ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன், மரண தண்டனையை நீக்குக – மதுரையில் ஆர்ப்பாட்டம்

பேரறிவாளன், முருகன், சாந்தன், மரண தண்டனையை ரத்து செய்க – மதுரையில் ஆர்ப்பாட்டம்

இன்று 13 08 2011 பேரறிவாளன், முருகன், சாந்தன், மரண தண்டனை இந்தியக் குடியரசுத் தலைவரால் உறுதிசெய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதமாக மதுரை தலைமை அஞ்சல் நிலையம் முன்பாக தமிழின ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்துடன் ராஜீவ் கொலைவழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் ,முருகன்,சாந்தன் மட்டுமல்லாமல் அப்சல்குரு போன்றவர்கள் மீதான மரண தண்டனையும் நீக்கப்பட வேண்டும் என்பதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.மரணதண்டனை தரும் இந்திய அரசுக்கு அகிம்சையைப் பற்றிப் பேசவும் அசோக சக்கரத்தை சின்னமாக வைத்துக்கொள்ளவும் என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது.கட்சி வேறுபாடுகள் இல்லாமல் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.இதன் தொடர்ச்சியாக வரும் செவ்வாய்க் கிழமை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பேரணி ஒன்றையும் நடத்தவிருக்கிறார்கள்.

Popularity: 1% [?]

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 73 ஆவது பிறந்த நாள்நிகழ்வு

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 73வது பிறந்ததின நிகழ்வு

மாமனிதர் குமார்பொன்னம்பலம் அவர்களது 73வது பிறந்ததின நிகழ்வு பிரதான வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 10.00 மணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் ஆனந்தராஐh தலைமையில் ஆரம்பமான நிகழ்வு பி.ப 1.00 மணி வரை இடம்பெற்றது.
மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும், தமிழ் மக்கள் மீது மாறி மாறி ஆட்சிப்பீடம் ஏறியபௌத்த சிங்களப் பேரினவாத அரசுகள் மேற்கொண்ட இன அழிப்புத் தொடர்பாகவும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சர்வதேச நாடுகள் மத்தியில் அவர் மேற்கொண்ட இராஐதந்திரப் பணிகள் பற்றியும், சிங்கத்தின் கோட்டைக்குள் இருந்தவாறு தமிழ் மக்களது அரசியல் உரிமைகளுக்காகவும், சிறீலங்கா அரசின் அடக்கு முறைக்கு எதிராகவும் துணிச்சலுடனும், நேர்மையுடனும் அவர் மேற்கொண்ட அறப் போராட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்வில் குழந்தைவேலு, சுந்தரலிங்கம், கணேசராசா, யோசெப் அந்தோனிப்பிள்ளை, சோமசுந்தரம், மரியரட்ணம், ஆறுமுகம் ஆகியோர் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தனர்.
குழந்தைவேலு, திருமதி.பத்மினி சிதம்பரநாதன், காண்டீபன், கணேசராசா, சோமசுந்தரம், செல்வராசா கஜேந்திரன், ஆனந்தராசா ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.  இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சட்டவாளர்கள் பொது மக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு மாமனிதருக்கு வணக்கம் செலுத்தினர்.


தமிழர்கள் அழுக்கானவர்கள்-அமெரிக்கத் தூதர்

தமிழர்கள் அழுக்கானவர்கள்”: அமெரிக்கத் தூதரின் கருத்தினால் சர்ச்சை – செய்தித்துளிகள்

இந்தியாவுக்கான அமெரிக்கத் துணைத்தூதுவர் தமிழர்கள் கறுப்பானவர்கள் அழுக்கானவர்கள் என்று தெரிவித்த கருத்துக்கு அமெரிக்கத் தூதரகம் வருத்தம் வெளியிட்டுள்ளது.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நேற்று உரையாற்றிய அமெரிக்கத் துணைத்தூதுவர் மொறீன் சாவோ, 20 ஆண்டுகளுக்கு முன்னர் தான் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது கலாசாரம் மற்றும் மொழி பற்றி அறிந்து கொள்ள இந்தியாவுக்கு வந்ததாக கூறியிருந்தார்.
டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு தொடருந்து மூலம் 24 மணி நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டதாகவும், ஆனால் 72 மணிநேரம் கடந்தும் அந்தத் தொடருந்து பயணத்தை முடிக்கவில்லை என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் தனது தோல் தமிழர்களைப் போன்று கறுப்பாகவும் அழுக்காகவும் மாறி விட்டதாக அவர் மேலும் கூறியிருந்தார்.
இந்தக் கருத்து பொருத்தமற்றது என்றும் இதற்காக துணைத்தூதுவர் வருந்துவதாகவும் அமெரிக்கத் துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது.
கோத்தாபயவின் கருத்துக்கு இந்திய நாடாளுமன்றில் கண்டனம்
தமிழ்நாடு முதல்வர் ஜெயலிதாவை விமர்சித்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது உரையாற்றிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை கோத்தாபய ராஜபக்சவை கடுமையாக கண்டித்து உரையாற்றியுள்ளார்.
அரசியல் நலன்களுக்காகவே தமிழ்நாடு முதல்வர் ஜெயல்லிதா ஈழத்தமிழர் பிரச்சினையை முன்னிறுத்துவதாக இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.
அவரது இந்தக் கருத்தை அடியோடு நிராகரித்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை, ஐ.நா அறிக்கையில் 40,000 பொதுமக்கள் போரின் இறுதிக் கட்டத்தில் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன் கோத்தாபய ராஜபக்சவின் இந்தக் கருத்துக்கு சிறிலங்கா தூதுவரை அழைத்து இந்தியா கண்டிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோத்தாபய ராஜபக்சவின் கருத்தை தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவும் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரறிவாளனின் தாயார் உருக்கமான வேண்டுகோள்
இருபது ஆண்டுகளாக சிறையில் வாடிய தனது மகனை காப்பாற்றுங்கள் என்று ராஜிவ்காந்தி கொலை வழக்கின் மரணதண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், தமது தண்டனையை குறைக்குமாறு கோரி இந்தியக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்த கருணைமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், சென்னையில் நேற்று பேரறிவாளின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசினார்.
“ 21 ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருந்து கருணை மனுவை மட்டுமே நம்பி இன்று ஏமாற்றத்தின் உச்சியில் இருக்கிறேன்.
வழக்கில் இத்தனை குளறுபடிகள், முடிவடையாத விசாரணைகள், கண்டுபிடிக்க முடியாத முடிச்சுகள் இருப்பதை காரணம் கொண்டு நிரபராதியான என் மகன் உறுதியாக விடுவிக்கப்படுவான் என்று நம்பி இருந்தேன்.
உலகில் எங்கும் நடக்காத அநியாயமாக- காந்திய நாடு என்று சொல்லிக் கொள்ளும், அஹிம்சையை போற்றும் இந்திய நாட்டில், ஒருவன் நிரபராதி, நிரபராதி என்று கதறிக் கொண்டிருக்கும் போதே தூக்கிலிட துடிக்கிறது காங்கிரஸ் அரசாங்கம்.
மக்களிடம் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்று தான்.  பேரறிவாளனுக்கும் ராஜிவ்காந்தி கொலைச்சதிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
இனி மக்களாகிய நீங்கள் உணர்ந்து, உங்கள் கருத்தை உரக்கச் சொன்னால் மட்டுமே என் மகனும் அவனை போல இருவரும் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கிறது.
தாய்மார்கள் ஒரு தாயின் தவிப்பை உணர்ந்து, என் மகனின் உயிர் மீட்பு போராட்டத்தில் கண்டிப்பாக என்னுடன் வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
மாணவர்களும், சட்ட நிபுணர்களும் ஒரு வரலாற்று தவறு நிகழ்வதை இப்பொழுதே தடுக்க வேண்டும்.
மனிதஉரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் இவர்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்ய ஒருசேர உரத்து குரல் கொடுக்க வேண்டும்.
இனியும் காலம் இல்லை என்பதை நான் சொல்லத் தேவை இல்லை என்று நம்புகிறேன்.
தமிழ்நாடு முதல்வரும் என் மகனின் குற்றமற்ற தன்மையை உணர்ந்து, அவன் உயிரை காக்கும் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.  நாதியற்ற இந்த தாய்க்கு வேறு வழி இல்லை.“ என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
Short URL: http://meenakam.com/?p=33414

இந்திய அமைதிப்படையின் படுகொலைகள் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை?

இந்திய அமைதிப்படையின் படுகொலைகள் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை? – கேள்வி எழுப்புகிறார் கோமின் தயாசிறி

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்று சிறிலங்கா மீது தாக்குதல் தொடுத்துள்ளவர்கள் இந்திய அமைதிப்படைகளால் இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஏன் வாய் திறப்பதில்லை என்று சிங்களத் தேசியவாதியும் சட்டநிபுணருமான கோமின் தயாசிறி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் பொதுமக்கள் இந்திய அமைதிப்படையாலும் சிறிலங்காப் படையிராலும் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகின்ற நிலையில், சிறிலங்காப் படையினரை பொறுப்புக் கூறுமாறு வலியுறுத்துபவர்கள் இந்திய அமைதிப்படை குறித்து பேசுவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்காப் படைகள் பொறுப்புக்கூற வேண்டுமானால் இந்தியப் படைகளும் பொறுப்புக் கூற வேண்டும் என்று கூறியுள்ள கோமின் தயாசிறி, இந்தியா செய்யதது தவறில்லை என்றால், அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறியதாக சிறிலங்கா மட்டும் குற்றம்சாட்ட முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 
எந்தவொரு நாடும் இந்தியாவுக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரவில்லை என்று குறிப்பிட்ட கோமின் தயாசிறி, வடக்கு கிழக்கு மனிதஉரிமைகள் செயலகத்தினால் வெளியிடப்பட்ட நூல் ஒன்றில் இந்தியப் படையினரால் நடத்தப்பட்ட 12 பாரிய படுகொலைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Short URL: http://meenakam.com/?p=33415

இலங்கை இனப்படுகொலை பற்றி இந்தியப் பாராளுமன்றில் செவ்வாய் விவாதம்

இலங்கை விவகாரம்! இந்திய பாராளுமன்றில் செவ்வாய் விவாதம்

இந்திய பாராளுமன்றத்தில் எதிர்வரும் 16 ம் திகதி இலங்கை தொடர்பாக குறுகிய கால விவாதம் இடம்பெறவுள்ளது.
இலங்கைத் தமிழர்களின் நிவாரண மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் நலன்களை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து இந்திய அரசாங்கம் எடுத்திருந்த நடவடிக்கைகள் குறித்து இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்திய பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஒரே நேரத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறும்.
யுத்தத்திற்குப் பின்னரான இலங்கை நிலைவரம் தொடர்பாக தமது கருத்துகளை வெளிப்படுத்த எம்.பி.க்கள் பலர் ஆவலாக இருக்கின்றனர்.
இலங்கைத் தமிழர்களின் துன்பங்களுக்கு துரிதமாக அரசியல் தீர்வு காண வேண்டிய தேவை இருப்பது பற்றியும் தமது வலியுறுத்தல்களை அவர்கள் வெளிப்படுத்த விரும்புகின்றனர்.
இந்தக் கலந்துரையாடல் முதலில் இடம்பெறவிருந்த போதிலும் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.
அடுத்த வாரம் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறுமென சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு அரச தரப்பு பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.