புதன், 21 ஏப்ரல், 2010

நான் இருப்பதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்கான கல்லறை எனலாம்: நளினி

[கடிதம் இணைப்பு] கடந்த 19 ஆண்டுகளாக சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள நளினி, சிறையில் தமக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதம். இந்த கடிதம் அனுப்பப்பட்டதை தொடர்ந்து 20-04-2010 அன்று காலை 6.30 மணியளவில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் அறையில் துணிப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வேலூர் பாகாயம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

06-04-2010

அனுப்புனர்:
S. நளினி,
C 810,
பெண்கள் தனிச்சிறை,
வேலூர் – 632 002

பெறுனர்: சிறைத்துறை தலைவர்,
தமிழ்நாடு சிறைகள்,
சென்னை – 600 008.

வழி : உரியவர் ஊடாக

மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்.

நான் கடந்த 19 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் இருக்கிறேன். அதில் 13 ஆண்டுகாலம் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுட் சிறைவாசியாக இருந்து வருகிறேன். எனது கணவரும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருக்கிறார்.

இதுவரை சட்டப்படியும் சிறை விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டே நடக்கிறேன். எந்தவிதமான கெட்ட பழக்கங்களுக்கும் நான் அடிமை இல்லை. தவிர சிறை ஊழியர்களுக்கு கையூட்டு கொடுத்து அவர்களிடம் தேவையானவைகளை சாதிக்கும் பழக்கமும் எனக்கு இல்லை. இதனால் நான் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகிறேன். அவற்றில் முக்கியமானவை:

என்னை மனு பார்க்க வருபவர்களை பல மணி நேரம் காக்க வைத்து இழுத்தடிப்பது, எனது அம்மா, மாமனார், மாமியார் போன்ற வயதானவர்களை 2 மணி நேரம் முதல் 4 மணிநேரம் காக்க வைத்து திரும்ப அனுப்பிவிடுவது, அனுமதி மறுப்பது, மனு பார்க்க வருபவர்களை விரட்டி அடிப்பது, அவதூறாக பேசுவது, வாய் கூசும் விதமாக திட்டுவது என்று எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்கிறேன். என்னை மனுப்பார்க்க வருபவர்களை திட்டமிட்டு அலைக்கழிப்பது, மரியாதை குறைவான வார்த்தைகளால் இம்சிப்பது என்று யாரும் என்னை நேர்காண வரக்கூடாது என்ற விஷமத்தனமான வேலைகளை செய்கிறார்கள்.

என் வழக்கறிஞர்களை வேண்டுமென்றே காக்க வைத்து காரணம் கேட்டால் நான் தயாராகவில்லை என்று அவர்களிடம் என் மேல் பழிபோட்டு அவர்களை திசை திருப்புவது, அபாண்டமாக என்னையே என் உறவினர்களிடம் எதிராக பயன்படுத்துவது, தொடர்கதையே.

எனது நேர்காணலில் கொண்டு வரும் பொருட்களை எல்லாம் பயன்படு்த்தவே முடியாத அளவிற்கு சோதனை என்ற பெயரில் நாசம் செய்வது, துணிகளை கிழிப்பது, கொண்டுவரும் பைகளை கிழிப்பது என்று அதிகார துஷ்பிரயோகம் எல்லை மீறிக்கொண்டே போகிறது. நானும் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் சகித்துக் கொண்டும் போகிறேன்.

இதுவரை 19 ஆண்டுகளில் ஒருமுறை கூட சிறைவிதிகளுக்கு புறம்பான பொருட்களை கொண்டுவந்ததும் இல்லை. எனது நேர்காணலில் எனது உறவினர்களை சோதனை செய்து கண்டுபிடித்ததும் இல்லை.

சிறைவிதிமுறைகள் தண்டனை சிறைவாசியை 15 நாட்களு்ககு ஒரு நேர்காணல் மற்றும் வாரம் ஒரு கடிதமும் அனுமதிக்கிறது. கடிதத்தை நேர்காணலாக மாற்றி மாதம் 6 நேர்காணலும் பார்க்க முடியும். அதன்படியே கடந்த 5-6 வருடங்களாக அனுமதிக்கப்படுகிறோம். இந்த சிறையில் “ஏ” வகுப்பு சிறைவாசிகளுக்கான தனிமனு அறையும் கிடையாது. எம்மை சந்திக்க வரும் குழந்தைகளையும் நாம் தொடவும் முடியாத சூழ்நிலையே பெண்கள் சிறையில் நிலவுகிறது. ஆண்கள் மத்திய சிறைகளில் குழந்தைகள் தந்தையுடன் இருப்பதில்லை. ஆனால் பெண்கள் சிறையில் பெண்கள் குழந்தை பெற்றெடுப்பதுடன், கைக்குழந்தையுடன் கைதாகி வருவதால் பெண் சிறைவாசிகளுடன் குழந்தைகள் சிறையில் இருக்கிறார்கள். சந்திக்கவும் வருகிறார்கள். இது எமக்கு மிக அதிகமான மன உளைச்சலையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்கான கல்லறை எனலாம்.

சிறை மருத்துவரும், வெளி மருத்துவமனையிலிருந்து வரும் மருத்துவர்களும் பரிந்துரைககும் உணவுகளோ, பழங்களோ, காய்கறிகளோ நாம் பெற வழியில்லை. நேர்காணலில் கொண்டுவந்தாலும் சோதனை என்ற பெயரில் அழுக்கான இடங்களில் வீசுவது, அழுக்கான கைகளால் சாப்பாட்டு பொருட்களை கையாள்வது, ஏதும் கேட்டால் அவற்றை திருப்பி அனுப்புவது போன்ற அராஜக போக்கு அவர்கள் விருப்பம் இல்லாத எமது உறவினர்களை திருப்பி அனுப்புவது என்று நாளொரு வண்ணமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் எம்மை யாரும் மனு பார்க்க வரக்கூடாது என்ற காரணம் எம்மை யாரும் மனுப்பார்க்க வரக்கூடாது என்ற காரணம் எம்மை யாரும் மனுப்பார்க்க வரக்கூடாது என்ற திட்டமிட்ட அதிகார துஷ்பிரயோகமும், உள்நோக்கங்களும்தான்.

இதற்கான தீர்வுதான் என்ன? எமக்கு உரிய பரிகாரம் கிடைக்குமா? சிறைத்துறை நேர்காணல் நேரங்களை எமக்கான தனிப்பட்ட நாள் என்று ஏதும் அறிவுறுத்தப்பட்டால் அதன்படி நேர்காணல் செய்யவும் நான் தயாராகவும் இருக்கிறேன்.

உங்களின் அவசரமான தலையீடு மற்றும் உத்தரவுகள் எமக்கு உரிய பரிகாரம் அளிக்கும் என்று நம்பிக்கையுடன்.

நன்றி

என்றும் உண்மையுள்ள

S. Nalini.

காலாவதி மருந்து குறித்து கூறியது என்ன? முதல்வர் விளக்கம்



சென்னை, ஏப். 20: காலாவதி மருந்து குறித்து நான் சொன்னதை வேண்டுமென்றே திசை திருப்பி பழி போடுவதாக முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஜான் ஜோசப் ஆகியோர், காலாவதி மருந்தால் உயிருக்குக்கூட ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஆனால், காலாவதி மருந்தால் பாதிப்பில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இது டாக்டர்களின் மத்தியில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது என்றனர்.
அவர்களுக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியது:
காலாவதி மருந்துகளைவிட போலி மருந்துகள்தான் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்று நான் சொன்னதை வேண்டுமென்றே திசை திருப்பி, ஏதோ முதல்வர் காலாவதி மருந்துகளால் யாருக்கும் ஆபத்தில்லை என்று தவறாக சொன்னதாக சில நண்பர்கள் இங்கு (சட்டப் பேரவை) மட்டுமல்ல, வெளியிலும் கட்சிப் பிரசாரத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எவ்விதமான நன்மையும், தீமையும் இல்லாமல் காலாவதி மருந்து பயன்படாமல் போகிறது. ஒரு நோயாளிக்கு அந்த மருந்தைக் கொடுத்தால், கொடுக்கப்படாத மருந்தைக் கொடுத்ததாக ஆகிவிடும் என்றுதான் இந்த அவையில் விளக்கம் அளித்துள்ளேன். வேண்டுமானால் நான் அளித்த விளக்கத்தை மீண்டும் படித்து பார்த்துக் கொள்ளலாம். காலாவதி மருந்தைவிட போலி மருந்துகள் ஆபத்தானவை என்பதற்காகத்தான் இதனை சொல்ல வந்தேன்.
காலாவதி மருந்துகள் விற்கப்படுவதால் சிலர் பிழைக்கிறார்கள். ஏமாற்றி வாழ்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டவுடன் தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், அமைச்சர் ஆகியோரை அழைத்து, ஆராய்ந்து அன்றைக்கு நான் இட்ட உத்தரவினால்தான் இன்று பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவசரப்பட்டு வேண்டுமென்றே என் மீது அபவாதம் கூற வேண்டுமென்று எண்ணுகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைவரும் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.
வேறு கட்சிக்காரர்கள் என்றால், நான் அதைப் பொருட்படுத்த மாட்டேன். எதையும் துல்லியமாக ஆராய்ந்து, அதைப் பற்றிச் சொல்லக் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியே இப்படிப்பட்ட மகத்தான தவறை, பழியை என் மீது போடுமேயானால், அதற்காக நான் மிக மிக வருந்துகிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.
பாலபாரதி (மார்க்சிஸ்ட்): காலாவதி மருந்துகளும் உயிரைக் குடிக்கும் என்றுதான் மார்க்சிஸ்ட் உறுப்பினர் பேசினார். மற்றபடி எவ்வித அரசியல் நோக்கமும் எங்களுக்கு இல்லை என்றார். அத்துடன் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.


பயன்கெடு முடிந்த மருந்தை உட்கொள்ளுவதால் தீமை எதுவும் விளையாது என்று சொல்வதும் தவறே. மருந்தாகச் செயல்படாத ஒன்றை உட்கொள்ளுவதும் உடல் நலனுக்கு ஊறு விளைவிப்பதே. தீமை விளைவிக்கும ஒன்றைத் தீமை யல்லாதது எனச் சொல்வதன் மூலம் அதனை வழங்குவோர் குற்றமற்றவர் எனக் கூறுவதாகத்தானே பொருள். தான் தவறாகப் புரிந்து கொண்டுதெரிவித்ததாக முதல்வர் தெரிவிப்பின் நன்று.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/21/2010 3:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நளினியிடமிருந்து செல்போன் பறிமுதல்



வேலூர், ஏப். 20: வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளியான நளினியிடமிருந்து செவ்வாய்க்கிழமை செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வேலூர் பெண்கள் சிறையில் அதன் கண்காணிப்பாளர் ஆர்.ராஜலட்சுமி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் காலை 7 மணி வரை திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது, நளினி அடைக்கப்பட்டிருந்த சிறையிலிருந்து நோக்கியா 1203 மாடல் செல்போனை பறிமுதல் செய்தார்.

கருத்துக்கள்

இல்லாத அலைபேசியை இருப்பதாக அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு; அல்லது மறைமுகமாக இசைவளிப்பதுபோல் இசைவளித்து விட்டுப் பின் பிடிப்பது போல் பிடித்ததற்கும் வாய்ப்பு உண்டு. எவ்வாறிருப்பினும் அடுத்து அறிவுரைக் கழகம் கூடும் பொழுது விதிமுறை மீறி நடந்தவர், நடத்தை பிறழ்ந்தவர் எனக் கூறி முன் விடுதலையை மறுப்பதற்கான சதியாகத்தான் இருக்க வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/21/2010 3:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

செவ்வாய், 20 ஏப்ரல், 2010


தினமலர் செய்தியைப் பார்த்த முதல்வர் இல்லச் சீரமைப்பிற்காக ௧௫ இலட்சம் உரூபாய் ஒதுக்கிட்டு ஆணை பிறப்பித்துள்ளார். தினமலரில் உடனே வர வேண்டிய செய்தி இதுவரை வரவில்லையே! எனினும் அரசின் கவனத்திற்குக் கொண்டுபோன தினமலருக்கும் உடன் நடவடிக்கை எடுத்த அரசிற்கும் பாராட்டுகள்.
பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கண்டனம்

First Published : 20 Apr 2010 12:00:00 AM IST


புது தில்லி, ஏப்.19: விடுதலைப் புலிகள் தலைவர் வி. பிரபாகரனின் தாயாருக்கு இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட விஷயத்தில் மத்திய அரசு மீது திமுக கடுமையான குற்றச்சாட்டை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை குறித்து மாநில அரசுக்கு தெரிவிக்கவேயில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.
÷பிரபாகரனின் தாய் உடல் நலக்குறைவால் மலேசியாவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த வாரம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் இவருக்கு குடியேற்ற உரிமை அதிகாரிகள் அனுமதி மறுத்து மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர்.
÷இந்நிலையில் இந்தப் பிரச்னையை மக்களவையில் திங்களன்று அக்கட்சித் தலைவர் டி.ஆர். பாலு எழுப்பினார். கேள்வி நேரம் முடிந்த பிறகு இப்பிரச்னை எழுப்பினார். உடனே பாஜக தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சியான திமுக இக்குற்றச் சாட்டைக் கூறுவது விநோதமாக உள்ளது என்றார்.
திமுகவும் குற்றச்சாட்டு:÷தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, பிரபாகரனின் தாயார் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு நபர் என்றே பேசினார்.
÷இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவேயில்லை. அவர் மீது எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு வந்த அவரை திருப்பி அனுப்பியது ஏன்? என்பது புரியவில்லை என்றார்.
÷இந்த விஷயத்தில் மத்திய அரசு தெளிவான பதிலை அளிக்க வேண்டும். கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, அவருக்கு விசா வழங்கிய நிலையில் இங்குள்ள அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்தது ஏன்? என்பதை விளக்க வேண்டும் என்றார்.
2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பார்வதி மற்றும் அவரது கணவர் திருச்சியிலிருந்து இலங்கைக்குச் சென்றபோது மீண்டும் அவர்களிருவரும் தமிழகத்திற்கு வர தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
÷இதனால் அதிமுக உறுப்பினர்கள் மிகுந்த கோபமடைந்தனர். உடனே அதிமுக கட்சியின் மக்களவைத் தலைவர் தம்பித்துரை குறுக்கிட்டு, அப்போது திமுக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வியெழுப்பினார்.
÷மருத்துவ சிகிச்சைக்காக வந்தவரை மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் மீண்டும் திருப்பி அனுப்பிய மத்திய அரசின் செயலை மன்னிக்க முடியாது என்று பாஜக தலைவர் அத்வானி கூறினார்.
÷தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இது தொடர்பான விவாதத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், பார்வதியை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசின் பங்கு ஏதுமில்லை. அவரை திரும்ப சென்னைக்கு வரவழைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போவதாக கூறினார்.
÷இதை வெளிப்படுத்தும் விதமாக டி.ஆர். பாலுவின் பேச்சு மக்களவையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில்...: இப்பிரச்னை திங்களன்று மாநிலங்களவையிலும் வெடித்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா இது தொடர்பாக பேசுகையில், இந்த சம்பவம் மிகவும் வெட்கக் கேடான மனிதாபிமானமற்ற செயல் என்றார். இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கு அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறது. மற்றொருபுறம் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இத்தகைய நடவடிக்கை இந்தியாவுக்கு மிகப் பெரும் அவமானத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
÷இவருக்கு ஆதரவாக பாஜக உறுப்பினர் எஸ்.எஸ். அலுவாலியா பேசுகையில், குழந்தைகள் குற்றம் செய்தால், அதற்கு பெற்றோரைத் தண்டிக்கும் சட்டம் உள்ளதா? என்று கேட்டார்.
÷இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளி நளினிக்கு மன்னிப்பு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில் இதுபோன்ற நிகழ்வு மிகவும் வேதனையளிக்கிறது என்றார். இவருக்கு ஆதரவாக திமுக உறுப்பினர் டி. சிவா மற்றும் அதிமுக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.

கருத்துக்கள்

டி.ஆர்.பாலுவைப்பாராட்ட வேண்டும் என முழுச் செய்தியைப் படிக்கும் பொழுது ஒருநபர் எனறே பேசியுள்ளார் என்பது தெரிய வருகிறது. ஆக, உணர்வின் அடிப்படையிலான பேச்சு அல்ல இது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் காங்.உடன் இணக்கமாக உள்ள ஒரே கட்சி தி.மு.க.என இதழ்கள் குறிப்பிடுகின்றன. அந்தக் கட்சிக்கு இந்த அவமான நிலை. மாநிலத் தன்னாட்சி கேட்கும் தி.மு.க. இந்த அவமானததை எப்படி தாங்கிக் கொள்கிறது? பதவி பேரத்திற்குக் கருவியாகவா? தன்மானத்திற்கு ஏற்பட்ட அறைகூவலாகவா? 2003 இல் மறுக்கப்பட்ட குறிப்பின் அடிப்படையில் எடுத்த முடிவு என்றால், இதனை அறிந்து புறம் தள்ளித்தான்அல்லது அப்படி எதுவும் குறிப்பு இல்லாமல்தான் புகுவுரிமை (விசா) வழங்கப்பட்டிருக்க வேண்டும். மூவேந்தர்களுக்குப்பின் அமைந்த மாவீரர் அன்னைக்கு இழைத்த அநீதிக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சியினருக்குப்பாராட்டுகள். இனியேனும் கொலைகாரக் கூட்டணியை ஆட்சிப் பீடத்தில் அமர விடாது தக்கவர்க்கு வாக்களிப்போம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (அம்மையார் விண்ணப்பித்தால் முதல்வர் கடிதம் எழுதி விடைதான் வாங்கித் தருவார். இசைவுஅன்று)

By Ilakkuvanar Thiruvalluvan
4/20/2010 3:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
பிரபாகரன் தாயாருக்கு சிகிச்சை: மத்திய அரசிடம் அனுமதி கேட்கத் தயார் - கருணாநிதி



சென்னை, ஏப்.19: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயாருக்கு தமிழகத்தில் மருத்துவ சிகிச்சை அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதத் தயார் என்று முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் தெரிவித்தார் .
மலேசியாவில் இருந்து சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள், உடனடியாக அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இந்தப் பிரச்னை குறித்து சட்டப் பேரவையில் திங்கள்கிழமை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தின் மீது, டி.சுதர்சனம் (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), பாலபாரதி (மார்க்சிஸ்ட்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் பேசினர். இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியது:
பார்வதியம்மாள் தனது சிகிச்சைக்காக விசா பெறலாம் என்ற நிலையில் அரசின் உத்தரவு அமைந்து, அந்த விசாவினைப் பெற்று அவர் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது, மத்திய அரசினுடைய அதிகாரிகள் சிலர், விமான நிலையத்தில்-விமானத்துக்குள்ளே நுழைந்து, தவறுதலாக உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறி மலேசியாவுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இதுபற்றிய முழுத் தகவலை மறுநாள் காலையில் பத்திரிகைகளைப் படித்த பிறகே தெரிந்து கொள்ள முடிந்தது.
பழைய சம்பவம்: இதேபோல ஒரு சம்பவம் 1985-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென தந்தை செல்வாவின் மகன் சந்திரஹாசன், பாலசிங்கம், சத்தியேந்திரா ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவும் அன்றிருந்த மாநில அரசின் வேண்டுகோள்படிதான் இடப்பட்டது எனக் கூறப்பட்டது. அதில், உண்மை எதுவோ எனக்குத் தெரியாது.
எங்களுக்குச் செய்தி கிடைத்து உடனடியாக, டெசோ அமைப்பின் சார்பாக சென்னையில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, 5 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக, சந்திரஹாசன் மீதான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதற்குப் பிறகு, பாலசிங்கம் மீதான நாடு கடத்தும் உத்தரவும் திரும்பப் பெறப்பட்டது.
தொடர்பு இல்லை: பார்வதியம்மாள் தமிழகத்துக்கு வருவது பற்றி அவரிடமிருந்தோ அவர்களுக்கு துணை புரிய விரும்புகிறவர்களிடம் இருந்தோ தமிழக அரசுக்கு எந்தவிதமான கடிதமோ, தகவலோ நேரடியாக வரவே இல்லை.
மத்திய அரசுக்கும் பார்வதியம்மாளுக்கும் இடையே தான் இந்தப் பயணம் பற்றிய செய்தித் தொடர்பு இருந்திருக்கிறதே தவிர, தமிழக அரசுக்கு இதிலே எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
கடந்த 2003-ம் ஆண்டில், தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தின் 2-வது பத்தியில், இலங்கைத் தமிழர்கள் வேலுப்பிள்ளை மற்றும் பார்வதியம்மாள் ஆகியோர் இந்தியாவுக்குள் சட்ட ரீதியாகவோ அல்லது சட்ட விரோதமாகவோ நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும். அவர்களது பெயர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு கடிதம் எழுதி, அதன் காரணமாக தடை விதிக்க ஏற்பாடு செய்தவர்கள்-எங்கே அந்த உண்மை இங்கே வெளியிடப்பட்டு விடும் என்ற காரணத்தாலோ என்னவோ-மிக முக்கியமான இந்தப் பிரச்னையில் எல்லா கட்சியினரும் குரல் எழுப்புகின்ற இந்தப் பிரச்னையில் அவர்கள் (அதிமுக) மாத்திரம் வராமல் இருந்து விட்டார்கள் என்பதைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.
அவர்கள் தான் இன்றைக்கு மாபெரும் கூட்டணியில் இருக்கிறார்கள். அது தமிழர் கூட்டணி எனச் சொல்லப்படுகிறது.
அப்படிப்பட்ட நண்பர்கள் இந்தப் பிரச்னையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், இது முழுக்க முழுக்க தமிழக அரசுக்கு உரிய பிரச்னை என்பதைப் போல ஏடுகளில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு தகராறு நடைபெறுவதாக எனக்குச் செய்தி கிடைக்கிறது. நான் விமான நிலையத்துக்குத் தொடர்பு கொள்கிறேன். பார்வதியம்மாள் திரும்ப அனுப்பப்பட்டு விட்டார்கள் என்று அடுத்த செய்தி எனக்குக் கிடைக்கிறது. ஆனால், இந்தச் செய்தி முறையாக, உரிய வகையில் எனக்குச் சொல்லப்படவில்லை. அரசில் யாருக்கும் சொல்லப்படவில்லை.
அதன் காரணமாக, அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டார்கள். அப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்கள் மலேசியாவுக்கே திரும்பச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் அங்கே மருத்துவ வசதி பெறுவதாக செய்திகள் வந்திருக்கின்றன.
மீண்டும் தமிழகம் சென்று மருத்துவம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று பார்வதியம்மாள் அறிவித்தால், அதைப் பரிசீலனை செய்து மத்திய அரசுக்கு அது பற்றி கடிதம் எழுத மாநில அரசு தயாராக இருக்கிறது. மத்திய அரசின் பதிலைப் பற்றி-அது என்ன கூறுகிறது என்பதைப் பற்றி, அது பற்றிய விளக்கம் தேவைப்பட்டால், அந்த நேரத்தில் பதில் வந்த பிறகு அதனை இந்த அவைக்குத் தெரிவிப்பேன் என்றார் முதல்வர் கருணாநிதி.

கருத்துக்கள்

5.தனது ஆட்சிநிலத்தில் தனக்கு மதிப்பளிக்காத கட்சியுடன் இன்னும் ஏன்உறவு தேவை? 6. இரு தலைவர்களைத் தடுத்துப் பெரும் விவாதத்தில் ஈடுபட்டிருந்தும் முதல்வருக்குத் தெரியவில்லை என்றால் ஆட்சி சரியில்லை என்றல்லவா ஆகின்றது! 7. இவருக்குத் தெரியாமல் நடந்ததென்றால் ஏன் உடனே கண்டனம் தெரிவிக்கவில்லை? 8. இந்த நாடகம் அரசியல் மேடையில் எத்தனை நாளம்மா? அம்மா, எத்தனை நாளம்மா? மானம் கெட்ட பிழைப்பெல்லாம் ஒரு பிழைப்புதானா அம்மா?ஐயகோ! பிழைப்புதானா அம்மா?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/20/2010 3:25:00 AM

1/8) மத்திய அரசிற்கு மடல் எழுதி இசைவுபெற்றுத்தருவதாகக் கூறவில்லை. பதில் பெற்றுத் தெரவிப்பதாகத்தான் கூறுகிறார். 2. உண்மையில் உணர்வு இருந்தால் உடனே தொலைபேசிவழிப் பேசியும் தம் சார்பாளர்களை நேரில் தலைமையமைச்சரைச் சந்திக்கச் செய்தும் தடையற்ற புகுவிசைவு தரச் செய்து அதனைப் பார்வதி அம்மையாரிடம் தெரிவிக்கலாமே!. அவரது விருப்பத்தைக் கேட்டு மீண்டும் அவமானப்படுத்துவதைவிட தடையை நீக்கிவிட்டு அழைக்கலாமே! 3. 1985 இல் எதிர்க்கட்சியாக இருந்தார். இப் பொழுதும் மக்கள் அதைத்தானே கூறுகின்றனர். எதிர்க்க்டசியாக இப்பொழுது கலைஞர் இருந்தால் உலகத்தின்கவனத்தை ஈர்த்துத் தமிழ் ஈழம் அமையப் போராடியிருப்பார். எனவே, அதனை ஒப்பிட்டுப் பயன் இல்லை. 4/8) மேலும் முழுமையான பேச்சில் மாண்புமிகு முதல்வர் இருவர் மட்டும் கமுக்கமாகச் சென்று பார்த்ததாகச்சிண்டு முடியப் பார்த்து உள்ளார். இருவர் சந்தித்ததற்கே அதனால்தான் தடை எனக் காவல்துறை அறிவிக்கிறது. பலர் சென்றார் இன்னும் மோசமான நடவடிக்கை எடுததிருக்காதா?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/20/2010 3:23:00 AM
மறைமலையடிகளார் இல்லம்: ரூ.15 லட்சம் செலவில் புதுப்பிப்பு



சென்னை, ஏப்.19: சென்னை பல்லாவரத்தில் உள்ள மறைமலையடிகளார் நினைவு இல்லம் ரூ.15 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் வாழ்ந்து மறைந்த இல்லம், காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் அமைந்துள்ளது. அந்த இல்லம் மறைமலையடிகளார் நினைவு இல்லமாக இப்போது தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பில் உள்ளது.
இந்தக் கட்டடம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது எனவும், பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த இல்லத்தைப் பழுது பார்க்க, தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்துக்கு ரூ.15 லட்சம் மானியமாக வழங்கப்படும். இந்தத் தொகை பொதுப்பணித் துறைக்கு அளிக்கப்படும். இந்தத் தொகை மூலம் நினைவு இல்லம் பழுது பார்க்கப்பட்டு, சீரமைத்து தென்னிந்தியத் தமிழ்ச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.

கருத்துக்கள்

தினமணிக்கும் தமிழக அரசிற்கும் பாராட்டுகள். கன்னிமாரா நூலகததில் இணைந்த மறைமலையடிகள் நூலகமும் சரியாகப் பேணப்படவில்லை. அதனையும் தினமணி சுட்டிக்காட்டினால் நன்று.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/20/2010 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
பிரபாகரன் தாயாருக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசு மீது திமுக குற்றச்சாட்டு

புது தில்லி, ஏப்.19: விடுதலைப் புலிகள் தலைவர் வி. பிரபாகரனின் தாயாருக்கு இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்ட விஷயத்தில் மத்திய அரசு மீது திமுக கடுமையான குற்றச்சாட்டை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை குறித்து மாநில அரசுக்கு தெரிவிக்கவேயில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை கொழும்பில் உள்ள அகதிகள் முகாமில் உயிரிழந்தார். இவரது தாய் உடல் நலக்குறைவால் மலேசியாவில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இவருக்கு சென்னையில் சிகிச்சை அளிப்பதற்காக கடந்த வாரம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். ஆனால் இவருக்கு குடியேற்ற உரிமை அதிகாரிகள் அனுமதி மறுத்து மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பினர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இந்தப் பிரச்னையை மக்களவையில் திங்களன்று அக்கட்சித் தலைவர் டி.ஆர். பாலு எழுப்பினார். கேள்வி நேரம் முடிந்த பிறகு இப்பிரச்னை எழுப்பினார். உடனே பாஜக தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சியான திமுக இக்குற்றச்சாட்டைக் கூறுவது விநோதமாக உள்ளது என்றார்.தொடர்ந்து பேசிய டி.ஆர்.பாலு, பிரபாகரனின் தாயார் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு நபர் என்றே பேசினார். இந்த விஷயத்தில் மாநில அரசுக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படவேயில்லை. அவர் மீது எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு வந்த அவரை திருப்பி அனுப்பியது ஏன்? என்பது புரியவில்லை என்றார்.இந்த விஷயத்தில் மத்திய அரசு தெளிவான பதிலை அளிக்க வேண்டும். கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, அவருக்கு விசா வழங்கிய நிலையில் இங்குள்ள அதிகாரிகள் அவருக்கு அனுமதி மருத்தது ஏன்? என்பதை விளக்க வேண்டும் என்றார்.2003-ம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பார்வதி மற்றும் அவரது கணவர் திருச்சியிலிருந்து இலங்கைக்குச் சென்றபோது மீண்டும் அவர்களிருவரும் தமிழகத்திற்கு வர தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.இதனால் அதிமுக உறுப்பினர்கள் மிகுந்த கோபமடைந்தனர். உடனே அதிமுக கட்சியின் மக்களவைத் தலைவர் தம்பித்துரை குறுக்கிட்டு, அப்போது திமுக அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வியெழுப்பினார்.மருத்தவ சிகிச்சைக்காக வந்தவரை மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் மீண்டும் திருப்பி அனுப்பிய மத்திய அரசின் செயலை மன்னிக்க முடியாது என்று பாஜக தலைவர் அத்வானி கூறினார்.தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பான விவாதத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், பார்வதியை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசின் பங்கு ஏதுமில்லை. அவரை திரும்ப சென்னைக்கு வரவழைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போவதாக கூறினார். இதை வெளிப்படுத்தும் விதமாக டி.ஆர். பாலுவின் பேச்சு மக்களவையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

டி.ஆர்.பாலுவைப்பாராட்ட வேண்டும் என முழுச் செய்தியைப் படிக்கும் பொழுது ஒருநபர் எனறே பேசியுள்ளார் என்பது தெரிய வருகிறது. ஆக, உணர்வின் அடிப்படையிலான பேச்சு அல்ல இது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் காங்.உடன் இணக்கமாக உள்ள ஒரே கட்சி தி.மு.க.என இதழ்கள் குறிப்பிடுகின்றன. அந்தக் கட்சிக்கு இந்த அவமான நிலை. மாநிலத் தன்னாட்சி கேட்கும் தி.மு.க. இந்த அவமானததை எப்படி தாங்கிக் கொள்கிறது? பதவி பேரத்திற்குக் கருவியாகவா? தன்மானத்திற்கு ஏற்பட்ட அறைகூவலாகவா? 2003 இல் மறுக்கப்பட்ட குறிப்பின் அடிப்படையில் எடுத்த முடிவு என்றால் காமராசு குறிப்பிட்டது போல், இதனை அறிந்து புறம் தள்ளித்தான்அல்லது அப்படி எதுவும் குறிப்பு இல்லாமல்தான் புகுவுரிமை (விசா) வழங்கப்பட்டிருக்க வேண்டும். மூவேந்தர்களுக்குப்பின் அமைந்த மாவீரர் அன்னைக்கு இழைத்த அநீதிக்கு அனைவரும் கண்டனம் தெரிவிப்போம். இனியேனும் கொலைகாரக் கூட்டணியை ஆட்சிப் பீடத்தில் அமர விடாது தக்கவர்க்கு வாக்களிப்போம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/20/2010 2:57:00 AM

எட கொலைஞ்யன் பாதகா தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பான விவாதத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், பார்வதியை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் தமிழக அரசின் பங்கு ஏதுமில்லை. அவரை திரும்ப சென்னைக்கு வரவழைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போவதாக கூறினார். வம்பில பரம்பில பிறந்த பாதகா கொடியவனே தி மு கா வில் இருந்த தமிழரை வெட்டி சாய்த்த பாதகா ஈழதமிழரை கொலை செய்ய நீ அனுப்பிய கடிதங்கள் போதாதா நீ அனுப்பிய தந்திகள் போதாதா தொலைபேசி உரையாடல்கள் போதாதா நீ அனுப்பிய கடிதங்களால் தந்திகளால் தொலைபேசி உரையாடல்களால் மூன்று இலட்சம் பேரை அகதியாக்கி தொன்னூறாயிரம் பேரை உணமாக்கி நாப்பதிணாயிரம் உயிரை குடித்தாயே வரலாற்றி உன் முகம் துரோகி என்று பதியப்பட்டுள்ளதை மறந்தாயா பாதகா சிறுமிகளை கற்பளித்த காமுகா

By muth tamil
4/20/2010 2:07:00 AM

HAHAHA! very funny! They open visa office and they want to steal Srilankans' money as fees for the visa. Then when the srilankan Tamils arrive in the Indian airports, they deport in the same fights.So, it is kinda unscruopous work by the indian Government. Therefore, all Srilankan do not go to visa offices and not pay any fees for the Indian visa around the world. In other words, Srilankan Tamils do not visit India that never respect humanity and human rights. தொப்புள்கொடி உறவைக் கருத்தில்கொண்டு யாழ்ப்பாண அபிவிருத்தியில் இந்தியா அதிக கரிசனை மே 5 இல் விசா அலுவலகம் அங்குரார்ப்பணம் இந்திய தூதுவர் அசோக் காந்தாயாழ்.குடாநாட்டுக்கும் தமிழகத்திற்கும் இடையில் தொப்புள்கொடி உறவு இருப்பதைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாண அபிவிருத்தியில் இந்தியா அதிகளவுக்கு அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா, மே 5 ஆம் திகதி முதல் இந்திய விசா வழங்கும் அலுவலகம் திறந்து வைக்கப்படவிருப்பதாகவும் அறிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான சர்வதேச வர்த்தக கண்கா

By Manithan
4/20/2010 1:38:00 AM

பிரபாகரனின் தந்தை கொழும்பில் உள்ள அகதிகள் முகாமில் உயிரிழந்தார். தினமணி ஆசிரியர் பொறுப்பாளர் குழுமத்துக்கு ஈழத்தமிழனுக்காக உலகத்தமிழனுக்காக நீங்கள் ஆற்றும் பணிக்கு சிரம்தாழ்த்தி தலைவணங்குகிறோம் ஐயா பிரபாகரனின் தந்தை கொழும்பில் உள்ள அகதிகள் முகாமில் உயிரிழந்தார். என்று செய்தி வெளியிட்டூள்ளீர்கள் பிரபாகரனின் தந்தை கொழும்பில் உள்ள சித்திரவதை முகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு நோய்க்கு மருந்து கொடுக்காமல் வன்னியில் நடந்த இனப்படுகொலைக்கு சாட்சியாக இருந்தவரை சிங்களம் சித்திரவதை செய்து கொண்டது இது தான் உண்மை

By கரிகால்சோழன்
4/20/2010 1:11:00 AM

பார்வதி அம்மாளுக்கு சிகிட்சை கொடுக்க மறுத்து சித்திரவை செய்து திருப்பி அணுப்பப்பட்டது போல் காரணம் பார்வதி அம்மாள் இந்தியாவில் தங்கவிட்டால் சோனியா இராஜபக்சை கொலைஞ்யன் செய்த பட்டுகொலைகள் பத்திரிகை வாயிலாக தமிழக மக்களிடம் சென்று சேர்ந்து விடும் என்று கொலைஞ்யன் தட்சணாமூர்த்தி அஞ்சுகிறான் 2011 வரும் தேர்தலில் பார்வதிஅம்மாளிடம் இருந்து வரும் வாக்கு மூலம் தன்னுடைய கொலை கரத்தை தமிழகத்துக்கு அடையாளம் காட்டி விடுமோ என்று அஞ்சுகிறான் இந்த தெலுங்கன்

By கரிகால்சோழன்
4/20/2010 1:11:00 AM

VANAKKAM. ENNA AYYA KODUMAYAGA IRUKKU, PRABAGAN ANUMATIKKA MUDIYAATUNA ETO OTTUKKALAM, AVARIN AMMA ENNA KUNDA VAIKKAP PORANGGA, ENNA MANUSANUNGA, SARI VIDUNGGAYYA, MUGAVARIYA SOLLUNGGA. NANGGA AVUNGGALAI KAVANICHIKKIROM. ENNAI KUPPIDUNGGAL. NA,JEYABALAN MANGAI, ULU TIRAM JOHORE, MALAYSIA. TOLAI PESI 65 016 7651774

By NA,JEYABALAN MANGAI. JB.MALAYSIA
4/20/2010 1:08:00 AM

KARUNANIDHI IS THE NUMBER ONE CHEATER.HOW LONG OUR TAMILIANS WILL SUPPORT HIM? FOR HIS BENEFIT HE WILL SAY ANY THING,AND HE WILL DO ANY THING,ALLAH PLEASE SAVE MY TAMIL COMMUNITY FROM THIS OPPURTUNIST

By A.RIAZ
4/20/2010 12:30:00 AM

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010


திருப்பி அனுப்பியது சரியே: சுப்பிரமணியன் சுவாமி



சென்னை, ஏப்.17: மலேசியாவிலிருந்து சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்பியது சரியான நடவடிக்கையே என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவரது அறிக்கையில், பார்வதியை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல. ராஜீவ் காந்தியை கொன்றதற்காக பார்வதி முதலில் கண்டனம் தெரிவிக்கட்டும். அதன்பிறகு அவரை இந்தியாவுக்குள் அனுமதிப்பது பற்றி பிறகு பரிசீலிக்கலாம் என்றார்.
கருத்துக்கள்

ஈனப்பிறவிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை அவ்வப்பொழுது ஊடகங்கள் நினைவு படுத்திக் கொண்டே இரு்க்கின்றன. என் செய்வது? பெரும்பான்மையர் உரிமைக்கு எதிராகச் சிறுபான்மையர் ஆட்சி செய்வதுதானே மக்களாட்சி! சுப்பிரமணி கொப்பரைத் தேங்காய் ; உடைத்துப் பாரத்தால் ஒன்றுமே இல்லை என்னும் நாட்டு வழக்குதான் நினைவிற்கு வருகின்றது. ஒன்றுமில்லாததை உயர்த்துவதும் உயர்ந்துள்ளதை ஒன்றும் இல்லாமல் ஆக்குவதும்தானே ஊடகங்கள் வேலை!

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/18/2010 5:23:00 AM

இந்தியா இவர்களுக்கு (குறிப்பிட்ட ஜாதியினருக்கு) மட்டும் சொந்தம் போல பேசி இருக்கிறார்... முதலில் அயிரகணக்கான மக்களை கொன்றதுக்கு நீயும் உன் கூட்டமும் கண்டனம் தெரிவி.. மற்றதை பிறகு பார்க்கலாம்..

By tamilan
4/18/2010 5:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழகத்துக்கு அழைத்து வர வேண்டும்: தொல். திருமாவளவன்



சென்னை, ஏப். 17: மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்த நடவடிக்கைக்கு யார் காரணமாயிருந்தாலும், எது காரணமாயிருந்தாலும் அதை நியாயப்படுத்தவோ, ஏற்றுக்கொள்ளவோ இயலாது. மனிதநேயமற்ற இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. பார்வதி அம்மாளை தமிழகத்திற்கு அழைத்து வரவும், அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துக்கள்

அடிபணியும் இராமதாசிலிருந்து மனச்சான்றின்படி அறிக்கை விடும் திருமா வேறுபட்டு நிற்கின்றார். என்றாலும் அறிக்கையில் கண்டித்தால் மட்டும் போதாது. வேறு முனைப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளைய தமிழகம் உங்கள் பின்னால அணி வகுக்க இதுவே வழி! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/18/2010 5:16:00 AM

விடுதலைப் புலிகளிடமிருந்து வாங்கிய காசில் ஆளுக்கு கொஞ்சம் போட்டு அந்த அம்மாவை கொண்டு போய் அமெரிக்காவுல வைத்தியம் பாருங்கப்பா !!! இங்க தமிழ்நாட்டுல எங்க பாத்தாலும் கலப்பட மருந்து ::காலாவதி மருந்து நம்பி கூப்பிட்டு கிட்டு வராதீங்க!!! பழி நம்பலுவ மேல வந்துரும் !!! நடந்ததெல்லாம் நல்லதுக்குதான் விடுங்கப்பா !!!

By rajasji
4/18/2010 4:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
தமிழக அரசு இதனை செய்திருக்காது: ராமதாஸ்



சென்னை, ஏப்.17: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை, முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு திருப்பி அனுப்பியிருக்காது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னைக்கு வந்து பார்வதி அம்மாள் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்.சிகிச்சைக்காக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அவர் சென்னைக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. விமானத்திலிருந்து அவரை இறங்கவிடாமல், மீண்டும் அதே விமானத்தில் மலேசியாவிற்கு திருப்பி அனுப்பிவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் நவீன மருத்துவ சிகிச்சைக் கிடைப்பதால்தான் 81 வயதான அவர், இங்கே சிகிச்சைப் பெற வந்திருக்கிறார்.அவர் இந்தியாவுக்கு வருவதற்கான அனுமதியை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வழங்கியிருக்கிறது. அப்படியானால், இந்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்பதுதானே பொருள்.அப்படியிருந்தும், சென்னை நகரில் அவரை இறங்க விடாமல் தடுத்து நிறுத்தி, மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைப்பதற்குக் காரணமானவர்கள் யார்?நிச்சயமாக தமிழக அரசும், தமிழக காவல்துறையும் இதனை செய்திருக்கமாட்டார்கள். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லை. முன்பு ஒருமுறை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆலோசகர் பாலசிங்கம் மற்றும் சந்திரஹாசன் ஆகியோரை சென்னையிலிருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது. அதை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கி தடுத்து நிறுத்தியவர் முதல்வர் கருணாநிதி. எனவே, அவரது அரசு இதனை செய்திருக்காது.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகள்தான் இந்தச் செயலை செய்திருக்கக் கூடும். இத்தகைய நடவடிக்கைகளுக்கு அதிகாரம் படைத்தவர்கள் அவர்கள்தான்.அவர்களது அனுமதியின்றி வெளிநாட்டவர் யாரும் இந்தியாவிற்குள் நுழைய முடியாது. சென்னை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை எடுத்திருக்கமாட்டார்கள்.மத்திய அரசின் அனுமதியில்லாமல், அவர்கள் கட்டளையிடாமல் இங்குள்ள குடியேற்ற அதிகாரிகள் செயல்பட்டிருக்க முடியாது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மனிதாபிமானமற்றது என்பதில் சந்தேகமில்லை. உலகில் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற மனிதநேயமற்ற செயல் நடந்ததாக வரலாறு இல்லை.எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சைப் பெற அனுமதிப்பதுதான் உலக நாடுகள் கடைப்பிடித்து வரும் நடைமுறை.நமது பகை நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கே வந்து, சிகிச்சை பெற்றுச் செல்ல அனுமதி வழங்கி வரும் நிலையில், இங்குள்ள ஆறரை கோடி தமிழர்களை நம்பி சிகிச்சைப் பெற வந்த பார்வதி அம்மையாரை திருப்பி அனுப்பியதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். எனவே, சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ள பார்வதி, மீண்டும் சென்னைக்கு வந்து தேவையான மருத்துவச் சிகிச்சைப் பெற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு இந்த அனுமதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.
கருத்துக்கள்

அப்பாடா! இராமதாசிற்குத் திமுக வுடன் ஒட்ட ஒரு வழிகிடைத்து விட்டது. அது சரி! தமிழக அரசிற்குத் தெரியாமல் தமிழகக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளார்கள் எனில் கையாலாகாத முதல்வர் என்ற குற்றச்சாட்டை அல்லவா சொல்கிறார் எனப் பொருள். தமிழ க அரசு செய்திருக்காவிட்டால் ஏன் அமைதி காக்கிறது? பால் திரிந்து வீணான பின்பு நேற்று நன்றாகச் சுவையாக இருந்தது. எனவே, இன்றைய நிலையை நம்பாமல் அதனைப் பயன்படுத்தலாம் எனச் சொல்வாருண்டோ மருத்துவர் அவர்களே! தனித்து விடப்பட்டவரை ஒட்டலாம் என எண்ணிச் செயல்பட்டுத் தலைக்குனிவை அல்லவா ஏற்படுத்துகிறீர்கள். சமுதாயக் கட்சியாகச் சுருக்கிக் கொண்ட நீங்கள் அப்படிக் கூட வாழாமல் மண்டியிட்டு அடிபணிவது ஏன்? ஆட்சிச் சுவை படாதபாடு படுத்துகின்றதா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/18/2010 5:10:00 AM

விடுதலைப் புலிகளிடமிருந்து வாங்கிய காசில் ஆளுக்கு கொஞ்சம் போட்டு அந்த அம்மாவை கொண்டு போய் அமெரிக்காவுல வைத்தியம் பாருங்கப்பா !!! இங்க தமிழ்நாட்டுல எங்க பாத்தாலும் கலப்பட மருந்து ::காலாவதி மருந்து நம்பி கூப்பிட்டு கிட்டு வராதீங்க!!! பழி நம்பலுவ மேல வந்துரும் !!! நடந்ததெல்லாம் நல்லதுக்குதான் விடுங்கப்பா !!!

By rajasji
4/18/2010 4:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *