சனி, 18 ஜனவரி, 2014

Prolonging debate on 13th Amendment is ploy to deprive genuine solution

Prolonging debate on 13th Amendment is ploy to deprive genuine solution

[TamilNet, Friday, 17 January 2014, 06:31 GMT]
The rhetoric and political play with the 13th Amendment will continue in the island’s post war constitutional discourse for a considerable period of time. Those who have a vested interest in keeping the debate alive will do their utmost to prolong the debate. It is likely that the next few years might witness an utterly useless battle between the Colombo Government and the Tamil National Alliance (TNA) over trying to retain what is left over in the 13th Amendment. But in the midst of all this hysteria, any move towards finding a meaningful and genuine political solution will be lost, writes Jaffna University law academic, Kumaravadivel Guruparan, who is currently on Commonwealth scholarship to do doctoral research at the University College, London.
Guruparan Kumaravadivel
Guruparan Kumaravadivel
Goodin’s conclusion that there is no constitutional solution to be found to the case of ‘radical social diversity’ might just as well be true for the island, Guruparan observed in concluding his paper published in Junior Bar Law Review, 2013, pp 30-42.

The researcher was primarily reflecting on the politics and constitutional praxis of the 13th Amendment.

After listing out the fundamental defects and inadequacies of the 13A, and arguing how the structural deficiencies of the 13A fails to even perform the role of a reference point to a discourse on a political solution, Guruparan raised a question on the irony of India and the TNA demanding for a ‘full implementation of the 13A’ that is already there in the constitution.
Other than the irony of such a demand, it is important not to forget that a full implementation of the 13th Amendment will suffer from the fundamental flaws he had outlined, the academic observed.

Citing from how the Eastern Provincial Council is practically controlled by the SL governor to the Supreme Court’s problematic role as ‘arbitrator’, Guruparan exposed the ‘negative asymmetry’ in the working of the 13th Amendment in the North and East compared to other provinces.

Talking about 13+ has no constitutional meaning, as the SL Supreme Court has already implied that the 13A is the maximum one could go within the confines of the unitary state as envisaged in the current constitution, Guruparan pointed out.

Any changes going beyond 13A have to go through a referendum and chances of positive results are very remote, the researcher said, by citing the Sinhala-Buddhist nationalist discourse on the unitary state.

Today, the TNA is under pressure from the Indian Government to accept a solution based on the 13th Amendment and any rejection of it is interpreted as going against Indian interests, Guruparan said, adding that “The complicated political dynamics is such that the TNA also probably does not want to be seen as rejecting something that President Rajapaksa is reluctant to give.”

As a result the Tamil representatives are engaged in a futile battle with those who call for it to be repealed, to save whatever little is left in the 13th Amendment, the researcher observed.

Those who want to repeal the 13A citing that it devolves land and police powers, when it does not, and India and the TNA misleading the Tamil people that the 13A is a starting point, offering something meaningful, make a “wholly nonsensical debate,” Guruparan said.

“The international actors interested in Sri Lanka also seem to have clung on to the 13th Amendment as a remedy for the current impasse in Sri Lanka. This can only mean that the international actors have not learnt much from the previous failed attempts at liberal peace making,” he further observed in the article.

* * *

Comments coming from Tamil activists for alternative politics in the island:

Guruparan has aptly concluded how the utterly useless debate on the 13A is going to be prolonged for a considerable period of time by those who have a vested interest, so that finding a meaningful and genuine political solution will be lost in the process.

In fact the danger is more serious than losing a political solution.

The useless debate is deliberately prolonged, and Tamils are forced to engage in it, so that the structural genocide of Eezham Tamils as a nation will be completed by that time.

This is the ultimate agenda of the genocide partners of the war, who swap assent for the annihilation of the nation of Eezham Tamils for making geostrategic and ‘development’ inroads into the island.

Prolonging the 13A debate is conceived as a strategy in the structural genocide war, just as the Norway Peace Facilitation was conceived to culminate in the Mu’l’livaaykkal genocide.

If it is clear that the 13A debate is useless and that those who have a vested interest prolong it, then what should be of priority is to identify the ultimate culprits who thrust the debate into the throats of Tamils and prolong it.

Guruparan has not named the USA as he has named India in the article. But the USA was equally ‘dictating’ Tamils to work with the 13A, right from ending the war in genocide.

It is misleading to imply that the ‘international actors’ [the article differentiates them from India] are unaware of what is elucidated in the article, or to say that they have just clung on to the 13A and have not learnt from the previous failed attempts at liberal peace making.

They do it with full awareness and calculations. It may be utterly useless to prolong ‘engagement’ with them on the issue. Tamil politicians, academics and other activists in the island, in Tamil Nadu and in the diaspora may have no option other than openly declaring and waging a struggle of non-cooperation against Washington, London and New Delhi.

Dadas always take pride and satisfaction at the talk of abominations committed by them, for it instills fear for their power and authority. The leading Establishments of today’s so-called international community behave nothing but like petty Dadas. Unless their arms are twisted by the power of people, or unless their interests are threatened, they will not concede anything.

Related Articles:
19.08.13   Diplomacy could work only when mass mobilisation is ground r..
12.06.13   Gajendrakumar exposes New Delhi’s deception behind 13th Amen..
30.05.13   Geneva basing on LLRC unfortunate, 13A never a starting poin..
26.01.09   'Their imagination is stuck at the 13th amendment'
04.11.08   13th Amendment: arousing a zombie


External Links:
TamilNation: Thirteenth Amendment to Sri Lanka Constitution - Devolution or Comic Opera
Academia.edu: The Irrelevancy of the 13th Amendment in Finding a Solution to the National Question: A Critical Note on Sri Lanka’s Post-­‐War Constitutional Discourse.


வெள்ளி, 17 ஜனவரி, 2014

Jaffna becomes hub for Pakistani smugglers

Jaffna under SL military becomes hub for Pakistani drug smugglers

[TamilNet, Thursday, 16 January 2014, 16:22 GMT]
The occupying Sri Lankan military, collaborating with drug smugglers from Afghanistan, Pakistan and Kerala in South India has transformed Vadamaraadchi and Vadamaraadchi East in the Jaffna peninsula into a hub for drug smugglers in recent times, according to reliable sources in Jaffna. Tamil youth, between 17 and 25 are being exploited by narcotic smugglers backed by the occupying SL military. The illegal drugs are also being transported to South.

Last week, the SL police was forced to seize a boat with 40 million rupees worth of drugs at Oo'ra'ni in Vadamaraadchi.

But, the SL police released the drugs and the boat after receiving bribery from the smugglers, the sources further said.

Earlier, the smugglers were allegedly using Mannaar as a hub for most common narcotic drugs that were coming from India. Mannaar has been under the tight control of the SL military for years.

But, now even more dangerous drugs are reaching Jaffna from Pakistan and Afghanistan, the sources further said.

The drugs are also being transported by land to South through SL military check posts situated on the A9 highway.

Colombo targets NPC member Ananthi

Colombo targets NPC member Ananthi for witnessing against Sri Lanka

[TamilNet, Thursday, 16 January 2014, 07:59 GMT]
I am fully prepared to confront the Sri Lankan Ministry of Defence, which has leaked a news threatening to put me through their so-called military rehabilitation,” said Ananthi Sasitharan, the only woman candidate of the Northern Provincial Council (NPC), who also polled largest number of preferential votes next to the chief minister candidate of the NPC. Ms Ananthi Sasistharan was one of the public witnesses at the recent hearings by the Permanent Peoples Tribunal held in Bremen. She also met the US Ambassador-at-Large for War Crimes Issues, who visited Jaffna recently and explained to him that what went on in Vanni in 2009 was a genocidal onslaught and that a programme of structural genocide was being stepped up against Eezham Tamils.



The SL Ministry of Defence (MoD) was considering to arrest Ms Ananthi Sasitharan and put her through a so-called rehabilitation programme, reported Shamindra Fedinando, a ‘journalist’ of The Island paper.

Ananthi wouldn’t have adopted such a hostile stance towards the SL government and its military had she undergone the rehabilitation, the paper said citing an unnamed ‘senior source’ of the SL MoD.

Responding, Ms Ananthi Sasitharan said that Colombo was trying to curb the struggle for missing persons. This struggle will continue despite the threats coming from Colombo and its military Establishment, she said.

46-year-old Ananthi Sasitharan is the wife of Ezhilan, the former Trincomalee Political Head of the LTTE and a mother of three girls. She personally witnessed Sri Lanka military taking away her husband at the end the Vanni War in May 2009.

The SL State is still refusing to reveal the fate of those who were filtered away from the civilians and taken into buses to undisclosed detention camps.

Related Articles:
09.01.14   Stephen Rapp was briefed on structural genocide at Bishop's ..


External Links:
The Island:MOD ponders rehabilitating NPC member Ananthi

வியாழன், 16 ஜனவரி, 2014

சென்னைக் கம்பன் கழகம் - தமிழ்நிதி விருது வழங்கலும் பொழிவும்


திருவள்ளுவர் திருநாளன்று தைவான் கவிஞருக்கு மட்டும் விருது வழங்கப்படும்



திருவள்ளுவர் திருநாளன்று தைவான் கவிஞருக்கு மட்டும் விருது வழங்கப்படும்



திருவள்ளுவர்  திருநாளான  15- ஆம் நாள் புதன்கிழமை,  சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடக்கும் விழாவில் ஒன்பான் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் செயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு, விருது பெறுபவர்கள் முதல்வரின் கையால் விருதுகளைப் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் விருப்பத்துக்கிணங்க பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராசர், பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோரது பெயர்களிலான விருதுகளை வரும் 26ஆம் நாளன்று  தலைமைச் செயலகத்தில் முதல்வர்  செயலலிதா வழங்குவார்.
திருவள்ளுவர்  நாளன்று திருவள்ளுவர் விருதை வழங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். எனவே, புதன்கிழமை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் நடக்கும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் தைவான் கவிஞர் யூசிக்கு மட்டும் திருவள்ளுவர் விருது வழங்கப்படும் என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

tamilnet news 13.01.14 to 15.01.14

புதன், 15 ஜனவரி, 2014

கொஞ்சம் தேநீர் .. கொஞ்சம் அரட்டையில் நான்.... அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கொஞ்சம் தேநீர் .. கொஞ்சம் அரட்டையில் நான்

இன்று தை 2, 2045 / சனவரி 15, 2014, கோடை பண்பலையின் 
கொஞ்சம் தேநீர் அரட்டை நிகழ்ச்சியில்
 10 நிமையங்கள் பங்கேற்கிறேன்.
 வழக்கமாக மாலை 4.00 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி
 இன்று முற்பகல் ஒலிபரப்பாகலாம். 
வழக்கமாகக் கேட்கும் நேயர்கள் நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுகின்றேன்.
கோடை பண்பலை 100.5 அதிர்வெண் ,
 சென்னை 101.4 அதிர்வெண்,  
திருச்சிராப்பள்ளி 102.1,அதிர்வெண்
 சேலம் 103.7 அதிர்வெண்களில்
 ஒலிபரப்பாகும்.
     அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழக அரசின் ஒன்பான் விருதுகள்

பண்ருட்டி இராமச்சந்திரனுக்குப் பேரறிஞர் அண்ணா விருது: முதல்வர் அறிவிப்பு

எதிர்க்கட்சித் துணைத் தலைவர், தேமுதிக அவைத் தலைவர் பதவிகளில் இருந்து அண்மையில் விலகி, தீவிர அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் ஒதுங்கியிருக்கும் பண்ருட்டி இராமச்சந்திரனுக்கு அண்ணா விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் சுலோச்சனா சம்பத், எழுத்தாளர் அசோகமித்ரன் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது வழங்கும் விழா வரும் புதன்கிழமை (சன. 15) சென்னையில் நடைபெறுகிறது.
இது குறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழுக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னமலற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது முதலான பல்வேறு விருதுகளைப் பெற்றிட தகுதியானவர்களை முதல்வர்  செயலலிதா அறிவித்துள்ளார். விருதுகள் பெறுவோர் பற்றிய விவரம்:
திருவள்ளுவர் விருது-கவிஞர் யூசி (தைவான்)
தந்தை பெரியார் விருது-சுலோச்சனா சம்பத்
அண்ணல் அம்பேத்கர் விருது-பேராயர் எம்.பிரகாசு.
பேரறிஞர் அண்ணா விருது-பண்ருட்டி இராமச்சந்திரன்.
பெருந்தலைவர் காமராசர் விருது-கி.அய்யாறு வாண்டையார்.
மகாகவி பாரதியார் விருது-கு.ஞானசம்பந்தன்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது-இராதா செல்லப்பன்.
தமிழ்த்தென்றல் திரு.வி.க.விருது-அசோகமித்ரன்.
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது-வ.செயதேவன்.
விருது வழங்கும் விழா: ஒன்பது விருதுகளையும் வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் வரும் புதன்கிழமை (சன. 15) திருவள்ளுவர் திருநாளான்று வழங்க முதல்வர் செயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
  விருது பெறுவோருக்கு உரூ.1 இலட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியன வழங்கிச் சிறப்பிக்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 30 பேருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   தமிழக அரசின் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைத்து விருதுகளையும் வழங்க உள்ளனர்.

திங்கள், 13 ஜனவரி, 2014

சிந்துவெளிப் பண்பாட்டுத் தொடர் சொற்பொழிவு - 17.01.14


தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து !

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து !

pongal vaazhthu04
உலகின்    வடிவம்   உருண்டை   என்பதை
உருபெரும்  அறிவியலாளர்   கலிலியோ  கூறினார்
கலிலியோ    கூற்றை   கண்கண்ட  நாடுகளுக்கு
கருத்துரையாகப்   பரப்புரை  செய்தார்   ஆனால்
ஈராயிரத்து   ஐநூறுக்குமுன்னே   சீராயிரம்  படைத்த
இருவரிமறை  ஆசான்   திருவள்ளுவப்  பெருமகன்
உருவான  உலகம்   உருண்டை  என்றே
இருவரியிலே   உலகிற்கு   இயம்பினார்   அன்றே !
“  சுழன்றும்ஏர்ப்    பின்னது   உலகம் ;   அதனால்
உழந்தும்    உழவே    தலை “    என்றாரே
படித்தனர்   ஆயினும்    பரப்புரை  செய்தனரா ?
பிறநாட்டார்  சொல்லையே போற்றிப் புகழ்ந்தனரே !
சுழலும்   உலகம்கூட  உழவரின்  பின்செல்லும்
நிழலாக  இருக்கிறதென  நிறைவாகக்  சொல்லுமந்த
உழவரின்  திருநாளே  உருபெரும்  பொங்கலதுவும்
பழமைப்    புத்தாண்டு  புதுநாள்   என்போம் !
இழிபிறப்பின்   பெயரால்  இருக்கின்ற  அறுபதாண்டை
வழிமொழி   அறியா  வன்நெஞ்சர்  தமிழராண்டென
புகுத்திட்டார் ;  தமிழரினம்   பகுத்துப்  பார்த்து
வகுத்திடுவோம்  புதுநெறியை  தொகுத்து  மகிழ்வோம் !
பொங்கு   கின்றபுதுப்    பாலின்    பூநுரையில்
பொலி கின்ற பொலந்தூய்மை அகத்தில்கொண்டு
சங்கத்  தமிழ்மரபை  சாற்றிமறைந்த  சான்றோர்களை
பொங்கல்   புத்தாண்டில்   போற்றி   மகிழ்வோம் !
வாழ்த்துகள் !
   இளையவன்–செயா ,  மதுரை    

எங்கும் இன்பம் இனிதே பொலிகவே!

எங்கும் இன்பம் இனிதே பொலிகவே!

pongal vaazhthu01
குறள்நெறி     ஓங்கி         குடியர              சுயர்ந்து
பசியும்           பிணியும்        பகையும்   நீங்கி
வசியும்      வளனும்             சுரந்து            வாழியர்
வையகம்      வாழ்க;        வான்தமிழ்     வெல்க
உழைப்பே   உயிரென      உலகுக்    குணர்த்தும்
பொங்கற்   புதுநாள்        பொலிவுடன்     சிறக்க
எங்கும்           இன்பம்      இனிதே      பொலிகவே.
-  செம்மொழிச்சுடர் பேராசிரியர்     முனைவர் சி.இலக்குவனார்
       (குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)

என்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்

என்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்

pongal vaazhthu02
செங்கதிர் எழுந்ததடி
எங்கும் ஒளி ஆனதடி
பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி — அதோ
பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி
தெங்கில்இளம் பாளையைப் போல்
செந்நெல்அறுத் தார் உழவர்
அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி — அவர்
சங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி.
கட்டடித்தே நெல்லளந்தே
கட்டை வண்டி ஏற்றுகின்றார்
தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி — அவர்
தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி.
கொட்டு முழக் கோடு நெல்லைக்
குற்றுகின்ற மாத ரெல்லாம்
பட்டுடை இழுத்துக் கட்டி
என்னருந் தோழி — பாடும்
பாட்டெல்லாம் வெல்லமடி
என்னருந்தோழி.
முத்தமிழ் முழக்கமடி
எங்கணும் இசைக் கருவி
முத்தரிசி பாலில் இட்டார்
என்னருந் தோழி — வெல்லக்
கட்டியுடன் நெய்யுமிட்டார்
என்னருந் தோழி.
தித்திக்கும்தே னும்பலாவும்
செவ்வாழையும் மாம்பழமும்
ஒத்துக் கலந்துண்டா ரடி
என்னருந் தோழி — அவர்
ஒக்கலும் மக்களு மாக
என்னருந் தோழி.
எங்கணும் மகிழ்ச்சியடி
எவ்விடத்தும் ஆடல் பாடல்
பொங்கலோ பொங்கல் என்றார்
என்னருந் தோழி.
பொங்கிற்றடி எங்குமின்பம்
என்னருந் தோழி.
திங்களிது தையடியே
செந்தமிழ ரின்திருநாள்
இங்கிது போல் என்றைக்குமே
என்னருந் தோழி
இன்பம் நிலைகொள்ள வேண்டும்
என்னருந் தோழி.
. . .                                 . . .                               . . .
வெல்க தமிழர்! மிகஓங்க செந்தமிழ்தான்!
வெல்க தமிழர் விடுதலை! — பல்க
தமிழர் அறமே! தனித்துயர்க யாண்டும்
தமிழர்நல் வாழ்வு தழைத்து.
- பாவேந்தர் பாரதிதாசன்
 bharathidasan01

அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!

அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!

  pongal02
தமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!
இனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600  இல் பெற்றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே வரும் பொங்கற் புது நாள் போன்றன உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  எனவே உலகத் தமிழர்கள் உவக்கும் வண்ணம் தமிழ் ஈழ விடுதலை விரைவில் அமைய இந்நன்னாளில் –
திருவள்ளுவரின் 2045 ஆம் ஆண்டுப் பெருமங்கலப் பொன்னாளில் –
  இயன்றன ஆற்ற உறுதி கொள்வோம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஆசிரியர்
மார்கழி 28, தி.ஆ்.2044feat-cat-default
சனவரி 12, கி.ஆ.2014

அகரமுதல் இணைய இதழ் 08 சில தலைப்புகள்




கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு வங்கிக்கணக்கேடும் ஆவணமாகும்.

.
தென்மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலகம், கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான ஆவணங்களுள் ஒன்றாகப் பொதுத்துறை வங்கிகளின் கணக்கேடு-வங்கிக்கணக்கு விவரங்களை ஏற்று அறிவித்துள்ளது.இதனை அறிவித்துள்ள சென்னை மண்டிலக் கடவுச்சீட்டு அலுவலர் செந்தில் பாண்டியன் பின்வரும் வங்கிகள் அவ்வாறு ஏற்பதற்குரியன என அறிவித்துள்ளார்:   அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி,பரோடா வங்கி,இந்தியா வங்கி, மகாராட்டிரா வங்கி, கனரா வங்கி, இந்தியா மைய வங்கி, கூட்டாண்மை வங்கி(கார்ப்பரேசன் ...

தானியங்கிப் பொறியில் பணம் எடுக்க எண்ணிக்கைக் கட்டுப்பாடு வருகிறதாம்!

..
     வங்கிக்குச் செல்லாமல் எந்நேரமும் பணம் எடுக்கும் வாய்ப்பினை எல்லா நேரத் தானியங்கி மையங்கள் அளித்து வருகின்றன. தான் கணக்கு வைத்துள்ள வங்கிகியின் தானியங்கிப் பொறியில் மட்டுமல்லாமல் பிற வங்கிகளின் தானிப்பொறிகளிலும் பணம் எடுக்கும் வாய்ப்பைக் குறைத்துப் பிற தானிப் பொறிகளில் மாதத்திற்கு 5 தடவைக்குமேல் எடுத்தால்  கட்டணம் என அறிமுகப்படுத்தினர். இப்பொழுது் கணக்கு வங்கி, ...

பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு மறைந்தார்!

.
     தன்மானத்தை உணர்த்திய தந்தை பெரியாரின் களப்பணிகளில் தளபதிகளாகச் சிலர் விளங்கியுள்ளனர். அவர்களுள் முதன்மையானவர்களுள் ஒருவர் திருவாரூர் தங்கராசு. முத்தமிழ் வாயிலாகக் குறிப்பாக மேடைப்பொழிவிலும் நூலுரையிலும் திரைஉரையாடலிலும்  மூடநம்பிக்கைக்கு எதிராகவும் தன்மானத்திற்கும் தன்மதிப்பிற்கும் சார்பாகவும் பெரியாரின் கருத்துகள் குண்டுகளாக வீசப்பட்டன! பெரியாரியத்தின் கேடயங்களாக விளங்கின! ஒழுக்கக்கேடுகளுக்கு எதிராகவும் மறுமணத்திற்குச் சார்பாகவும் அவர் எழுதிய இரத்தக்கண்ணீர்’  ...