வெள்ளி, 31 ஜூலை, 2020

இல்லத்தமிழியக்கம் (இதயம்) தொடக்க விழா

அகரமுதல

ஆடி 19, 2051 / 03.08.2020 / காலை 10.00

இல்லத்தமிழியக்கம் (இதயம்) மெய்ந்நிகர் தொடக்க விழா

 

சிறப்பு அழைப்பாளர் : உயர்திரு தங்க காமராசு

 

முனைவர் வே.குழந்தைசாமி

தாளாளர் – செயலர்

செயற்குழுவினர்

 விவேகானந்தா மேலாண்மையியல் கல்லூரி,

கோவில் பாளையம்

 

குவிகம் இணையவழி அளவளாவல் (02.08.2020)


அகரமுதல

ஆடி 18, 2051 / 02.08.2020    ஞாயிறு மாலை 6.30        

சிறகு இரவிச்சந்திரன்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  
 

நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்      
 
நிகழ்வில் இணைய படத்தில் உள்ள கூட்ட எண் / meeting ID, கடவுச்சொல் / password பயன்படுத்தலாம் அல்லது 

https://us02web.zoom.us/j/86437208514?pwd=ZlJNbExPVXRvemFJeGZlNlgwbzB1UT09
இணைப்பைச் சொடுக்கலாம் 

(அடுத்த   என்  ‘சிறு’கதை   நிகழ்வு

ஆடி 25, 2051  / 9.08.2020 – ஞாயிறு)

குவிகம் மின்னிதழ் வாசிக்க

 

கடந்தவார சிறுகதை நிகழ்வின் காணொளி

இணைய வழிக் கூட்டம்: ஈழச்சிக்கலும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்

அகரமுதல

ஈழத்தமிழர் இனச்சிக்கலில் இலங்கை

இந்திய ஒப்பந்தத்தின் அன்றைய இன்றைய வகிபாகம்

ஞாயிறு ஆடி 18, 2051 ஆகத்து 02, 2020

இரவு 7.30 (இலங்கை இந்திய நேரம்)

ஐரோப்பிய நேரம் மாலை 4.00

இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3.00

தொரண்டோ, புது யாரக்கு நேரம் காலை 10.00

கனடியத் தமிழர் மாமன்றமத்தின் ஒத்துழைப்பில்

அணுக்கிச்(ZOOM) செயலி வழியாக  ஆய்வுரைகளும்   கலந்துரையாடலும்

 

[A COLLOQUIUM via ZOOM SPONSORED BY

THE CANADIAN TAMIL FORUM

             Eelam Tamils and the Indo-Lanka Accord: Then and Now

 Sunday, August 2, 2020

7:30 PM (Sri Lankan & Indian Time)

4:00 PM (Europe), 3:00 PM UK)

10:00 AM  Toronto  & New York Time)

ZOOM ID:  886 7578 1028           Password:  555111 ]

நெறியாள்கைதிரு.  இரமணன் சந்திரசேகரமூர்த்தி ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர்

கருத்துரை வழங்குவோர் :

பேராசிரியர் சோசெப்பு சந்திரகாந்தன்

தொரண்டோ பல்கலைக்கழகம்கனடா

பேராசிரியர் இராமு மணிவண்ணன்

சென்னைப் பல்கலைக்கழகம்,  தமிழ்நாடு

படைநாயகர்(கேணல்)  ஆர்.  அரிகரன்

ஓய்வு பெற்ற இந்தியப் படை அலுவலர்

 மாண்புமிகு  வி.   உருத்திரகுமாரன்,

தலைமையர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  இதில் பங்குகொண்டு தங்களின் கருத்துகளைப்

பகிர்ந்துகொள்ள விரும்புவர்கள் அணுக்கி(ZOOM)யில் இணைந்து கொள்ளவும்.   கீழுள்ள அணுக்கி (Zoom) இணைப்பை அழுத்துவதன் மூலம்  இணைந்து கொள்ள முடியும்:

Join Zoom Meeting:      https://us02web.zoom.us/j/88675781028?pwd=ZFhESHVUYXlsOW5zQmloSjhNOWxFQT09

தொடர்பிற்கு / Contact us at  tamilforums@gmail.com

கனடியத்தமிழ் மாமன்றம் /Canadian Tamil Forum

 

வியாழன், 30 ஜூலை, 2020

மூன்று நாள் இணையவழி வாசகர் மாநாடு : ‘நூல், நூலகம் மற்றும் சமூகம்’

மூன்று நாள் இணையவழி வாசகர் மாநாடு : ‘நூல், நூலகம் மற்றும் சமூகம்’

ஆடி 15, 2051 – ஆடி 17, 2051

30.07.2020 (வியாழக்கிழமை) முதல்

01.08.2020 (சனிக்கிழமை) வரை

கோவில்பட்டி, தேசியப் பொறியியல் கல்லூரி, வாசகர் பூங்கா, நூலகம், தகவல் அறிவியல் மேம்பாட்டு அமைப்பு, நூலகம் பேசுகிறது ஆகியவை இணைந்து ‘நூல், நூலகம் – குமுகம்’ என்னும் மூன்று நாட்கள் இணையவழி  வாசகர் மாநாடு வருகின்ற ஆடி 15, 2051 – ஆடி 17, 2051 / 30.07.2020 (வியாழக்கிழமை)  முதல் 01.08.2020 (சனிக்கிழமை) வரை மிகவும் சிறப்பாக நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.

முதலாம் நாள் 30.07.2020, வியாழக்கிழமை மாலை 06.00 மணிக்கு ‘வாசிப்போம் வாருங்கள்‘ என்னும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

இரண்டாம் நாள் 31.07.2020 வெள்ளிக்கிழமை, மாலை 06.00 மணிக்கு ‘உலகை வசமாக்கும் வாசிப்பு‘ என்னும் தலைப்பில்  சிறப்பு விருந்தினர் பேசும் பூங்காற்று திருமதி.கவிதா சவகர் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

மூன்றாம் நாள் 01.08.2020 சனிக்கிழமை, மாலை 06.00 மணிக்கு ‘உடல் நலம் – மன நலம்‘ என்னும் தலைப்பில்  சிறப்பு விருந்தினர் ‘சித்த மருத்துவர் கு.சிவராமன்‘ அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

பதிவுக் கட்டணம் கிடையாது

[ பதிவிற்கு :          https://bit.ly/necvaasakarmaanaadu2020

Webinar Link :         https://www.gotomeet.me/SALIS-Webinars     Access Code: 618-892-365

You tube live link:   https://youtu.be/CVYdrfJtAAc

இம்மாநாட்டில் கல்லூரிப் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவ, மாணவிகள்.பொதுமக்கள் என அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் தொடர்புக்கு:

முனைவர் கே. கருணை ராகவன்

9444 885083, 91765 76503 readerspark@nec.edu.in ]

குறிப்பு : மாநாட்டில் மூன்று நாட்களும் கலந்து கொண்டு, ஒவ்வொரு நாளின் நிறைவில் வழங்கப்படும்  மதீப்பீட்டுப் படிவத்தினை அளிக்கும் பங்கேற்பாளர்களுக்கு, மின் சான்றிதழ் அவர்களின் மின் அஞ்சல் முகவரிக்கு  8/07/2020 ஆம் நாளுக்குள் அனுப்பப்படும்.

முனைவர் கே.கருணை இராகவன்

நூலகர், தேசியப்பொறியியல் கல்லூரி

கே.ஆர.நகர்,கோவில்பட்டி 628503

பேசி  9176576503, 9444885083

புதன், 29 ஜூலை, 2020

திருக்குறள் பணிகள் ஆவணமாக்கல் – முழு விவரம் தருக.

அகரமுதல

திருக்குறள் பணிகள் ஆவணமாக்கல் –  முழு விவரம் தருக.

திருக்குறள் பரப்புப் பணிகள் குறித்த விவரங்களுக்காக உலகத் திருக்குறள் மையம் சார்பில் நிறுவனர் முனைவர் கு.மோகனராசு பத்திற்கு மேற்பட்ட பகிரிக் குழுக்களை அமைத்துள்ளார். அவற்றுள் திருக்குறள் சாதனைப்பதிவேட்டின் இயக்குநர்களாக முனைவர் கு.மோகனராசு அவர்களும் இலக்குவனார் திருவள்ளுவன் ஆகிய நானும் உள்ளோம்.
திருக்குறள் பரப்பல் ஆவணமாக்கும் முயற்சிக்காகப் பின்வரும்தகவல்கள்தேவைப்படுகின்றன. அவை, அருவினை அல்லது வரலாற்று நிகழ்வு அல்லது திருக்குறள் பணிகள் முதலான ஏதேனும் குழுவில் சேர்க்கப்படும். எனவே, நீங்கள் திருக்குறள் பரப்பல் தொண்டாக என்ன ஆற்றியிருந்தாலும் தெரிவிக்கலாம்.

  1. தங்கள் நாட்டில்/மாநிலத்தில்/பகுதியில் முதன் முதல் நடைபெற்ற திருக்குறள் மாநாடு/கருத்தரங்கம்/கூட்டம் நடத்தப்பட்ட நாளும் இடமும் சொற்பொழிவாளர் விவரமும்

  1. அவ்வாறு நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் ஒப்பித்தல் போட்டியை முதலில் நடத்தியவர்/நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் பயிற்சி வகுப்பு நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் தொடர்பான கட்டுரைப்போட்டி நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் தொடர்பான பேச்சுப்போட்டி நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் நாட்டியம் நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் நாடகம் நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் கலை நிகழ்ச்சி நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறள் பட்டிமண்டபம் நடத்தியவர் / நடத்திய அமைப்பு

  1. திருக்குறளைப் பரப்பவும் திருவள்ளுவரைப் போற்றவும் மேற்கொண்டபணிகள்

  1. திருவள்ளுவர் அல்லது திருக்குறள் பெயரிலான அமைப்பு விவரங்கள்

  1. திருக்குறள் சொற்பொழிவாற்றிய உங்கள் நாட்டவர்

  1. திருக்குறள் சொற்பொழிவாற்றிய வெளி நாட்டவர்

  1. நீங்கள் / உங்கள் அமைப்பினர் ஆற்றிய திருக்குறள் தொண்டுகள்

  1. திருக்குறள் ்அல்லது திருவள்ளுவர் பெயரில் வழங்கப்பெற்ற விருதுகள் விவரம்

  1. திருக்குறள் அல்லது திருவள்ளுவர் பெயரில் வழங்கப்பெற்ற பட்டங்கள் விவரம்

  1. திருக்குறள் அல்லது திருவள்ளுவர் தொடர்பான ஆவணப்படம் எடுக்கப்பட்டிருப்பின் விவரம்

  1. திருக்குறள் அல்லது திருவள்ளுவர் தொடர்பாக எழுதிய / வெளியிட்ட கட்டுரைகள்/நூல்கள் / மலர்கள் / இதழ்கள் விவரம்

  1. நீங்கள் வாழும் நாட்டு மொழியில் திருக்கறள் மொழிபெயர்ப்பு விவரம்
  2. ஆவணமாக்கக் கருதும் பிற விவரங்கள்
இவற்றை யெலலாம் கூடியவிரைவில் அனுப்பி வைக்குமாறும் தேவையான ஒளிப்படங்கள், செய்தி நறுக்குகள் இருப்பின் அவற்றையும் அனுப்பி வைக்குமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
 நனி நன்றி.
 அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் –11 (01.08.2020)

அகரமுதல

ஆடி 17, 2051 / 01.08.2020 சனி

மாலை 5.00

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

கூடலுரை : கவிஞர் விசயக்கிருட்டிணன்

“கம்பனில் மருத்துவம்”

தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன்
இணையத் தமிழ்க்கூடல் – 11
இணைப்பு
https://tinyurl.com/ybkpa3oj
பதிவுப்படிவம்
https://tinyurl.com/y443mdfj    
பின்னூட்டப் படிவம்
ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி