சனி, 18 ஜூலை, 2009

வன்னியில் மீண்டும் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா
பிரசுரித்த திகதி : 17 Jul 2009

ஒட்டி சுட்டான் பிரதேசத்தில் இரு தினக்களுக்கு முன்னர் மரத்தில் பொருத்திவைக்கப்பட்டிருந்த கிளைமேர் தொலைதூரக் கருவி மூலம் வெடிக்கவைக்கப்பட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எ9 பாதை அருகில் இடம்பெற்ற இத்தாக்குதலினால் இராணுவ அதிகாரி ஒருவர் பயணித்த வாகனம் சேதமைடைந்ததாக ஊர்ஜிதமற்ற வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் சிலர் கொடுத்த தகவலின் படி இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பினும் இது கிளைமோர் வகைக் குண்டுதானா என ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.

அதேசமயம் வன்னி வான்பரப்பில் விமானத் தாக்குதல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி இராணுவ வைத்தியசாலையில் , காயங்களுடன் இராணுவத்தினர் சிலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விடுதலைப் புலிகளை தோற்கடித்து இராணுவரீதியாக தாம் வெற்றிகொண்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் புலிகளின் கொரில்லாத் தாக்குதல் தற்போது ஆரம்பமாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 9ம் திகதியும் இவ்வாறான ஒரு சிறிய தாக்குதல் இடம்பெற்றதையடுத்தே எ9 பாதை திறப்பதில் தாமதமானதாகச் சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக