வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

fox delevered dogs



புதுச்சேரி: நாய்க்குட்டிகளை வயிற்றில் சுமந்து ஈன்ற விசித்திர நரி பிடிபட்டது. புதுச்சேரி அரும்பார்த்தபுரம் அடுத்த ஜி.என். பாளையத்தில் வீடுகளில் இருந்த கோழிகள் நள்ளிரவில் அடிக்கடி திருடு போனது. இரவு நேரங்களில் நரி ஒன்று ஊருக்குள் உலா வருவது கிராம மக்களுக்குத் தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் ஜி.என். பாளையத்தில் முகாமிட்டு நரியை தேடினர். அப்போது ராமச்சந்திரன் என்பவரது வீட்டின் படிக்கட்டு கீழ்பகுதியில் நரி அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. நரி இல்லாத சமயத்தில் வனத்துறை ஊழியர்கள் அங்குபோய் பார்த்தனர். அப்போது மூன்று நாய்க்குட்டிகளை நரி ஈன்று பாலூட்டி வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். இதனையடுத்து குட்டிகளுடன் நரியை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

நாய்க்குட்டிகளைப் பொறியில் பிடித்து போட்டு நரிக்காக கடந்த 3 நாட்களாக காத்திருந்தனர். ஆனால் சமார்த்திசாலியான நரியிடம் இந்தத் திட்டம் பலிக்கவில்லை. கூண்டுக்குள் சிக்காமல் நரி அவ்வப்போது வந்து புத்தசாலித்தனமாக குட்டிகளைக் காப்பாற்ற போராடியது. இதனையடுத்து வனத்துறை ஊழியர்கள் தங்களது திட்டத்தை மாற்றினர். வீட்டு அறைக்குள் குட்டிகளை மாற்றி வைத்து நரிக்கு தெரியாமல் பொறி வைத்தனர். இந்த முறை கூண்டுக்குள் வசமாக நரி சிக்கி கொண்டது. பிடிபட்ட நரியும் அதன் குட்டிகளையும் வனத்துறை அலுவலகத்திற்கு ஊழியர்கள் பாதுகாப்புடன் கொண்டு வந்தனர். நரி ஈன்ற நாய்க்குட்டிகளை ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்துவிட்டு செல்கின்றனர்.

வனத்துறை டாக்டர் குமரன் கூறுகையில் "பிடிபட்ட பெண் நரி, நாட்டு ஆண் நாயுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததால் 3 பெண் குட்டிகளை ஈன்றுள்ளது. நாய், ஓநாய், நரி, குள்ள நரி அனைத்தும் கேனிடா என்னும் முதுகெலும்புள்ள குடும்பத்தைச் சேர்ந்வை. இவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் அந்தந்த இனத்தில் மட்டுமே இனப்பெருக்க காலத்தில் உறவு கொள்ளும். சில நேரங்களில் ஒரு இனத்துடன் மற்றொரு இனம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கும் போது இது போல் அரிதாக நடந்து விடுகிறது. நரி ஈன்ற குட்டிகளுக்கு இன்னும் கண் திறக்கவில்லை. கண் திறக்க 5 நாட்கள் பிடிக்கும். முழுமையாக வளர்ந்தால் தான் எந்த விலங்கினுடைய பண்பு வெளிப்படுகிறது என்பது தெரியவரும். நரியை வளர்த்தவர்கள் அதனைப் பராமரிக்க முடியாமல் வெளியேவிட்டுவிட்டதால் நாயுடன் பழகி குட்டிகளை ஈன்றுள்ளது' என்றார்.

Frequently Asked Questions in any interview

Frequently Asked Questions in any interview


Posted Date: 12 Dec 2010    Resource Type: Articles/Knowledge Sharing    Category: Career Guidance
Author: Hamza PalengaraMember Level: Gold    
Rating: 3 out of 53 out of 53 out of 5Points: 15 (Rs 10)


Are you going to attempt an interview? Do you want to crack any interview easily? Don't have any idea what will be asking for interview? Then you are in the right place for solving your problem. Here you can go through 50 frequently asked questions that are found to be asked for every interviews, just find out your answer for these questions and crack every interviews.



Frequently Asked Questions in any interview


Interview is actually an opportunity to express your attitudes, feelings and understandings rather than writing an exam where you can answer only the questions asked. If you prepare a little then you can guide and control the interview panel through your track and can make them good impression.

Here i am going to depicts a 50 common questions that are found to be asked frequently in almost all interviews. Just read those questions and find out what will be your answer. Always try to give a positive answer, you can give even negative answer but your justification should be strong positive. There is no absolute right or wrong in this world. Your right will be some others wrong but you should have good justification. Just go through this question and find out what will be your answer.



1.What do you know about this company/organization?

2.Tell me about yourself.

3.What experience do you have in this particular field?

4.What is your opinion about this company?

5.Why did you quite your last job?

6.What is your opinion about your co-workers?

7.How much salary you are expecting for your work?

8.How long will you work for us?

9.Do you have leadership qualities and ldading experiane?

10.What is your opinion towards work?

11.Why we should hire for you?

12.Is it the right job you are searching?

13.What is your dream job?

14.What is your great strength?

15.How you could overcome a particular problem?

16.Tell me about your family background?

17.How you can do the job we are suggesting?

18.What kind of person you refuse to work with?

19.What has disappointed you about the job?

20.Which one will you prefer: work or money?

21.Is this the right job for your educational qualification?

22.How will you perform better in a condition of under pressure?

23.What irritate you about this company?

24.Are you ready to work overtime?

25.Which one will you prefer: your interest or company's interest?

26.What is your opinion about your boss?

27.What irritate you about your boss?

28.Explain about your native place?

29.Give some suggestions to improve performance of company?

30.Do you think that you are the right person for doing this job?

31.What is the biggest disappointment in your life?

32.What is biggest loss in your life?

33.Why did you prefer this company?

34.Your opinion about job merit rating?

35.Which are the additional knowledge you have for doing this work?

36.What are your weak points?

37.Explain about your management style?

38.How we can make sure that you are the right person for doing this job?

39.What are the things which will motivate you in this job?

40.What would your co-workers said about your weaknesses and strengths?

41.Tell me a problem you had with your supervisor in previous job?

42.Are you ready to work with any type of co-workers?

43.Which are the allowances you expect from us?

44.What is your opinion about team work?

45.How you can lead a team to achieve the goals?

46.Do you know any one who work for us?

47.What is the most unforgettable thing in your life?

48.How you can become an asset for our company?

49.How you can change your mistake into success?

50.Do you have any question to us?


In addition to these questions you can also expect some questions for checking your subject knowledge, technical skill etc. Try to find out your own answer and justification for your particular answer. Go and crack the interview. Good luck.


with regards,
Hamza palengara.

P.M.about tamilnadu election results; நான் ஜோதிடர் அல்ல: பிரதமர் மன்மோகன் சிங்

கேரளத்திலும் மே.வங்கத்திலும் ஒளிமயமான வெற்றியை மட்டும் எந்தச் சோதிடத்தின் அடிப்படையில் கூறினாராம். அப்படியானால் தமிழகத் தேர்தல் முடிவுகள்  தோல்வியைத் தரும என்ற  அச்சம் உள்ளது என்பது புரிகிறது. ஒரே சமயத்தில் இப்படியா ௨ இல் வெற்றி ஒன்றில் சோதிடம் தெரியாது
எனப் பொன்மொழி உதிர்ப்பது! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


நான் ஜோதிடர் அல்ல: பிரதமர் மன்மோகன் சிங்

First Published : 17 Feb 2011 02:51:45 AM IST


புதுதில்லி, பிப். 16: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுமா என்று கேட்டபோது, நான் ஜோதிடர் அல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  கேரளம், அசாம் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புள்ளது என்றார் அவர்.  தில்லியில் தொலைக்காட்சி சேனல் செய்தி ஆசிரியர்களுக்கு புதன்கிழமை அளித்த சிறப்புப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.  மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸýடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. திரிணமூல்- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய அளவில் பிரச்னை ஏதும் இல்லை.  கேரளத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பிரகாசமான வாய்ப்புள்ளது என்றார்.  அசாமில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா என்று கேட்டபோது,அசாம் அரசு சிறப்பாகப் பணியாற்றி வருகிறது. உல்பா தீவிரவாதிகளுடன் அமைதிப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமான அம்சம் என்றார் பிரதமர்.
கருத்துகள்

சரி ,உங்களுக்கு தெரிந்த நல்ல ஜோதிடரை தாத்தாவுக்கு அறிமுகம் செய்து வையுங்கள் ,உங்கள் கூட்டணி வெற்றி பெறுமா இல்லையா என்பதைவிட அரசில் நீங்கள் பங்கு கேட்பீர்களா இல்லையா என்பதுதான் தலைபோகிற பிரச்சினை .
By மூர்த்தி
2/17/2011 1:26:00 PM
சோனியாவிடம் கேட்க வேண்டிய கேள்வியை, பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கேட்டிருக்க கூடாது. ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே கண்ணா.
By பி.டி.முருகன் திருச்சி
2/17/2011 8:52:00 AM
இவர் கேவலம் பிரதம மந்திரி தானே?இவர் எதுக்கு காங்கிரஸ் தலைவர் மாதிரி தேவை இல்லாமல் தெரிந்த மாதிரி அரசியல் பேசுகிறார்.
By புதுகை selva
2/17/2011 6:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

India request ilangai to release 136 fishermen: 136 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கைக்கு இந்தியா கோரிக்கை

தயவு செய்து, தயவு செய்து, தயவு செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதுவரை நடத்திய படுகொலைகளுக்கு எல்லாம் எரி குண்டுகளும் படைக்கலன்களும் ஏவுகணைகளும் வானூர்திகளும் தளபதிகளையும் வீரர்களையும் வல்லுநர்களையும் வழங்கவில்லையா? எனவே மீண்டும் மீண்டும் மீண்டும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம். சனியன் பிடித்த தேர்தல் தமிழ் நாட்டில் நடக்கப் போகிறது. என் செய்வது? எனவே, அம்மா உங்களுக்கு உதவ முடியாமல் தவிக்கிறார்கள். வாக்குப் பதிவு அன்றைக்கே கூட நீங்கள்வழக்கம் போல் ஆட்டம் போடலாம். நாங்களும்- உங்கள் அடிமையான நாங்களும் - வேடிக்கை பார்ப்போம் . ஏன் மீண்டும் உதவுவோம். எனவே விட்டு விடுங்கள். தமிழர்கள் மீது பழி போடுவதற்கான நாடகம்தானே ௧௦௬ பேர் கைது! விட்டு விடுங்கள். அப்புறம் அந்தப் பதினான்கு பேர்.இப்பொழுது வேண்டா. முதலில் வந்து உயிரை விடாத  ௬ பேர் வேறு கழுத்தறுக்கிறார்கள். விட்டுத் தள்ளுங்கள். தேர்தலுக்குப்பின் ௧௩௬ என்ன? ௧௧௩௬ பேரைக்கூடப்  பிடிக்க்லாமே! வதைக்கலாமே! நாங்கள் என்ன சொல்லப் போகிறோம்! என்று பேசியிருப்பாரோ??? 
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்


136 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கைக்கு இந்தியா கோரிக்கை


புதுதில்லி, பிப்.17: யாழ்ப்பாணத்தில் பிடித்துவைக்கப்பட்டுள்ள 136 தமிழக மீனவர்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள இந்தியா, அவர்களை விடுவிக்க இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல் பெரிஸுடன் இதுகுறித்து தொலைபேசியில் உரையாடினேன். யாழ்ப்பாணத்தில் 136 மீனவர்கள் பிடித்துவைக்கப்பட்டுள்ளது குறித்து இந்தியாவின் கவலையை அப்போது தெரிவித்தேன் என மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தில்லியில் தெரிவித்தார்.இந்தியா, இலங்கை இடையேயான இருதரப்பு உறவின்படி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் எழுந்துள்ள பதற்றத்தைத் தணிக்க இருவரும் உதவ வேண்டியது அவசியம். மீனவர்களை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என கிருஷ்ணா தெரிவித்தார்.இலங்கையில் வியாழக்கிழமை விடுமுறைதினம், அன்றைய தினம் நீதிமன்றம் செயல்படாது. வெள்ளிக்கிழமை நீதிமன்றம் திறந்ததும், 136 மீனவர்களையும் விடுவிக்க இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்தார்.
கருத்துகள்

இந்திய பேரரசு மீது இலங்கை அவிழ்த்துவிடும் அராஜகத்தை தட்டிக் கேட்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது மத்திய அரசு... சொந்த நாட்டு மக்களை அடுத்த நாட்டு ராணுவத்திடம் பலி கொடுக்கும் கொடுமை இந்தியாவை தவிர வேற எந்த நாட்டிலும் நடக்காது
By ரவி
2/17/2011 8:21:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


வியாழன், 17 பிப்ரவரி, 2011

suba.muthukumar murdered: தமிழீழ ஆதரவாளர் புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் வெட்டிக்கொலை

நேற்று இந்தத்துயரச் செய்தியைப் படித்த பொழுதே நெஞ்சு கனத்தது. நாட்டு நலனில் ஈடுபாடு செலுததும் நல்லிளைஞர்,  இன நலனுக்கெனத் தன்னை இணைத்துக் கொண்ட  இனிய பண்பினர், இல்லறத்தில் ஓராண்டிற்குமுன்தான் அடியெடுத்து வைத்த நல்லறம் பேணுபவர், காட்டு விலங்கினரால் கடித்துக் குதறி மாய்க்கப்பட்டுள்ளாரே! அவரது குடும்பத்தினருக்கும் இயக்கத்தினருக்கும் நம் ஆழ்ந்த இரங்கல்கள். ஆனால்,
இந்த  இரங்கல்கள் இறந்தவரை மீள வரச் செய்யாதே! என்ன கொடுமை இது!
இத்தகைய கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது எவ்வாறு? எப்போது?  ஈழத்தமிழர்கள உள்ளாக்கப்படும் கொடுமைகளுக்காக உயிர்க்கொடை ஈந்தான் வீரப்போராளி முத்துக்குமார்! இன்றைக்கு வஞ்சகர் செயல்களால்  தன்னுயிர்  ஈகம் செய்தான் இன்னொரு முத்துக்குமார்! முத்துக்குமார்கள் உயிரிழந்தது போதும்! கொடியவர்கள் கூண்டிற்குள் அடைபடும் நாள்  வரட்டும் விரைவில்! வருத்தத்துடனும் துயரத்துடனும் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழீழ ஆதரவாளர் புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் வெட்டிக்கொலை

puzhalfront_muththukkumar001
தமிழ் தேசிய சிந்தனையாளரும் தமிழீழ ஆதரவாளருமான புதுக்கோட்டை சு.முத்துக்குமாரை சற்று நேரத்தின் முன்னர் சிலர் வெட்டிக்கொன்றுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்தவர் சுப.முத்துக்குமார்.
ஈழப்போரின் கடைசி நேரத்தில் சிறீலங்கா அரசபயங்கரவாத போரினால் காயம்பட்ட மக்களுக்கு மருத்துவத்திற்கு தேவையான மருந்துப்பொருட்களை அனுப்பியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் காட்டில் இருந்தவர்.   இவருக்கு தமிழ் உணர்வாளர்களுடன் அதிக உறவு உண்டு.
இவர் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கரு.காளிமுத்து என்பவரின் மகளை திருமணம் செய்தார்.
சமீபகாலமாக  ஈழப்பிரச்சனையில் மிகவும் தீவிரமாக செயல்பட்டுவந்தார்.     சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டுவந்தார்.
சீமான் கலந்துகொள்ளும் எந்த விழாவாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குவதில் முக்கிய பங்குவகித்தவர்.
கடந்த மாதத்தில் சீமான் உயிருக்கு சிலர் குறி வைத்திருப்பது தெரிந்ததும்,  சீமானுக்கு  பலத்த பாதுகாப்பு பணியை செய்து வந்ததும் முத்துக்குமார்தான்.
இந்த நிலையில் இன்று இரவு 10 மணிக்கு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இவர் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்

dinamani article about prohibition: அறியா சனமும், அரியாசனமும்!

௧௪௦௦௦ கோடி வருவாயில் நலத்திட்டச் செலவுகளுக்கே ௧௦௦௦௦ ஆயிரம் கோடி உரூபாய் சென்று விடும். மக்களிடம் பிடுங்கி அதில் ஒரு பகுதியை மக்களிடம் தருவதை விட அதனைத்தராமலேயே  இருக்கலாம். மதுவினால் பிளவு படும் குடும்பங்கள் ஏராளமாக உள்ளன. மகனை இழந்த, கணவனை இழந்த, தந்தையை  இழந்த குடும்பங்களும் மிகுதியாக உள்ளன. எனவே,
அரசு மது ஒழிப்பில்தான் கவனம் செலுத்த வேண்டும். இன்றைக்குப் பா.ம.க. மட்டுமே மது விலக்கு பற்றித்  தொடர்ந்து பேசிவருகிறது. அதனைக்கட்சி சார்பற்ற மக்கள் இயக்கமாக அக்கட்சி மாற்ற வேண்டும். குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்தை அடியோடு வேரறுப்போம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அறியா ஜனமும், அரியாசனமும்!


டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுபானங்களை விற்ற வகையில் தமிழக அரசுக்கு இவ்வாண்டு ரூ. 14,152 கோடி கிடைக்கும் என்றும், இது கடந்த ஆண்டைவிட ரூ. 3 ஆயிரம் கோடி அதிகம் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  இத் தொகை மாநில மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தவே செலவழிக்கப்படுகிறது என அரசு தொடர்ந்து தெளிவாகக் கூறிவருகிறது. மது குறித்துப் பேசினால் மெüனத்தையே பதிலாக்குகிறது. எது நல்லது என மக்களுக்குக் காட்ட வேண்டிய அரசு, மது நல்லது எனக் கூறுவதைப்போல இருக்கிறது. இத்தகைய செயலுக்கும், மானத்தை விற்று உடலில் பட்டாடைகளும், பகட்டான நகைகளும் அணிந்துகொள்ளும் செயலுக்கும் அதிக வேறுபாடில்லை என்பதே உண்மை.  தெருவெங்கும் தமிழ் முழக்கம் வேண்டும் என்றார் பாரதி. தமிழ் மீது தீராத பற்று எனக் கூறிக் கொள்வோர் ஆட்சியிலோ தெருவெங்கும் மது முழக்கமே கேட்கிறது!  அரசின் இலவசத் திட்டங்களால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதேனும் ஒரு விதத்தில் பயனடைகிறது என ஆட்சியாளர்கள் அறிக்கை வெளியிட்டு அகமகிழ்ந்து கொள்கிறார்கள். அதை முழுக்க முழுக்க உண்மை எனக் கொண்டால், டாஸ்மாக் மதுக்கடைகளால் எத்தனை குடும்பங்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என அறிவிக்க அவர்கள் முன்வருவார்களா?  குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் உழைப்பதால் கிடைக்கும் பொருளைச் சேர்த்து வைத்தால்தான் அக் குடும்பம் பொருளாதாரரீதியாக முன்னேற்றம் அடைந்ததாகக் கூற முடியும். மாறாக கிடைக்கும் ஊதியத்தைச் செலவழித்து ஆண் உறுப்பினர்களைக் குடிக்கவைத்து அழிவை நோக்கி அழைத்துச் செல்வதும், பெண்களை பொருளாதாரத்தில் முன்னேற்றிவிட்டோம் என பெருமைப்பட்டுக் கொள்வதும் முறைதானா என்பதை ஆட்சியாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.  குடும்பத்தின் ஆண் உறுப்பினரிடமிருந்து நிரந்தரமாகப் பறிக்கப்படும் பெரும் தொகையில் ஒரு சிறு பகுதியை அக் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களுக்குக் கடன் என்ற பெயரிலோ, நலத்திட்ட உதவி என்ற பெயரிலோ, இலவசம் என்ற பெயரிலோ வழங்குவதில் என்ன சிறப்பு? வைரங்களை வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு கூழாங்கற்களைக் கொடுத்து குஷிப்படுத்துவதுபோலத்தானே!  ஆண்கள் மது குடித்துவிட்டுத் தன்னினைவு இழந்து விழுந்துகிடக்க, அவர்களின் மனைவிகளை பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையச் செய்துவிட்டோம் என வீதிக்கு வீதி முழங்கிக் கொள்வதில் என்ன நன்மை கண்டது அரசு? ஒரு கண்ணைக் குருடாக்கி மறுகண்ணுக்கு மை அலங்காரமா?  தன் தந்தையோ, சகோதரனோ, கணவரோ இந்த ஆண்டாவது குடிப்பழக்கத்தை நிறுத்துவாரா என குடும்ப உறுப்பினர்கள் கவலையும் கண்ணீருமாய் இருக்க, மது விற்பனை தங்குதடையின்றி நடைபெற்று இலவசத் திட்டங்களைச் செயல்படுத்த இந்த ஆண்டும் கஜானா வழக்கத்தைவிட கூடுதலாய் நிரம்பி வழிய வேண்டும் என நினைத்து அதற்கான அத்தனை கதவுகளையும் திறந்துவைப்பதா பொறுப்பான அரசின் பணி?  அமோகமான மது விற்பனையும் உண்டு. மது குடித்துவிட்டு வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி குற்றுயிரும் குலையுயிருமாய் வீதிகளில் கிடந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவையும் உண்டு.  தன் குடும்பத் தலைவனின் நிலைமையையும், குடும்பத்தின் நிலையையும் நினைத்துப் பார்த்து ரத்தம் கொதித்து பல்வேறு நோய்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் உள்ளானால் வீட்டுக்கே வந்து அவர்களைப் பரிசோதனை செய்ய நலமான தமிழகம் திட்டமும் உண்டு. இது, பிள்ளையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டும் முயற்சியா, பிரச்னைகளை ஏற்படுத்திவிட்டு தீர்வு சொல்லும் முயற்சியா?  மது விற்ற தொகையில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம், போனஸ், பலவித படிகள் என ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுக்கும் அரசு, மது குடித்துச் சீரழியும் ஏழைகளின் குடும்பங்களுக்கு ஒரு ரூபாய் அரிசி போதும் என நினைத்திருப்பதுபோலத் தோன்றுகிறது.  தேர்தலில் தோற்றுவிட்டால் தமிழக மக்களை "சோற்றால் அடித்த பிண்டங்கள்' என வர்ணித்து வயிற்றெரிச்சலைத் தணிப்பது சிலரது குணம். இப்போது அவர்கள் ஏழைகளை "அரிசியால் அடித்த பிண்டங்கள்' என நினைத்துக் கொண்டார்கள்போலும்!  பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைக்க வேண்டும் என்பார்கள். ஆட்சியாளர்களோ, கள் இருந்த இடத்தில் டாஸ்மாக் மதுவை வைத்துவிட்டு, பொதுமக்களின் காதுகளில் பலவித இலவசங்கள் என்னும் பூவை வைக்க முயல்கிறார்கள்.  ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை மது மட்டுமல்ல, இலவசங்களும் ஒருவித போதைதான். அதனால்தான் இரண்டையும் நிறுத்தாமல் இன்னும் வாரி வழங்குவேன் என்கிறார்கள்.  எதையாவது பெற்று, வாக்குகளை விற்று இன்றைய பொழுதைக் கழித்தால் போதும் என்ற மன நிலைதான் இன்றைக்கு மக்களிடமும் நிலவுவதாகத் தெரிகிறது.  எது சொன்னாலும் நம்பிக்கொண்டு, மதுவுக்கு அடிமைப்பட்ட ஆண்களும், எலும்புத்துண்டு இலவசங்களுக்கு அடிமைப்பட்ட பெண்களும் எனப் பெரும்பான்மையான அறியா ஜனங்கள் இருக்கும் வரைதான், அரியாசனங்கள் தங்கள் குடும்பச் சொத்தாகவும், ஏகபோக உரிமையாகவும் இருக்கும் என்பது ஆட்சியாளர்களின் கணக்கு. அறியா ஜனங்கள் உண்மைகளை அறிந்து, சரியான ஜனங்களாக மாறினால்தான் அரியாசனங்கள் நாட்டு மக்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும் சரியாசனங்களாகும்!

dinamani article about pa.jeevanantham: : பெயரைச் சொல்லவும் தகுதி வேண்டும்!


உண்மைச் செய்திகளைத் தெரிவிக்கும் பொழுது ஊகச் செய்திகளுக்கு இடம்தரக்கூடாது. தேவிகுளம், பீர்மேடு  ஆகிய தமிழர் பகுதிகளைத்தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்ற  போது குளமாவது மேடாவது என்று கூறித் தன்னை இந்தியனாகக் காட்டிக் கொண்டவர்தான் தலைவர் காமராசு அவர்கள்.இன்றும் அவை கேரளத்துடன்தான் உள்ளன. எனவே,  அதற்கான பாராட்டுக் கூட்டம் என்பது தவறு. அடுத்த  தவறு :சீவா பிறந்த ஊர் பூதப்பாண்டி. ஆனால், சென்னை தாம்பரததில் வாழ்ந்த பொழுதுதான் குறிப்பிட்ட நிகழ்வு நடந்துள்ளது.
தவறான செய்திகள்  இடம் பெற்றால் சரியான செயதிகளையும் தவறு எனக் கருதும் நேர்வு நிகழும் அல்லவா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
 
 
பெயரைச் சொல்லவும் தகுதி வேண்டும்!

First Published : 17 Feb 2011 12:00:00 AM IST


சமீபத்தில் தோழர் ப. ஜீவானந்தத்தின் பேத்தி திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தியிருக்கும் ஒரு கருத்து நகைப்பை வரவழைத்தது. அவர் பேசும்போது, தனக்கும் தோழர் ப. ஜீவானந்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறித் தன்னைத் தோழர் ஜீவாவுக்கு நிகராக, தோழர் ஜீவாவின் தோழராக முதல்வர் கருணாநிதி நிலைநிறுத்த முயன்றிருப்பது அப்பட்டமான சரித்திரப் புரட்டு.  தொடர்பு என்றால் நெருங்கிய பழக்கமா? அல்லது அவரது வாழ்வுக்கும் இவரது வாழ்வுக்கும் ஒருமைப்பாடு உள்ளது போல் தோற்றமா? ஜீவா 1906-ம் ஆண்டு பிறந்தவர். இவரோ 1924-ம் ஆண்டு பிறந்தவர். வயது அளவில் 18 ஆண்டுகள் மூத்தவர் ஜீவா. அப்படியிருக்க பழக்கம் நெருங்கிய தொடர்பாக இருக்க வாய்ப்பில்லை. ஜீவாவுடைய வாழ்வுக்கும் கருணாநிதியின் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதுபோல் பேசியிருப்பதன் மூலம் எவ்வளவு பெரிய பொய்யை சர்வசாதாரணமாக அவிழ்த்துவிட முயல்கிறார் முதல்வர் கருணாநிதி.  இன்று இவர் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும், இவர் நாவசைந்தால் அதில் வரும் அத்துணை வார்த்தைகளும், பத்திரிகைகளிலே அச்சேறுவதாலும், தனது குடும்பச் சொத்தாக இரண்டு தொலைக்காட்சிச் சேனல்களை வைத்துக் கொண்டிருப்பதாலும் இவர் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடுமோ? இவர் கூறினால் நான்கும் மூன்றும் எட்டாகி விடுமா என்ன?  தோழர் ஜீவாவோ தியாகத்தின் இமயம். முதல்வர் கருணாநிதியோ குடும்பப்பாசம் என்கிற சுயநலத்தின் ஒட்டுமொத்த உருவம். பொது வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இருவருடைய வாழ்க்கையும் ஒன்று சேர்த்துப் பார்க்க முடியாத இரு வேறு துருவங்கள்.  இன்று ஜீவா இல்லை என்பதாலும், இன்றைய தலைமுறையினர் பலருக்கும் ஜீவாவைப் பற்றித் தெரியாது என்பதாலும் ஜீவாவுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறித் தன்னை ஜீவாவுடன் ஒப்பிட முதல்வர் கருணாநிதி துடிப்பது, பரங்கிமலை தன்னை இமயத்துடன் ஒப்பிட்டு மகிழ்வது போலல்லவா இருக்கிறது.  1927-ம் ஆண்டு மகாத்மா காந்தி, இலங்கை சுற்றுப் பயணம் செல்லும் முன், காரைக்குடி அருகே சிராவயல் என்ற கிராமத்தில் "காந்தி ஆசிரமம்' என்ற பெயரில் ஜீவா ஒரு ஆசிரமம் நடத்துவதாகக் கேள்விப்பட்டார். சுப்பிரமணிய சிவாவுடன் மகாத்மா காந்தி சிராவயலுக்கு விஜயம் செய்தார். ஆசிரமம் நடத்தி வரும் ஜீவாவிடம் ஆசிரமத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார்.  காந்தியாரிடம், "சபர்மதி ஆசிரமத்தில் நோயால் அவதிப்பட்ட கன்றுக் குட்டியை விஷ ஊசி போட்டுக் கொன்றதாக ஒரு செய்தி சுதேசமித்திரனில் பார்த்தேன். தாங்கள்தான் அந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னதாகக் கேள்விப்பட்டேன். அஹிம்சையே உருவான தாங்கள் அதைச் செய்யலாமா?' என மகாத்மாவிடம் ஜீவா கேள்வி கேட்டார். இப்படி ஒரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத மகாத்மா, ஜீவாவின் நேர்மையான, துணிச்சலான செயல்பாட்டால் கவரப்பட்டார். "இன்று நான் பரிசுத்தமான ஒரு மனிதரைச் சந்தித்தேன்' எனக் கூறினார் மகாத்மா.  அதற்குப் பிறகு தேசத்தைப் பற்றியே பல மணி நேரம் பேசிக் கொண்டிருந்த ஜீவாவைப் பற்றி, மகாத்மாவுக்கு ஒரு சந்தேகம்! முழுநேரத் தேசத்தொண்டு செய்கின்ற இவர் வசதி உள்ளவரா என்பதுதான் அந்தச் சந்தேகம்! எப்படிக் கேட்பது என ஒருவிதத் தயக்கம் மகாத்மாவுக்கு!  மகாத்மா, ஜீவாவிடம் "உங்களுக்குச் சொத்து அதிகம் இருக்கிறதா?' என்று கேட்டுவிட்டார். "நான் ஓர் எளியவன்' என்று சொல்ல ஜீவாவுக்கு ஏதோ ஓர் இனம்புரியாத கூச்சம். "இந்த இந்தியா தான் என் சொத்து' என்று பதிலளித்தார் ஜீவா.  மறுகணமே மகாத்மா, "இல்லை இல்லை, நீங்கள் தான் இந்த இந்தியாவுக்கே சொத்து' எனக் கூறி நெகிழ்ந்தார். இந்தியாவின் சொத்து என மகாத்மா பாராட்டினாரே அந்த ஜீவாவும் இந்தியாவின் சொத்தான ஸ்பெக்ட்ரத்தை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்று, தனது இரும்புப் பெட்டியை நிரப்பிய ஆட்சியின் தலைமகனான கருணாநிதியும் ஒன்றா? இவர் தன்னை ஜீவாவுடன் ஒப்பிடுவது எப்படிச் சரி?  ஒருசமயம் ஜனசக்தி அலுவலகத்தில் எழுத்துப் பணியில் மும்முரமாக இருந்த ஜீவாவைப் பார்க்க ஒரு பெண் வந்திருந்தார். ஜீவா இருக்கிறாரா? என அலுவலகப் பணியாளர்களிடம் கேட்க, அவரும் ஜீவா இருக்கிறார் என்று கூறி, அந்தப் பெண்மணியை ஜீவாவின் அறைக்கே அழைத்துச் சென்றார்.  எழுத்தில் முழு கவனத்துடன் இருந்த ஜீவா, அந்தப்பெண் வந்திருப்பதைக்கூட கவனிக்காமல் எழுதிக் கொண்டே இருந்தார். எழுதி முடித்தவுடன் ஜீவா இயல்பான பரிவுக்குரலுடன் "என்னம்மா வேண்டும்?' என்று கேட்டார்.  அந்தப் பெண்ணோ, "உங்களைத்தான் பார்க்க வந்தேன்' எனக் கூறினார்.  ஜீவாவோ, "நீ யாரம்மா?' எனக் கேட்டார்.  அந்தப் பெண் பதில் ஏதும் கூறாமல் கண்ணீர் மல்க ஜீவாவையே பார்த்துக்கொண்டு இருந்தார்.  ஜீவாவோ, "நான் என்னம்மா கேட்டுவிட்டேன்? நீ யார்?' என மறுபடியும் கேட்டவுடன் கண்ணீர்விட்ட அந்தப் பெண், ஒரு பேப்பரை எடுத்து, "என் தாத்தா பெயர் குலசேகரதாஸ், என் தாயின் பெயர் கண்ணம்மா' என்று எழுதி ஜீவாவிடம் கொடுத்தார்.  ஜீவாவின் கண்கள் குளமாகிவிட்டன. கண்ணாடியைக் கழற்றிவிட்டு தன் வேஷ்டியின் ஒரு முனையை கையில் எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டே அதே பேப்பரின் பின் பக்கத்தைத் திருப்பி "நீ தான் என் மகள் குமுதா' என்று எழுதி அந்தப் பெண்ணிடம் கொடுத்தாராம்.  நெடுநாள்கள் சிறையில் இருந்து, கட்சிக்காகப் பல மாநிலங்களுக்குச் சென்று, பல காலம் கழித்து சென்னை வந்த ஜீவாவுக்கு குழந்தையாக இருந்த தன் மகள் பெரிய பெண்ணாக ஆனது கூடத் தெரியாமல் இருந்தது என்பதுதான் உண்மை.  இப்படி நாட்டுக்காக உழைத்துத் தனது குடும்பத்தையே மறந்த ஜீவாவும், தனது குடும்பம் செல்வச் செழிப்புடன் எல்லா துறைகளையும் ஆக்கிரமித்துக் கொடிகட்டிப்பறக்கவும், நாட்டின் சொத்தை விற்றுத் தனது குடும்பச் சொத்தை அதிகரிக்கவும் பொதுவாழ்க்கையைப் பயன்படுத்தும் கருணாநிதியும் ஒன்றா?  1957-ல் வண்ணார்பேட்டை தொகுதியில் ஜீவா கம்யூனிஸ்ட் சார்பாகப் போட்டியிட்டபோது, ஜீவரத்தினம் என்ற ஒருவரை நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்த பெருமை தி.மு.க.வுக்கு உண்டு. தி.மு.க. முதன்முதலில் பங்கேற்ற தேர்தல் அது. அப்போதெல்லாம் 234 தொகுதிகளிலும் தி.மு.க. நிற்காது. வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு சில தொகுதிகளில் மட்டுமே நிற்கும். தி.மு.க. போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸýக்கு எதிரான சுயேச்சைகளை ஆதரிக்கும்.  அந்தச் சமயத்தில் ஜீவாவை எதிர்த்து வேட்பாளர் யாரையும் நிறுத்த வேண்டாம் என்று இடதுசாரி இயக்கத்தினர் கெஞ்சிக் கேட்டபோதும்கூட, அதைப் பொருள்படுத்தாமல், ஜீவரத்தினத்தை தி.மு.க. சார்பில் நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்தது தி.மு.க. ஜீவரத்தினத்தை வண்ணார்பேட்டை தொகுதியில் நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்ததில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. இன்று ஜீவாவைப் பற்றிப் பேச தி.மு.க.வுக்கும் கருணாநிதிக்கும் என்ன தகுதி இருக்கிறது?  மொழி வழி மாகாணம் பிரிக்கும்போது, விடுபட்ட தமிழ்பேசும் சில பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் கேரளத்தோடு இருந்தன. அதைத் தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என போராட்டம் நடத்தியவர்களில் தோழர் ஜீவாவும் முக்கியமானவர். பின் அந்தப் பகுதிகள் தமிழகத்தோடு சேர்க்கப்பட்டது. அதற்குப் பாராட்டுக் கூட்டம் காமராஜ் தலைமையில் நாகர்கோவிலில் நடைபெற்றது. அப்போது காமராஜ் நாகர்கோவில் அருகேயுள்ள பூதப்பாண்டிக்குச் சென்று நிகழ்ச்சிக்குக் கூடவே அழைத்துச் செல்ல விரும்பி ஜீவாவின் வீட்டுக்குச் சென்றார்.  ஜீவா காமராஜை வரவேற்றார். தான் வந்த நோக்கத்தை காமராஜ் ஜீவாவிடம் கூறினார். ஜீவாவோ, ""இப்போது நான் உங்களுடன் வர இயலாது. சுமார் அரை மணி நேரமாவது ஆகும். நீங்கள் செல்லுங்கள். நான் பின்னாலே வந்து விடுவேன்'' என்று கூறினார்.  காமராஜ் விடுவதாக இல்லை. ஜீவா வராமல் இருந்துவிடக்கூடாது என்பதால், ""நான் அரைமணி நேரம் காத்திருக்கிறேன். இரண்டு பேரும் ஒன்றாகச் செல்வோம்'' எனக் கூறினார். ""இல்லை... இல்லை, அரை மணி நேரத்துக்கும் மேலே ஆகும். நீங்கள் போங்கள்'' என ஜீவா மறுக்கிறார்.  ""என்ன காரணம்?'' என காமராஜ் கேட்க, அதற்கு ஜீவா, ""என்னிடம் இருப்பது இரண்டே இரண்டு உடைதான். ஒன்றை அணிந்து இருக்கிறேன். இன்னொன்றைத் துவைத்துக் காயப்போட்டு இருக்கிறேன். இன்றைக்குப் பார்த்து வெயில்கூட சரியாக அடிக்கவில்லை'' என வருத்தத்தோடு கூறினாராம். முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜின் விழிகளில் கண்ணீர் ததும்பியது என்று நேரில் பார்த்தவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த ஒப்பற்ற தியாகி ஜீவாவும் உலகக் கோடீஸ்வரர்கள் வரிசையில் தனது குடும்பத்தினரை உயர்த்தி மகிழ்ந்திருக்கும் கருணாநிதியும் ஒன்றா?  சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட இயக்கத்தைச் சேர்ந்த தோழர் ஜீவாவுடன் தன்னை முதல்வர் கருணாநிதி ஒப்பிட்டுக் கொள்வதன் மூலம் சரித்திரப் புரட்டை அவிழ்த்துவிட முயல்கிறார். கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியின் கதையாக அல்லவா இருக்கிறது இது.
கருத்துகள்

கருணாநிதியின் புருடாக்களுக்கு பஞ்சமேகிடயாது.உயிருடன் இல்லாதவர்களை பற்றி இப்படித்தான் அவிழ்த்து விடுவார்.மக்கள் என்ன மடையர்களா?கண்ணதாசன் எழுதிய வனவாசத்தில் இவருடைய வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏற்றியிருக்கிறார்.சமீபத்தில் திருடர்கள் திருடுமளவுக்கு வசதி படைத்த குடும்பம் அவருடையது என்று சொன்னபோது ஒரு அன்பர் இவர் வாடகைதர பணமில்லாமல் இரவோடு இரவாக வீட்டை காலி பண்ணி ஓடியதை சொல்லியிருந்தார்.தெரியாமல் சொல்வது புளுகு.தெரிந்தே சொல்வது அப்பட்டமான பொய்.கருணாநிதி இரண்டாம் வகையில் சேர்ந்தவர்.அதற்காக அவர் சிறிதும் வெட்கப்பட்டது இல்லை.
By கே.சுகவனம்
2/17/2011 12:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 16 பிப்ரவரி, 2011

106 thamizh fishermen jailed: D.M.K. protest:106 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: திமுக இன்று ஆர்ப்பாட்டம்


தி.மு.க.தொண்டர்களில் பெரும்பான்மையர்க்குத் தமிழ்ப்பற்று இருப்பினும் பிற கட்சியினர்  போல் தலைமைக்குக் கொத்தடிமைகளாக உள்ளதால் அமைதி காப்பர். தலைமைக்கு எதிர்க்கட்சியாக இருந்தால்தான் தமிழ்ப்பற்று வரும் என்பது பலர் கூறும் கூற்று. எனவே, இந்த ஆர்ப்பாட்டம் தேர்தல் தந்திரம் என்றாவது எதிர்க்கட்சியாக மாறுவதற்கான ஒத்திகை என்றாவது கருதப்படும். வேறு வகையில் பார்த்தால்  கையால்ஆகாத அரசு என்ற பெயர் வரும்.  ஆளுங் கட்சி இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை நிறுத்த வேண்டும். அலைக்கற்றை ஊழலை மறைப்பதற்கான நாடகம் எனச்  சொல்வார்கள் என அறிந்தும் திடீர்ப்பாசத்தைக் காட்டுவதைவிடச் சோனியாவின் இல்லத்தின் முன்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் முற்றுகை யிடலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
+++++++++++
106 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: திமுக இன்று ஆர்ப்பாட்டம்


சென்னை, பிப். 15: நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை சிறைபிடிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்தும், மீனவர்களை விடுவிக்கக் கோரியும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்திருக்கிறது. சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பும், மாநிலத்திலுள்ள அனைத்துத் துறைமுகங்கள் முன்பும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மீன்பிடி வலைகளை அறுப்பது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீன்களை அள்ளிச் செல்வது, துப்பாக்கிச் சூடு நடத்துவது என இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்ந்து வருகின்றன. அண்மையில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமாரை இலங்கைக் கடற்படையினர் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, அத்துமீறி நடந்துகொள்ளும் இலங்கைக் கடற்படையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அனுப்பினார். இந்த விஷயத்தில் பிரதமரின் தனிப்பட்ட தலையீடு அவசியம் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உத்தரவின்பேரில் வெளியுறவு செயலர் நிருபமா ராவ் இலங்கை சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தினார்.மீண்டும் அத்துமீறல்: இந்த நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 18 மீன்பிடிப் படகுகளும், இந்தப் படகுகளிலிருந்த மீனவர்கள் 106 பேரும் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானது. சிறைபிடிக்கப்பட்ட நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தொலைபேசி மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.  மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் இலங்கை மீனவர்கள் சிறைபிடித்து, இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைத்ததாகவும், இலங்கைக் கடற்படையே நேரடியாக தமிழக மீனவர்களைச் சிறைபிடித்துச் சென்றதாகவும் மாறுபட்ட தகவல்கள் கூறப்படுகின்றன.இலங்கைத் தூதரகம், துறைமுகங்கள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்: இலங்கைக் கடற்படையின் இந்தச் செயலைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரியும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைமைக் கழகம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 106 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் பருத்தித்துறை அருகே சிறை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது என்றும் அச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.மீனவர்கள் வேலைநிறுத்தம்:இந்நிலையில், மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புதன்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக நாகப்பட்டினம், காரைக்கால் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
கருத்துகள்

முதலில் உள்நாட்டு தமிழர்களை காப்பாற்ற முடிகிறதா என்று பார்போம்....................
By sarath
2/16/2011 9:37:00 AM
தனியொரு கட்சியாக மாநிலத்தை ஆளுகின்ற, மத்திய அரசை ஆதரித்தும் மந்திரிசபையிலே பங்குபெற்றும் இருக்கின்ற தி.மு.க. யாரை கண்டித்தும் எதிர்த்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது எனத் தெரியவில்லை. தமிழ் வாழ்க என பொத்தம் பொதுவாக கும்பலில் குரல் கொடுப்பது போல இலங்கை அரசு ஒழிக என கோஷம் போட்டால் இப்போதைக்கு சட்டமன்ற தேர்தலை சமாளித்து விடலாம் என கலைஞர் நினைக்கிறார் போலிருக்கிறது. மொத்தத்தில் காயமடைந்தவனின் ரத்தத்தைப் பார்த்து மயக்கமடையாமலிருக்க சோடா குடிப்பவனின் நிலையிலிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.
By அய்யன்பேட்டை தனசேகரன்
2/16/2011 9:31:00 AM
தலைவரே, நீங்க தான் முதல்வர் என்கிறதை மறந்துட்டீங்களா? எதிர்கட்சியா இருந்தாத்தான் போராட்டம் எல்லாம் பண்ணனும், ஆளும் கட்சியா இருக்கிறப்ப , கடிதம் எழுதுறது, தந்தி கொடுக்கிறது தானே நம்ம வேலை.
By madhuraikkaaran
2/16/2011 9:25:00 AM
கட்ச தீவை மீட்க்கும் வரை சிங்கள இன வெறியர்களின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் . ஆர்பாட்டம் , கடிதம் , தொலை நகல் இதெல்லாம் ஒரு பயனும் தராது .
By ***முமசு***
2/16/2011 9:15:00 AM
தலைவரே, நீங்க தான் முதல்வர் என்கிறதை மறந்துட்டீங்களா? எதிர்கட்சியா இருந்தாத்தான் போராட்டம் எல்லாம் பண்ணனும், ஆளும் கட்சியா இருக்கிறப்ப , கடிதம் எழுதுறது, தந்தி கொடுக்கிறது தானே நம்ம வேலை.
By மதுரைக்காரன்
2/16/2011 9:07:00 AM
விடுலை புலிகள் அழிவதற்கும், ஒரு தமிழ் இனமே அடியோடு ஒழிவதற்கும் உறுதுணையாக இருந்த இந்த தமிளினசிங்கம், தன்மான சிங்கம் போலியாக நடத்தம் ஒரு போராட்டம்தான் இது. யாருக்கு காட்டுகின்றாய் இந்த நாடகம்.
By ரா.சேகர்
2/16/2011 7:58:00 AM
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய அரசிடமும், ராஜபக்ஷேவிடமும் அனுமதி முன்னரே வாங்கி விட்டீர்களா? இல்லை, மத்திய அரசின் ராசாவிற்கெதிரான நடவடிக்கைக்கும், உங்களிடம் கூட்டணிக்கும் காங்கிரசார் படுத்துகின்ற பாட்டிற்கு எதிரான உங்கள் ஆர்ப்பாட்டமா? இல்லை, மற்ற கட்சியினருக்கு முந்தி விட வேண்டும் என்று ஆர்ப்பாட்டமா? தமிழர்கள் இனத்தையே அழிக்க வேண்டும் என்று நினைத்த இலங்கை தன்னுடைய கொள்கையில் பின்வாங்காமல் சென்று கொண்டிருக்கின்றது. பாவம் நீங்கள் தான் தடுமாறிக் கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கும் பரவாயில்லைதான். ஆனால் தேர்தல் நேரமாச்சே. இப்பொழுது என்ன ஒரு தமிழ் மாநாடு நடத்திவிடுங்கள்.
By கமலக்கண்ணன்.ம
2/16/2011 7:53:00 AM
என்ன அச்சிர்யம் திமுக ஆட்களுக்கு மீனவர்கள் என்று ஒரு இனம் இருக்கு என்று தெரிகிறது..தேர்தல் வந்தால் எல்லாருக்கும் எல்லாம் தெரிது ....என்ன ஆச்சர்யம்
By Jeyam
2/16/2011 7:39:00 AM
கருணாநிதி காங்கிரசிடம் கட்சியை அடகு வைத்து பல வருடங்களாகிறது. ஏன் இந்த ஏமாற்று நாடகம்?
By கென்னடி
2/16/2011 7:17:00 AM
என்ன சார் ஜெயா கிட்ட ஆட்சியை ஒப்படசிட்ட்ரா கருணா தமிழக அரசை எதிர்த்து போராட்டம் செய்கிறார்களே நடவடிக்கை எடுக்காத அரசை டிஸ்மிஸ் செய்ய சொல்லி போராட்டம் செய்ய போகிறார்களா அய்யோ தலை சுதஊதே
By ramana
2/16/2011 7:17:00 AM
ilankai meenavarkal veru yarum illai. viduthalai pulikalay. ippo pulikal rajapaksa udan kooddu. example k. p. muthalvaray why dont you write a letter to the P.M. and stay in the Wheel chair. If election come you get up from the wheel chair. I fogot once to get a minister post for Alakiri and Kani moli you got up from wheel chair and stayed in Delhi for Days.
By esan
2/16/2011 6:50:00 AM
விடுதலை புலிகள் மீண்டும் உருவாகிவிட கூடாது என்பதில் இலங்கை அரசு கடுமையாக இருப்பதுதான் மீனவர்களை சிறை பிடிப்பது கொடுமைபடுத்துவது என்றெல்லாம் நடக்கிறது என தோன்றுகிறது.இதற்கு முடிவு கட்ட மத்திய அரசுதான் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். வெறும் தந்தி கடிதம் தூது என்பதெல்லாம் சரிப்படாது. நம் வலிமையை இலங்கை அரசுக்கு உணர்த்தியே ஆக வேண்டும்.
By ஜெயராஜ் வி.சி.
2/16/2011 6:07:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

ஆர்ப்பாட்டம்: கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது

First Published : 16 Feb 2011 10:55:03 AM IST


 சென்னை, பிப்.16: நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டித்து இன்று காலை இலங்கைத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.