திங்கள், 13 ஜூலை, 2009

"ஆட்சியில் பங்கு: சோனியாவிடம் மீண்டும் வலியுறுத்துவோம்'



புதுக்கோட்டை, ஜூலை 12: தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி, கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் அனுப்பவிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்தார். இதுகுறித்து புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி: ""கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மரியாதையையும், வாய்ப்புகளையும் அளிக்கும் கட்சி காங்கிரஸ் மட்டும்தான். அதனால்தான், பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். தமிழக காங்கிரஸôரின் உணர்வுகளை கட்சித் தலைமைக்கு தெரிவிப்பதில் எவ்விதக் குழப்பமும் இல்லை. தமிழக அமைச்சரவையில் பங்கேற்க வேண்டும் என்ற கட்சியினரின் உணர்வை, விரைவில் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு அனுப்பவுள்ளோம் என்றார்.
கருத்துக்கள்

போய் ஏதாவது உருப்படியான வேலையைப் பாருங்கள்! தன்னை நம்பியிருந்த ஈழத் தமிழர்களையே கொன்று குவித்த அன்னைக்குத் தெரியாதா யாரை எப்பொழுது ஆட்சியில் அமர்த்துவது என்று!

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2009 3:46:00 AM

இத்தகைய தீர்மானத்தைத் தேர்தல் அறிவி்ப்பு வரும் வரை அனுப்பிக் கொண்டே இருங்கள். அப்பொழுதுதான் அடுத்துக் கூட்டணி வைக்கும் போது எழுதப்படும் ஒப்பந்தத்தில் இக் கோரிக்கையைச் சேர்க்கலாம் அலலது நீக்கலாம். அதனால் ஒரு முடிவு கட்டலாம். காங்.கில் இருக்கின்ற உட் குழுக்கள் போதா என்று இவர்கள் கேட்கும 10 அமைச்சர் பதவிகளை அளித்தால் மேலும் உட்குழுக்ககள் தோன்றாவா? கலைஞர் ஆட்சியின் முதல் பெரும் சாதனை காங்.ஐ ஆட்சியில் சேர்க்காததுதான். அது வேதனையாக மாறாதா? மத்திய காங். என்றாவது தன்னை மீறி மாநிலக் காங். வளர வழி விட்டிருக்கிறதா? பிறகு ஏன் இந்தப் பொல்லா ஆசை? வாரியப் பொறுப்பு போன்றவற்றைக் கூட இவர்களுக்கு அளிக்கக் கூடாது என்றுதானே மத்திய காங். விரும்புகிறது. பிறகு ஏன் இந்த நப்பாசை? 67 வரை தமிழ் நாட்டைக் குட்டிச் சுவராக்கியதுபோல் மீண்டும் ஆக்கப் பேராசையா? தாலின் முதல்வராகும் பொழுது காங்.கிற்கு ஆட்சியில் பங்கு கொடுத்து உட்கட்சிச் சிக்கலைத் தீர்க்கலாம எனக் கலைஞர் எண்ணினால் கூட மத்திய காங்.விடாதே! போய் ஏதாவது உருப்படியான வேலையைப் பாருங்கள்! தன்னை நம்பியிருந்த ஈழத் தமிழர்களையே கொன்று குவித்த அன்னைக்குத் தெரியாதா

By Ilakkuvanar Thiruvalluvan
7/13/2009 3:45:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக