கவுகாத்தி:அசாம் மாநிலத்தில், ஒரு குறிப்பிட்ட வழிபாட்டில் பெண்களுக்கு விதிக்கப் பட்டிருந்த தடையை மீறி, அவர்களை அந்த வழிபாட்டில் கலந்து கொள்ள அசாம் கவர்னர் வழிகாட்டியுள்ளார்.அசாம் மாநிலத்தில் கி.பி.,15ம் நூற்றாண்டில், சங்கரதேவர் என்பவரால் உருவாக்கப்பட்ட வைஷ்ணவ சம்பிரதாயத்தில், அதன் வழிபாட்டிடத்தில் பெண்களுக்கு பல நூற்றாண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதன் வழி பாட்டிடத்தில் பெண்கள் நுழைவதில்லை.
சமஸ்கிருத மொழியில் வல்லுனரான, அசாம் கவர்னர் ஜே.பி.பட்நாயக், மாநிலத்திலுள்ள பல 'சாத்ரா' என்ற வழிபாட்டு அரங்கில் வழிபட்டுள்ளார். அவர் கடந்த 4ம் தேதி, பார்பேட்டா என்ற இடத்திலுள்ள சாத்ராவுக்குச் சென்றபோது, அந்த இடத்துக்கு வெளிப்புறத்தில் பெண்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதைக் கண்டார்.பின்னர் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்ட அவர், சாத்ராவின் உயர்மட்ட அதிகாரியைச் சந்தித்து, வைஷ்ணவ சம்பிரதாயத்தை நிறுவிய சங்கரதேவரோ அவரது சீடர் மாதவதேவரோ, இவ்விதம் வழிபாட்டு அரங்கில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை குறிப்பிட வில்லை என்று தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டினார்.
சாத்ரா அதிகாரியும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனுமதி வழங்கப் பட்டப்போதும் கூட, பெண்களே இந்த வழிபாட்டு அறையில் நுழையாமல் இருந்தனர் என்று கூறினார். பின்பு கவர்னருடன் 20 பெண்கள் உள்ளே சென்று வழிபட்டனர்.மறுநாள், ஐந்து பெண்கள் உள்ளே சென்று வழிபட்டனர். அதில் ஒருவர் 51 ஆயிரம் ரூபாயையும், அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு பெண் நாலாயிரத்து 800 ரூபாயையும் காணிக்கையாக அளித்தனர்.
அசாமின் பிரபல இலக்கியவாதியும், ஞானபீட விருது பெற்றவருமான மமோனி ரைசன் கோஸ்வாமி, கவர்னரைச் சந்தித்து வரலாற்றுச் சாதனை புரிந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார்
` |
வாசகர் கருத்து |
மா தவம் ( பெருந்தவம்) செய்தவன் மாதவன்; சங்கு அறுக்கும் தொழில் புரிபவன் சங்கரன். எனவே, இவை நல்ல தமிழ்ச் சொற்களே. தேவர் என்பதும் நல்ல தமிழ்ச் சொல். தேவர் அனையர் கயவர் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவரும். தேவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர். எனவே, சமயத் தலைமைப் பொறுப்பில் தேவர்கள் இருந்ததில் வியப்பில்லை. இந்தியா என்பது ஆங்கிலேயர் வந்த பின் அமைந்த அரசியலமைப்பு. நாம் மொழியாலும் இனத்தாலும் நாட்டாலும் தமிழர்களே. ஆனால், அரசமைப்பால் இந்தியர்கள். இன்றைய சூழலில் இந்த அரசமைப்பு சிதைவு படக் கூடாது என்பது உண்மைதான். அதே நேரம் நாம் தமிழர்கள் என்பதும் வரலாறு சொல்லும் உண்மை.எனவே, நண்பரே உண்மையைப் புரிந்து கொள்க. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் |
by I. Thiruvalluvan,chennai,India 15-04-2010 20:19:15 IST |
சரியான வழிகாட்டு முறை... நன்றி... |
by H நாராயணன்,Hyderabad,India 15-04-2010 20:03:52 IST |
திருவள்ளுவன் சொல்வது மிகவும் சரி நான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன். ஆனாலும் தமிழ் எங்கள் உயிர் |
by pms அப்துல்ரகுமான் ,dubai,India 15-04-2010 14:23:35 IST |
ஹலோ mr திருவள்ளுவன்,என்ன சொல்றிங்க மாதவா அண்ட் சங்கரா இந்த ரெண்டு பெரும் தமிழ் பேர் இல்லையே! 2000 வருஷத்திற்கு முன்ன திருக்குறள் ' ஆதி பகவன் முதற்றே உலகு ' என கூறுகிறது ! தமிழ் என் தாய்மொழி, ஹிந்து என் மதம்! தெரிந்துகொள்! இந்தியன் என்று சொல்வோம் ! ஜெய் ஹிந்த்! |
by ka விஜயகுமார்,singapore,India 15-04-2010 09:40:15 IST |
சங்கரத் தேவர் , மாதவத் தேவர் என்னும் பெயர்கள் 15 ஆம் நூற்றாண்டு வரையிலும் தமிழர்கள் அசாமில் செல்வாக்குடன் வாழ்ந்தமையைக் காட்டுகின்றது. இந்தியக் கண்டம் முழுவதும் பரவியிருந்த தமிழ் மொழியும தமிழ் இனமும் அழிவைச சந்தித்ததன் காரணம் பிற மொழிச் சொற்களைக்கலந்து மொழிக் கொலை புரிந்து புதிய மொழிகள் உருவாக வழி வகுத்ததே! இனியேனும் மொழிக் கொலையைத் தடுப்போம்! நம மொழி காப்போம்! நம் இனம் காப்போம்! |
by I. Thiruvalluvan,chennai,India 15-04-2010 03:10:32 IST |