சனி, 14 மே, 2016
ஏன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்? – தமிழ்சிவா
ஏன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்?
- கல்வித்துறையைச் சீரழித்தது.
- மலை, மணல் போன்ற இயற்கை வளங்களைப் பேய்த்தனமாகச் சுரண்டியது.
3.சாராய ஆலைகள் நடத்தி மக்களைச்
சாகடித்தும் பெண்களைக் கையறுநிலைக்குத் (அபலைகள்) தள்ளியும் அனைவரையும்
அறிவுக் குருடர்களாக்கியும் அட்டூழியம் செய்தது.
- இலவசங்களால் மக்களைச் செயல்படாமல் செய்த குற்றத்திற்காக மாற்றம் வேண்டும்.
5.பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான
செயல்களால் தமிழகத்தையே பாலைவனமாக்கிய குற்றங்களுக்காகத் தி.மு.க.விற்கும்
அ.தி.மு.க.விற்கும் எந்தவித மன்னிப்பும் வழங்கக் கூடாது . மீண்டும்
அவர்களிடத்தில் ஆட்சியை வழங்குவதென்பது நமக்கு நாமே விரைவில் உயிர்
பறிக்கும் நஞ்சு (சயனைடு).உண்பதற்கு இணையானது.
தி.மு.க.வின் சாதனைகள்!:
தன் குடும்ப நலனுக்காக ஓர் இனத்தையே அடகுவைத்த கொடுங்குற்றத்திற்காக என்றைக்கும் மன்னிப்பே வழங்கக் கூடாது.
தன் பெயரன் மலை முழுங்கி மகாதேவனாகச்
செயல்பட்டுத் தலைமறைவானபோது, அது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்ற
மு.க.வின் இரண்டகம் – துரோகம் – மன்னிக்கவே கூடாத செயல்.
கட்சியின் சொத்துகள் அனைத்தையும் தன்
குடும்பம் மட்டுமே துய்க்க – அனுபவிக்க- தன் மகனைப் பொருளாளராக நியமனம்
செய்த வஞ்சகத்திற்காக மன்னிக்கக் கூடாது.
எத்தனையோ தொண்டர்கள் உயிரைக் கொடுத்துக்
கட்சியை வளர்க்கும்போது, “தன் மகன் என்னைக் காட்டிலும் 100மடங்கு
உழைக்கிறார்“ என்று தன் மகனை மட்டும் பாராட்டும் அயோக்கியத்தனத்திற்காக மன்னிக்கக் கூடாது.
“ 67அகவையில் காமராசருக்குப் பதவி ஆசை
போகவில்லையா?” என்று கேட்ட, மு.க. அவர்கள் 93அகவையிலும் பதவி நாற்காலியை
விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறாரே அந்தக் கயமைத்தனத்திற்காகத் தமிழகத்தில்
ஆட்சி மாற்றம் தேவை. காமராசரைவிட மக்கள்நலம் பேணும் மகானா மு.க.?
அ.தி.மு.க.வின் சாதனைகள்!:
உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த அயோக்கியத்தனங்களையும் குத்தகைக்கு எடுத்தாற்போலச் செயல்படும் சாதனைகளுக்காகப் புறக்கணிக்க வேண்டும்.
பா.ச.க. – நச்சை விதைத்து நச்சை அறுவடை செய்ய வல்லது.
பேராயக்கட்சி (காங்கிரசு) – இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து இன்பம் கண்ட கட்சி. பல்வேறு ஊழல்களை நேர்த்தியாகச் செய்து பேர்பெற்றது.
நண்பர்களே! தாய்மார்களே! தோழர்களே! மாற்றம் வேண்டுமென்று நினைப்பவர்களே! நம் நாட்டை-மொழியை-பண்பாட்டை- இனத்தைக் காக்கவும் மீட்கவும் கடைசி ஆயுதம் தற்போது நம் கையில் உள்ளது.
சரியாகப் பயன்படுத்தத் தவறினால் இம்மண் சுடுகாடு ஆகும். நம் வருங்காலப்
பிள்ளைகளுக்கு மன்னிக்கவே முடியாத குற்றம் இழைத்தவர்கள் ஆவோம். மாற்றத்தை
ஏற்படுத்துவோம்! நன்றி.
தமிழ்சிவா
வெள்ளி, 13 மே, 2016
தேர்தல் செய்திகள் - சித்திரை 30.2047 / மே 13, 2016
மது விலக்கை நீக்கியது திமுக, மது விற்பது அதிமுக - தா.பாண்டியன் : மாலைமலர்
வெற்றி-தோல்விபற்றி கவலைப்படாமல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி - சீமானின் தனி ஆவர்த்தனம் : மாலைமலர்
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலங்களில் ரூ.11 ஆயிரத்து 500 கோடி இலவயங்களுக்காகச் செலவு - இராசுநாத்து(சிங்கு) : மாலைமலர்
புதுச்சேரி முதல்வர் இரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை : தினமணி
பா.ம.க வேட்பாளர் திருப்பதியை வாங்கிய அதிமுக : தினமணி
மதுரையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது: மு.க.அழகிரி : தினமணி
மக்கள் நலக் கூட்டணி 160 தொகுதிகளைக் கைப்பற்றும்: பிரேமலதா: தினமணி
சென்னையில் நாளை பா.ம.க. வேட்பாளர்கள் உறுதி மொழி ஏற்பு : நக்கீரன்மூன்று கட்சிகள் பணம் கொடுக்க முன்வந்தன: இணையத்தளப் பேட்டியில் விசயகாந்த் தகவல் - தமிழ் இந்து
தமிழகத்தில் அன்புமணி அலை: இராமதாசு பேச்சு - தமிழ் இந்து
திராவிட உணர்வு இல்லாத கட்சி அதிமுக: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு - தமிழ்இந்து
அ.தி.மு.க., - தி.மு.க., மாறி, மாறித் தரகுத் தொகை ; மது வகைகள் வாங்கிட வழங்கிய கட்சிகள் - தினமலர்
வியாழன், 12 மே, 2016
தேர்தல் செய்திகள் - சித்திரை 29,2047 / மே12, 2016
தேர்தல் செய்திகள் - சித்திரை 29,2047 / மே12, 2016 அறிய இணைப்பிடங்களை அழுத்தவும்
கைபேசி கொடுப்பதன் மூலம் வேளாண்மையைக் காப்பாற்ற முடியாது: இராமகிருட்டிணன். பேட்டி : நக்கீரன்
செ. கூட்டத்திற்கு வந்த முதியவர் உயிரிழப்பு : நக்கீரன்
அதிமுகவுக்கு உதவும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்: தாலின் எச்சரிக்கை : தமிழ் இந்து
அனைத்துக் குடும்பங்களுக்கும் இலவசச் சலவைப்பொறி: புதுச்சேரியில் என்.ஆர். காங். வாக்குறுதி : தமிழ் இந்து
இலவசங்களைத் தடுக்கத் தவறியதாகத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை வழக்கறிஞர் அவமதிப்பு அறிவிப்பு : தமிழ் இந்து
இலவசங்களைக் கொடுத்துத் தமிழக மக்களைத் திராவிடக் கட்சிகள் ஏமாற்றுகின்றன: இராசுநாத்(சிங்கு) குற்றச்சாட்டு : மாலைமலர்
தமிழக சட்டசபை வழிபாட்டு(பசனை) மடமாகி விட்டது: ப.சிதம்பரம் மாலைமலர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)