சனி, 5 ஜூன், 2010

கணினியில் தமிழ்த் தட்டச்சு


கணினியில் தமிழ்த் தட்டச்சு
வணக்கம்
கணினியில் தமிழ்த் தட்டச்சு செய்ய பல வழிமுறைகள் பல்வேறு கணியன்கள் (மென்பொருட்கள்) மூலமும் நீட்சிகள் மூலமும் கிடைக்கின்றன. நெருப்பு நரி (FireFox) இணைய உலாவியின் தமிழ்த் தட்டச்சு நீட்சி மூலம் மிகவும் எளிதாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.
தமிழில் தட்டச்சு செய்வதற்கு தட்டச்சு பயின்றிருக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் உச்சரிப்பு தட்டச்சுமுறை கூடுதலாக இவற்றுள் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது 'அம்மா, அப்பா' என தட்டச்சு செய்ய அதன் உச்சரிப்பை ஆங்கிலத்தில் 'ammaa, appaa' தட்டச்சு செய்வது போதுமானது.

1.இணைய உலாவியில் (நீட்சிகள்)
2.கணினியில் (மென்பொருட்கள்)
3.இணையத்தில் (இணைய பக்கங்களில் இணைய இணைப்புடன்)

1.நெருப்பு நரி (FireFox) இணைய உலாவியில் தமிழ்விசை (tamilkey) நீட்சியை கீழ்கண்ட முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து பதிந்துகொள்வதன் மூலம் தமிழ் தட்டச்சு செய்யலாம்.
தமிழ்விசை இங்கே சொடுக்கவும்

2.கணினியில் தமிழ் தட்டச்சு செய்ய பல மென்பொருட்கள் இருப்பினும் இங்கே நான் அறிந்த சில அருமையான இலவச மென்பொருட்களைப் பார்ப்போம்.

3.இணைய பக்கங்களில் இணைய இணைப்புடன் உள்ள பொழுது கீழ்கண்ட முறையில் தட்டச்சு செய்யலாம்.

அ) கூகுள் மின்னஞ்சல் (G-mail compose) ,
ஆ) ரெடிப் மின்னஞ்சல் (Rediff mail compose),
முதலியனவற்றில் கடிதப்பக்கத்தில் தமிழ் தட்டச்சு செய்யலாம். மேலும் கீழ்காணும் இணையப் பக்கங்களில் தமிழ் தட்டச்சு செய்யும் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வமைப்புகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி எளிதாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.





எழுத்துரு உதவி

Click Here To Download Font 1

Click Here To Download Font 2

எழுத்துரு உதவிக்கு இதை அழுத்தவும் 1

எழுத்துரு உதவிக்கு இதை அழுத்தவும் 2

1 கருத்து: