சனி, 29 ஜூலை, 2017

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம்



அகரமுதல 197,  ஆடி14,2048 / சூலை 30, 2017

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்

ஆட்சிக்குழுக் கூட்டம்

 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவரான, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கி.பழனிசாமி அவர்கள் தலைமையில் ஆடி 10, 2048 / 26.07.2017 அன்று தலைமைச் செயலகத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஐந்தாம் ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
  இந்தக் கூட்டத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் திட்டங்கள், செயற்பாடுகள், பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு பின்வரும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
  அண்மையில் ஊடகங்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், திருவாரூர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட இருப்பதாகச் செய்திகள் வந்தன. தமிழ் மொழியின் மேன்மையை ஆராய்ச்சி மூலம் உலகுக்குப் பகரும் இந்நிறுவனம் சென்னையில் இயங்குவதில் மாற்றம் செய்யக் கூடாது என்றும், எக்காரணம் கொண்டும் அதன் தன்னாட்சி அமைப்பை இழக்கச் செய்யக் கூடாது என்றும் ஆட்சிக்குழுவில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  மேலும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சிக்கெனப் புதுப் புதுத் திட்டங்கள் செயற்கடுத்திச் செவ்வியல் இலக்கிய உயராய்வினை மேலும் செம்மைபடுத்துவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் ஆட்சிக்குழுவில் ஒருமனமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  இந்தக் கூட்டத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் பு.பிரகாசம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக உயர்கல்வித்துறையின் இணைச் செயலாளர் திரு.சுக்குபீர் சிங்கு சாந்து, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி-செய்தித் துறைச் செயலாளர் திரு.இரா.வெங்கடேசன், இ.ஆ.ப., குப்பம் – திராவிடப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் இ.சத்திய நாராயணா, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) முனைவர் கோ.விசயராகவன், மைசூர் – இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) முனைவர் தி.சி.இராவு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திரு.அ.பழனிவேல், பதிவாளர் பேராசிரியர் முனைவர் முகிலை இராசபாண்டியன்,  அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
  முதல்வர், செம்மொழிநிறுவனத்தலைவர் பதவியில் செயல்படவேண்டும், ஆட்சிக்குழுவைக் கூட்ட வேண்டும் என்ற நம் வேண்டுகோள்களுக்கேற்ப முதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெறக்காரணமாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகள்.
  சமற்கிருத வளர்ச்சிக்கும் இந்தி வளர்ச்சிக்கும் மிக மிகுதியான அளவில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. தமிழுக்கும் அதே அளவு ஒதுக்கீடு பெற்றுச் செந்தமிழை பலகெங்கும் பரப்பவும் வளர்க்கவும் ஆய்வாளர்களைப் பெருக்கவும் செம்மொழி நிறுவனம் செயல்பட வாழ்த்துகிறோம்.

Legal ruling opens door for dismantling LTTE ban in other jurisdictions

Legal ruling opens door for dismantling LTTE ban in other jurisdictions

[TamilNet, Friday, 28 July 2017, 18:42 GMT]
Although the EU's de-proscription of the LTTE is promising, the Tamil right to assembly, speech, and expression remains transnationally undermined by the persistence of post-war LTTE bans in multiple jurisdictions. These bans should be challenged on legal grounds to reclaim Tamil political space in North-America and Europe, said a Tamil diaspora legal activist who worked with Netherlands-based lawyer to prepare the legal basis for the case. The decision by the European Court of Justice, albeit belated, is not self-executing at the nation-state level within the EU. As such, ‘terrorism’ related national security policies of European governments will likely continue to operate as bulwark against Tamil asylum claims and as a non-invasive surveillance model for Tamil political mobilization.

“Indeed, Tamil political space is a fundamental right, not a request. The threat of criminalization on the basis of LTTE-affiliation that the Diaspora has lived with for the past 30 years should have ended with the end of the war,” the lawyer further said.

Further comments from the lawyer follow:

“In hindsight, from the Netherlands to Denmark to UK to France, the European Tamil Diaspora’s protracted ‘toleration’ of the ban has enabled the proscription to gradually impose and entrench expanding constraints on political activity.

“The legacy of such constraints tends to render them imperceptible in the present. To this extent, all European Tamil activism — from assembly to speech to expression by raising a flag or via social media — occurs within the confines of the transnational LTTE proscription.

“For instance, a pro-LTTE message posted on Facebook that originated on an iPhone in Toronto and is read on an iPad in New York and laptop in Zurich, is likely monitored, and may flag the sender and recipients for violations of Canadian, U.S., and Swiss law.

“Today, LTTE ‘terrorism’ bans in different nation-states persist, almost a decade after the end of the war. The bans impinge and infringe upon the basic liberty of the Eelam Tamil Diaspora, providing governments with the option of limiting Tamil assembly, speech, and expression through the threat of criminalization and second-class citizenship.

“Tamil political self-determination, in London or Berlin, Jaffna or Tamil Nadu, has always been premised upon the condition of Tamil freedom as a practical matter.

“Absent basic freedoms such as assembly or speech, political self-determination is untenable in any society.

“Fundamentally, the oxygen of Tamil freedom, whether in London or Jaffna, is a system of enforceable legal rights.

“Such legal rights, if enforceable, nourish those freedoms across generations and might prevent genocide in one context and arbitrary incarceration in another.

“To take an example, the Holocaust occurred only once. However, in ‘nation-states’ with weak legal cultures, like DRC or ‘Sri Lanka’ for instance, ethnically-motivated mass atrocity crimes recur and are often government-sponsored or government-initiated,” the activist said urging Tamil diaspora activists to support the mobilization of next level of the legal struggle.

Chronology:

வெள்ளி, 28 ஜூலை, 2017

சித்தர்கள் கூறும் இரகசியங்கள் -அணிந்துரை


டி.வி.வெங்கட்டராமன், இ.ஆ.ப., (ப.நி.),
முன்னாள் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு அரசு.
நூலாசிரியர், திருமூலர் அருளிய திருமந்திரம் – அனுபவ உரை.
     6, (17), முதல்  நிழற்சாலை, இந்திரா நகர், சென்னை – 600 020.
தொலைபேசி: 044-24417705

அணிந்துரை

          அருமை நண்பர் இரா.கற்பூரசுந்தரபாண்டியன் அவர்களும் அவருடைய மனைவியார் திருமதி. சாந்தா அவர்களும் ‘சித்தர்கள் கூறும் இரகசியங்கள்’ என்ற தலைப்பில் வழங்கியுள்ள இந்த கட்டுரைத் தொகுப்பினை படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். சித்தர் இலக்கியத்திற்கு இந்தத் தம்பதியர் அளித்துள்ள படைப்பு ஒரு பெரும் பரிசாகும் என்று அவர்களைப் பாராட்டுகின்றேன். இந்த நூலில் சித்தர்களின் தத்துவங்கள், நெறி, பாதை போன்றவற்றைப்பற்றிய தெளிவான விளக்கங்களைத் தெரிந்து கொள்கிறோம். சித்தர் நெறிக்கு அடிப்படையான ஓகப்பயிற்சி முறைகளைப் பற்றிய விரிவான விளக்கங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதற்கு மேலாகப் பாண்டியன் தம்பதியர், சித்தர் உலகில் பெற்ற சொந்தப்பட்டறிவுகள்,  நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. அவர்கள் ஞானம் பெற்றுள்ள சித்தர் தத்துவக் கல்வியும் பயிற்சி முறை ஞானமும் இந்த நூலின் மூலம் இயல்பாகவே வெளிப்படுவது கண்டு பெருங்களிப்படைகிறோம். இந்த ஆசிரியர்கள் இருபது ஆண்டுகளுக்கு மேலாகச் சித்தர் துறையில் ஆராய்ச்சி செய்துவருகின்றனர் என்பது ஒரு பக்கம். அதேநேரத்தில் தாங்கள் கண்ட உண்மைகளைப் பட்டறிவாக ஆக்கிக்கொண்டு,  ஆன்மிக உயர்வு பெற்று வருவது என்பதே மிக்க போற்றத்தக்கது.
          தமிழ்நாடு சித்தர்களின் பூமி. பதினெட்டுச் சித்தர்களைத் தவிர,  தமிழகத்தில் வாழ்ந்த,  வாழ்ந்துவரும் பல சித்தர்களைப்பற்றித் தெரிந்து கொண்டுவருகிறோம். அவர்கள் வாழ்ந்த புனித இடங்களைப் பற்றிய விவரங்கள் நமக்கு கிடைத்து வருகின்றன. திரு.கற்பூரசுந்தரபாண்டியன் அவர்கள் தலைமை வகிக்கும் உலகச் சித்தர் ஆராய்ச்சி மையம் இதற்காகச்,  சிறப்பான தொண்டாற்றி வருகிறது. தமிழனுடைய உணர்வில் சித்தர்கள் எப்போதும் இருப்பர். காரணம் சித்தர்கள் நிறைவு பெற்றவர்கள். கடவுளைக் கண்டவர்கள். தமிழன் கடவுளைக் காண விரும்பும் போதெல்லாம் சித்தர்களின் நெறிமுறைகளை மேற்கொள்ள  விரும்புவதில் வியப்பு ஒன்றும் இல்லை. வெறும் ஓகஇருக்கை(யோகாசன)ப் பயிற்சி என்பது ஒன்று. சித்தர் நெறியோடு இணைந்து பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் கடவுளை நெருங்கும் உபாயம் வெளிப்படும்.
     திரு. இரா.கற்பூரசுந்தரபாண்டியன் பல ஆண்டுகளாக என்னுடைய நெருங்கிய நண்பர் ஆவார். ஆட்சிப்பணியில் இணைந்து பணியாற்றி இருக்கின்றோம். முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஞ்சியார்,  முதலமைச்சர் புரட்சித்தலைவி செ. செயலலிதா ஆகியோருடைய நன்மதிப்பைப் பெற்றவர். திறமை மிக்க பணியாளர். அதேநேரத்தில் எளிமைபோன்ற பல உயர்ந்த பண்புகளை தன்னுள் கொண்ட காரணத்தால் இயல்பாகவே நன்னடத்தை உடையவர். எனவே எல்லாராலும் போற்றப்படுபவர். சித்தர் கல்வி பெற்றிருந்த காரணத்தால் பண்பு நிறைந்த பணிகளையே செய்துவரும் தன்மையுடையவராக இருக்கின்றார்.
          திருமதி. சாந்தா பாண்டியன் சிறந்த கல்வியாளர். மேனிலைப் பள்ளிகளைச் சிறப்பாக நடத்திக் கல்வித்துறையில் நல்ல  பட்டறிவு பெற்றவர். ஆழ்ந்த ஆன்மீக சிந்தனையாளர். பல பட்டறிவுகளைப் பெற்றவர்.
          இந்த இணையரின் கடந்த இருபது ஆண்டுக்கால ஆராய்ச்சியின் பயனாகத் தங்களுக்குத் தெரிந்த மற்றும் உணர்ந்துகொண்ட சித்தர்கள் கூறும் பயிற்சிமுறைகளையும் தங்கள் பட்டறிவுகளையும் தெளிவாக இந்த நூலில் பகிர்ந்து கொண்டது பாராட்டத்தக்கது. சித்தர்கள் அருளிய நோய்தீர்க்கும் மருந்து வகைகளைப் பற்றிய விவரங்களும், தமிழகத்தில் சித்தர்கள் உயிர்ச்சமாதியான இடங்களைப் பற்றிய பட்டியலும் இந்நூலில் இடம் பெருவது வரவேற்கத்தக்கது. மேலும் சித்தர்களைப் பற்றிய ஆழமான செய்திகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
          படிப்பதற்கு மட்டுமின்றிச், சிந்தித்து நடைமுறைப் படுத்துவதற்கும், இந்த நூல் மிக்க பயனுள்ளதாக இருக்கும். ஏராளமான அன்பர்கள் படித்துச் சித்தர்கள் வழிச் செல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கு இந்த நூல் உதவும் என்பதில் ஐயமில்லை.
(டி.வி.வெங்கட்டராமன்)
நாள்: 28.5.2017

West funds SL military by channeling funds through UN and SL Ministry

West funds SL military by channeling funds through UN and SL Ministry

[TamilNet, Thursday, 27 July 2017, 19:17 GMT]
The so-called SL Minister of Resettlement, D.M. Swaminathan has become a money transfer agent between the occupying military of genocidal Sri Lanka and the Western donor states backing the unitary State based in Colombo, commented Tamil activists in Mullaiththeevu after meeting a delegation of protesting people from Keappaa-pulavu, who met the SL minister on Wednesday. The SL Minister, in his meeting with the representatives of the protesting people, has revealed that the SL military was demanding 148 million rupees in order to release 110 acres of their lands in the ‘next phase’. The so-called international community seems to pay money to its Lascarine military. Tamil diaspora activists should scrutinise the funds being channelled to the UN system and the NGOs operating in Colombo, they said.

The SL Minister who paid a visit to Keappaa-pulavu last week was confronted by the people. While talking to the protesters, the SL Minister revealed that the SL military got 5 million rupees to release 189 acres of lands.

But, the lands released last week were situated away from the lands seized from people in Keappaa-pulavu by the SL military.

There has been no military hardware or buildings in the lands that were released last week. Why did Swaminathan's ministry pay 5 million rupees to release the lands that were actually in the custody of SL Forest Department, the uprooted people ask.

The released lands contain 6 pieces of lands that belong to people who are not from the area. There has been no civilian settlement in the lands in the past.

The SL military has been illegally occupying the lands. Why should anyone pay money to relocate it from the seized area. Even when the money is given, the SL military is not releasing the lands that it occupies.

Just citing the protest of the people, the money is getting transferred to strengthen the military occupation of Keappaa-pulavu, the uprooted people complain.

The uprooted people are going to step up their protest seeking increased awareness on their plight.

In the meantime, the people who resettled in Pilak-kudiyiruppu after long struggle, complain that they have been completely abandoned without any infrastructure. The SL military is everywhere. The people have no shelter and no safe transport for their children to school. As a result, many families have temporarily relocated from Pilak-kudiyiruppu.

While SL military is being paid money to sustain its grip, the uprooted people have been completely abandoned, the activists further said.

Chronology:

வியாழன், 27 ஜூலை, 2017

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு


அகரமுதல 196,  ஆடி07, 2048 / சூலை 23, 2017

இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு


ஆடி 13, 2048    சனிக்கிழமை     29-07-2017   

 மாலை 6.00 மணி

சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) ,

அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை

சென்னை 600018   



கவிக்கோ அப்துல் இரகுமான்
உரையாற்றுபவர்: 
நேசமணி திரு. புதுவை இராமசாமி 
               
தொடர்ந்து

குவிகம் இலக்கிய வாசலின் 28 ஆவது நிகழ்வு


தமிழில் விஞ்ஞான எழுத்துகள்
– உரையாற்றுபவர் :     
  திரு ச கண்ணன்     
நிறைவாக

குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தக வெளியீடு


சில படைப்பாளிகள்

அனைவரும் வருக!