புதன், 6 ஜூலை, 2022

முனைவர் பூமா பொன்னவைக்கோ மறைந்தார்

 அகரமுதல




திருவாட்டி முனைவர் பூமா பொன்னவைக்கோ விடை பெற்றார்

கணவர் பேராசிரியர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களுருக்கேற்ற தமிழார்வம் மிக்க மனை மாண்பினராகத் திகழ்ந்த,

அனைவரிடமும் கனிவாகவும் எளிமையாகவும் பழகும்

முனைவர் பூமா பொன்னவைக்கோ அவர்கள்

ஆனி 17, 2053 வெள்ளி இரவு 11.45 மணியளவில் பிரியா விடை பெற்றார்.

அவரது குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

அன்னாரின் நினைவேந்தல் படையல் ஆனி 25, 2053 / 09.07.2022 சனி இரவு 7.00

காரியம் மறுநாள் ஞாயிறு காலை 9.00 மணி

நிகழ்விடம்:

கோ இல்லம்,

எண் 2/255, மூன்றாவது தெரு,

அண்ணா வீதி,குறிஞ்சி நகர்,

வண்டலூர், சென்னை 600 048

தொடர்பிற்கு : 98400 90652

பிரிவில் வாடும்

முனைவர் பொன்னைக்கோ

முனைவர் பொறியாளர் பொ.பூங்கோவன்

முனைவர் பொறி.பொ.கோவேந்தன்

பொறி. பரணி பூங்கோவன்

மருத்துவர் சரசுவதி கோவேந்தன்

ஆகியோருக்கும் பிற குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறோம்.

அகரமுதல – மின்னிதழ்

தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழன்னைக்குப் பெருமை சேர்க்க வருகிறாள் தமிழணங்கு

 அகரமுதல


  உலகத் தமிழர்களை இந்துக்கள் என்று அடையாளப்படுத்தும் முயற்சி நடைபெறுவதால் ‘தமிழராய் இணைவோம்‘ என்ற இலக்குடன் தமிழணங்கு மாத இதழ் தொடங்கப்பட்டுள்ளது.

இணையத்திலும் அச்சிலும் வெளிவருகிறது. தமிழ் மரபு, பண்பாடு, சமயம், வரலாறு, மொழி இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

rajetamiljuly1@gmail.com  க்கு கட்டுரைகளை அனுப்புங்கள்.

முதல் இதழ் 134 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது. விலை உரூ120/-

ஆசிரியர்: முனைவர் செ. இராசேசுவரி

amazon.in    amazon.com

தளங்களில் வாங்கலாம்.







செவ்வாய், 5 ஜூலை, 2022

முனைவர் வை.பழனிச்சாமி இ.ஆ.ப. வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு

அகரமுதல


அகதாபட்டியிலிருந்து

ஓர் ஐ.ஏ.எசு.

நூல் வெளியீட்டு விழா

ஆனி 25, 2053 சனி 09.07.2022 மாலை 5.00

உருசியக் கலாச்சார மையம்

74, கத்தூரிரங்கன் சாலை, தேனாம்பேட்டை

சென்னை

மாலை 5.00 தேநீர் விருந்து

நூல் வெளியீடு: திரு வைகோ, நா.உ.

தலைமை: தாமரைத்திரு நல்லி குப்புசாமி

வாழ்த்துரை:

திரு பார்த்தசாரதி, நிறுவனர், வலைத்தமிழ்

முனைவர் வி.பொன்ராசு,

நூலாசிரியர் உரை: எழுத்தாளர் இராணிமைந்தன்

வரவேற்புரை :செல்வி ப.இரா.நிகரிகா

நன்றியுரை: மரு.ப.இராசுகுமார்

இன்னிசை ஏந்தல் ஆத்மநாதன் இன்னிசையுடன்

நிகழ்ச்சி தொடங்குகிறது.





அகில் இரிசி இராசசேகரனின் நூல் வெளியீட்டு விழா

 அகரமுதல


அகில் இரிசி இராசசேகரனின்

Rock Art of Madurai – The Pre History of Civilization

நூல் வெளியீடு

ஆனி 24, 2053 வெள்ளி 08.07.2022

மாலை 6.00

 ‘பி’ தொகுதி கருத்தரங்கக் கூடம், அமெரிக்கன் கல்லூரி, மதுரை

அன்புடன்

நெருஞ்சி இலக்கிய இயக்கம், தஞ்சாவூர்



திங்கள், 4 ஜூலை, 2022

பரமக்குடிச் சிறுவனுக்கு முனைவர் பட்டம்

 அகரமுதல


பள்ளிக்கூடச் சிறுவனுக்கு  முனைவர் பட்டம்

பள்ளிக்கூடப் பொறுப்பாளர்கள் பாராட்டு

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆயிர வைசிய பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 5  ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் த. சந்தோசு கண்ணா.

இந்த மாணவருக்கு அண்மையில் மதுரையில் நடந்த விழாவில் பன்னாட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இளம் அகவையில் மகிழுந்துபற்றிய பல செய்திகளை மிகவும் துல்லியமாகக் கூறி வருவதால் முனைவர் வழங்கப்பட்டது. இவர் ஏற்கெனவே ஆசிய ஆவண ஏடு(Asia Book of Record), இந்திய ஆவண ஏடு(India Book of Record), உலக ஆவண உதவி(Assist World of Records),சென் கழகத்தின்(The SEN Academy) தி பாராட்டுச் சான்றிதழ் முதலான பல்வேறு சான்றிதழ்களைப் பெற்றவர்.

மாணவர் சந்தோசு கண்ணாவுக்கு ஆயிரவைசிய சபை-கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் பெருந்தலைவருமான இராசி என். போசு அறிவுறுத்தலின்படி தாளாளர் பி. இராசேசு கண்ணா, பொருளாளர் பி. பிரசன்னா முதலானோர் மேலும் பல பட்டங்களைப் பெற வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

அப்போது பள்ளிக்கூட முதல்வர் செயபிரமிளா, துணை முதல்வர் பவானி, மேலாளர் சதீசு முதலானோர் உடன் இருந்தனர்.

மாணவரின் தந்தை தண்டாயுதபாணி காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.

இதன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இளம் அகவையில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் என்ற பெருமையை த. சந்தோசு கண்ணா பெறுகிறார்.

முனைவர் பட்டம் பெற்ற சந்தோசு கண்ணாவிற்குப் பள்ளி ஆசிரியர்கள், உடன் பயிலும் மாணவர்கள், பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் எனப்  பலதரப்பட்ட மக்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்துகளைத் தெரிவிக்க :

+91 94423 20020

தரவு: முதுவை இதாயத்து, துபாய்

00971 50 51 96 433

muduvaihidayath@admin