சனி, 22 ஆகஸ்ட், 2020

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, இணையத் தமிழ்க்கூடல் – 14 ; தமிழ் – கொரிய மொழித் தொடர்பு

 அகரமுதல


ஆவணி 08, 2051 / 24.08.2020 /

திங்கள் மாலை 4.00

கூடலுரை : முனைவர் அரிபாலன் பெருமாள்சாமி :

தமிழ் – கொரிய மொழித் தொடர்பு

தலைமை : முனைவர் .அன்புச்செழியன்

பதிவுப்படிவம்
https://tinyurl.com/y34xmrz6

இணைப்பு
https://tinyurl.com/ybkpa3oj

பின்னூட்டப் படிவம்
https://tinyurl.com/yyyb7jub

 

குவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (23.08.2020)

அகரமுதல

குவிகம் இணைய அளவளாவல் : “எனது ‘சிறு’கதை” (23.08.2020)

ஆவணி 07, 2051  /  23.08.2020 

ஞாயிறு மாலை 6.30

“எனது ‘சிறு’கதை” – குவிகம் இணைய அளவளாவல்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வைச்  சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      
நிகழ்வில் இணைய

கூட்ட எண்: 819 4725 3653  கடவுச்சொல்  இல்லை   

அல்லது   
https://us02web.zoom.us/j/81947253653  இணைப்பைப் பயன்படுத்தலாம். 

 

பன்னாட்டுத் தமிழ் – தொடர்பியல் ஆய்வு மையம்: தொடக்க விழாவும் கருத்தரங்கமும்

அகரமுதல

ஆவணி 07, 2051 / 23.08.2020 /

ஞாயிறு காலை 10.45 / 12.15

பன்னாட்டுத்தமிழ் – தொடர்பியல் ஆய்வு மையம்

இணையவழித் தொடக்க விழாவும் கருத்தரங்கமும்

தலைமையுரை: திரு தங்க காமராசு

சிறப்புரை:  முனைவர் மு.முத்துவேலு

ஒருங்கிணைப்பு : பேரா.ச.பிரகாசு

உலகத் தமிழ்ப் பெருமக்களே!

இதோ தமிழுக்கும் தொடர்பியலுக்கும் என ஒரு பன்னாட்டு ஆய்வு மையம்! International Research Center for Tamil and Communication Studies!

தமிழும் தமிழர்களும் உலகம் முழுதும் பரவி வாழ்ந்தாலும் நம் மொழிக்கென இயங்கும் பன்னாட்டு ஆய்வு மையங்களின் எண்ணிக்கை குறைவே. எனவே அந்தப் பட்டியலையும் தமிழையும் ஒருங்கே வளர்க்கும் நோக்கில் ‘நமது களம்’ இணைய இதழின் ஆசிரியரும் அவர் நண்பர்களும் இணைந்து தொடங்கியிருப்பதே இந்தப் பன்னாட்டுத் தமிழ் – தொடர்பியல் ஆய்வு மையம்.

அரசோ பெரிய கல்வி அமைப்புகளோ மேற்கொள்ள வேண்டிய இந்த மாபெரும் பணியைத் தங்கள் தமிழ் ஆர்வத்தையும் சமுக அக்கறையையும் துறைசார் தகுதியையும் மட்டுமே துணையாய்க் கொண்டு தொடங்கியிருக்கும் இந்தத் தோழர்களுக்கு ஊக்கமளிக்க நாளை நடைபெற உள்ள ஆய்வு மையத் தொடக்க விழாவிலும் உடன் நடக்க உள்ள கருத்தரங்கிலும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உலகெங்கும் வாழும் தமிழ் மக்களே, கல்வியாளர்களே, தமிழறிஞர்களே, துறைசார் வல்லுநர்களே, உங்கள் அனைவரையும் இரு கரம் கூப்பி அழைக்கிறோம்!

விவரங்கள் அழைப்பிதழில்.

 

ஒலி பெயர்ப்புச் சொற்கள் 26-75 : இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல


ஒலி பெயர்ப்புச் சொற்கள் 26-75  

26.அகத்தா – Augusta

27.அகுன்னாரைடு – Agunnaryd

28.அடாஃல்பு இட்டுலர் – Adolf Hitler

29.அடோல்பி  சாச்சு – Adolphe Sax

30.அந்தோணி மன்சிநெல்லி – Anthony Mancinelli

31.அரிசோனா – Arizona

32.அலாசுகா – Alaska

33.அலாதீன் – Aladdin

34.அலிபாபா – Alibaba

35.அவாய் – Hawaii

36.அன்னீ இடிபியா – Annie Idibia

37.ஆகத்து – August

38.ஆசியா – Asia

39.ஆட்டின்/ஆசுடின் – Austin

40.ஆண்டெசு -Andes

41..ஆப்பிரிக்கா -Africa

42.ஆரிகன் – Oregon

43.ஆரிலண்டோ – Orlando

44.ஆரிலிண்டன் – Arlington

45.ஆரினால்டு – Arnold

46.ஆரினால்டு மாத்தியூ பெரிலிசுடெயின் – Arnold Matthew Perlstein

47.ஆருலந்தோ புளூம் – Orlando Bloom

48.ஆர்கன்சாசு – Arkansas

49.ஆர்தர் திமோத்தி இரீடு- Arthur Timothy Read

50.ஆலந்து – holland

51.ஆலன் – Alan

52.ஆலிவுடு – Hollywood

53.ஆல்ஃபிரடு இயோசெப்பு இட்சுகாக்கு – Alfred Joseph Hitchcock

54.ஆனலூலூ – Honolulu

55.(இ)சுபெயின் – Spain

56.இகனேசியோ நாச்சோ அனயா – Ignacio ‘Nacho’ Anaya

57.இங்குவார் காம்பிரடு – Ingvar Kamprad

58. இசுகூபிடூ – Scooby Doo

59.இசுதான் இலீ – Stan Lee

60.இடச்சு – Dutch

61.இடாய்ச்சு (செருமானியம்) – Deutsch

62.இடோரா- Dora

63.இடோரா வினிஃபிரடு – Dora Winifred

54.இதாஃகோ – Idaho

65.இயசுடின் திம்பருலேக்கு- Justin Timberlake

66.இயீன் மாருட்டீன் சார்கோட்டன் – Jean Martin Charcot

67.இயூகி – Yugi

68.இயூகோவு – YouGov

69.இயூசுடாக்கு – Eustac

70.இயூஞ்சி இதொ – Unji Ito

71.இயூனோ – Juneau

72.இயெலுடா – Zelda

73.இயென்னா மோர்கன் – Jenna Morgan

74.இயேக்கு – Jake

75.இயேக்கு பாலெர் – Jake Paul

(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

 

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

ஒலி பெயர்ப்புச் சொற்கள் தொகுதி (1)

அகரமுதல

ஒலி பெயர்ப்புச் சொற்கள்

தொகுதி (1)

பிற மொழி எழுத்துக்கலப்பின்றித் தமிழில் எழுதப்படுவனவே தமிழாகும். ஆதலின் ஒலி பெயர்ப்புச்சொற்களிலும் பிற மொழி எழுத்துகளைக் கலக்கக் கூடாது.

சிலர் அவ்வாறு எழுதினால் இனிமை இருக்காது என்பர். உண்மையில் அயல்மொழி எழுத்துகளை அம்மொழி ஒலிக்கேற்ப எழுதுவதுதான் இனிமை தராது. ஆட் பெயர்கள், இடப்பெயர்கள் முதலானவற்றிற்குத்தான் ஒலி பெயர்ப்பு தேவை. பிற மொழியினர் தத்தம் மொழி ஒலிக்கேற்பத்தான் பிற மொழிகளைப் பலுக்குகின்றனர். நாம்தான் மேதையாக எண்ணிக் கொண்டு மொழிக்கொலை செய்கிறோம்.

கிரந்தஎழுத்துகளைப்பயன்படுத்தி அயல் மொழி எழுத்துகளை எழுத வேண்டும் என்பர் சிலர். அவர்கள் தத்தம் கருத்துகளைத் தங்களோடு வைத்துக் கொள்ளட்டும்.இதில் கலக்க வேண்டா.

தமிழர்வம் மிக்க சிலர் “இந்தச் சொல்லை அந்த மொழியில் இவ்வாறு குறிப்பிடுவர். நாமும் அவ்வாறு குறிப்பிடலாம்” என்பர். ஒரு மொழிச்சொல்லைப் பிற மொழியினர் எவ்வாறு குறிப்பிட்டாலும் நாம் நம் மொழிக்கேற்பவே குறிப்பிட வேண்டும்

பிற மொழிச்சொற்கள் அந்தந்த மொழிகளில் எவ்வாறு ஒலிக்கப்படுகின்றன என அறிந்து அம்முறை தமிழ் மரபிற்கேற்ப இருந்தால் அவ்வாறே பின்பற்றியும் இல்லையேல் தமிழ் மரபிற்கேற்பவும் ஒலி பெயர்ப்பு தரப்பட்டுள்ளன.

எழுத்துகள் அவை பிறக்கும் இடத்திற்கேற்பவே வரிசை முறை பெற்றுள்ளன. அவ்வாறு ஒலிக்கும் பொழுதுதான் சொற்கள் இனிமையாகவும் எளிமையாகவும் இருக்கும். அவ்வாறில்லாத நேர்வுகளில் அவ்வெழுத்துகள் அடுத்தடுத்து அமையா வண்ணம் நம் முன்னோர் இலக்கணம் வகுத்துள்ளனர். எனவேதான் மெய்ம்மயக்கம் என்று தனியாக இவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றின் அடிப்படையில் நான் ‘ஒலிபெயர்ப்பு வழிகாட்டியும் ஒலிபெயர்ப்பு திரு விதிகளும்’ எனக் கட்டுரை எழுதியுள்ளேன். வெருளி அறிவியல் நூலில் இடம் பெற்றுள்ள ஒலிபெயர்ப்புச் சொற்கள் பட்டியல் நிறைவுற்றதும் அவற்றை வெளியிடுவேன். இக்கட்டுரை மொழிக்கலப்பின்றி எழுதுவதற்கு உலகத்தமிழர்களுக்குத் தக்க வழிகாட்டியாக அமையும்.

 

  1. இங்குவார் காம்பிரடு – Ingvar Kamprad
  2. எலிம்தியார்டு – Elmtaryd
  3. அகுன்னாரைடு – Agunnaryd
  4. (இசு)கிட்டில் – Skittle
  5. (தூயர்) பால் – (‎Saint) Paul
  6. (புது) ஆம்சயர் – (New) Hampshire
  7. (புது) செருசி – (New) Jersey
  8. (புது) யார்க்கு – (New) York
  9. (மேற்கு) விர்சினியா – (West)Virginia
  10. (வட ) கரோலினா – (North) Carolina
  11. (வட) உலூசன் – (North) Luzon 
  12. (வட) தகோட்டா – (North) Dakota
  13. (வயவர்) பிரெடு ஒயில் – (Sir)  Fred Hoyle
  14. ஒசிரிசு – Osiris
  15. அலாசுகா – Alaska
  16. போசுனா – Bosna
  17. வாலூன் – Walloon
  18. ஃபலூக்கெ தரமோலா – Foluke daramola
  19. ஃபிராங்குபோருட்டு – Frankfort
  20. ஃபிரான்கென்சுடைன் – Frankenstein
  21. ஃபிரான்சின் – Francine
  22. ஃபிரிசில் – ஃபிரிசில்
  23. ஃபிரெடி கெரூகெர் – Freddy Krueger
  24. ஃபெரென் வாற்றர் – Fernwalter
  25. ஃபோருடு – Ford
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்