வெள்ளி, 1 டிசம்பர், 2017

தமிழக வரலாறு 4/5 – மா.இராசமாணிக்கனார்


தமிழக வரலாறு  4/5

கல்வி நிலை
  சங்கக் காலத்தில் சாதியற்ற சமுதாயத்தில் எல்லோரும் கல்வி கற்று வந்தனர். குறமக்கள், குயத்தி, பாடினி, வளமனையைக்காத்த காவற் பெண்டு முதலிய பெண்மணிகளும், கொல்லன் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளர்களும் கவிபாடும் ஆற்றல் பெற்றுவிளங்கினர் என்பது சங்க நூல்களால் அறிகின்றோம். இத்தகைய கல்விநிலை 2000 ஆண்டுகளாக இல்லாமற் போய்விட்டது. பின் நூற்றாண்டுகளில் வடமொழிக் கல்லூரிகள் வளம் பெற்றன என்பதற்குத்தான் சான்றுகள் கிடைக்கின்றனவே தவிர, ஒரு தமிழ்க் கல்லூரியாவது இருந்தது என்பதற்குச் சான்று கிடைக்கவில்லை. காலப் போக்கில் தொழிலாளர்கள் கல்வியை இழந்தார்கள். கற்கும் உரிமை ஒரு சில வகுப்பினர்க்கே இருந்து வந்தது. சாதி வேறுபாட்டாலும் தீண்டாமையினாலும் பல வகுப்பினரும் சேர்ந்து படிக்க வசதி ஏற்படவில்லை. இந்த அவல நிலையில், அரசியல் போர்களும் குழப்பங்களும் கொள்ளைகளும் சமயப் போர்களும் சமுதாய அமைதியைக் கெடுத்தன. நாம் செய்த நற்பேற்றின் பயனாக, சாதி வேறுபாட்டைப் பெறாத வெள்ளையர் ஆட்சி இந்நாட்டில் ஏற்பட்டது. யாவரும் கல்வி கற்க முற்பட்டனர். ஏழைகள் பணவசதியின்றி அல்லற்பட்டார்கள். தமிழன்னையின் தவப்புதல்வரான காமராசர் ஆட்சியில் ஏழைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. இப்பொழுது தமிழ் உணர்ச்சியும் தமிழ் நாட்டுப் பற்றும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகின்றன.
சமய வரலாறு
 தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்ட தமிழர் பலவகைக் கடவுளரை வணங்கிவந்தனர். குறிஞ்சி நில மக்கள் முருகனையும், முல்லை நில மக்கள் கண்ணனையும், பாலைநில மக்கள் கொற்றவையையும், மருதநில மக்கள் மன்னனையும், நெய்தல்நில மக்கள் கடலையும் வழிபட்டு வந்தனர். வடநாட்டு மக்கள் தமிழகத்தில் குடியேறிய காரணத்தால் தொல்காப்பியர் காலத்தில் கடல், வருணனாகவும், மன்னன் இந்திரனாகவும் உருவகப்படுத்தப்படும் நிலைமை உண்டாயிற்று என்று கூறலாம். வடவர் கூட்டுறவால் முருகன் சுப்பிரமணியனானான்; கொற்றவை துர்க்கையானாள்; இவ்வாறே பல மாற்றங்களும் சேர்க்கைகளும் சமயத்துறையில் உண்டாயின. இந்திரனுக்கும் அவன் வாகனமான வெள்ளையானைக்கும், பலதேவனுக்கும் மன்மதனுக்கும் தமிழகத்தில் கோவில்கள் ஏற்பட்டன. சமணராலும் பெளத்தராலும் ஏற்பட்ட கோவில்கள் பல. வைதிகரின் நுழைவால் வடமொழி மந்திரங்கள் தமிழகத்தில் நுழைந்தன. சுருங்கக் கூறின், சங்க இறுதிக் காலத்தில் பழந்தமிழ்ச் சமயம், வைதிகர் சமயத்தோடு கலப்புண்டது. தமிழர்தம் சிவன் உருத்திர-சிவனாக்கப்பட்டான். வடவர் சமயக்கலைகள் யாவும் தமிழகத்தில் பரவின. கண்ணன் வழிபாடு விட்டுணு வழிபாடாக மாறியது. இவ்வாறு உண்டான மாறுதல்கள் பல.
  பல்லவர் காலத்தில் சைவ வைணவ சமயங்கள் பெளத்த சமண சமயங்களைத் தாக்கி வெற்றி பெற்றன. அப்போது நாட்டில் பல நூறு கோவில்கள் தோற்ற மெடுத்தன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தலந்தோறும் சென்று அருட்பாடல்களைப் பாடினர்கள். நாயன்மார் பாடியவை திருமுறைகள்‘ என்றும், ஆழ்வார்கள் பாடியவை ‘அருளிச் செயல்‘ என்றும் பெயர் பெற்றன. பல்லவர்கள் மலைச்சரிவுகளைக் குடைந்து கோவில்களை அமைத்தார்கள்;. பாறைகளையே கோவில்களாக மாற்றினர்கள்; கற்களை உடைத்து ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டினார்கள்; பல்லவ மன்னர் சைவ வைணவ சமயங்களுக்குப் பெரிதும் ஆக்கமளித்தனர்; மறையவர்களுக்குப் பல புதிய ஊர்களையும் நிலங்களையும் வழங்கினர்; வடமொழிக் கல்லூரிகளை ஏற்படுத்தினர். இவற்றால் வைதிகர் செல்வாக்கு நாட்டில் மிகுதிப்பட்டது.
 சோழர் காலத்தில் இக் கோவில்களெல்லாம் சிறப்புற்றன. பல கோவில்கள் கற்றளிகளாய் மாறின. தஞ்சைப் பெரிய கோவில் போன்ற புதிய கற்கோவில்களும் தோற்றமெடுத்தன. சைவசித்தாந்த சாத்திரங்களும் புராணங்களும் தோன்றின. வைதிகர் செல்வாக்கும் மிகுதிப்பட்டது. வைணவமும் வளர்ந்தது. ஆழ்வார் அருட்பாடல்கட்கு மணிப்பிரவாள நண்டயில் விளக்கவுரை எழுதப்பட்டது. வடநாட்டுச் சான்றோர் சோழர்க்கு அரசகுருமாராய் அமர்ந்தனர். முசுலிம் படை யெடுப்பினால் சமயநிலை பெரிதும் தளர்ந்தது; ஆனால், நாயக்கர் ஆட்சியிலும் மகாராட்டிரர் ஆட்சியிலும் புத்துயிர் பெற்றது. அக்காலத்திய குமரகுருவரர், சிவப்பிரகாசர் முதலியோர் சைவத்தை வளர்த்தனர். வெள்ளையர் ஆட்சியில் சமயம் ஒரளவு நலம் பெற்றது.
  சைவத்திலும் வைணவத்திலும் சாதிவேறுபாடுகளின் கொடுமையால் வாடி வதங்கிய மக்கள், சாதி வேறுபாடு அற்ற இசுலாத்தையும், கிறித்துவத்தையும் தழுவித் தங்கள் மனக்கவலையை மாற்றிக் கொண்டனர். மேனாட்டுப் பாதிரிமார் தமிழகம் போந்து கல்வியறிவையும் மருத்துவ உதவியையும் அளித்தனர். இவ்வருந்தொண்டால் தமிழர் பலர் கிறித்தவராயினர். இங்ஙனம் கி. பி.14-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் இசுலாமும் கிறித்தவமும் தோன்றி வளர்ந்தன. சுருங்கக் கூறின், சைவர் வைணவர் கொடுமைகளே இச் சமயங்களின் வளர்ச்சிக்கு ஒரு காரணம் என்னலாம்.
(தொடரும்)
மா.இராசமாணிக்கனார்
 இலக்கிய அமுதம்

பொருட்டமிழ் வேதம் நூல் வெளியீட்டு விழா



கார்த்திகை 17, 2048 ஞாயிறு  திசம்பர் 03, 2017

மாலை 6.00 மணி

 பிட்டி தியாகராயர் கலையரங்கம்
  கோ.சா.(சி.என்.செட்டி) சாலை, தி.நகர், சென்னை -17

அறம், பொருள், இன்பம், வீடு என்னும்

தமிழ் வேதங்களில் ஒன்றான

‘பொருட்டமிழ் வேதம்’ நூல் வெளியீட்டு விழா


தெய்வத்தமிழ் அறக்கட்டளை
செந்தமிழ் ஆகம அந்தணர் சிறப்பவை

பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம்


கார்த்திகை 17, 2048 ஞாயிறு  திசம்பர் 03, 2017

மாலை 3.30 மணி

தமிழ் இலக்கிய மன்றம்

பாரதியார் பிறந்தநாள் விழா, புழுதிவாக்கம்

கவியரங்கம்
கருத்தரங்கம்

சிறப்புரை :  புலவர்  செம்பியன் நிலவழகன்

த.மகாராசன்

Occupying Colombo's intelligence harasses Maaveerar families in Batticaloa

Occupying Colombo's intelligence harasses Maaveerar families in Batticaloa


The intelligence operatives of the occupying Sinhala military have started to harass families of LTTE war-dead Tamil Eelam Heroes from Batticaloa district in the Eastern Province after the families openly braved the hindrances by the SL military and police against commemorating Tamil Eelam War Heroes on November 27 at the SL military demolished Heroes Cemeteries in the district. Claiming that they were from a Special Police unit in Vaazhaich-cheanai, the intelligence officials were contacting the families in Batticaloa since Wednesday morning and posed a series of questions. The questions ranged from who took part in decorating Maaveerar thuyilum illams, who donated coconut saplings that were distributed as part of the remembrance event and how a vehicle belonging to SL Electricity Board was used in the arrangement. 

The question on SL Electricity Board vehicle was asked at Amirtha-kazhi. 

SL Military Intelligence operatives were tracing cellphone conversations that have taken place among the participants during the self-mobilised Heroes Day memorial events. The intelligence operatives were contacting the phone numbers and were posing questions such as the ones mentioned above, the families said. They were also asking on the role of TNA Parliamentarian S. Viyalendran, the families from Amirtha-kazhi said. 

Similar harassments have also been reported in Vaakarai and Kathirave'li in Batticaloa district. 

The SL military intelligence operatives were claiming that they were in possession of all the participants at the three remembrance events held at Tharavai, Maavadi-munmaari and at Ka'ndaladi in Vaakarai. 

The continuous harassments coming from the SL military intelligence and the open threat coming from SL ministers on investigating use of ‘LTTE symbols’ including the photos of LTTE Leader Veluppillai Pirapaharan, has only exposed the inability of the SL State institution and the Sinhala psyche to transcend chauvinism, Tamil activists in Batticaloa commented. 










Chronology:

Eastern Tamil Eelam marks Heroes Day with mass mobilisation after 10 years

Eastern Tamil Eelam marks Heroes Day with mass mobilisation after 10 years


Tamil students at the Eastern University marked Tamil Eelam Heroes Day with remembrance event at the University premises as well as organising a blood donation campaign. No-one can ever erase November 27 as Heroes Day in the hearts and minds of the Tamil people, said Arts Faculty Student Leader Dineshkanth. An academic of the faculty, who addressed the audience said That the Tamil resolve to remember their war-dead fighters as Tamil National Heroes also reiterated that rightful freedoms of all peoples in the island should be restored by ensuring their inalienable rights. Maaveerar Naa'l was marked in Ampaa'rai, Batticaloa and Trincomalee braving the surveillance harassments of the occupying Sinhala military and police in the East. The people openly defied the ‘instructions’ from the SL military and Police not to use photos with LTTE uniforms. 


Tamil Eelam Heroes Day, Vaakarai, Batticaloa
Vaakarai, Batticaloa



Heroes Day remembrance were held with the participation of thousands of people at Aalangku'lam in Trincomalee and at Ka'ndaladi in Vaakarai, Batticaloa. 



Eastern University
Tamil Eelam Heroes Day marked at Eastern University, Batticaloa

Vinayakam Thavamani, the mother of Black Tiger Major Kannan lit the Common Flame of Sacrifice at Vaakarai event. Tamil Eelam Heroes Day was also marked at Tharavai and Maavadi-munmaari in the district. 

TNA Parliamentarians S. Yogeswaran, S. Viyalendran, Eastern Provincial Councillor K.Thurairajasingam, TNPF Batticaloa District organiser S. Suresh and Kalkudaa electoral district UNP organiser A. Jehan participated in Heroes Day event held at Ka'ndaladi in Vaakarai, Batticaloa. 

The TNPF was distributing coconut saplings to the people to plant in remembrance of Maaveerar. 

Around 4,000 people took part at the Heroes Day event, marked at the SL-military demolished Heroes Cemetery at Aalagn-ku'lam in Champoor, Trincomalee.


Eastern University
Eastern University, Batticaloa
Aalangku'lam, Trincomalee
Aalangku'lam, Trincomalee
Aalangku'lam, Trincomalee
Aalangku'lam, Trincomalee
Aalangku'lam, Trincomalee
Aalangku'lam, Trincomalee
Aalangku'lam, Trincomalee
Aalangku'lam, Trincomalee
Tamil Eelam Heroes Day, Vaakarai, Batticaloa
Vaakarai, Batticaloa
Tamil Eelam Heroes Day, Vaakarai, Batticaloa
Vaakarai, Batticaloa
Tamil Eelam Heroes Day, Vaakarai, Batticaloa
Vaakarai, Batticaloa
Tamil Eelam Heroes Day, Vaakarai, Batticaloa
Vaakarai, Batticaloa
Tamil Eelam Heroes Day, Vaakarai, Batticaloa
Vaakarai, Batticaloa
EUSL - Maaveerar
Eastern University students pay tribute to Maaveerar
EUSL - Maaveerar
Banner at Eastern University
EUSL - Maaveerar
Eastern University
EUSL - Maaveerar
EUSL - Maaveerar
Blood donation campaign by Eastern University students in remembrance of Maaveear



Chronology:

புதன், 29 நவம்பர், 2017

புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணை – மேனாள் மருத்துவ இணை இயக்குநர்


புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள் 
– மேனாள் மருத்துவ இணை இயக்குநர் பேச்சு –
வந்தவாசி. நவ.26. வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டமும், வந்தவாசி சுழற் சங்கமும்  இணைந்து  தேசிய நூலக வாரப் பொன் விழா  நடத்தின.
  இவ் விழாவில், பாடப்புத்தகங்கள்  தாண்டிய பிற குமுக(சமூக) – அறிவியல் – வரலாறு -இலக்கியப் புத்தகங்களே மாணவர்களின் உயர்விற்குத் துணையாக இருக்கும் படிக்கட்டுகள் என்று மேனாள் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர்  மரு.எசு.குமார் குறிப்பிட்டார்.
        இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார்.
விழாவில் பங்கேற்ற அனைவரையும் கிளை நூலகர் பூ.சண்முகம் வரவேற்றார்.
தேசிய நூலக வார விழாவையொட்டி  நடத்தப்பட்ட  போட்டிகளில் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குச் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினர்.
  வெற்றி பெற்ற பள்ளி மாணவ – மாணவிகளை வாழ்த்தி, திருவண்ணாமலை மாவட்ட நூலக அலுவலர் இரா.கோகிலவாணி, வந்தவாசி சுழற் சங்கத் தலைவர் எசு.வெங்கடேசன் ஆகியயோர் வாழ்த்திப்  பேசினர்.
         -வந்தை அன்பன்

திருக்குறள் முற்றோதல், தட்டாஞ்சாவடி


திருக்குறள் முற்றோதல், தட்டாஞ்சாவடி

     புதுவைத் திருக்குறள் மன்றமும் தனித்தமிழ்இயக்கமும் இணைந்து திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியைத் தட்டாஞ்சாவடி சமரசசன்மார்க்க சங்கத்தில் நடத்தின.
  தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமைதாங்கிப் பேசினார். புதிமத்தின் தலைவர் சுந்தரஇலட்சுமிநாராயணன் முற்றோதலைத் தொடங்கி வைத்தார். அறத்துப்பாலின் 38 அதிகாரங்கள் படிக்கப்பட்டன.   ஒருவர் சொல்ல மற்றவர் அதைத் தொடர்ந்து சொல்லித் திருக்குறள் படிக்கும் வாய்ப்பை மகிழ்வுடன் பயன்படுத்திக் கொண்டனர். இராசாராம்,பாலசுந்தரம், கடலுார் பா.மொ.பாற்கரன், வெல்லும் துாயதமிழ் ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி, தமிழ்த்தென்றல், அரங்கநாதன், சமரசசுத்தசன்மார்க்க சாதனைச் சங்கத்தின் செயலர் கோவிந்தசாமி, தா.உமாகாந்தன், செல்வன் த.தமிழ்நேயன் முதலான திரளானோர் திருக்குறள் முற்றோதலில் கலந்துகொண்டனர்.
 பேராசிரியர் குழந்தைவேலனார் நிறைவுரையாற்றினார்.
  கி.கலியபெருமாள் நன்றி கூறினார்.

Peoples’ uprising on Heroes Day delivers strong message to occupying Colombo, foreign powers

Peoples’ uprising on Heroes Day delivers strong message to occupying Colombo, foreign powers

More than 1000 families of fallen Tamil Eelam fighters gathered in front of the SL military demolished Heroes Cemetery on Rajaveethi Road amidst SL military harassment of blocking access to the memorial site, veiled threats of taking photos of the participants and the military display of deploying Armoured Personal Carriers and the firing of tear gas and demonstration of water hoses earlier in the day. Around 1,000 Sinhala soldiers were taking positions surrounding the largest Tamil Eelam Heroes Cemetery while Sinhala soldiers in civil clothes were riding vehicles. But, the soldiers in civil found themselves as they had to stay within their vehicles while the people brought everything to standstill as they emotionally marked Heroes Day remembrance at 6:00 p.m. on Monday. 




Theeruvil, Vadamaraadchi, Jaffna
Theeruvil, Vadamaraadchi, Jaffna
Theeruvil, Vadamaraadchi, Jaffna
Theeruvil, Vadamaraadchi, Jaffna
Chaaddi
Chaaddi
Heroes Cemetery at Chaaddi, located in Allaippiddi - Veala'nai stretch of the Kayts Island, Jaffna
University of Jaffna
University of Jaffna
The people's confluence with a determination to commemorate their war dead LTTE fighters, succeeded not only in honouring the Tamil Eelam Heroes, but also reminded the occupying Sinhala military that they are an occupying force of colonial rule in the country of Eezham Tamils. 

The message also goes to the foreign militaries that engage with SL military in the occupied soil of Eezham Tamils, political observers in Jaffna said. 

Whatever their current plight might be, Eezham Tamils are not going to be deceived by the so-called talk of reconciliation and transitional justice while there has bee no transition at all on the ground, a senior analyst who took part in the memorial event told TamilNet. 

The conflict has in fact worsened to a much more dangerous dimension of structural genocide after the war was ended through a physical genocide in 2009. 

It is no longer the Tamil Diaspora that is sustaining the struggle towards Tamil sovereignty. The struggle is very much alive on the ground and the people are prepared for new forms of struggle. 

The only challenge in front of the people is replacing their leadership and getting rid of the quisling politics of the ITAK hierarchy, political observers in Jaffna commented. 

The Eezham Tamils have been slowly and steadily displaying their commitment to the fundamentals of the Tamil struggle in every Heroes Day remembrance. 

Every year, since 2009 their resolve has been increasing on the ground. This year, the resolve was demonstrated with peoples’ participation overshadowing the contribution of the political activists and leaders for the first time. 

The deceptive politics waged by the global and regional players as well as their agent state in Colombo would also face the same fate as that of the Sinhala soldiers in civil clothes finding themselves confined within their own vehicles of camouflage, the political observers further said. 

Similar to Koappaay, people braved the SL military hindrances to mark Heroes Day remembrances near military occupied Heroes Cemeteries. Remembrance events were held at alternative places in Theeruvil grounds (near Ellang-ku'lam Heores Cemetery), Kodikaamam, and Chavakachcheari (Thenmaraadchi) where the cemeteries of war-dead heroes are still under the Sinhala military occupation. 

Heroes Day Remembrance events were held in a big scale at all 33 Tamil Eelam Heroes Cemeteries (Thuyilum illams) in the North-East for the first time since 2009. 





University of Jaffna
University of Jaffna
Mannaar
Mannaar
Kanakapuram, Ki'linochchi
Kanakapuram, Ki'linochchi
Kanakapuram, Ki'linochchi
Kanakapuram, Ki'linochchi


Chronology:

திங்கள், 27 நவம்பர், 2017

தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா? – வைகோ கண்டனம்

தமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா? 


தமிழ்நாடு அரசுப் பணிக்கான போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவருக்கு ஒப்புதலளித்துத் தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
– வைகோ கண்டன அறிக்கை
தமிழ்நாடு அரசுக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்து வரும் தேர்வுகளில் இனி வெளி மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலைமை ஏற்படும் எனப் பல்வேறு தரப்பினரும் பதறுகின்றனர். இது குறித்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை பின்வருமாறு:
“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குழு 4 தேர்வு, ஊராட்சி மேலாண் அலுவலர் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து 9351 காலிப் பணியிடங்களை நிரப்ப 2018 பிப்ரவரி 11-இல் போட்டித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது.  இப்போட்டித் தேர்வில் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கும் வகையில் கடந்த ஆண்டு நெறிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் எண்ணூறாயிரம் (80,00,000) பேர் படித்து விட்டு வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். ‘வேளாண்மை முதலான கூலித் தொழில்கள் புரிந்து படிக்க வைத்த பெற்றோர்களுக்குப் பாரமாக இருக்கிறோமே?’ என்று மனம் வெதும்பி இருக்கின்றனர். வேலை பெற்றுத் தம் பெற்றோர் படும் துன்பத்தைக் குறைக்கலாம் என நூறாயிரக்கணக்கான இளைஞர்கள் பெரும் கனவுகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகள் போன்றவற்றை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
  இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய நெறிமுறைகளில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படிவெளி மாநிலத்தவரும் தேர்வு எழுதலாம் என்று அறிவிக்கைகூறுகிறது. பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கருநாடகம், குசராத்து, மராத்தி மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளி மாநிலத்தவரும் போட்டித் தேர்வில் பங்கேற்க நெறிமுறைகளில் திருத்தம் செய்திருப்பது முற்றிலும் நயன்மையற்றது (நியாயமற்றது); கடும் கண்டனத்துக்குரியது.
8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்த சென்னை உயர்நீதிமன்ற 140 துப்புரவாளர் பணியிடங்களுக்கு 3,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2500 பேரில் பெரும்பாலானோர் இளங்கலைப் பொறியியல் (பி.இ.), முதுகலை (எம்.ஏ.), முதுகலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ.), முதுகலைக் கணினிப் பயன்பாடு (எம்.சி.ஏ.), முதுநிலை மெய்யியல் (எம்.பி.ல்.) படித்த பட்டப் படிப்பாளிகள் என்பது தெரிய வந்துள்ளதுபொறியியல் முதலான உயர் கல்வி பெற்றவர்கள் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கும் நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது என்பது வேதனை அளிக்கிறது.
  இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய நெறிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் வேலையின்றித் தவிக்கும் தமிழக இளைஞர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். “சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்வேலையற்றோர்உள்ளங்களில் விபரீத எண்ணங்கள்” என்று பேரறிஞர் அண்ணாகுறிப்பிட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலையை எடப்பாடி பழனிசாமி அரசு உருவாக்க வேண்டாம் என எச்சரிக்கையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  தமிழகத்தில் அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவது அசாம் மாநிலத்தில் எழுந்த சிக்கல் போல் எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலும் வெடிக்கும் நிலைமையை ஏற்படுத்தும்.
  எனவே, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதும் வகையில் தேர்வாணைய நெறிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”
இவ்வாறு வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிகரம் தொடுவோம் – புத்தக வெளியீடு , மசுகட்டு



சிகரம் தொடுவோம் – புத்தக வெளியீடு 


  வல்லமை வலைத்தளத்தில் 28 வாரங்களாக வெளிவந்த ‘சிகரம் நோக்கி‘ எனும் கட்டுரைகள், மணிமேகலை பிரசுர மேலாண்மை இயக்குநர் திருவாளர் இரவி தமிழ்வாணன் உதவியுடன் அழகிய புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
  அதன் வெளியீட்டு விழா, ஓமான் தலைநகர் மசுகட்டில் சீரோடும்  சிறப்போடும் கடந்த கார்த்திகை 04,  2018   : 20-11-2017 திங்கள் கிழமை மாலை நடைபெற்றது.
  ஓமனுக்கான இந்தியத்தூதர் மேதகு இந்திரமணி பாண்டேநிகழ்ச்சியைக்  குத்துவிளக்கு ஏற்றி, நம் மரபுப் படித் தொடக்கி வைத்தார்.   மசுகட்டு தமிழ்ச் சங்கத் தமிழாசிரியைகள் தமிழ்த்தாய் வாழ்த்துப்  பாடினர்.
  திருமதி. இரேவதி சுந்தர் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு மசுகட்டு தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் சீனிவாசன்தலைமை தாங்கினார்.
  மேதகு இந்தியத் தூதர் நூலை வெளியிட, திருமதி.சித்திரா நாராயண்(Director, Middle East Nursery) , திரு.குமார் மகாதேவன் (Director & Advisor – Oman Sharpooji Co ), திரு.பி.ஆர்.இராமகிருட்டிணன் (CEO, Vision Insurance), திரு.தி.கணேசு (CFO, Bank Muscat ), திரு.சங்கர் (CFO, Bank  Dhofar), திரு. பி.எசு.இலட்சுமணன் (CFO, National Drilling & Services Co), திரு. சிரீதர் நாரணசாமி (Ex – Chairman, ICAI-Muscat Chapter), திரு.  இராசேந்திரன் (GM, National Steel Fabricators)  முனைவர். த. தங்கமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
  விழாவில் மேதகு. இந்திரமணி பாண்டே அறிமுக உரை நிகழ்த்தினார்.  திருமதி. சித்திரா நாராயண் சிறப்புரை கவித்துவமாக இருந்தது.
 ஏனைய சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துரை வழங்க, நூலாசிரியர் சுரேசமீ ஏற்புரை வழங்கினார்.
  மசுகட்டு தமிழ்ச் சங்கப்  பொருளாளர் திருமதி. விசயலக்ஷ்மி சந்திர சேகர் நன்றி கூற, விழா இனிதே முடிந்தது.
  நிகழ்சசியை மசுகட்டு தமிழ்ச் சங்கப்  பொருளாளர் திருமதி. விசயலட்சுமி சந்திர சேகர் தொகுத்து வழங்கினார்.
  இவ்விழாவில் மசுகட்டுவாழ் தமிழர்கள் மட்டுமல்லாது, பெருந்திரளான பிற மக்களும் கலந்து கொண்டனர்.