வெள்ளி, 28 மே, 2010

ஆம் கட்ட போரை நடத்துவர்காக‌ தப்பிச்செல்ல விரும்பினார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்: புதிய தகவல்!

Prabakaran5ஆம் கட்ட போரை நடத்துவர்காக‌ தப்பிச்செல்ல விரும்பினார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்: புதிய தகவல்!

புன்னியாமீன்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009 மே 19 ஆம் திகதி காலை நந்திக்கடல் ஏரியிலுள்ள சிறுதிட்டில் இடம்பெற்ற சண்டையின் போதே மரணமடைந்துள்ளார். மரணமடையும் வரை சண்டையிடுவது அவரின் இறுதித் தெரிவாக இருந்தபோதும் மற்றொருநாள் போராடுவதற்காகத் தப்பிச் சென்று உயிர்வாழ அவர் விரும்பியிருந்தார்.

அவரின் மனதில் தப்பிச்செல்வதற்கான பல திட்டங்களைப் பிரபாகரன் கொண்டிருந்தார் என்று பேராசிரியர் ரொஹான் குணரட்ண கூறுகிறார்.சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அரசியல் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான ஆய்வுக்கான சர்வதேச நிலையத்தின் தலைவரான பேராசிரியர் ரொஹான் குணரட்ண மேற்கண்டாவறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக “எக்ஸ்பிரஸ்” பத்திரிகைக்கு குணரட்ண கூறியதாவது; முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த மோதல் சூன்யப்பகுதிக்கு அருகே கிறிஸ்ரினா கப்பலை வரவழைப்பது பிரபாகரனின் துணிச்சலான திட்டங்களில் ஒன்றாக இருந்தது. அக்கப்பலிலிருந்த சொப்பர் மூலம் கரையிலிருந்து அக்கப்பலுக்குச் செல்வது அவரின் திட்டமாக இருந்தது.

இந்தக் கப்பலைக் கனடாவிலுள்ள ரவிசங்கர் கனகராஜா அல்லது சங்கிலி ஏற்பாடு செய்திருந்தார். அதனை இந்தோனேசியாவில் தயாராக வைத்திருந்தார். ஆனால், சொப்பரை ஏற்பாடு செய்வதற்குப் பொறுப்பாக இருந்த அச்சுதரன் என்பவர் அதனைப் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டார் என்று குணரட்ன கூறியுள்ளார். யுத்தத்தின் பின்னர் கிறிஸ்ரினா கப்பல் இலங்கைக் கடற்படையால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

மோதல் சூன்யப்பகுதியிலிருந்து வெளியேறி தென்பகுதியிலிருந்த யால சரணாலயப் பகுதிக்குச் செல்வது இரண்டாவது தெரிவாக இருந்தது. குறைந்தளவிலான ரோந்து நடவடிக்கைகள் இடம்பெறும் தென்பகுதி கரையைப் பயன்படுத்தி தீவிலிருந்து தப்பிச்செல்வது இரண்டாவது தெரிவாக இருந்தது.

மூன்றாவது தெரிவாக ராமின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மறைவிடங்களுக்குத் தப்பிச் செல்வது இருந்துள்ளது. கிழக்கில் 2007 இல் யுத்தத்தில் தோல்வியடைந்தபோதிலும் ராம் தப்பியிருந்ததாக குணரட்ண கூறியுள்ளார். ஆனால், இலங்கைப் படையினர் சகல கடல், தரை மார்க்கப் பாதைகளைத் தடைசெய்திருந்ததால் இந்த மூன்று தெரிவுகளையும் பயன்படுத்தியிருக்க முடியவில்லை.

மே 16 இல் முல்லைத்தீவின் கரையோரப்பகுதி முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அத்துடன், கடற்படையின் தடைகளையும் உடைத்துக் கொண்டு செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, நான்காவது தெரிவாக இருந்தது வன்னிக்காட்டுக்குள் செல்வதாகும். நந்திக்கடல் ஏரியின் மேற்குக் கரையோரம் இலங்கைப் படையின் பிரசன்னம் கடுமையாக இருந்தது. அதனை உடைத்துக் கொண்டே வன்னிக்காடுகளுக்குள் செல்லவேண்டியிருந்தது. வாபஸ் பெற்று செல்வதற்கு முன்னர் அங்கு ஆயுதங்களைப் புலிகள் புதைத்து வைத்திருந்தனர்.

பொட்டு அம்மான் மற்றும் பிரபாகரனின் மூத்த மகனான சார்ள்ஸ் அன்ரனி ஆகியோர் தலைமையில் 140 பேர் கொண்ட புலிகள் முதலில் அகதிகளாக வரும் பொதுமக்கள் போன்று உடைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் உடனடியாக கடுமையான தாக்குதல்களை மேற்கொணடனர். 30 தற்கொலை குண்டுதாரிகள் படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

இராணுவத்தின் முன்னரங்க நிலையை புலிகள் உடைத்தபோதிலும் அவர்கள் அழிக்கப்பட்டனர். பொட்டு அம்மானும் சார்ள்ஸ் அன்ரனியும் இறந்தவர்களில் உள்ளடங்கியுள்ளனர். மற்றொரு முனையில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், இராணுவப்பிரிவு பொறுப்பாளர் ரமேஷ் ஆகியோர் கொல்லப்பட்டனர். சர்ச்சைக்குரிய இச்சம்பவம் தொடர்பாக 2009 மே 24 இல் “சண்டே ஒப்சேவர்” பத்திரிகை கூறியிருப்பதாவது;

“சரணடைவதற்கான தமது விருப்பத்தை அவர்கள் வெளியிட்டதாக ஊகங்கள் காணப்பட்டபோதும் அது தொடர்பாக எதுவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவர்கள் கடுமையான மோதலில் ஈடுபட்டு கொல்லப்பட்டனர்.

அதேசமயம் பிரபாகரனும் அவரின் மெய்ப்பாதுகாவலர்களும் நந்திக்கடல் ஏரியின் கரையோரம் வெள்ளமுள்ளி வாய்க்காலிலிருந்து கரைய வெள்ளிமுள்ளிவாய்க்காலுக்குச் செல்ல ஆரம்பித்திருந்தனர். ஒரு கட்டத்தில் அகதிகளான பொதுமக்களுடன் கலந்து ஏரியைத் தாண்டிச்செல்ல முடியுமென கருதிச் சென்றனர். ஆனால் கடும் பசியுடனிருந்த பிரபாகரன் ஏரிக்குச் சென்று அங்குள்ள திட்டில் புகலிடம் தேடியிருந்ததாகவும் மே 18 இரவை அங்கேயே கழித்ததாகவும் “நேசன்” வாரப்பத்திரிகை தெரிவித்திருந்தது.

அவரின் முழங்கால் மட்டத்திலிருந்த சேற்றுநீரில் அவர் நின்ற போது கிரனேட் ஒன்று அவரின் மார்பை தாக்கியுள்ளது. துவக்குச்சூடு அவரின் மண்டையோட்டினூடாக சென்றுள்ளது. மே 19 இல் காலை 10 மணியளவில் விஜயபாகு படையணியைச் சேர்ந்த படையினர் சேற்றுடன் காணப்பட்ட அவரின் உடலைக் கண்டுபிடித்தனர்.

1 response | மே 23rd, 2010 at 8:04 pm under BreakingNews, அரசியல், அரசியல், இலங்கை

One Response to “5ஆம் கட்ட போரை நடத்துவர்காக‌ தப்பிச்செல்ல விரும்பினார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்: புதிய தகவல்!”

  1. Ilakkuvanar Thiruvalluvan
    3:51 am on மே 28th, 2010

    தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரனைப் பாராட்டுவதுபோல் அவர்இறந்துவிட்டார் என்னும் செய்தியைப் பதிவு செய்வதற்காகததரப்பட்டது இந்தச் செய்தி. தப்பிச் செல்ல விரும்பினார் என்றால் தப்பிச் செலலமுடியாமல் மரணமடைந்தார் என்பதுதானே பொருள். எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. போராளிகளின் உடல்களையெல்லாம் பண்பாடு கெட்ட முறையில் நாசம் செய்த சிங்களமும் துணைநின்ற இந்தியமும் வீரத்தலைவர் சிக்கினார் எனில் சும்மா இருந்திருப்பாரகளா? எனவேதான் சொல்கிறோம் . இறந்ததாகக் காட்டப்பட்டாரே தவிர அது அவரல்ல! வெல்க தமிழ் ஈழம்! மேதகு பிரபாகரன் தலைமையில் விரைவில் தமிழ ஈழக் குடியரசு அ‌மைக! அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்


படிப்பும் பாடமும்





பொது நூலகத்துறைக்கு விடிவுகாலம் எப்போது?



இந்திய நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பெருமுயற்சியால், அன்றைய கல்வி அமைச்சர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியாரின் முழு உதவியால் சென்னை மாகாணப் பொது நூலகச் சட்டம் 1948-ல் நிறைவேற்றப்பட்டு, 1950 முதல் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1951-ல் கல்விக் காவலர் நெ.து. சுந்தரவடிவேலு, பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியேற்றபோது, முதல் பொது நூலக இயக்குநராகவும் பதவி ஏற்றார்.÷நூலக இயக்கத்தின் தேவையை உணர்ந்த கல்வியாளரான அவர் பதவியேற்றபோது தமிழ்நாட்டில் மாவட்ட மைய நூலகங்கள் மட்டும் செயல்பட்டு வந்த நிலையை மாற்றி, தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேலான கிளை நூலகங்களை ஏற்படுத்தினார். பல மாவட்டங்களில் மைய நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். ÷சென்னையில் தற்போது அண்ணாசாலையில் அமைந்திருக்கும் தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகக் கட்டட இடமும் அதற்குப் பின்னால் உள்ள இடமும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவுக்குச் சொந்தமாக வாங்க, அன்றைய மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர் வி.என்.சுப்பராயனுக்கு, தொழிலதிபர் சிம்சன் அனந்தராமகிருஷ்ணன் உதவியுடன், அரசு மூலம் எல்லா உதவிகளையும் பெற்றுத் தந்தவர் நெ.து.சுந்தரவடிவேலு.÷மேலும், தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் தன்னலமற்ற தகுதி வாய்ந்தவர்களை மாவட்ட நூலக ஆணைக்குழுத் தலைவர்களாக நியமித்து, நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டி, சிறப்பாகச் செயல்பட அடித்தளம் அமைத்தவர். அந்தக்காலம் தமிழ்நாடு நூலக இயக்கத்தின் பொற்காலமாகும்!÷நூலகம் என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் அமைப்பாகும். அதன் அடிப்படையில், ஏற்பட்ட வேலைப்பளு காரணமாக, அரசாணை எண்.1034 - கல்வி - 5.7.1972-ல் வெளியிடப்பட்டு, பள்ளிக்கல்வி இயக்குநரகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தன்னிச்சையாகச் செயல்பட "பொது நூலகத் துறை' உருவாக்கப்பட்டு, நூலகவியலில் முதுகலைப் பட்டமும், நூல் அனுபவமும் கொண்டு கன்னிமாரா பொது நூலக நூலகராகப் பணியாற்றிய வே.தில்லைநாயகத்துக்குப் பதவி உயர்வு தரப்பட்டு, முதலாவது பொது நூலகத்துறை இயக்குநராக 31.7.1972 முதல் நியமிக்கப்பட்டார். அதன்பின் அரசாணை எண்.223 - கல்வி - 9.2.1974-ல் வெளியிடப்பட்டு பொது நூலகத்துறை இயக்குநர் நியமனத்துக்கான விதிமுறைகளும், கல்வித் தகுதிகளும் வெளியிடப்பட்டன. அதன்படி பொது நூலகத்துறை இயக்குநர் நியமனம் பெற நூலகவியலில் முதுகலைப்பட்டமும், குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் நூலகப்பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.÷1982-ல் வே.தில்லைநாயகம் ஓய்வுபெற்ற பின் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்ககம் பள்ளிக் கல்வி இயக்ககம் ஆகியவற்றிலிருந்து அரசாணை எண். 223 கல்வியின் கல்வித்தகுதி விதிமுறைகளைப் பின்பற்றாமல் பொது நூலகத்துறை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுள் சிலர் இயக்குநர் பதவி பெற்ற பின், பணியாற்றிக் கொண்டே நூலகவியலில் இளங்கலை, முதுகலைப்பட்டம் பெற்றார்கள்.÷ஆனால் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்திலிருந்தே பணி மாற்றத்தின் மூலம், அரசாணை எண்.223-கல்வியின் படி போதிய நூலக அனுபவம், நூலகவியலில் முதுகலைப்பட்டம் இல்லாவிட்டால் கூட பொது நூலகத்துறை இயக்குநர்களாக நியமனம் பெற்று வருகிறார்கள். அதன் மூலம் அரசாணை எண்.1043 (கல்வி) 5.7.1972-ன் செயல்பாடுகள் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்தால் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம்?÷பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் பத்தோடு பதினொன்றாக இணை இயக்குநராக இருப்பவர்கள், பணி மாற்றம் பெற்று பொது நூலகத்துறை இயக்குநராக வந்தபின், இங்கு முதல் இடத்துக்கு வந்து விடுகிறார்கள். அதன் மூலம் "பல வசதிகளைப்' பெறுகிறார்கள்.÷சட்டவியலில் பட்டம் பெறாமல் வழக்குரைஞர்களாகவோ, நீதிபதியாகவோ ஆகமுடியுமா? மருத்துவப்பட்டம் பெறாதவர்கள் டாக்டர்களாகச் செயல்பட முடியுமா? பொறியியல் பட்டம் பெறாதவர்கள் பொறியாளர்களாகச் செயல்பட முடியுமா? ஆனால் நூலகவியலில் பட்டம் பெறாதவர்கள், பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பணியாற்றியபின் பணிமாற்றம் பெற்றால், பொதுநூலகத்துறை இயக்குநராகப் பணிபுரியலாம்!÷பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரிபவர்கள் மட்டும் எல்லாத் திறமைகளும் பெற்றவர்களா? அரசாணை எண்.1034-கல்வி-5.7.1972-ன் படி பள்ளிக் கல்வித்துறையிலிருந்து பொது நூலகத்துறை தனியாகப் பிரிக்கப்பட்டும், கடந்த 20 ஆண்டுகளாகப் பள்ளிக்கல்வித்துறை தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எட்டுத் துறைகளில் ஒன்றாகவே பொது நூலகத்துறையை வைத்துக் கொண்டு, இயக்குநர் நியமனத்தை மறைமுகமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறது. அதனுடைய பக்க விளைவுகள் என்னென்ன?÷பொதுவாக, பொது நூலகத்துறை இயக்குநர் பணி என்பது, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பதிப்பாளர்களிடம் அச்சிட்ட நூல்களின் மாதிரிப்படிகளைப் பெற்று அதில் தேர்ந்தெடுத்து (எந்த வகையில்?) ஆறு மாதம் கழித்து, மாவட்ட நூலகங்களுக்கு நூல்களை வழங்க ஆணையிட்டு, அதன்பின் நான்கு மாதம் கழித்து அதற்குரிய தொகையை அனுப்ப ஏற்பாடு செய்வதுதான் தங்கள் தலையாய, வசதியான பணி என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். அந்தப் பணிகூட சென்ற இரண்டு, ஆண்டுகளாக நடைபெறவில்லை!÷இந்திய நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் முழு உழைப்பின் பலனாக ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கு மேல் பொதுமக்களிடம் நேரடியாக நூலகவரி வசூல் செய்யப்படுகிறது. இந்தத் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாக வசூல் ஆகிறது. ஆனால் அந்தத் தொகை நூலகங்கள் செம்மையாகச் செயல்பட செலவழிக்கப்படுகிறதா?÷நூலகத்துறை ஜனநாயக முறைப்படி இயங்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட நூலக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு, தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் செயல்பட வேண்டுமென, பொது நூலகச் சட்டம் கூறுகிறது. அதன்படி செயல்பட்டதால்தான் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில், மாவட்ட மைய நூலகங்கள் நகரின் மையப் பகுதிகளில் சொந்தக் கட்டடங்களில், செயல்பட்டு வருகின்றன.÷ஆனால், இன்று சென்னை மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் ஜனநாயக முறைப்படி, சட்ட விதிகளின்படி மாவட்ட நூலக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவில்லை.சென்ற 20 ஆண்டுகளாகப் பள்ளிக்கல்வி இயக்ககத்திலிருந்து வந்து செயல்பட்ட பொது நூலகத்துறை இயக்குநர்களின் நிர்வாகச் சாதனை, சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு, நூலக மேம்பாட்டுக்குச் செலவிடாமல் சேமித்து வைத்து வட்டிக்குவிட்டு சேர்த்து வைத்திருந்த தொகை ரூ.80 கோடிக்கும் மேலாகும். அந்தத் தொகை முழுவதும் தற்போது கோட்டூர்புரத்தில் உருவாகிவரும் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப் பயன்படுத்தப்படுகிறது. நல்லகாரியம்! இந்த வகையிலாவது நமது நூலக வரிப்பணம் பயன்படுகிறது என்பதுவரை மகிழ்ச்சி.÷இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி வசூல் செய்த நூலகவரி ரூ.35 கோடிக்கு மேலாகும். ஆனால் நகரில் இயங்கும் 134 கிளை நூலகங்களில் 60-க்கும் மேற்பட்ட நூலகங்களில் நூலகர்கள் நியமிக்கப்படவில்லை. வாய்ப்புக் கிடைத்தால், தியாகராயநகர் கிளை நூலகம், குப்பை வண்டிகள் சூழ, அஸ்பெஸ்டாஸ் ஓட்டுக் கூரை, தகரக்கதவுடன் செயல்படுவதைக் கண்டு வாருங்கள்! நகரின் முக்கிய பகுதி கிளை நூலகத்தின் நிலை இது!÷பொது நூலகத்துறையின் கீழ் பணியாற்றும் 5000-க்கும் மேற்பட்ட பலநிலை நூலகர்களுக்குச் சென்ற 15 ஆண்டுகளாகப் பதவி உயர்வே தரப்படவில்லை. அவர்களில் பெரும்பாலோர் நூலகவியலில் பி.எல்.ஐ.எஸ், எம்.எல்.ஐ.எஸ், எம்.பில். மற்றும் சில பேர் முனைவர் பட்டம் கூட பெற்றிருக்கிறார்கள்.÷ஆண்டுதோறும் பொதுமக்கள் கோடிக்கணக்காக நூலக வரி செலுத்தினாலும், ஆயிரக்கணக்கான மூன்றாம் நிலை நூலகர் பதவிகள் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டவோ, தேவைப்படும் மேஜை, நாற்காலிகள் வாங்கிப் போடவோ ஏற்பாடு செய்யப்படவில்லை.÷தமிழ்நாட்டில் சென்னை மாவட்டம் தவிர மற்ற 29 மாவட்டங்களில் நூலக ஆணைக்குழுவுக்குத் தலைவர்களோ, உறுப்பினர்களோ நியமனம் செய்யப்படவில்லை.÷ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மாவட்ட நூலக அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது 30 மாவட்டங்களுக்கும், ஆறு மாவட்ட நூலக அலுவலர்கள் தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் மாவட்ட நூலக நிர்வாகம் எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!÷பதிப்பாளர்கள் 2007-ல் அனுப்பிய நூல்களுக்கு இன்னும் முழுமையாகப் பணம் வந்து சேரவில்லை. 2008-ல் கொடுக்கப்பட்ட மாதிரி நூல்களுக்கு இன்னும் நூல்கள் வழங்க உத்தரவு வரவில்லை. 2009-ல் பதிப்பிக்கப்பட்ட நூல்களை மாதிரிக்குத்தர இன்னும் அனுமதிக்கப்படவில்லை.÷கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான நூலகம் கட்டினால் ஆயிற்றா? முதலில், நூலகத்துறை முறையாகச் செயல்படாமல், நூலகவியல் படித்தவர்கள் நூலகத்துறையை நிர்வாகம் செய்யாமல் உலகத்தரம் எவ்வாறு உறுதி செய்யப்படும்?(கட்டுரையாளர் : தமிழ்நாடு நூலகச் சங்கச் செயலர்).
கருத்துக்கள்

அரசு உடனே கருத்து செலுத்த வேண்டிய செய்திகளை அருமையாகத் தொகுத்துத் தந்துள்ளார் கட்டுரையாளர். என்னதான் செய்கிறது நூலகத்துறை என்ற எண்ணம்தான் எலலாரிடமும் உள்ளது. அந்த நிலை மாற உடனே பல நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2010 3:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வியாழன், 27 மே, 2010

மர மாளிகை


கல்வி நிறுவனங்களில் மதரீதியாக பாகுபாடு: தமிழகம் முழுவதும் ஜூலையில் பாஜக ஆர்ப்பாட்டம்: இல.கணேசன்



கோவை, மே 26: கல்வி நிறுவனங்களில் மதரீதியாக மாணவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஜூலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார். ÷கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:÷சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் உதவித் தொகைக்கான படிவத்தில் வருமானம் குறித்த எவ்விதத் தகவலும் கேட்கப்படவில்லை. ஆனால், இந்து மாணவர்களுக்கு வருமானம் அடிப்படையிலேயே, குறைந்த மாணவர்களுக்கே, குறைவான தொகையே உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது மாணவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. ÷முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், பிற மதத்தினருக்கும் அதேபோல வழங்க வேண்டும். இல்லையெனில் பொருளாதார அடிப்படையில் உதவித் தொகையை நிர்ணயிக்க வேண்டும்.÷இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தமிழகம் முழுவதும் ஜூலையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். கோவையில் ஜூலை 18-ல் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.÷மத்தியில் கடந்த 6 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவோ, பணவீக்கத்தைக் குறைக்கவோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாறாக பணவீக்கம் இரட்டை இலக்கத்துக்குச் சென்றுவிட்டது. ÷உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, அரசியல் மாநாடு அல்ல என்பதால் அதை பா.ஜ.க. வரவேற்கிறது. மேலும் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெறுவதில் பா.ஜ.க.வின் முயற்சியும் இருந்தது. ÷வரும் பேரவைத் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பா.ஜ.க. போட்டியிடும். அதற்கான ஆயத்த பணிகளைத் துவக்கியுள்ளோம் என்றார்.
கருத்துக்கள்

நம்நாடு மதச்சார்பற்ற நாடு அன்று. பல்சமயச் சார்பு நாடு. இந்த நிலை மாறவேண்டும். சிறுபான்மையர் மொத்தத்தில் எத்தனை விழுக்காடு இருக்கின்றனரோ அத்தனை விழுக்காட்டு அளவில்தான் மொத்தக் கல்விக் கூடங்களில் சிறுபான்மைக் கல்விக் கூடங்கள் இருக்க வேண்டும். சான்றாகப் பொறியியல் கல்லூரிகளில் 50 விழுக்காட்டிற்கும மேலானவை தெலுங்குச்சிறுபான்மையர் என்ற போர்வையில் நடததப்படும் தெலுங்கர் கல்வி நிறுவனங்களே. சமயத்திற்கும் இது பொருந்தும். தமிழ்நாட்டில் தமிழர் சமயம் சிறுபான்மையாகி விட்டதால் தாய்ச் சமயத்தையும் தாய் மொழியையும் ஊக்குவிக்கும் வகையில் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழர் சமயம் எனக்குறிப்பவர்க்கும் சலுகைகள் அளிக்க வேண்டும். பிற சமயங்களின் ஆதிக்கம் நம் நாட்டின் கலை, பண்பாட்டு, வரலாற்று, நாகரிக, மொழிச் சிறப்புகளை அழிக்கின்றன என்பதை உணர வேண்டும். ஐரோப்பியக் கிறித்துவர்கள் தமிழ்ச்சிறப்பைப் போற்றினார்களே தவிர தமிழர் சமயத்தைத் தழுவவில்லை. பிற சமயங்களின் சிறப்புகளைப் போற்றும் மனப் பக்குவம் வேண்டும். ஆனால், சமய மாற்றம் கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2010 2:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஒகேனக்கலில் குடிநீர்த் திட்டம் துவக்கப்பட்ட இடம் தமிழகத்துக்கு சொந்தமானது: இல.கணேசன்



கோவை, மே 26: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் துவக்கப்பட்ட இடம் தமிழகத்துக்கு சொந்தமானதுதான் என்று பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.கோவை ராமநாதபுரத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழக அரசு சார்பில்தான் நடத்தப்படுகிறது. திமுக மாநாடாக இருந்திருந்தால் பாஜக பங்கேற்றிருக்காது. தமிழர்களின் மாநாடாக இருப்பதால் பங்கேற்கிறது.தமிழகத்தில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ் படிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். இது தமிழக தமிழர்களுக்கு இருக்கும் பிரச்னை. பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களது பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்கவே தடுமாறி வருகின்றனர். ஒவ்வொரு இடத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் வெவ்வேறு வகையில் பிரச்னைகள் உள்ளன. இவற்றுக்கு இம்மாநாட்டில் தீர்வு கிடைக்க பாஜக குரல் கொடுக்கும்.முல்லைப் பெரியாறு போன்ற அண்டை மாநில நதிநீர்ப் பிரச்னைகள் தொடர்பாக இரு மாநில முதல்வர்கள் பேச்சு நடத்த வேண்டும். இதற்காக கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.காங்கிரஸ் ஆட்சியில் அங்கிருந்த முதல்வர், கட்சிகள் தெரிவித்த கருத்துக்கும், இப்போதுள்ள முதல்வர் மற்றும் கட்சிகள் தெரிவிக்கும் கருத்துக்கும் வேறுபாடு உள்ளது. ÷ஒகேனக்கல் திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், திட்டப்பணிகள் துவக்கப்பட்ட இடம்தான் சர்ச்சைக்குரியது என்று கர்நாடகத்தில் குரல் எழும்பியுள்ளது. ஒகேனக்கல் குடிநீர்த் திட்டப் பணிகள் துவக்கப்பட்ட இடம் தமிழகத்துக்குச் சொந்தமானதுதான் என்றார்.
கருத்துக்கள்

மிகச் சரியான உரை.இது போல், தமிழ்நலம் நாடித் தங்கள் கட்சியை அழைத்துச் சென்றால் அவர்களுக்கும் நல்லது. தமிழகத்திற்கும நல்லது. பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2010 2:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
யாரையும் இழக்க விரும்பவில்லை: ஜெயலலிதா



சென்னை, மே 26: முன்னாள் அமைச்சர் முத்துசாமி உள்பட அ.தி.மு.க. உறுப்பினர்களில் ஒருவரைக் கூட இழக்க விரும்பவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார். அ.தி.மு.க. வைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஜெயலலிதா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்களில் ஒருவரான முத்துசாமி, தி.மு.க.வில் இணையப் போவதாக ஊடகங்களில் வரும் செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது: அ.தி.மு.க.வில் ஒன்றரை கோடி உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நான் பொதுச் செயலாளர். கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளதால், உறுப்பினர்கள் அனைவரது பிரச்னைகளையும் கேட்டு, தீர்வு காண வேண்டியது எனது கடமையும், பொறுப்பும் ஆகும். எனவே, கட்சியினர் யாருக்கு எந்த பிரச்னை இருந்தாலும், என்னை சந்திக்கலாம். அவர்களது மனக் குறைகள் குறித்து என்னிடம் மனம் விட்டுப் பேசலாம். பேச்சுவார்த்தை மூலம் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும். முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கு என்ன மனக் குறை உள்ளது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. முத்துசாமி எப்போது வேண்டுமானாலும், என்னை சந்தித்துப் பேசலாம். அவர் என்னிடம் பேசினால், அவரது பிரச்னைக்கு நிச்சயம் தீர்வு காண முடியும் என்று நான் நம்புகிறேன். முத்துசாமி உள்பட கட்சியில் உள்ள எந்த ஒரு உறுப்பினரையும் இழக்க நான் விரும்பவில்லை.ஸ்பெக்ட்ரம் பிரச்னை: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக போதுமான ஆதாரங்கள் உள்ளன. ஊடகங்களில் பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சி.பி.ஐ. அதிகாரிகள் பல ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளனர். எனினும், பிரதமர் மன்மோகன் சிங் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொலைதொடர்பு அமைச்சர் ஆ. ராசா சாதாரணமானவர். இப்பிரச்னையில் அவரைவிட பலம் வாய்ந்த யாரோ உள்ளனர். அத்தகைய நபரைக் காப்பாற்ற பிரதமர் மன்மோகன் சிங் முயல்கிறார்.÷2011-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது மேலும் சில கட்சிகள் அ.தி.மு.க. அணியில் சேரக் கூடும். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து, கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூடி முடிவு செய்யும் என்றார் ஜெயலலிதா. முன்னதாக அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் சார்பில் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள வாகனத்தை ஜெயலலிதா இயக்கி வைத்தார்.÷மேலும், அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 92 பேருக்கு, தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.23 லட்சம் நிதி உதவி வழங்கினார். மரணமடைந்த கட்சி உறுப்பினர் ஒருவரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதியை அவர் வழங்கினார். வடசென்னை மாவட்டம் சார்பில் நடத்தப்பட்ட இலவச தையல் பயிற்சியை முடித்த 70 பெண்களுக்கு, தையல் எந்திரங்களை ஜெயலலிதா வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் கட்சியின் அவைத் தலைவர் இ. மதுசூதனன், பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஜி. செந்தமிழன், பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்து வி்ட்டார். ஆனால், பொருள் புரிந்துதான் படித்தாரா எனத் தெரியவில்லை. காட்சிக்கு எளியராக இருந்தால் தம்முடைய குறைகளைக் களைந்து நிறை கண்டு வெற்றிகளை ஈட்டியிருப்பாரே! யாராக இருந்தாலும் தன்னைச சந்திக்கலாம் என்றவர்,அதற்கு ஆண்டுக் கணக்கில் தவமிருந்து காத்திருக்க வேண்டும் எனக் கூறத் தவறி விட்டார். என்றாலும் விலகல்களினால் கலகலத்துப் போய்விடடார் என்று மட்டும் தெரிகிறது. தம்முடைய நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டால் வெற்றியை அரவணைக்கலாம். ஆனால், மேலாதிக்க மனப்போக்கு அதனைத் தடுக்கின்றது. கட்சி கரைந்து விடும் என்ற அச்சம் வந்து விட்டதால் முத்துச்சாமி சந்திக்கும்வரை அல்லது விலகும் வரை காத்திருக்காமல் வரவழைத்துப் பேசலாம். தொண்டர்களின் தமிழ் உணர்வைப் புரிந்து கொள்ளாத மற்றொரு கட்சித் தலைமை! எக்கேடு கெட்டால் நமக்கென்ன? தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளிக்கும் கட்சியை வரவேற்போம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/27/2010 2:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

புதன், 26 மே, 2010

நெஞ்சில் உரமும் இல்லை;​ நேர்மைத் திறமும் இல்லை!


நெஞ்சில் உரமும் இல்லை;​ நேர்மைத் திறமும் இல்லை!



உலக மகா அதிசயம்.​ அதுவும்,​​ களைத்துப்போன தொழிலாளர்களின் உடல் வலிக்குக் ​ கட்டாயம் சாராயம் வேண்டும் என்றே நேற்று வரை கருதி வந்த கம்யூனிஸ்டுகள் கூட,​​ டாஸ்மாக் சாராயம் ஒரு மிகப்பெரிய பிரச்னை என்று இன்று ஒத்துக் கொண்டுள்ள அதிசயம்.நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில்,​​ பா.ம.க.,​​ கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்தில் அதிகரித்து வரும் டாஸ்மாக் மதுப்பழக்கத்தைப் பற்றிக் கவலை தெரிவித்துள்ள நிகழ்வு வரவேற்க வேண்டிய மாற்றம்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவபுண்ணியம்,​​ ஆறரைக் கோடி மக்களில்,​​ இரண்டு கோடி மக்கள் டாஸ்மாக் சாராயத்தில் கரைகிறார்களே,​​ இது என்ன வளர்ச்சி என்று கூறி புண்ணியம் தேடிக் கொண்டுள்ளார்.சில மாதங்களுக்கு முன் சி.பி.ஐ.​ கட்சித் தலைவர் நல்லகண்ணுவிடம் வரைமுறையற்ற டாஸ்மாக் சாராய வியாபாரம் பற்றிக் கருத்து பரிமாறிக் கொண்டபொழுது,​​ ""அது தான் வருமானம் வேணும்னுதான் முச்சந்தியில் எல்லாம் கவர்மெண்ட் சாராயக்கடை வெச்சிருக்கிறாங்களே,​​ மேலும் குடிகாரனாகப் பார்த்து திருந்தினாத்தான் உண்டு'' என்று பேசினார்.​ அனுபவம் மிக்க அரசியல் தலைவர்களிடம் கூட,​​ இந்தியாவில் ​ அசுர வளர்ச்சி பெற்று எல்லா சமூகத்தினரையும் புதை குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் சாராயச் சந்தையைப் பற்றிய முழுமையான புரிதல் இல்லை என்பதே உண்மை.இன்றைக்கு இந்திய மக்களின் மிகப்பெரிய பொது எதிரியானது சாராயச் சந்தைதான் என்றால் மிகையில்லை.​ தமிழக அரசு தனது மிகக் கேவலமான சாராய வருமான மூர்க்கத்தனத்தை உடனடியாக மாற்றிக் கொள்ளவில்லை என்றால்,​​ இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில்,​​ தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாகாத இளைஞர்களை-மதுவால் ​ பாதிக்கப்படாத குடும்பங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.​ இதை ஏதோ வீரியத்துடன் எழுத வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை.​ மதுப்புழக்கத்தால்,​​ சமூகம்,​​ பொருளாதாரம்,​​ மனித வளம்,​​ கலாசாரம்,​​ நடத்தை மற்றும் ஒழுக்கவியல்,​​ சுகாதாரம் போன்ற பல்வேறு தளங்களில் மிக வேகமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நுணுக்கமான பாதிப்புகளைக் கூட தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து புரிந்து வைத்திருப்பதால் தான் இதனை உறுதியுடன் கூற முடிகிறது.​ இன்றைக்கு எந்த ஒரு பொது நிகழ்வுகளிலும் இளைஞர்களைக் காண முடிவதில்லை.​ இளைஞர்கள் நுகர்வுக் கலாசாரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.​ மிக அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்கள்,​​ கூடிக் களிக்கும்-இல்லையில்லை-விட்டில் பூச்சிகளாக விழுந்து கொண்டிருக்கும் இடங்களாக டாஸ்மாக் விடுதிகள் உள்ளன.தமிழகம் முழுவதுமுள்ள ​(அரசின் அடுத்த சாதனையாக கட்டிக் கொண்டிருக்கிற பிரம்மாண்டமான அண்ணா நூலகம் உள்பட)​ நூலகங்கள்,​​ இளைஞர்களைக் கவர்வது இப்பொழுதெல்லாம் முடியாத காரியமாகி விட்டது.ஜூன் மாதக் கடைசியில் ​ கோவையில் அரசு நடத்த இருக்கும் செம்மொழி மாநாடு வரலாறு படைக்குமா என்பது வேண்டுமானால் கேள்வியாக இருக்கலாம்.​ ஆனால்,​​ மாநாடு நடக்க இருக்கும் வாரத்தில்,​​ கோவை மாவட்ட டாஸ்மாக் சாராய விற்பனை புதிய சாதனை படைக்கும் என்பதை இன்றே உறுதியுடன் கூற முடியும்.தமிழக அரசு,​​ டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள்,​​ ஊழியர்கள்,​​ சாராய நிறுவனங்கள்,​​ இடைத்தரகர்கள்,​​ கட்சிக்காரர்கள் எல்லோரும் இணைந்து கொள்ளையடிக்கும் மையப் புள்ளியாக,​​ மாஃபியாவாக,​​ டாஸ்மாக் சந்தை மாறி உள்ளது.​ இதன் மூலம் தமிழகத்தில் ஒரு நிழல் உலகம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.​ எல்லாவகை குற்றங்களுக்குமான இடங்களாக டாஸ்மாக் விடுதிகள் மாறிவிட்டன.​ ​​ இந்தியா முழுவதுமே மதுக் கலாசாரத்தில் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறது.​ அதிலும்,​​ தமிழகத்தில் அரசு இயந்திரம் இயங்குவதற்கே,​​ மது வருமானத்தைத்தான் மிக அதிகமாக நம்பியுள்ள நிலை உள்ளது.​ அதனால்,​​ தமிழக அரசு மிக வேகமாக மது விற்பனையை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள் சிக்கிக் கொண்டுள்ளது.​ மற்ற அண்டை மாநில அரசுகளும் தமிழக அரசின் வெற்றி பார்முலாவை அப்படியே நடைமுறைப்படுத்த முயன்று வருகின்றன.எதிர்க்கட்சிகளிடமும்,​​ பொது மக்களிடமும் இந்த மது வியாபாரம் ஒரு சுனாமி போன்று உருவெடுத்துள்ளது என்ற பொதுக் கருத்து இல்லாமையால்தான்,​​ தமிழக அரசால்,​​ இப்படி பொது நன்மையை முற்றிலும் முறிக்கும் கொள்கையைச் செயல்படுத்த முடிகிறது.எதிர்காலத்தில்,​​ மற்றொரு அரசோ அல்லது இன்றைய ஆளுங்கட்சி அரசோ கூட மதுவிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற முற்போக்கு நடவடிக்கை எடுக்க நினைத்தால்,​​ முடியாது போய்விடும்.​ ஏனென்றால்,​​ இந்த நிழல் உலகத்தில் பலரது தொழில்,​​ வருமானம் பாதிக்கப்படும்.​ அதனை அவர்கள் விட்டுவிட மாட்டார்கள்.​ மதுச் சந்தை மூலம் சுலபமாக குறுக்கு வழியில் வருமானம் ஈட்டி வருபவர்கள்,​​ நாளை தங்கள் வருமானத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எந்த ஒரு பாதகச் செயலிலும் ஈடுபடத் தயங்கமாட்டார்கள்.​ இன்றைக்கு லட்சக்கணக்கான ஆண்கள் குடிநோயில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.​ அரசு நடத்தும் குடிநோய் மையங்கள் தமிழகத்தில் மொத்தமே எட்டு ​ மருத்துவமனைகளில்தான் உள்ளன.​ இந்த நிலையில்,​​ ஊருக்கு ஊர் தனியார்கள்,​​ குடி சிகிச்சை மையங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றனர்.​ இவ்வகை குடிசிகிச்சை மையங்களில்,​​ 90 சிகிச்சை மையங்கள் போலியானவை.​ "எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்' என்ற ​ விரக்தி மனநிலையில் உள்ள மனைவிமார்கள்,​​ தங்கள் குடிநோயுள்ள கணவர்களை இப்போலி மையங்களில் சேர்த்து எப்படியாவது குணமடைய வேண்டும் என்று கடன் வாங்கியாவது செலவு செய்கின்றனர்.​ ஆனால்,​​ சிகிச்சை என்ற பெயரில்,​​ இங்கு துன்புறுத்தலும்,​​ அறிவியல் சாராத ஏமாற்று சிகிச்சைகளும்தான் அளிக்கப்படுகின்றன.போலி மருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசு,​​ இம்மையங்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.​ அரசே,​​ தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் குடிமுறிவு மையங்களை ஏற்படுத்தினால்தான் இவ்வகை போலி நிறுவனங்களை ஒழித்துக் கட்ட முடியும்.​ குடிநோயில் இருந்து ஒருவரை மீட்பது மிகமிகக் கடினம்.​ மீட்டாலும் அது மிகத் தாற்காலிக நடவடிக்கையாகவே இருக்க முடியும்.​ ஆனால்,​​ குடிநோய் வராமல் ​ தடுப்பது சுலபம்.​ ​​ போலி குடிமுறிவு மையங்களைப் போலவே,​​ சித்தா,​​ ஆயுர்வேதா,​​ யுனானி என்று விதவிதமான போலி குடிநோய் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் கடை பரப்பி உள்ளனர்.​ இப்படிப்பட்ட போலி மருத்துவர்களின் விளம்பரங்களை ஏமாற்று வேலை என்று தெரிந்து கொண்டே வெளியிடும் பத்திரிகைகளை என்னவென்று சொல்வது.​ பல மனைவிமார்கள் இவ்வகை போலி மருத்துவர்களிடம்,​​ குளிகைகளையும்,​​ மருந்துப்பொடிகளையும் மிகுந்த விலை கொடுத்து வாங்கி ரகசியமாக கணவர்களுக்கு உணவிலும்,​​ பாலிலும் கலந்து கொடுத்து ​(மருத்துவர் அறிவுரைப்படி)​ ஏமாந்துபோய் வருவது சகஜமாகி விட்டது.தாய்மார்களோ,​​ இந்தப் போலி குளிகைகளுக்காக,​​ தங்கள் தாலிகளைக் கூட அடமானம் வைக்கிறார்கள்.​ தமிழக அரசோ,​​ சாராய வருமானத்துக்காக தனது ஆன்மாவையே அடமானம் வைக்கிறது.​ சமீபத்தில் சென்னைக்கு அருகில் புழல் பகுதியில் உள்ள 50 பள்ளிகளில் படிக்கும் 13-16 வயதுக்குள்பட்ட மாணவர்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.இதில் 11 சதவிகிதம் பள்ளி மாணவர்கள் மது அருந்துகிறார்கள் என்று தெரிய வந்ததுள்ளது.​ இந்த 11 சதவிகிதம் இன்னும் சில ஆண்டுகளில் 30 சதவிகிதம் ஆகாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.​ ஏனென்றால்,​​ அரசின் மது விற்பனை நடவடிக்கைகள் அத்தனை கேவலமாக உள்ளது.ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள்,​​ நாட்டின் இன்றைய நிலவரத்தைப் பற்றியும்,​​ எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் பற்றியும் உச்சகட்ட அலட்சியத்தைத் தன்னுள் கொண்டுள்ளனர்.எந்த ஒரு பள்ளி மாணவனும் பள்ளிக்கு வரும் போதும்,​​ வீடு திரும்பும் போதும் டாஸ்மாக் கடையைத் தாண்டாமல் போக முடியாது என்ற நிலையே உள்ளது.​ சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தபோது,​​ இதனால் வேலை இழப்பு ஏற்படுமே என்ற கேள்வியைத் தான் ​ ​ ​ புத்திசாலித்தனமாக முதல்வர் கேட்டுள்ளார்.​ ​​ நடு இரவில் தோன்றிய கடவுளிடம்,​​ நாளை காலை உலகில் யாருக்குமே எய்ட்ஸ் நோய் இருக்கக் கூடாது என்று வரம் கேட்டு,​​ கடவுள் அருள் புரிந்தால் என்ன ஆகும்?எய்ட்ஸ் நோயை நம்பி,​​ கடை பரப்பியுள்ள நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்கள்,​​ மருந்து நிறுவனங்கள்,​​ ஆராய்ச்சி நிறுவனங்கள்,​​ மருத்துவர்கள்,​​ செவிலியர்கள்,​​ விளம்பர நிறுவனங்கள்,​​ அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை ஊழியர்கள் எல்லோருக்கும் அடுத்த நாள் காலையே வேலை போய்விடும்.​ அதனால்,​​ நாட்டில் எப்பொழுதும எய்ட்ஸ் நிலைத்துநின்று வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்கிறாரா முதலமைச்சர்.​ டாஸ்மாக் கடைகளை மூடி விட்டால்,​​ 35,000 ஊழியர்களின் வேலை போய் விடும் எனும் முதலமைச்சரின் விளக்கம்,​​ பாரதியின் இந்தக் கவிதை வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது.""நெஞ்சில் உரமும் இன்றி,​​ நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே,​​ வாய்ச்சொல்லில் வீரரடி.''
கருத்துக்கள்

மதுக்கடையில் வேலைபார்ப்பவர்களுக்கும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் பெண் கொடுக்க மாட்டோம்; குடும்பத்தினருடன் மண உறவு கொள்ள மாட்டோம் எனப் பொதுமக்கள் மாறும் அளவிற்கு நாட்டை மாற்ற நாராயணன் போன்றோர் முயல வேண்டும். விழவிலும் இழவிலும் குடிப்பது நாகரிகம் என்னும் போக்கை நிறுத்த வேண்டும். மதுக்குடியரல்லர் என்னும் மருத்துவச் சான்றிதழ் பெற்றவர்க்கு மட்டுமே வேலை என்னும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அதே நேரம் அரசே மதுவையும விற்பனை செய்து கொண்டு குடி நிறுத்த முகாம்களை அல்லது மையங்களை நடததுவது என்பது கேலிக் கூத்தாகும். ஆனால், அனைத்து அரசு மரு்துவ மனகைளிலும் ஒரு பிரிவைத் தொடங்கலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 3:29:00 AM

மதுப்பெருக்கம் குறித்த நலல எச்சரிக்கை. இதற்குக் காங்கிரசும் மூல காரணம். மது விலக்கு மாநிலங்களுக்கு அளிக்கும் உதவித் தொகையைத்தமிழக அரசிற்குத் தருமாறு வேண்டியபொழுது மதுப் பழக்கம் நடைமுறையில் இருந்து அதை நிறுத்தும் மாநிலங்களுக்கு மட்டும் நல்கை உதவி அளிக்கப்படும் என்றும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தமிழகத்திற்கு நிதியுதவி அளிக்க முடியாது என்றும் மறுத்து விட்டது. அப்படியாயின் ஒருநாள் மது விலக்கை விலக்கி வைத்து விட்டுப் பின்னர் நடைமுறைப்படுத்தினால் மத்திய அரசு உதவுமா எனக் கலைஞர் கேட்டார். அவ்வாறாவது செய்திருக்கலாம். மதுச்சுவைக்குப் பாண்டிச்சேரிக்கும்தேக்கடிக்கும் சென்று வந்த சிறுபான்மையர் நிலை மாறி இன்று பள்ளி மாணவ மாணவியர் கூட மதுவிற்கு அடிமையாக மாறிய கேடுகெட்ட சூழல் எழுந்துள்ளது. மதுக்கடையில் வேலைபார்ப்பவர்களுக்கும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் பெண் கொடுக்க மாட்டோம்; குடும்பத்தினருடன் மண உறவு கொள்ள மாட்டோம் எனப் பொதுமக்கள் மாறும் அளவிற்கு நாட்டை மாற்ற நாராயணன் போன்றோர் முயல வேண்டும். விழவிலும் இழவிலும் குடிப்பது நாகரிகம் என்னும் போக்கை நிறுத்த வேண்டும். மதுக்குடியரல்லர் என்னும் மருத்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 3:26:00 AM

The last bharath's wordings are very super.the same CM once he started very first the arrock shop in tamil nadu.now he keep the TASMAC shop for,revenue and small group of peoples.He has no long run view,which openly reveal the truth of future generations.o god only save the tamil nadu people.

By n.s.prabaharan
5/22/2010 4:23:00 PM

மஞ்சத்துண்டுகாரருக்கு தன்குடும்பம்முழுவதும் சினிமா தொழிலில் உள்ளதால் சினிமாகாரர்கள் மற்றும் அவர்கள்தேவைகள்தான் முக்கியம் .தமிழ்நாட்டு மக்கள் எக்கேடுகேட்டால்என்ன. மஞ்சத்துண்டு வாழ்க. அவரது குடும்பம் வாழ்க. யார் செத்தால் என்ன. ISLAM IS PERFECT WAY FOR HUMAN.

By INDIAN
5/21/2010 11:15:00 PM

THIRUTTU KARUNANIDHI அரசோ,THAN KUDUMBAM VAZHA​​ சாராய வருமானத்துக்காக தனது ஆன்மாவையே அடமானம் வைக்கிறது.""நெஞ்சில் உரமும் இன்றி,​​ நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே,​​ வாய்ச்சொல்லில் வீரரடி.''

By INDIAN
5/21/2010 10:25:00 PM

மஞ்சத்துண்டுகாரருக்கு தன்குடும்பம்முழுவதும் சினிமா தொழிலில் உள்ளதால் சினிமாகாரர்கள் மற்றும் அவர்கள்தேவைகள்தான் முக்கியம் .தமிழ்நாட்டு மக்கள் எக்கேடுகேட்டால்என்ன.

By anbu
5/21/2010 6:50:00 PM

it is jsut foolish for DMK government to say that 35000 people have been given jobs. NO doubt oprohibition has failed in the pst but should the government be the retailer of drinks. POliticians, media and the soceity have a role to ensure that our people live healthy lives and not fritter away their small earnings on drinks. This does not come about by asking TV channels to show a remakr of how smoking and drinking ruin us. The least the DMK could have done wws not to open liquor shops like streetcorner 'maligai kadai'. Good that DInamani is begining to encourage articles tht highlight the evils in soceity no matter if these have to swim against current trends in soceity. Especially, the language prfewss has a great role in this movement.

By s subramanyan
5/21/2010 4:05:00 PM

GOOD EDITORIAL. THE LEGACY OF KARUNANIDHI TO TAMILIAN YOUNGSTERS.VAAZHGA TAMILNADU. VAAZHGA KUDIMAGANGAL.

By S Raj
5/21/2010 12:53:00 PM

சிறப்பான கட்டுரை! திரு அ.​ நாராயணன் அவர்களே நன்றி! மதுவை குடிப்பது என்னவோ பெரிய சாகசம் என்பதுபோல் எல்லா திரைப்படங்களும்/சனியன் பெட்டிகளும்/ விளையாட்டுப் போட்டிகளும் காட்டுகிறது. மது மற்றும் போதை வஸ்துகளை விளம்பரம் செய்யகூடாது என்பது சட்டம்! ஆனால் இப்போது சட்டம் குப்பையில் (அ) அதே பெயரில் வேறு ஏதேனும் பொருட்களை சந்தைக்குவிட்டு (சோடா,தண்ணீர்,கேசட் இன்னபிற..) விளம்பரம் கன ஜோர்!.மக்கள் நலன் அரசாக இருந்தால் ஏதேனும் செய்யும், இந்தியாவில் நடப்பது "குடும்பநலஅரசு" அல்லவா! பி.கு:அடுத்தது "விபசாரவிடுதி" என்று நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருநதுதகவல் வந்திருக்கு!(புதுசாய் சேர்ந்தவர்தான் தலைமையாம்!)

By Ind!an
5/21/2010 11:58:00 AM

பேய் செய்யும் ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள் - பாரதியின் கவிதையும் நினைவில் வருகிறது. பிணம் செய்யும் ஆட்சியில் பேய் தின்னும் சாத்திரங்கள் - இப்ப பாரதி இருந்த இப்படிதான் சொல்லி இருப்பாரோ...

By இனியவாசகம்
5/21/2010 10:45:00 AM

கட்டுரையாளரின் கவலையும் ஆழ்ந்த ஏக்கமும் புரிந்து கொள்ளமுடிகிறது. சமுக சீர்கேட்டை மாற்ற முடியாத இயலாமை நம்மை வாட்டுகிறது. காலத்தின் தேவை கருதி இளைய சமுதாயத்திற்கு விழிப்புணர்வு கொள்ள அவசியமான கருத்துக்கள். கட்டுரையாளருக்கு நன்றியும் வாழ்த்தும், தொடர்ந்து மேலும் பல அறிய கட்டுரைகளை எதிர்நோக்கும்....இனியவாசகம்

By இனியவாசகம்
5/21/2010 10:15:00 AM

மஞ்சத்துண்டு வாழ்க. அவரது குடும்பம் வாழ்க. யார் செத்தால் என்ன.

By திமுக தொண்டன்.
5/21/2010 8:54:00 AM

Excellent Article.

By Kumaran
5/21/2010 8:28:00 AM

இன்றைய நிலையில் பெரும்பாலான இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவதை நாள்தோறும் காணமுடிகிறது. இந்நிலை நீண்டாள் எதிர்கால தமிழ்ச் சமூகம் மதிமங்கிப்போன சமூகமாக மாறிவிடும். இந்நிலையைப் போக்க வேண்டிய அரசே மதுக்கடைகளை நடத்துவது மிகக் கேவலமான ஒன்று. பணத்திற்காக எதையும் செய்யலாம் என்பதையே இது காட்டுகிறது. மதுக்கடைகளை மூடினால் 35,000 தொழிலாளர்களின் பணி பாதிக்கப்படும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமல்ல. அப்பணியாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை அரசுதான் செய்து கொடுக்க வேண்டும். அவர்களின் பணிப் பாதுகாப்பிற்காக தமிழகத்தில் உள்ள ஏழு கோடி குடும்பங்களை வயிறெரிய விடலாமா?

By புதுவை ஏ.எழில்வசந்தன்
5/21/2010 8:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
சென்று வந்தேன்...​ நொந்து வந்தேன்...



இலங்கையில் உள்ள திருக்கோயில்களை தரிசனம் செய்வதற்காகவும்,​​ யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களை நேரடியாகச் சந்தித்து உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும்,​​ கடந்த 11.5.10 ஆன்மிக இயக்கங்களைச் சேர்ந்த 6 பேருடன் சென்னையில் இருந்து கொழும்பு சென்றேன்.​ ​​ யாழ்ப்பாணம்,​​ கிளிநொச்சி,​​ முல்லைத் தீவு,​​ வன்னி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும் என்கிற நிபந்தனை நாளதுவரை இருக்கிற காரணத்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தோம்.​ 2 நாள்களாக நாங்கள் செய்த முயற்சி​ பலன் அளிக்கவில்லை.​ எனவே,​​ கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ 9 நெடுஞ்சாலை வழியாக ஒமந்தை ராணுவச் சோதனைச் சாவடியில் அனுமதி பெற முயற்சிக்கலாம் என்கிற செய்தி தெரிந்து,​​ யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமானோம்.​ யுத்தம் முடிந்து,​​ ஓராண்டு நிறைவுபெற்றபிறகும்,​​ ராணுவத்தின் கட்டுப்பாட்டில் முழுமையாக இலங்கை உள்ளதை நேரடியாகக் காணமுடிந்தது.​ ஆங்காங்கே ராணுவ முகாம்களும்,​​ ராணுவக் காவல் மையங்களும்,​​ ராணுவச் சோதனைச் சாவடிகளும் ஏராளமாக இருந்தன.​ ஒமந்தையிலும் எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.​ சர்வதேச சமூகத்தினருக்கும் சமீபத்தில் இலங்கைத் தேர்தலில் வென்ற இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட இப் பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.​ பொதுவாக,​​ இலங்கை முழுவதும் ராஜபட்சவின் புகழ்பாடும் விளம்பரங்களே காணப்படுகின்றன.​ இலங்கை ராணுவ மற்றும் அரசு அதிகாரிகளும் தமிழ் மக்களைச் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர்.​ சிங்கள பெரும்பான்மைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகளில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் ராணுவம் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.​ யுத்தப் பாதிப்பு மனோ நிலையில் இருந்து தமிழர்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.​ தனிப்பட்ட முறையிலும்,​​ பொதுவாகவும் தமிழர்களுக்கு எந்தவொரு பாதிப்பு ஏற்பட்டாலும்,​​ அதுகுறித்து அரசு நிர்வாகத்திடம் புகார் செய்வதற்குக் கூட பயந்து வாழும் பரிதாபகரமான சூழ்நிலையே உள்ளது.​ தங்கள் தொழில் மற்றும் வியாபார நிறுவனங்களோ,​​ விவசாய நிலங்களோ ​(காணிகள்)​ சிங்களவர்களால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை வேடிக்கை பார்க்கும் துன்பகரமான சூழ்நிலையில்தான் தமிழர்கள் இன்று உள்ளனர்.​ ​​ ​ இலங்கை முழுவதும் பல்லாயிரக்கணக்கான இந்துக் கோயில்கள் உள்ளன.​ இதில்,​​ ராமாயணம் மற்றும் மகாபாரதத்தோடு தொடர்புடைய கோயில்கள் ஏராளமாக உள்ளன.​ சோழ மன்னர்களால் கட்டப்பட்ட சிவாலயங்களும் உள்ளன.​ ​ யுத்தத்தின்போது தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் சிங்கள ராணுவத்தினரால் தாக்கப்பட்டன.​ சில கோயில் வளாகங்களை ராணுவத்தினர் தங்களது முகாம்களாகக் கூட பயன்படுத்தினர்.​ சிதிலமடைந்த பல கோயில்களை வெளிநாடுவாழ் இலங்கைத் தமிழர்கள் உதவியுடன் இயன்ற அளவு சீரமைத்து வழிபாடுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.​ ​​ ​ யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் யுனிசெஃப் வாகனங்களும்,​​ கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்களின் வாகனங்களும் ஏராளமாகக் காணப்படுகின்றன.​ ஐ.நா.​ சபை சார்பில் மனிதாபிமான உதவிநிதியத்தில் சுமார் ரூ.1600 கோடி இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டது.​ அதில்,​​ வெறும் ரூ.40 கோடி மட்டுமே இலங்கைத் தமிழர்களுக்குச் செலவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள தமிழர்கள் கூறுகின்றனர்.​ ​​ யாழ்ப்பாணம்,​​ கிளிநொச்சி,​​ முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்களின் கல்வி முழுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.​ சுமார் ஒரு லட்சம் மாணவர்களில் 26 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே யுத்தத்துக்குப் பிறகு பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.​ ​​ மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களுடன் உரையாடுகையில்,​​ கடந்த ஆண்டு உக்கிரமாக நடந்து வந்த இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கூட இந்தியா இது விஷயத்தில் தலையிட்டு,​​ ஏதேனும் ஒரு வகையில் யுத்த நிறுத்தத்தை அமல்படுத்தும்,​​ இந்தியா தங்களைக் காப்பாற்றும் என எதிர்பார்த்துக் காத்திருந்து,​​ தமிழ் மக்கள் ஏமாந்து இருக்கின்றனர்.​ இந்தியா நம் தாய்நாடு.​ இந்திய மக்கள்,​​ குறிப்பாக தமிழ் மக்கள் ஒருபோதும் நம்மைக் கைவிட மாட்டார்கள் என்றும்,​​ இந்தியக் கப்பல்கள் இன்று வரும்,​​ நாளை வரும் என்றும்,​​ அப்பாவிகளான தங்களைக் காப்பாற்றும் என்றும் கடைசி நொடி வரை எதிர்பார்த்து ஏமாந்துள்ளனர்.​ புலம்பெயர்ந்து வருகின்ற வழியில் இலங்கை ராணுவத்தினரின் மத்தியில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்திய ராணுவத் தடவாளங்களைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.​ இதன் காரணமாக,​​ இந்தியாவின் மீதும்,​​ தமிழக அரசியல்வாதிகள் மீதும் கடும் வெறுப்புணர்வு அவர்கள் மத்தியில் உருவாகி இருப்பதை எங்களால் காண முடிந்தது.​ உறவினர்களோடு சென்று சேர முடியாதவர்கள்,​​ காயம்பட்டவர்கள்,​​ உடல் ஊனமுற்றவர்கள் ஏராளமானோர் இங்கு உள்ளனர்.​ யுத்தத்துக்குப் பிறகு காவல்துறை மற்றும் ராணுவத்தினரால் விசாரணை என்கிற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் ஏராளம்.​ மகனைத் தேடி அலையும் பெற்றோர்களும்,​​ கணவரைத் தேடி அலையும் தாய்மார்களும் ஏராளமாக உள்ளனர்.​ சுமார் 15 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் ராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.​ அவர்களது கதி என்னவென்று தெரியவில்லை.இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான கருப்புச் சட்டங்கள் இன்றும் நடைமுறையில் இருப்பதால்,​​ தமிழர்கள் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளனர்.​ இலங்கை அரசின் நீதித் துறை முழுமையாக இயங்குவதில்லை.தமிழர்களுக்கு நீதி கிடைப்பது இல்லை.​ இலங்கை அரசுப் பணிகள்,​​ ராணுவப் பணிகள்,​​ காவல்துறைப் பணிகள்,​​ நிர்வாகப் பணிகள் ஆகியவற்றில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே தமிழர்கள் உள்ளனர்.​ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.​ அதில்,​​ ரூ.5 ஆயிரம் மட்டுமே குடும்பங்களுக்குக் கிடைத்துள்ளது.​ இன்னும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்,​​ சிங்கள அரசால் அமைக்கப்பட்டுள்ள முள்வேலி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.​ அவர்களுக்கு 30 நாள்களுக்கு என வழங்கப்படும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் 15 நாள்களுக்குள் தீர்ந்துவிடுவதாகக் கூறுகிறார்கள்.​ முகாம்களில் உள்ளே சென்று,​​ யாரையும் சந்திக்க வெளியாள்கள் அனுமதிக்கப்படுவதில்லை.​ கடந்த மாதத்தில் இருந்து முகாம்களில் வசிப்பவர்கள்,​​ குறிப்பிட்ட நேரத்துக்குள் திரும்பிவிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் வெளியே சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள்.​ அத்தகைய ஒருசிலரிடம் எங்களால் பேசி விவரங்களைச் சேகரிக்க முடிந்தது.​ முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த பலரை மீள்குடியேற்றம் என்கிற பெயரில் அவர்களின் உறவினர்களின் வீட்டுக்குச் செல்லும்படி நிர்பந்தப்படுத்தி வெளியேற்றியுள்ளனர்.மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் முழுமையாகச் சரி செய்யப்படவில்லை.​ புதிய தாற்காலிக வீடுகளை அமைப்பதற்கு ஐ.நா.​ சபையின் சார்பில் தகரங்களும்,​​ தார்பாலின்களும் வழங்கப்பட்டுள்ளன.​ இலங்கை அரசின் சார்பில் ஒரு குடும்பத்துக்கு ரூ.20 ஆயிரம் வைப்பு நிதியாகக் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது.​ ஆனால்,​​ இதுவரை அந்த நிதி எந்தக் குடும்பத்துக்கும் சென்று சேரவில்லை.​ இந்தியா மற்றும் சர்வதேச சமூகம் வழங்கியுள்ள கட்டுமானப் பொருள்களும்,​​ நிவாரணப் பொருள்களும் தமிழர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக பெரும்பான்மை சிங்களப் பகுதியில் பயன்படுத்தப்படுகிறது.​ சாலை,​​ குடிநீர்,​​ மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில் சிங்களப் பகுதிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.​ தமிழர் பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன.​ தமிழக அரசால் செய்யப்பட்ட உதவிகள் கூட தமிழர்களுக்கு முழுமையாகப் போய்ச் சேரவில்லை என்பதே உண்மை நிலை.​ ​​ இந்துக் கோயில்களை புத்த விகாரங்களாக மாற்றும் முயற்சிகள் காணப்படுகின்றன.​ ​ திருகேதிச்சுவரம்,​​ திருக்கோணச்சுவரம் உள்ளிட்ட பாடல் பெற்ற திருக்கோயில்களைச் சுற்றி திட்டமிட்ட ரீதியில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றனர்.​ அரச மரத்தடியில் உள்ள விநாயகர் சிலைகளை அகற்றி விட்டு,​​ அதே இடத்தில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.​ எங்கு பார்த்தாலும்,​​ பெüத்த அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டு,​​ தமிழர்களின் தொன்மைச் சின்னங்களையும்,​​ சமய அடையாளங்களையும் அழிக்கும் முயற்சியில் சிங்கள அரசாங்கம் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது.​ தமிழ்ப் பெயர் தாங்கி நிற்கும் ஊர்களின் பெயர்கள் கூட சிங்கள பௌத்த பெயர்களாக மாற்றப்படுகின்றன.​ ​÷வவுனியா,​​ திருகோணமலை,​​ மன்னார்,​​ மட்டக்களப்பு,​​ அம்பாறை,​​ கண்டி ஆகிய பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்தபோது சீனா,​​ ஜப்பான் போன்ற பெüத்த நாடுகள் புதிதாக உருவாக்கிய சில தொழிற்சாலைகளைக் காண முடிந்தது.​ திருகோணமலையில் சீன கடற்படை தளங்களையும் காண முடிந்தது.÷போரால் பாதிக்கப்பட்ட ஈரான்,​​ ஆப்கான் உள்ளிட்ட நாடுகளில் இந்திய அரசு நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளைச் செய்து வருகிறது.​ ஆனால்,​​ இதுவரை எந்தவிதமான நிவாரணப் பணிகளையும் நேரடியாக இலங்கையில் இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரியது.​ மத்திய,​​ தமிழக அரசுகள் சார்பில் வழங்கப்படும் உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்று சேர்கிறதா என்பது குறித்தும் சரிவர கண்காணிக்கப்படவில்லை.​ மேலும்,​​ இந்திய அரசின் சார்பிலோ,​​ தமிழக அரசின் சார்பிலோ அதிகாரபூர்வமாக எந்தவொரு குழுவும் போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று,​​ உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதும் வேதனைக்குரியது.​ இலங்கையை வளப்படுத்தியதிலும்,​​ வலுப்படுத்தியதிலும் இலங்கை பூர்வகுடி தமிழர்கள் மற்றும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பங்கு மிக முக்கியமானது.​ ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இலங்கைக்கு விடுதலை வாங்கித் தருவதிலும் தமிழர்களின் பங்கே முதன்மையானது.​ ஆனால்,​​ தமிழர்களின் பூர்வீக பூமியான இலங்கையில் அனைத்து உரிமைகளையும் இழந்து,​​ மிருகங்களுக்கும் கீழான நிலையில் தற்போது தமிழர்கள் வாழ்ந்து வருவது வேதனைக்குரியது.​ இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியபோது,​ விதியே விதியே என் செய்ய நினைத்தாய்;​ எம் தமிழ்ச் சாதியை!​ என்கிற பாரதியின் பாடல்வரிகள்தான் நினைவுக்கு வந்தது.
கருத்துக்கள்

ஈழத்தமிழர்களின் இன்னல்களையும் சிங்களக் கொடுங்கோன்மையையும் ஓரளவேனும் படம் பிடித்துக் காட்டியுள்ள் அர்ச்சுன் சம்பத்திற்குப் பாராட்டுகள்.ஈழத் தமிழர்கள் பிற சமய வெறியர்களால் நசுக்கப்படுவதில் இருந்து மீட்கப்பட இந்து சமய மக்களை ஒன்று திரட்டிப் போராட வேண்டுகிறேன். நம் சமயமும் சமய மக்களும் அழிக்கப்படும் பொழுது காகக வேண்டியது நம் கடமை என உணர்ந்து விரைந்து செயல்பட வேண்டுகிறேன். ஆரியச் சமய மேலாண்மையிலிருந்து நம் சமயத்தை விடுவித்தால்தான் இது எளிதில் கை கூடும் என்றாலும் இயன்றவரை முயன்று ஈழத்தமிழர்கள் விடுதலைக் காற்றை நுகர வழிவகை செய்யட்டும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakuvanar Thiruvalluvan
5/26/2010 3:13:00 AM

Thiru.Arjun Sampath bkoduththuLLa thkavalkaLukku nandRi.But ha can not avoid the responsibility to assert that the Eezhamtes Tamils were justiifed in demanding separation from the majoiry Sinmhalese and have their own sovereign Thamizh Eezham. People like Arjun Smapath r allowed to enter the Island juts for seeing how the Sinhalese have subjucated the Tamils. Whether Congress or BJP when in power in New Delhi they have only supported the Sinhales.

By P.Padmanaabhan
5/26/2010 1:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்