சனி, 20 ஏப்ரல், 2019

மறவாதே! 21.04.2019 பாவேந்தர் நினைவு நாள்!

அகரமுதல

மறவாதே! 21.04.2019  

பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்!

பண்பட்ட ஞானம் பகுத்தறிவாம்! அவ்வழியில்

மண்ணின் மாத்தமிழர் மாண்புறுக! – விண்வரை

பெண்ணினமும் ஆணினமும் பேணுங் கருத்தொன்றித்

தண்ணிழல்போல் வாழ்க தழைத்து

எனவுரைக்கும் பாவேந்தர் இன்றமிழ்ப் பாச்சொல்

நனவாக்கிப் பண்பாட்டை நாடு! – இனம்மொழி

மண்ணுரிமை போற்று! மறவாதே! நல்லொழுக்கம்

கண்ணெனக் காத்துயர்வைக் காண்!
– மணிமேகலை குப்புசாமி

‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’: நூல் அறிமுக விழா, மதுரை

சித்திரை 12, 2050, வியாழன்,  25.04.2019, மாலை 6.00 மணி

 விக்டோரியா எட்வர்டு மன்றம் (தொடரி நிலையம் அருகில்), மதுரை

‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’

நூல் அறிமுக விழா

தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (அமைப்பு செயலாளர்)
வரவேற்பு: சுப.முருகானந்தம் (மாவட்ட துணைச் செயலாளர்)
முன்னிலை: தே.எடிசன்ராசா (தென்மாவட்டப் பரப்புரைக் குழுத் தலைவர்)
சே.முனியசாமி (மாவட்டத் தலைவர்)
அ.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்)
தொடக்க உரை: முனைவர் நம்.சீனிவாசன் (தமிழ்த்துறை தலைவர், மன்னர் கல்லூரி)
நூல் அறிமுகம்: பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன் (சட்டமன்ற உறுப்பினர், மதுரை மத்தியத் தொகுதி)
ஆய்வுரை: முனைவர் இரா.தி.சபாபதி மோகன் (முன்னாள் துணை வேந்தர், மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – நெல்லை)

ஏற்புரை: நூலாசிரியர், தமிழர் தலைவர் கி.வீரமணி(தலைவர், திராவிடர் கழகம்)

கருத்துரை: கோ.தளபதி (மாவட்டச் செயலாளர், திமுக)
மு.பூமிநாதன் (மாவட்டச் செயலாளர், மதிமுக)
கார்த்திகேயன் (மாவட்டத் தலைவர், காங்கிரஸ்)
என்.நன்மாறன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)
சான் மோசசு (பொதுச் செயலாளர் மதசார்பற்ற சனதா தளம்)
நாகை திருவள்ளுவன் (தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி)
செயபால் சண்முகம் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
ஐ.இசுமாயில் (செயலாளர், விக்டோரியா எட்வர்டு மன்றம்)
நன்றியுரை: கா.சிவகுருநாதன் (திராவிடர் கழகத் தொழிலாளரணி)

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல், பிரித்தானியா

அகரமுதல

10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல், பிரித்தானியா 

வைகாசி 04, 2050 சனி மே 18, 2019 

ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், விடுதலை வேட்கையோடு எம் மண்ணின்  விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட, கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகவும் இலண்டன் மாநகரில் அணி திரள்வோம் வாரீர்!
நிகழ்வு தொடர்பான மேலதிகத் தகவல்கள் பின்னர்அறியத்தரப்படும்

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.

தொடர்புகளுக்கு:
சங்கீத்து
பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF)
02088080465, 07814486087, 07734397383, 07943100035, 07508365678, 07974726095, 07769770710, 07888 709739

கவிஞர் வித்யாசாகருக்கு ‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’

அகரமுதல

கவிஞர்  வித்யாசாகருக்கு  

‘அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’ 

குவைத்துதாய்மண் கலை இலக்கியப் பேரவை  கடந்தவாரம் ஞாயிற்றுக் கிழமை  மாலை மிகச் சிறப்பாக அறிஞர் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்தது.
அறிஞர்கள் பலரும், அனைத்துக் குவைத்து தமிழ் மன்றங்களின் தலைவர்களும் நிருவாகிகளும், பொறியாளர்கள் பலருமென ஒருங்கிணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களோடு தொண்டர்களாகச் சேர்ந்து பிற கட்சிகள் எனும் பாகுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் ஒன்றுகூடி ஒத்துமையாய் “குவைத்து, தாய்மண் கலை இலக்கியப் பேரவையின்” பேரன்பில் இணைந்து சிறப்பாக இவ்விழாவை ” குவைத்தின் மிர்காப்பு நகரில் கொண்டாடியது.
தாய்த்தமிழகத்தில் வருடந்தோறும் கலைப் பணி மற்றும் சமூகப் பணியாற்றும் சிறந்த ஒரு மனிதநேயரைத் தேர்ந்தெடுத்து ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் தனது திருக்கரங்களால் வருடந்தோறும்  ‘அறிஞர் அம்பேத்கர் விருது’ வழங்கிச் சிறப்பித்து வருகிறார். அதுபோன்றே குவைத்தில் வாழும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தொண்டர்கள் சேர்ந்து ‘குவைத்து தாய்மண் கலை இலக்கியப் பேரவை’ என்று ஏறத்தாழப் பதினைந்தாண்டு காலமாக நடத்தி. சமூக நல்லிணக்கத்தையும், பல தமிழர் நலஞ்சார்ந்த முன்னேற்பாடுகளையும் எண்ணற்ற தமிழர் நலனிற்கான உதவிகளையும் பல நல்லறத் தொண்டுகளையும் திரு. கமி.அன்பரசுதலைமையில், திரு.அறிவழகன். திரு.மகிழ்நன், திரு.அழகர்சாமி, திரு.பன்னீர்செல்வம் போன்றோர் இணைந்து பங்காற்றி வருகின்றனர்.
அத்தகு, சிறப்பு மிக்கோர் செய்ததொரு ஏற்பாட்டின் கீழ் இவ்வாண்டிற்கான சிறப்பு விருதாக அறிஞர்அம்பேத்கர் சுடர் விருது’ வழங்கிச் சிறந்ததொரு எழுத்தாளரும் கவிஞருமான திரு. வித்யாசாகருக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.
தகவல்: முகில் பதிப்பகம், குவைத்து.

குவிகம் இல்லம்: அளவளாவல்: சி.ஆர்.ஈசுவரன்

சித்திரை 08, 2050 ஞாயிறு 21.04.2019 மாலை 5.00

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017

குவிகம் இல்லம்: அளவளாவல்:சி.ஆர்.ஈசுவரன்,
தொலைக்காட்சி/குறும்பட / நாடக ஆசிரியர்

தொடர்பிற்கு: சுந்தரராசன் 94425 25191

வியாழன், 18 ஏப்ரல், 2019

பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்


பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்

சித்திரை 7, 2050 சனி 20.04.2019 மாலை 6.00
இலண்டன்
சித்திரை 8, 2050 ஞாயிறு 21.04.2019 மாலை 5.00
இலெசிசுடர்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரித்தானியா

சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்

சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்

இலக்கிய அமைப்புகளின் சார்பில் சித்திரை முதல் நாள், 14/4/19 அன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நடந்தது. அன்று ஞாயிறு என்பதாலும் சித்திரை முதல் நாள் என்பதனாலும் நிலவிய நிகழ்ச்சி நெருக்கடிகளைப் புறந்தள்ளி நல்ல கூட்டம் கூடியது. வேறொரு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய கவிஞர் மு.மேத்தா இந் நிகழ்வைக் கேள்விப்பட்டு சிலம்பொலியார்க்குப் புகழவணக்கம் செலுத்த வந்தது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மின்னூர் சீனிவாசன், வேணு குணசேகரன், ஏர்வாடி இராதாகிருட்டிணன், அமுதா பாலகிருட்டிணன், இரவி தமிழ்வாணன்,பெரு.மதியழகன், தமிழமுதன், தமிழ்முதல்வன், முனைவர் வாசுகி கண்ணப்பன், புதுகைத் தென்றல் தருமராசன், முனைவர்  பானுமதி,  முனைவர் மணிமேகலை சித்தார்த்தர், வியாசை ஆதிகேசவர் எனப் பட்டியல் நீளும். கவிஞர்களின் உணர்வுமயமான புகழ்வணக்கம் உள்ளம் உருகச் செய்தது.
சிகரம் வைத்தாற்போல இளவரச அமிழ்தன் தன் சொந்த முயற்சியில் உருவாக்கி வெளியிட்ட ஆவணப்படம் அமைந்தது. சிலம்பொலியாரின் 85-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உருவாக்கிய இந்தக் குறும்படம். சிவியாம்பாளையத்தையும், சிலம்பொலியாரின் ஆசிரியர்களையும் படம்பிடித்து அமிழ்தனாரின் உழைப்பை வெளிப்படுத்தியது. சிலம்பொலியாரே தன் வரலாற்றைக் கூறிய காட்சிகள் அவரை மீண்டும் காணச் செய்த மந்திரக் காட்சிகளாக விளங்கின. சுருங்கச் சொன்னால் மீண்டும் சிலம்பொலியாரைக் காணவும் அவர் நம்மிடம் நேரில் பேசுவதைக் கேட்கவும் இப் படம் வாய்ப்பு நல்கியது.
– மறைமலை இலக்குவனார் முகநூல்

கருத்தில் வாழும் கவிஞர் கந்தர்வன்

சித்திரை 13, 2050 வெள்ளி 26.04.2019 மாலை 6.30

பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம்

கீழ மாடவீதி, மயிலாப்பூர்,சென்னை 600 004.


கருத்தில் வாழும் கவிஞர்கள் நிகழ்வு 16

அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் மு.முருகேசு
முன்னிலை:  இலக்கிய வீதி இனியவன்
தலைமை: வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன்
சிறப்புரை: கவிஞர் தங்கம் மூர்த்தி
பாரதிய வித்தியாபவன்மயிலாப்பூர் 
இலக்கியவீதி  அமைப்பு 
திரு கிருட்டிணா இனிப்பகம்

கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 முடிவுகள்


அகரமுதல

காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க்குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நான்காவதுஆண்டு கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு2019 (வள்ளுவராண்டு 2050)  முடிவுகள்

முதலாவது பரிசு :
 ‘பொறி’  : த. இராசராசேசுவரி (குப்பிழான் -இலங்கை) – 10000 உரூ.  சான்றிதழ்.
 இரண்டாவது பரிசு : 
‘மறந்திட்டமா” : வி. நிசாந்தன் (இலங்கை) – 7500 உரூ.  சான்றிதழ்.
 மூன்றாவது பரிசு :
‘புலம்பெயர் பறவைகள்’ : கேசாயினி எட்மண்டு  (மட்டக்களப்பு – இலங்கை) – 5000 உரூ.  சான்றிதழ்.
   நடுவர் பரிசு :
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ : பாசுகர் மகேந்திரன் (பாரிசு, பிரான்சு) – 4000 உரூ.  சான்றிதழ்,  காக்கை ஓராண்டு அளிப்பு.
 ஆறுதல் பரிசுகள் –  1500 உரூ. வீதம் சான்றிதழுடன் – காக்கை ஓராண்டு அளிப்பும்.
 ‘ஒடுக்கம்’ : த. செல்வகுமார் (குப்பிழான், இலங்கை)
 ‘தசரதன்’ : சி. சிரீரகுராம் (பருத்தித்துறை, இலங்கை)
 ‘தொலை நிலம்’ : வனிதா சேனாதிராசா (வவுனியா, இலங்கை)
இப்போட்டி மதிப்புக்குரிய பத்மநாப(ஐய)ர் (இங்கிலாந்து) நெறியாளுகையில் நடுவர்களாக மதிப்புக்குரிய திரைத்துறை ஆளுமையாளர்களான  பேராசிரியர் சொர்ணவேல் ஈசுவரன் (அமெரிக்கா)  அம்சன் குமார் (இந்தியா) ஞானதாசு காசிநாதர் (இலங்கை) பங்கேற்றனர்.
பரிசுக்குரியவர்கள் தொடர்பு கொள்ள காக்கை குழுமம் அழைக்கிறது.
மின்னஞ்சல் : kaakkaicirakinile@gmail.com  
பேசி : 00919841457503 (பகிரி உண்டு) / தொலைபேசி : 00914428471890
காக்கை, 288,  மருத்துவர்  நடேசன்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 600 005, இந்தியா.
தமிழ் இலக்கியத் தேடலாய் அமைந்த மேற்படிப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் காக்கை இதழ்க் குழுமம் பாராட்டைத் தெரிவிக்கிறது.  பரிசுத் தரவரிசை தவிர்க்க முடியாத நிரல் வகைப்படுத்தலாகும். ஆனாலும் இப்போட்டியில் பரிசுக்குரியவர்களாகத் தெரிவானவர்களது ஆற்றலை காக்கை இதழ்க் குழுமம் பெருமையுடன் வாழ்த்துகிறது.
முதற்பரிசு பெற்ற  ‘பொறி’ குறும்படம் திரைப்படமாக்கப்படும்போது ஊக்கப் பரிசாக 30000 உரூ. ‘ A Gun & a Ring’ உருவாக்கிய  கண்பற்றி பல்லூடக( Eyecatch Multimedia Inc) நிறுவனரின் மகனது நினைவாக வழங்கப்படும்.
நினைவுப் பரிசுத் தொகையை வழங்கும் கிபி அரவிந்தனின் துணைவி சுமதி – உடன்பிறந்தவர் குடும்பத்தினர், சிறப்பு நடுவர், ஆறுதல் பரிசுத் தொகையை வழங்கும் இலண்டன் துளிர், முதற் பரிசாளரின் படமாக்கலை ஊக்குவிக்கும் கண்பற்றி பல்லூடக(Eyecatch Multimedia Inc) நிறுவனர், தமிழ் எழுத்து வகையில் முதற்தடவையாக நடைபெற்ற இந்தப் போட்டியைப் பகிர்ந்த சமூகவலைத் தள நண்பர்கள், ஆர்வலர்கள், போட்டி அறிவித்தலைப் பரவலாக்கிய ஊடகங்கள். போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட போட்டியாளர்கள்,  முடிவைத் தொகுத்தளித்த மதிப்புக்குரிய நடுவர்கள் அனைவருக்கும் காக்கை இதழ்க் குழுமம் நன்றியைத் தெரிவிக்கின்றது.
க. முகுந்தன்
காக்கை குழுமம் சார்பாக
காக்கை கரவா கரைந்துண்ணும்