வெள்ளி, 17 ஜூலை, 2009

தமிழர் பிரச்சினை குறித்து அரசு கண் விழிக்காவிடின் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் ஜே.வி.பியின் சோமவன்ஸ எச்சரிக்கிறார்




நிமிடத்துக்கு நிமிடம் விஸ்வரூப மெடுத்துக் கொண் டிருக்கும் தமிழர் பிரச்சினை தொடர்பில் அரசிடம் தெளி வான நோக்குக் காணப்படவில்லை.
தேசிய பிரச்சினை விடயத்தில் அரசு கண் விழிக்காத நிலை தொடரும் பட்சத் தில் பிற்காலத்தில் மிக மோசமான விளை

வுகளையே அது ஏற்படுத்தப் போகின்றது.
இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் ÷சாமவன்ஸ அமரசிங்க எச்சரித்திருக்கிறார்.
தீர்வுத் திட்டம் பிற்போடப்பட்டு வருகின்ற காரணத்தினாலேயே அந்நிய சக்திகள் எமது உள் வீட்டுப் பிரச்சினைகளுக்குள் தலையிடுகின்றன. வன்னி மக்களின் நிலைமைகள் குறித்து கருணாநிதியோ அல்லது அவரது மகள் கனிமொழியோ கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் சொன்னார்.
ஜே.வி.பி. கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், அங்கு தொடர்ந்து கூறியவை வருமாறு:
பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் சகோதரத்துவம் மற்றும் ஐக்கியத்துடனான இலங்கையை கட்டியெழுப்புவதே சகல இனத்தவரதும் எதிர்பார்ப்பாகும்.
தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்காக, நாம் எதிர் கொண்டுள்ள தேசியப் பிரச்சினையாக தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை சரியானதும் தீர்க்கமானதுமான வழியில் புரிந்து, அதற்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதுமே இன்றைய முதற் கட்டப் பணியாக இருக்க வேண்டும்.
இது சவால் மிக்கதாகும். இந்த சவால்மிக்க பணியை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம் அல்லது ஒழுங்கமைப்பு அரசிடம் இல்லை.
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக தற்போது அரசு அதனைக் குழப்பியடித்துக் கொண்டிருக்கின்றது. இனங்களுக்கிடையிலான சமத்துவமின்மையை துடைத்தெறிவதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்களையேனும் முன்னெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக