வெள்ளி, 7 மே, 2010
தொகுதி நிதியில் மேற்கொள்ளப்படும் திட்ட அறிவிப்புப் பலகையிலும் பெயர்ப்பலகையிலும் தொகுதியின் உறுப்பினர் பெயர் மிகப் பெரிதளவில் விளம்பரத்தப்படுகின்றது. அவ் வுறுப்பினரின் சொ ந்தப்பணத்தில் மேற் கொள்ளப்படும் திட்டம் அல்ல. எனவே, நா.ம./ச.ம. /மாமன்ற உறுப்பினர்களின் பெயர்களைப் பெரிதாகக் குறிப்பிடாமல் தொகுதியின் பெயரை மட்டும் குறித்தால் போதுமானது. நிகழ்ச்சி விவரததில் தொகுதி உறுப்பினர் பெயர் வரும். அதுவே போதுமானது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/7/2010 2:43:00 AM
தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு வாழ்த்துகள். எங்குப் பணியாற்றியானாலும் நேர்மையாகவும் மக்கள் நலப்பணிகளில் கருத்து செலுத்தியும் தமிழ் மொழி,இலக்கிய, நாகரிக, பண்பாட்டுச் சிறப்புகளைப் பரப்பியும் பணியாற்றும் பகுதியின் மொழியைக் கற்றும் ஒப்பிலக்கியத்தில் ஈடுபட்டும் மாமனிதர்களாகப் பணியாற்றுக. உயர் பதவிகளில் செல்லச் செல்ல அடக்கத்திலும் உயர்க. குறுக்கு வழியாளர்களின் செல்வாக்குகளுக்கு இரையாகாமல் நேர்மையானவர்களின் துணைக்கொண்டும் ஆன்றோர்கள் சான்றோரகள் வழிகாட்டினைப் பெற்றும் நாட்டு முன்னேற்றததை உலக அளவில் கொண்டு போகும் வண்ணம் செயலாற்றுக! தினமணி இணைய நேயர்கள் சார்பில் வாழ்த்தும் அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/7/2010 2:33:00 AM
வியாழன், 6 மே, 2010
உங்கள் எழுத்தின் மீது நம்பிக்கை இருக்கின்ற காரணத்தால்தான் தமிழரின் தாய்நிலத்தைமீட்கவும் ஈழத்தமிழர்கள் விடுதலை பெறவும் அதனைப் பயன்படுத்த வேண்டுகிறோம். இடையிடையே துன்பங்கள் பட்டது நீங்கள்மட்டும் அல்லர்; பேரழிவிற்கு ஆளாகி இதுவரை சந்திக்காத துன்பங்கள் அடைந்தது ஈழத்தமிழ் மக்களும்தான். அவர்கள் பேரழிவின்பொழுது கண்டும்காணமால் அல்லது நேரிடையாக அல்லது வாய்வாளாதிருந்து ஒத்துழைத்ததாக உள்ள பழியைப் போக்க எழுத்துக் திறமையைப் பயன்படுத்தி வாழ்வினில் அவர்கள் அடைந்த துயரத்தைப் பழிகளை நீக்கி இருக்கின்ற உயிர்களையாவது காப்பாற்றுங்கள் என வேண்டுகிறோம். உங்கள் எழுத்தாற்றல் தமிழ்ப்பகைக்குத் துணை போகக்கூடாது. தமிழ் வாழ்விற்குத் துணை போக வேண்டும் என விழையும் இலக்குவனார் திருவள்ளுவன்
5/6/2010 1:06:00 PM
பல கோடிகணக்கில் மக்கள் வரி பணத்தை சூறை ஆடிய வெட்கத்துக்கு உரிய இவரை இனியாவது நிம்மதியாக தூங்க இறைவன் அருள் புரியட்டும்
5/3/2010 10:15:00 PM
நீ இலங்கைத் தமிழர்களுக்கு செய்த துரோகத்திற்கு இன்னும் அனுபவிக்க இருக்கு அதை அவர்களும் (கமல், வைரமுத்து, வாலி) ஏனைய தமிழர்களும் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் போலும். செய்த தொரோகம் உன்னையும் உன் சந்ததியையும் சும்மா விட்றுமா என்ன? நீ கதை எழுதிகிட்டே இருக்கிறே ஆனால் படம் பார்க்கத்தான் இப்ப யாரும் வர்றதில்லை. கடைசியா எந்த படம் 100 நாள் ஓடிச்சு?
5/3/2010 4:57:00 AM
very nice corton,
5/2/2010 10:38:00 PM
Who cares about your writings?? It will die with you. You will go down as a man who did nothing to save hundreds of thousands Tamils from a genocide in your period. Let your writings die with you too, we dont want our children to read it.
5/2/2010 4:43:00 PM
உன் எழுதில் யாருக்கும் நம்பிக்கை இருக்கலாம் ஆனால் எனக்கு உன்மேல் நபிகையே இல்லை
5/2/2010 12:00:00 PM
very good
5/2/2010 11:38:00 AM
காங்கிரசிற்குத்தான் தமிழ்நாட்டில் மரியாதை இல்லையே! வேறு எங்காவது ஓடிவிடவேண்டியதுதானே! இன்னும் தமிழ் மக்கள் குருதியைக் குடிப்பது ஏனோ? இன்னொரு கோவன் ஆக உருவாகி அரசியல் வாழ்வைக் கெடுத்துக் கொள்ள வேண்டா. அரசியலில் மரியாதை என்பது என்ன? தன் விருப்பத்திற்கு ஏற்பக் கட்சித் தலைமை நடக்க வேண்டும் என்பதுதான். இந்திரா காந்தி காலத்தில் சிவகங்கையில் போட்டியிடும் வாய்ப்பு தராத பொழுது-தனக்கு மரியாதை இல்லை எனக்- கட்சியை வி்ட்டு வெளியேறினார் அப்பா சிதம்பரம். அண்மையத் தேர்தலில் மக்கள் தோற்கடித்த பின்பும்,தனக்கு மரியாதை இல்லை என அரசியல் துறவறம் போகாமல் குறுக்கு வழியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கச் செய்து அமைச்சராகவும் திகழ்கிறார் அதே அப்பா சிதம்பரம். கூட்டணியைத் தலைமையைத் தாக்கிப் பேசிவி்ட்டு அதே தலைமையுடன்தான் கூட்டணி என முடிவானதும் காலில் விழுந்து பாராட்டி இடம் கேட்பதும் காங்.கின் மரியாதைப் பண்புதான். வன்முறையும் இழிமுறையும் கால்கள் எனக் கொண்டு இயங்கும் கட்சியில் இருநது கொண்டு மரியாதை பற்றிப் பேசி செல்வாக்கு தேட எண்ணுபவர்கள் மறைந்து போவார்கள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/6/2010 2:28:00 AM
Hahaha...Semma Comedy da Kaarthi..koppan eppadi yeyithaan enpathu unakku gyabagam irukkirathaa????....
5/5/2010 4:44:00 PM
KARTHI CHIDAMPARAM SHOULD KNOW THAT THERE IS NO CONGRESS IN TAMILNADU WITHOUT DMK OR AIADMK.BUT THE PAST EXPERIENCE PROVED THAT DMK ALLAIANCE IS ALWAYS BETTER FOR THEM.
5/5/2010 4:43:00 PM
புதன், 5 மே, 2010
தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் – பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி
மலேசியத் தலைநகர் அம்பாங்கில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டின் எழுச்சி முகாம் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்றார்.
உலகத் தமிழினத்திற்கு முற்போக்குச் சிந்தனை மிகவும் அவசியமாகும். அதேவேளை சிந்தனைப் பரிமாற்றங்களை உலகளாவிய நிலையில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும் தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை.சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி கூறினார்.
உலக தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி தெரிவிக்கையில் உலகெங்கும் வாழ்கிற தமிழர்களுக்குச் சொந்த நாடும் அரசாங்கமும் இல்லாதது பெரும் குறையாகும், இலங்கைத் தமிழர்கள் கொடூரமாக நடத்தப்படுகிறார்கள். இதனைக் கண்டு ஐக்கிய நாட்டு நிறுவனம் மெளனம் சாதிக்கிறது. மூன்று லட்சம் தமிழர்கள் நிலை குறித்து உலக நாடுகள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்றார். தமிழர்களுக்குச் சொந்த நாடு வேண்டும் என்று போராடிய தலைவனின் தாயாருக்கு மருத்துவம் பார்க்கக்கூட அனுமதி இல்லை.இந்த அவலம் கண்டு மனம் வேதனைப்படுகிறது.
6 கோடி மக்களால் 3 லட்சம் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது வேதனை மிக்க கொடுமையாகும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன்.சுங்கை சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவநேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
(Visited 72 times, 72 visits today) }உலகத்தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு முற்றிலும் தகுதியுடையவர் முனைவர இராமசாமி. தமிழக மக்கள் கட்சித்தலைமைகளிடமும் கலையுலகினரிடமும் கொத்தடிமைகளாக உள்ளனர். அவர்களை நம்பினால் எப்பயனும விளையாது. எனவே, உணர்வும் ஆற்றலும் மிக்க முனைவர் இராமசாமி உலகத தமிழர்களை ஒன்றிணைத்துத் தாய்மண் விடுதலைக்கு வழி வகு்கக வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
தமிழின அழிப்பின் ஓராண்டுக் கொண்டாட்டங்களில் யாழ் வவுனியாவில் தமிழக சின்னத்திரையினர்
கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற இந்த மாதத்தில் தமிழகத்தின் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்காக யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தி தாயக மக்களை மிகக் கவலைக்குள் தள்ளியுள்ளது.
வன்னி அழிப்பின் ஓராண்டினை பாரிய விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்படாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் இந்திய திரைப்படங்களை உலக கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு நடாத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் (International Indian Film Academy – IIFA Awards) விழாவினையும் இலங்கையில் நடத்த சிங்கள அரசு மேற்கொண்ட முயற்சி கைக்கூடியுள்ளது.
ஆனாலும் அந்த நிகழ்வினை தமிழ் உணர்வுள்ள தமிழக திரைத்துறையினர் தமது நலனினை தூக்கியெறிந்து புறக்கணித்துள்ளனர். இதேபோன்று தமிழக அரசியல் தலைவர்களும் இந் நிகழ்வினை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.
ஆனால் தமிழ் மக்கள் தமது உயிர்களை பல்லாயிரக்கணக்கில் பறிகொடுத்த வடக்கு மண்ணில் அந்த பலி கொடுப்பின் ஓராண்டு நிறைவு நடக்கும் அதே மாதத்தில் சிங்கள அரசு மேற்கொள்ளும் கேளிக்கை நிகழ்வில் பங்குகொள்ள தாய்த் தமிழகத்தில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் படை எடுத்திருப்பது தாயக மக்கள் மனங்களில் வேதனையைத் தோற்றுவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும் தெரியாமலேயே இந்தநிகழ்வில் பங்கெடுக்க சின்னத்திரையினர் இலங்கை வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து தமிழகத்தின் தமிழ் உணர்வாளர்களும், திரைத்துறையினரும் தலையிட்டு உடனடியாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள சின்னத்திரையினரை தடுத்து நிறுத்தி ஆவன செய்வதுடன், இலங்கைத் தமிழர்களின் வலி சுமந்த மாதமாக நினைவுகூரவுள்ள மே மாதத்தில் அவர்களின் வேதனையிலும் பங்குகொள்ள முன்வருவார்களா?
(Visited 177 times, 177 visits today) }
பல்லாயிரக்கணக்கான மக்களை வஞ்சக முறைகளில் கொன்று இனப்படுகொலை புரிந்த நாளை மீதுயர் நாள் எனத் துயரமாக நினைவில் கொள் ள வேண்டும். இதனை மீறி ஆட்டம் பாட்டங்களில் ஈடுபடுபவர்களும் அத்றகென இங்கிருந்து வருபவர்களும் மனிதப் பிறவிகள் அல்லர். இவர்களைஅடையாளம கண்டு வாய்ப்பு வரும் பொழுது சிறையில தள்ளுங்கள். இன்றைய நிலையில் இவரக்ளையும நிகழ்ச்சிகளையும் புறக்கணியுங்கள். உணர்வுள்ளவர்கள் மே 18ஆம் நாளைத் தாய்மண் விடுதலை ஈகிகள் நாள் எனக் கொண்டாடுவோம். களத்திலும் நிலத்திலும் போர்முனையிலும் தத்தம் மனையிலும் வீர மரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். வெல்க தமிழ் ஈழம்! வீரர்கள் விதைத்த விளை நிலம் விடுதலை பெறும் விரைவில்! தமிழ்ஈழத் தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் புகழ் ஓங்குக! அவர் தலைமையில விரைவில் ஈழக் குடியரசு அமைக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வன்முறையால் துன்புற்ற கட்சிகள் வாய்ப்பு வரும்பொழுது வன்முறையையும் ஆயுதமாகக் கொண்டனர் என்பதே உண்மை. எல்லா வகை வன்முறைகளும் அடக்குமுறைகளும் ஒழிய விரும்பும் இலக்குவனார் திருவள்ளுவன்
5/5/2010 5:08:00 AM
இச்செயதி இருட்டடிப்பு செய்யப்பட்டதுடன் வெளிவந்த செய்திகளும் ஏதோ கருப்புக் கொடி காட்டியவர்கள வன்முறையி்ல ஈடுபட்டது போன்ற முறையில்தான் வெளிவந்தன. எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் சிலரின் கருப்புக்கொடிக்கும மதிப்பளித்திருக்கலாமே தவிர அஞ்சி அடக்குமுறையில் ஈடுபட்டிருக்கக்கூடாது. ஒருவேளை கருப்புக் கொடி காட்டடியதைத் தனக்கு இழைக்கப்பட்ட பெருத்த அவமானமாக முதல்வர் கருதினாரோ எனத் தெரியவில்லை. எவ்வாறிருப்பினும் அடக்குமுறைக்கு எதிரான உரிமைக் குரலையும் அடக்கி ஒடுக்குவது தவறுதான். அதே நேரம் காங்கிரசுக்காரர்கள் வன்முறையற்றவர்கள் என்ற தொனியில் நெடுமாறன் எழுதியுள்ளதும் தவறுதான். அனைத்துக் கட்சிகளின் வன்முறைக்கும் அரச வன்முறைகளுக்கும் ஆசானே காங்கிரசுக்கட்சிதான். வன்முறைக்கட்சியில் இருந்தவர் என்ற முறையில் அவருக்கே இது நன்றாகத் தெரியும். தான் வன்முறையாளன் அல்லன் என நிறுவுவதற்காகத் தான் சார்ந்திருந்த வன்முறைக்குப்பிறப்பிடமான கட்சியை வன்முறையற்ற கட்சியாகப் பொய்யாக எழுதுவதும் ஒரு வகையில் அடக்குமுறைக்குத் துணை போவதே. வன்முறையால் துன்புற்ற கட்சிகள் வாய்ப்ப வரும்பொழுது வன்முறையையும் ஆயுதமாகக் கொண்டனர் என
5/5/2010 5:07:00 AM
.இத்தகவலை அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரிஸ் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு திசைநாயகத்துக்கு மன்னிப்பு வழங்க முடிவெடுத்தார் ராஜபட்ச என்று பெரிஸ் தெரிவித்தார்.திசைநாயகத்தை மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது இலங்கை பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் வாழும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜபட்சவின் முடிவை பத்திரிகையாளர்கள் வரவேற்றுள்ளனர்.இலங்கையில் அரசை விமர்சித்தும், விடுதலைப் புலிகளின் செயலை ஆதரித்தும் பத்திரிகையில் எழுதியதாக திசைநாயகம் கைது செய்யப்பட்டார். பத்திரிகையில் கட்டுரைகளை எழுதி பயங்கரவாதத்தை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆகஸ்ட் 31, 2009-ல் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.திசைநாயகம் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும், பத்திரிகையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மகிந்த ராஜபட்ச தலைமையிலான அரசு பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவதாக பத்திரிகையாளர்கள் குற்றம்சுமத்தினர். திசைநாயகத்தை விடுவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தனர்.இந்நிலையில் திசைநாயகத்துக்கு அதிபர் மகிந்த ராஜபட்ச பொது மன்னிப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் குரல்களுக்குக் கொடுங்கோலனும் (வேறு பின்னணி எதுவும் இருந்தாலும்)பணிந்துள்ளான். ஈழ மக்கள் விடுதலைக்கான உலகின்குரல்கள் இன்னும் வலுவாக ஒலிக்க வேண்டும். திசைநாயகத்தின் தொண்டு மேலும் தொடரட்டும்! வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக மனித உரிமை!
(மே 3 இல் இச்செய்தி வெளியிடப் பெற்று இக்குறிப்பும் இடம் பெற்றிருந்தது. இப்பொழுது அதே செய்தியை மே 4 இல் வெளியிடுவதாகக் குறிப்பிட்டு இக் கருத்து நீக்கப்பட்டுள்ளனது ஏன்? தினமணிக்கு என்னவாயிற்று?)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/5/2010 4:36:00 AM
வெட்டுத் தீர்மானம் வெற்றுத் தீர்மானம் ஆனது குறித்துச் சிறப்பாக விளக்கியுள்ளார். மூத்த மேனாள் நா.ம.உறுப்பினர் என்ற முறையில் வெட்டத் தீர்மானம் என்றால் என்ன அதன் முதன்மை என்ன நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கும் இதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்ன என்பதை அடுத்தொரு கட்டுரையில் செழியனார் விளக்கினால் பலருக்கு உதவியாக இருக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/7/2010 2:56:00 AM