சனி, 26 பிப்ரவரி, 2011
what is the necessary for the bus day? :மாநகருக்குப் பேருந்துநாள் எதற்கு? (எதுக்குடே, பஸ் டே!)
வன்முறைக்கு வழிவகுக்கும் பேருந்து நாள் தேவையில்லை. கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி /
Last Updated :
சென்னை மாநிலக் கல்லூரி முன்பாக காமராஜர் சாலையில் நடந்த பஸ் தினக் கொண்டாட்டம் (கோப்புப் படம்).
"பஸ் டே' என்று சொல்லப்படும் பேருந்து விழா என்பது முதலில் மாநகரில் தொடங்கவில்லை. இந்த விழாவின் கருத்துரு தொடங்கியது சிறுநகரங்களில் மட்டுமே. அதுவும்கூட கிராமத்து மாணவர்கள்தான் இந்த விழாவுக்குக் காரணமானவர்கள்.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு எண்ணிக்கையில் பேருந்துகள் கிடையாது. அதிலும், ஊரக வழித்தடங்களிலிருந்து நகர்ப்புறத்தில் உள்ள கல்லூரிக்கு வர வேண்டும் என்றால் மிகவும் கடினம். அந்த வழியாகச் செல்லும் அரசுப் பேருந்துகளுக்கு அந்த கூட்டுரோடு-கள் பேருந்து நிறுத்தமாக அறிவிக்கப்படாத நிலையில் அவை நிற்காமல் பறந்து போகும். நின்று மாணவர்களை ஏற்றிக்கொண்டாலும், முழுக்கட்டணம் செலுத்தியாக வேண்டும். இப்போது இருக்கும் நடைமுறைபோன்று மாணவர் திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு கட்டணக் கழிவு வசதிகள் அமலில் இல்லாத நேரம்.அந்த நாள்களில் ஊரக மாணவர்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தவை தனியார் பேருந்துகள்தான். குக்கிராமங்களிலிருந்து கூட்டுரோடுக்கு வந்து காத்திருந்தால், தனியார் பேருந்துகள் அங்கே நின்று ஏற்றிச் செல்வார்கள். மாணவர்கள் கட்டணத்தில் பாதியைக் கொடுத்தால் போதும். சில நாள்களில் மாணவர்கள் கூட்டுரோடுக்கு நெருங்கி ஓடி வந்துகொண்டிருப்பதைக் கண்டாலும், வண்டியை நிறுத்தி ஏற்றிச் சென்ற பெருந்தன்மை அன்றைய தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இருந்தது. "நல்லா படிங்க தம்பிங்களா, படிச்சு நல்ல வேலைக்குப் போங்க, எங்கள மாதிரி நாய் பொழப்பு வேண்டாம்பா' என்று அன்புடன் டிக்கெட் கிழித்த நடத்துநர்கள் இருந்தார்கள். விழாக்காலங்களில், நிறைய இருக்கைகளில் மாணவர்கள் இருந்து, அமர இடம் இல்லை என்று பயணிகள் இறங்க முயன்றால், உக்கார வைக்கிறேன் வாம்மா என்று அழைத்து, "மாணவர்களை கொஞ்சம் இடம் கொடு ராஜா' என்று எழுப்புகிற உரிமையும்கூட அவர்களுக்கு இருந்தது. அவர்கள் எடுத்துக்கொண்ட இந்த உரிமையை மாணவர்கள் மதிக்கவும் செய்தார்கள். இதுபோன்றதான நட்புறவு ஊரக மாணவர்களுக்கும் தனியார் பேருந்து நடத்துநர்களுக்கும் ஏற்பட்டபோது, அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மாணவர்கள் ஒட்டுமொத்தமாக பங்கேற்கவும் மொய் எழுதுவதுமான உறவாகவும், கல்லூரிப் படிப்பின் கடைசி ஆண்டு என்ற நிலையில் அடுத்த ஆண்டு இந்த தினசரி பயணம் இல்லை என்று பிரியாவிடை கொண்டாடவும் விழைந்ததன் விளைவுதான் பஸ் டே.அந்த பஸ் டே என்பதும்கூட, அந்தப் பேருந்தில் முன்னதாகவே அதிகாலையில் போய்- அந்த வண்டி வேறு ஊருக்குப் போய்த்தான் கல்லூரி நேரத்துக்கு அந்த வழித்தடத்தில் வரும் என்பதால்- கலர் காகிதங்கள் ஓட்டி, மஞ்சள் நீர் தெளித்து அழகுபடுத்த ஒரு மாணவர் குழு அமைப்பார்கள். ஓட்டுநர், நடத்துநர், கிளீனர் என 6 பேருக்கு (பதினைந்து நாளைக்கு ஒருமுறை ஆள் மாறுவார்கள்) துணி எடுத்துக் கொடுக்க மாணவர்கள் தங்களுக்குள் பணவசூல் செய்வதும், அன்று அந்த நடையின்போது பேருந்தில் ஏறும் பயணிகளுக்கு சாக்லெட் கொடுக்கவும் ஒரு குழு செயல்படும்.இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தது. பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதில்லை. ஆனால், எந்த நோக்கத்துக்காக, எத்தகைய இணக்கமான அன்பின் வெளிப்பாடாக ஒரு நிகழ்வு ஏற்பட்டதோ அது இன்றைய மாநகரில் சீரழிந்து, நலமழிந்து, ரத்த நாற்றம் வீசுகிறது என்பதைப் பார்க்கும்போது, கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.சென்னை மாநகரப் பேருந்தின் ஓர் ஓட்டுநராகிலும், தினமும் தனது வண்டியில் வரும் மாணவர்களை அடையாளம் காண, அவர் படிக்கும் படிப்பைச் சொல்ல முடியுமா? அல்லது மாணவர்கள் பஸ் நிறுத்தத்தை நோக்கி ஓடி வருவது தெரிந்து, பேருந்தை நிறுத்தி ஏற்றிச் செல்வாரா? மாநகரைப் பொறுத்தவரை இந்தப் பேருந்து இல்லாவிட்டால் இன்னொரு நகர்ப்பேருந்து. அவ்வளவுதான். மாநகரப் பேருந்தில் எந்த நடத்துநராவது, போய் நல்ல படிய்யா என்று வாழ்த்தியிருப்பாரா, இதெல்லாம் சோத்துக்கு லாட்டரி அடிக்கப்போவுதுங்க என்று, மாணவர்கள் இறங்கிப் போனபிறகு திட்டாமல் இருந்தாலே அதிசயம்.பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பும் நட்பும் இல்லாமல் வெறுமனே வசூல் வேட்டையில் இறங்கி, காசைத் தண்ணியாக இறைத்து, பேருந்தின் வழித்தடத்திலிருந்து விலகிச் சென்று, இன்னொரு கல்லூரி முன்பாக தங்கள் கூச்சலின் வலிமையைப் பறைசாற்றிக்கொண்டு ஊர்வலம் செல்வதைத்தவிர, மாநகரில் கொண்டாடப்படும் பஸ் டே நிகழ்வுகளில் எதைக் காண முடிகிறது. இந்த பஸ் டே நிகழ்வுகளை கோஷ்டி கோஷ்டியாகவும் நடத்துகிறார்கள். எல்லாமும் இந்த விழாவுக்காகக் கிடைக்கும் வசூல் பணம் மீதான மோகம்தான் காரணம். இதற்கு அந்த மாணவர்களின் பின்புலத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவும் காரணம். அவர்கள் ஆதரவு தருவது மட்டுமல்ல, அந்த நேரத்தில் பாதுகாப்புக்காக வரும் போலீஸ் அதிகாரிகளில் யாராவது தங்கள் கோரிக்கைக்கு இணக்கமாகச் செயல்படாமல் இருந்தவராக இருந்தால், கொஞ்ச ரகளை பண்ணிவிடுங்க, நாம யாருன்னு புரியணும் என்று அறிவுரை சொல்லி அனுப்பும் அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள். இல்லாவிட்டால், இத்தனை கற்களும் இரும்புக் கம்பிகளும் போலீஸ் தலையில் வந்து விழுவதற்கு, பச்சையப்பன் கல்லூரிக்குள் செங்கல்சூளை இருக்கிறதா? இல்லை காயலான் கடை இருக்கிறதா?மூன்று தினங்களுக்கு முன்பு மாநிலக் கல்லூரி வாசலில் ஒரு பஸ் கூரையின் மீது சுமார் 100 மாணவர்கள் நிற்க உள்ளே 100 மாணவர்கள் ஜன்னல்களில் பிதுங்கி எட்டிப் பார்க்க, பட்டாசுகள் வெடிக்கும் புகைப்படத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. நம்ம போக்குவரத்துக் கழகங்கள் எந்த லட்சணத்தில், மழைக்குக்கூட தாங்காத கூரையை அமைக்கின்றன என்பது தெரிந்ததுதான். இந்தக் கூரை பிரிந்து மேலே இருக்கும் மாணவர்கள் மொத்தமாகக் கீழே விழுந்தால், கம்பிகள் குத்தியும், எடை தாங்காமலும் செத்துப்போகும் மாணவர்கள் எத்தனை பேராக இருக்கும்?தங்கள் வழித்தட நடத்துநர் பேருந்துகளுக்கு உண்மையிலேயே சிறப்புச் செய்ய நினைத்தால் அவர்கள் கல்லூரி வளாகத்துக்கு வரவழைத்து, அனைவருமாக விருந்து உண்டு, அவர்களுக்குப் பரிசுப் பொருள்கள் வழங்குவதுதான் முறையாக இருக்கும். யாருக்கும் பாதிப்பு இல்லாமல், மாணவர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.
கருத்துகள்


By உண்மை
2/25/2011 11:59:00 AM
2/25/2011 11:59:00 AM
U.N.O. should interfere in Lybiya-TGTE request : லிபியா பிரச்னையில் ஐநா தலையிட வேண்டும்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு
சரியான அறிக்கை. ஆனால், சிங்களத்திற்கு ஆதரவாக அமெரிக்கா இருந்தமையால் அங்கே பன்னாட்டவை தலையிட வில்லை. இங்கே லிவியாவிற்கு எதிராக அமெரிக்கா உள்ளதால் தலையிடும். இன்னும் சொல்லப்போனால் அதன் தலையீட்டால்தான் கிளர்ச்சியே நடைபெறுகிறது. இரட்டை அளவுகோலை விட்டு வி்ட்டு உடனே சிங்களப் போர்க்குற்றவாளிகளையும் உடந்தைகளையும் கைது செய்து தண்டிக் க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி /
Last Updated :
கொழும்பு, பிப்.25- லிபியா பிரச்னையில் ஐநா சபை தலையிட வேண்டும் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:2009-ம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு ஐநா சபை தவறியதைப் போன்று, லிபியாவிலும் அப்பாவிப் பொதுமக்களைக் காப்பாற்ற தவறக்கூடாது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது ஐ.நா சபையிடம் அவசர வேண்டுகோள் விடுக்கிறது. இலங்கையில் இடம்பெற்ற மனிதப் படுகொலைகளின் போது 60,000 வரையிலான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சமயம், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் "மூடிய கதவுகளின்" உள்ளே நடைபெற்றிருந்த கூட்டங்கள் அனைத்தினாலும், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த மனிதப் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகம் கூட ஈழத்தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளையும் எடுக்கத் தவறியது.ஈழத் தமிழர்களைக் கொல்வதற்கு அனுமதித்திருந்தது போன்று, ஐ.நா. சபையானது தற்போது லிபியாவிலும் பொதுமக்களைக் கொல்வதற்கு அனுமதிக்கக்கூடாது. இலங்கையில் இனப்படுகொலைக்கும், போர்க்குற்றங்களுக்கும் காரணமான அரச தலைவர்களை நீதியின் முன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதன் மூலம், தங்கள் நாட்டு சொந்த மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருக்கும் லிபிய நாட்டு தலைவர்களுக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபையானது உடனடியாக ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பி வைக்கவேண்டும். ஈழத் தமிழர்களை இனப் படுகொலையிலிருந்து காப்பாற்றுவதற்கும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்துள்ள இலங்கை அரசின் தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகம் இன்று வரையில் தவறியிருப்பதும், இன்று லிபியாவின் தலைவர்களைப் போன்று, மனித குலத்திற்கு எதிராகப் பெரிய குற்றங்களை இழைப்பவர்களுக்கு துணிச்சலையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. எனவே இலங்கையில் போர்க்குற்றங்களுக்குக் காரணமானவர்களை தாமதமின்றி, உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இதன் மூலம், ஐ.நா. சபையானது லிபிய அரச தலைவர்களைப் போன்று மனிதத்திற்கு எதிராக குற்றங்கள் இழைப்பவர்கள் எவராயினும் அவர்கள் நீதியின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதனை இத்தகைய கொடுங்கோலர்களுக்கு தெளிவாக நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் அவசர வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்


By Veera
2/25/2011 8:10:00 PM
2/25/2011 8:10:00 PM
வெள்ளி, 25 பிப்ரவரி, 2011
govt.of Eezham becomes stronger: வெளிநாடுகளில் தமிழ் ஈழ அரசு பலம்பெறுகிறது: இலங்கை அமைச்சர்
இந்த உண்மையைக் கூறுவதன் காரணம் எஞ்சியுள்ள தமிழர்களையும் கொன்றொழிக்க உதவி பெறுவதுதான். வலிமை மிக்க தமிழ் ஈழ அரசு வஞ்சகர்களுக்கு உரிய தண்டனை அளிக்கச் செய்யும். ஈழம் வெல்லும்! ஞாலம் ஏற்கும்!
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! /
First Published : 25 Feb 2011 03:35:50 PM IST
Last Updated : 25 Feb 2011 03:38:40 PM IST
கொழும்பு, பிப்.25- வெளிநாடுகளில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பலம்பெற்று வருகிறது என்று இலங்கை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், அதன்படி தமிழ் ஈழ அரசு மேலும் பலம்பெற கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் நிமல் சிரிபால கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.நாடாளுமன்றத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Yaazh corp. Refused to pass the condolence resolution for parvathy ammaal : பார்வதி அம்மாளுக்கு இரங்கல்: யாழ்.மாநகராட்சி இசைவு மறுப்பு
தமிழ் மக்களுக்குத் தங்கள் தலைவரின் தாயின் மறைவிற்குக் கூட இரங்கல் தெரிவிக்க உரிமையில்லை எனில் தமிழர் நாடாக ஒன்றும உருவாகாமைதானே காரணம். வீதிகளில் மக்களைக் கூட்டி இரங்கல் தீர்மானங்களையும் கண்டனத் தீர்மானங்களையும் நிறைவேற்றுங்கள். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி /
யாழ்.மாநகராட்சி அனுமதி மறுப்பு
First Published : 24 Feb 2011 05:42:56 PM IST
Last Updated : 24 Feb 2011 06:24:30 PM IST
கொழும்பு, பிப்.24: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற யாழ்ப்பாண மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் அதுதொடர்பான தீர்மானத்தை முன்வைத்தார். எனினும் மாநகராட்சியின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்ட விஷயம் என அதற்கு மாநகராட்சி முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் அனுமதி மறுத்துவிட்டார்.இதனால் பார்வதி அம்மாளின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தவும், அவரது அஸ்தி சிதைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கவும் தீர்மானத்தை முன்மொழிந்த எதிர்க்கட்சி உறுப்பினர் சங்கையா பெரும் அதிருப்தி அடைந்ததாக இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்


By vel
2/24/2011 10:20:00 PM
2/24/2011 10:20:00 PM
வியாழன், 24 பிப்ரவரி, 2011
thamizh web in cell: உங்கள் கைப்பேசியில் தமிழ் இணையத் தளம், தமிழில் தெரிய
உங்கள் கைப்பேசியில் தமிழ் இணையத் தளம், தமிழில் தெரிய…
உங்கள் கைப்பேசியில் தமிழ் இணையத் தளம், தமிழில் தெரிய… www.m.opera.com போகவும். download opera mini 5.1 (English India) என்ற இணைய உலாவிக்கான (browser) மென் பொருளை, நினைவக அட்டையில் (memory card) சேமித்த பிறகு O-opera mini என்ற சிறு படத்தோடு அந்த மென்பொருள் உங்கள் கைப்பேசி மெனு பட்டியலில் காணக் கிடைக்கும்.
Install ஆன பிறகு start என்று அந்த மென்பொருளை இயக்கவா? என்று அனுமதி கேட்கும்.
ஆப்ரா ப்ரவுசர் இணைய தளம் திறக்கப்பட்டு, பிரவுசர் அறிமுகப் பக்கத்தைக் காண்பிக்கும்.
accept கொடுத்து தொடருங்கள்.
தற்பொழுது இணைய தளங்களை திறப்பதற்கு, முழுமையாக தயாராகியிருக்கும். ஆனால் தமிழ் எழுத்துக்கள், தமிழாகத் தெரியாமல் கட்டம் கட்டமாகத் தெரியும். அதற்கு பிரசர் செட்டிங்கில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும்.
ஆப்ரா பிரவுசரின் அட்ரஸ் பார் போகவும். அங்கே www. என்பது போன்ற எல்லாவற்றையும் சுத்தமாக, அழித்த பிறகு… தவறில்லாமல்… opera:config என்று தட்டச்சு செய்த பிறகு ok செய்யவும்.
அந்த உலாவிப் பக்கம், மாறி செட்டிங் பக்கத்தைத் திறக்கும். அந்தப் பக்கத்தின் கீழே கடைசியாக… use bitmap fonts for complex scripts என்பதில் no என்று இருக்கும். அதை yes என்று மாற்றிய பிறகு வேறு எந்த மாற்றத்தையும் செய்யாமல் கவனமாக save செய்து, அந்த பிரவுசரை விட்டு, வெளியேறவும்.
தவறான மாற்றங்கள் உலாவியை திறப்பதில் சிக்கலை உருவாக்கும். அப்படி ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அந்த மென்பொருளை அழித்த பிறகு முதலிருந்து தான் தொடங்க வேண்டும்.
எல்லா மாற்றங்களையும் செய்த பிறகு மொபைலை switch off செய்த பிறகு on செய்யுங்கள்.
அவ்வளவுதான்!
நோக்கியா, சோனி எரிக்சன் தயாரிப்பு கைப்பேசிகளில் சோதித்துப் பார்த்தபோது சரியாகவே இயங்குகிறது.
- மனிதன் ( foryouths@beyouths.com )
மீனகம் தளத்தினை செல்பேசியில் காண: http://meenakam.com/?mobile என்று தட்டச்சு செய்யவும்..
scape goats in election festival , dinamani article: தேர்தல் திருவிழாவின் பலியாடுகள்!
நாட்டு நலம் விருமபிகள் அனைவரின் கருத்தையும் எதிரொலிக்கும்
நல்ல கட்டுரை.
பாராட்டுகள்.
பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
<தமிழே விழி! தமிழா விழி!>
Last Updated :
மாசி மாதம் பெரும்பாலான தென்மாவட்டக் கிராமங்களில் மாசிக்களரித் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்படுகின்றன.களரித் திருவிழா நெருங்க... நெருங்க ஆடுகளுக்கு மரியாதை கூடுகிறது. பின்னர் உற்றார் உறவினர் கூடவர கோயிலுக்கு மேள தாள மரியாதையுடன் ஆட்டை அழைத்துச் செல்கின்றனர்.கோயிலின் முன் ஆட்டை நிறுத்தி திடீரென தண்ணீர் ஊற்றுகின்றனர். அப்போது, எதற்காக நம்மீது தண்ணீர் ஊற்றுகிறார்கள்? எனத் தெரியாமலே ஏதோ ஓர் உணர்வில் ஆடு தலையை அசைக்கும். ஆடு சந்தோஷமாகச் சம்மதம் சொல்லிவிட்டது. வெட்டுங்கள்..! எனக் கூடியிருப்போர் சத்தமிட... பெண்களின் குலவைச் சத்தம் கேட்கும். இப்படிப்பட்ட வேளையில்தான் அந்த ஆட்டின் கழுத்தை, அரிவாள் பதம்பார்க்கும்.தன்னைப் பலியாக்கவே தனக்கு நல்ல உணவும், மரியாதையும் அளித்துள்ளனர் என்பதை அறிந்து, அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள அந்த வாயில்லா ஜீவனால் முடியாது.ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் இப்போது தங்களது சுயநலத்தால் தமக்குத்தாமே தீமையைத் தேடிக்கொள்ளும் அவலநிலை உலகளவில் பெருகி வருவதைக் காணமுடிகிறது.மக்களின் அடிப்படைத் தேவையை அறிந்து, ஆள்வோர் அவர்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தாமல் சுயநலமிக்கவர்களாக இருந்ததாலேயே எகிப்து, ஏமனில் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டது.நமது மண்ணில் அண்மைக்காலமாக நடப்பது என்ன? ஊழலில் திளைக்கும் அரசுகள், அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, விவசாயத்தைப் புறக்கணித்துத் தொழிலதிபர்களை அரவணைக்கும் போக்கு, இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிவரும் அப்பாவி மீனவர்கள். இதுபோதாதென மின்தடை. அதனால் பாதிக்கப்படும் சிறு, குறுந்தொழில்கள், இதனால் வேலை இழந்த ஏழைத் தொழிலாளர்கள். பசி, பிணி, பகைவர் அச்சம் இல்லாத தேசமே உண்மையான தேசம் என்கிறார் வள்ளுவர். ஆனால், நமது அரசியல் தலைவர்கள் இந்த மூன்றையும் நிரந்தரமாகப் போக்குவதற்கான திட்டங்களைத் தீட்டுவதில்லை.இந்த மூன்றையும் முன்வைத்து தங்களது தனிப்பட்ட பெயரைப் பிரபலப்படுத்த மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது துரதிருஷ்டமாகும்.பணம் இருப்பவருக்கே தரமான கல்வி! பணம் இருந்தாலே உயிர் பிழைக்க வைக்கும் சிகிச்சை என்ற அவலநிலை ஏற்பட்டிருக்கிறதே! இதற்கு யார் காரணம்?அரிவாள் இன்றி கதிர் அறுக்கப் போகும் விவசாயிபோலத் தான் அரசு மருத்துவர்களின் செயல்பாடு உள்ளது. மருத்துவச் சாதனங்கள் இல்லாத அரசு மருத்துவமனைகள். கிராமப்புறச் சுகாதார மையங்களில் மருத்துவர் இன்றி சிகிச்சைபெற முடியாமல் அவதிப்படும் ஏழை மக்கள்.எக்ஸ்ரே, ஸ்கேன், மருத்துவப் பரிசோதனைகள் அனைத்துக்கும் அரசு மருத்துவமனைகளில் ஏழை நோயாளிகளிடம் கட்டணம் வசூல். விபத்தில் தலையில் அடிபட்டவர் குறைந்தது ரூ. 500 இல்லாமல் அரசு மருத்துவமனைக்குப் போனால் அவர் ஆயுள் முடிந்துபோகும் என்பதுதான் இப்போதைய நிலை.ஒரு குடும்பத் தலைவர், தனது மகனின் மருத்துவச் செலவுக்கு அடுத்த வீட்டுக்காரரிடம் பணத்தைக் கொடுத்தா செலவிடச் சொல்வார்? அதுவும் கமிஷனை எடுத்துக்கொள் என்று கூறுவாரா? அப்படிக் கூறினால் அவர் நல்ல தந்தையா?ஆனால், சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளில் நடக்கும் அறுவைச் சிகிச்சைக்கு தனியார் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாகத்தானே நிதி வழங்குகிறது. அரசு மருத்துவமனைக்குத் தேவையான அத்தியாவசிய சாதனங்களை வாங்க நிதி ஒதுக்கப்படுவதில்லையே...! ஏன் இந்த முரண்பாடு..? அனைத்து நகர்களிலும், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளிலும் தினமும் ஆயிரக்கணக்கான குடிநீர் பாட்டில்கள் தனியார் மூலம் விற்கப்படுகின்றன. அப்படி எனில், அந்தந்த மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் வசூலிக்கும் வரிப்பணத்தில் மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீரைக்கூட வழங்க முடியவில்லை என்றுதானே பொருள்.மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எந்தச் சாலையாவது மேடு, பள்ளம் இல்லாமல் இருக்கிறதா?தேர்தல் கால அவசரத்தில் வேகவேகமாகப் போடப்படும் சாலைகள், அடுத்த ஆறு மாதத்தில் என்னவாகும் என்பது அந்த ஒப்பந்தக்காரர்களுக்கே தெரியும்.குடிநீர், மருத்துவம், கழிப்பிடம், சாலை வசதி என மக்களின் எந்தவொரு அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி அடையாத நிலையில்தான், இலவசங்கள் இல்லம் தேடிவரும் என்கிறார்கள். அதேபோல, வாக்களிக்கும் சாமானியரைச் சமாதானம் செய்யவே இலவசத் திட்டங்களும், தேர்தல்நேர வாக்குறுதிகளும் அளிக்கப்படுகின்றன. ஆனால், இவற்றால் நமது பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படாது.ஆங்கிலேயர் அளித்த பதவி, பணம் உள்ளிட்டவற்றுக்கு மயங்கி நமது முன்னோர் அவர்களை எதிர்த்துப் போராடாமல், நாட்டின் நலனை முன்னிறுத்திச் சிந்திக்காமல் போயிருந்தால் நாம் இப்போதைய சுதந்திரக் காற்றைச் சுவாசித்திருக்க முடியுமா?முன்னோர்கள் நமக்கு அளித்த சுதந்திர உரிமையை, நமது பிற்காலச் சந்ததிகளும் சுவாசிக்க வேண்டாமா?ஆக, வருமுன் காப்போம் என்பதை உண்மையாக்க வேண்டும். அதற்கு நாம் நமது உரிமைகளை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் காலகட்டம் ஏற்பட்டிருப்பதை உணரவேண்டிய தருணமிதுதான்.திருவிழாக்காலப் பலி ஆடுகளைப்போல ஏமாறாமல், எதிர்காலத்தை நினைத்து நமது உரிமையை நிலைநாட்டுவது அவசியம். அப்படி நிலைநாட்ட வேண்டும் எனில் இலவசம் எதற்கும் மனதை அலைபாயவிடாமல், நாட்டு நலனை மட்டுமே முன்னிறுத்தி நமது வாக்கு உரிமையைப் பயன்படுத்த வேண்டும்.
M.s.krishna concerns about the feelings of ilangai: இலங்கையின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்: கிருட்டிணா
நல்ல வேளை. பன்னாட்டு அவையில் அடுத்த நாட்டு உரையைப் படித்த நினைவில் விழிப்பாக இவ் வறிக்கையின் இறுதியில் இப்படிக்கு இராசபக்சே எனக் குறிக்காமல் விட்டுவிட்டார். அதற்குத் தகுந்த வெகுமதிகளைச் சிங்களம் இவருக்குத் தரும். ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள்கொல்லப்படுவதும் மீனவர்கள் வதைபடுவதும் நம் நாட்டு மக்களுக்கு ஏற்படும் உணர்வுகளை மதித்து நடவடிக்கை எடுக்காமல் கொடுங்கோல் கொலைகாரக் கொள்ளையனின் உணர்விற்கு மதிப்பளிக்கவேண்டும் இவரது கட்சி ஆட்சி அறவே நீங்கினால்தான் மனித நேயம் தழைக்கும். தமிழகத் தேர்தலில் மக்கள் இதற்காகக் கண்டிப்பாகப் பாடம் புகட்டவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் < தமிழே விழி! தமிழா விழி!>
First Published : 24 Feb 2011 01:12:02 AM IST
Last Updated :

புது தில்லி,பிப்.23: சர்வதேசக் கடல் எல்லையை மீறிச் செல்லும் இந்திய (தமிழக) மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து அந்நாட்டு அரசுடன் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டு செயல்திட்டக் குழுவில் விவாதித்துத் தீர்வு காண்போம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உறுதி அளித்தார். அதே சமயம் இலங்கை அரசுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் ஏற்படும் உணர்வுகளையும் நாம் புரிந்து நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.சமீபத்தில் நடந்த சில சம்பவங்களில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டதும் 136 மீனவர்களைப் படகுகளுடன் கடத்திச் சென்று அவர்களுடைய வலைகளை அறுத்துத் தள்ளியதுடன் மீன்களையும் பறிமுதல் செய்துகொண்டதும் தமிழ்நாட்டில் மீனவ சமுதாயத்திடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் கூட ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்குச் சென்றன. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் மக்களவையில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கவலைகள் நியாயமானவையே என்றார்."சர்வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் செல்லும்போதெல்லாம்தான் பிரச்னை ஏற்படுகிறது என்பதை இந்த அவையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். அதற்காக இந்திய மீனவர்களை அடித்துத் துன்புறுத்துவதோ, சுட்டுக்கொல்வதோ நியாயமாகிவிடாது.அதே வேளையில் இந்திய மீனவர்களும் இலங்கை மீனவர்களின் கவலை, அச்சம் ஆகியவற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக நிம்மதியாக மீன் பிடிக்க முடியாமல் தவித்த இலங்கை மீனவர்கள் இப்போதுதான் அச்சம் நீங்கி மீன்பிடித் தொழிலில் அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஏதோ ஒரு காரணத்துக்காக இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?இலங்கை மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் பிழைக்க வேண்டும், வாழ்வாதாரத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பது நியாயம் ஆனதால் இந்திய மீனவர்கள் கடலில் எல்லை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.2008 அக்டோபர் 26-ம் தேதி இது தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி கூட்டறிக்கைகூட வெளியிடப்பட்டது. அதன் பிறகு இச் சம்பவங்கள் ஒரேயடியாக நின்றுவிடவில்லை என்றாலும் படிப்படியாகக் குறைந்தே வந்தன. கடலில் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையோ மற்றவர்களோ தாக்குவதும் படிப்படியாகக் குறைந்தே வருகிறது. ஆனாலும் ஒரு சில வேளைகளில் கையை மீறும் அளவுக்கு தாக்குதல்கள் நடந்துவிடுகின்றன' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் எஸ்.எம். கிருஷ்ணா.
புதன், 23 பிப்ரவரி, 2011
insult to parvathy ammal sacred ash: பார்வதி அம்மாள் திருச்சாம்பலுக்கு அவமதிப்பு?
பரிவுடன் கூடிய மூடநம்பிக்கைக்கு எதிரான வெறியுடன் கூடிய மூடநம்பிக்கை. நாட்டைக் கவர்ந்து உயிர்களை அழித்து உடைமைகளைப் பறித்தும் மன அமைதி கொள்ளாமல் வெறியுடன்திரிபவர்களுடன் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ முடியும் என்பதை உலகம் உணர்ந்தால் சரி. வீரத்தாய் புகழ் ஓங்குக! வெல்க தமிழ் ஈழம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 23 Feb 2011 02:43:10 PM IST
Last Updated : 23 Feb 2011 03:04:53 PM IST

கொழும்பு, பிப்.23- பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் அஸ்தியை நேற்றிரவு யாரோ அவமரியாதை செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.வல்வெட்டித்துறை அருகேயுள்ள ஊரணி எரியூட்டு மைதானத்தில் அவரது உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்குப் பின்னர் இறுதி அஞ்சலிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.இன்று காலை அங்கு சென்று பார்த்தபோது, அவரது அஸ்தியை யாரோ அள்ளி வீசியிருந்ததாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அத்துடன் சுட்டுக் கொல்லப்பட்ட 3 நாய்களும் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தி இருந்த இடத்தில் போடப்பட்டு இருந்ததாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, நேற்றிரவு மயான இடத்தில் ராணுவ வாகனங்களின் நடமாட்டம் காணப்பட்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.பார்வதி அம்மாளின் அஸ்தி அவமதிப்புக்குள்ளான சம்பவத்துக்கு பிரபாகரனின் உறவினரும் முன்னாள் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும், நேற்று மாலை அங்கே வந்த சிலர் சிங்களத்தில் இறுதிச் சடங்குகளை நடத்திய ஐயர் யார்? என்று கேட்டு மிரட்டிச் சென்றதாகவும் இலங்கை இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கருத்துகள்


By Mannarmannan
2/23/2011 7:12:00 PM
2/23/2011 7:12:00 PM


By KM
2/23/2011 7:07:00 PM
2/23/2011 7:07:00 PM


By ப.kasippillai
2/23/2011 5:09:00 PM
2/23/2011 5:09:00 PM


By guru.j
2/23/2011 4:53:00 PM
2/23/2011 4:53:00 PM


By தஞ்சை ராஜு
2/23/2011 4:48:00 PM
2/23/2011 4:48:00 PM


By முனி
2/23/2011 4:41:00 PM
2/23/2011 4:41:00 PM


By shiva
2/23/2011 4:31:00 PM
2/23/2011 4:31:00 PM


By prabhakaran
2/23/2011 4:05:00 PM
2/23/2011 4:05:00 PM


By மனோகரன்
2/23/2011 3:52:00 PM
2/23/2011 3:52:00 PM


By ravi
2/23/2011 3:41:00 PM
2/23/2011 3:41:00 PM


By முட்டாள்
2/23/2011 3:32:00 PM
2/23/2011 3:32:00 PM


By James Ratnam
2/23/2011 3:23:00 PM
2/23/2011 3:23:00 PM


By பி.டி.முருகன் திருச்சி
2/23/2011 3:15:00 PM
2/23/2011 3:15:00 PM


By வேந்தன்
2/23/2011 3:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *2/23/2011 3:13:00 PM
sparrow day: சிட்டுக் குருவிகள்நாள், இணைந்திருங்கள் நண்பர்களே..!!!
சிட்டுக் குருவிகள் தினம், இணைந்திருங்கள் நண்பர்களே..!!!
கருப்பொருள் : சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு
நாள்: 20.03.2011
நேரம்: 10:00 AM to 17:00PM
இடம்: அக்ஷ்யா பள்ளி உள்அரங்கம், பழனி
அமைப்பு: Palani Hills Conservation Council (http://www.palnihills.org/)
சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்க்கான காரணங்கள் பற்றியும், சிட்டுக்குருவிகளை அழிவிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நிகழ்ச்சிக்கு முதல் நாள் (19.03.2011) பழனி மற்றும் சுற்று வட்டார கிராம மக்களை நேரடியாக சந்தித்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அழைத்துவரவும், பிரசுரங்களை விநியோகிக்கவும் தன்னார்வலர்கள் தேவை.
நிகழ்ச்சி நடைபெறும் அதே நாள் (20.03.2011), மற்ற ஊர்களிலும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை நீங்களே மேற்கொள்ளலாம். பிரசுரத்தை மின்னஞ்சல் மூலமாக முன்னரே அனுப்பி வைக்கிறேன். அதன் நகல்களை உங்கள் ஊரின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விநியோகித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பழனியில் நேரடியாக வந்து தன்னர்வலரகவும் பங்கேற்க்கலம். மேலும் விவரங்களுக்கு என்னுடைய வலைப்பூவில் இணைந்திருங்கள். (http://ivansatheesh.blogspot.com/)
நாள்: 20.03.2011
நேரம்: 10:00 AM to 17:00PM
இடம்: அக்ஷ்யா பள்ளி உள்அரங்கம், பழனி
அமைப்பு: Palani Hills Conservation Council (http://www.palnihills.org/)
சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதற்க்கான காரணங்கள் பற்றியும், சிட்டுக்குருவிகளை அழிவிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நிகழ்ச்சிக்கு முதல் நாள் (19.03.2011) பழனி மற்றும் சுற்று வட்டார கிராம மக்களை நேரடியாக சந்தித்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அழைத்துவரவும், பிரசுரங்களை விநியோகிக்கவும் தன்னார்வலர்கள் தேவை.
நிகழ்ச்சி நடைபெறும் அதே நாள் (20.03.2011), மற்ற ஊர்களிலும் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை நீங்களே மேற்கொள்ளலாம். பிரசுரத்தை மின்னஞ்சல் மூலமாக முன்னரே அனுப்பி வைக்கிறேன். அதன் நகல்களை உங்கள் ஊரின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விநியோகித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். பழனியில் நேரடியாக வந்து தன்னர்வலரகவும் பங்கேற்க்கலம். மேலும் விவரங்களுக்கு என்னுடைய வலைப்பூவில் இணைந்திருங்கள். (http://ivansatheesh.blogspot.com/)
Labels: விழிப்புணர்வு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)