ilavarasu03
  தமிழியக்கத்தலைவர் பேராசிரியர் இரா.இளவரசு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் தி.பி.2016 கும்பம் 15 வெள்ளிkகிழமை (27-01-2015) மாலை 6.15 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.
  உலகத்தமிழ்க் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் ந.அரணமுறுவல் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். சென்னை யாழ் நூலகம் வைகறைவாணன் வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ நெடுமாறன் மறைந்த இளவரசின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். இக்காலம், தமிழகத்தில் நிலவும் தமிழ் மொழி, தமிழின அவல நிலைகளை எடுத்துரைத்தார். ஓராயிரம் இளவரசுகள் உருவாக வேண்டும் என்று சூளுரைத்து உணர்ச்சித் ததும்பப் பேசினார்.
  முனைவர் பொற்கோ, முனைவர் அரசேந்திரன், மறவன் புலவு சச்சிதானந்தன், இந்திய வருவாய்த் துறை ஆணையர் (ஒய்வு) கோ.மணிவாசகம் அறிஞர் அழகுமுத்து   வழக்குரைஞர் அருள்மொழி, பாவலர் அறிவுமதி, கி.வேங்கடராமன், தோழர் தியாகு, தமிழ்நேயன், வழக்குரைஞர் பாவேந்தன், தென்மொழி பூங்குன்றன், பேராசிரியர் அ.மங்கை, சி.அறிவுறுவோன், பேராசிரியர் முத்துசாமி ஆகியோர் மறைந்த இளவரசு ஆற்றிய தமிழ்த் தொண்டு, ஆய்வு, கொண்டிருந்த அஞ்சாமை பொதுமை நாட்டம், மாந்த நேயம் போன்ற பண்பு நலன்களை நினைவுகூர்ந்து பேசினர்.
  இறுதியில் இரா.செம்மல் நன்றி நவின்றார்.
தரவு : இரா.செம்மல்