சனி, 5 ஜூன், 2010

தமிழ் வளர்ச்சித் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுமா?



புதுக்கோட்டை: தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த 1956-ல் நாட்டில் மொழி வாரியாக மாநிலங்கள் சீரமைக்கப்பட்ட பிறகு, அந்தந்த மாநிலங்களின் நிர்வாகம் அந்தந்த மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியில்தான் நடைபெற வேண்டும் என்று தீர்மானித்து, சட்டப் பேரவையில் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டிலேயே தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது.இதைத் தொடர்ந்து, 1996-ல் முதல் முறையாக தமிழ் ஆட்சி மொழித் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றும் பணிகள் தீவீரப்படுத்தப்பட்டன.அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் வளர்ச்சித் துறைக்கென தனி அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. திருநெல்வேலியிலும், சேலத்திலும் மண்டல அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன. இந்த வகையில், ஆட்சி மொழிச் சட்டத்தை முழு அளவில் நிறைவேற்ற தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு, அரசு அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சி பெற அரசு வழி வகுத்தது.மாவட்டந்தோறும் உள்ள தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு ஓர் இயக்குநர் உள்பட 5 ஊழியர்கள் என்ற விகிதத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர். மேலும், தனி வாகன வசதியும் செய்து கொடுக்கப்பட்டது.மாவட்டத்தில் உள்ள ஏறத்தாழ 51 அரசுத் துறை அலுவலகங்களுக்கும் நேரில் சென்று ஆட்சி மொழி பயன்படுத்தப்படும் நிலைமையை ஆய்வு செய்து, தமிழ்ச் சொற்களுக்கான விளக்கங்களையும், தமிழ் வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்ட ஆட்சி சொல்லகராதியையும் அளித்து, அனைத்துக் கோப்புகளையும் தமிழ் மொழியில் கொண்டு வரச் செய்வதே இந்த அலுவலகத்தின் அன்றாடப் பணியாகும்.தினமும் ஒன்று அல்லது இரண்டு அரசு அலுவலகம் என்ற விகிதத்தில் மாதம் 40 அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சித் துறையினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் போதிய ஊழியர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. இவற்றில் தேனி, அரியலூர், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் உதவி இயக்குநர் பணியிடம் காலியாகவும், கடலூர், விழுப்புரம் மாவட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. மேலும், சில மாவட்டங்களில் வாகன வசதியும் இல்லை.இதன் காரணமாக, அரசு அலுவலகங்களில் தமிழை ஆட்சி மொழியாக மாற்றும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.மேலும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தமிழக அரசின் கொள்கையை தீவிரமாக அமல்படுத்த தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப் பண்பாட்டுத் துறையினர் பணியாற்ற வேண்டும் என்ற தமிழக முதல்வரின் எதிர்பார்ப்பு, முதல் கட்டமாக அரசு அலுவலகங்களில் நிறைவேறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், தமிழ் வளர்ச்சிக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்திய முதல்வர், இந்தப் பிரச்னையில் உரிய கவனம் செலுத்தி இந்தக் குறையைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
கருத்துக்கள்

பணியிடங்கள் நிரப்பப்பட்டால் மட்டும் தமிழ் ஆட்சிமொழி முழுமையாக நிறைவேறுமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையிலேயே தமிழ் ஆட்சிமொழியாகச்சிறக்க வேண்டும் என்றால் உடனே தமிழ் வளர்ச்சித்துறையை மூட வேண்டும். நிதியுதவி, பரிசு வழங்கல் முதலான நலப்பணிகளைத் (தமிழ்நாடு இயல இசை நாடக மன்றத்திலிருந்து இயல் பணிகளைப் பிரித்துத்) தமிழ்நாடு இயல்மன்றம் என்னும் அமைப்பைத் தொடங்கி அதனிடம் ஒப்படைக்க வேண்டும். அரசாணைகள் அனைத்தையும் தமிழில் வெளிவரச் செய்து தமிழில் உள்ள பட்டியல்கள், காசோலைகள், ஒப்பந்தங்கள் முதலானவை மட்டுமே செல்லத்தக்கன என நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழறிஞர்களைக் கொண்ட வழிநடத்தும் குழுவை அமைத்து நல்ல தமிழில் எழுத வழிகாட்ட வேண்டும். உயர் நீதிபதி தலைமையில் செயலாக்கக் குழுவை நிறுவி விதி மீறுவோருக்குத் தண்டனை வழங்க வேண்டும். இவற்றைச் செய்வார் யாருமில்லை. எனவே, ஆட்சித்தமிழ்ச் செயலாக்கம் என்பது கானல் நீரே. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/5/2010 1:47:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் கருணாநிதி: விஜய.டி. ராஜேந்தர்



சென்னை, ஜூன் 4: ஒரு காலத்தில் தமிழ்மொழியை காத்த தலைவர் என்ற பெயரை சுமந்து நின்ற கருணாநிதி, இன்று இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் என்று கூறினார் லட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய. டி. ராஜேந்தர். தமிழினக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற உள்ள தமிழர் மீட்சி மாநாடு குறித்த அறிவிப்பு தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: நடைபெற உள்ள தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழர் ஆட்சி மாநாடு ஆளும் கட்சியின் மாநாடு. ஆனால் ஜூன் 12-ம் தேதி நடைபெறும் மாநாடோ தமிழர்களுக்காக நடத்தப்படும் தமிழர் மீட்சி மாநாடாகும். தெலங்கான பிரச்னை என்றால் தெலங்கான பகுதிகளில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துகின்றன. காவிரி விவகாரம் என்றால் கன்னடர் என்ற உணர்வோடு கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபடுகின்றன. இது போன்ற அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் செத்து மடிந்தபோதுகூட இங்குள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேரவில்லை. இலங்கையில் தமிழர்கள் பகுதி சுடுகாடாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் செம்மொழி மாநாடா? தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நான் எதிர்க்கவில்லை, ஏனென்றால் அது என் மொழி மாநாடு. கருணாநிதி 5-வது முறையாக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அவரால் தமிழகத்தில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க முடியவில்லை. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகிவிட்டது. இப்போதும் இதற்காக அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார் ராஜேந்தர்.
கருத்துக்கள்

மக்கள் நலத்திட்டங்களை மிகுதியாகச் செயல்படுத்திய பெருமை எந்த அளவிற்குக் கலைஞருக்கு உண்டோ அந்த அளவிற்கு ஈழத்தமிழின அழிப்பில் பங்கேற்ற பழியும் உண்டு.இதனை அவரும் அறிவார்.இப்பழியைத் துடைக்க அவர் கட்சியையும் குடும்பத்தையும் காங்கிரசையும் இந்தியத்தையும் மறந்து மனிதத்தைப் போற்றினால் தமிழ் உணர்வுடன் செயல்பட்டு தமிழ் ஈழ விடுதலைக் கொடி பட்டொளி வீசிப் பறந்திட வழி காண்பார். அவர் நினைத்தால் இது முடியும். கனல் கக்கும் நடைக்குச் சொந்தக்காரர் எழுதுகோல் ஒன்றே போதும் வெற்றியை அடைய! எனவே, பழி போக்க ஆவன செய்வாரா? அவரால் வளர்க்கப்பட்டவர்களாலும் அவரை மதிப்பவர்களாலும் சுமத்தப்படும் பழியிலிருந்து மீளத் தமிழ் நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழனுக்கு முதன்மையும் கிடைக்கும் வண்ணம் விரைந்து செயல்பட்டால் உலகில் தமிழ் உரிமையுடன் திகழும். தமிழுக்கு உரிமை கிடைத்தாலே தமிழனின் கை விலங்குகளும் உடைக்கப்படுமே! தமிழரின் தாயகம் தன்னுரிமையுடன் திகழுமே!

பிறந்த நாள் வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/5/2010 1:28:00 PM

அன்பரே! நான் ஒரு இலங்கைத்தமிழன். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரம் நிகழும் போதெல்லாம்(1958, 77, 81, 83) தமிழகத்தில் இருந்து ஒரு குரல் எழும். அதற்காகவே இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழினமும் திருச்சி வானொலி செய்திக்காக வானொலி அருகே தவமிருக்கும். ஏனெனில் அப்போது திருச்சி வானொலிதான் இலங்கையில் தெளிவாகக் கேட்கும். தமிழகத்தில் இருந்து ஒரு குரல் ஓங்கி ஒலிக்கும், தமிழர் மீதான அடக்குமுறை உடனே நிற்கும். அந்த குரலுக்கு சொந்தக்காரன் யாரென்பதை உலகே அறியும். அதன் பின்பே இந்திய மத்திய அரசு செயற்படத் தொடங்கும். எனக்கு கலைஞர் மீது நிறையவே விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் 'நன்றி மறப்பது நன்றன்று'.

By Ravi
6/5/2010 1:24:00 PM

Thanks to T Rajender for exprssing his tamil feelings... all unarvulla thanmana thamilans have the same feeling.. hatred for the ina throgi karunas and that the semoli mahanadu is only for his jalaras to priase him.. real tamils all over world will unite to liberate free Tamil Eelam and identify the ina throgis, etchi naygal and jalras like RAVI

By babu
6/5/2010 1:21:00 PM

Thanks to T Rajender for exprssing his tamil feelings... all unarvulla thanmana thamilans have the same feeling.. hatred for the ina throgi karunas and that the semoli mahanadu is only for his jalaras to priase him.. real tamils all over world will unite to liberate free Tamil Eelam and identify the ina throgis, etchi naygal and jalras like RAVI

By babu
6/5/2010 1:21:00 PM

Ravi you must be a real dmk supporter.Paticipating in a meeting is contribution for solving a problom. Is it the contribution.Srilankan problom originated after 1977 only in a big way,Once democratically elected leader of opposition Mr.Amithalingam was disrespected by the Srilankan government.Main trouble occured in 1983 and that is the starting point of Srilankan struggle.If you want to praise kalaizar for any other thing,there are forums and do not involve respected Arizar Anna in this.

By Legal Fan
6/5/2010 12:56:00 PM

Ravi நீர் கூறும் ஆதாரங்கள் பச்சோந்தி ஒன்று அந்த இடத்தில் நின்றது என்றால் வரலாறாகிவிடாது. பச்சோந்தி எதற்காக அந்த இடத்தில் நின்றது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் நீ எதோ கல் தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் பிறந்த நினைப்புடன் வரலாற்ரை திருவுபடுத்தி எழுதினால் உண்மையாகிவிடாது. நீ தமிழனாக இருந்தால் முதலில் தமிழினத்திற்காக பாடுபடு அதைவித்து ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுதது என்ற கதையில் நீ பச்சோந்தி யாக இருந்து ஓநாய் வேசம் போடாதே குள்ள நரிபயலே.

By raj
6/5/2010 12:51:00 PM

அன்பரே! 'கடல் நீர் ஏன் உவர்ப்பாக இருக்கின்றது, அது கடல்கடந்த தமிழர்கள் விடும் கண்ணீர்' என்றார் 50க்களில் அறிஞர் அண்ணா. அந்தக் கூட்டத்தில் கலைஞரும் இலங்கைத்தமிழருக்காக பேசினார். அதாவது இந்தச் செய்திக்குரிய ஆசாமி பிறப்பதற்கு முன்பு. வரலாறு தெரியாவிட்டால் பரவாயில்லை. விமர்சனம் எழுதவேண்டும் என்று எதையாவது எழுதிக்கொண்டிருக்க வேண்டாம்.

By Ravi
6/5/2010 12:31:00 PM

Ravi what is that you are talking.T.Rajesndar is more than 50 years old.He should have born minimum before 1960.Srilanka's main problom originated from 1977.Karuna become cm in 1969,There wan no major porblom between 1969 and 1977,It is MGR who played major role in Srilankan problom between 1977 to 1987.Even during this period karuna played politics supporting TELO since MGR supported Prabhakaran.Ravi what is your age.Do not distart history.

By Legal fan
6/5/2010 12:13:00 PM

karunanthis is also one of the reason for killing the tamil people One should not deny it

By charlas
6/5/2010 12:07:00 PM

இந்த நபருக்கு இலங்கைத்தமிழர் பிரச்சனையும் தெரியாது, அதில் கலைஞரின் பங்களிப்பும் புரியாது. இலங்கைத்தமிழருக்காக கலைஞர் போராடியபோது இந்த ஆசாமி பிறந்தே இருக்கமாட்டார். இங்கு பலர் யானையைப் பார்த்த குருடர்கள் போல் இலங்கைபற்றி விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். எனக்கும் கலைஞர் மீது விமர்சனம் உண்டு. ஆனால் அதையும் மீறி அந்தக்கிழட்டுச் சிங்கம் இலங்கைத்தமிழருக்கு நிறையவே செய்திருக்கின்றது. இன்னமும் செய்யும். இதனை வரலாறு பகரும்.

By Ravi
6/5/2010 11:54:00 AM

malysia minister ramasamy.alread said he won attend semoli manadu.he is true tamilan.tamilans shoud be proud of him

By raj
6/5/2010 11:54:00 AM

I RECOMMEND NOBEL PRIZE FOR DARKDER.WALKING CORPSE KARUNANIDHI FOR HIS PART IN BUTCHERING 50,000 SL TAMILS....THIS TRAITER KNEW 3 YEARS AGO THAT INDIANS ARE SENDING WEAPONS AND EXPERTS TO SLAUGHTER BUT KEPT QUITE TO SAVE HIS CHEAP MINISTER POST.....

By KOOPU
6/5/2010 11:45:00 AM

I RECOMMEND NOBEL PRIZE FOR DARKDER.WALKING CORPSE KARUNANIDHI FOR HIS PART IN BUTCHERING 50,000 SL TAMILS....THIS TRAITER KNEW 3 YEARS AGO THAT INDIANS ARE SENDING WEAPONS AND EXPERTS TO SLAUGHTER BUT KEPT QUITE TO SAVE HIS CHEAP MINISTER POST.....

By KOOPU
6/5/2010 11:45:00 AM

உண்மையை கக்கிய விஜய ராஜேந்தர் அவர்களுக்கு நன்றி. இவர் ஒரு திமுக அனுதாபியாக இருந்தாலும் நியாயத்தை சொல்வதால் எனது நன்றி உரித்தாகுக. அந்த செம்மொழி மாநாடு சுடுகாடானால் இறந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆன்ம சாந்தி அடையும். ரோம் எரியுது; நீரோ பிடில் வாசிக்கிறான். தமிழன் செத்து முள் வெளியில் நாறுகிறான்; இவனுக்கு மக்களை திசை திருப்பும் செம்மொழி மாநாடு ஒரு கேடா ???

By pannadai pandian
6/5/2010 11:01:00 AM

உண்மையை கக்கிய விஜய ராஜேந்தர் அவர்களுக்கு நன்றி. இவர் ஒரு திமுக அனுதாபியாக இருந்தாலும் நியாயத்தை சொல்வதால் எனது நன்றி உரித்தாகுக. அந்த செம்மொழி மாநாடு சுடுகாடானால் இறந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஆன்ம சாந்தி அடையும். ரோம் எரியுது; நீரோ பிடில் வாசிக்கிறான். தமிழன் செத்து முள் வெளியில் நாறுகிறான்; இவனுக்கு மக்களை திசை திருப்பும் செம்மொழி மாநாடு ஒரு கேடா ???

By pannadai pandian
6/5/2010 10:59:00 AM

இவரைவிட இலங்கை தமிழர்கள் மீது பற்று கலைஞருக்கு அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்த பஜ்ஜி மஜ்ஜி டைரக்டருக்கு அவ்வளவு எட்டாது

By v.vadukanthan
6/5/2010 10:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கணினியில் தமிழ்த் தட்டச்சு


கணினியில் தமிழ்த் தட்டச்சு
வணக்கம்
கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் (மென்பொருட்கள்) மூலமும் நீட்சிகள் மூலமும் கிடைக்கின்றன. நெருப்பு நரி (FireFox) இணைய உலாவியின் தமிழ்த் தட்டச்சு நீட்சி மூலம் மிகவும் எளிதாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.
தமிழில் தட்டச்சு செய்வதற்கு தட்டச்சு பயின்றிருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் உச்சரிப்பு தட்டச்சுமுறை கூடுதலாக இவற்றுள் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது 'அம்மா, அப்பா' என தட்டச்சு செய்ய அதன் உச்சரிப்பை ஆங்கிலத்தில் 'ammaa, appaa' தட்டச்சு செய்வது போதுமானது.

1.இணைய உலாவியில் (நீட்சிகள்)
2.கணினியில் (மென்பொருட்கள்)
3.இணையத்தில் (இணைய பக்கங்களில் இணைய இணைப்புடன்)

1.நெருப்பு நரி (FireFox) இணைய உலாவியில் தமிழ்விசை (tamilkey) நீட்சியை கீழ்கண்ட முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து பதிந்துகொள்வதன் மூலம் தமிழ் தட்டச்சு செய்யலாம்.
தமிழ்விசை இங்கே சொடுக்கவும்

2.கணினியில் தமிழ் தட்டச்சு செய்ய பல மென்பொருட்கள் இருப்பினும் இங்கே நான் அறிந்த சில அருமையான இலவச மென்பொருட்களைப் பார்ப்போம்.

3.இணைய பக்கங்களில் இணைய இணைப்புடன் உள்ள பொழுது கீழ்கண்ட முறையில் தட்டச்சு செய்யலாம்.

அ) கூகுள் மின்னஞ்சல் (G-mail compose) ,
ஆ) ரெடிப் மின்னஞ்சல் (Rediff mail compose),
முதலியனவற்றில் கடிதப்பக்கத்தில் தமிழ் தட்டச்சு செய்யலாம். மேலும் கீழ்காணும் இணையப் பக்கங்களில் தமிழ் தட்டச்சு செய்யும் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி எளிதாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.





எழுத்துரு உதவி

Click Here To Download Font 1

Click Here To Download Font 2

எழுத்துரு உதவிக்கு இதை அழுத்தவும் 1

எழுத்துரு உதவிக்கு இதை அழுத்தவும் 2

முதல் தமிழீழ தற்கொடையாளர் பொன்.சிவக்குமரன் வீரவணக்க நாள் சூன் 5


பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.

தமிழீழ மக்கள் மனங்களில் விடுதலைத் தீப்பொறியை இட்டுச்சென்ற அம்மாவீரனின் நினைவு நாள் இன்று யூன் 5.

யாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர்.மக்கள் மீதான சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை.

தியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டுப்பார்ப்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய அம்மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை வென்றெடுக்கப்பட்டு, அடிமைத் தழைகள் நீங்கிய வாழ்வமைய வேண்டுமென்பதற்காக போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்.

புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வந்திருக்கின்றன. கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. (இன்றைய காலத்தில்கூட பல பாடசாலைகளும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளும் இராணுவ முகாம்களாக இருப்பதைக் கூற முடியும்.)

தமிழ் மாணவர்களின் கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதோடு நிகழ்ந்தது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.

கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (செப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை புரிந்து வந்த யாழ்-நகரமேயர் அல்பிரட் துரையப்பா மீதும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டார் (பெப் 1971). அம்முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. துரையப்பா மீதான தாக்குதல் காரணமாக கொலை முயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டுகள் கொடுமையான துன்றுத்தல்களுடன்கூடிய சிறைவாழ்க்கையின் பின்னர், தனது 23வது வயதில் விடுதலையானார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மிகவும் உறுதியோடு போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

மூன்று ஆண்டுச் சிறை வாழ்க்கையின் பட்டறிவு மூலம் போராட்டம் தொடர்பான பல நடைமுறை யதார்த்தங்களை சிவகுமாரன் உணர்ந்து கொண்டார். போராட்டச் செயற்பாடுகள் தொடர்பான இரகசியங்களை வரவழைப்பதற்காக சிங்களப் படைகளும் சிறிலங்கா காவல்துறையும் போராளிகள் மீது கோரமான சித்திரவதைகளை மேற்கொள்ளும் போது உண்மைகள் வெளிப்பட நேர்ந்தால் போராட்டத்திற்கு உதவுகின்ற மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும், போராட்டத்தின் இலக்கு பாதிக்கப்பட்டு பின்னடைவு ஏற்படும், அத்தோடு போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடும் ஆகியனவே சிறை வாழ்க்கை மூலம் சிவகுமாரன் பட்டறிந்த யதார்த்தம். எனவே, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடும் சூழல் ஏற்படின் சயனைற் உட்கொண்டு உயிரைப் போக்கிக்கொள்வதன் மூலமே போராட்டத்தை முன்னகர்த்த முடியுமென்ற முடிவை எடுத்தார்.

போராட்ட முறைமையென்பது கொள்கைகளை முன்னிறுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியேயன்றி, போராட்ட முறைமையே கொள்கையாக வரித்துக்கொள்ள முடியாதென்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார். எனவே,போராட்ட முறைமைகள் காலத்திற்கும் சூழலுக்குமேற்ப மாற்றமடைய வேண்டுமென்பதில் ஆழமானதும் தெளிவானதுமான கருத்தைக் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார். சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார்.

அத்தோடு தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமாக மட்டும் சிவகுமாரன் போராடவில்லை. தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின்நிற்கவில்லை. சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தார்.

சிறிமா அரசானது, 1974 ஜனவரியில் யாழப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட 4வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பும் கீழ்த்தனமான நோக்கில் பல இடையூறுகளை விளைவித்தது. ஆனாலும் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் உறுதியான செயற்பாட்டால் மாநாடு பெரும் மக்கள் எழுச்சியுடன் நடந்தேறியது. இவ் வெற்றியின் பின்னணியில் சிவகுமாரன் மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்டார் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று.

பின்னர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது சிங்களக் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சிறிலங்கா காவல்துறையின் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை நேரில் கண்ட சிவகுமாரன் கொதித்தெழுந்தார். அப்படுகொலைக்கு உடந்தையாகவிருந்த உதவிக் காவல் அதிகாரி சந்திரசேகராவைப் பழிவாங்குவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

சிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரச்சாவால் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்ட அம்மாவீரனின் நாமம் தமிழீழத்திலும் தமிழர்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் விடியலின் பெயரை உச்சரித்தபடி நின்று நிலைக்கும்.

(Visited 86 times, 75 visits today) }
You can leave a response, or trackback from your own site.

இந்த வசை எய்திடலாமோ...? : தலையங்கம்

கோவையில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பரவலாக ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருப்பதைக் காண முடிகிறது. 14 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த அறிஞர்கள் பலருடைய ஆய்வுக் கட்டுரைகள் அரங்கத்தில் பதிவு செய்யப்பட்டுத் தமிழுக்குச் செழுமையும், வளமையும் சேர்க்க இருக்கின்றன.நடக்க இருப்பது ஒரு தமிழ்த் திருவிழா என்பதை நினைவில் நிறுத்தி, அரசியல் காழ்ப்புணர்ச்சி, மனமாச்சரியங்கள் போன்றவற்றைத் துணிந்து அகற்றி, ஈழக்கவிஞர் முனைவர் சச்சிதானந்தனின் கவிதை வரிகளான ""தேவர்க்கரசுநிலை வேண்டியதில்லை; அவர் தின்னும் சுவையமுது வேண்டியதில்லை; சாவில் தமிழ் படித்துச் சாகவேண்டும்; என்றன் சாம்பல் தமிழ்மணந்து வேக வேண்டும்'' என்பதை உணர்வில் இருத்தித் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தமிழினத்தின் ஒற்றுமை மாநாடாக்கிக் காட்ட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.சமீபத்தில் கோவை மாநகரின், செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிடச் சென்றிருந்த முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோளை ஆளும் கட்சியினர் மனதில் இருத்தக் கடமைப்பட்டவர்கள். "செம்மொழி மாநாட்டைக் கட்சி மாநாடாக்கி விடாதீர்கள்' என்கிற முதல்வரின் வேண்டுகோளை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே, தமிழை நேசிக்கும் மாற்றுக் கட்சியினரும், இந்தத் தமிழ்த் திருவிழாவில் கலந்து கொள்ள முன்வருவர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டியதில்லை. உடன்பிறப்புகள் தங்கள் தலைவரின் கட்டளையை மீறமாட்டார்கள் என்று நம்புவோமாக! எதிர்க்கட்சியினர் மனமாச்சரியங்களை மறந்துவிட்டு மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்போமாக!செம்மொழி மாநாட்டுக் குதூகலங்களுக்கு இடையே மனதில் சற்று வருத்தம். தமிழுக்கு மாநாடு எடுக்கிறோம். உலகெங்கிலும் இருந்து தமிழறிஞர்கள் கோவையில் வந்து கூட இருக்கிறார்கள். தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சரித்திர நிகழ்வு நடைபெற இருக்கும் வேளையில், தாய்த் தமிழகத்தில் தமிழின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை நினைத்தால் வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.ஒருபுறம் தமிழே தெரியாத, தாய்மொழி தெரிய வேண்டும் என்கிற உணர்வே இல்லாத ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது. இன்னொருபுறம், "ல'கர "ழ'கரங்களைக் கூடச் சரியாக உச்சரிக்கத் தெரியாத நிலையில் நாமமது தமிழரென வாழ்ந்திடுவோர். நுகர்வோர் பொருளாதாரமும், பன்னாட்டு நிறுவனங்களின் வருகையும், தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கும் கலாசாரச் சீரழிவும், பண்பாட்டுச் சிதைவும் மிக அதிகமாகப் பாதித்திருப்பது தமிழ் மொழியைத்தான். ஊடகங்களும் தமிழுக்கு எதிரான தாக்குதல்களுக்குத் துணைபோகின்றன என்பதுதான் அதனினும் கொடிய வேதனை.இவையெல்லாம் போகட்டும். அறுபதுகளில் காணப்பட்ட தமிழின எழுச்சி என்ன ஆனது? தமிழ் படிப்பது பெருமை என்று கருதிய தலைமுறையினரேகூடத் தங்களது சந்ததியர் தமிழ் படிக்க வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்கிவிட்டனரே, ஏன்? இன்னார் தமிழ் வித்வான், தமிழ்ப் புலவர் என்று மரியாதையுடன் அழைக்கப்பட்டு வந்த காலம்போய், யாரும் தங்களைத் தமிழாசிரியர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளத் தயார் இல்லையே, ஏன்?தமிழின் இழிநிலையைப் போக்க, 1901-ம் ஆண்டு, மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி மண்டபத்தில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை அறிவித்த கையோடு, சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையையும் நிறுவினார் வள்ளல் பாண்டித்துரைத் தேவர். அதைத் தொடர்ந்து, திருவையாறு அரசர் கல்லூரி, தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி என்று கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில், அந்நியர் ஆட்சிக் காலத்தில் தமிழுக்குக் கல்லூரிகள் கண்ட பெருமை இப்போது பழங்கதையாகி விட்டதே ஏன்?தருமபுரம், திருப்பனந்தாள், மயிலம், பேரூர் போன்ற சைவத் திருமடங்கள், தங்களது பணி சைவத்தை வளர்ப்பதுடன் நின்றுவிடவில்லை என்று தமிழ் வளர்க்கும் குறிக்கோளுடன் தமிழ்க் கல்லூரிகளை நிறுவி நடத்த முற்பட்டன. காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி மற்றும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் குன்றக்குடி ஆதீனத்தால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரி போன்றவை தமிழார்வம்மிக்க மாணவர்களின் மொழிப் பற்றைத் தமிழ் வார்த்து வளர்த்தன. சுமார் பத்துத் தமிழ்க் கல்லூரிகள், தமிழ் மொழி வளர்ச்சியை மட்டுமே மனத்தில் கொண்டு நிறுவப்பட்டு, நடத்தப்பட்ட நிலைமை மாறி இப்போது காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியைத் தவிர ஏனைய கல்லூரிகள் அனைத்துமே கலை அறிவியல் கல்லூரிகளாக மாறிவிட்டனவே, ஏன்?இந்தத் தமிழ்க் கல்லூரிகளில் தமிழ் படிக்க மாணவர்கள் வருவதில்லை என்பதுதான் அடிப்படைக் காரணம். மாணவர் சேர்க்கை இல்லாத நிலையில் கல்லூரிகளை மூடிவிடவா முடியும்? சுயநிதிப் பிரிவில் வணிகவியல், கலை, அறிவியல் கல்லூரிகளாக அவை செயல்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்வழிக் கல்விக்கே யாரும் தயாராக இல்லாத நிலையில், தமிழைப் பாடமாகப் படிக்க மாணவர்கள் வராததில் வியப்பென்ன இருக்கிறது? இப்படிப்பட்ட ஓர் இழிநிலை தமிழுக்கு வரக் காரணம் என்ன? தமிழ் படித்தால் வேலை இல்லை என்கிறபோது மாணவர்கள் எப்படி தமிழ்க் கல்லூரிகளில் சேரத் துணிவர்? தமிழ் படித்தவர்கள் ஆசிரியராகக் கூடப் போக முடியாத நிலைமை அல்லவா காணப்படுகிறது? இடைநிலை ஆசிரியர்கள், தமிழைப் பாடமாக எடுத்து இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றுத் தமிழாசிரியர்களாக உயர்வு பெற்று விடுகிறார்கள். நேரடியாகத் தமிழ் படித்தவர்களுக்கு இங்கும் வாய்ப்பில்லை என்கிற நிலைமை.உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்க இருக்கும் இந்த நேரத்தில், தமிழ் படித்தவர்களுக்கு அரசுப் பணியிலும், தமிழாசிரியர் பணியிலும் முன்னுரிமை என்கிற சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டால் மட்டுமே மீண்டும் தமிழுக்குப் புத்துணர்வும், புத்துணர்ச்சியும் ஏற்படும். தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அடுத்த முன்னுரிமை தரப்பட வேண்டும்.தமிழ் உள்ளளவும், கோவையில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழனின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, சரித்திர நிகழ்வாக நிலைபெற வேண்டுமானால், துணிந்து இப்படியொரு முடிவை எடுத்துத் தமிழைக் காப்பாற்றியாக வேண்டும். இதை முதல்வர் கருணாநிதியால் செய்ய முடியும் என்று சொன்னால் தவறு. அவரால் மட்டுமே செய்ய முடியும் என்பதுதான் உண்மை!
கருத்துக்கள்

தினமணி சொன்னால் உடனே முதல்வர் கேட்பார். அல்லது யானை வரும் பின்னே மணிஓசை வரும் முன்னே என்பது போல் தான் செய்ய இருப்பதைத் தினமணியில் முன்னதாக வரச் செய்வார் முதல்வர் என்பார்கள். இஃது உண்மையெனில், அருமையான ஆசிரியருரையில் தெரிவித்தவாறு தமிழ் படித்தவர்களுக்குப் பணியில் முதலிடம் என இன்றே முதல்வர் அறிவிக்க வேண்டும். மாநாட்டின் பயன் தமிழ் வாழ வகை செய்ததாக இருக்கட்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/5/2010 2:47:00 AM

We all know why this event is happening. Mr. M.K. and his family party DMK betroyed the tamilians. This event is to cover-up. "Sem Mozhi" is also fake. Whatever Mr. M.K. publically said about "do not make it as a DMK party function", I am 100% sure, there were secret orders have been given to his party men, to ignore that public statement. Mr. M.K. is the reason, why the final attack happened AFTER the parlimentary election. He is the one who requested Sri Lanka to hold off the final pre-emptive attack till the election was over. Pure selfish theif!

By suresh
6/5/2010 2:28:00 AM

INDIAN SLAVES IN TAMIL NADU THIS TIME WILL GER AN OPPORTUNITY TO SEE THE TOTAL NUMBER OF HIS WIVES..OTHER THAN DECLARED ONES AT THIS SEMMARI CIRCUS....

By KOOPU
6/5/2010 1:11:00 AM

INDIAN SLAVES IN TAMIL NADU THIS TIME WILL GER AN OPPORTUNITY TO SEE THE TOTAL NUMBER OF HIS WIVES..OTHER THAN DECLARED ONES AT THIS SEMMARI CIRCUS....

By KOOPU
6/5/2010 1:11:00 AM

HE.HE..HE..IN SO CALLED TAMIL NADOO PEOPLE SPEAK TAMINGLISH AND TV AND PUBLICATIONS WRITE IN TAMINGILAM,,,,,BUT THEY ORGANISE SEMMARI TAMIL CONFERENCE WHAT A JOKE.....REALLY IT IS A FESTIVEL FOR WALKING CORPSE....HE COULDNT SAVE 40,000 LIVES OF HIS OWN TAMIL PEOPLE BUT CELEBRATING THIS SEMMARI CONFERENCE..DONT MISS FREE QUARTER..FREE DRESS..FREE BURIYANI...FREE WIVES ALL GURANTEED BY THIS WALKING CORPSE KARUNANIDHI....

By KOOPU
6/5/2010 1:10:00 AM

It is a debatable issue if any government has to charge less than the productive cost. Unfortunately Tamil Nadu government is charging less for electricity and transport and is prepared to accept the revenue loss while the neighbouring states decide the cost per unit and cost per km only on the production cost. This is why the KSRTC buses are far far better and well maintained when compared to TNSTC buses. We have to accept certain realities and should accept hiking of EB charges and bus fares. At the same time the government should also take firm steps to reduce the loss in power transmissions and should be vigilant in preventing electricity theft. It is a known fact that the free electricity for agriculture and huts are being misused and the consumers are using it for other purposes. Strict action should be taken on those who use free electricity which can save crores of rupees for the government.

By jeyachandran s dindigul
6/5/2010 12:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்