வியாழன், 26 நவம்பர், 2009

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை உலகமே எதிர்ப்பார்க்கிறது: சிறீலங்கா ஆங்கில ஊடகம்

எழுதியவர்பகலவன் on November 25, 2009
பிரிவு: பிரதான செய்திகள்

leader_lightகொல்லப்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை உலகமே எதிர்பார்த்திருப்பதாக சிறீலங்காவின் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாளை தமிழர்களுக்கு பாரிய ஆச்சரியம் ஒன்று ஏற்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் கே பத்மநாதனுக்கு ஆதரவான குழுவுக்கும், எதிரான குழுவுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடம் இந்த நாளை யுத்தத்தில் பலியான தலைவர்களை நினைவு கூரும் வகையில் விமரிசையாக அனுஷ்ட்டிக்க ஏற்கனவே கே. பத்மநாதனுக்கும், மற்றுமொரு தலைவரான நெடியவனுக்கும் இடையில் நோர்வேயில் இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், கே. பத்மநாதன் கைது செய்யப்பட்ட ஒருசில தினங்களில் கே. பி. க்கு எதிரான குழுவின் தலைவர் நெடியவன் தலைமறைவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாளை மறுநாள் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுகின்ற போதும், அவர்களின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதில் குழப்பத்துடன் உள்ளது.

இதற்கு காரணம் கே. பத்மநாதன், பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த போதும், நெடியவன் இதனை மறுதலித்து அவ்வாறான அறிவிப்பை வெளியிடுவதை தவிர்த்தார்.இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டால் இயக்கத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் துச்சமாக்கப்படும் என்ற அடிப்படையிலேயே அது தவிர்க்கப்பட்டது.

இதன் காரணமாக பிரபாகரனின் பிறந்தநாள் வரையில் அதனை இரகசியமாக பேணி, நாளை அதனை வெளியிட நெடியவனும் அவரது குழுவினரும் திட்டமிட்டனர்.
இதன் பின்னர் புலிகளின் அடுத்த காய் நகர்த்தலை மேற்கொள்ள அவர்கள் தீர்மானித்திருந்தனர்.

அவர்கள் அனைவரும் பிரபாகரன் நாளை தமது முகத்தை காட்டுவார் எனவும், நாளை மறுநாள் மாவீரர் தின உரையை நிகழ்த்துவார் எனவும் நம்புகின்றனர்.

இதே நம்பிக்கையை தமிழகத்தின் அரசியல் தலைவர்களான நெடுமாறன் மற்றும் வைகோ ஆகியோர் கொண்டுள்ளமையும் இதற்கான காரணமாக கொள்ளலாம்.

தமிழீழத் தலைவர் நாளை மறுநாள் அதாவது 27ம் திகதி எங்கிருந்தேனும் தமது மாவீரர் நாள் உரையை நிகழ்த்துவார் என நெடுமாறன் நம்பிக்கை வெளியிட்டார்.அது தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், தற்போது தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை தெளிவாக விளங்குகிறது.

அதற்கு காரணம் பிரபாகரன் இருக்கும் போது, ஒருவாரத்துக்கு முன்னதாக மாவீரர் தின ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இந்த நிலையில் இந்தவருடம் விடுதலைப்புலிகளுக்கு சார்பான இணையத்தளங்கள் மாவீரர் வாரம் தொடர்பான எந்த அறிவித்தலையும் விடுக்கவில்லை.

எனவே புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது சந்தேகத்திற்கு இடமானதாக இருந்தாலும் ஒரு சில நம்பிக்கைகைகள் நிலவத்தான் செய்கின்றன.

இந்த நிலையில் உலகமே எதிர்பார்த்துள்ள நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களில் யாரை யார் ஆச்சரரியப்படுத்துவர் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு சிறீலங்கா ஆங்கில ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது.

(Visited 259 times, 259 visits today)



Bookmark and Share Update me when site is updated

Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

உங்களின் கருத்துக்களை தமிழில் தெரிவிக்கவும்

ஆடுவோமே – பள்ளுப்பாடுவோமே! தமிழ் ஈழம் மலர்ந்தது என்று ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே சிங்களரை நம்பிய காலமும் போச்சே -வஞ்சக இந்தியரால் ஏமாந்த காலமும் போச்சே நம்மை ஏய்ப்போரை நம்புகின்ற காலமும் போச்சே உரிமை இல்லாமல் அழிகின்ற காலமும் போச்சே எங்கும் தமிழ் ஈழம் என்பதே பேச்சு! உலகில் தமிழ் ஈழம் தனி நாடு என்பது உறுதியாச்சு சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத் தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே! தமிழரின் தாயகம் ஈழம் என்பதறிந்தோம் -இது தமிழர்க்கே உரிமையாம் என்பது உணர்ந்தோம் -இந்தப் பூமியில் எவர்க்கும் அடிமை செய்யோம் -உயிர் நேயம் மலரவே தொண்டு செய்வோம் அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan

#1
எழுதியவர் இலக்குவனார் திருவள்ளுவன் on November 26th, 2009 @ 3:20 am உங்கள் கருத்து மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக