சனி, 22 ஏப்ரல், 2017

தமிழுக்கான கட்டற்ற கணியங்கள்(மென்பொருட்கள்) – நிரல் திருவிழா



அகரமுதல 183,  சித்திரை 10, 2048 / ஏப்பிரல் 23, 2017



தமிழுக்கான கட்டற்ற கணியங்கள்(மென்பொருட்கள்) நிரல் திருவிழா

 

தமிழுக்கான கட்டற்ற கணியங்கள்(மென்பொருட்கள்) – நிரல் திருவிழா

நீங்கள் கட்டற்ற கணியங்கள்(மென்பொருட்கள்) உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா?
தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா?
பிற கட்டற்ற கணியம்(மென்பொருள்) பங்களிப்பாளர்களைச் சந்திக்க வேண்டுமா?
இதோ ஒரு வாய்ப்பு.

தமிழுக்கான கட்டற்ற கணியங்கள்(மென்பொருட்கள்) நிரல் திருவிழா

சித்திரை 10 / ஏப்பிரல் 23, 2017, ஞாயிறு

காலை 10.00 – மாலை 5.00

மணவை முத்தபா நினைவகம்,
அறிவியல் தமிழாய்வு அரங்கு,ஏ.ஈ. 103, 6ஆேவது தெரு,
10-ஆவது  முதன்மைச் சாலை,
அண்ணா நகர் மேற்கு, சென்னை  – 600040
தொடர்பு: த.சீனிவாசன் – 98417 95468
tshrinivasan@gmail.com  க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி,
உங்கள் வருகையை உறுதி செய்க.
நீங்கள் பங்களிக்க, நிறைய திட்டங்கள் காத்துள்ளன.
சில பட்டியல் இங்கே.
https://goinggnu.wordpress.com/2017/03/03/project-ideas-part-1-looking-for-contributors/
https://goinggnu.wordpress.com/2017/04/22/project-ideas-part-2-looking-for-contributors/
https://goinggnu.wordpress.com/2017/03/04/let-us-create-maps-in-tamil/
உங்கள் சொந்த ச் சிந்தனைகளையும் நிரலாக்கம் செய்யலாம்.
வாருங்கள்!
கட்டற்ற நிரலால் தமிழுக்கு வளமை சேர்ப்போம்!

கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே! – கோ.தெய்வநாயகம்




கட்டடக் கலை உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே!


   தொழில்நுட்பமும் கலைநுட்பமும் இணைந்து உருவாக்கப்படுவதே கட்டடக்கலை. இதன் செம்பொருள் உணர்ந்த மூத்த குடி உலகில் தமிழ்க்குடியே. உலகின் தலைசிறந்த கட்டடக்கலை வல்லுநர்களாகத் தமிழர் விளங்கி உள்ளனர். எனவேதான் பிரித்தானியக் கலைக் களஞ்சியம் தமிழர்களைத் தலைசிறந்த “”கோயிற் கட்டடக் கலைக் கட்டுநர்கள்” எனக் குறிக்கின்றது. வாழ்வியல் மற்றும் சமயஞ்சார் கட்டடக் கலையின் எழிலார்ந்த வடிவாக்கங்களைத் தமிழர்கள் தொன்றுத் தொட்டே ஆளுமையுடன் படைத்துச் சிறந்தமையை இன்றும் தமிழகத்தின் ஊர்களிலும் கோயில்களிலும் கண்டு மகிழலாம்.
முனைவர் கோ.தெய்வநாயகம்:
தமிழர் கட்டிடக் கலை:
முன்னுரை
[தமிழ்ச்சிமிழ்]