சென்னை, ஜூலை 16: கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மலையாளத்தில் திருக்குறள் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. ஜான் ஜோசப் கோரிக்கை விடுத்தார். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இளைஞர் நலன், விளையாட்டு, தமிழ் வளர்ச்சி, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையைப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு மலையாளத்தில் திருக்குறள் வழங்க வேண்டும். வனத் துறையில் காலியாக உள்ள 1,000 காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பழங்குடியினர் வீடு கட்ட வழங்கப்படும் ரூ. 34 ஆயிரத்தை உயர்த்தி ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தை மீட்க வேண்டும் என்றார் ஜான் ஜோசப்.
கருத்துக்கள்
நல்ல கோரிக்கை. ஆனால், மலையாளிகள் மட்டும் திருவள்ளுவர் சிலயைப் பார்க்க வநதால் மலையாளத்தில் வழங்கலாம். ஆனால், பிற மொழியினரும் வருகின்றனர். எனவே, வருவோரின் தாய்மொழியில் திருக்குறள் நூலை வழங்க வேண்டும். இதற்கு அரசு செலவழிக்கத் தேவையில்லை. கொடையாளர்கள், விளம்பரதாரர்கள் மூலம் திருக்குறளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/17/2009 3:26:00 AM