வெள்ளி, 17 ஜூலை, 2009

ஜனநாயகத்தையும் இயல்பு நிலையையும் வடக்கில் ஏற்படுத்த அரசு தவறிவிட்டதுகுற்றம் சுமத்துகிறார் ரணில்




வடக்கில் ஜனநாயகத்தையும், இயல்பு வாழ்க்கையையும் ஏற்படுத்து வதற்கு அரசாங்கம் தவறிவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக் கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்தப் பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவே உள் ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தமது கட்சி தீர்மானித்துள்ளது என் றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா நகர சபை மற்றும் யாழ். மாநகர சபைக்கான ஐ.தே.கட்சித் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்ற வேளையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், யாழ். மாநகர சபைக்கான ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளர் ஏ.ஏ.சத்தியேந்திரா தேர்தல் விஞ்ஞாபனத்தை எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளித்தார்.
இதன் பின்னர், கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டவை வருமாறு:
வட பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவே நாம் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தோம்.
பல ஆயுதக் குழுக்களால் நாம் மிரட்டப்பட்ட போதிலும் மக்களின் நன்மைக்காக நாம் தொடர்ந்தும் செயற்படுவோம்.
அரசு அந்தப் பகுதியில் ஜனநாயகத்தையும், இயல்பு வாழ்க்கையையும் ஏற்படுத்தத் தவறிவிட்டது.
வட பகுதி மக்களின் ஜனநாயகம், உரிமை, அப்பகுதியின் அபிவிருத்தி மற்றும் சமத்துவம் தொடர்பாகவே எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கவனம் செலுத்தியுள்ளோம்.
இன ஒருமைப்பாட்டு ஜனநாயகத்தை ஏற்படுத்தவே யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றோம்.
மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் சக்தி, ஐ.தே.கட்சிக்கே உள்ளது. அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் நாம் சிந்திக்கின்றோம்.
யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. அரசின் செயற்பாடுகள் இதற்கு நேர்மாறானதாகவுள்ளன.
அகதிமுகாம்களில் சொல்லொண்ணாத் துயரம் நிலவுகின்றது. கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்ட அவர்களது வாழ்வு அவலம் நிறைந்ததாகவுள்ளது.
அவர்களது உடனடித் தேவையாக மீள் குடியேற்றமே உள்ளது. இந்த மக்களுக்கு சம உரிமைகள் வழங்கப்படவேண்டும்.
கிழக்கிலும், வடக்கிலும் ஜனநாயக அரசை நிலைநாட்டவே நாங்கள் செயற்படுகின்றோம்என்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக