சனி, 24 ஆகஸ்ட், 2019

இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி


அகரமுதல

ஆவணி 14, 2050 சனிக்கிழமை, 31.8.2019 
மாலை 6.00 மணி

இயக்க நுால் (டைனமிக்) அரங்கம்,
துாய தெரேசா (செயிண்ட்தெரேசா ) தெரு, புதுச்சேரி

இராவணகாவியத் தொடர் சொற்பொழிவு- எண் 18
போர்க்காண்டத்தின் சில படலங்கள்
தொடர் பொழிவாளர்: முனைவர் க.தமிழமல்லன்
தலைமை :
பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் இரஞ்சித்துக் குமார்
வரவேற்புரை: செயலாளர் நெ.நடராசன்
பாட்டரங்கம் : பாவலர்கள் 
அ.உசேன்,
இரா.வேலாயுதம்,
நெய்தல் நாடன்,
இளவரசிசங்கர்
நன்றியுரை: இரா.சத்தியராசு
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழகம்-பகுத்தறிவு ஆசிரியரணி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 27– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 27

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
 (திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்வி, குறள் எண்:393)
கற்றவரே கண்ணுடையவர் ஆவர். கல்லாதவர் முகத்தில் இரு புண்களே உள்ளன என்கிறார் திருவள்ளுவர்.
கடந்த நூற்றாண்டில் இரெய்மண்டு கார்பீல்டு கெட்டெல்(Raymond Garfield Gettell) என்னும் அரசறிவியலாளர், அரசியல் அறிவியல் என்பது கடந்த காலத்தை வரலாற்று முறையிலும், நிகழ் காலத்தினைப் பகுப்பாய்வு முறையிலும் எதிர்காலத்தினை நன்னெறி முறையிலும் படிக்க உதவும் ஒரு பாடம் எனக் கூறிக் கல்வியை வலியுறுத்துகிறார். திருவள்ளுவரும் கல்வியைக் கண்ணுடன் ஒப்பிட்டுக் கல்வியை வலியுறுத்துகிறார்.
கல்வி அனைவருக்குமான அடிப்படை உரிமை என்று சொல்லப்பட்டாலும் கல்வி கற்பிக்கப்படாதவர்கள் பலர் உள்ளனர். அவ்வாறில்லாமல் கட்டாயமாக அனைவருக்கும் கல்வி தேவை என்பதை வலியுறுத்தவே திருவள்ளுவர் கல்வியைக் கண்களுடன் ஒப்பிடுகிறார் என்கிறார் பேரா.முனைவர் சி.இலக்குவனார்.
கண்கள் இலலாதவர்களும் கல்வி கற்று அக்கல்வியால் உலகத்தைக் காண்கின்றனர். கல்லாதவர்களோ கண்ணிருந்தும் குருடர்களாக இருக்கின்றனர். படிக்காதவன் எண்ணையோ எழுத்தையோ பார்த்தால் என்ன புரிந்து கொள்ள முடியும்? நூற்செய்திகளை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்? அப்படியானால் உலகத்தை உண்மையில் பார்க்க உதவும் கல்வியில்லாதவர்களின் கண்கள் புண்கள் என்று சொல்வது சரிதானே!
அரசை நடத்துவதற்கும் கட்சி முதலான அமைப்புகளை நடத்துவதற்கும் குடும்பத்தை நடத்துவதற்கும், தன்னையே வளர்த்துக் கொள்ளவும் கல்வி இன்றியமையாததாகிறது. ஓர் இடத்திற்குச் செல்லவும் விரும்பிய பொருளை வாங்கவும் பொருள்களின் பயன்பாடுகளை அறியவும்  என எல்லா நேர்வுகளிலும் கல்வியறிவில்லாதவர்களால் தனித்து இயங்க முடியாது. எனவே, பிற நாட்டார் கல்வியைக் காற்றுக்கும் உணவுக்கும் ஒப்பிட்டதைவிடக் கண்களுக்கு ஒப்பிட்ட திருவள்ளுவரின் ஒப்புமை சிறந்ததாக உள்ளது.
 கண் என்றால் பார்வை தெளிவாக இருக்க வேண்டுமல்லவா? எனவே, ஆழ்ந்த கல்வியைப் பெற்றுத் தெளிவான உலகப்பார்வையைக் கொள்வோம்!

– இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 24.08.2019

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 26– இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல


திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

26

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்வி, குறள் எண்:392)
 எண்ணும் எழுத்தும் வாழும் உயிர்க்குக் கண்கள் என்கிறார் திருவள்ளுவர்.
அரசியல் அறிவியல் என்பது அரசாங்கம், அரசியல் பொருளாதாரம் என்பவற்றை வளம், உயிரியல் வாழ்க்கை, இயற்கணிதம், வரைகணிதம், விண்வெளி போன்றவற்றோடு தொடர்புபடுத்திப் படிப்பதாகும் என 19ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த அரசறிவியலறிஞர் இராபர்ட்டு சீலேய்(Robert Seeley)  கல்விக்கு முதன்மை அளிக்கிறார். திருவள்ளுவரும் பல்துறை அறிவியல், கலைகளுக்கான கல்வியைக் கற்க வேண்டும் என்பதற்காக எண்ணும் எழுத்தும் கண்ணென வலியுறுத்துகிறார்.
பரிமேலழகர், “எண் என்பது கணிதம்.”  என்கிறார்.
பரிதி,  “எண்ணாகிய சோதிடமும் எழுத்து முதலாகிய அஞ்சு இலட்சணமும்” என்கிறார்.
பேரா.முனைவர் சி.இலக்குவனார்,  “ கல்வி அனைவர்க்கும் பொது; கண்கள் அனைவர்க்கும் இயல்பாக உரியன; அதுபோலக் கல்வியும் எல்லார்க்கும் உரியதாகும். …… எண் என்றால் அறிவியல் , எழுத்து என்றால் கலையியல் “என்கிறார்.
எண்களையும் எழுத்துகளையும் சிதைத்தாலும் அழித்தாலும் மொழி அழியும்;  அதனால் இனமும் அழியும். இன்றைய இந்தியப் பரப்பு முழுவதும் ஒரு காலத்தில் இருந்த தமிழ் தன் பரப்பளவில் பெரிதும் அழிவைச் சந்தித்துள்ளது. திருவள்ளுவர் தம் காலத்தில் இத்தகைய அழிவைப் பார்த்து, எண்ணையும் எழுத்தையும் கண்களாகக் கருதிக் காக்க வேண்டும் என்கிறார்.
எனவே எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மொழிக்கொலைகளில் சிலர் ஈடுபடுவதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

 – இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 23.08.2019

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி

அகரமுதல


ஆவணி 09, 2050 திங்கட்கிழமை 26.8.2019
மாலை 6.30 மணி

 அன்னை மணியம்மையார் அரங்கம்,

பெரியார் திடல், எழும்பூர்

புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி

தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி 
தொடக்கவுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணிப் புரவலர்) 
சிறப்புரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன் 
தலைப்பு: திராவிட இயக்க முன்னோடிகள்

குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்

அகரமுதல


ஆவணி 08, 2050  ஞாயிற்றுக்கிழமை 25.8.2019

மாலை 6.00 மணி

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை,

 தியாகராயர்நகர், சென்னை

அளவளாவல் : திரு கோ.சந்திரசேகரன்

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 25 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

அகரமுதல

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

25

 கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
(திருவள்ளுவர்திருக்குறள்அதிகாரம்கல்வி, குறள் எண்:391)

கற்கத் தகுந்த நூல்களைத் தவறின்றிக் கற்க வேண்டும். கற்றபின் அதன்படிக் கற்றவழியில் செல்ல வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
அரசியல் நெறியைக் கற்று அதன்படி ஆட்சியை நடத்த வேண்டும் என்கின்றனர் அரசறிவியலாளர்கள். திருவள்ளுவர் யாராக இருந்தாலும் கற்று, அதன்படி நடக்க வேண்டும் என்கிறார். இதில் ஆட்சியாளர்களுக்கும் அமைச்சர்களுக்குமான கல்வியும் அடங்குகிறது.
கசடு என்றால் குற்றம், மாசு, அழுக்கு, அடிமண்டி, தழும்பு, வடு, குறைவு எனப் பல பொருள்கள். இங்கே குற்றம், (மன)மாசு, (மன)அழுக்கு என்னும் பொருள்களில் வருகிறது. எனவே, ‘கற்க கசடுஅற’என்றால், நம்மிடம் உள்ள குற்றம் போகவும் மன மாசு அகலவும் பழுது நீங்கவும் ஐயம் திரிவின்றித் தெளிவுறவும் கற்க வேண்டும் என்கிறார்.
குற்றமற்ற நூல்களை நம்மிடம் உள்ள குற்றங்கள் நீங்கக் கற்க வேண்டும் எனலாம்.
மணக்குடவரும் பரிப்பெருமாளும் ‘கற்கப்படுவனவற்றை’ என்று கற்கப்படும் அனைத்தையும் கூறுகின்றனர்.பரிப்பெருமாள் கல்வி பல வகைத்து. அவை எல்லாவற்றுள்ளும் கற்கப்படுவனவற்றைக் கற்று.  என விளக்கம் தருகிறார்.
காலிங்கர் ‘எண்ணும் எழுத்துமாகிய இவை இரண்டையும்  என்கிறார். பரிமேலழகர் கற்கப்படு நூல்களாக ‘அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்தும்’ நூல்கள் என்கிறார். ஆனால், வீடு பேறு என்பது தமிழர் நெறியல்ல.
“கற்றது கைம்மண் அளவு.  கல்லாதது உலகளவு”(ஒளவையார்) என்னும் பொழுது யாராலும் யாவற்றையும் கற்க ஏது நேரம்?  ஆகவே, குப்பையான நூல்களைத் தவிர்த்துவிட்டு,  நமக்குத் தேவையான நூல்களைக் கற்க வேண்டும். அறநூல்களுடன் நம் பணி சார்ந்த நூல்களைக் கற்க வேண்டும்.
 கற்றபின் நிற்க அதற்குத் தக”  என்பதன் மூலம், கற்ற பின்னர், அறநூல்களில் கற்ற வற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்; துறை நூல்களில் கற்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்; எனவே, கற்றதன் படி நடக்க வேண்டும் எனத் தெளியலாம்..
நாம் எப்போதும் கசடறக்கற்று கற்றபடி வாழ்வோம்!

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி 22.08.2019

கருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு

அகரமுதல


ஆவணி 06, 2050 வெள்ளிக்கிழமை 23.08.2019
மாலை 06.30 மணி

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்

இலக்கியவீதி அமைப்பும், 
கிருட்டிணா இனிப்பகமும் 
பாரதிய வித்யா பவனும்

இணைந்து நடத்தும்

கருத்தில் வாழும் கவிஞர்கள்
தொடர் கூட்டத்தின் 20 ஆவது நிகழ்வு

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : எழுத்தாளர் பாரவி (ஆசிரியர் : தளம் இதழ்)
அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் ச. விசயலட்சுமி
கவிஞர் சதாரா மாலதி படைப்புகள்பற்றிச் சிறப்புரை : (புதுவைப் பலக்லைக்கழகத் தமிழ்துறைப் பேராசிரியர்) முனைவர் பா. இரவிக்குமார்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு துரை இலட்சுமிபதி
தகுதியுரை: செல்வி ப. யாழினி
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்!

புதன், 21 ஆகஸ்ட், 2019

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – கல்வி உரிமை மாநாடு

அகரமுதல

ஆவணி 06, 2050 வெள்ளிக்கிழமை 23.8.2019
காலை 9.30 மணி முதல்

இடம்: கலைஞர் அறிவாலயம், திருச்சி

மாலை 6 மணி – மக்கள் எழுச்சியை உருவாக்குவோம் பொது நிகழ்வு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
புதிய தேசியக் கல்விக் கொள்கையை முழுவதுமாகத் திரும்பப்பெற வலியுறுத்திக் கல்வி உரிமை மாநாடு
தலைமை: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் (மாநிலத் தலைவர், தமுஎகச)
முன்னிலை: கே.என்.நேரு (மேனாள் அமைச்சர், மதிப்புறுத் தலைவர், வரவேற்புக்குழு)
வரவேற்புரை: கவிஞர் நந்தலாலா
கருத்துரைகள்: மாண்புமிகு வே.நாராயணசாமி (முதல்வர், புதுச்சேரி), 
நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி (திமுக), 
நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் (இந்திய தேசியக் காங்கிரசு), 
தோழர் கே.பாலகிருட்டிணன் (மாநிலச்செயலாளர், இ.பொ.க.(மா.), 
தோழர் இரா.முத்தரசன் (மாநிலச்செயலாளர், இ.பொ.க.), 
நாடாளுமன்ற உறுப்பினர் துரை.இரவிக்குமார் (பொதுச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), வெ.ஈசுவரன் (மாநில இளைஞரணிச் செயலாளர், மதிமுக), 
துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
ஒருங்கிணைப்பு: மதுக்கூர் இராமலிங்கம் 
இவர்களுடன்
புதுகை பூபாளம் குழுவினரின் கல்வி விமரிசனக் கச்சேரி