சனி, 4 ஜூலை, 2009
பாவை சந்திரன்
First Published : 04 Jul 2009 10:45:00 PM IST
Last Updated :
ஸ்ரீமாவோ - லால்பகதூர் சாஸ்திரி
சுதந்திரத்திற்குப் பின், இலங்கையும், இந்தியாவும் இரு மாநாடுகளை நடத்தின. 1953-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் லண்டனில் நேரு-டட்லி சேனநாயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரஜா உரிமையற்ற மலையகத் தமிழர்களை யார் ஏற்றுக் கொள்வது என்பதுதான் பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம். ஆனால் இப்பேச்சுவார்த்தை எந்தத் தீர்வும் இன்றித் தோல்வி அடைந்தது.
பின்னர் நேரு-கொத்தலாவலை பேச்சுவார்த்தை புது டெல்லியில் 1954-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இதுவும் தோல்வி அடைந்தது. இந்திய அரசாங்கம் நாடற்ற மலையக மக்களை இலங்கையர் என்றது; இலங்கை அரசோ அவர்களை இந்தியர் என்றது. இவ்வாறு இப்பிரச்னை இழுபறியான சமயத்தில் ஒரு திடீர் சூழ்நிலை ஏற்பட்டது.
1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி அன்று, பர்மாவில் இருந்தும் (3,00,000 பேர்), உகாண்டாவில் இருந்தும் (28,755 பேர்) அந்த நாட்டு அரசாங்கங்கள் இந்தியர்களை விரட்டி அடித்தன. இத்தகைய ஒரு நிலை இலங்கையிலும் ஏற்பட்டு விடக்கூடாது என இந்தியா விரும்பியது. அடுத்ததாக நடைபெற்ற சீன-இந்திய யுத்தத்தைத் தொடர்ந்து, சீனாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த இலங்கையுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பியது.
இறுதியாக, அப்போது பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த அயூப்கான், ""இலங்கையில் உள்ள சகல பாகிஸ்தானியர்களையும் தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயார்'' என்று இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதினார். அப்போது இலங்கையில் 5749 பாகிஸ்தானியர்களே வாழ்ந்தார்கள். அதனால் பாகிஸ்தானுக்கு அவர்களை ஏற்றுக் கொள்வது அவ்வளவு சிரமமானதாக இல்லை.
அதே கடிதத்தில் அவர் ""இந்தியா தனது அண்டை நாடு எதனுடனும் சுமுகமாகப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவில்லை'' எனக் குற்றம் சாட்டி இருந்தார். எனவே, சீனாவுடனான யுத்தத்தினால் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் இந்தியா தன் பெயரை நிலைநிறுத்த வேண்டிய நிலையில் இருந்தது.
இந்தச் சமயத்தில் நேரு காலமானார். அதற்குப்பின் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். இவருக்கும், இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கும் இடையே 1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதியன்று பேச்சுவார்த்தை துவங்கியது. ஆறு நாட்கள் தொடர்ந்த இப்பேச்சுவார்த்தை அக்டோபர் 30-ஆம் தேதியன்று ஒரு முடிவுக்கு வந்தது.
அன்றுதான் உலகமே கண்டித்த, மிக மோசமான சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
இலங்கையில் இந்தியர்களின் மக்கள் தொகை 1964 செப்டம்பர் 25-ஆம் தேதி கணக்குப்படி 10,08,269 பேர் ஆகும்.
இதில் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்போரின் எண்ணிக்கை 28,269. மீதம் இருந்த 9,75,000 பேரின் பிரஜா உரிமை பற்றியே இம்மாநாடு முடிவு செய்தது.
சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின்படி, 9,75,000 பேரில் 5,25,000 பேருக்கு 15 வருடகாலத்தில் (அவர்களின் இயற்கை அதிகரிப்புடன்) இந்தியப் பிரஜை உரிமை வழங்குவதென்றும், அதே காலத்தில் 3,00,000 பேருக்கு அவர்களின் இயற்கை அதிகரிப்புடன் இலங்கைப் பிரஜா உரிமை வழங்குவதெனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
எஞ்சியுள்ள 1,50,000 பேரின் பிரஜா உரிமை அந்தஸ்து பற்றி 1974-ஆம் ஆண்டு தீர்மானிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி 1974-ஆம் ஆண்டு ஜனவரியில் செய்து கொள்ளப்பட்ட ஸ்ரீமாவோ- இந்திரா ஒப்பந்தத்தின்படி இலங்கையும், இந்தியாவும் 1,50,000 பேரையும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டன.
இந்த ஒப்பந்தங்களைக் கண்டிக்காத சர்வதேச மனிதாபிமான இயக்கங்களே இல்லை எனலாம். இருந்தும் இரு அரசாங்கங்களும் அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
இந்த ஒப்பந்தத்தை மனிதாபிமான அமைப்புகளும் இயக்கங்களும் சர்வதேச அளவில் கண்டித்தன. ஆடு, மாடுகளைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொள்வதுபோல மனிதர்களைப் பங்குபோடும் அதிகாரத்தை அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அளித்தது யார் என்கிற கேள்விகள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் எழுப்பப்பட்டன.
சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இரு அரசுகளும் தான்தோன்றித் தனமாக நிறைவேற்றிய ஒப்பந்தம் இது. அதாவது இதனை ஒரு சமூகம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகப் பாராமல் அந்தப் பத்து லட்சம் மக்களின் தலைவிதியை, அவர்கள் பங்கு பெறாமலே இரு அரசாங்கங்களும், வெறும் எண்களைக் கருத்தில் கொண்டு கணித முறையில் முடிவு செய்தன.
இப்பேச்சு வார்த்தை நடந்தபோது குறைந்தபட்சம் அம்மக்களின் பிரதிநிதியின் கருத்துகூட கேட்டு அறியப்படவில்லை.
இவ்வாறு முடிவு செய்யப்பட்டதும் அம்முடிவு ஒருகட்டாய அடிப்படையில் அமல் நடத்தப்பட்டது என்பதுதான் அதைவிட வேடிக்கை. இதற்கான மனுக்கள் கோரப்பட்டபோது இலங்கை பிரஜா உரிமை கோரி சுமார் 7,00,000 மனுக்கள் தாக்கல் ஆயின. ஆனால், இவ்வொப்பந்தப்படி இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் 3,75,000 பேர் மாத்திரமே. இந்தியப் பிரஜா உரிமை 6,00,000 பேருக்கு வழங்கப்படும் என்ற நிலைமை இருக்கும்போது இந்தியப் பிரஜா உரிமை கோரி மனு செய்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 மட்டுமே. ஒருவேளை இலங்கை பிரஜா உரிமை மறுக்கப்பட்டால் இந்தியப் பிரஜா உரிமையாவது கிடைக்கட்டுமே என்று இரண்டிற்கும் மனு செய்தவர்கள் தொகை கணிசமானது.
அதுமட்டுமல்ல, இந்த ஒப்பந்தம் அமலாகும்போது இந்தியாவில் அமையப்போகும் ""புதுவாழ்வு'' பற்றி மிகக் கவர்ச்சியான சித்திரங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. இத்தனைக்குப் பிறகும்கூட இந்தியா செல்வதற்கு இவர்கள் மத்தியில் இருந்து மிகக் குறைவாகவே ஆர்வம் காணப்பட்டது.
இவ்வாறு இம்மக்களின் சுய விருப்பத்திற்கு மாறாகப் பல்வேறு நிர்பந்தங்களாலும், ஏமாற்றுகளாலும் திணிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் மனித அடிப்படை உரிமைக்கு முரணானது.
1948 டிசம்பர் 10-ஆம் தேதி இயற்றப்பட்ட உலக மனித உரிமைகள் சாசனத்தின் 15-வது ஷரத்து * பின்வருமாறு கூறுகிறது:
""தேசிய இனத்துவ உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒருவருடைய தேசிய இனத்துவம் வேண்டுமென்றே பறிக்கப்படுவதோ, அல்லது அவரது தேசிய இனத்துவத்தை மாற்றிக் கொள்வதற்குள்ள அவரது உரிமையை மறுப்பதோ கூடாது.''
இதன்படி பார்க்கும்போது இந்த இரு அரசாங்கங்களுமே உலக மனித உரிமை சாசனத்தை மிக மோசமாக மீறி இருக்கின்றன என்பது புலனாகிறது.
இந்தியா செல்வதற்குத் தயாராதல், புறப்படுதல் போன்ற முறைகளில் இம்மக்கள் அடைந்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.
இந்தியக் கடவுச் சீட்டு வழங்கப்பட்ட நாளில் இருந்து சகல ஒப்பந்தங்களையும் செய்து முடிக்க 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை அவகாசம் (விசா) வழங்கப்படுகிறது. ஊழியர் சேமலாப நிதி, சேவைக் கால உபகாரப் பணம், நாணயப் பரிவர்த்தனை, அனுமதிப் பத்திரம், குடும்ப அட்டை ஆகிய அனைத்தையும் ஒரு வருட காலத்துக்குள் கல்வி அறிவு அற்ற இத்தொழிலாளர் பெற்றுத் தீர வேண்டும். இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் தோட்ட நிர்வாகிகள் போன்றோர், இடைத் தரகர்களாக மாறி இவர்களைக் கொள்ளை அடித்தனர்.
இதன் பின்னர் வெளியேற்ற அறிவித்தல் (ணன்ண்ற் சர்ற்ண்ஸ்ரீங்) வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தங்கினால் அவரைக் கைது செய்து நாடு கடத்தும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு. 1971-77 ஆண்டுகளில் நாய்களைப் பிடித்துச் செல்வது போல இம்மக்களைப் பிடித்து ஜீப்புகளில் ஏற்றி, இடுப்புத் துணியோடு இந்தியாவுக்கு நாடு கடத்திய சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. இதிலும் சாத் முரண்பாடு தலைதூக்கியது. தாழ்த்தப்பட்ட ஜாதியினர்தான் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால், அவர்கள் ராமேஸ்வரம் வரை பயணம் செய்யும்போது, பியூன் முதல் போர்ட்டர் வரை, கிளார்க் முதல் உயர் அதிகாரி வரை அனைவரும் இவர்களை ஏமாற்றி லஞ்சம் வாங்கிக் கொண்டனர்.
இவ்வாறு குடிபெயர்ந்து செல்வோரின் குடும்ப உறவுகள் துண்டிக்கப்பட்டன. பிரஜா உரிமை முடிவு செய்யப்பட்டபோது மைனர் குழந்தைகளுக்குத் தந்தையுடன் சேர்த்து அதே பிரஜா உரிமை வழங்கப்பட்டு விடுகிறது. அனால் 18 வயது கடந்த அவர்களது குழந்தைகள் தனியாக மனு செய்து இலங்கை அல்லது இந்தியாவில் பிரஜா உரிமை பெறவேண்டும். வெளியேற்ற அறிவித்தல் வந்துவிட்டால்... தந்தையும், குடும்பத்தினரும் பிரிய நேரும். ஒரே குடும்பத்தில் அண்ணனுக்கு இலங்கைப் பிரஜா உரிமையும், தம்பிக்கு இந்தியப் பிரஜா உரிமையும் வழங்கப்பட்டு விடுகிறது.
பிறந்த நாட்டையும், வளர்ந்த மண்ணையும், பழகிய நண்பர்களையும் விட்டுப் பிரியும்போது அழுது, கதறித் துடிக்கும் பரிதாபகரமான காட்சியை மலை நாட்டில் உள்ள சகல புகைவண்டி நிலையங்களிலும் காண முடிந்தது. காதலனைப் பிரியும் காதலி, அண்ணனைப் பிரியும் தம்பி, பெற்றோரைப் பிரியும் பிள்ளை, இப்படி மனித உறவை அறுத்தெறியும் அந்தக் கொடிய காட்சி இரும்பு இதயத்தைக்கூட உருகச் செய்யும்.
புதுவாழ்வைத் தேடி இந்தியாவுக்கு விரட்டப்பட்ட இவர்களுக்கு இந்திய மண்ணில்கூட நிம்மதியோ, மகிழ்ச்சியோ கிடையாது. இன்று இந்த அகதிகள் இந்தியத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். இவர்களின் கண்களின் வெறித்த பார்வையில், தங்கள் பிறந்த மண்ணும், உற்றார் உறவினரும், வஞ்சிக்கப்பட்ட தங்கள் தலைவிதியும் அடிக்கடி வந்து போகும் விஷயங்கள் ஆகிவிட்டன.
மலையகத் தமிழர்களின் தலைவராக இருந்த எஸ்.தொண்டமான், பெரிய கங்காணி ஒருவரின் மகனாக இருந்து ஆரம்ப காலத் தியாகத்தால் மலையக மக்கள் இதயத்தில் வலுவான இடம்பெற்றுவிட்டவர். இலங்கையில் ஒரு தனிநபரின் குரலுக்கு ஆறு லட்சம் மக்கள் அணி திரள்கிறார்கள் என்றால், அது தொண்டமானுக்கு மட்டும்தான் இருந்தது.
அவர் தனிநபரல்ல; அவருக்குப் பின்னால் ஸ்தாபனப்பட்ட 6 லட்சம் தொழிலாளர்கள் இருந்தார்கள். அந்தத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் 60 சதவிகிதம் தமது கைகளில் வைத்திருக்கிறார்கள். விண்ணை அதிரவைக்கும் இந்த மகத்தான சக்தியால் தாங்கப்படும் ஒரு மனிதர் எவ்வளவு வலிமை மிக்கவராக இருக்க வேண்டும்? ஆனால் தொண்டமானோ அற்பப் பதவிக்காக ஜெயவர்த்தனாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் என்ற பலமான குற்றச்சாட்டு இவர் பேரில் உண்டு.
இந்த நிலையில் மலையகத் தமிழ் தொழிலாளர்களுடைய நிலையைச் சுருக்கமாகச் சிலவரிகளில் கூறிவிடலாம். பொருளாதார ரீதியில் சாகாமல் எப்படி உயிர் வாழ்வது என அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு இலங்கையில் விலைவாசி அதிகரித்துவிட்டிருந்தது.
தமிழர் என்ற முறையில் எப்படி சிங்கள குண்டர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிப் பிழைக்கலாம் எனச் சதா சிந்தித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்குத் தேசிய இன ஒடுக்குமுறை உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. மேலும் அரசியல் விழிப்புணர்ச்சி மிக்க நல்ல தலைமையை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது கூட அவர்கள் சிந்தனையில் இடம்பெற ஆரம்பித்தது.
இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான காலகட்டத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக மற்றும் ஜெயவர்தன போன்ற சிங்கள இனவாதத் தலைவர்களில் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, ஈழத்தமிழர்களும், மலையகத் தமிழர்களும் பலியானார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. தமிழன் என்ற உணர்வுடன் இவர்கள் கைகோர்த்து செயல்படத் தவறியதையும், ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுகியதையும் சிங்கள அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
மலையகத் தமிழர்களை அரவணைத்துச் செல்லாமல் போனதால் ஏற்பட்ட விளைவுதான் இலங்கையில் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முடியாமல் போனதற்கு முக்கியமான காரணம் என்பதை சரித்திரம் மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யும். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எழுந்துவிட்ட தமிழர்களின் உரிமைக் குரல் இன்றும் ஒரு நியாயமான முடிவை எட்ட முடியாமல் போனதற்கு, இவர்களுக்குள் காணப்பட்ட பிளவுதான் காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
* Article 15 of Universal Declaration of Human Rights. (Dec.10.1948) ‘‘Every one has the right to a nationality; no one shall be arbitarily deprived of his nationality nor denied the right to change his nationality.’’
நாளை : தமிழ் ஈழத்துக்கான முதல் குரல்!
கருத்துக்கள்
If Aryans utilized Tamil society s education, knowledge without favouritism, by this time China & western would have behind India. But unfortunately Aryans wants to dominate Diravidans esp Tamils and loosing all their safety & power to China. See one example: South East Asia
By Rayudu
7/4/2009 8:59:00 AM
Dravidians do not have unity. Tamils also do not have Unity. So we are just ruled by foolish & uneducated Aryan
By Dravidan
7/4/2009 8:50:00 AM
India want tamil nadu vote. they never ever want tamil people,,,,,,,,, yograjiv
By rajiv
7/4/2009 6:39:00 AM
India spoiled tamils life, tamilnadu should be separated from India to save tamils and a nation to be formed Tamilnadu tamils and Eelam Tamils.
By yogaraja
7/4/2009 3:24:00 AM
வடபகுதி முகாம்களின் நிலை மிக மோசம், பாலியலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள்: அவுஸ்திரேலிய நாளேடு தகவல் |
[வியாழக்கிழமை, 02 யூலை 2009, 08:34 மு.ப ஈழம்] [வி.குணரட்ணம்] |
வடபகுதியில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழ் அகதிகளின் நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான நாளேடான 'த அவுஸ்ரேலியன்', அங்குள்ள பெண்கள் அகதிகளுக்காக என அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் பலாத்தகாரமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. |
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள 'த அவுஸ்திரேலியன்', புல்மோட்டையில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்களே அதிகாரிகளால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமும், உதவி நிறுவனங்களும் இணைந்து விசாரணைகளை நடத்திவருவதாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இருந்த போதிலும் யாரும் இது தொடர்பாக எதனையும் செய்யவில்லை" என தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத உதவி நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். "இந்த அகதி முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரம் ஒன்றில் சராசரியாக மூன்று குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. இந்நிலையில் அவர்கள் மற்றவர்களுடைய இடையூறுகள் இல்லாமல் அவற்றில் வசிக்க முடியாது. இந்நிலையில் அங்கு வரும் இராணுவத்தினர் அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கோ அல்லது மேலதிக இடத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கோ கைமாறாக எதனையாவது எதிர்பார்க்கின்றார்கள்" எனவும் அந்த உதவி நிறுவனப் பணியாளர் சுட்டிக்காட்டுகின்றார். "இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் முற்றிலும் தவறானவை" என திட்டவட்டமாக மறுக்கும் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன, இருந்தபோதிலும் இது தொடர்பாக அரசு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதையும் உறுதிப்படுத்தினார். "படையினர் இந்தப் போரில் வெற்றிபெற்றுள்ளார்கள். அவர்கள் விரும்பியிருந்தால் அவர்கள் சென்ற பாதையில் ஒவ்வொரு பெண்ணையும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியிருக்க முடியும். ஆனால் எந்த ஒரு பாலியல் வல்லுறவுச் சம்பவமும் இடம்பெறவில்லை" எனவும் 'த அவுஸ்திரேலியன்' நாளேட்டுக்கு அவர் தெரிவித்தார். இந்த முகாம்களில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர், இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் என நம்பப்படும் ஆண்களும், பெண்களும் அங்கிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார். இருந்தபோதிலும் அவர்கள் தனியாகக் கொண்டுசெல்லப்பட்டமை தொடர்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படுவது போன்ற இதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் பேணப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். இந்தப் பிரச்சினைகள் தம்மைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய கவனத்துக்கு உரியவையாக இருப்பதாகத் தெரிவித்த அவர், நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது சிறிலங்கா அரசியலமைப்பின் கீழேயே மனித உரிமையை மீறும் ஒரு செயலாகும் எனவும் சுட்டிக்காட்டினார். நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது முகாம்களில் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு எதிராக மக்களும் கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக வெவ்வேறு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால் தமது இரத்த உறவுகளைச் சந்திப்பதற்காக அவர்கள் மற்றைய முகாம்களுக்குச் செல்வதற்கு முற்படுகின்றார்கள். ஆனால் இதற்கு படையினர் அனுமதி மறுப்பது பதற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான ஒரு சம்பவத்தின் போதே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு அகதிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக 'தமிழ்நெட்' இணையத்தளத்தில் வெளியான செய்தியையும் 'த அவுஸ்திரேலியன்' தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கின்றது. இருந்தபோதிலும் இச்சம்பவத்தில் படையினர் வானை நோக்கியே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாகவும், இதில் அகதிகள் யாரும் கொல்லப்படவில்லை எனவும் உதவி நிறுவனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும் இச்சம்பவத்தையடுத்து இராமநாதன் முகாம் மற்றும் ஆனந்தக்குமாரசாமி முகாம் ஆகியவற்றுக்கிடையே அகதிகள் சென்றுவருவதை அனுமதிப்பது என்ற உடன்பாட்டுக்கு அதிகாரிகள் வந்திருக்கின்றனர். இதேவேளையில் இந்த முகாம்களின் நிலைமை படிப்படியாக அபிவிருத்தியடைந்து வருவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான தூதுவர் நெயில் பூனே, இருந்தபோதிலும் அகதிகள் முகாம்களில் இருந்து வெளியே சென்று வருவதற்கு அனுமதிக்கப்படாமல் முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருப்பதுதான் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது" எனவும் குறிப்பிட்டார். "இந்த முகாம்களில் உள்ள மக்களில் 80 வீதமானவர்கள் இந்த வருட இறுதிக்குள் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பப்பட்டுவிடுவார்கள் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவிக்கின்றது எனச் சுட்டுக்காட்டும் அவர், இருந்தபோதிலும் அது மிகவும் கடினமான ஒரு இலக்காகவே இருக்கின்றது எனவும் குறிப்பிடுகின்றார். |
இடம்பெயர்ந்தோர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் அகதி முகாம்களில் இருந்தே அடுத்த பிரபாகரன் உருவாகுவார்: ஜே.வி.பி. |
[வெள்ளிக்கிழமை, 03 யூலை 2009, 05:38 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] |
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் அகதி முகாம்களில் இருந்தே அடுத்த பிரபாகரன் உருவாகக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக சிறிலங்கா அரசுக்கு அந்நாட்டின் கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளது. |
விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு இன்று ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காத அரசு, பேச்சுவார்த்தைகளிலேயே காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கின்றது எனவும் ஜே.வி.பி. குற்றம் சாட்டியிருக்கின்றது. இதனால் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு கிடைத்துள்ள மிகவும் சிறந்த சந்தர்ப்பம் இழக்கப்பட்டு மீண்டும் பிரிவினையை நோக்கிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனவும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். இங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ரில்வின் சில்வா மேலும் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது: "இடம்பெயர்ந்தவர்களின் முகாம்களின் நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. அரசின் தகவல்களின்படி இந்த முகாம்களில் சுமார் 3 லட்சம் மக்கள் உள்ளனர். அடிப்படை வசதிகளான குடிநீர், உணவு மற்றும் கழிவு அகற்றல் - சுகாதார வசதிகள் இங்கு போதுமானதாக இல்லை. அரசியல் கட்சிகள் ஒன்றிணைவதால் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்திவிடமுடியாது. அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரே மேடையில் கொண்டுவருவதன் மூலமாக மட்டும் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்திவிட முடியாது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும். மக்கள் இடையே இருதரப்பு புரிந்துணர்வு அவசியம். இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிப் பொருட்களை கொண்டுசென்று வழங்குவதற்காக ஜே.வி.பி. அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இடம்பெயர்ந்த மக்களுக்காக உணவுப் பொருட்களைச் சேகரித்து அனுப்புவதற்காக நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கும் அரசு அனுமதி வழங்கவில்லை" எனவும் ரில்வின் சில்வா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர். |
"தமிழ் மக்கள் அவர்கள் தாயக மண்ணில் அமைதியுடன் வாழ்ந்து ஓங்க அனுமதிக்கப்பட வேண்டும்": பேராசிரியர் எலி விசெல் |
[வெள்ளிக்கிழமை, 03 யூலை 2009, 01:51 பி.ப ஈழம்] [க.நித்தியா] |
"சிறுபான்மை சமூகத்தினர் எப்பகுதியில் என்றாலும் அடக்குமுறைக்குள்ளாகும் போது, நாம் அவர்களுக்காக உரத்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஆதாரபூர்வமான தகவல்களின் பிரகாரம் சிறிலங்கா அரசினால் தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்படுகின்றனர். இந்த அநீதி நிறுத்தப்பட வேண்டும். தமிழ் மக்கள் அவர்கள் தாயக மண்ணில் அமைதியுடன் வாழ்ந்து ஓங்க அனுமதிக்கப்பட வேண்டும்." |
இவ்வாறு 1986 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்றவரும் ஹிட்லரின் யூத இனப் படுகொலை தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டவருமாகிய பேராசிரியர் எலி விசெல், ஜூன் மாதம் 30 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். சமாதனத்திற்கான பரிசை தெரியப்படுத்துகையில், நோர்வே நாட்டின் நோபல் தலமையகம் பேராசிரியர் எலி விசெலினை "மனிதத்தின் தூதுவர்" என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் எலி விசெல் 40-க்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். கடந்த ஜூன் மாதம் 5 ஆம் நாள், அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா, ஜேர்மன் அரச தலைவர் அஞ்செலா மேர்க்கல் ஆகியோர் சகிதம் தான் சிறை வைக்கப்பட்டிருந்த ஜேர்மனியில் வைமர் நகரில் உள்ள புச்சென்வால்ட் வதைமுகாமுக்கு பேராசிரியர் எலி விசெல் பயணம் செய்திருந்தார். அங்கு உரையாற்றிய பேராசிரியர் எலி விசெல், "இங்கு வருபவர்கள் துயர நினைவுகளை மீட்பது இதயங்களில் குரோத உணர்வினை விதைப்பதற்கல்ல. மாறாக எம்மை நாடுவோருக்காக கூட்டு ஒருமைப்பாட்டினை கொண்டு இயங்க அது வழியமைக்கின்றது,” எனத் தெரிவித்திருந்தார். பேராசிரியர் எலி விசெல், ஈழத் தமிழர் பற்றி கருத்து தெரிவித்துள்ளமையைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி கருத்து வெளியிட மேலும் பல சுயாதீன அமைப்புக்கள் மற்றும் மனிதநேய ஆர்வலர்கள் முன் வரலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். |
மூன்று லட்சம் அப்பாவி தமிழர்களுக்கு நம்பிக்கையூட்ட மகிந்த இதுவரையில் எதுவும் செய்யவில்லை: 'ரைம்ஸ்' ஏடு குற்றச்சாட்டு |
[வெள்ளிக்கிழமை, 03 யூலை 2009, 05:39 பி.ப ஈழம்] [வி.நவராஜன்] |
இலங்கையில் முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இதுவரை எதையும் செய்யவில்லை என்று பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'ரைம்ஸ்' ஏடு குற்றம் சாட்டியுள்ளது. |
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் தமிழிலும் சிங்களத்திலும் உரையாற்றும்போது, இந்தப் போர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரே தவிர தமிழ் மக்களுக்கு எதிரான போர் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வெற்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியே தவிர, தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றி அல்ல என்றும் இது ஒட்டுமொத்த இலங்கை மக்களின் வெற்றி என்றும் கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு, முகாம்களில் உள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வரையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இதுவரையில் எதுவும் செய்யவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியைத் தொடர்ந்து நடந்த வெற்றிக் கொண்டாட்டங்களில், தமிழ் மன்னனைத் தோற்கடித்த சிங்கள மன்னன் துட்டகைமுனுவுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதைக் கேட்டு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சி அடைந்து வருவதாகவே தோன்றுகிறது. விடுதலைப் புலிகளை வெற்றி கண்டு ஆறு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டன. போர்ப் படையினரால் நடத்தப்படும் அகதிகள் முகாம்களில் உள்ள மூன்று லட்சம் அப்பாவித் தமிழ் மக்களைத் தடையின்றி சந்தித்துப் பேசி உதவிப் பணிகளை மேற்கொள்வதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பணியாளர்களையோ, பிற அனைத்துலக நாட்டு அமைப்புக்களின் உதவிப் பணியாளர்களையோ அனுமதிப்பதற்கு சிறிலங்கா அரசு இன்னும் மறுத்து வருகிறது. அரசைக் குறை கூறுபவர்கள் தொடர்ந்து மிரட்டலுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர். எதிர்வரும் செப்ரெம்பரில் ராஜபக்ச ஆட்சியை இழப்பார் என்று சோதிடம் சொன்ன புகழ்பெற்ற சோதிடக்காரர் கைது செய்யப்பட்டிருப்பதே இதற்கு அண்மைக்கால எடுத்துக்காட்டாகும். படையில் மேலும் 50 ஆயிரம் பேரைச் சேர்க்கத் திட்டமிட்டிருப்பதாக சிறிலங்கா அரசு இந்த வாரம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே சிறிலங்காப் படையில் 3.5 லட்சம் பேர் உள்ளனர் என்பதும், அவர்கள் எல்லோருமே சிங்களவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் வரும் ஓகஸ்ட் 8 இல் உள்ளாட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. அப்பாவித் தமிழ் மக்களை அவர்களின் சொந்த ஊர்களில் மீண்டும் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்காமலும், அரசை விமர்சிப்பவர்களைத் துன்புறுத்திக்கொண்டும், மறுசீரமைப்புக்குச் செலவிடுவதற்கு மாறாக அரசு பணத்தைப் படையினருக்கு செலவிட்டுக்கொண்டும் சிறிலங்கா அரசு இருக்குமானால் இந்தத் தேர்தல்களுக்கு அர்த்தமே இல்லை என்றுதான் நிதான உள்ளம் படைத்தவர்கள் சொல்வார்கள். |
Buddhism among Tamils is
quenched from two sides:
Schalk
“To say that Tamil tradition has always been all-inclusive of religions is modern Tamil national ideology projected into an invented past. It is not history of the Tamils”, writes Professor Peter Schalk, challenging the perspectives of looking at Tamil identity from the point of the use of Tamil language that simultaneously accommodated various religions in its history, despite of them contradicting one another or coming and going. Responding to an article on Buddhism appeared in TamilNet, Tuesday, Prof. Schalk said that Buddhism among Tamils he objectifies is different from what the Sinhala-Buddhists are envisaging.
Response from Peter Schalk to a TamilNet article ‘Ploy of Buddhism to nullify Tamil nationalism’:
What happens today is that the former programme by Cyril Mathews from the early 1980s to identify all Buddhist places, mainly 16, in the North as Sinhala, is completed, this time with the full support of scholar mercenaries, the Government and of the Armed Forces.
These places are in the forefront of Sinhala colonisation in areas of Tamil speakers. In this polarised situation it is a riddle to me how Buddhism among Tamil speakers can be said to neutralise Tamil nationalism. Tamil-speaking Buddhists are strongly Tamil oriented. They claim even that Buddhist Kantarotai was Tamil, not Sinhala.
We have to distinguish between Buddhism among Tamils and Buddhism in Tamil speaking areas implanted by modern martial Sinhala-Buddhists for the benefit of the Sinhala army personal, traders and colonisers who are fed with Sinhala-Buddhist pamphlets in English or Sinhala. They live as a separate entitity but they have administrative power. They deny of course that Kantarotai was Tamil.
A recent trend among them is to deny the concept of the Mahavamsa 25 that only Buddhists are humans. It does not fit into the official evaluation of what a human is imposed by the UN. Now they think that Tamils are humans and therefore qualified for Buddhism, which however is Sinhala Buddhism. It is sometimes put into English and sometimes even into Tamil.
In this case it is evident that an attempt is made to neutralise Tamil nationalism of Tamil speakers, but that has nothing to do with the kind of Buddhism among Tamils that I objectify. It is indeed important that this kind of humanised martial Sinhala Buddhism is highlighted and revealed as a political program of neutralising Tamil nationalism.
What I say about Saivism was that from the time of Campantar exists a strong trend that is even canonized within Tamil Saivism in the Tevaram that Tamil is an expression of Saivism and Saivism of Tamil. That does not imply that all Saivas think in that way or that Saivism per se thinks so. I mention this about Saivism to show that Buddhism among Tamils is classified as an anomaly by some Saivas also. Buddhism among Tamils is quenched from two sides.
To say that Tamil tradition has always been all-inclusive of religions is modern Tamil national ideology projected into an invented past. It is not history of the Tamils.
My writing on Buddhism among Tamils are available in two volumes from 2002 entitled "Buddhism among Tamils" issued by Uppsala University.
Chronology: