சனி, 20 பிப்ரவரி, 2016

இசை, தமிழோடு இயைந்து கிடப்பதை இசைவாணர் மறந்தனர் – அண்ணா


இசை, தமிழோடு இயைந்து கிடப்பதை இசைவாணர் மறந்தனர் – அண்ணா

தலைப்பு-தமிழ்மறந்த இசைவாணர்-அண்ணா - thalaippu_thamihaimarantha_isaivaanar_annaa

இசை, தமிழோடு இணைபிரியாமல் இயைந்து கிடப்பதை இசைவாணர் மறந்தனர்
  இப்பொழுதுதான் தமிழ்க் கலையுணர்ச்சி, தமிழரிடம் புகுந்திருக்கிறது. பல வழிகளில் தமிழ்க் கலைகளை வளர்க்க முயன்று வருகின்றனர். இம்முயற்சியில் இசைக் கலை வளர்ச்சியும் ஒன்று. இசைக் கலை தமிழுக்குப் புதிதன்று. தமிழோடு பிறந்தது; தமிழோடு வளர்ந்து, இன்றும் தமிழோடு இணைபிரியாமல் இயைந்து கிடக்கின்றது. இவ்வுண்மையை இசைவாணர் மறந்தனர். ஆதலால் இடைக்காலத்தில் மழுங்கி விட்டது.
பேரறிஞர் அண்ணா:
தமிழரின் மறுமலர்ச்சி: பக்கம்.18-19

தேவகோட்டை மாணிக்கவாசகர் பள்ளியில் தேசியக் குடற்புழு நீக்க நாள்




தேவகோட்டை மாணிக்கவாசகர் பள்ளியில் 

தேசியக் குடற்புழு நீக்க நாள்

தேசியக் குடற்புழு நீக்க  நாள்(பிப்.10)

பள்ளியில் மாணவர்களுக்குக்

குடற்புழு நீக்க மாத்திரை  வழங்கல் விழா

  தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு  நல்வாழ்வுத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும்  தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியர்  சிரீதர் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர்  இலெ .சொக்கலிங்கம் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
மத்திய அரசு சார்பில் தேசியக் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு   நல்வாழ்வுத்துறை சார்பில் பள்ளிகள் தோறும் மாணவர்களுக்கு  இரத்த சோகை ஏற்படுவதைத் தவிர்க்கக் குடற்புழு நீக்கத்திற்கான ‘அல்பென்டசோல்‘ மாத்திரைகள் வழங்கப்பட்டன.
5 முதல் 13  அகவை வரை உள்ள மாணவ,மாணவியர்க்கு  மாத்திரை வழங்கபட்டது. இரத்த சோகை நோயால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இந்த மாத்திரைகள் வழங்கப்படுகிறது. பள்ளியில் உள்ள  அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.
விழா நிறைவாக ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.
[படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.]
 இலெ .சொக்கலிங்கம்

இருநூல் வெளியீட்டு நிகழ்வு, தியாகராயநகர், சென்னை

இருநூல் வெளியீட்டு நிகழ்வு, தியாகராயநகர், சென்னை


மாசி 09, 2047 / 21.02.2016 மாலை 4.00

சரவணகுமாரின் கருப்புச்சட்டை

இரவிபாரதியின் முதல் படி

தலைமை : அற்புதம் அம்மாள்
வெளியீடு : கோவைஇராமகிருட்டிணன்
பெறுநர்:  கொளத்தூர் மணி
அழை-நூல்வெளியீடு-கருஞ்சட்டை - azhai_nuulveliyeedu