சனி, 24 ஜூலை, 2010


மிழனுக்கொரு நீதி!


ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பூட்டா சிங் இருந்தபோது,​​ நாடாளுமன்றத்தின் ​ மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் தலைவராக இருந்த ஆலடி அருணா,​​ தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்காதது பற்றி குறிப்பிடுகையில் இந்தியா பல மொழிகளையும்,​​ பல கலாசாரங்களையும்,​​ பல மதங்களையும்,​​ பல தேசிய இனங்களையும் கொண்ட ஒரு நாடு என்று அவருக்கே உரிய திராவிட பாணியில் அழுத்தமாகக் கூறினார்.​ ​​ பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு என்று அவர் கூறியதும் அவையில் இருந்த பூட்டா சிங் ஏவுகணைபோல் எழும்பி இது மிகுந்த வெட்கத்துக்குரியது என்றார்.​ வெட்கப்படுவது உங்கள் உரிமை என்று கடைஉதட்டுப் புன்னகையோடு கூறிவிட்டு ஆலடி அருணா தன் பேச்சைத் தொடர்ந்தார்.​ இது நடந்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன.​ தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் இன்றும் தொடர்கிறது.​ சிந்துபாத் கதைபோல் நாடாளுமன்றத்தில் விவாதங்களும் தொடர்கின்றன.​ ​ ​​ சென்ற ஜூலை 7-ம் தேதி கடல் மாதாவின் மடியில் மரணத்தைத் தழுவிய வேதாரண்யத்தைச் சார்ந்த மீனவர் செல்லப்பனோடு,​​ இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 100-க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.​ நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளும் வலைகளும் நாசம் செய்யப்பட்டிருக்கின்றன.​ பலநூறு மீனவர்கள் உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.​ ​​ மானத்தோடு வாழ்வதற்கு பஞ்சபூதங்களோடு அன்றாடம் போராடும் மீனவர்களைப்போல் திக்கற்ற ஒரு வர்க்கம் வேறில்லை என்றே கூறலாம்.​ விவசாயக் கூலிகளுக்கு இருக்கிற பேரம் பேசுகிற சக்திகூட இல்லாமல்,​​ வறுமை அரக்கனின் வாய்க்குள் நொறுங்கிப்போகின்றவர்களாகத்தான் மீனவர்கள் இருக்கிறார்கள்.​ தமிழன் என்பதால்தான் இவர்களின் துயரம் தொடர்கதையாக இருக்கிறதோ என்ற எண்ணம் நாளுக்குநாள் மேலோங்குவதைக் கண்டுகொள்ளாமல் மத்திய அரசும் மெüனம் காக்கிறது.​ ​​ பனிப்பிரதேசத்தையும் பாறைப் பகுதிகளையும் பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் காக்க போர் பல புரிந்து இன்றளவும் போராடி வருகிற இந்தியா,​​ தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான கடலுக்குள் கருவூலம் போன்ற கச்சத்தீவை இலங்கைக்கு ஏன் தாரை வார்த்தது என்பதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை.​ ​ ​​ வங்கதேசம் தம் நாட்டின் இருபகுதிகளையும் இணைக்க இந்தியாவிடம் நடைபாதை கேட்டபோது மேற்கு வங்கத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.​ ஒருவழியாக 1974-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் கூச்-பிகார் பகுதியில் தீன்பிகா என்ற 178 மீட்டர் நீளமும் 85 மீட்டர் அகலமும் உள்ள நடைபாதையைக் கொடுப்பதற்கு ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.​ அந்த ஒப்பந்தத்தின்கீழ் தீன்பிகாவின் இறையாண்மை இந்தியாவிடமும்,​​ அதைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் குத்தகை உரிமை மட்டும் வங்கதேசத்திடமும் இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.​ எக்காரணம் கொண்டும் அத்தீவை வங்கதேச ராணுவத்தளமாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் முடிவானது.​ இன்றும் அதேநிலைதான் தொடர்கிறது.​ ​​ மேற்கு வங்கத்துக்குச் சொந்தமான தீன்பிகா என்னும் சாலை போன்ற நடைபாதையை வங்கதேசத்துக்குக் குத்தகைக்கு விடும்போது எடுத்துக்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கையும் அக்கறையும் ஏன் கச்சத்தீவைத் தாரை வார்க்கும்போது எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று தமிழன் கேட்டால்,​​ நீ இந்தியனா என்ற எதிர்க்கேள்வியே ஈட்டிபோல் பாய்கிறது.​ தமிழர்கள் பிரச்னை என்றால் தேசிய நீரோட்டம் வடவேங்கடத்தோடு நின்றுபோகும் மர்மம்தான் என்ன?​ ​ ​​ கச்சத்தீவு ஒப்பந்தத்தை மதிக்காமல் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைகளை நிராகரித்து இலங்கைக் கடற்படை அவர்களைத் தொடர்ந்து தாக்கிவரும்போது,​​ அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு கச்சத்தீவை மீட்டு எடுத்துக்கொள்கிற வல்லமை இந்தியாவுக்கு இல்லையா?​ அதே வங்கக் கடலில் ரோந்து செல்கிற இந்தியக் கடற்படையும் கடலோரக் ​ காவல் படையும் தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கைக் கடற்படைமீது ஒருமுறையேனும் திருப்பிச் சுட்டிருந்தால்,​​ "தாய் மண்ணே வணக்கம்' என்று தமிழன் உணர்ச்சிப்பிழம்பாகி இருப்பானே!​ இந்திய ராணுவத்தின் பீரங்கி தமிழனுக்காக ஒருமுறையாவது ஒலிக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சால் இதயம் கனத்துப்போகிறது.​ கடற்கரையில் காத்துக் கிடக்கிற பெண்டுபிள்ளைகளின் பசியைத் தணிக்க வாய்க்கரிசி போட்டுக்கொண்டு கடலுக்குச் செல்கிற மீனவனை நடுக்கடலில் சிங்களவன் நிர்வாணப்படுத்துகிறபோது,​​ துச்சாதனனைப் போன்று இந்திய தேசத்தையல்லவா அவன் துகிலுரிகிறான்.​ இந்தச் செயலைக் கேட்ட மாத்திரத்தில் தில்லி ஆதிக்கபுரியினருக்கு ரத்தம் கொதிக்க வேண்டுமல்லவா? ரத்தம் சூடேறியதாகக்கூட இதுவரை தகவல் இல்லாதது தேசிய உணர்வை நீர்த்துப்போகச் செய்வது இயற்கைதானே.​ ​​ 1988-ம் ஆண்டு எங்கோ இருக்கிற மாலத்தீவு என்னும் நாட்டைக் கூலிப்படையினர் கைப்பற்றிக் கொண்டபோது,​​ இந்திய அரசின் இரும்புக் கரங்கள் இந்துமாக் கடல் வரை நீண்டு ஜனாதிபதி அப்துல் கயூமை மீண்டும் அரியணையில் அமர்த்தியது நினைவில் சுழலத்தானே செய்கிறது.​ அன்னிய நாட்டவனுக்குக் காட்டப்படுகிற அந்தப் பரிவு,​​ "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே' என்று குதூகலித்த மகாகவி பாரதி வழிநின்று மீன்பிடி படகிலேகூட மூவண்ணத்தைத் தீட்டிக்கொள்கிற திக்கற்ற மீனவனுக்குக் காட்டப்படாதது ஏன்?​ ​​ ஆசியக் கண்டத்தில் பிலிப்பின்ஸ் நாட்டுக்கு அருகில் இருக்கிற பால்மஸ் தீவு தமக்குச் சொந்தமென்று,​​ ஐரோப்பா கண்டத்தின் வடக்கு அட்லாண்டிக் கடல்பகுதியில் ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிற நெதர்லாந்து உரிமை கொண்டாடியது.சர்வதேச போலீஸ்காரன் என்று தம்பட்டமடித்துக்கொள்ளும் அமெரிக்காவின் பிடியில் இருந்த அந்த 3 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தீவை சர்வதேச நீதிமன்றத்தில் நெதர்லாந்து வழக்காடித் திரும்பப் பெற்றது.​ ஆனால்,​​ ராமேசுவரத்திலிருந்து 18 கி.மீ.​ தொலைவில் சர்வதேச நடைமுறைகளின்படி இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் உள்ள கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டு இன்று தமிழக மீனவர்கள் சூறாவளியில் சிக்கிய பாய்மரக் கப்பலாய் சீரழிந்து கிடக்கிறார்கள்.​ ​ சென்னைக்கு வடக்கே பழவேற்காட்டில் தொடங்கி கன்னியாகுமரி வரை சுமார் 1,062 கிலோ மீட்டர் நீளமான கிழக்குக் கடற்கரையோரத்தில் வாழும் மீனவ சமுதாயத்தினர்,​​ சுனாமி வந்து சுருட்டிப்போட்டாலும் கடல்மாதாவே கதி என்று கடலை அண்டியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.மனித நாகரிகம் தொடங்கிய நாளிலிருந்து மீனவர்களின் ஜீவாதாரமாக இருந்துவரும் கடல்,​​ மத்திய அரசின் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தின்கீழ் மீனவமக்களிடமிருந்து பறிக்கப்பட்டு மெல்ல மெல்ல தனியார் வசமாகிவிடும் சூழல் நிலவுகிறது.​ நடுக்கடலுக்கும் செல்ல முடிவதில்லை,​​ இனி கடற்கரையை ஒட்டியும் மீன்பிடிக்க இயலாது.​ தமிழனுக்கு இது போதாத காலம் போலும்.​ தமிழ்நிலத்தின் உயிர்நாடியான காவிரியில் காலங்காலமாய்ப் பாய்ந்தோடிய தண்ணீரைக் கன்னடர்கள் மறுக்கிறார்கள்,​​ உபரிநீர் அரபிக்கடலில் கலந்தாலும் பரவாயில்லை;​ தமிழகத்துக்குத் தர முடியாது என்று கேரளத்தவர்கள் முரண்டுபிடிக்கிறார்கள்.​ சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்க ஆந்திரத்திடம் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது.​ கடலை நம்பியே காலந்தள்ளிவந்த தமிழக மீனவர்கள் நிர்கதியாக நிற்கிறார்கள்.​ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரி கடந்த கால் நூற்றாண்டாக தமிழக அரசு மத்திய அரசுக்கு மாறிமாறி அனுப்பிய கடிதக் குவியல்கள் விரைவில் கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தாலும் வியப்பில்லை.​ இந்தி நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு அமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்கு உள்படுத்தப்பட்ட சம்பவம் இந்திய ஊடகங்களில் ஒருவாரம் கொழுந்துவிட்டெரிந்தது.​ அந்த நிகழ்வு தில்லி ஆட்சி பீடத்தையே உலுக்கியது.​ விளக்கங்கள்,​​ மறுப்புகள்,​​ பேட்டிகள் என்று அதிகார மையங்கள் ஆடிப்போயின.​ ஆனால்,​​ தமிழக மீனவர்களின் உயிர் ஒன்று,​​ இரண்டு...​ நூறு...​ என்ற கூட்டல் கணக்கோடு முடிந்துபோகிறது.​ ​​ இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்போம் என்ற முழக்கம் வெறும் நிலப்பரப்பைக் காப்பதென்ற தவறான புரிதலில் ஆட்சியாளர்கள் இருப்பது மாபெரும் கருத்துப்பிழை.​ மக்களின் உணர்வை மதித்துக் கொள்கை முடிவெடுக்கிற தலைவர்களைக் கொண்ட தேசம்தான் காலமுகடுகளைக் கடந்து கற்பக விருட்சமாய் வியாபித்து நிற்கும்.​ ​
கருத்துக்கள்

சரியான தலையங்கம். ஆனால், வெறும் நிலப்பரப்பைக் காப்போம் என்ற நிலையில் இரு்ப்பதாகக் குறிப்பது முரண். கச்சத்தீவு நிலப்பரப்பு இல்லையா? சீனாவின் ஆளுகைக்குள் பல்லாயிரம் கல் தொலைவு நிலப்பரப்பைப் பறி கொடுக்கவில்லையா? நாடு போனால் என்ன? மக்கள் மடிந்தால் என்ன? இந்தி வாழ்ந்தால் போதும். ஆரியம் தழைத்தால் போதும் என்பதுதான் மத்திய அரசின் குறிக்கோள். இதனை மாற்றாதவரை நாடு உருப்பட வழியில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvnar Thiruvalluvan
7/24/2010 3:29:00 AM 
என் பின்னூட்டக் கருத்தில் சரியான தலையங்கம் என்பதைச் சரியான (தலையங்கப் பக்கக்)கட்டுரை எனத் திருத்தி வாசித்துக்கொள்ள வேண்டுகிறேன். அன்பன்,இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvnar Thiruvalluvan
7/24/2010 3:32:00 

தாய் மொழிப்பகைவன் . ஒன்றும் புரியாமல் வாழ்த்துகிறார்கள். பெரிய வடிவமைப்பு என்பதுபோல் பெருமை பேசுகிறார்.. 
கண்டனத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++

ரூபாய்க்கு குறியீடு உருவாக்கிய தமிழருக்கு விஜயகாந்த் வாழ்த்து


சென்னை, ஜூலை 23: இந்திய ரூபாய்க்கு குறியீட்டை உருவாக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த உதயகுமாருக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டிலுள்ள ரிஷிவந்தியத்தைச் சேர்ந்தவரும், மும்பை ஐ.ஐ.டி. மாணவருமான உதயகுமார் உருவாக்கிய இந்திய ரூபாய்க்கான குறியீட்டை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் அவர்.
கருத்துக்கள்

தமிழர் என்பதற்காக ஏற்றுக் கொள்ளவில்லை. மத்தி யஅரசின் மொழிக் கொள்கைக்கேற்ப தேவநாகரி எழுத்தில் இருந்தமையால் ஏற்றுக் கொண்டனர். போட்டிக்கு வந்த 3000 குறியீட்டையும் வெளியிட்டு மக்கள் முடிவிற்கு விடவேண்டும். முன் கூட்டித் திட்டமிட்டு இக் குறியீட்டை உருவாக்கிப் பரிசளிப்பதுபோல் நாடகம் நடந்திருக்கலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvnar Thiruvalluvan
7/24/2010 3:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
லையங்கம்: ஐ.ஜே.எஸ்.​ அவசியம் தேவை!

மாவட்ட ஆட்சியர் பதவியில் இருப்பவர் இந்திய ஆட்சிப் பணி ​(ஐ.ஏ.எஸ்.)​ அதிகாரியாகவும்,​​ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐ.பி.எஸ்.​ அதிகாரியாகவும்,​​ மாவட்ட வன அலுவலர் ஐ.எப்.எஸ்.​ அதிகாரியாகவும் இருக்கும்போது,​​ நீதிபதிகள் மட்டுமே அத்தகைய வரையறைக்குள் வருவதேயில்லை.​ இந்திய நீதித்துறைப் பணிக்கென ​(ஐ.ஜே.எஸ்.)​ தனியாகத் தேர்வு நடத்தி,​​ மாவட்ட நீதிபதிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிற மத்திய அரசின் திட்டம் இன்னமும் கிடப்பிலேயே போடப்பட்டிருக்கிறது.13-வது நிதிக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான கூட்டம் ​ வடஇந்திய மண்டலத்தில் 6 மாநில அதிகாரிகளுடன் மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையில் புதுதில்லியில் சென்ற வாரம் நடைபெற்றது.​ ​ இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,​​ "நீதித்துறைப் பணிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்தும் முடிவுக்கு மாநில அரசுகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை' என்று கூறினார்.​ ​நாடாளுமன்ற நிலைக்குழு இத்தகைய அகில இந்திய நுழைவுத் தேர்வை நீதித்துறையும் நடத்தி,​​ மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்கிற பரிந்துரையை 2006-ம் ஆண்டு மே மாதம் அவையில் வைத்தது.​ சட்ட அமைச்சகம் இந்த நடைமுறையை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியது.​ ஆனால் இதுவரை செய்யப்படாமலேயே இருக்கிறது.மாநில அரசுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பதே இதற்குக் காரணம்,​​ அதைத்தான் அமைச்சரும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று வேறுமாதிரியாகக் கூறியுள்ளார்.​ மாவட்ட நீதிபதி நியமனங்களை தன்வசமே வைத்திருக்க மாநில ஆளும்கட்சிகள் விரும்புகின்றன.எந்தக் கட்சி என்றபோதிலும்,​​ ஒவ்வொரு கட்சிக்கும் வழக்குரைஞர் அணி என்று ஒன்று இருக்கிறது.​ ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடனே,​​ மாவட்ட அளவிலும்,​​ மாநில அளவிலும் அரசு வழக்குரைஞர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் அனைவருமே ஆளும்கட்சியின் வழக்குரைஞர் அணியில் இடம்பெற்றிருப்பார்கள் என்பதைச் ​ சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலைமை இல்லை.​ இதேபோன்று மாவட்ட நீதிபதி பதவிகளிலும் தங்கள் கட்சி சார்புள்ள நபர்களே இருக்க வேண்டும் என்று ஆட்சிக்கு வரும் கட்சிகள் விரும்புகின்றன.​ இதேபோல ஐ.ஏ.எஸ்.,​​ ஐ.பி.எஸ்.​ அதிகாரிகளும் தங்கள் ஆள்களாக இருக்க வேண்டும் என்கிற விருப்பமும் ஆளும் கட்சிகளிடம் இருக்கிறது.​ குரூப்-1 தேர்வு மூலம் பதவிக்கு வந்த அதிகாரிகளை ஐ.ஏ.எஸ்.,​​ ​ ஐ.பி.எஸ்.-ஆக பதவி உயர்வு அளிக்க அரசு பரிந்துரைக்கும் பெயர்களே அதற்கு சாட்சிகளாகும்.இவ்வாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து,​​ ஐ.ஏ.எஸ்.,​​ ஐ.பி.எஸ்.​ இடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பதவி உயர்வு அளிப்பதைக் காட்டிலும்,​​ நீதித்துறையில் மட்டுமாகிலும் பணிநியமனம் செய்யும் அதிகாரத்தை தங்கள் வசமே வைத்திருக்க மாநில அரசுகள் விரும்புவது வெளிப்படை.​ ​மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தும் தமிழகஅரசின் அறிவிப்பாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தடை விதித்துள்ளதும்,​​ இந்த வழக்கின் காரணங்களும் மறுசிந்தனைக்கு உரியவை.மாவட்ட நீதிபதிகள் பணிக்கான தகுதிகளில் ஒன்றாக,​​ விண்ணப்பதாரர் வழக்குரைஞராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார் என்கிற அனுபவத்துக்கு முன்னுரிமை அளிப்பதோடு,​​ நேர்காணலில் 12.5 விழுக்காடு மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரையறை செய்திருக்கிறது.​ தமிழக அரசின் அறிவிப்பாணையில்,​​ அனுபவம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.​ நேர்காணலுக்கு 25 விழுக்காடு மதிப்பெண் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு,​​ தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.​ ​இத்தகைய விதிமுறை மீறல்கள் யதேச்சையாக நடந்தவை என்று கருதிவிட முடியாது.​ நிச்சயமாக,​​ இவை தெரிந்தே மீறப்படும் விதிமுறைகள்தான்.​ இவற்றைப் பார்க்கும்போது,​​ இந்தியா முழுவதும் அகில இந்திய போட்டித் தேர்வுகள் மூலமே மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்கிற கருத்தினைப் புரிந்துகொள்ள முடிகிறது.​ இதனால்,​​ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் நீதிபதியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைப்பதோடு,​​ தமிழ்நாட்டிலும் பிற மாநிலத்தவர் நீதிபதிகளாக வர முடியும்.​ ​வேறு மாநிலத்துக்காரர்களான ஐ.ஏ.எஸ்.,​​ ஐ.பி.எஸ்.​ அதிகாரிகளும்கூட ஆட்சியாளர்களுடன் சேர்ந்துகொண்டு ஊழல் செய்யத்தானே செய்கிறார்கள் என்று சொல்லலாம்.​ அதற்கான வாய்ப்புகளே இல்லை என்று சொல்லிவிட முடியாது,​​ ஆனால்,​​ குறைவாக இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.​ மேலும்,​​ போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுகிறார்கள்;​ நிச்சயமாகத் தகுதி இல்லாமல் வெற்றிபெற முடியாது என்று நம்பலாம்.காவல்துறையும் நீதித்துறையும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டாலும்,​​ இதனால் எள்ளளவும் பாதிப்பு இல்லாமல்,​​ காப்பீடு வழக்குகள்,​​ விபத்து வழக்குகளில் "காவல் நிலையம்-வழக்குரைஞர்-​ நீதித்துறை' கூட்டணி ஒன்று தங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது,​​ மாவட்ட நீதிபதிகள் அனைவரும்,​​ மத்திய தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுபவராகவே இருக்க வேண்டும் என்பதன் அவசியம் மேலும் உறுதிப்படுகிறது.​ ஐ.ஜே.எஸ்.​ அவசியம் தேவை!
கருத்துக்கள்

அனைத்து இந்தியா என்று வந்தாலே தாய்மொழிகள் புறக்கணிக்கப்படும் என்பதை உணர வேண்டும். மண்ணின் மைந்தர்களும் புறக்கணிக்கப்படுவார்கள். மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குப் பணி வழங்கியபின் மாநில மொழிகளில் தேர்வு நடத்தி அ.இ. நிலை வழங்கலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvnar Thiruvalluvan
7/24/2010 3:11:00 AM
1986 லேயே இது போல் உயர்கல்விக்கும் ஒரு தேசிய தகுதி தேர்வு மாநில தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதோடு அகில இந்திய கல்வி பணி உருவாக்கவும் தேசிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டது. ஆனால், அந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலையை அளிக்காமல் அந்த தேர்வில் வெற்றி பெற்று தகுதியை நிர்ணயிக்க முடியாத எம்பில் பிஎச்டி பட்டம் பெற்றவர்களை அவர்கள் தி றமையை சோதிக்காமல் பட்டத்தை மட்டும் பார்த்து நியமனம் செய்து தகுதி பெற்றவர்களை தெருவில் விட்டான் எட்டப்பன். இந்த தகுதி கள் ஏட்டளவில் மட்டுமே செயல்படுத்த பட்டது நியமனங்கள் அணைததும் தகுதி அற்றவர்களுக்கே அதாவது தகுதி பெற்றவர்களை விட தகுதி பெற முடியாதவர்களே புறவழியாக பேராசிரியர் ஆன பென்முடி எட்டப்பன் கூட்டணியின் கண்டு பிடிப்பு. ஆகவே, நீதிபதியாக விருப்புபவர்கள் சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை மாறாக அவர்களுக்கே அணைத்து பல்ன்களும் கிடைக்கும் சட்டத்தை மதிப்பர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் இந்த நாட்டில். அதை இந்த ஊழல் மன்னர்கள் தான் சட்டப்படி சரியானது என்று உத்தரவு போடுகின்றனர்.
By Unmai
7/23/2010 10:11:00 PM
தமிழ் மணக்கும் வட்டார வளர்ச்சி அலுவலகம்


தமிழ் மணக்கும் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக முன்புற தோற்றம்.
கும்மிடிப்பூண்டி, ஜூலை 23: கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ் மொழி மீதான பற்றை வளர்க்கும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு முன்பே கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் தினம் ஒரு திருக்குறளும், வழக்கு மொழியில் நாம் பேசும் ஆங்கில சொல்லுக்கு உரிய தமிழ்ச் சொல்லும் தினமும் எழுதப்பட்டு வந்தது. இது அந்த அலுவலகத்துக்கு வரும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் கோவையில் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்ற சமயத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மேல் தமிழ் வாழ்க என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவு வாயில் சுவரில் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலச்சினையான திருவள்ளுவர் சிலை வரையப்பட்டு தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் கருப்பொருளான "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற திருக்குறள் எழுதப்பட்டது.மேலும் தமிழைச் செம்மொழி என்று முதல்முதலில் அறிவித்த பரிதிமாற் கலைஞர் என்றழைக்கப்படும் சூரிய நாராயண சாஸ்திரியின் படமும் வட்டார வளர்ச்சி அலுவலக முன்வாயில் சுவரில் வரையப்பட்டுள்ளது.தற்போது சில நாள்களாக கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக தகவல் பலகையில் பேச்சு வழக்கில் நாம் பேசும் வடமொழி சொல்லுக்கு உரிய தமிழ்ச் சொற்கள் எழுதப்பட்டு வருகின்றன.இத்தகைய செயல்பாடுகள் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வரும் தமிழ் ஆர்வலர்களையும், பொதுமக்களையும் பெரிதும் மகிழ்ச்சி கொள்ளச் செய்கிறது. இது குறித்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வே.ஏழுமலையை கேட்ட போது, "நம் தாய்மொழியான தமிழை உலகச் செம்மொழியாக உயர்த்திக் காட்டியுள்ள தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை நிலைநாட்டும் வகையில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது' என்றார்."கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் உள்பட எந்த  கூட்டம் நடைபெற்றாலும் திருக்குறள் விளக்கவுரையோடு தான் ஆரம்பிக்கப்படும்.   அதே போல வட்டார வளர்ச்சி அலுவலத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கோப்புகளிலும், வருகை மற்றும் சம்பளப் பதிவேட்டில் தமிழில்தான் கையொப்பமிட உத்தரவிடப்பட்டுள்ளது' எனவும் தெரிவித்தார்.
கருத்துக்கள்

பாராட்டுகள். அலுவலகக் கோப்புகளிலும் தமிழிலேயே எழுதுக. மக்கள் பயன்படுத்தும் அனைத்துப் படிவங்களையும் தமிழில் தருக. கணிணியிலும் தமிழே பயன்படுத்துக. ஒப்பந்தங்கள், பணப்பட்டிகள்,கையொப்பங்கள் என அனைத்திலும் தமிழே இருக்கட்டும். நீங்கள் மாறினாலும் அலுவலகம் தமிழ்ப் பயன்பாட்டை மாற்றாமல் இருக்கட்டும். கட்டுப்பாட்டிலுள்ள ஊராட்சி அலுவலகங்களிலும் தமிழைப் பயன்படுத்தச் செய்க. 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvnar Thiruvalluvan
7/24/2010 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

வெள்ளி, 23 ஜூலை, 2010

இன்று தாமிரபரணி சம்பவ நினைவு நாள்


திருநெல்வேலி, ஜூலை 22: மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவத்தின் 11-வது ஆண்டு நினைவு தினமானவெள்ளிக்கிழமை (ஜூலை 23) அரசியல் கட்சியினர் ஆற்றில் மலரஞ்சலி செலுத்துகின்றனர். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆட்சியர் அலுவலகம் அருகே வரும்போது நிகழ்ந்த வன்முறையைத் தொடர்ந்து காவல் துறையினர் தடியடி நடத்தினர்.   இதில் தப்பிச் சென்றவர்களில் 17 பேர் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்று நீரில் மூழ்கி இறந்தனர். இந்த சம்பவம் 1999 - ம் ஆண்டு ஜூலை 23-ல் நடந்தது. ஆற்றில் மூழ்கி இறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 11-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் வருகின்றனர்.அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த காவல்துறையினர் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கியுள்ளனர். கொக்கிரகுளம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கருத்துக்கள்

தமிழ் ஈழத்தில் கருப்பு சூலை நாள் இன்றுதான். இங்கும ஒரு கருப்பு சூலை நாள். 
துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2010 4:40:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

நீதி கோரி பன்னாட்டு தலைவர்களைச் சந்திப்போம்: ருத்திரகுமாரன்


நீதி கோரி பன்னாட்டுத் தலைவர்களை சந்திப்போம்: வி. ருத்திரகுமாரன்


கொழும்பு, ஜூலை 23- இலங்கைத் தமிழர் பிரச்னையில் நீதி கோரி பன்னாட்டுத் தலைவர்களை சந்திப்போம் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பொறுப்பாளர் வி. ருத்திரகுமாரன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின் விபரம்:
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்த சாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 27 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச இயந்திரத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்டன. வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி உட்பட்ட எமது விடுதலைப் போராளிகளும், மக்களும் குரூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து வெளியேறி, பாதுகாப்புத் தேடி தமது பாரம்பரியத் தாயகப்பகுதியாகிய வட-கிழக்கில் தஞ்சம் அடைந்தனர். நமது தாயகமே நமக்கு பாதுகாப்பானது என்பதனை இந் நிகழ்வு உலகுக்கு உணர்த்தியது. நமது தாயக விடுதலைக்கான போராட்டமும் எழுச்சி கண்டது.
சிறிலங்காவின் இன அழிப்பு எண்ணமும், நடவடிக்கைகளும் மிகத் தீவிரமடைந்திருக்கின்றனவேயன்றி எவ்வகையிலும் மாற்றமடைந்துவிடவில்லை என்பதனை 2009 ஆண்டு மே வரை நடந்தேறிய நிகழ்வுகள் எமக்கு இரத்தமும் சதையுமாக உணர்த்தி நிற்கின்றன. இனப்படுகொலை எல்லா இடங்களிலும் ஒரே வடிவம் எடுப்பதில்லை. ஒடுக்குமுறையாளர்களைப் பொறுத்து அது பல்வேறு வடிவங்களிலும் தளங்களிலும் இடம் பெறுகிறது. போரின் இறுதிக் கால கட்டங்களில் எமது மக்கள் மீது சிறிலங்காப்படைகள் புரிந்த இனப்படுகொலையில் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் அழிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனமாக்கப்பட்டனர். மூன்று லட்சம் வரையிலான மக்கள் தடுப்புமுகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். இன்றும் இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர்; முகாம்களில் தான் வைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்குரிய புனர்வாழ்வும் புனர்நிர்மாணமும் வழங்கப்படவில்லை. இவர்களை விட அடைத்துவைக்கப்பட்டுள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளின் நிலை அச்சம் தருவதாகவே உள்ளது. 1983 இல் நடந்தேறிய சிறைச்சாலைப் படுகொலைகளின் நினைவுகள் எமது அச்சத்தை மேலும் அதிகரிக்கின்றன.
1983 ஆம் ஆண்டு யூலையில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரும் இவ்வேளையில், சிறிலங்கா அரசபடைகளால் கொல்லப்படட் 200,000 க்கும் மேற்பட்ட எமது மக்களையும் சாட்சியாக நிறுத்தி நாம் அனைத்துலக சமூகத்திடம் நீதி கோருகிறோம். நீதி வழங்கப்படாத எந்த ஒரு மக்கள் சமூகமும் அதன் காயங்களை என்றுமே ஆற்றிவிட முடியாது.
நீதியின் பெயராலும் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்கு நியாயம் கோரி அனைத்துலக சமூகத்திடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
1. இனப்படுகொலைக்குள்ளாகி வரும் மக்கள் சுயநிர்ணயத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொள்வதற்கு ஒரேவழி அவர்களுக்கான ஒரு நாடு அமைவதேயாகும். எமது மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தமிழீழத் தனியரசு அமைக்கப்படுவதே ஒரேவழி என்பதால் அனைத்துலக சமூகம் அதற்கு தனது ஆதரவினை வழங்க வேண்டும்.
2. சிறிலங்கா அரசால் கொடும் சிறைக்கூடங்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள எமது போராளிகள் போர்க்கைதிகளாக மதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படவேண்டும். சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் போராளிகளினது பெயர் விபரங்கள் உடனடியாக வெளியிடப்படுவதற்கும்;, போராளிகளை அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் சென்று பார்வையிடுவதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
3.அனைத்துலக சமூகம் நீதியின் அடிப்படையிலும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் அடிப்படையிலும் எமது மக்களுக்காகக் உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.
அத்தோடு இத்தருணத்தில் 1983 யூலை படுகொலையின் போது தமக்கு வரக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாது, மனிதாபிமான உணர்வின் அடிப்படையில் பல தமிழ் மக்களின் உயிர்களைப் பாதுகாத்த சிங்கள மக்களை நாம் நன்றியுடன் மனதில் இருத்துகிறோம். சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாகப் புரிந்து வந்த இனப்படுகொலையை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்த சிங்கள முற்போக்காளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரது கரங்களையும் தோழமையுணர்வுடன் நாம் இறுகப் பற்றிக் கொள்கிறோம். உங்களது குரல்கள் பெரும்பான்மையின் மத்தியில் பலவீனமாக இருந்தாலும் நீதியின் முன்னே வலுவானவை. நீதிக்கான எமது போராட்டத்துக்கு உங்கள் இணைவு மேலும் வலுச் சேர்க்கும்.
1983 ஆம் ஆண்டு இனப்படுகொலையினை நாம் நினைவுகூரும் இவ் வேளையில், எம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணைகளை வலியுறுத்தியும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்போரை விடுதலை செய்யக் கோரியும் ஜி. சிவந்தன் எனும் தமிழ் செயல்வீரன் பிரித்தானியாவிலிருந்து ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைமைப்பணிமனை நோக்கி யூலை 23 ஆம் திகதி இரவு நடைபயணம் ஒன்றினை ஆரம்பிக்கிறார். இரண்டு வாரங்கள் இடம் பெறப்போகும் இந் நடைப்பயணத்துக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது ஆதரவினைத் தெரிவிப்பதோடு, இப் போராட்டம் பூரண வெற்றியடைவதற்குரிய பங்களிப்பினை வழங்குமாறு தமிழ் மக்களை வேண்டி நிற்கிறது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று பல்வேறு அரசாங்கங்களுக்கு தமிழின அழிப்பு தொடர்பான ஆவணம் ஒன்றை அனுப்பி வைக்கிறது. இதனைத் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் பன்னாட்டுத் தலைவர்களை நேரடியாக சந்தித்து, சிறிலங்கா அரசின் இனவழிப்புக்கு எதிராக நீதிகோரும் வகையிலான அரசியல் செயற்பாடுகளுக்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இனப் படுகொலைக்குள்ளாகிவரும் ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வினை இனப்படுகொலை புரிபவர்களிடம் இருந்தோ அல்லது மற்றோரிடம் கெஞ்சியோ மீட்டுவிட முடியாது. சலுகைகளின் அடிப்படையில் இல்லாமல் நீதியின் அடிப்படையிலும், அனைத்துலக சட்டங்களுக்கமைய எமக்குரிய உரிமைகளின் அடிப்படையிலுமே நமது குரல்கள் தொடர்ந்து ஒலிக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
கருத்துக்கள்


விரைந்து செயலாற்றுக! சிறந்த வெற்றி காண்க! உலகின் முதல் இனம் அழிக்கப்படுகிறது! மண்ணின் மைந்தர்கள் மண்ணோடு புதைக்கப்படுகிறார்கள்! வந்தேறிகள் கொடுங்கோல் புரிகிறார்கள்! வல்லரசுகளும் பொல்லரசுகளும் துணை நிற்கின்றன! மனித நேயம் என்பதும் உயிர்கள் மீதான பற்று என்பதும் கனவாகப் போகின்றது. விரைந்து இன அழிப்பைத் தடுக்க வேண்டும் என்பதை ஒன்றுபட்டு உணர்த்துங்கள்! வெற்றி காணுங்கள்! வெல்க தமிழ் ஈழம்! தமிழர் தாயகத்தின் தனிக்கொடி பறக்கட்டும் தரணி எங்கும்! வையகம் சிறக்கட்டும்! வையகமெங்கும் வண்டமிழர் புகழ் ஓங்கட்டும்! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2010 4:33:00 PM
நடை பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
By தஞ்சை ராஜு
7/23/2010 3:37:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
IATR and the World Classical Tamil Conference Noboru Karashima
A new International Association of Tamil Research must now be created to function as a real academic body.
— Photo: K.V. Srinivasan

Noboru Karashima.
The World Classical Tamil Conference that was held in Coimbatore last month attracted lakhs of people, according to reports. The International Association of Tamil Research (IATR), which is an older academic organisation of international scholars and of which I am President, kept its independence from this Conference. I will explain here the reasons for this and also contemplate the future of the IATR and Tamil studies in general.
Circumstances that led to the formation of the World Classical Tamil Conference
In September 2009, I was informed that the Tamil Nadu government had decided to hold the 9th session of the IATR conference in January 2010 in Coimbatore. I was greatly surprised as I had not been consulted on this matter. For accepting the government's kind offer to sponsor our 9th Conference, I put forth the following as conditions.
1) A period of at least one year to organise the conference, as I felt it was impossible to organise any big international academic conference within four months. The earliest possible date of the Conference, I said, could be December 2010 or January 2011.
2) The clear demarcation of the academic sessions of the IATR conference from the political events and programmes associated with it.
3) The release for distribution by the Government of the five-volume Proceedings of the 8th IATR Conference held in 1995 in Thanjavur sponsored by the then State Government. These had been ready for distribution in 2005, but had been kept in the Tamil University despite repeated requests for their release to the present Government.
In response, the State Government postponed the Conference from January 2010 to June 2010, and accepted my second and third points. I was strongly urged to accept this offer, as the Government could not put off the date later than June 2010 in view of the expected State Assembly election. I however held to the position that the conference should not be held earlier than December 2010. Incidentally, in the case of the 14th World Sanskrit Conference that was successfully held in Japan in September 2009, the first circular was issued two years before the conference.
Having consulted many internationally reputed scholars in various countries on this matter and having secured their support, I sent my final answer to the Government in the negative — with a statement, however, that the Government could hold any Tamil Conference of its own, if it did not involve IATR. Accordingly, the Government decided to hold its own conference, the World Classical Tamil Conference, in June 2010 in Coimbatore.
History of the IATR and
past conferences
The IATR was established by some eminent scholars who were deeply concerned about the development of Tamil studies on the occasion of the 26th International Congress of Orientalists held in New Delhi in 1964. The first IATR Conference was held in Kuala Lumpur in 1966, and the second in 1968 in Madras. The 1960s witnessed the culmination and triumph of the Dravidian Movement, and the government headed by C.N. Annadurai of the DMK was voted to power in 1967 — just before the IATR conference in Madras.
It was quite natural that the Madras conference turned out to be a massive political celebration of the victory of the Dravidian Movement, though the conference showed its strength academically too. Therefore, the political statement made by this academic conference was understandable and probably permissible, although politics cast a shadow over the following conferences held in Tamil Nadu. The 5th Conference held again in Tamil Nadu in 1981 in Madurai, under the sponsorship of the AIADMK Government, became a political show again as the government made it a platform for the forthcoming elections. The 6th Conference, which was held in Kuala Lumpur in 1987, was equally affected by regional politics, as it was attended by a large group of Tamil Nadu politicians.
Although I was absent from the 7th Conference held in Moka in Mauritius in 1989, I was elected President of IATR on that occasion. I therefore organised the 8th Conference held in Thanjavur in 1995 with the sponsorship offered by the Tamil Nadu Government. Although I tried my best to separate the academic session from the political programme, two lakh persons attended the closing ceremony held in the stadium. Moreover, the conference was spoiled by the deportation of some Sri Lankan scholars. Though I sent a letter of protest to the then Chief Minister asking for an explanation, I did not receive a reply.
Historical role of IATR
The Dravidian Movement, or the Non-Brahmin movement as it was called, arose in the 1910s spearheaded by the Justice Party. Language became the focus of the movement by the late 1930s, and great emphasis was placed on the economic and political struggle by the South (Dravidian) power against the North (Aryan) power. The movement demanded the overturning of the North/Aryan ‘oppression' of the South/Dravidian.
From the 1970s, however, the situation changed in accordance with the changes in caste society and the gradual economic growth of the South. The Dravidian Movement could be said to have fulfilled its historical role to a certain extent. From the 1980s, we see a shift in the aims of the movement. The political mobilisations by the DMK and AIADMK, and their appeals to the regional sentiments of the Tamil people, were primarily aimed at the expansion of their political vote base.
The Proceedings volumes of the 8th IATR Conference held in Thanjavur in 1995 still remain in Tamil University without distribution. The World Classical Tamil Conference was the best opportunity for their distribution. In the Preface (of the Proceedings), I have suggested that IATR should change its structure, free its conferences from politics, and respond to new academic trends.
It is true that IATR had not been able to conduct the 9th Conference since 1995. However, it is important to note that IATR originally planned to hold the 8th Conference in London in 1992, but as that did not materialise, it recommended in Thanjavur in 1995 the U.K., U.S.A. or South Africa as the venue for the 9th Conference. However, none of the IATR national units of these countries came forward to invite IATR to hold the conference; they were daunted perhaps by the inevitable political overtones that enter the conferences.
As for new trends in research, the “Tamil Studies Conference” organised by the University of Toronto has held its fifth conference, although on a much smaller scale, in May 2010. Some workshops and seminars on specific areas have been held in various places in the last ten years. I do not deny the advantages of large conferences, provided they are free from politics. However, the time has come now for small-scale workshops and seminars for comparative studies with other fields, instead of big conferences covering all aspects of Tamil studies.
Renaissance for Tamil Studies?
The time has come for the IATR to assume a new avatar. It has completed its historical role by making people realise the importance of Tamil studies, just as the Dravidian Movement did in respect of its original objectives. A new IATR must now be created to function as a real academic body.
My only satisfaction as President of IATR and a lover of the Tamil people and culture who has devoted his life to Tamil studies is the conviction that IATR has defended its academic freedom by keeping its independence from the government-organised and politically oriented conference held last month in Coimbatore.
However, IATR must be resurrected in a new way. Its renaissance rests on the shoulders of young and sincere scholars of Tamil studies.
(Noboru Karashima is the President of the International Association of Tamil Research and Professor Emeritus, University of Tokyo.)
Printer friendly page  
Send this article to Friends by E-Mai

Vaiko speak to Vikadan Weekly (tamil)

அந்தக் காலத்தில் அரசர்கள் அந்தப் புரத்தில் கட்டிப் புரண்டு விட்டு அரச அவையில் அமைச்சரைப் பார்த்து "அமைச்சரே மாதம் மும்மாரி பெய்கிறதா" என்று கேட்பார்கள். அந்த அரசர்களைப் போன்ற ஒருவர்தான் கருணாநிதி. எதிலும் அரைக் கிணறு தாண்டுவது அவரது அரசியல் பாணி. ஆனால் அவரைச் சுற்றியிருந்து அவருக்குக் குடைபிடிப்பவர்கள் சாமரம் வீசுவோர்  அவரைப் பெரிய சாணக்கியனாக சித்திரிக்கிறார்கள். போர் நடந்து கொண்டு இருக்கும் போது தனது பதவியைத் தக்க வைக்க "மத்திய அரசின் நடவடிக்கைகள் எனக்கு திருப்தி அளிக்கிறது" என ஓயாது சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு இலட்சம் மக்கள் குண்டடிக்கும் செல் அடிக்கும் செத்து மடிந்த போது நாதசுரம் வாசித்துக் கொண்டிருந்த நீரோ போல சாகும் போது மிகப் பெரிய வரலாற்றுப் பழியை கருணாநிதி சுமந்து கொண்டு போவார் என்பது மட்டும் நிச்சயம்.
சிறையில் சீமான்... சீறும் வைகோ
ப.திருமாவேலன், படங்கள்:கே.ராஜசேகரன்,வீ.நாகமணி
"இலங்கைத் தூதரகம் இனி சென்னையில் செயல்படக் கூடாது!"- கடலூர் சிறை வாசலில்
இருந்து வெளிப்பட்ட வைகோ கர்ஜிக்க... நெல்லையில் நடந்த ஒரு திருமண வீட்டில், "இதுவே இன்றைய தமிழன் செய்து முடிக்க வேண்டிய முழு முதல் காரியம் என்று சபதமேற்போம்!" என 83 வயதைக் கடந்த இலக்கிய கர்த்தா தி.க.சி. வழிமொழிந்து வரவேற்க... விவகாரம் அதை நோக்கியே போய்க்கொண்டு இருக்கிறது.
இந்தச் சூழலில் நடந்தது வைகோவுடனான சந்திப்பு...
"இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூடுவோம் என்று அறிவித்துப் போராட்டங்களை முன்னெடுப்பது ஏன்?"
"குண்டுகள் வீசிக் கொன்றவர்கள் போக, மிச்சம் இருக்கும் தமிழனையும் பட்டினி போட்டு, மருந்துகள் தராமல் சிறுகச் சிறுகச் சாகடிக்கும் காரியத்தைச் சிங்களவன் செய்துவருகிறான். இது உலக நாடுகளின் உள் மனசாட்சிக்கு இப்போதுதான் உறைத்திருக்கிறது. ஐ.நா. சபை, மூவர் குழுவை அமைத்துத் தனது விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. அவர்கள் விசாரிக்கப்போகிறார்கள். அதற்குள், ஐ.நா. செயலாளர் பான் கீ மூனை அவமானப்படுத்தும் வகையில், 'பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் மாமா' என்று இழிவுபடுத்தி கொழும்பு நகரில் ஊர்வலம் போகிறான் சிங்களவன். ஐ.நா. அலுவலகத்தை அடித்து உடைக்கிறான். உலகம் அங்கீ கரித்த ஒரு சபையின் அலுவலகத்தையே செயல்பட விடாமல் முடக்க முடியுமானால், இப்படி ஒரு ரௌடித்தனமான நாட்டின் தூதரகம் நம் தாய் பூமியில் எதற்கு இருக்க வேண்டும் என்று தமிழன் கேட்கக் கூடாதா?

பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்த இனபாதக இஸ்ரேல் நாட்டின் தூதரகம் பல நாடுகளில் இல்லை. இந்தியாவிலும் இடம் தராமல் தடுத்துதான் வைத்திருந் தார்கள். அதன் பிறகு, சிறப்பு அனுமதியுடன் கொடுத் தார்கள். இஸ்ரேலின் கொடுமையைவிட 200 மடங்கு கொடுமையானது அல்லவா இலங்கையின் இன வாதம்! அப்படிப்பட்ட நாட்டின் தூதரகம் இங்கு இருக்கக் கூடாது. அது அகற்றப்பட வேண்டும். அகற்றப்பட்டே தீரும்!"
"இலங்கைக்கு எதிராக இந்தியா இப்படியரு நிலைப்பாடு எடுக்கும் என்று நினைக்கிறீர்களா?"
"இந்திய அரசாங்கம் இதைச் செய்யும் என்று எதிர்பார்த்து இப்படியரு கோரிக்கையை வைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தங்களின் போராட்டங்களின் மூலம் இதை வென்று காட்டுவார்கள். அங்கிருந்து 20 கல் தொலைவில் இருக்கும் இந்த 7 கோடித் தமிழ் மக்கள்தான் இந்தப் போராட்டத்தின் பலம். இன்று நாம் கையறு நிலையில் இருக்கலாம். ஆனால், தமிழனுக்கு என்று நாடு அமைத்துத் தர வேண்டிய கடமை நமக்கு உண்டு என்பதை ஒருபோதும் மறக்க மாட்டோம். தூதரகத்தை இங்கிருந்து அகற்றுவதில் இருந்தே அது தொடங்கட்டும்!"
"இலங்கையில் போர்க் குற்றங்கள் ஏராளமாக நடந்திருக்கிறது என்பதை உலகின் பல நாடுகள் ஏற்றுக் கொண்டு இருக்கின்றன. ஆனால், இந்தியா இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லையே?"
"தமிழர்கள் படுகொலையை இந்தியா கண்டிக்கவில்லை என்பது மட்டுமல்ல; ஐ.நா. சபை அலுவலகம் தாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இலங்கையைக் கண்டிக்கும் தீர்மானம் ஐ.நா-வில் வந்தபோது எதிர்த்த ஒரே நாடு இந்தியாதான். இலங்கைக்குப் பொருளாதாரத் தடையை ஐரோப்பிய யூனியன் விதிக்கும்போது, குறைந்த வட்டிக்குப் பணம் தரும் நாடும் இந்தியாதான். இலங்கையை அரசியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் முட்டுக்கொடுக்கும் காரியத்தை இந்தியா செய்கிறது. அந்தத் திமிரில்தான் இலங்கை ஆடுகிறது.
98-ம் ஆண்டு பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, இலங்கைக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 'விலைக்குக்கூட ஆயுதங்களை விற்க மாட்டோம்' என்று நெஞ்சுரத்தோடு சொன்னார் வாஜ்பாய். ஆனால், 2004-ல் ஆட்சிக்கு வந்த மன்மோகன் சிங் - சோனியா காந்தியின் தூண்டுதலின் பேரில், அனைத்து உதவிகளையும் இலவசமாகவே செய்தார். புலிகளைக் கொன்றொழிக்க நினைத்தது ராஜபக்ஷேவின் திட்டம் மட்டுமல்ல; சோனியாவின் விருப்பமும்தான். இதற்காக கருணாநிதிக்கு பதவிகளைத் தூக்கிக் கொடுத்து வாயடைத்தார் சோனியா. தமிழனின் மூச்சை இப்படித்தான் நிறுத்தினார்கள்.
இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரிக்கப்பட்டால், தாங்கள் இதுவரை அவர்களுக்குச் செய்த உதவிகள் வெளிச்சத்துக்கு வரும் என்று மன்மோகன் சிங் பயப்படுகிறார். அதனால் மௌனம் சாதிக்கிறார். கருணாநிதிக்கும் உள் மனதில் பிரபாகரன் என்றாலே பிடிக்காது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்ச் சமூகத்தில் தன்னிகரற்ற தனிப் பெரும் தலைவனாக வீரத்திலும், தீரத்திலும், ஒழுக்கத்திலும் மெச்சப்படும் ஒரே தலைவனாக மதிக்கப்படும் பிரபாகரனை அவருக்கு எப்படிப் பிடிக்கும்? தமிழகத்தில் வெடித்துக் கிளம்பிய இன உணர்வுத் தீயை தடுக்கும் காரியத்தைக் கச்சிதமாகச் செய்து முடித்தார் கருணாநிதி. இந்தப் பழியும் பாவமும் இவருக்குக் காலமெல்லாம் நிற்கும்!"
"அரசியல் தீர்வுக்கான ஆலோசனையைத் தாருங்கள் என்று முதல்வர் கருணாநிதியிடம் பிரதமர் வேண்டுகோள் வைத்துள்ளாரே?"
"என்ன செய்யலாம் என்று இப்போது கருணாநிதியைக் கேட்கும் மன்மோகன் சிங், இலங்கைக்கு ஆயுத உதவி செய்யும்போது கேட்டாரா? ரேடார் தரும்போது கேட்டாரா? இப்போது மட்டும் ஏன் கருத்தும் ஆலோசனையும் கேட்கிறாராம்?
சிறப்புப் பிரதிநிதியை அனுப்பிக் கண்காணிக்க வேண்டும் என்று கருணாநிதி யோசனை சொல்லியிருக்கிறார். இதுவரை அனுப்பப்பட்ட பிரணாப் முகர்ஜி, எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் போன்றவர்கள் கொழும்பு ஹோட்டலில் விருந்து சாப்பிட்டதைத் தவிர, தமிழனுக்கு என்ன செய்தார்கள்? யாரிடம் இருந்து எதிர்பார்க்கிறார்களாம் அரசியல் தீர்வை? இவையெல்லாமே வெறும் நாடகங்கள்!
உலகின் எல்லாப் பகுதிகளிலும் யுத்தம் நடந்திருக்கிறது. போராளிகள், பொதுமக்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், செத்த பின்பும் ஒரு மனிதனை அவமானப்படுத்தும் காரியங்கள் இலங்கையைத் தவிர எங்கும் நடந்தது இல்லை. அனுராதபுரம் தாக்குதலில் இறந்த 21 புலிப் படை வீரர்களின் உடலை நிர்வாணமாக்கி, ஊர் ஊராக வேனில் எடுத்துச் சென்று கொக்கரித்துக் காட்டினார்கள். புலிப் படை பெண் பிள்ளைகளின் உயிரற்ற சடலங்களுடன் வன் புணர்ச்சி செய்தார்கள். அடுக்கிவைக்கப்பட்ட பிணங்கள் மீது புல்டோசர் ஏற்றி நசுக்கிச் சகதிபோல ஆக்கினார்கள். இது எந்த நாட்டிலுமே நடந்திராத கொடுமை. நர மாமிசம் சாப்பிடும் கொடிய கூட்டம் அது. அது அரசியல் தீர்வுக்கு ஒருபோதும் உடன்படாது!"
"ஈழத் தமிழர் குறித்து தொடர்ந்து நீங்கள் பேசி வருகிறீர்கள். ஒரு வெளிநாட்டுப் பிரச்னையை இங்கு தொடர்ந்து பேசத் தடை விதிக்கச் சட்டம் கொண்டுவரப்போவதாக அமைச்சர் துரைமுருகன் சொல்லியிருக்கிறாரே?"
"மந்திரி தெனாலிராமன் சொல்ல வேண்டாம். செய்யட் டும். இந்தப் பூச்சாண்டிக்குப் பயப்படும் கத்துக்குட்டிகள் அல்ல நாங்கள். உங்களது சட்டமும் திட்டமும் ஜார்கண்டிலும் சத்தீஸ்கரிலும் என்ன ஆனது? சூடத்தைக் கொளுத்துவதுபோலத் தன் உடம்பைக் கொளுத்தி 17 பேர் செத்துப்போன பூமியப்பா இது. வெறும் சட்டத்தைப் பார்த்தா பயந்து போவோம்?
சென்னை வீதியில் திருநாவுக்கரசு என்ற தலித் இளைஞனைச் சுட்டுக் கொன்ற டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்து கொண்டுவாருங்கள், உங்களுக்குத் துணிச்சல் இருந்தால்!
இந்திய எல்லைக்குள் வந்து அப்பாவித் தமிழ் மீனவனைச் சுட்டுக் கொல்லும் சிங்களக் கடற்படைக்கு எதிராக யுத்தம் செய்யுங்கள், உங்களிடம் தைரியம் இருக்குமானால்! அதைஎல்லாம் விட்டுவிட்டு வாய்ப்பூட்டுச் சட்டம் போடுவேன் என்று பட்டம் விட வேண்டாம். எதிர்க் காற்று எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கும்!"
"சீமான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளதே..?"
"தேசத்தின் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படும் அளவுக்கு என்ன பேசிவிட்டார் சீமான்..? தமிழனைக் கொன்றுகொண்டே இருக்கிறானே சிங்களவன் என்ற ஆத்திரத்தில், ஆதங்கத்தில், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டினால் அது தவறா? 'எரி மலை வெடிக்கும்' என்று கருணாநிதியே எத்தனையோ கூட்டங்களில் பேசியிருக்கிறார்! எரிமலை வெடித்தால் லட்சம் பேர் சாவார்கள். சாவுக்கு கருணாநிதிதான் காரணம் என்று வழக்குப்போட முடியுமா? சீமானும் அப்படித்தான் பேசியிருக்கிறார். நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்தக் காரியத்தையாவது செய்தாரா... இல்லையே? அதையும் மீறி கைது செய்யக் காரணம், ஈழத் தமிழனைப்பற்றி யார் பேசி னாலும் கருணாநிதிக்கு ஆத்திரம் வருகிறது.
பழ.கருப்பையா கட்டுரைகள் எழுதினார். தாங்க முடியவில்லை. ஆள் வைத்து அடிக்கிறார்கள். இந்த நாட்டை இப்போது மினி எமர்ஜென்சி மிரட்டிக்கொண்டு இருக்கிறது.
'அதிகாரம், ஊழலை உருவாக்கும். அதீத அதிகாரம், அதிக ஊழலை உருவாக்கும்' என்றான் ஐவர் ஜெனிக்ஸ். அதீத அதிகாரமும் அதீத ஊழலும் இன்று அடக்குமுறையை உற்பத்தி செய்துள்ளது. விளம்பர வெளிச்சங் களின் மூலம் அடக்குமுறை சம்பவங்களை மறைத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம். தமிழ் மக்களுக்கு எல்லாம் தெரியும். நாங்கள்தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என்று பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சியையே 1952-ல் தோற்கடித்தது, சென்னை ராஜதானி! தோற்கப்போவதை உள்ளூர உணர்ந்ததால்தான் அதிகமான அடக்குமுறைகளை கருணாநிதி அமல்படுத்தி வருகிறார்!"
"ஆனால், 'முரசொலி' உங்களைப் பாராட்டி அடிக்கடி எழுதுகிறதே?"
"எங்கே இருக்கிறது ம.தி.மு.க. என்று கேட்ட முரசொலியில், முல்லைப்பெரியாறு பிரச்னைக்காக நாங்கள் நடத்திய மறியலுக்குக் கூடிய கூட்டத்தைப் பாராட்டியும் எழுதப்பட்டுள்ளது. அவர்களையே அறியாமல் உண்மையை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதையும்கூட அவர்கள் ஏதோ ஓர் அரசியல் உள்நோக்கத்தோடுதான் எழுதியிருக்கிறார்கள்.
கருணாநிதி மீது தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சிகொண்டு நான் அரசியல் நடத்தவில்லை. அருந் தமிழ் நாட்டையும் அண்ணா வளர்த்த கட்சியையும் தன்னுடைய சுயநலத்துக்காகக் கெடுத்துக் குட்டிச்சுவராக ஆக்கிவிட்டார் கருணாநிதி என்பதைத் தவிர, அவர்மீது எனக்கென்ன தனிப்பட்ட கோபம்?
ஆனால், நாங்கள் அ.தி.மு.க-வுடன் நல்ல நேச உணர்வுடன் இருக்கிறோம். அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எங்களுக்கு உரிய மரியாதை வழங்குகிறார். நாங்கள் வலுவான தோழமையு டன் இருக்கிறோம். எங்களுக்குள் நெருடல் இல்லை!"
"காங்கிரஸ் கூட்டணியையே ஜெயலலிதா அதிகம் விரும்புவதாகச் சொல்கிறார்களே? கோவை கூட்டத்தில் மத்திய அரசை அவர் அதிகம் கண்டிக்கவில்லையே?"
"ஒரே நேரத்தில் இரண்டு முனைகள் நோக்கித் தாக்குதல் நடத்துவது சரியான போர்த் தந்திரம் அல்ல என்று அவர் நினைத்திருக்கலாம். எனவே, கருணாநிதியை மட்டும் தாக்கி இருக்கிறார்.
என்னைப் பொறுத்தவரையில், ஈழத் தமிழர் இனப் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டிய கடமை தமிழ்நாட்டுத் தமிழர் அனைவருக்கும் உண்டு."
"அ.தி.மு.க. அணியில் விஜயகாந்த் இணைவாரா?"
"கூட்டணியில் யாரை இணைக்க வேண்டும் என்பது, அ.தி.மு.க. தலைமை எடுக்க வேண்டிய முடிவு"
- ரகசியம் காக்கிறார் வைகோ!

அனைவருக்கும்
வணக்கம்.
முன்பு அரசர்கள், மாதம் மும்மாரி  பொழிகிறதா எனக் கேட்டதைப் பலரும் நகைச்சுவையாகவே எணணுகிறார்கள். மழை ஒவ்வோர்  இடத்தில ஒவ்வோர் அளவு பெய்யும்; பெய்யாமலும் இருக்கும்.இப்பொழுது வானிலை அறிக்கை போல் மழை பெய்த அளவு கூறப்படுகிறதே ஏன்? தலை நகரிலே உள்ளவர்களுக்கு நாட்டின் நிலைமை தெரிய வேண்டும் என்பதற்காகவே. அது போல்தான் அக்காலத்தில் மக்கள் வறட்சியின்றி வாழ்கிறார்களா? நீர் நிலைகள் நிரம்பியுள்ளனவா? வேளாண்மை சிறக்க உள்ளதா? என்பன  போன்று அறிவதற்காக இக்கேள்வியைக் கேட்டு்ளளனர். அப்பொழுதுதான் நாட்டு நிலைமை உள்ளபடியாக அவையோர்க்குத் தெரியும் வாய்ப்பு ஏற்படும்.இப்படியொரு கேள்வியின் பொழுதுதான் புலவர ஒருவர் மன்னரிடம் நாடு வறண்டு இருக்கும் பொழுது  வரி சுமையாக அமைவதைச்  சுட்டிக்காட்டிப் பாட அதனைக் கேட்ட மன்னர் வரியைத் தள்ளுபடி செய்துள்ளார்.மற்றொரு புலவரோ நீர் நிலைகளைப் பெருக்க அறிவுரை கூற அதன்படி மன்னரும் நீர்நிலைகளைப் பெருக்கியுள்ளார். ஆனால்,  இதனைப் புரிந்து கொள்ளாமல் நாடக உரையாடல் மூலம் வேடிக்கையாகப் பலர் எண்ணுவதுபோல் வைக்கோவும் கருதி வி்ட்டார். அல்லது  தெரிந்தே  அவ்வாறு கூறிவிட்டாரா என்றும் தெரியவில்லை. இருப்பினும் நாட்டு மக்கள் நிலை பற்றி ஆள்வோருக்கு  இருக்கும் ஈடுபட்டை விளக்கும் வினாவை இனி யாரும் தவறாக விளக்க வேண்டா.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


__._,_.___
.

ஈழத் தமிழர்களை (கை) விடமாட்டோம்: கலைஞர் சொன்னாராமில்ல !

ஈழத் தமிழர்களை (கை) விடமாட்டோம்: கலைஞர் சொன்னாராமில்ல !
21 July, 2010 by admin
சமீபத்தில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட சில எம்.பிக்கள் கலைஞரைச் சந்தித்தி, சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கவேண்டும் என்று மண்டாட, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கலைஞர் கூறியுள்ளார். சந்திப்புக்கு முன்னதாக சோனியா காந்தி அம்மையார் சிதம்பரத்துடன் உரையாடியுள்ளார். அதனை அப்படியே ஹிந்தியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து கருணாநிதியிடம் கூறியுள்ளார் சிதம்பரம். அதனை கலைஞர் செம்மொழியில் த.தே.கூட்டமைப்புக்கு சொல்லியுள்ளார். அவ்வளவுதான். அது என்ன என்று கேட்கிறீர்களா ? ஈழத் தமிழர்களை ஒருபோதும் விடமாட்டேன் என்று சோனியாசொல்ல, அதனை கை விடமாட்டேன் என்று சொல்லியிருப்பார் கொலைஞர், இல்லை இல்லை கலைஞர்.

2006ம் ஆண்டு நடந்த சில சம்பவங்களை நாம் ஒருமுறை நினைவுபடுத்திப் பார்ப்போமா ?

பல மாதங்களாக த.தே.கூட்டமைப்பினர் சிலர் சென்னையில் தங்கியிருந்தார்கள். 2006 செப்டம்பரில் ஈழத்தில் நிலமைகள் மோசமாகத் துவங்கிய போது சென்னையில் பல நாட்களாக கருணாநிதியைச் சந்தித்து ஈழ நிலமைகள் தொடர்பாகப் பேச முயர்சித்தனர். கருணாநிதியை மட்டுமல்ல ஜெயலலிதாம் ராமதாஸ், விஜயகாந்த் என்று தமிகத் தலைவர்கள் சிலரையும் பார்க்க முயற்சித்தனர் த.தே.கூட்டமைப்பினர். சம்பந்தன் சென்னை வந்துசேர்ந்த பின்னர் செப்டெம்பர் முதலாம் திகதி அவரும் மாவை சேனாதிராஜாவும் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை சச்சிதானந்தன் மூலமாக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்திருந்தார்.

தங்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு சம்பந்தனும் மாவையும் அக் கடிதத்தின் மூலம் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பின்னர் செப்டெம்பர் 4 ஆம் திகதியும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. மீண்டும் மீண்டும் கருணாநிதிக்கு நான்கு கடிதங்கள் எழுதப்பட்ட போதும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. இது போக சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம் குறித்து வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர். 14 ஆம் திகதி நண்பகல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து கலைஞருக்கான கடிதத்தின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது.

தொலைபேசி மூலமான வேண்டுகோள்கள் சகலதுக்கும் முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. இக் குழுவினர் புது டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட் ஆகியோர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசி நிலைவரங்களை விளக்கிக் கூறமுடிந்ததெனினும் பிரதமரரைச் மன்மோகன்சிங்கைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை.

முதலில் டில்லியில் சந்திப்பு வேண்டி தொடர்பு கொண்ட போது நீங்கள் முதலில் மாநில முதல்வர் கருணாநிதியை சந்தியுங்கள் பின்னர் டில்லிக்கு வாருங்கள் என்று பிரதமர் அலுவலகம் கூட்டமைப்பிற்கு உத்தரவு போட்டது. ஆனால் கருணாநிதியோ கடைசி வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவே இல்லை. கருணாநிதியை சந்திக்க முடியாமல் அவமானப்பட்டு தோல்வியடைந்த கூட்டமைப்பினர் டில்லி போன போது அதிக பட்சம் அவர்கள் பார்க்க முடிந்தது. எம்.கே. நாராயணனையும், சிவசங்கரமேனனையும் மட்டுமே கடைசி வரை அவர்களை மன்மோகன் சந்திக்கவே இல்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருணாநிதியே சந்திக்கவில்லை மாநில முதல்வரே சந்திக்காதவர்களை பிரதமரும் சந்திக்கத் தேவையில்லை என்று அறிக்கை அனுப்ப பிரதமரும் சந்திக்கவில்லை.

ஆனால் சந்திப்பதற்கு முன்னரே மிகக் கீழ்த்தரமாக இறங்கி இந்த அறிக்கையை டில்லியில் வைத்து வெளியிட்டனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்

“இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். தமிழர்கள் நலனைக் கருதி இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும்.ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் ஒரு துயரமான சம்பவம். அதை மன்னிக்க முடியாது. அந்த சம்பவத்திற்காக இலங்கை தமிழ் மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.இருப்பினும் இந்தியா இந்த துயரத்தை மறந்து விட்டு, மன்னித்து விட்டு தமிழர்கள் நலன் கருதி இலங்கை விவகாரத்தில தலையிட வேண்டும் என்றனர்“ இவ்வளவு கெஞ்சியும் எதிர்பார்த்த அளவுக்கு எந்த சந்திப்புகளும் நடைபெறாத நிலையில் சலித்துப் போன கூட்டமைப்பினர் இலங்கைக்குத் திரும்பினர்.

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் திரும்பி இலங்கை போன பின்பு, நான் முயற்ச்சி செய்தேன் ஆனால் அவர்கள் தான் இலங்கை சென்றுவிடடர்கள் என்று சுபவீரபாண்டியன் ஒரு அறிக்கையை வெளிவிட்டார்.

மிக மோசமான வரலாற்றில் கண்ணீரும் துயரமுமான அந்த 2009 ஆண்டு ஒரு வழியாக 40,000 மக்கள் படுகொலையில் முடிந்து போனது. ” ராஜீவ் கொலை மன்னிக்க முடியாத குற்றம் அதை மன்னித்து மறந்து விட்டு இந்தியா உதவ வேண்டும்” என்று யாரிடம் சம்பந்தன் கெஞ்சினாரோ அவர்களே இக்கொலைகளின் நாயகர்கள் ஆனார்கள். அன்றைக்கு சென்னையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த கருணாநிதி சந்திக்க மறுத்தாரோ அவரே இந்தியாவின் கொலைகளுக்கு துணை போன சூத்திரதாரி ஆனார். யார் யார் எல்லாம் உங்களை கடைசி நேரத்தில் கழுத்தறுத்து கை கழுவினார்களோ அவர்களை இன்று மீண்டும் சந்திக்கிறது த.தே.கூட்டமைப்பு.

அருகில் உள்ள இராமேஸ்வரக் கடலில் இலங்கை கடைற்படையின் தாக்குதலால் இறக்கும் தமிழ் மீனவர்களைக் காக்க துப்பில்லாத கலைஞரா, தமிழ் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கப்போகிறார் ? வேடிக்கையாக இல்லையா ? இதுதான் த.தே.கூட்டமைப்பின் அரசியலா, இவர்களா தமிழ் மக்களுக்கு ஒரு விடிவைத் தேடித் தரப்போகிறார்கள் ? குறைந்த பட்சம் தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த முடியாதா தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அடிக்கடி இந்தியா சென்று அதைச் செய்யுங்கள் இதைச் செய்யுங்கள் என்று இரந்து கேட்ப்பதும், ஏதோ உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் போல அவர் தலையாட்டுவதும் எப்போது முடிவுக்குவரப் போகிறது ?

போரை நிறுத்த மாட்டோம், மக்கள் அழிவைத் தடுக்க மாட்டோம் ! எல்லாம் செய்து முடித்து விட்டு நாங்கள் இடித்ததைக் மீண்டும் கட்டிக் கொடுப்போம் என்றும் கூறுகிறது இந்தியா. அதுதான் ஈழ மக்களுக்கு இந்தியா செய்யும் உதவி என்றால், இதைச் செய்ய இந்தியா எதற்கு தன்னார்வக்குழுக்களே, அல்லது மனித நேய அமைப்புகள் போதுமே ... மாறாக அரசியல் தீர்வுக்காக இந்தியா முயர்ச்சிக்கும் என்பதெல்லாம் இன்னொரு முறை ஈழ மக்களையும் புலத்து மக்களையும் முட்டாளாக்கும் முயற்சிதான்..

அய்யா தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே அஞ்சிக், கெஞ்சி, அண்டி, கால்களை நக்கிப், பெற வேண்டியதல்ல ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வு.

கால்களை நக்குவதும் கெஞ்சுவதும் இன்னமும் எம் மக்களை அழிவுக்கே இட்டுச் செல்லும். மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் ஒப்படைத்து அவர்களை விவசாயம் செய்ய விட்டாலே போதும், சில ஆண்டுகளில் அவர்கள் தங்களை மீளமைத்துக் கொள்வார்கள். இனியும் இந்தியாவை நம்பி நீங்கள் இருந்தால் நீங்கள் சென்னையிலேயே உங்கள் அலுவலகத்தைத் திறந்து அங்கேயே இருப்பது நல்லது. ஈழ மக்களை இனியும் உங்களுக்காக அரசியல் செய்கிறோம் என்று ஏமாற்ற வேண்டாம். ஏனென்றால் இனி கருணாநிதியின் ஈழ ஆர்வம் என்பது அவரது குடும்ப முதலாளிகள் சந்தை வாய்ப்புகளுக்காகவே அன்றி ஒரு போதும் ஈழத் தமிழர்களுக்கானதாக அது இருக்ப்போவது இல்லை.

 
நகைச்சுவை வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.




Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 11763