ஞாயிறு, 12 ஜூலை, 2009

இலால்பகதூர் சாத்திரி எப்படி இறந்தார்?
தினமணி


புது தில்லி, ஜூலை 11: பாகிஸ்தானுடன் இந்தியா வெற்றிகரமாக நடத்திவந்த போரை முடிவுக்குக் கொண்டுவர சோவியத் யூனியனின் தாஷ்கென்ட் நகரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அப்போதைய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி எப்படி இறந்தார் என்ற மர்மத்தை அம்பலப்படுத்துமாறு அவருடைய மகன் சுநீல் சாஸ்திரி அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்."1966-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி தாஷ்கென்ட் நகரில் தங்கியிருந்த லால் பகதூர் சாஸ்திரி திடீரென இறந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் விஷம் கொடுத்து அவரைக் கொன்றிருக்கக்கூடும் என்ற சந்தேகம் அப்போதே எழுப்பப்பட்டது. ஆனால் மேற்கொண்டு தகவல்கள் ஏதும் தரப்படவில்லை.அவருடைய மரணம் எங்களுக்கும் தேசத்துக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. எனக்கு அப்போது வயது 16. இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடலை நீராட்டும்போது மார்பிலும் அடிவயிற்றிலும் முதுகிலும் கருநீலத்தில் ஆங்காங்கே புள்ளிகள் இருந்தன. அவை விஷம் கொடுத்து கொல்லப்பட்டதற்கான அறிகுறிகள் என்றே கருதப்படுகின்றன. அவருடைய உடலை வழக்கமான சவப் பரிசோதனைக்கு உள்படுத்தவில்லை. ஆனால் சோவியத் யூனியனின் டாக்டர்களும் அவருடன் சென்ற இந்திய டாக்டர்களும் சாதாரண முறையில் சோதித்தனர். அவர்கள் என்ன அறிக்கை அளித்தார்கள் என்று தெரியவில்லை.சவப் பரிசோதனை நடத்தப்படவில்லையே தவிர அவருடைய சாவு குறித்து டாக்டர்கள் நிச்சயம் ஏதோ அறிக்கை அளித்திருக்கின்றனர். அந்த அறிக்கை மத்திய அரசிடம் இருக்கிறது. ஆனால் அதைத் தர முடியாது, அது ரகசியமானது என்று அரசு கூறிவிட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த அறிக்கையை நான் கேட்டிருந்தேன்.அவருடைய சாவு குறித்து பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பி அன்றைய பத்திரிகைகளில் பல கட்டுரைகள் வெளியாகின. ஆனால் எந்தவித விசாரணையும் நடத்தத் தேவையில்லை என்று இந்திய அரசு முடிவெடுத்துவிட்டது.சாஸ்திரியார் இறப்பதற்கு முன்னால் அவருடைய அறையில் அவருக்குச் சாப்பாடு, பால் ஆகியவற்றைக் கொடுத்து கவனித்துக் கொண்ட பட்லர் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் என்ன கூறினார் என்ற தகவலும் வெளியாகவில்லை.அவருடைய மரணம் குறித்து ஆவணங்களில் என்ன இருக்கிறது என்று அரசு வெளியிடுவதால் அதற்குத் தீமை ஏதும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் அரசு மறுக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் எழுந்த கேள்விகளுக்கு விடை அளிப்பதாக அது இருக்கும் என்பதால்தான் அறிக்கை கேட்கிறோம். பிற நாடுகளுடன் நமக்கு இருக்கும் உறவுகள் கெட அது வழி செய்யக்கூடும் என்று அரசு கூறுகிறது. அப்படியானால் எதையோ மறைக்கிறது என்பது தெளிவாகிறது.மாரடைப்பால் இறந்ததாக அரசு இப்போதும் கூறுகிறது, விஷம் கொடுத்து கொன்றிருக்கலாம் என்று குடும்பத்தாராகிய நாங்கள் சந்தேகிக்கிறோம்' என்றார் சுநீல் சாஸ்திரி.
கருத்துக்கள்

இந்திரா காந்தி தலைமை அமைச்சராக ஆவதற்காகத்தான் எளிமையின் திலகம் இலால்பகதூர் சாத்திரி கொல்லப்பட்டார் என்று அன்றே எழுதப்பட்டது. இன்னும் ஒரு சாரார் அவரது மரணம் இயற்கையானது அல்ல; சதியினால் நிறைவேற்றப்பட்ட கொலைச் செயல் என்றே கருதி வருகின்றனர். ஆனால், இஃது உண்மையாயின் அவ்வாறு பயனடைந்தவர் பரம்பரையினர் அதனை எவ்வாறு வெளிப்படுத்துவர்? வேண்டுமானால் கேட்பவருக்கு அமைச்சர் பதவி அளிக்கலாம். அல்லது அவரையும் இலலாமல் ஆக்கலாம். காங். ஆட்சியில் இல்லாத பொழுது ஏன் இந்தக் கேள்வியைச் சுனில் கேட்கவில்லை? அன்றைக்கு இருந்த சோவியத்து ஒன்றிய அமைப்பு இன்று இல்லாததால் உண்மையான அறிக்கையை வெளியிடுவதால் எந்த உறவும் கெடப்போவதில்லை. ஆனால், அதுவல்ல உண்மை என்றால் உண்மையால் சுடப்படுவோர் அதனை எக்காலமும் வெளியிடப் போவதில்லை. மறைக்கப்பட்ட உண்மைகளில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/12/2009 3:44:00 AM

Mr Yogaraja is trying to tie the tonsured head and the knee together!

By AKS
7/12/2009 1:55:00 AM

Mr Yogaraja is trying to tie the tonsured head and the knee together!

By AKS
7/12/2009 1:53:00 AM

Dinamani is the only news paper in Tamil Nadu bringing out the true news about tamil eelam. The Hindu and Dinamalar papers are anti humans, they write stories for money, any ruling party can buy these papers, they worst to society. Hindu Ram is man eating animal, he writes all false about Eelam Tamils. Hindu & Dinamalar papers should be boycotted, people should not buy these papers

By yogaraja
7/12/2009 12:42:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக