வெள்ளி, 11 மே, 2018

மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு, பாரிசு

அகரமுதல


மூன்றாவது ஐரோப்பியத் தமிழ் 

ஆய்வியல் மாநாடு

பாரிசு


ஆவணி 23 &  24, 2049

 சனி 08 ஞாயிறு & 09 செட்டம்பர் 2018  


– சங்க இலக்கியக் கட்டமைப்பும் கருத்து வெளிப்பாட்டு உத்திகளும்
– சுவாமி விபுலாநந்தரின் தமிழாய்வுப் பணிகள்

அன்புசால் தமிழுறவுகளே !
பாரிசு மாநகரில் ஆவணி 23 &  24, 2049
  • சனி08 ஞாயிறு 09 செப்டெம்பர் 2018 களில் நடைபெறவிருக்கும்
  • மூன்றாவது ஐரோப்பியத் தமிழாய்வியல் மாநாட்டுக்கு
  • அறிஞர்களிடமிருந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
தரமான கட்டுரைகள் மாநாட்டு மலரில் இடம்பெறும்.
பாமினி அல்லது ஒருங்குகுறியில்(யுனிக்கோடில்)
ஆறு பக்கங்களுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.

கட்டுரைகள் அனுப்பிவைக்க வேண்டிய

இறுதி நாள் வைகாசி 17, 2049 – 31.05.2018

sachchithanantham@gmail.com   என்ற மின்வரிக்குக்  கட்டுரையினைஅனுப்பிவையுங்கள்
தங்களது கட்டுரையின் படிகளை மின்மினிக்கும்  அனுப்பிவையுங்கள்
கட்டுரையாளர் பதிவு விவரம்  பின்னர் அறிவிக்கப்படும்
ஒருங்கிணைப்பாளர்,
முனைவர்பேரா.சச்சிதானந்தம்
நன்றி.
அன்புடன்
தில்லை சிதம்பர(ப்பிள்ளை)
ஆசிரியர்,  மின்மினி
WWWPhone: +41 43 526 70 24 (மீளழைப்பு-Call Back)
+61469437285 (SMS) AU
+41787261122 (SMS) CH

செவ்வாய், 8 மே, 2018

உலகத் தமிழ் எழுச்சி மாநாடு, சென்னை


அகரமுதல

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

அனைத்துத் தமிழ்க் கூட்டமைப்பு

நடத்தும்

உலகத் தமிழ் எழுச்சி மாநாடு

சித்திரை 30, 2049 – ஞாயிற்றுக்கிழமை – 13.05.2018

பெரியார் திடல், சென்னை 600 007

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
மாநாட்டுப் பொறுப்பாண்மையர்

திங்கள், 7 மே, 2018

தமிழ்ப்பேராய விருதுகள் 2018


அகரமுதல

தமிழ்ப்பேராய விருதுகள் 2018


  திரு இராமசாமி நினைவு அறிவியல்-தொழில் நுட்பக் கல்விநிறுவனத்தின் தமிழ்ப்பேராயம் 2018 விருதுகளுக்கான பரிந்துரைகள் குறித்த அறிவிப்பு மடல் படவடிவில்  உள்ளது. காண்க.

விடுதலைச்சிறுத்தைக் கட்சி சார்பில் அறுவருக்கு விருதுகள்


அகரமுதல

விடுதலைச்சிறுத்தைக் கட்சி சார்பில் 

அறுவருக்கு விருதுகள்

பினராயி விசயன், திருநாவுக்கரசர் முதலானோருக்கு விருதுகள் அறிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை விட்டிருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத்து பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூகநீதிக்கும், தமிழ் மொழி மேம்பாட்டுக்கும் பாடுபடுகிற சான்றோரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த விருதுகளை அளித்து வருகிறோம்.
திமுக தலைவர் கலைஞர், புதுச்சேரி முதலமைச்சர் வெ.நாராயணசாமி, முதுபெரும் பொதுவுடைமைக்கட்சித் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முதலான தலைவர்கள் பலருக்கும் இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் சான்றோரின் பட்டியலை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
அம்பேத்கர் சுடர் – கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயிவிசயன்,
பெரியார் ஒளி – ஆந்திரத்தைச் சார்ந்த மக்கள் பாடகர் தோழர் கத்தார்,
காமராசர் கதிர் – தமிழ்நாடு பேராய(காங்கிரசு)க் கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர்,
 காயிதேமில்லத்து பிறை – வைகறை வெளிச்சம் இதழாசிரியர் மு.குலாம் முகமது,
அயோத்திதாசர் ஆதவன் – மருத்துவர் அ.சேப்பன் (மறைவிற்குப் பின்),
செம்மொழி ஞாயிறு – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்.

இந்த விருதுகள் வைகாசி 01, 2049 – 15.5.2018 அன்று மாலை சென்னை காமராசர் அரங்கில் நடைபெறும் விழாவில் அளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.’

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.