புதன், 17 ஜனவரி, 2024

மொழிப்போராளிகள் புகழ் வணக்கமும் என்னூல் திறனரங்கமும்

 

மொழிப்போராளிகள் புகழ் வணக்கமும் என்னூல் திறனரங்கமும்



துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 22)

மார்கழி 07,2025 *** 21.01.2024  காலை 10.00

தமிழ்க்காப்புக் கழகம்

இணைய அரங்கம்

மொழிப்போராளிகள்

 புகழ் வணக்கமும்

என்னூல் திறனரங்கமும்

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன், செயலர்,  தமிழ்க்காப்புக் கழகம்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

மொழிப் போராளிகளை வணங்குநர் :

கவிச்சிங்கம் கண்மதியன்

உரைச்சடர் செல்வி .காருண்யா

செல்வன் மயிலை இளவரசன்

நூற்றிறன் அரங்கம்

தமிழ்க்களப்போராளி பொழிலன்:

 இலக்குவனார் திருவள்ளுவன் நூல்

          ‘வேண்டவே வேண்டா இந்தி’

நிறைவுரை :  

மன்பதைப் போராளி தோழர் தியாகு

நன்றியுரை : திரு ப.சிவக்குமார்

திங்கள், 15 ஜனவரி, 2024

தமிழுடன் வாழப் பொங்கல் நாளில் வாழ்த்துகிறோம்!

 




அனைவருக்கும்

பொங்கல் வாழ்த்து

தமிழர் திருநாள் வாழ்த்து

திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து

உழவர் திருநாள் வாழ்த்து                                       

வணக்கத்துடன்

அகரமுதல

தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்


ஞாயிறு, 14 ஜனவரி, 2024

இலக்குவனார் திருவள்ளுவனுக்கு இரு விருதுகள்

 


இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்குத்

திருச்சி அறிவாளர் பேரவை சார்பில்

சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருதும்

தமிழ்த் தன்னுரிமை இயக்கம் சார்பில்

தமிழ்த்தென்றல் திருவிக விருதும்
வழங்கப்பட்டன.





திருச்சி அறிவாளர் பேரவை சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு மேனாள் அமைச்சர் நல்லுசாமி சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருதினை வழங்குகிறார். உடன் முனைவர் செ.அசோகன், தமிழ்த்திரு மு.சிதம்பரபாரதி, அரங்க திருமாவளவன் உடனுள்ளனர்.





தமிழ்த் தன்னுரிமை இயக்கம் சார்பில் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்குத் தமிழ்தென்றல திருவிக விருதினைப் பேரா.சே.கு.சாந்தமூர்த்தி வழங்குகிறார். பாவலர் மு.இராமச்சந்திரன், தமிழா தமிழா பாண்டியன், அரு.கோபாலன்,தமிழ்ச்செம்மல் நராசன் உடனுள்ளனர்.

பாவலர் மு.இராமச்சந்திரனுக்குத் தமிழ் எழுச்சிப் பாவலர் விருது

 


 



தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் தமிழ்த்தேசியத் திருவிழாவில், பாவலர் மு.இராமச்சந்திரன் அவர்களுக்குத் தமிழ் எழுச்சிப்பாவலர் விருதினை இலக்குவனார் திருவள்ளுவன் வழங்குகிறார். உடன் தமிழ்க்காதலன், தமிழா தமிழா பாண்டியன், மூத்த தமிழறிஞர் அரு.கோபாலன், முதலானோர் உடனிருக்கின்றனர்.