செவ்வாய், 14 ஜூலை, 2009

போரில் வெற்றி பெற்றாலும்
சமாதானத்தை ஏற்படுத்துவதில் அரசு தோல்வி:
மங்கள சமரவீர
[திங்கட்கிழமை, 13 யூலை 2009, 07:51 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
கடந்த 30 வருடகாலமாக இடம்பெற்ற போரை அரசு முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்ற போதிலும் சமாதானத்தை ஏற்படுத்துவதில் அரச தோல்வியடைந்துள்ளது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்திருக்கின்றார்.

'சுதந்திரத்துக்கான மேடை' என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இன்று திங்கட்கிழமை அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கூட்டம் மலையக நகரான தலவாக்கலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பானது பிரச்சினையின் ஒரு பிரதிபலிப்பே தவிர பிரச்சினை அதுவல்ல எனத் தெரிவித்த மங்கள சமரவீர, இந்தப் பிரச்சினைக்குச் சரியான தீர்வைக் காணவில்லை என்றால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் எனவும் எச்சரித்தார்.

அரசியல் தீர்வு விடயத்தில் தனது நிலைப்பாடு என்ன என்பதை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக