Last Updated :
மதுரை, டிச. 9: மதுரையில் பத்திரிகை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டதில் 3 ஊழியர்கள் இறந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அட்டாக் பாண்டி, டி.எஸ்.பி. உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
வழக்கு விவரம்:
தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் வாரிசு யார் என 2007, மே மாதம் கருத்துக் கணிப்பு அந்தப் பத்திரிகையில் வெளியானது. இதில், மு.க.ஸ்டாலினுக்கு 70 சதவீதமும், மு.க.அழகிரி, கனிமொழிக்கு தலா 2 சதவீதமும், மதுரையில் மட்டும் மு.க. அழகிரிக்கு 6 சதவீதம் ஆதரவு உள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மு.க. அழகிரி ஆதரவாளர்கள் என்று கூறப்படும் பலர் மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 9}5}2007 அன்று மதுரை}மேலூர் சாலையில் உள்ள அந்தப் பத்திரிகை அலுவலகத்தை ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்கி, அலுவலகத்தைச் சூறையாடினர். இச்சம்பவத்தில் பொறியாளர்கள் வினோத், கோபி, காவலர் முத்துப்பாண்டி ஆகிய 3 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த அட்டாக் பாண்டி, திருச்செல்வம், பிரபு, சரவணமுத்து, முருகன், விஜயபாண்டி, கந்தசாமி, ரமேஷ்பாண்டி, ராமையாபாண்டி, வழிவிட்டான், தாழமுத்து, சுதாகர், ரமேஷ்குமார், திருமுருகன், ரூபன், மாலிக்பாஷா ஆகிய 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர், இந்த வழக்கை 19.5.2007 முதல் சிபிஐ விசாரித்தது. அப்போது ஊமச்சிகுளம் டி.எஸ்.பி.யாக இருந்த ராஜாராம் 17}வது குற்றவாளியாக வழக்கில் சேர்க்கப்பட்டார். அவர் பணியில் கவனக்குறைவாக இருந்ததாகவும் சம்பவத்தைத் தடுக்கத் தவறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் 32 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 85 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்து, புதன்கிழமை நீதிபதி ரத்தினராஜ் தீர்ப்பளித்தார்.
பிறழ் சாட்சிகளாக மாறிய அரசு தரப்பு சாட்சிகள்: இந்த வழக்கு விசாரணையின்போது முதல் சாட்சியான ஒத்தக்கடை சப்}இன்ஸ்பெக்டர் ஆலடியான், 2}வது சாட்சியான நாளிதழ் அலுவலக செய்தி ஆசிரியர் உள்பட அனைவரும் பிறழ்சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
By Ilakkuvanar Thiruvalluvan
12/11/2009 2:53:00 AM
By Raju
12/10/2009 8:06:00 PM
By GR
12/10/2009 7:58:00 PM
By RAJA
12/10/2009 5:41:00 PM
By Arulappa
12/10/2009 5:04:00 PM
By anna
12/10/2009 4:16:00 PM
By Rusel.R
12/10/2009 3:29:00 PM
By Ruvikash
12/10/2009 3:21:00 PM
By "PARADESHI"
12/10/2009 3:20:00 PM
By bala-Madurai
12/10/2009 2:51:00 PM
By ak
12/10/2009 2:34:00 PM
By naa
12/10/2009 1:53:00 PM
By indian
12/10/2009 1:46:00 PM
By K.Sardhar
12/10/2009 1:34:00 PM
By சத்ரியன்
12/10/2009 1:02:00 PM
By RAJESH
12/10/2009 12:34:00 PM
By sivan
12/10/2009 11:45:00 AM
By sivan
12/10/2009 11:45:00 AM
By UNMAI
12/10/2009 11:36:00 AM
By Bindumathavan
12/10/2009 11:15:00 AM
By sundar
12/10/2009 10:05:00 AM
By BD
12/10/2009 9:49:00 AM
By Adithyan
12/10/2009 9:03:00 AM
By naa
12/10/2009 9:03:00 AM
By sankaran
12/10/2009 7:47:00 AM
By KRS
12/10/2009 7:42:00 AM
By syed iqbal, kuwait
12/10/2009 6:45:00 AM
By S.Balan
12/10/2009 5:33:00 AM
By SN
12/10/2009 4:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*