ராணுவ வெடிபொருள்கள் தாற்காலிகமான இடத்தில் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி மாநிலங்களவையில் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:ராணுவத்தில் வெடிபொருள்களை சேமித்து வைப்பதற்கான வசதிகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.ராணுவ வெடிபொருள்களை திறந்தவெளியில் வைத்ததால் கடந்த சில வருடங்களில் பல்வேறு வெடிவிபத்து சம்பவங்கள் நேரிட்டன. மூன்று வருடங்களுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட ராணுவ வெடிபொருள்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதுதான் கடைசியாக நடந்த சம்பவம் ஆகும். ராணுவ வெடிபொருள்கள் 3127 டன்கள் மற்றும் கப்பற்படைக்குச் சொந்தமான 300 டன்கள் அளவிலான வெடிபொருள்கள் உபயோகப்படுத்த முடியாத நிலையில் அப்புறப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளன.வெடிவிபத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ராணுவத்திடம் உள்ள உபயோகப்படுத்த முடியாத அனைத்து வகையான வெடிபொருள்களையும் அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது என்றார் அமைச்சர் அந்தோனி.
திறந்த வெளிகளில் வெடிகுண்டுகளை வைத்துப் பழகியதால்தான் ஈழத்தில் திறந்த வெளிகளில் எரிகுண்டுகளைப் போடு்ம் பொழுது குற்ற உணர்வு ஏற்பட வில்லை போலும்! இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/16/2009 7:46:00 AM
7/16/2009 7:46:00 AM