சனி, 29 ஆகஸ்ட், 2009

Chauvinism and greed 'naked'

in Sri Lanka

[TamilNet, Saturday, 29 August 2009, 04:07 GMT]
It was frightening to see the combined effect of naked chauvinism of Sri Lanka and naked greed of powers, writes TamilNet political commentator in Colombo responding to the video clip displayed Tuesday. “Such a trend in the establishments is a challenge to every lay human being of the civilized world. While rising up to free people in the internment camps is a spontaneous response, what is of paramount importance is independent political organisation of Tamils in order to meet the challenge of the same forces that are now coercing or enticing them to drop righteous aspirations. Tamils are not asking for other’s land or for empires. They only ask for their own land and there is nothing to get scared or to feel ashamed of it. As people of classical heritage, if Tamils fail, they fail not merely their cause but an entire human civilization,” he writes commenting on current Tamil affairs.

Full text of the response from the commentator follows:

The world was shocked to see a video footage Tuesday showing the nakedness of Colombo’s genocide of Tamils. What was seen is only an iota of what has happened and what has been happening for decades in the island. But the snippet clip from the Independent Journalists of Sri Lanka has awakened the civilized world that was by design put to slumber by the so-called international media.

Colombo is only partly responsible for crimes against Tamils.

It is the naked greed of the tzars of so-called international community banking on Sri Lankan state that was essentially responsible for this savage experiment on human civilization.

In the long history of genocide against Tamils in the island, the state always escaped scot-free in the pogroms of 1958, 1977 and 1983. The international community did nothing in the edification of the state. Tamils were always told to compromise.

Confident of its impunity, the state was ‘all naked’ in waging the genocidal war and in incarcerating Tamil people. Equally naked, the international community rationalised and abetted it.

Indian Establishment the most active partner of Colombo, China, Russia, Pakistan, and a host of others demonstrated this in a crude way in the UN human rights council. But Tamils are more worried of the sophisticated ways of the West.

India in an intimidating way and the West in an enticing way tries to do the same thing. After military abetment, now strengthening Sri Lankan state diplomatically and economically, they want the victims to reconcile, not to call ‘genocide a genocide’ and want Tamils to forget their aspiration of achieving permanent security by having their own nation state.

India and the West are also competing subtly in capturing and blunting the democratic political moves of Tamils to suit their interests. The former is active in the island and the latter in the diaspora. The main agenda, either by coercion or enticement, is to make Eezham Tamils to drop their nationalism.

They do this with full knowledge that in the context of the deep divide in the island, nothing less than the recognition of two nations only could sort out the matter.

The Australian foreign minister was very open last week.

In view of the long ‘trade relations’ of Australia with Sri Lanka and as a fellow island nation in the ‘region,’ his government is interested in seeing a united Sri Lanka and is reluctant to call for freeing the incarcerated Tamils, despite the fact that all its earlier calls for restraint were not cared by Sri Lanka.

Australia didn’t consider Indonesia as an island nation in the region when it stood for the independence of East Timor.

What implied by the Australian foreign minister is that Tamils have to accept genocide and subjugation for the sake of the economic and geopolitical interests of powers. He leaves Tamils with no choice.

Such an open show of greed by the establishments today is a challenge to the entire civilised world. Ultimately it is a war against every person of lay humanity.

Agitations to attract attention on the plight of Eezham Tamils are planned by diaspora groups in different parts of the world. Attracting the attention of whom? Not that the establishments that caused it don’t know it.

Tamils have to draw the attention of the alternative world, including alternative sections of the Sinhala nation and mobilize them against the common danger all are facing.

Of course, the issue of people in the internment camps is of grave concern and there could be no second word that all have to rise up for their freedom.

But one has to carefully note that governments that allowed genocide, incarceration and the crushing of Tamil safe guards, and the international media that silently sabotaged the Tamil cause, are now showing interest in the IDP issue only because it is essential for the Multinational Corporations (MNCs) to establish themselves in the island. At the same time, all of them meticulously continue nullifying the Tamil national question.

There is no need to elaborate that their operations in collaboration with the Sri Lankan state, while keeping Tamils deprived of sovereignty to decide about their homeland, portend only danger.

The idea is to capture everything of Tamils including their spirit so that the question of political solution or handing over the land to the rightful owners doesn’t arise and the greedy ones could have their ways, making people as ‘work force’.

Therefore, what is of paramount importance is Tamils demonstrating their political will for sovereignty and telling the powers loud and clear that meaningful engagement comes only when they recognize the nation of Eezham Tamils and its absolute self-determination.

Independent political formation of Eezham Tamils, strongly anchored on their national aspiration for independence and sovereignty, is the foundation for achieving anything or engaging with anybody meaningfully.

Individuals who believe in circular ways or in the formulas of powers and think that engagement first and demands later, may do so and may be appreciated if their efforts bring in acceptable results.

But for this purpose they should not attempt to deviate the voice coming from the soul of Tamil nation. Truncating political voice is not the strategy.

It is for an independently organised polity of Eezham Tamils to decide about alliances. An ally may even be an alternative Sinhala polity but it cannot be anyone who tells Tamils to forget righteous aspirations.

Tamils are not asking for other’s land or for empires. They only ask for their own land and there is nothing to get scared or to feel ashamed of it.

The people of Tamil Nadu on their part have a duty in putting the message in strongest possible terms to Karunanidhi government and to the Establishment in New Delhi.

As people of classical heritage, if Tamils fail, they fail not merely their cause but an entire human civilization.

சர்வதேச சட்டத்தை மீறும்
அச்சம் நிறைந்த வீடியோ -
ஐ.நா நிபுணர்
பிரசுரித்த திகதி : 29 Aug 2009

இலங்கை ராணுவத்தினரின் இன அழிப்பு வீடியோவானது சர்வதேச சட்டத்தை மீறுகின்ற திகிலூட்டும் பயங்கர வீடியோ எனக் கூறியுள்ளார் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன நிபுணர்.

கைகள் பின்னால் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் வீடியோவானது சர்வதேச சட்டத்தை மீறுகின்ற ஒரு இன அழிப்பு நடவடிக்கை என விவரித்துள்ளார் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன சிறப்பு தொடர்பாளரான பிலிப் ஆல்ஸ்ரன். இந்த வீடியோவை மறுத்து தாம் அப்படியான குற்றச் செயலில் ஈடுபடவில்லை என அரசாங்கம் மறுத்தால், அதற்கு எதிராக சர்வதேச சமூகமானது விசாரணை நடத்துவது மிக எளிதாகிவிடும் என்றும், அரசாங்கத்தைப் பழிவாங்கலாம் என்றும் அவர் மேற்கொண்டு கூறியுள்ளார்.

அண்மைக்காலங்களில், இலங்கைக்கு விஜயம் செய்வதற்காக ஆல்ஸ்ரன் பல முறை அனுமதி கேட்டிருந்தபோதும், அரசாங்கம் தனக்கு அனுமதி தரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

2009, மே 9 ஆம் திகதி ஐ.நா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையில் தொடர்ந்து பொதுமக்கள் கொல்லப்படுவது மட்டுமன்றி அங்கு என்ன நடக்கிறது அதைப்பற்றிய விவரம் ஒன்றுமே அறிய முடியாதுள்ளமை பற்றியும் தாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தமது கருத்தையும் எழுதியுள்ள அல்ஸ்ரன், இலங்கை அரசானது ஊடகவியலாளர்களையோ, மனிதாபிமான கண்காணிப்பாளர்களையோ அங்கு அனுமதிக்காமல் இருப்பதானது கடந்த மூன்று மாதத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதன் காரணமாகத் தான் எனக் கூரியுள்ளார்.

2009, மே 29 ஆம் திகதிய பிரிட்டிஸ் த ரைம்ஸ் பத்திரிகையானது, கடைசிநேர போரில் குறைந்தது 20,000 மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ள வேளை, ஐ.நா இன் ரகசிய அறிக்கையில் ஏப்பிரல் மாத முடிவில் மட்டும் 7,000 மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்த
நார்வே அமைச்சர் கோரிக்கை



ஓஸ்லோ, ஆக.28- இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்லும் விடியோ காட்சிகளை சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த 'சேனல்-4' என்ற தொலைக்காட்சி வெளியிட்டது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனிடம் தான் நேரில் வலியுறுத்தவுள்ளதாகவும் எரிக் சோல்ஹெய்ம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2002ல் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின்போது சமாதானத் தூதுவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள்

I was watching Thamarai's speeches in youtube. Excellent speech. India should answer for the genocide.

By Madhivadhani
8/29/2009 12:07:00 AM

Thankful to Norway! I am ashamed that TamilNadu is in India and I am also part of this bloody India. I am not an Indian anymore. I hate Bharatha matha now.

By Kirubakaran
8/28/2009 11:57:00 PM

India has no moral grounds to talk about human rights. India will pay a price for what it did or did not do in SL to save Tamils. All the blood in the hands of Manmohan, Sonia, Rahul, Priyanka,Chidambaram, Krishna, Karunanidhi, Shivshankar, & Nirupama Menons, Narayanans will haunt them. "Yaanaimel Thunjiya Thevar" Chozhan will definitely rerise and get the rights of Tamils restored.THANKS A LOT NORWAY.

By NRITamil
8/28/2009 11:47:00 PM

Needhi is just/ok while 'Justice' is an injustice anti-Tamil. We'll see all Tamil films sans VJ?, as whole film industry starved and revolted against injustice to Tamils anywhere if it happens. Themadhura thamizhosai ulagamellam ariyumvagai seyvorrkku vazhthukkal

By Judge
8/28/2009 11:46:00 PM

ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும். இதுவே ஈழத் தமிழர்கள் தமது தாயகத்தை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தையும். தமிழர்களை மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை நோக்கித் தள்ளும் யதார்த்தம். இலங்கை அரசு, இறுதி யுத்தத்தின்போது தப்பிச் சரணடைந்த தமிழ் மக்களை நடாத்தும் விதம் மனிதாபிமானமுள்ள எந்தச் சமூகத்தினாலும் அங்கீகரிக்க முடியாத கொடுமை. பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொடிய ஆயுதங்கள் கொண்டு சிதைத்துக் கொன்றுவிட்டு, உயிரோடு புதைத்துவிட்டு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதை . பிறந்த குழந்தை முதல், இறுதிக் காலத்தில் வாழும் பெரியவர்கள் வரை வவுனியா வதை முகாம்களின் முட்கம்பி வேலிகளுக்குள் வாழ்வைத் தொலைத்துவிட்டு ஏங்கித் தவிக்கின்றார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான யுவதிகளும், இளைஞர்களும் எதிர்காலம் தெரியாத இருட்டில் வாழ்கின்றனர். வவுனியா முகாம்களிலிருந்து நாளாந்தம் பலர் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் திரும்பி வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

By VANI KUMAR, UK
8/28/2009 11:03:00 PM

Tamils around the world say "NO" to Karuna-nithi and his products such as SUN TV and SUN productions. DONT screen 'Enthiran' and 'Ninaithalae Innikum' in countries where Tamils live.

By Justice
8/28/2009 10:08:00 PM

நடிகர் விஜய் தமிழினப் படுகொலைலை அரங்கேற்றிய சோனியா காந்தியோடும் ஈழத்தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் இராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர் தமிழீழத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச இரண்டகம் என நாம் கருதுகிறோம். அதனைப் புலம்பெயர் தமிழர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட் படத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம்.

By Neethi
8/28/2009 10:04:00 PM

IN Srilanka, there is no Human beings.There is full of Barbarians,Vultures which are eating human beings. So the efforts of Humanists ,like Eric ,are in vain or like a stone which is put in the well..

By Ka.VEZHAVENDHAN
8/28/2009 9:18:00 PM

ஒழுங்காக விழிப்புடன் இருந்த பிரபாகரனை 'சமாதானம்' என்ற வலைக்குள் நார்வே அரசை வைத்து மேற்குலக நாடுகள் வஞ்சகமாக விழ வைத்தன. சமாதான காலத்தில் நிறைய துரோகிகள் தமிழர் பகுதிகளில் ஊடுறுவ வைக்கப்பட்டார்கள். புலித் தலைவர்கள் ஆழ ஊடுறுவும் படையால் கொல்லப்பட்டார்கள்.

By நவீன் சென்னை
8/28/2009 4:58:00 PM

When will India speak against atrocities? Probably when we are betrayed by our own diplomacy! India is no more a land of Gandhi and Nehru! It has lost its heart and soul- only the skeleton is left! FIAT JUSTICIA - LET JUSTICE BE DONE!

By GERSHOM CHELLIAH
8/28/2009 4:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ஐ.நா.வின் பொறுப்பாளர்கள் அனைவரையும் உடனே நீக்க வேண்டும். அப்பொழுதுதான் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். போர்க் குற்றவாளிகளாகக் கொலைக்கு உதவிய இந்தியா உள்ளிட்ட பிறநாட்டுத் தலைவர்களையும் அதிகாரிகளையும் பான்கீமூனையும் சேர்கக் வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற கொடுமை எங்கும் நிகழக் கூடாது என்பதற்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்--
இலக்குவனார் திருவள்ளுவன்
போரில் தொடர்பில்லாதவர்களை முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும்:
இலங்கை உச்சநீதிமன்றம்



கொழும்பு, ஆக.28- போரில் தொடர்பில்லாத பொதுமக்களை முகாம்களில் இருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வவுனியா அரசு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள வன்னிப் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் மேற்கண்ட உத்தரவை இலங்கை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

வன்னியைச் சேர்ந்த சோபிகா சுரேந்திரநாதனும் அவரது பெற்றோரும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குடும்பத்திற்கு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் மொத்தம் 3 வீடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டதன் அவசியம் என்ன என்பது குறித்து அக்குடும்பத்தினர் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, போரில் தொடர்பில்லாத பொதுமக்களை முகாம்களில் இருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை மற்ற குடிமக்களைப் போல சமமாக நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளதாக அந்த இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

சிங்கள நீதிபதிக்குப் பாராட்டுகள். இந்த நடுநிலை உணர்வு பிற சிங்களர்களிடமும் ஏற்பட வேண்டும். தமிழ்க் குடி மக்களைச் சமமாக நடத்தாத பொழுது அதை எதிர்க்கும் உணர்வு சிங்களர்களிடம் ஏற்பட வேண்டும். ஆனால், மத வெறி பிடித்த குருமார்களும் அதிகார வெறி பிடித்த தலைவர்களும் கொலை வெறி பிடித்த படைத்தலைவர்களும் இதற்கு எதிராகவே இருப்பர். அவர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தாலதான் மக்கள் உயிர்கள் காப்பாற்றப்படும். மனித நேயம் மிக்க சிங்களத் தலைவர் எவரும் உருவாவாரா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2009 3:59:00 AM

It is obvious that the World Community is ignoring the atrocities of SLA for their own interests and we from tamilnadu whom the Eelam people had a faith in, have betrayed ! We don't even have the courtesy of a Srilankan judge to save these people!

By Karthi
8/29/2009 2:15:00 AM

How do you know Naveen?. R u either from Chennai or Vavuveeya? - Karikalan P, Villupuram.

By Karikalan P.
8/29/2009 12:13:00 AM

உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வரிசையில் நின்ற மக்கள் இப்போது மரணத்திற்காகவும், கற்பழிக்கப்படுவதற்காகவும் வரிசையில் நிற்கிறார்கள்.

By நவீன் சென்னை
8/28/2009 4:55:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு' - 90: விடுதலைப் புலிகளின் பதிலடி!



யாழ் பகுதிகளில் சிங்கள ராணுவத்தின் கோட்டை போன்று செயல்பட்ட குருநகர் ராணுவ முகாம் (1984 பிப்ரவரி 24) தகர்க்கப்பட்டது. விமானப்படையினர் சுன்னாகத்திலும் தெல்லிப்பளையிலும் அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்றதற்கு பதிலடியாக, அத்துமீறல் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட "கஜவாகு ரெஜிமெண்ட்' பிரிவைச் சேர்ந்த 15 பேரை வாகனத்தில் வைத்தே, புலிகள் குண்டுவீசி அழித்தனர். "மக்களே மகத்தானவர்கள் - அவர்களுக்காகவே இயக்கங்களும் இயக்க நடவடிக்கைகளும்' என்ற அரசியல் சூத்திரத்தின் அடிப்படையில் சிங்கள ராணுவத்தின் கொடுமைகளுக்குப் பதிலடி கொடுக்க மக்களையே விடுதலைப்புலிகள் தயார் செய்து தாக்குதல் நடத்திய நிகழ்ச்சி யாழ்ப்பகுதியில் முதன்முதலாக நடந்தது. யாழ் நகரத்தில் நாகதீப-கயிலைத்தீவு யாத்திரீகர்களின் வழிபாட்டுக்கென்று புத்த விகாரையில் வழிபாடு நடத்த, இலங்கையின் தெற்குப்பகுதிகளில் இருந்தே புத்த குருமார்களை அழைத்து வந்தனர். இவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பகுதி வந்து, ராணுவ ஜீப்புகளில் ஏறி, புத்தவிகாரைகளுக்கு வந்து வழிபாடு நடத்துவதைப் பார்த்து மக்கள் எரிச்சலுற்றனர். ஒரு நாள் யாழ் நகரில் அமைந்த புத்தவிகாரைக்குச் செல்லும் வழியெங்கும் தடைகளை ஏற்படுத்தினர். ஸ்டான்லி வீதியிலிருந்த புத்த விகாரையும் ஆஸ்பத்திரி வீதியிலிருந்த சிங்கள மகா வித்தியாலயத்தையும் மக்களே தகர்த்தனர். இவை இரண்டும் சிங்கள ராணுவத்தின் முகாம்களாகவே செயல்பட்டு வந்தன என்பதாலும், மாதாகோயில் ஒன்று தாக்கப்பட்டதாலும் மக்கள் கூடுதல் ஆத்திரத்துக்கு ஆளானார்கள். மக்கள் கடும் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கைக்குண்டுகளையும் வீசினர். கைக்குண்டுகளை வீச, புலிகளே மக்களுக்குப் பயிற்சி அளித்தனர். புலிகளின் வரலாற்றில் கடுமையான காவல்கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலையை உடைத்து, அங்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிர்மலா நித்தியானந்தனை மீட்டது, கடற்படையினரை, பொலிகண்டிப் பகுதியில் மோட்டார் படகில் சென்று தாக்கி ஆறுபேரைக் கொன்றது, வல்வெட்டித்துறைக்கு அருகில் நெடியநாடு என்ற இடத்தில் மூன்று கவச வண்டிகள், ஒரு டிரக், ஒரு ஜீப் சகிதம் சென்று வெறியாட்டம் போட்டுத் திரும்பிக்கொண்டிருந்த 9 கமாண்டோ படையினரைத் தாக்கி அழித்தது, மாங்குளம் அருகே ஒட்டிசுட்டான் காவல் நிலையத்தில் கொரில்லாத் தாக்குதலை அடக்குவதில் சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோ படையினரைத் தாக்கி, காவல்நிலையத்தின் கருவூலத்திலிருந்த ஆயுதங்களைப் பறித்தெடுத்தது ஆகியவை மிகமிக முக்கியமான சம்பவங்களாகும். புலிகளின் ஆயுதத் தேவையை நிறைவேற்றவும், கமாண்டோ படையினரின் கொட்டத்தை அடக்கவும் புலிகளால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மன்னார், கரவெட்டி மேற்கு, அச்சுவேலி, திக்கம், முல்லைத்தீவு, களுவாஞ்சிக்குடி, தொண்டமானாறு-பலாலி வீதி, தெல்லிப்பளைப் பகுதிகளில் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி சமரில் 64 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் வடபிராந்திய சிங்கள ராணுவ தளபதி பிரிகேடியர் ஆரியப்பெருமா கொல்லப்பட்டார். புலிகள் தரப்பில் களுவாஞ்சிக்குடி தாக்குதலில் லெப்டினன்ட் ஆர்.பாமதேவா, திக்கத்தில காப்டன் ஞானேந்திர மோகன் என்கிற ரஞ்சன்லாலா ஆகிய இருவரும் மரணமடைந்தனர். மேலே கூறியவையே, விடுதலைப்புலிகளின் வரலாற்றில் 1975-1984-ஆம் ஆண்டுகளுக்குள் நடைபெற்ற சம்பவங்களின் சுருக்கம் ஆகும். 1984-1987-இல் தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப, ஏராளமான அளவில் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த மக்களின் குழந்தைகள் படிப்புக்குத் தகுதி நிர்ணய வழிமுறைகளை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஈழத் தமிழர்களுக்கு என்று தனி ஒதுக்கீடு செய்து மாணவர்கள் கல்வி கற்கவும், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற உயர்கல்வி வசதிகள் பெறுவதற்கும் ஆணை பிறப்பித்தார் எம்.ஜி.ஆர். (எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும் - வே.தங்கநேயன்). பின்னாளில், 27-4-1987-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமையைக் கண்டித்தும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவேண்டிய வரலாற்று நெருக்கடி குறித்தும் எம்.ஜி.ஆர். சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கிய பின்னர், விடுதலைப்புலிகளுக்கும், ஈரோஸýக்குமாக வழங்கிய நாலு கோடி ரூபாய்க்கான காசோலை குறித்து ஜெயவர்த்தனா அலறினார். அவர் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தொடர்புகொண்டு தெரிவித்த புகாரின் அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்கும் ஈரோஸýக்கும் அளித்த காசோலையை எம்.ஜி.ஆர். திரும்பப் பெற்றார். இது குறித்து விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது "விடுதலை' நூலில் எழுதி இருப்பதாவது: ""ஈழத்தமிழர்களுக்குத் திரட்டிய நிதியை அம்மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் விடுதலை இயக்கங்களுக்குக் கொடுப்பதில் என்ன தவறு - இதனைப் பிரதமர் புரிந்துகொள்ளாதது ஏன்?'' என்று எம்.ஜி.ஆர். ஆதங்கப்பட்டார். தொடர்ந்து, ""அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லையே'' என்றார். ""அந்தக் காசோலை என்னிடம்தான் இருக்கிறது'' என்றேன். ""அதை அமைச்சரிடம் (பண்ருட்டி ராமச்சந்திரனிடம்) கொடுத்துவிடுங்கள், நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள் எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி ரூபாய் தருகிறேன்'' என்றார். ""எனக்குப் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது. மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றோம். சொன்னபடி எங்களுக்கு நாலு கோடி ரூபாய் அளித்தார்'' என்றும் குறிப்பிட்டுள்ளார் பாலசிங்கம். ""விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் இடையில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது'' என்று குறிப்பிட்டுள்ளார் (தகவல்: விடுதலை நூல்).
வெள்ளையடித்து வெப்பத்தைக் குறைப்போம்



கடந்த ஜூன் ஆறாம் நாளை உலகச் சுற்றுச்சூழல் தினமாக உலகெங்கும் கொண்டாடி முடித்துவிட்டார்கள். வழக்கம்போல பிளாஸ்டிக் குப்பைகளைத் தடை செய்ய வேண்டும், மின்சார நுகர்வைக் குறைக்க வேண்டும், பழைய காகிதங்களையும் துணிகளையும் மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும், கரிமக் குப்பைகளை உரமாக்க வேண்டும், குளியல் மற்றும் பாத்திரங்களைக் கழுவும் நீரைத் தோட்டங்களில் பாய்ச்சி, கறிகாய்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் தாராளமாக அள்ளி வீசப்பட்டுள்ளன.நோக்கியா நிறுவனம் பழைய செல்பேசிகளையும் இதர மின்னணுச் சாதனங்களையும் சேகரித்துச் சமையல் பாத்திரங்களாகவும் பூங்கா பெஞ்சுகளாகவும் மறுசுழற்சி செய்து வழங்கப் போவதாகச் சொல்கிறது. அத்துடன் தன்னிடம் தரப்படும் ஒவ்வொரு செல்பேசிக்கும் ஒரு மரக்கன்றை நடப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. நல்ல நோக்கம். நல்ல முயற்சி.மனிதக் காரியங்களால் வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயுவின் அளவை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பது கட்டாயம் என்று விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் எச்சரிக்கிறார். தமிழகத்தின் நீண்ட கடற்கரையே ஒரு சாபமாக மாறிவிடலாம் என அவர் கூறுகிறார். வளிமண்டல வெப்பநிலை ஒரு செல்சியஸ் டிகிரி உயர்ந்தாலும் ஹெக்டேருக்கு முக்கால் டன் என்ற அளவில் நெல் உற்பத்தி குறையும். கடல் மட்டம் உயர்ந்து கடற்கரையோர வயல்கள் மூழ்கினால் நெல் உற்பத்தி வெகுவாகக் குறையும்.இமயமலைப் பனியாறுகள் உருகி நேபாளத்தில் வெப்ப அபாயத்தை உண்டாக்கி வருகின்றன. அடுத்த 50 ஆண்டுகளில் மாலத்தீவு கடலில் மூழ்கிவிடும் அபாயத்தில் உள்ளது. அங்குள்ள மக்கள் வேறு நாடுகளுக்குக் குடிபெயர்ந்து செல்லத் திட்டமிடுகிறார்கள்.சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு நவீன உலகின் விவசாயப் பண்ணைகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் எனப் பலவகையான காரணிகள் உள்ளன.இதெல்லாம் சரிதான். அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி.அமெரிக்க அரசின் ஆற்றல்துறை அமைச்சர் ஸ்டீவன் சூ வீடுகளின் கூரைகள், மொட்டை மாடிகள், சாலைகள், வாகனங்களின் மேற்பரப்புகள் என வெயில்படுகிற எல்லாப் பரப்புகளிலும் வெள்ளையடித்துவிட வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. அவர் சொன்னால் அர்த்தமிருக்கும்.வெள்ளை நிறப்பரப்புகள் தம் மீது விழும் வெப்பத்தில் எண்பது விழுக்காடு வரை பிரதிபலித்து வானுக்குத் திருப்பி அனுப்பிவிடும்.மொட்டை மாடியில் வெள்ளையடிப்பதால் வீட்டுக்குள் இறங்கும் வெப்பம் குறைந்து மின் விசிறிகள், குளிர் சாதனங்கள் போன்றவற்றின் தேவை குறையும். கார்களின் மேற்பரப்பு வெள்ளையாக இருந்தால், உள்ளே சூடு குறைந்து ஏசி போடாமல் சமாளிக்க முடியும்.இவ்விதமாக வெள்ளையடிப்பது, உலகிலுள்ள அத்தனை கார்களும் பதினோரு ஆண்டுகளுக்கு ஓடாமலிருந்தால் ஏற்படக்கூடிய வெப்ப உமிழ்வு குறைவின் நல்விளைவை ஏற்படுத்தும் என்று கலிபோர்னியாவிலுள்ள தேசிய ஆய்வகத்தைச் சேர்ந்த ஆர்ட் ரோசன்பெல்ட், ஹஷிம் அக்பரி, சுரபி மேனன் ஆகிய விஞ்ஞானிகளின் ஆய்வுகள் காட்டுகின்றன.நூறு சதுர அடி பரப்புள்ள வெள்ளைக் கூரை, ஒரு டன் கரியமில வாயுவால் ஏற்படக்கூடிய பசுங்குடில் விளைவை ஈடு செய்யும் என அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அதன்மூலம் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்குப் பத்து லட்சம் டாலர் வரை மின்சாரச் செலவைக் குறைக்க முடியும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.கலிபோர்னியா மாநில அரசு அங்குள்ள வர்த்தக நிறுவனங்களில் வெயில்படும் பரப்புகள் யாவும் வெள்ளை நிறம் பூசப்பட வேண்டுமென சட்டமியற்றியுள்ளது.விரைவில் அந்தச் சட்டம் தனியார் வீடுகள் மற்றும் பண்ணைகளுக்கும் நீட்டிக்கப்படவுள்ளது.இங்கிலாந்திலும் அதே போன்றதொரு சட்டம் வரப்போகிறது. நாமும் அதை மேற்கொள்ளலாம்.அமெரிக்கா, ரஷியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பசுங்குடில் வாயுக்களை வெளியிடும் நாடாக இந்தியா உள்ளது.அவற்றில் 68 சதவிகிதம் நிலக்கரியை எரிப்பதால் உருவாகின்றன. மரம் நடுவது, மழை நீர் சேமிப்பு, மின்சார உபயோகத்தைக் குறைப்பது, நடை அல்லது சைக்கிள் மூலம் பயணிப்பது போன்றவற்றுடன் நம் வீட்டு மொட்டை மாடிகளில் வெள்ளைச் சாயம் பூசுவதன் மூலம் நம்மாலான அளவில் வளிமண்டலம் சூடாவதைக் குறைக்கும் பங்களிப்பைச் செய்யலாம்.
கருத்துக்கள்

வெள்ளை யடிப்பதன் அறிவியல் உண்மை இப்பொழுதுதான் புரிகிறது.பழந் தமிழர்களின் அறிவியல் அறிவு வற்றாச் சுரங்கம் என்பதும் தெளிவாகிறது. உண்மையை உணரச் செய்த கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2009 3:46:00 AM
விஜயகாந்துக்கு போலீஸ் நோட்டீஸ்



சென்னை, ஆக. 28: பனையூர் இரட்டைக் கொலை குறித்து விசாரிக்கும் அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகி விவரங்களை தெரிவிக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சிபிசிஐடி போலீஸôர் சம்மன் அனுப்பியுள்ளனர்.சென்னை நீலாங்கரை பனையூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கப்பல் கேப்டன் இளங்கோ, அவரது மனைவி ரமணி ஆகியோர் கடந்த திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.இது தொடர்பாக பொதுமக்கள் மூலம் போலீஸôரிடம் பிடிபட்ட ராஜன் (எ) சண்முகசுந்தரம் போலீஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.விஜயகாந்த் அறிக்கை: இந்த நிலையில் பனையூர் இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாக தேமுதிக தலைவர் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.""திமுக அரசில் முக்கிய பொறுப்புகளை வகிக்கும் முக்கிய பிரமுகர் களின் உறவினர்கள் செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் இந்தச் சம்பவத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் இருப்பதாகவும், அதனால், இந்தக் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார்கள், துப்பாக்கிகள், உடன் வந்தவர்கள் என்று எல்லா தடயங்களும் மறைக்கப்பட்டுவிட்டதாக பேச்சு அடிபடுகிறது'' என அந்த அறிக்கையில் விஜயகாந்த் குறிப்பிட்டிருந்தார்.சிபிசிஐடி சம்மன்: இந்த அறிக்கை தொடர்பாக வெளியான செய்திகள் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸôர் விஜயகாந்த்துக்கு சம்மன் அனுப்பினர்.அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்பான விவரங்களை இரட்டைக் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரி முன் நேரில் ஆஜராகி தெரிவிக்குமாறு அந்த சம்மனில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.விஜயகாந்த் ஆலோசனை: இந்த சம்மனை தொடர்ந்து அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தேமுதிக மூத்த நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.டி.ஜி.பி. அறிக்கை: இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:பனையூர் இரட்டைக் கொலை வழக்கு முதல் கட்ட விசாரணையில் இருந்துவரும் நிலையில், இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.மேலும், சில அரசியல் கட்சித் தலைவர்களும், இவ்வழக்கு விசாரணை தொடர்பாக தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இது போன்ற தகவல்களால் விசாரணைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் குறித்து தகவல் ஏதும் தெரிந்தவர்கள் அதை விசாரணை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.அதைவிடுத்து, மனம் போன போக்கில் தேவையற்ற வதந்திகளை பரப்புவது போன்றவை இவ்வழக்கு விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும்.வழக்கு விசாரணையின்போது, இறந்த ராஜன் (எ) சண்முகசுந்தரத்தின் சடலம் காவல்துறையினரின் உதவியோடு எரிக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டுவது தவறான, விஷமத்தனமான ஒன்று என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்
'அப்படிப் போடு அரிவாளை' என்பார்கள்.'எடுத்தேன கவிழ்த்தேன்' என்பது போல், இனி யாரும் வாய்க்கு வந்தபடி எதையும் பேசமாட்டார்கள். காவல்துறையும் தன் விருப்பில் திரியலாம். பரபரப்புச் செய்திகளுக்குத் தீனிதான் கிடைக்காமல் போகும்.--- இலக்குவனார் திருவள்ளுவன்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்:
ஸ்டாலின் வேண்டுகோள்



உடல் உறுப்பு தான உறுதிமொழி படிவத்தில் முதலாவதாகக் கையெழுத்திடுகிறார் துர்காவதி ஸ்டாலின். உடன் (இடமிருந்து) மருத்துவமனையின் தலைவர் மல்லிகா மோகன்தாஸ்,
சென்னை, ஆக. 28: தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதை கடமையாகக் கருத வேண்டும் என்று துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் தன்னார்வ உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கத்தை ("மோட்' - "மியாட் ஆர்கன் டிரைவ்') அவர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து மேலும் பேசியதாவது:-""உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது பண்டைய காலத்திலிருந்தே இருந்து வருகிறது. குறிப்பாக "கண்ணுக்கு கண்ணே மருந்து' என இரு கண்களை தானமாக அளித்த கண்ணப்ப நாயனாரின் வரலாறு அனைவருக்கும் தெரியும்.இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக ஒருவரின் உறுப்பை மற்றவருக்குப் பொருத்தும் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன."மியாட்'-டுக்குப் பாராட்டு: உடல் உறுப்பு தானத்தில் உலகத்துக்கு முன்னோடியாக விளங்கும் முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்தான் "மோட்' எனும் தன்னார்வ உடல் உறுப்பு தான விழிப்புணர்வு இயக்கம்.தமிழக அரசின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த இயக்கத்தை நிறுவியுள்ள "மியாட்' மருத்துவமனையைப் பாராட்டுகிறேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் மாற்று உறுப்பு தேவை என்று காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவ இது போன்ற தான இயக்கங்கள் வளர வேண்டும்.மனைவிக்கு சபாஷ்: இந்த நிகழ்ச்சியில் உடல் உறுப்புகளை முதலாவதாக தானம் செய்ய முன் வந்த என் மனைவி துர்காவதியை, மனைவியாகப் பெற்றதில் மிகுந்த பெருமை அடைகிறேன். அவரைப் பின்பற்றி நானும் எனது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முன் வந்துள்ளேன்'' என்றார் ஸ்டாலின்.
கருத்துக்கள்

துணை முதல்வருக்கும் அவருக்கு முன்னோடியான அவரது துணைவியாருக்கும் பாராட்டுகள். அரசே உடலுறுப்புக் கொடையை ஓர் இயக்கமாக நடத்தலாம். உறுப்புக் கொடை அளிக்கப் பதிவு செய்வோருக்கே கட்சியில் பொறுப்புகள் அளிக்கப்படும் எனக் கட்சித் தலைமைகள் அறிவிக்கலாம். தினமணி மாதிரி விண்ணப்பப்படிவத்தை வெளியிட்டு வாசகர்கள் பதிவு செய்து கொள்ள வழிகாட்டலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/29/2009 3:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

ஆசியாவின் நோபல் பரிசு!



2009-ம் ஆண்டுக்கான ராமன் மகசேசே விருது பெறும் (இடமிருந்து) யூ ஷியோகாங் (சீனா), தீப் ஜோஷி (இந்தியா), கிரிசனா கிரைசிந்து (தாய்லாந்து), மா ஜுன் (சீனா), அன்டானியோ அபோஸô ஜூனியர் (பிலிப்பின்ஸ்), கா ஹிஸô வா (மியான்மர்). பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் பத்திரிகைகளுக்காக வியாழக்கிழமை போஸ் கொடுக்கின்றனர். பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் மறைந்த ராமன் மகசேசேவை கெüரவித்து இந்த விருது அரசுப்பணி, சமூக சேவை உள்ளிட்ட 6 துறைகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிய நாட்டவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. பதக்கம் மற்றும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு அடங்கியது இந்த விருது. ஆசியாவின் நோபல் பரிசு என்றே இது கருதப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த தீப் ஜோஷி சிறந்த சமூக சேவகராக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வரும் 31-ம் தேதி முறைப்படி வழங்கப்படுகிறது.

இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்த காலங்களின்போது உலகமே சனங்கள் சனங்கள் என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது.. இப்போது யுத்தம் முடிவடைந்து விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பிறகான காலத்திலும்‌ அந்தச் சனங்களின் வாழ்நிலையில் மாற்றமேதும் வந்துவிடவில்லை.
சாவின் கரங்கள் மூர்க்கமான எறிக்ணைகளாகத் தம்மைத் தாக்கிச் சிதைக்கும் என்ற பயத்தில் மருளத் தேவையில்லை என்பதைத் தவிர்த்துப்பார்த்தால்.. ஆனால் போரின் கடைசிக் கணம்வரை பெருங்குரலெடுத்துக் கதறிக் கொண்டிருந்த உலகு சட்டென்று மௌனமாகிக் கிடப்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை....



இதைப்பற்றிப் பேசுபவர்கள் அதற்குக் கபடத்தனமான அரசியற் சாயம் பூசியே அதைச் செய்கிறார்கள்.. 260, 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் செட்டிக்குளம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை நிலைமையைப் படுமோசமாக்கியிருப்பதாகக் கண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள்..



தற்காலிகமாக அமைக்கப்பட்ட‌ மலக்குழிகளில் பல நிரம்பி வழிந்தபடியிருப்ப‌தாகவும் பல முற்றாகச் சீர்கெட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.. எங்கும் தாங்க முடியாத‌ துர்நாற்றம்.. இது பெருத்த சுகதாரச் சீர்கேட்டுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும் என்பது திண்ணம்...



இங்கு இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் மனிதக் கழிவின் மீது நெளியும் புழுக்களைக் காணலாம்..


(அரசாங்கம் நெடுநாளைக்கு மக்களை இந்த முகாம்களில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே ஐ.நா தற்காலிக மலசலக் குழிகளை அமைத்துக் கொடுத்திருந்தது... ஆனால் அரசாங்கத்துக்கு அவர்களை இப்போதைக்கு மீளக் குடியேற்றும் எண்ணம் சற்றேனும் இருப்பதாகத் தோன்றவில்லை...



குறைந்த பட்சம் வெளியே உறவினர்களோடு சென்று தங்கி வாழக்கூடிய நிலையிலுள்ள குடும்பங்களையாவது சோதனைகளை முடித்து விட்டுச் செல்ல அனுமதிப்பதாயில்லை.. அப்படிச் செய்வது முகாம்களில் நிலவும் மிகுந்த சனநெரிசலை வெகுவாகக் குறைக்கும்)



இங்கே இலங்கையில் ஜனநாயகம் நாளுக்கு நாள் சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது... அனைவரும் ஒரேகுரலில் ஒரேதொனியில் ஒரேபொருளையே உரைக்க வேண்டுமென்று நிர்ப்பந்திருக்கிறது ஒரு சில பேரால் மட்டுமே இயக்கப்படும் அரச யந்திரம்..


பெருத்த மௌனம் சனங்கள் மீது ஒரு கரும்போர்வையாகப் படர்ந்திருக்கிறது... ஆனால் வெளியுலகிலும் அப்படியா? இலங்கை அரசுக்கெதிரான குரல் விடுதலைப் புலிகள் அழியும் மட்டும் தான் ஒலித்தென்றால், அவ்வளவும் புலிகளுக்கு ஆதரவாக ஒலித்த குரல் மட்டும் தானா? சனங்களைப் பற்றிய கரிசனை..?


இனியான எதிர்காலம் என்ன?